Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சபிக்கப்பட்ட சந்ததி...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன்று கருணாகரனின் புல்வெளி இணையத்தில் உள்ள கவிதைகளைப் படித்தேன்...நினைவுகளை துளைத்தெடுக்கும் வார்த்தைகளை கொண்டு வடித்தெடுத்த கவிதைகளை ஒரே தடவையில் நீண்ட பெருமூச்சுடன் வாசித்து முடித்தேன்...அதில் உள்ள "காதலும் கனவும் நிரம்பிய நகரம்" என்ற கவிதையின் தாக்கத்தில் என்னை நானே குற்றவாளியாக்கி கேள்வி கேட்டபோது பிறந்தது இது....

சபிக்கப்பட்ட சந்ததி...

தன்னைக் கடந்து போன

தலைமுறைகளின் இளமைகள்

தொலைந்து போன கதைகளை சுமந்தபடி

தொடர்ந்தும் இருக்கிறது அந்த நகரம்...

என் பாட்டி தன் பருவ காலங்களை

என் பாட்டன் தன் இளமைகளை

என் தந்தை தன் பால்யகாலங்களை

தொலைத்துக் கொண்டது அந்த நகரத்தின் நிழலில்தான்..

நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது

அது சிறுவயதுகளில் இருந்தது..

நாங்கள் இளைஞர்களாக இருக்கிறபோது

அது இளமை ததும்ப புன்னைகை வடிக்கிறது..

நாங்கள் முதுமையை அணைக்கும்போது

அது எங்கள் கண்களுக்கு முதிர்ந்திருக்கும்..

யுத்த நாட்களில் தலைவிரி கோலமாகவும்

பண்டிகை நாட்களில் மயக்கும் கன்னியைப் போலவும்

அது தன்னை அலங்கரித்துக்கொள்கிறது...

நகரத்துக்கு வரும் இளம் பெண்களின்புன்னகைகளில்

அது தன்னை உயிர்ப்பாக வைத்திருக்கிறது.....

யுத்தங்கள் தின்ற அந்த சரித்திர நகரத்தில் இருந்து

தந்திரமாக தப்பிய செல்வந்தத் தலைமுறை ஒன்று

நாகரீகங்களின் தலைநகரங்களைநோக்கி

நகர்ந்து கொண்டது...

மாற்றங்களுக்கு ஏற்ப தங்களை

மாற்றிக்கொண்டது...

தங்கள் குழந்தைகளுக்காக

மொழியைக் கூட மறக்கக் கற்றுக் கொண்டது...

விடுதைலையைப் பற்றி பாடியவாறு

விடுமுறைகளை அனுபவித்தது..

புரட்சியைப் போதித்துக் கொண்டு

புகலிடங்களில் அடிமையாய் வாழக் கற்றுகொண்டது..

ஏழைத்தலை முறையை

எரிமலையாய் இரு என்று சொல்லி விட்டு

சுதந்திர நெருப்பில்

சுகமாய்க் குளிர்காய்ந்தது..

அந்த நகரம் தன்னை மாற்றிக் கொண்டதைப் பார்த்து

மகிழ்ந்து கொண்டது அந்தத் தலைமுறை...

யுத்தத்தின் பின்னால் அது தன்னைப் புதுப்பித்த போது

பூரித்தது....

விடுமுறைகளுக்கு வந்து

விருந்துண்டு சென்றது...

திருவிழாக்களுக்கு வந்து

தேரிழுத்துப் போனது

நாகரீக உடைகளுடன்

அந்த நகரத்து வீதிகளில்

அலைந்து திரிந்தது..

அந்நகரத்து ஏழைகளின் பெருமூச்சை

பணத்தின் பின்னால் இருந்து

பார்த்து ரசித்தது.....

எல்லாக் காலங்களுக்கும் ஏற்ப

எல்லா நாகரீகங்களுக்கும் ஏற்ப

எல்லா சந்தர்ப்பவாதங்களுக்கும் ஏற்ப

அந்த தலைமுறையும்

அந்த நகரமும்

தம்மை மாற்றி வாழக் கற்றுக்கொண்டன...

ஆனால்..

அந்த நகரத்தின் ஏழைத் தலைமுறை

தன்னை மாற்றிக்கொள்ளும் பொழுதெல்லாம்...

கலாச்சாரத்தின் பெயரால்

கல்லெறியப்படுகிறது ......

யுத்தத்தில் இருந்து மீண்டு

புன்னகைக்கும் போதெல்லாம்

துரோகி ஆக்கப்படுகிறது ......

வாழ்வதற்காக ஆசைப்பட்டபோதெல்லாம்

வரலாற்றின் பெயரால் தூற்றப்படுகிறது...

அழுவதற்காக மட்டும் வாய்திறப்பதே

அவர்களுக்கு அழகெனச் சொல்லப்படுகிறது...

மரணச் சடங்குகள் மட்டுமே அவர்களின்

திருவிழாக்கள் ஆக்கப்படுகிறது...

சேலைகளைத் தாண்டி அந்த ஏழைப் பெண்கள்

மேலே போவது எதிர்க்கப்படுகிறது......

எல்லாவித கனவுகளையும் புதைத்துக்கொண்டு

எல்லாவித ஆசைகளையும் அடக்கிக்கொண்டு

எல்லாவித விருப்புக்களையும் எரித்துக்கொண்டு

தியாகிப் பட்டங்களை மட்டும் அணிந்தபடி

புலம்பெயர்ந்தவர்களின் பாவங்களை கழுவும்

பரம பிதாக்களாகவும்

சுய நலக்காரர்களின் சிலுவைகளைச் சுமக்கும்

இயேசு நாதர்களாகவும்

ஆக்கப்பட்டிருக்கிறது

அந்த நகரத்தின் ஏழைத் தலைமுறை.....

சுபேஸ்..... பாராட்டுக்கள்டா நண்பா!

அத்தனை வரிகளிலும் அர்த்தங்கள் பொதிந்திருக்கின்றன. :)

சுட்டெரிக்கும் வார்த்தைகளுக்கு கைமுளைத்து,

எம்மை நோக்கி விரல் நீட்டி எதையோ கேட்கின்றது!

கட்டுண்ட மனங்களில் கயிறவிழ்க்க,

கண்கள் தோன்றி அமிலம் சுரக்கிறது!

காலங்கடந்த ஞானம் என்றாலும் பரவாயில்லை,

கோலம் போட்டு வரவேற்ற முற்றமும் சுற்றமும்...

குலை சுமந்த வாழைமரமாய் வரவேற்க,

தளிர்ப்பதற்கு ஒரு சந்தர்ப்பம் கேட்கின்றது!

இன்னும் உறைந்து கிடக்கும் பாதி ரத்தம்,

ஓடாமல் ஒதுங்கி இதயத்தை அடைக்கிறது!

மூச்சுக் காற்று ஓய முன்னர்...புயலாய் வேண்டாம்,

தென்றலாய்த் தன்னும் வீசட்டும்... ஈழத்துக்காக,

புலம் பெயர் தேசங்களில்!

அழுவதற்காக மட்டும் வாய்திறப்பதே

அவர்களுக்கு அழகெனச் சொல்லப்படுகிறது...

மரணச் சடங்குகள் மட்டுமே அவர்களின்

திருவிழாக்கள் ஆக்கப்படுகிறது...

சேலைகளைத் தாண்டி அந்த ஏழைப் பெண்கள்

மேலே போவது எதிர்க்கப்படுகிறது......

எல்லாவித கனவுகளையும் புதைத்துக்கொண்டு

எல்லாவித ஆசைகளையும் அடக்கிக்கொண்டு

எல்லாவித விருப்புக்களையும் எரித்துக்கொண்டு

தியாகிப் பட்டங்களை மட்டும் அணிந்தபடி.............

  • கருத்துக்கள உறவுகள்

ஏக்கம் தரும்வரிகள்

நன்றிகள் கவிதைக்கு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்த நகரத்தின் ஏழைத் தலைமுறை

தன்னை மாற்றிக்கொள்ளும் பொழுதெல்லாம்...

கலாச்சாரத்தின் பெயரால்

கல்லெறியப்படுகிறது ......

யுத்தத்தில் இருந்து மீண்டு

புன்னகைக்கும் போதெல்லாம்

துரோகி ஆக்கப்படுகிறது ......

வாழ்வதற்காக ஆசைப்பட்டபோதெல்லாம்

வரலாற்றின் பெயரால் தூற்றப்படுகிறது...

அழுவதற்காக மட்டும் வாய்திறப்பதே

அவர்களுக்கு அழகெனச் சொல்லப்படுகிறது...

மரணச் சடங்குகள் மட்டுமே அவர்களின்

திருவிழாக்கள் ஆக்கப்படுகிறது...

சேலைகளைத் தாண்டி அந்த ஏழைப் பெண்கள்

மேலே போவது எதிர்க்கப்படுகிறது......

என்ன சொல்ல என்றே தெரியவில்லை. ஒவ்வொரு வரியும் அனல் கக்கும் நிஜங்கள் !!

வாழ்த்துக்கள் சுபேஸ் அண்ணா :)

செருப்பால ஓங்கியடிப்பது மாதிரி உணர்வுமிக்க வரிகள். நிஜத்தை எழுதியுள்ளார்.

வாழ்த்துகள் சுபேஸ் அண்ணா.... வரிக்கு வரி அர்த்தங்களுடன் எழுதியுள்ளீர்கள்...

ஒன்று மட்டும் சொல்ல வேண்டும் போலிருக்கிறது...

இன்றைய சூழ்நிலையில் அவர்களின் கலாசாரம் மாறினால் அது இராணுவத்தினருக்கு தான் வாசியாகிவிடும்.

அத்துடன் இன்றே பெண்களை விட்டு வைக்காத காடையர்கள் புது நாகரிகத்திற்கேற்ப உடை அணிந்தால் விட்டுவைப்பார்களா? எனவே அவர்கள் விரும்பும் உடை அணிய, அவர்கள் விரும்பும் படி வாழ வேண்டுமென்றால் எம் நாடு பாதுகாப்பிற்கு உத்தரவாதமளிக்கும் சுதந்திர பூமியாக வலம் வர வேண்டும்.

அதே சமயம் சில புலம்பெயர் தமிழர்கள் அவர்களை கேவலமாக சித்தரிப்பதையும் தவிர்க்க வேண்டும்.

உங்களை நீங்களே குற்றவாளியாக்கி கேள்வி கேட்டு இக்கவிதையை எழுதியுள்ளதாக கூறியுள்ளீர்கள். உங்களின் இந்த மாற்றத்தை வரவேற்கிறேன். எனவே எழுதப்பட்டிருப்பதை உணர்ந்து நீங்களும் எதிர்காலத்தில் நடப்பீர்கள் என்று நம்புகிறேன். ஏனென்றால் இக்கவிதை தனியே ஏழைகளுக்கானது மட்டுமில்லை.

நிச்சயம் தாயக மக்களுக்கும் நல்ல காலம் வரும்.

Edited by காதல்

  • கருத்துக்கள உறவுகள்

அதே சமயம் சில புலம்பெயர் தமிழர்கள் அவர்களை கேவலமாக சித்தரிப்பதையும் தவிர்க்க வேண்டும்.

நானும் எழுத நினைத்தேன்.

தொடர்ந்து ஒருவர் சுட்டிக்காட்டுவதால் என் பெயர் ஏற்கனவே நாறிக்கிடக்கு. அதனால் விட்டுவிட்டேன். நன்றி காதல்.

  • கருத்துக்கள உறவுகள்

விடுதைலையைப் பற்றி பாடியவாறு

விடுமுறைகளை அனுபவித்தது..

புரட்சியைப் போதித்துக் கொண்டு

புகலிடங்களில் அடிமையாய் வாழக் கற்றுகொண்டது..

ஏழைத்தலை முறையை

எரிமலையாய் இரு என்று சொல்லி விட்டு

சுதந்திர நெருப்பில்

சுகமாய்க் குளிர்காய்ந்தது..

அந்த நகரம் தன்னை மாற்றிக் கொண்டதைப் பார்த்து

மகிழ்ந்து கொண்டது அந்தத் தலைமுறை...

யுத்தத்தின் பின்னால் அது தன்னைப் புதுப்பித்த போது

பூரித்தது....

விடுமுறைகளுக்கு வந்து

விருந்துண்டு சென்றது...

திருவிழாக்களுக்கு வந்து

தேரிழுத்துப் போனது

நாகரீக உடைகளுடன்

அந்த நகரத்து வீதிகளில்

அலைந்து திரிந்தது..

அந்நகரத்து ஏழைகளின் பெருமூச்சை

பணத்தின் பின்னால் இருந்து

பார்த்து ரசித்தது.....

எல்லாக் காலங்களுக்கும் ஏற்ப

எல்லா நாகரீகங்களுக்கும் ஏற்ப

எல்லா சந்தர்ப்பவாதங்களுக்கும் ஏற்ப

அந்த தலைமுறையும்

அந்த நகரமும்

தம்மை மாற்றி வாழக் கற்றுக்கொண்டன...

ஆனால்..

அந்த நகரத்தின் ஏழைத் தலைமுறை

தன்னை மாற்றிக்கொள்ளும் பொழுதெல்லாம்...

கலாச்சாரத்தின் பெயரால்

கல்லெறியப்படுகிறது ......

யுத்தத்தில் இருந்து மீண்டு

புன்னகைக்கும் போதெல்லாம்

துரோகி ஆக்கப்படுகிறது ......

வாழ்வதற்காக ஆசைப்பட்டபோதெல்லாம்

வரலாற்றின் பெயரால் தூற்றப்படுகிறது...

அழுவதற்காக மட்டும் வாய்திறப்பதே

அவர்களுக்கு அழகெனச் சொல்லப்படுகிறது...

மரணச் சடங்குகள் மட்டுமே அவர்களின்

திருவிழாக்கள் ஆக்கப்படுகிறது...

சேலைகளைத் தாண்டி அந்த ஏழைப் பெண்கள்

மேலே போவது எதிர்க்கப்படுகிறது......

எல்லாவித கனவுகளையும் புதைத்துக்கொண்டு

எல்லாவித ஆசைகளையும் அடக்கிக்கொண்டு

எல்லாவித விருப்புக்களையும் எரித்துக்கொண்டு

தியாகிப் பட்டங்களை மட்டும் அணிந்தபடி

புலம்பெயர்ந்தவர்களின் பாவங்களை கழுவும்

பரம பிதாக்களாகவும்

சுய நலக்காரர்களின் சிலுவைகளைச் சுமக்கும்

இயேசு நாதர்களாகவும்

ஆக்கப்பட்டிருக்கிறது

அந்த நகரத்தின் ஏழைத் தலைமுறை.....

சுபேஸ் முகத்தில் அறைகிற வார்த்தைகள். ஒவ்வொரு வரிக்குள்ளும் உறைந்து கிடக்கிற உண்மைகள் ஆணியாய் அறைகிறது நெஞ்சை.

ஏணியாய் நின்ற இமயங்கள் எல்லாம் ஏறிமித்துச் சென்ற முதுகுகள் அங்கே மிஞ்சிக்கிடக்கிறது...ஒரு மோட்சத்தை நம்பி.

  • கருத்துக்கள உறவுகள்

விடுதைலையைப் பற்றி பாடியவாறு

விடுமுறைகளை அனுபவித்தது..

புரட்சியைப் போதித்துக் கொண்டு

புகலிடங்களில் அடிமையாய் வாழக் கற்றுகொண்டது..

ஏழைத்தலை முறையை

எரிமலையாய் இரு என்று சொல்லி விட்டு

சுதந்திர நெருப்பில்

சுகமாய்க் குளிர்காய்ந்தது..

அது

  • கருத்துக்கள உறவுகள்

சுப்பு,

எழுதமுடியாத என்கவிதைகளின் கருக்களை எங்ஙனம் என்னிடமிருந்து பறித்தாய் தம்பி?

.

பல்லக்குக் கட்டும் பன்னாடைகளின் பவிசுக்காக பொய்யாக எழுதத் தெரியவில்லை

நெருப்புத் திராவகமே நிரவப்பட்டிருக்கிறது என் எழுதுகோலிற்குள்

எழுதத் தொடங்கினால்... அனைத்தும் எரியும்.

காட்டுத்தீயை அணைக்க முடியுமா?

எழுதும் வல்லமை உன்னிடம் இருக்கிறது.

எங்கே?

எப'போது?

என்பது உந்தன் எழுத்தின் விசைக்குச் சாத்தியமாகிறது.

தொடர்க. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

சுபேஸ் அருமையான கவிதை, நிஐம் சுடுகிறது

  • கருத்துக்கள உறவுகள்

அந்நகரத்து ஏழைகளின் பெருமூச்சை

பணத்தின் பின்னால் இருந்து

பார்த்து ரசித்தது.....

கோவில்களில் மட்டுமல்ல சுபேஸ், மீன் வாங்கும் சந்தைகளிலும், புடவைக் கடைகளிலும், சாப்பாட்டுக்கடைகளிலும் கூட, இந்தப் பெருமூச்சுக்களின் வெம்மையை நான் தரிசித்திருக்கின்றேன்!

ஏழைகளின் கண்களில் உள்ள ஏக்கங்கள், பணம் படைத்தவர்களின் கண்களில் பட்டுப் பிரதிபலிக்கும் போது, பிரதிபலிப்பில் திமிர் மட்டும் தான் தெரிகின்றது! கருணை தெரிவதில்லை!

இதை நான் சொன்னால் துரோகி கவிதையாக கருணாகரன் சொன்னால் உறைக்கின்றதா?

இன்று மட்டும் தமிழன் நாட்டை விட்டு ஓடவே நினைக்கின்றான் ,இலங்கையை அல்லது இலங்கையில் ஒருபகுதி தமிழ் ஈழத்தை தனது நாடாக ஒரு தமிழனும் எண்ணவில்லை ,அதை சிங்களவனின் நாடாக நாமே நினைக்கின்றோம் .பிறகேன் எமக்கு விடுதலை .

புண்ணியவான்களே நாளை நீங்கள் சிலர் வருவதென்றால் நானும் வர தயார் .

(பு ------ பெயர்ந்து புடுங்குவோம் என்று மாத்திரம் சொல்லி விட வேண்டாம் ) அப்ப முழு தமிழனையும் பு ----- பெயர வையுங்கள் .இங்கிருந்து எல்லோரும் இல்லாத நாட்டிற்கு போராடுவோம் .

நாம் தோற்றதே நாட்டைவிட்டு ஓடத்தொடங்கியதில் தான் தொடங்கியது .பொய்யும் புனைவும் நடிப்பும் நாடகமும் எம்முடன் கலந்துவிட்டது ,புலம் பெயர்ந்து வேஷம் கட்டுவதை தவிர எம்மால் ஒரு மயிரும் புடுங்க முடியாது .

கவிதை அருமை சுபாஸ் ,புலம் பெயர்ந்த ஒருவர் இப்படி ஒரு கவிதை எழுதுவது ஆச்சரியத்தை தருகின்றது , கவிதையே புலம் பெயர்ந்தவர்களையும் நோக்கித்தான் அப்படியிருக்க புலம் பெயர்ந்தவர்களை தவித்திருக்கலாம் என்பது வேடிக்கையிலும் வேடிக்கை .

Edited by arjun

விடுமுறைகளுக்கு வந்து

விருந்துண்டு சென்றது...

திருவிழாக்களுக்கு வந்து

தேரிழுத்துப் போனது

நாகரீக உடைகளுடன்

அந்த நகரத்து வீதிகளில்

அலைந்து திரிந்தது..

அந்நகரத்து ஏழைகளின் பெருமூச்சை

பணத்தின் பின்னால் இருந்து

பார்த்து ரசித்தது.....

எல்லாக் காலங்களுக்கும் ஏற்ப

எல்லா நாகரீகங்களுக்கும் ஏற்ப

எல்லா சந்தர்ப்பவாதங்களுக்கும் ஏற்ப

அந்த தலைமுறையும்

அந்த நகரமும்

தம்மை மாற்றி வாழக் கற்றுக்கொண்டன...

ஆனால்..

அந்த நகரத்தின் ஏழைத் தலைமுறை

தன்னை மாற்றிக்கொள்ளும் பொழுதெல்லாம்...

கலாச்சாரத்தின் பெயரால்

கல்லெறியப்படுகிறது ......

யுத்தத்தில் இருந்து மீண்டு

புன்னகைக்கும் போதெல்லாம்

துரோகி ஆக்கப்படுகிறது ......

வாழ்வதற்காக ஆசைப்பட்டபோதெல்லாம்

வரலாற்றின் பெயரால் தூற்றப்படுகிறது...

வைர வரிகள்!!

கவிதை அருமை சுபாஸ் ,புலம் பெயர்ந்த ஒருவர் இப்படி ஒரு கவிதை எழுதுவது ஆச்சரியத்தை தருகின்றது , கவிதையே புலம் பெயர்ந்தவர்களையும் நோக்கித்தான் அப்படியிருக்க புலம் பெயர்ந்தவர்களை தவித்திருக்கலாம் என்பது வேடிக்கையிலும் வேடிக்கை .

இங்கு யார் அண்ணா புலம்பெயர்ந்தவர்களை தவிர்த்திருக்கலாம் என்று கூறினது? என்னை தான் குறிப்பிட்டீர்கள் என்றால் (வேறு யாரும் இது சம்பந்தமா கருத்து எழுதவில்லை..) மீண்டும் என் கருத்தை வாசியுங்கள்.

"சில புலம்பெயர் தமிழர்கள் அவர்களை கேவலமாக சித்தரிப்பதையும் தவிர்க்க வேண்டும்" என்றே கூறியிருந்தேன்....இங்கு அவர்களை என்று குறிப்பிட்டது தாயகத்திலுள்ளவர்களை. நான் எழுதியது உங்களுக்கு புரியாவிட்டால் அதற்கு பதில் கருத்து எழுதியிருக்க கூடாது.

இவர் கவிதையில் அப்படி சித்தரித்தார் என்றோ அதை தவிர்த்திருக்க வேண்டுமென்றோ குறிப்பிடவில்லை. நிஜத்தில் தாயக தமிழர்களை பற்றி கேவலமாக கதைப்பதையும் கேவலமாக எழுதுவதையும் அவர்களுக்கு துரோகிப்பட்டம் கொடுப்பதையும் தவிர்க்க வேண்டும் என்பதையே குறிப்பிட்டேன்........

இது உங்களுக்கு புரிந்ததோ இல்லையோ நான் ஏன் அப்படி குறிப்பிட்டேன் என்பது சுபேஸ் அண்ணாவுக்கு புரியும்...

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் ஆக்ரோசமான வரிகள்.

ஆனாலும் மேய்ப்பன் இல்லா ஆடுகள் வழிமாறிச் செல்லக்கூடாது என்ற கரிசனை

எம்மில் பலருக்கும் இருக்கின்றது

அவர்களின் வீரத்திலும் விவேகத்திலும் குளிர் காய்ந்தவர்கள் இப்போது எங்கே?

யுத்தங்கள் தின்ற அந்த சரித்திர நகரத்தில் இருந்து

தந்திரமாக தப்பிய செல்வந்தத் தலைமுறை ஒன்று

நாகரீகங்களின் தலைநகரங்களைநோக்கி

நகர்ந்து கொண்டது...

மாற்றங்களுக்கு ஏற்ப தங்களை

மாற்றிக்கொண்டது...

தங்கள் குழந்தைகளுக்காக

மொழியைக் கூட மறக்கக் கற்றுக் கொண்டது...

விடுதைலையைப் பற்றி பாடியவாறு

விடுமுறைகளை அனுபவித்தது..

புரட்சியைப் போதித்துக் கொண்டு

புகலிடங்களில் அடிமையாய் வாழக் கற்றுகொண்டது..

ஏழைத்தலை முறையை

எரிமலையாய் இரு என்று சொல்லி விட்டு

சுதந்திர நெருப்பில்

சுகமாய்க் குளிர்காய்ந்தது..

அத்தனையும் உண்மை. சுகமாக குளிர்காய்ந்து விட்டு, இன்று குளிர்விட்டு கும்மாளமடிக்கிறார்கள். யாதார்த்தம் உறைக்கிறது, ஓங்கி மனதில் அறைகிறது. நன்றிகள் சுபேஸ் உண்மைகளை நவின்றமைக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாவித கனவுகளையும் புதைத்துக்கொண்டு

எல்லாவித ஆசைகளையும் அடக்கிக்கொண்டு

எல்லாவித விருப்புக்களையும் எரித்துக்கொண்டு

தியாகிப் பட்டங்களை மட்டும் அணிந்தபடி

புலம்பெயர்ந்தவர்களின் பாவங்களை கழுவும்

பரம பிதாக்களாகவும்

சுய நலக்காரர்களின் சிலுவைகளைச் சுமக்கும்

இயேசு நாதர்களாகவும்

ஆக்கப்பட்டிருக்கிறது

அந்த நகரத்தின் ஏழைத் தலைமுறை.....

வன்னியில் சண்டை நடந்த போது புலத்தில் மக்கள் குளிரின் மத்தியிலும் வீதியில் இறங்கி போராடிய போது யாழ்ப்பாணத்தில் திருவிழா செய்த ஆட்களும் இருக்கினம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என் உறவுகளையும் சொந்தங்களையும் நினைத்து இயலாமையிலும் கோபத்திலும் எழுதிது உங்கள் இத்தனை பேரின் நெஞ்சையும் தொட்டுச் சுட்டிருக்கிறது...இது ஒரு ஒப்பாரி...ஓலம்...என் சகோதரங்களை நினைத்து உங்களுடன் நானும் சிந்திய ஒரு துளி கண்ணீர்...ஏதாவது உங்களால் முடிந்ததை உங்கள் வழியில் செய்யுங்கள் அவர்களுக்காக...அதுதான் அவர்கள் பலரின் முகத்தில் புன்னகையை வரவழைக்கும்.. :(

சுபேஸ் அண்ணா,

நிச்சயம் நாம் எங்களால் முடிந்ததை செய்வோம்... இப்பொழுது என்னால் பண உதவி செய்ய முடியாது. வேலை செய்ய தொடங்கின பிறகு நிச்சயம் அதையும் செய்வேன்..

பாதிக்கப்பட்ட மக்களை அடிக்கடி சந்திக்க முடிந்தவர்கள் எதுவும் செய்ய முடியாதவர்களாக இருப்பினும் எளிமையாக சென்று நாலு வார்த்தை சந்தோஷமா கதைத்து அவர்களை சிரிக்க செய்தாலே அவர்களின் மனச்சுமை கொஞ்சம் இறங்கும்...

மற்றோர் முதலில் அவர்களின் அடிப்படை தேவையை பூர்த்தி செய்யும் வகையில் பொருட்களை கொடுத்தோ, பண உதவியோ செய்யலாம்...

அனைவரிடமும் அன்பு செலுத்துதல் முக்கியமானது...

புலம் பெயர்ந்தவர்களில் ஒவ்வொருவரும் ஒன்றிரண்டு குடும்பத்தை பொறுப்பெடுத்தால் பண உதவி செய்வதுடன் அடிக்கடி அவர்களுடன் பாசத்துடன் கதைக்கலாம்...நலம் விசாரிக்கலாம்.

இதன் மூலம் தம்மிடம் அன்பு செலுத்த ஒருவர் என்றாலும் இருக்கிறார்களே என்ற நம்பிக்கை அவர்கள் மனதில் உருவாகும்..

புலம் பெயர்ந்தவர்கள் யாரும் அவர்களை பற்றி தரக்குறைவாக கதைக்காதீர்கள், அப்படி கதைப்போருக்கும் நிலைமையை புரிய வையுங்கள்...

நாம் திருந்தினால் உலகம் தன்னால் திருந்தும்... (உலகம் திருந்தாவிட்டாலும் தமிழர்களாவது திருந்த வேண்டும்.)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.