Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சென்றுவருகிறது கவிதை!

Featured Replies

Lonely__1261769749_6783.jpg

என் வாழ்க்கைப் பயணங்களில் சுமந்த பொதியாய்,

என் வலிகளும் கூடவே வந்தன!

எனக்கிந்த சாபம் எதுவரையென...

எனக்குத் தெரியவில்லை இதுவரை!

நம்பிக்கைகளை சாகடித்தபடியே...

துரோகங்கள் என் பாதையை மாற்றியமைக்கிறது!

வலிகளும், மாறும் வழிகளும் எதுவானாலும்... என் பாதம்

நேர்வழி மட்டுமே தொடரும்!

இன்னும் மனந்தளராத விக்கிரமாதித்தனாய் நானிருப்பேன்,

தன்னம்பிக்கை எனக்கிருக்கு!

சிறகெரிந்த வாசத்தில் மூச்சுத்திணறிய பீனிக்ஸ் பறவை,

விழ விழ எழுவதுபோல்... நானும் எழுவேன்!

வரைகின்ற வட்டம் போல... சுற்றிவரும் புள்ளிகளில்,

இரு முகங்கள் சந்தித்துக்கொள்ளும்!

பயணங்களின் காரணங்கள் ஒரு வட்டத்துக்குள்,

முழுநிலவாய் சிரிக்கும்போது...

நேற்று வந்த முழுநிலவுதான் என் ஞாபகத்தில் வரும்!

மீண்டுமொரு பயணம் எனை அழைக்கிறது - இதுதன்னும்,

வலிகளிலிருந்து எனை மீளவைக்குமா???

பழைய ஞாபகங்கள் எனைக் கடத்திச் செல்லும்போது...

எனை மீட்டுக் கொண்டுவருமா???

பயணங்களின் முடிவுகள் இனிதாகி,

சந்திப்புக்கள் தொடரும் வரை...

சென்றுவருகிறது கவிதை!

Edited by கவிதை

மீண்டுமொரு பயணம் எனை அழைக்கிறது - இதுதன்னும்,

வலிகளிலிருந்து எனை மீளவைக்குமா???

பழைய ஞாபகங்கள் எனைக் கடத்திச் செல்லும்போது...

எனை மீட்டுக் கொண்டுவருமா???

ஏன் ???????????????????

என் வாழ்க்கைப் பயணங்களில் சுமந்த பொதியாய்,

என் வலிகளும் கூடவே வந்தன!

எனக்கிந்த சாபம் எதுவரையென...

எனக்குத் தெரியவில்லை இதுவரை!

நம்பிக்கைகளை சாகடித்தபடியே...

துரோகங்கள் என் பாதையை மாற்றியமைக்கிறது!

வலிகளும், மாறும் வழிகளும் எதுவானாலும்... என் பாதம்

நேர்வழி மட்டுமே தொடரும்!

இன்னும் மனந்தளராத விக்கிரமாதித்தனாய் நானிருப்பேன்,

தன்னம்பிக்கை எனக்கிருக்கு!

சிறகெரிந்த வாசத்தில் மூச்சுத்திணறிய பீனிக்ஸ் பறவை,

விழ விழ எழுவதுபோல்... நானும் எழுவேன்!

வரைகின்ற வட்டம் போல... சுற்றிவரும் புள்ளிகளில்,

இரு முகங்கள் சந்தித்துக்கொள்ளும்!

பயணங்களின் காரணங்கள் ஒரு வட்டத்துக்குள்,

முழுநிலவாய் சிரிக்கும்போது...

நேற்று வந்த முழுநிலவுதான் என் ஞாபகத்தில் வரும்!

மீண்டுமொரு பயணம் எனை அழைக்கிறது - இதுதன்னும்,

வலிகளிலிருந்து எனை மீளவைக்குமா???

பழைய ஞாபகங்கள் எனைக் கடத்திச் செல்லும்போது...

எனை மீட்டுக் கொண்டுவருமா???

பயணங்களின் முடிவுகள் இனிதாகி,

சந்திப்புக்கள் தொடரும் வரை...

சென்றுவருகிறது கவிதை!

வெற்றி பெற வாழ்த்துக்கள் தம்பி கவிதை!!!!

God bless you!

Edited by அலைமகள்

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி போகுமளவிற்கு என்ன நடந்தது கவிதை?...தொடங்கின கதையையும் முடிக்கவில்லை :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

கவிதையின் பிரியாவிடைக் கவிதையா... இது :o .

வேண்டாம் கவிதை. கருத்துக் களத்தை விட்டுப் பிரிவது, மனவேதனையாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

பயணங்களின் முடிவுகள் இனிதாகி,

சந்திப்புக்கள் தொடரும் வரை...

அவசியமான அவசரமான முடிவாக இருக்ககூடும் . :o

எங்கிருந்தாலும் யாழுடன் இணைந்திருக்கவும் .

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் மண்ணில்,

முகம் புதைந்த மறவனை,

அள்ளியெடுத்துக் கவியில் வடித்தவனே!

உள்ளம் கலங்கி,

உயிர் துறக்கும் வேளையிலும்,

சற்றும் கலங்காத அவனைப் பார்!

வலிகள் அவனுக்குத் தெரியவில்லை!

வார்த்தைகளின் அர்த்தமும் புரியவில்லை!

பயணமொன்றின் முடிவே,

இன்னுமொரு பயணத்தின் ஆரம்பமாகட்டும்!

கலக்கமும், தொலைதலும்,

கவிஞனுக்கு இல்லையே, கவிதை!

கவிஞன் உணர்வுகளின் கைதி!

பயணம் இனிக்கவும், வெற்றி பெறவும் வாழ்த்துக்கள்.

வாழ்க்கையில் எல்லாமே பயணம் ஒன்றின் இடையில் வரும் சந்திப்புகள் தான்.. எதுக்கும் எவருக்கும் காத்திராமல் போவதுதான் வாழ்க்கை

  • தொடங்கியவர்

இன்னும் நான் இழக்காதது என் தன்னம்பிக்கையை மட்டுந்தான்.

அந்த தன்னம்பிக்கையோடு என் அடுத்த முயற்சியில் நான்.

தோற்றாலும் பரவாயில்லை...!

போராடித்தான் தோற்றுப்போனேன் என்ற திருப்தியாவது இருக்கும்!

அப்படி ஒன்றுக்கான பயணம்!

நன்றி உறவுகளே!

மாதங்கள் சில ஆகலாம்! என்னை மறந்துவிட மாட்டீர்கள்தானே!?

நிச்சயம் மீண்டும் வருவேன்!

இப்போதைக்கு சரியான கால எல்லைகளை என்னால் சொல்ல இயலவில்லை.

மீண்டும் சந்திப்போம்... !

அதுவரை.... கவிதையின் வாழ்க்கைப் பயணம் தொடரும்....! :)

I gonna miss u all guys! :(

சென்று வாருங்கள் கவிதை எல்லாமே நல்லபடியாக அமையும்....:)

கவிதை, உங்கள் பயணம் வெற்றிப்பயணமாக அமைய வாழ்த்துக்கள்..!

உங்களது நல்ல கவிகளையும் கதைகளையும் யாழ் உறவுகள் என்றும் மறந்துவிடமாட்டார்கள்.

நிச்சயம் உங்களது படைப்புகள் சிறிய இடைவெளியின் பின் வெளிவரும் என்ற நம்பிக்கையுடன் தற்காலிகமாக பிரியாவிடை தருகின்றோம்.

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை

ரொம்ப அருமையான கள உறவு

எழுத்திலும் பேச்சிலும் செயலிலும்

தாயகக்கனவு

உறவென்றால் இப்படித்தான் இருக்கணும்

என்பதற்குதாரணம் கவிதை

எதை வீசினாலும் குறி

எதிரி மீது

எதை பெற்றுக்கொண்டாலும்

அது தமிழனுக்காய்

நண்பன் யார்

எதிரி யார்

துரோகி யார்

என்ற தெளிவு கவிதைக்கு

எழுதும் கவிதையும்

கதையும்

கருத்தும்

எல்லாமே அவனுக்கே

தலைவன் மீது

மாசற்ற பற்று

தமிழ் மீது

எல்லயற்ற பிடிப்பு

இவன் இங்கு இருந்த போது

தமிழ் மகிழ்ந்தது

வளர்ந்தது

மீண்டும் வந்து

ஊற்றணும் தண்ணீர்...

போகும் வேலையில்

பொருளடைந்து

புகும் இடமெல்லாம்

புகழ் தேடி

கேட்ட வரம் அத்தனையும் கொடுத்து

அவனுடன் இரும் இறைவா என்றும்.

எதனால் இந்த திடீர் முடிவு என்று தெரியவில்லை. உங்கள் பயணம் இனிதாக அமைய எனது வாழ்த்துக்கள் என்றும் தம்பி கவிதைக்கு என்றும் உண்டு.

உங்கள் கவிதையின் அர்த்தம் புரிகிறது. வேதனைகள் துரோகங்களை தாங்கியது தானே வாழ்க்கை. அதையும் தாண்டி நிறையுள்ளது. உங்கள் பயணம் இனிதாக அமைய என்றும் வாழ்த்துகிறேன். உங்கள் கவிதையை இன்று தான் பார்த்தேன். இப்பொழுதெல்லாம் யாழை வாசிக்க முடியவில்லை. மன்னித்துவிடுங்கள். என்றும் உங்களையும் உங்கள் கவிதைகளையும் என்றும் மறந்துவிட மாட்டோம். உங்கள் மின்னஞ்சலும் செயலிழந்து விட்டதுபோலுள்ளது. வெகுவிரைவில் கவிதையின் வரவை எல்லோரும் எதிர்பார்க்கிறோம். .. உங்களிற்கு எனது நன்றியை மீண்டும் கூறிக்கொள்கிறேன்.. .....

  • கருத்துக்கள உறவுகள்

மாதங்கள் சில ஆகலாம்! என்னை மறந்துவிட மாட்டீர்கள்தானே!?

இப்படி எல்லாம் கேட்டு மனதைக் கஸ்ரப்படுத்தக்கூடாது கவிதை... :( :(

  • கருத்துக்கள உறவுகள்

வளமையாக கிழமைக்கு ஒருவர்,இருவர் என இப்போ கொஞ்சக் காலமாக இப்படியான விசங்களைத் தான் கேக்கவேண்டி இருக்கு...என்ன செய்வது சொல்கிற எல்லாத்தையும் கேட்டுத் தான் ஆகனும்....ம்ம்ம்...

  • கருத்துக்கள உறவுகள்

------

வாழ்க்கையில் எல்லாமே பயணம் ஒன்றின் இடையில் வரும் சந்திப்புகள் தான்.. எதுக்கும் எவருக்கும் காத்திராமல் போவதுதான் வாழ்க்கை

அதற்குப் பெயர் சுயநலம்.

  • கருத்துக்கள உறவுகள்

வளமையாக கிழமைக்கு ஒருவர்,இருவர் என இப்போ கொஞ்சக் காலமாக இப்படியான விசங்களைத் தான் கேக்கவேண்டி இருக்கு...என்ன செய்வது சொல்கிற எல்லாத்தையும் கேட்டுத் தான் ஆகனும்....ம்ம்ம்...

கவலைப்படாதீர்கள்... யாயினி,

அந்த, இடத்தை நிரப்ப வேறொருவர் வருவார் என்னும் நம்பிக்கையுனடன், நாம் வாழ வேண்டும்.

அதற்குப் பெயர் சுயநலம்.

உங்களுக்கும் எனக்கும் இருப்பது !!

  • கருத்துக்கள உறவுகள்

எப்போதும் போலான உனது புன்னகையும் சிரிப்பும்

எப்போதும் வேண்டும்....

உனது வெற்றிக்கான பயணத்தில்

தோற்றாலும் துணிவோடு வருவாவென்ற நம்பிக்கையோடு

வாழ்த்துகிறேன்....

போய் வா தோழனே வெற்றியுனக்காக.....

சிலரால் மட்டுமே கண்டு கொள்ளப்பட்ட உனது கண்ணீருக்கு

பதில் புன்னகை தேசமாக வேண்டும்.

போய் வா.....

கவிதைக்காக இப்பாடல்:-

[media=]http://www.youtube.com/watch?v=p1D3bEz938U&feature=related

Edited by shanthy

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப தான் இதை பார்த்தேன். :(

சரி போட்டுவாங்கோ .. வெற்றியோடை திரும்புங்கோ.. :)

(கனக்க குடுக்கல் வாங்கல் இருக்கு மவனே அப்புறம் கவனிப்போம்.. :rolleyes: )

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Edited by ஜீவா

  • கருத்துக்கள உறவுகள்

சென்று, வென்று வாருங்கள் கவிதை.. :unsure:

யாழின் மும்மூர்த்திகளில் ஒருவர் தற்காலிகமாக என்றாலும் விலகிச் செல்வது கவலையாக உள்ளது..

:rolleyes: மீதமிருக்கும் இருமூர்த்திகளான சுபேஸ், குட்டி ஆகியோர் இந்த வெற்றிடத்தை இட்டு நிரப்புவார்கள் என்கிற நம்பிக்கை உண்டு.. :D

  • கருத்துக்கள உறவுகள்

சென்று, வென்று வாருங்கள் கவிதை.. :unsure:

யாழின் மும்மூர்த்திகளில் ஒருவர் தற்காலிகமாக என்றாலும் விலகிச் செல்வது கவலையாக உள்ளது..

:rolleyes: மீதமிருக்கும் இருமூர்த்திகளான சுபேஸ், குட்டி ஆகியோர் இந்த வெற்றிடத்தை இட்டு நிரப்புவார்கள் என்கிற நம்பிக்கை உண்டு.. :D

ஓமோம்..நிரப்பிறம் நிரப்பிறம்.....நீங்கள் எல்லாம் பிள்ளை குட்டி பெத்து குடியும் குடித்தனமுமாய் இருங்கோ..நாங்கள் இப்பிடியே இருந்து நாசமாய்ப் போறம்..இப்ப சந்தோசம்தான..? :lol:

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கும்,கவிதை அண்ணா உங்களுக்குமான

பிரிவுக்கான இடைவெளி இயன்றவரைக்கு குறுகியதாகவே

இருக்க வேண்டும் என்று..இந்த சிறியவளின் வேண்டுதல்..

  • கருத்துக்கள உறவுகள்

இன்று தான் பார்த்தேன் கவிதை. போவீங்கள் எண்டு தெரியும் ஆனால் இவளவு கெதியில போவீங்கள் எண்டு தெரியாது. பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.