Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தனி திரி திறக்க வேண்டுகோள்..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

sm37rc.jpg

தனி திரி திறக்க வேண்டுகோள்..

உங்களுக்கு மட்டும் தனியா திறந்து கொள்கிறீர்கள்.. அந்த மேட்டருக்கு எல்லாம் நான் வரல் .... இது உங்க களம்...

http://www.yarl.com/...howtopic=106946

இது 30 வருடத்திற்கு மேல நடந்திட்டுதான் இருக்கு.. இதற்கு ஒரு தனி திரி திறங்கப்பா..

டிஸ்கி:

மீனவர்கள் செத்தது அவரவர் 300 400 என்கிறார்கள்...

துன்புறுத்தல் அது ஒரு கேட்டகிரி .. எல்லாத்தையும் சேர்த்து

அவனவன் குத்து மதிப்பாக அடிச்சு விடுகிறார்கள். நாங்களும் தமிழர்கள் தானே..

இதை ஒரு கோப்பாக சேமித்தால் ஏதாவது பயன் வரும்

என்ற நப்பாசை அவ்வளுதான் வெற ஏதும் கிடையாது.. <_< <_<

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

நீங்களே திறவுங்களேன் இங்கு ஒரு தடையுமில்லை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த மாறி சிறப்பு திரி எல்லாம் தொடங்க முடியாது தோழர் நிர்வாகம் மனது வைத்தால் உண்டு .. இந்த மாறி தமிழக மீனவர்கள் தாக்குதல் சார்ந்த தொகுப்பை எல்லாம் ஒன்றாக தொகுக்கலாம்....

:rolleyes: :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தனி திரி திறக்க வேண்டுகோள்..

உங்களுக்கு மட்டும் தனியா திறந்து கொள்கிறீர்கள்.. அந்த மேட்டருக்கு எல்லாம் நான் வரல் .... இது உங்க களம்...

வணக்கம் புரட்சியர்!இதை நீங்கள் ஒரு ஆலோசனையாக சொல்லியிருந்தால் அழகாக இருந்திருக்கும்.இது உங்கள் களம் பிரித்துக்காட்டுவது அழகல்ல :( இருந்தாலும் நிர்வாகம் கவனத்திலெடுக்கும் என் நம்புகின்றேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் புரட்சியர்!இதை நீங்கள் ஒரு ஆலோசனையாக சொல்லியிருந்தால் அழகாக இருந்திருக்கும்.இது உங்கள் களம் பிரித்துக்காட்டுவது அழகல்ல :( இருந்தாலும் நிர்வாகம் கவனத்திலெடுக்கும் என் நம்புகின்றேன்.

தோழர் அதெல்லாம் ஏதும் கிடையாது...

மீனவர்கள் மீது இனியும் தாக்குதல் நடத்தினால் இலங்கை தூதரகம் இருக்காது: வேல்முருகன்

சென்னை: தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை இனியும் தாக்குதல் நடத்தினால் தமிழ்நாட்டில் இலங்கைத் தூதரகம் அப்புறப்படுத்தப்படும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தி.வேல்முருகன் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது என்பதை நாள்தோறும் மேற்கொள்ளும் ரோந்து நடவடிக்கையைப் போல் செய்து வருகிறது சிங்களக் கடற்படை. இந்த ஒரு வாரத்தில் 3 முறை தமிழக மீனவர்களைத் தாக்கி அரிவாளால் வெட்டி விரட்டியடித்துள்ளனர் சிங்களக் காடையர்கள்.

பறிபோன உரிமை

தமிழக மீனவர்கள் தங்களது பாட்டன் முப்பாட்டன் காலத்திலிருந்து மீன்பிடித்துக் கொண்டிருந்த கடற்பரப்பில்தான் தற்போதும் மீன்பிடித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் 1974-ம் ஆண்டு ஜூன் 28-ந்தேதியன்று கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுத்த நாள் முதல் கடந்த 30 ஆண்டுகாலமாக 600க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை சிங்கள கடற்படை சுட்டுப் படுகொலை செய்திருக்கிறது.

கச்சத்தீவு ஒப்பந்தம் போடப்பட்ட பிறகு தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமை பற்றிய கேள்வி எழுந்தபோது நாடாளுமன்றத்தில் பதிலளித்த அந்நாளைய வெளியுறவுத் துறை அமைச்சர் ஸ்வரன்சிங், தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமையை கச்சத்தீவு ஒப்பந்தம் மூலம் விட்டுக் கொடுத்துவிடவில்லை என்று பகிரங்கமாக அறிவித்தார். ஆனால் 1976-ம் ஆண்டு இந்திய வெளியுறவு செயலராக இருந்த கேவல்சிங்குக்கும் இலங்கை வெளியுறவுச் செயலாளர் வி.டி.ஜெயசிங்கேவுக்கும் இடையே கடிதப் பரிமாற்றங்களில் இந்த உரிமை பறிகொடுக்கப்பட்டுவிட்டது.

600க்கும் மேற்பட்டோர் படுகொலை

கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்ததால் 600க்கும் மேற்பட்ட மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இலங்கைக் கடற்படையால் தாக்கப்பட்டு ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்திருக்கின்றனர். ஒவ்வொரு நாளும் வாழ்வாதாரம் தேடிப் போகும் மீனவர்கள் உயிரோடு மீண்டும் கரைக்குத் திரும்புவோமா என்ற உத்தரவாதமின்றி நடுக்கடலில் தவியாய் தவிக்கின்றனர்.

காக்கை குருவிகளை சுடுவது போல தமிழக மீனவர்களை சுட்டுப் படுகொலை செய்து வருகிறது சிங்கள அரசு. தட்டிக் கேட்க வேண்டிய, கண்டிக்க வேண்டிய மத்திய அரசோ வாய்மூடிவு மவுனியாகவே இத்தனை ஆண்டுகாலமாக இருந்து வருகிறது. தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும் கூப்பாடு போட்டு கண்டனம் தெரிவித்த போதும்கூட மத்திய அரசு தமிழனின் உயிரை மதிக்கத் தயாராக இல்லை.

தமிழக மீனவர்கள் கச்சத்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்தால் 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பேன் என்று சிங்கள கொலைவெறியன் மகிந்த ராஜபக்ச கொக்கரிக்கும்போது அதைக் கூட கண்டிக்க திராணியற்ற அரசாங்கமாகவே இந்திய மத்திய அரசு இருக்கிறது. மகிந்த ராஜபக்சேவே இப்படி கொலைவெறியோடு பேசும்போது அவனது கட்டளைக்கு கீழ்படியும் சிங்கள காடையர்கள் சும்மா இருப்பார்களா?

இந்தியாவின் பரமவைரியாக கருதப்படுகிற பாகிஸ்தான் நாட்டு மீனவர்கள் இந்திய கடற்பரப்புக்குள் நுழைந்தாலும் இந்திய மீனவர்கள் தவறுதலாக பாகிஸ்தான் கடற்பரப்புக்குள் நுழைந்தாலும்கூட சுட்டுக் கொல்லப்படுவதில்லை. ஏன் சிங்கள மீனவர்கள் எத்தனையோ முறை இந்திய கடற்பரப்பில் நுழைந்தபோதும் சுட்டுக் கொல்லப்பட்டது கிடையாது. அவர்கள் எல்லாம் உரிய நீதிமன்ற விசாரணைகளுக்குப் பிறகு விடுவிக்கப்படுவதுதான் தொடர்ந்தும் நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து சிறை

தற்போதும்கூட கடந்த ஆண்டு நவம்பர் மாதம் போதைப் பொருட்களை கடத்தியதாக ராமேஸ்வரம் மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை 23 முறை வாய்தா வாங்கி இன்னமும் சிறையில்தான் அடைத்து வைத்திருக்கிறது. இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் இது தொடர்பாக உருப்படியான எந்த ஒருநடவடிக்கையுமே மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை. தமிழக மீனவர்களை இந்தியக் குடிமக்களாக இந்திய அரசு கருதவில்லை என்பதைத்தானே இது வெளிப்படுத்துகிறது!

சீனர்களுக்கு மீன்பிடி அனுமதி

இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி காலத்தில் சீனா, அமெரிக்கா உள்ளிட்ட எந்த ஒரு அன்னிய நாடும் இந்தியாவின் அனுமதியின்றி இலங்கைக்குள் நுழைய முடியாத நிலை இருந்தது. அப்போது இந்தியாவின் கொள்கை

முடிவெடுக்கும் அதிகாரம் அரசியல் தலைவர்களிடத்தில் இருந்து வந்தது. ஆனால் ராஜீவ்காந்தி காலத்துக்குப் பிறகு இந்திய வெளிவிவகார அமைச்சகத்தில் தமிழின எதிரிகளாக அமர்ந்திருப்போரே அனைத்து முடிவுகளையும் எடுக்கக் கூடிய நிலையே நீடித்து வருகிறது. இதற்காகவே தமிழக மீனவர்களை சிங்களக் காடையர்கள் சுட்டுப் படுகொலை செய்தாலும் கண்டும் காணாமல் இருக்கின்றனர்.

இப்போது தமிழக மீனவர்கள் பாரம்பரியமாக மீன்பிடிக்கும் மன்னார் வளைகுடாவில் எண்ணெய் அகழாய்வுப் பணிக்காக சீனாவுக்கு அனுமதி கொடுத்திருக்கிறது சிங்கள அரசு. இதேபோல் மன்னார் வளைகுடா உட்பட தமிழர்கள் மீன்பிடிக்கும் கடற்பரப்பில் இலங்கைக்கு கடல்வழியிலோ அல்லது நிலவழியிலோ எந்தத் தொடர்புமே இல்லாத சீனர்களுக்கும் மீன்பிடிக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அண்மையில்கூட திருகோணமலை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட சீன மீனவர்களை ராஜமரியாதையுடன் நடத்தி விடுதலை செய்திருக்கிறது சிங்கள அரசு.

இலங்கையின் இந்த முடிவால் எதிர்காலத்தில் மன்னார் வளைகுடாவில் முற்று முழுதாகவே தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க முடியாத ஒரு நிலை உருவாக்கப்பட்டு இருக்கிறது என்பதையும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி எச்சரிக்கையுடன் சுட்டிக்காட்டுகிறது.

தமிழக மீனவர்கள் தங்களுக்கு மீன்பிடி உரிமை உள்ள கட்ற்பரப்பில் மீன்பிடித்தார்கள் என்பதற்காக சுட்டுக் கொல்லும் அநியாயத்தை மத்திய அரசும் கண்டு கொள்ளாத போது தமிழர்கள் எங்குதான்போய் முறையிடுவது? தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலுக்கு ஒரே தீர்வு கச்சத்தீவை மீட்பதுதான்! இல்லையேல் தமிழக மீனவர்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ள ஆயுதமேந்துவது! இந்த இரண்டில் ஒன்றுமட்டுமே தமிழக மீனவர்களின் மீதான தாக்குதலுக்குத் தீர்வாக இருக்க முடியும் என்பதுதான் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிலைப்பாடு.

தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்தும் சிங்களக் கடற்படை தாக்குதல் நடத்துவது என்பது நீடிக்குமேயானால் தமிழகத்தைவிட்டே இலங்கை தூதரகத்தை அப்புறப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளிலும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஈடுபடும் என எச்சரிக்கிறோம்.

மேலும் தமிழ்நாட்டில் உள்ள இலங்கைதூதரகத்தை தமிழ்நாட்டில் இருந்து அடியோடு அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள், தமிழக மீனவர் அமைப்புகள், தமிழர் இயக்கங்களை ஒருங்கிணைத்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடர்ந்து போராடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

http://tamil.oneindi...ack-160146.html

இங்கிட்டு

குரைக்கிற நாய் கடிக்காது என்று எனக்கு எப்பவோ தெரியும்..

ஏனென்றால் அன்று அன்று சாப்பிட்டு அன்று அன்றுக்கு தூங்கிடுறான் .. எதாவது இந்த மாறி புள்ளி விபரம் இருந்தால் தானே .. ஏதாவது ஒரு தமிழர் சார்ந்த கட்சி நாளை ஆட்சிக்கு வரும் போது தெளிவாக பேச முடியும்.. :icon_idea: :icon_idea:

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

புரட்சியின் கோரிக்கை நியாயமாகவே... படுகின்றது.

போராட்டம் நடந்த காலத்தில்.... தமிழக மீனவர்களின் பங்களிப்பும் இருந்தது.

அந்த ஆத்திரத்தில்..., சிங்களக் கடல்படையும், இராணுவமும் அவர்களைச் சகட்டு மேனிக்கு சுட்டுக் கொல்கின்றது.

இந்தக் கிழமை மட்டும், மூன்று தாக்குதல் நடைபெற்றதாக நினைக்கின்றேன்.

அவற்றை ஒரு பகுதியின் தலைப்பில்.... நிரந்தரமாக மேலே இருக்கக் கூடியதாக... செய்தால்,

ஆவணங்கள் திரட்டும் பலருக்கு, உதவியாக இருக்கும்... என்பது என் எண்ணம்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக மீனவர்களின் பிரச்சனையும் ஈழத்தில் தமிழங்க பிரச்சனையும் பல தொடர்புகளைக் கொண்டுள்ளன. அந்த வகையில்.. புரட்சியின் கோரிக்கையில் நியாயம் உள்ளமை தெளிவு..! :icon_idea:

மேலும்.. எமது தமிழ் மீனவர்களிடையேயே எல்லை தாண்டிய மீன்பிடி.... மீன்பிடி முறைகள்.. வளப் பயன்பாடுகள் குறித்த பேச்சுக்கு இடமளிக்காமல் டக்கிளஸ் தேவானந்தா போன்ற சிங்கள எதிரிக்கு சேவகம் செய்யும் ஒட்டுக்குழுக் கூலிகள்.. தமிழக.. ஈழ மீனவர்களிடையே பிரச்சனைகளை தூண்டிவிட்டு.. சிங்கள கடற்படையின் அராஜகங்களுக்கு மேலும் மேலும் துணை போகின்றனர். இவை பற்றி இரு பகுதி.. மீனவர்களும் மக்களும் தங்களுக்கிடையே கருத்துப் பரிமாறிக் கொள்வதும்.. பிரச்சனைகளை சுமூகமாக தீர்த்துக் கொண்டு அரசியல் முதலைகளும் ஒட்டுக்குழுக்களும்.... அப்பாவி மீனவர்களை வைத்து தங்களை எதிரிக்கு முன்னால்.. வளர்த்துக் கொள்வதை தடுக்கவும் ஒரு பங்களிப்புச் செய்யப்பட வேண்டி உள்ளது.

சர்வதேச அரங்கில் தமிழக மீனவர்கள் மீதான நெருக்கடிகளும்.. ஈழத்தின் உள்ளூர் மீனவர்கள் மீதான நெருக்கடிகளும் சிறீலங்கா சிங்கள அரசின் திட்டமிட்ட இனவாத அடிப்படையிலான செயற்பாட்டில் இருந்து பிறக்கின்றன என்பதை ஆணித்தரமாக சொல்லவும் இனங்காட்டவும் வேண்டும். அதற்கு யாழ் இந்த வகையில் உதவினாலும் நன்றே..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

புரட்சியின் கோரிக்கைக்கு நானும் ஆதரவு அளிக்கிறன்

  • கருத்துக்கள உறவுகள்

புரட்சியின் கோரிக்கைக்கு நானும் ஆதரவு தருகின்றேன்

Edited by விசுகு

நியாயமான கோரிக்கை. நடக்கும் சம்பவங்கள் தனியே பதியப்பட்டு, அது தொடர்பாக வரும் செய்திகளும் புகைப்படங்களும் இணைக்கப்பட வேண்டும். தேவை வரும் போது உதவும்.

ஐநூறு, அறநூறு என்று குத்து மதிப்பாகச் சொல்கிறார்களே அன்றி அது தொடர்பான ஆதாரங்கள் ஒரு இடத்தில் சேமிக்கப்படவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஆங்கிலத்தில் வரும் செய்திகளையும் பதிவிட வேண்டும்.. புரட்சியின் கோரிக்கைக்கு என் ஆதரவும் உண்டு.. :D

புரட்சியின் கோரிக்கை நியாயமானது. அதற்கு எனது ஆதரவும் உண்டு.

நல்ல விடயம் .........நியாயமான கோரிக்கை ...........நிர்வாகம் இதனை சாதகமாக பரீட்சித்து நல்ல முடிவு ஒன்றை எடுக்கும் என நம்புகிறேன் ......

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் கிடைக்கும் வரை தமிழ்நாட்டு மீனவர்கள்

சிங்களக் காடையர்களின் அட்டூழியத்தின் மத்தியில் தான்

மீன் பிடிக்க முடியும்.

புரட்சியின் யோசனை ஆலோசிக்கப்படவேண்டியது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

212301.jpg

அட போங்கப்பா .. ஒரு மரியாதையே கணோம்..அன்றிலிருந்து நீங்கள் நீங்களாதான் இருக்கிறீர்கள் .. இங்கிட்டு நாங்களுங்களும் நாங்களதான் இருக்கம்..எனக்கு தூக்கம் வருது ஐயாம் சிலிப்பிங்கு.. :icon_mrgreen: :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

212301.jpg

அட போங்கப்பா .. ஒரு மரியாதையே கணோம்..அன்றிலிருந்து நீங்கள் நீங்களாதான் இருக்கிறீர்கள் .. இங்கிட்டு நாங்களுங்களும் நாங்களதான் இருக்கம்..எனக்கு தூக்கம் வருது ஐயாம் சிலிப்பிங்கு.. :icon_mrgreen: :icon_mrgreen:

புரட்சி, எதற்கும்... நாம், உணர்ச்சிவசப் படப் படாது :o .

எல்லோரும்... உடனடியாக, முடிவெடுக்கும், நிலையில் இல்லை :rolleyes: .

சுடுகுது... மடியைப் பிடியென்றால்... நிர்வாகத்துக்கும் கஸ்ரம்.

இவ்வளவு நாள்... பொறுத்தனீங்கள், கொஞ்சம் பொறுங்களேன். :wub::)

புரட்சி அண்ணாவின் கோரிக்கைக்கு நானும் ஆதரவளிக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்க்களம் புரட்சியின் இவ்வேண்டுகோளைக் கவனத்தில் எடுக்கவேண்டும். காலங்காலமாக தமிழக சகோதரர்கள் கடலில் வைத்து சிறீலங்கா கடற்படையால் உயிர் அச்சுறுத்தலுக்கு உள்ளாவதுடன் தமது சீவனோபாயத் தொழிலையும் மேற்கொள்ள முடியாமல் கிட்டத்தட்ட தமிழீழ மக்களைப்போன்று பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களும் நாங்களும் வேறுவேறல்ல என்பதாகத்தான் சிங்களத்தின் திடமான நம்பிக்கையாக இருக்கிறது. எங்களைப்போன்றே தமிழக சகோதரர்களும் பாதிப்புக்குள்ளாவது இன்னும் தொடர்ந்தவண்ணம்தான் இருக்கிறது. அதனை அவர்களை ஆளும் தமிழக அரசோ!!! அல்லது தமிழகத்தை மாநிலமாக்கி ஆளும் மத்திய அரசோ கணக்கில் எடுப்பதாகத் தெரியவில்லை. தமிழகச் சகோதரர்களின் மீது இலங்கைக் கடற்படை நிகழ்த்தும் அக்கிரமங்களை பாராமுகமாக அல்லது அசட்டையாக நீண்டகாலமாக இருந்து வருவது வருத்தத்திற்கு உரியது. இதுவரை காலமும் கடலில் தொழில் செய்து கொண்டு இருந்த தமிழக மீனவச்சகோதரர்கள் எத்தனைபேர் இலங்கைக் கடற்படையால் கொலை செய்யப்பட்டார்கள் என்பதற்கு இருக்கக்கூடிய சான்றுகள் அந்தக் கொலையுண்ட சகோதரர்களின் குடும்பங்களின் ஏழ்மைக்குள் முடங்கிப் போய் கொண்டிருக்கின்றன. அவையெல்லாம் வெளிச்சத்திற்கு வரவேண்டும். அதற்கான ஒரு தளம் அவசியம். அத்தகைய ஒரு தளமாக ஏன் யாழ் உருவாகக்கூடாது? அவர்களும் நாமும் வேறல்லவே.....

[size=5]புரட்சியின் கோரிக்கைக்கு நானும் ஆதரவளிக்கிறேன்![/size]

[size=5]புரட்சியின் கோரிக்கைக்கு நானும் ஆதரவளிக்கிறேன்![/size]

நாங்க புரட்சிக்கு மட்டுந்தான் ஆதரவளிப்போம்..

புரட்டசி ஆதரவுடன் எல்லாள மகாராஜா :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சஹாரா அக்காவின் கருத்தே எனதும். :)

புரட்சியின் கோரிக்கை யாழின் வடிவத்தில் மீண்டும் ஒரு மாற்றத்தினை கொண்டு வரும் போது கண்டிப்பாக நோக்கப்படும். கொஞ்ச காலம் பொறுக்க வேண்டும் மாற்றத்துக்கு.

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

புரட்சியின் கருத்துக்கு எனது ஆதரவு உண்டு.நிர்வாகம் கவனத்தில் எடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

[size=4]எனக்கு தூக்கம் வருது ஐயாம் சிலிப்பிங்கு[/size]

:lol: :lol:
  • கருத்துக்கள உறவுகள்

மிக்க நன்றி நிழலி விரைவில் மாற்றத்தை எதிர்பார்க்கின்றேன்................

  • கருத்துக்கள உறவுகள்

புரட்சிகர தமிழ்தேசியனின் கோரிக்கை நியாயமானது. அதற்கு எனது ஆதரவும் உண்டு.

மிக்க நன்றி நிழலி விரைவில் மாற்றத்தை எதிர்பார்க்கின்றேன். :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.