Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என் கொழுப்பு குறைஞ்சுட்டுது: நிழலி

Featured Replies

ஒரு 2 வருடங்களுக்கு முன்னர் வழக்கமான மருத்துவ பரிசோதனை செய்யும் போது என் உடம்பில் கொழுப்பு கூடியுள்ளதாக மருத்துவர் சொல்லியிருந்தார் ("உங்களுக்கு கொழுப்பு கூட இல்லாட்டித்தான் அதிசயம்" என்று என் மனைவி சொல்லியிருந்தார். அதுவும் *** இல் கொழுப்பு கூட என்று).  Cholesterol இல் இருக்கும் triglycerides அதிகரித்துள்ளதாகவும், அது கூடாது என்றும் மருத்துவர் சொல்லியிருந்தார். ஏற்கனவே உயர் இரத்த அழுத்தம் (high blood pressure: BP) இருப்பதால் கொலஸ்ரோல் அதிகரிப்பு என்பது சாவை வெத்தலை பாக்கு சுண்ணாம்பு தடவி புகையிலையும் போட்டு வரவேற்பது மாதிரியான விடயம்.

கொழுப்பு குறைய மருந்து எழுதித் தருவதாக மருத்துவர் சொன்னபோது வேண்டாம் மருந்து இல்லாமல் குறைக்க முயல்கின்றேன் என்று கூறியிருந்தேன்.

கடந்த வாரம் மீண்டும் இரத்த பரிசோதனை செய்யும் போது கொழுப்பு குறைந்துவிட்டது என்றும் மிகவும் ஆரோக்கியமான நிலையில் இரத்தம் இருக்கு என்றும் பதில் வந்தது. நான் மேற்கொண்ட சின்ன சின்ன விடயங்களும் உணவு முறையில் ஏற்படுத்திய சின்ன சின்ன மாற்றங்களும் எனக்கு நல்ல தீர்வை தந்துள்ளன.

நான் ஏற்படுத்திய சின்ன சின்ன மாற்றங்களை உங்களுடன் பகிர விரும்புகின்றேன். ஒரு சிலருக்காவது பிரயோசனப்படும். நான் ஆடு, மாடு, கணவாய் (கருவாடு) என்று எந்த உணவையும் விட்டு வைக்காமல் வெளுத்துக் கட்டும் ஒரு ஆள் என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்த விடயம். அப்படி இருந்தும் கொழுப்பு குறைந்து இருக்கு.

ஆடு,மாடு,கணவாய் இப்படி பத்தும் பலதும் சாப்பிட்டே கொழுப்பு குறைந்திருக்கு என்றால் ஆச்சரியமாகதான் இருக்கு நிழலி.

என்ன ரகசியம் என்று எங்களுக்கும் சொல்லவும்,கேட்டுவிட்டேன் என்று எதாவது இடக்குமுடக்காக சொல்லகூடாது :D

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

ரகசியத்தை சஸ்பென்ஸ் ஆக விட்டால் எப்படி?

  • தொடங்கியவர்

நான் செய்த சின்ன சின்ன மாற்றங்கள்:

மிக முக்கியமான மாற்றங்கள் என்று நாம் நம்புவன:

1. பச்சைத் தேனீர் (Green Tea) அருந்துவதை வழக்கமாக்கியது. வார நாட்களில் ஒவ்வொரு நாளும் ஆகக் குறைந்தது ஒரு தடவையேனும் 2 சின்ன பக்கெற் (sachets) களை பயன்படுத்தி பச்சைத் தேனீரை பருகுவது. இதில் சீனி ஒருக்காலும் போடக் கூடாது. அத்துடன் கொதிக்க வைத்த நீரை 3 நிமிடம் வைத்த பின் அதில் தான் தேநீரை தயார் செய்ய வேண்டும்.

2. இடைக்கிடை பசி வரும் போது Snacks ஆக கூடியவரைக்கும் Nuts இனை சாப்பிட்டது. அதுவும் அதிகளவு பாதாம் பருப்பு (Almonds) சாப்பிட்டது. இதன் பின் விளைவாக அதிக sexual feelings வரும் என்பதையும் சொல்ல வேண்டும். தாக்குபிடிக்கும் திறன் அபரிதமாக அதிகரிக்கவும் செய்யும்.

3. Tangerine எனும் தோடம்பழ வகையைச் சார்ந்த பழத்தை அதிகம் சாப்பிட்டது. வாரத்தில் 4 பழங்களாவது சாப்பிடுவேன். இந்தப் பழம் கொலஸ்ரோலை மிகவும் கட்டுப்படுத்தும் ஒரு பழம் என்று கருதப்படுவது (ஆனால் விஞ்ஞான ரீதியில் 100 வீதம் நிரூபிக்கப்படவில்லை)

பார்க்க: http://www.livestrong.com/article/39950-foods-decrease-ldl-cholesterol/

4. பச்சைக் காய் கறிகளை அதிகம் சாப்பிடுவதற்காக Salad இனை வார நாட்களில் ஒரு நாளாவது சாப்பிடுவது.

5. வாரத்தில் 3 நாளாவது 40 நிமிடங்களுக்கும் மேலாக Treadmill இல் ஓடி ஒவ்வொரு தடவையும் 250 கலோரிகளையாவது குறைப்பது.

6. ஓமேகா முட்டை (நான் முட்டையின் காதலன்: வாரத்தில் ஆகக் குறைந்தது 10 ஆவது சாப்பிடுவேன்), மற்றும் மீனை வாரத்தில் இரண்டு நாளாவது உண்பது.

வேறு சின்ன சின்ன மாற்றங்கள்

1. Canola oil, sunflower oil என்பனவற்றை பாவிக்காமல் கூடிய வரைக்கும் நல்லெண்ணெய் பயன்படுத்தியது. மரக்கரி எண்ணெய் போன்றன processed உணவு என்பதால் எவ்வளவுதான் கொழுப்பு குறைவு என்று போட்டிருப்பினும் அவற்றை நம்பவில்லை. இடையிடை தேங்காய் எண்ணெயையும் பயன்படுத்தி இருக்கின்றேன்.

2. உணவில் Olive oil இனை அதிகரித்தது.

3. Chivas regal, black label போன்ற அதி திறன் கொண்ட மதுக்களை முற்றாக விட்டு விட்டு Brandy யினையும் அநேக நேரங்களில் red wine இனையும் பருகியது. வார நாட்களில் அருந்தாமல் வார இறுதி நாட்களில் மட்டுமே அருந்துவன் என்று திட்டமிட்டு செயலாற்றியது. இதனால் 7 நாட்களில் இருந்து 2 நாட்களாக மதுப்பாவனை குறைந்தது. லீவு நாளென்றால் வார நாட்கள் விரதத்துக்கு விடுமுறை.

4. இவை எல்லாவற்றையும் விட மனசை சந்தோசமாக வைத்து இருந்தது, எந்தப் பிரச்சனையையும் மனைவியுடன் கதைத்து மனசை இலேசாக்கியது மற்றும் இனிமையான Sex.

நன்றி

  • தொடங்கியவர்

இதில் நான் எழுதிய விடயங்கள் எல்லாம் என் தனிப்பட்ட அனுபவங்கள் தான்.  விஞ்ஞான ரீதியில் நிரூபிக்கப்படாமல் வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் செய்தவை. என் உடல், நான் வாழும் வாழ்க்கை முறை, என் சுற்றாடல், என் குடும்பம், என் சந்தோசங்கள் என்பன இவற்றில் செல்வாக்கு செலுத்தி இருக்கின்றன. கொழுப்பு கூடிய ஆட்கள் இதே வழிமுறைகளை செய்தால் அவை பிழைத்து போகவும் வாய்ப்பு இருக்கு; சரியாகவும் வாய்ப்பு இருக்கு.

ஆனால் ஒன்று, மருந்துகளை நாடாமல் எம்மால் சில வற்றை எம் உடலில் மாற்ற முடியும் என்று நம்புங்கள். என் உயர் இரத்த அழுத்தம் கூட இன்று மிகவும் கட்டுக்குள் வந்து அறவே இல்லை என்ற நிலமையில் இருக்கு. உடல் எடையை குறைத்தது கூட என் வழி முறைகளில் ஒன்று.

உணவே மருந்து என்பதுடன் மனமே மருந்து என்பதையும் நம்புங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"உணவே மருந்து என்பதுடன் மனமே மருந்து என்பதையும் நம்புங்கள்."

இந்த விவாதத்தையும் ஒருக்காப் பாருங்கள். :icon_idea:

நல்ல பதிவு

நிழலி, முன்னைய பின்னைய கொலஸ்ட்ரோல் அளவுகளையும் பதிவிடுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பயனுள்ள அனுபவப் பதிவு. நன்றி நிழலி அண்ணா.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பதிவு நிழலி....ஒவ்வொருவருக்கும் பயனுள்ளது...

  • கருத்துக்கள உறவுகள்

பழைய அமெரிக்க ஜனாதிபதி கிளின்டன் ஒரு கம் பேக்கர் பிரியர்.மைக் டொனால்ட் இல்லாவிட்டால் உயிரையே விட்டுவிடுவார்.அப்படி பட்ட ஒருவர் இன்று சைவ உணவுகளையே தேடி சாப்பிடுகிறார்.பால் கூட குடிக்க கூடாது என்கிறார் என்றால் பாருங்களேன்.

எனவே ஆடு மாடுகளை சாப்பிடுவதை விட்டு ஆடு மாடு சாப்பிடுவதை சாப்பிட்டால் நல்லது.

http://www.youtube.com/watch?v=R3ied_AD4iE

  • கருத்துக்கள உறவுகள்

என் கொழுப்பு குறைஞ்சுட்டுது: நிழ

தலையங்கத்தை பார்த்துவிட்டு..நான் நினைச்சன் வாய்க்கொழுப்பாக்கும் எண்டு.. :lol:
 
நானும் கிரீன் ரீ குடிக்கிறனான் நிழலி அண்ணா...ஆனால் நான் நேரடியாக சுடுதண்ணிக்குள் போட்டுக்குடித்துவந்தேன்..இதுநாள்வரை தப்பு தப்பாக குடித்திருக்கிறன் :( ..இனிமேல் சுடுதண்ணியை ஆறவிட்டு அதற்குள் போட்டு குடிக்கிறேன்..இளஞ்சூடாக தண்ணி இருந்தால் போதுமா நிழலி அண்ணா..??

எதுவும்  இளஞ்சூடாக  இருந்தால் நல்லது  :D

  • கருத்துக்கள உறவுகள்

எதுவும்  இளஞ்சூடாக  இருந்தால் நல்லது  :D

நந்தன் அண்ணா..கடை மூடினதில இருந்து...வீட்டிலை இளஞ்சூடாத்தான் இருக்கிறியள் போல... :D

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் குறிப்பின் படி பார்த்தால் நீங்கள்.. உள்ளெடுத்த கெட்ட கொழுப்பின் அளவில் மாற்றம் ஏற்பட்டு.. நல்ல கொழுப்பின் அளவில் குறிப்பிடத்தக்க ஏற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும்.. நிறைய கலோரிகளை எரித்துக் கொண்டுள்ளீர்கள் (ஓட்டம் மற்றும் செக்ஸ்). மாப்பொருளுக்கு ஈடாக பழங்கள் நிறைய உள்ளெடுக்கப்பட்டுள்ளது. உள்ளெடுக்கப்பட்ட முட்டையில் ஏற்படுத்தப்பட்ட மாற்றம். மேலும் கூடிய அளவு அன்ரி ஒக்சிடன்ற் (anti oxidants) (red wine உள்ளடங்க) சாப்பிடுவது. இவைதான் முக்கிய காரணமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். :icon_idea::)

Non-alcoholic red wine may lower blood pressure

http://www.health.harvard.edu/blog/non-alcoholic-red-wine-may-lower-blood-pressure-201209125296

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இதை வந்து எங்களுக்குச் சொல்லி, எங்கட வயித்தெரிச்சலைக் கிளப்பிறதுக்கு, எவ்வளவு கொழுப்பு இருக்கவேணும்? :D

நன்றிகள், நிழலி!

  • கருத்துக்கள உறவுகள்

நான் செய்த சின்ன சின்ன மாற்றங்கள்:

மிக முக்கியமான மாற்றங்கள் என்று நாம் நம்புவன:

1. பச்சைத் தேனீர் (Green Tea) அருந்துவதை வழக்கமாக்கியது. வார நாட்களில் ஒவ்வொரு நாளும் ஆகக் குறைந்தது ஒரு தடவையேனும் 2 சின்ன பக்கெற் (sachets) களை பயன்படுத்தி பச்சைத் தேனீரை பருகுவது. இதில் சீனி ஒருக்காலும் போடக் கூடாது. அத்துடன் கொதிக்க வைத்த நீரை 3 நிமிடம் வைத்த பின் அதில் தான் தேநீரை தயார் செய்ய வேண்டும்.

2. இடைக்கிடை பசி வரும் போது Snacks ஆக கூடியவரைக்கும் Nuts இனை சாப்பிட்டது. அதுவும் அதிகளவு பாதாம் பருப்பு (Almonds) சாப்பிட்டது. இதன் பின் விளைவாக அதிக sexual feelings வரும் என்பதையும் சொல்ல வேண்டும். தாக்குபிடிக்கும் திறன் அபரிதமாக அதிகரிக்கவும் செய்யும்.

3. Tangerine எனும் தோடம்பழ வகையைச் சார்ந்த பழத்தை அதிகம் சாப்பிட்டது. வாரத்தில் 4 பழங்களாவது சாப்பிடுவேன். இந்தப் பழம் கொலஸ்ரோலை மிகவும் கட்டுப்படுத்தும் ஒரு பழம் என்று கருதப்படுவது (ஆனால் விஞ்ஞான ரீதியில் 100 வீதம் நிரூபிக்கப்படவில்லை)

பார்க்க: http://www.livestrong.com/article/39950-foods-decrease-ldl-cholesterol/

4. பச்சைக் காய் கறிகளை அதிகம் சாப்பிடுவதற்காக Salad இனை வார நாட்களில் ஒரு நாளாவது சாப்பிடுவது.

5. வாரத்தில் 3 நாளாவது 40 நிமிடங்களுக்கும் மேலாக Treadmill இல் ஓடி ஒவ்வொரு தடவையும் 250 கலோரிகளையாவது குறைப்பது.

6. ஓமேகா முட்டை (நான் முட்டையின் காதலன்: வாரத்தில் ஆகக் குறைந்தது 10 ஆவது சாப்பிடுவேன்), மற்றும் மீனை வாரத்தில் இரண்டு நாளாவது உண்பது.

வேறு சின்ன சின்ன மாற்றங்கள்

1. Canola oil, sunflower oil என்பனவற்றை பாவிக்காமல் கூடிய வரைக்கும் நல்லெண்ணெய் பயன்படுத்தியது. மரக்கரி எண்ணெய் போன்றன processed உணவு என்பதால் எவ்வளவுதான் கொழுப்பு குறைவு என்று போட்டிருப்பினும் அவற்றை நம்பவில்லை. இடையிடை தேங்காய் எண்ணெயையும் பயன்படுத்தி இருக்கின்றேன்.

2. உணவில் Olive oil இனை அதிகரித்தது.

3. Chivas regal, black label போன்ற அதி திறன் கொண்ட மதுக்களை முற்றாக விட்டு விட்டு Brandy யினையும் அநேக நேரங்களில் red wine இனையும் பருகியது. வார நாட்களில் அருந்தாமல் வார இறுதி நாட்களில் மட்டுமே அருந்துவன் என்று திட்டமிட்டு செயலாற்றியது. இதனால் 7 நாட்களில் இருந்து 2 நாட்களாக மதுப்பாவனை குறைந்தது. லீவு நாளென்றால் வார நாட்கள் விரதத்துக்கு விடுமுறை.

4. இவை எல்லாவற்றையும் விட மனசை சந்தோசமாக வைத்து இருந்தது, எந்தப் பிரச்சனையையும் மனைவியுடன் கதைத்து மனசை இலேசாக்கியது மற்றும் இனிமையான Sex.

நன்றி

Green Tea சக்கைச் சாமான். ஒருநாளைக்கு குறைந்தது இரண்டுதரம் குடிப்பேன்.

ஆனால் நீரை ஆறவிட்டுக் குடிப்பது குறைவு. அத்துடன் கிழமையில் ஐந்து

ஆறுதரம், ஒருநாளைக்கு 2km ரீதியில் ஓடுவேன். எனக்கும் மச்சம் இல்லாமல்

சாப்பாடு இறங்காது, அதுவும் கோழி என்றால் அப்பிடி விருப்பம். இதுவரை

கொழுப்பு பற்றி கவலைப்படவில்லை, வைத்தியரிட்டையும் போகப் பயம் (அதை இதை

தின்னாதை எண்டு சொல்லிப் போடுவாங்கள்).

முட்டை, அதுவும் மஞ்சள் கரு

கொழுப்புக் கூடியது எண்டு சொல்லுவாங்கள். நீங்கள் பத்து சாப்பிட்டும்

கொழுப்பு குறைஞ்சிருக்கேண்டால் பாதாம் பருப்பு நல்லா வேலை செய்யுது போல.

நோமலாவே ஒரு டைப்பாத் திரியிறனியல், ஆமென்ட் வேற அடிச்சால் சொல்லி

வேலையில்லை.

சாப்பிட்டாப் பிறகு பாதாம் பால் குடிச்ச அனுபவம் இருக்கா? இல்லை எண்டால் ஒருக்கா அமுல் படுத்திப் பாருங்கோ.

மற்றது எழு நாளும் தண்ணியா? கவனம், லிவர் லீவிலை போகப்போகுது...

  • கருத்துக்கள உறவுகள்

பயனுள்ள அனுபவப் பதிவு.

  • கருத்துக்கள உறவுகள்

உடம்பில உள்ள கொழுப்பைக் கரைக்கலாம். மனதில உள்ளத எப்பிடிக் கரைக்கிறது எண்டு யாரும் சொன்னீங்கள் எண்டால் நல்லது. :D

  • கருத்துக்கள உறவுகள்

உடம்பில உள்ள கொழுப்பைக் கரைக்கலாம். மனதில உள்ளத எப்பிடிக் கரைக்கிறது எண்டு யாரும் சொன்னீங்கள் எண்டால் நல்லது. :D

 பட்டினத்தார் பாடல்கள்,தலாய் லாமா, சுவாமி விவேகானந்தர் என்பவற்றை வாசித்துப் பாருங்கள்!

யாக்கையின் நிலையாமை புரியும்!  :D

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்
கிறீன் ரீ உட‌ம்புக்கு மிகவும் நல்லது...நான் ஒரு நாளைக்கு 3 தர‌மாவது குடிப்பேன்...இனிப்பு,எண்ணெய் சாப்பாடு சாப்பிட்டால் உட‌னே இதைத் தான் குடிப்பது...நான் சில பேரைப் பார்த்திருக்கிறேன் அவர்கள் எதாவது சாப்பிட‌க் கூடாது சாப்பிட்டால் உட‌னே ஓடிப் போய் வெந்நீர் குடிப்பார்கள்.கொழுப்பைக் கரைக்குமாம் :D ...நட்ஸ்சால் கொலஸ்ரோலை குறைக்கலாம் என்பது செய்தி
  • கருத்துக்கள உறவுகள்

கொலஸ்ரோல், சுகர், இரத்த அழுத்தம் போன்றவை பற்றி இன்னமும் கவலைப்பட ஆரம்பிக்கவில்லை. கண்டதை எல்லாம் சாப்பிட்டாலும் அளவோடு சாப்பிடும் மனக் கட்டுப்பாடு இருக்கு. அத்தோடு ஒரு கோப்பை (அளவான கோப்பைதான்) சாப்பிட்டால், திரும்பவும் போட்டுச் சாப்பிடுவதில்லை!

  • கருத்துக்கள உறவுகள்

தற்பொழுது தான் பார்த்தேன்

எனக்கு 20 வருடங்களுக்கு முன்பே வைத்தியர் இப்படி சொன்னபோது நானும் மருந்து பாவிக்காமல் வாய்க்குள் போடுவதை பார்த்து போடத்தொடங்கினேன்.  அன்றிருந்த அளவுக்குள்ளேயே  இன்று வரை வைத்திருக்கமுடிகிறது.  வயது போனபோதும் கூட.

சாதாரணமாக நான் சாப்பிடும்போது சோற்றைவிட இறைச்சி அதிகமாக இருக்கும். அதை மட்டும்  குறைக்கமுடியவில்லை.

எல்லாம் நிழலியைப்போல்தான் அதில் ஒரு மாற்றம் கறி சமைக்கும்போது தாளிப்பதைதவிர்த்து விடுவார் எனது மனைவி. அதனால் இன்றுவரை மருந்து பாவிக்கும  அளவுக்கு வரவில்லை.  இறைச்சிகளில் பன்றியும்   ஆடும்  முட்டையும் கடல்வகையில் நண்டும் இறாலும்  முடிந்தவரை  தவிர்க்கப்படும்.

(போன கிழமை பிரான்சில் இந்த கூடாத கொழுப்பு ஒன்று இல்லை என்று மருத்துவர்களால் அறிக்கை ஒன்று விடப்பட்டு பெரும் கருத்தரங்குகள் நடாத்தப்பட்டன. அந்தவகை கொழுப்பு உண்டு அது கூடாது என்பது வியாபார நோக்கில் செய்யப்படும் விளம்பரமாம். இது பற்றி  மேலும் தெரிந்தவர்கள் எழுதினால் நல்லது)

  • கருத்துக்கள உறவுகள்

கிரீன் டீ  ரெட் வைன் தவிர மற்றவை கொஞ்சம் பமிலி  டைப்பா  (குடும்பஸ்தர்களுக்கு மட்டுமே கூடியதாக) இருக்கு.

எம்மை போன்ற சிங்கிள் சிங்கங்களுக்கு கொழுப்பு குறைக்க ஏதும் வழி  இருக்கா?
மெடிக்கல் செக்கப்பே செய்வதில்லை போகும்போது என்ன குண்டை தூக்கி போடுவாங்களோ தெரியாது. கொழுப்பு இருப்பதுபோல் தெரியவில்லை எங்காவது ஒழிந்சிருந்தால் கரைச்சுவிடலாம்.
  • தொடங்கியவர்

பின்னூட்டம் இட்ட அனைத்து அன்பான உறவுகளுக்கும் என் நன்றிகள்.

நானும் கிரீன் ரீ குடிக்கிறனான் நிழலி அண்ணா...ஆனால் நான் நேரடியாக சுடுதண்ணிக்குள் போட்டுக்குடித்துவந்தேன்..

ஒரு முறை நான் வாங்கிய ஜப்பான் நாட்டு Green Tea  box இல் இருக்கும் இணைய முகவரிக்குச் சென்று பார்க்கும் போது சரியாக எப்படி அதனை தயாரிப்பது என்று போட்டு இருந்தார்கள். அதில் கொதிக்க வைத்த தண்ணீரை 3 நிமிடம் ஆற வைத்த பின் தேனீர் தயாரிப்பதே சரி என்று போட்டு இருந்தார்கள். என்ன என்றாலும் இந்த ஜப்பான் காரன் சொல்வது சரியாகத்தான் இருக்கும் என்று அன்றில் இருந்து அதனையே கடைப்பிடித்து வருகின்றேன்.

உங்கள் குறிப்பின் படி பார்த்தால் நீங்கள்.. உள்ளெடுத்த கெட்ட கொழுப்பின் அளவில் மாற்றம் ஏற்பட்டு.. நல்ல கொழுப்பின் அளவில் குறிப்பிடத்தக்க ஏற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும்.. நிறைய கலோரிகளை எரித்துக் கொண்டுள்ளீர்கள் (ஓட்டம் மற்றும் செக்ஸ்). மாப்பொருளுக்கு ஈடாக பழங்கள் நிறைய உள்ளெடுக்கப்பட்டுள்ளது. உள்ளெடுக்கப்பட்ட முட்டையில் ஏற்படுத்தப்பட்ட மாற்றம். மேலும் கூடிய அளவு அன்ரி ஒக்சிடஸ் (anti oxidants) (red wine உள்ளடங்க) சாப்பிடுவது. இவைதான் முக்கிய காரணமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். :icon_idea::)

Non-alcoholic red wine may lower blood pressure

http://www.health.harvard.edu/blog/non-alcoholic-red-wine-may-lower-blood-pressure-201209125296

விளக்கத்துக்கு நன்றி நெடுக்ஸ்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.