Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெண்புறா நிறுவனர் டாக்டர் மூர்த்தி காலமானார் .

Featured Replies

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட, தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் நிறுவனர்களில் ஒருவரும், வெண்புறா அமைப்பின் தலைவருமான வைத்திய கலாநிதி நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்கள் 27-02-2013 அன்று சாவடைந்தார்.

 

இவர் காலம் சென்ற திரு.திருமதி முத்துக்குமார் நமசிவாயம், மனோன்மணி நமசிவாயம் ஆகியோரின் அன்புமகனும், திரு.திருமதி நடராஐh அன்னலக்சுமியின் மருமகனும்,லண்டனில் வசிப்பவர்களான திருமதி உமாதேவி சண்முகநாதன், நமசிவாயம் குழந்தைவேல், நமசிவாயம் கருணானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரனும், றஞ்சினிதேவி அவர்களின் அன்புக்கணவரும், வைத்தியக் கலாநிதி இளங்கோ, செல்வி கவிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,வீரகுமார் சண்முகநாதன், மகேஸ்வரி குழந்தைவேல், சறோஐpனிதேவி கருனானந்தன், லண்டன் - நந்தினிதேவி சத்தியதாசன், தமிழீழம் நடராஐh மோகனகுமார், மற்றும் லண்டனைச் சேர்ந்த நடராஐh ரமேஸ்குமார் ஆகியோரின் மைத்துனருமாவார்.

 

அன்னாரின் இறுதி வணக்க நிகழ்வு, மற்றும் இறுதிக்கிரிகைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.இவ் அறிவித்தலை தமிழீழ மக்கள், மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

 

தகவல் குடும்பத்தினர், தொடர்புகளுக்கு:

மனைவி திருமதி றஞ்சினிதேவி சத்தியமூர்த்தி – 078 50 67 07 06, 02086811756

மகன் இளங்கோ – 07906307706

மகள் கவிதா – 07703557798

 

மற்றும்,
பொன். சத்தியசீலன் 079 03 75 02 45

மின்னஞ்சல்-sathstar2@gmail.com

 

- முகநூல்

 

 

  • Replies 50
  • Views 3.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

Dr-N-S-Moorthi.jpg


தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும் அளப்பெரிய பணிசெய்த மருத்துவர் திரு. நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்கள் 27 .02 .2013 அன்று சுகவீனம் காரணமாகச் பிரித்தானியா [குரோய்டன்] மருத்துவ மனையில் சாவடைந்தார்.

திருகோணமலையைச் சேர்ந்த மருத்துவர் மூர்த்தி அவர்கள் தொடக்ககாலம் முதலே எமது விடுதலைப் போராட்டத்தோடு இரண்டறக் கலந்து பணியாற்றியவர். 1981 ஆம் ஆண்டில்விடுதலைப்புலிகள் அமைப்புடன் சேர்ந்துதன்னாலான பங்களிப்பினை வழங்கி இயக்கத்தின்தொடக்ககால வளர்ச்சிகளில் பெரும்பங்காற்றியவர்.

 

1983, 1984 ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் தமிழ் நாட்டில் விடுதலைப்புலிகளின் மருத்துவப் பிரிவுடன் சேர்ந்து பயிற்சி முகாம்களிலும், எமது மக்களின் ஏதிலிகள் முகாம்களிலும் மருத்துவப் பணிகளை செய்துவந்தார். கால்நடையாகவும் ஈருருளிகளிலும் நீண்ட பயணங்களை மேற்கொண்டு  தனது சேவைகளை அர்ப்பணிப்போடு வழங்கி வந்தார். இதே காலப்பகுதியில் தமிழர் புனர்வாழ்வுக்கழகமானது இந்தியாவில் 50,000 இந்திய ரூபாய் நிதியுடன் தொடங்கப்பட்டபோது அதன் தொடக்ககால உறுப்பினர்களுள் ஒருவராக மருத்துவர் மூர்த்தி அவர்களும் இருந்தார். இவரின் இழப்பு  தமிழ்ச் சமூகத்திற்கு பேரிழப்பாகும்.

 

Dr.Moorthy_1.jpg

http://www.eelanatham.net/story/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D

 
 

 



v-drmuurththi.jpg

தமிழீழம் திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட, தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் நிறுவனர்களில் ஒருவரும், வெண்புறா அமைப்பின் தலைவருமான வைத்திய கலாநிதி நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்கள் 27-02-2013 அன்று சாவடைந்தார். 

இவர் காலம் சென்ற திரு.திருமதி முத்துக்குமார் நமசிவாயம், மனோன்மணி நமசிவாயம் ஆகியோரின் அன்பு மகனும், திரு.திருமதி நடராஜா அன்னலக்சுமியின் மருமகனும், 

லண்டனில் வசிப்பவர்களான திருமதி உமாதேவி சண்முகநாதன், நமசிவாயம் குழந்தைவேல், நமசிவாயம் கருணானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரனும், 

றஞ்சினிதேவி அவர்களின் அன்புக்கணவரும், வைத்தியக் கலாநிதி இளங்கோ, செல்வி கவிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும், 

வீரகுமார் சண்முகநாதன், மகேஸ்வரி குழந்தைவேல், சறோஜினிதேவி கருனானந்தன், லண்டன் - நந்தினிதேவி சத்தியதாசன், தமிழீழம் நடராஜா மோகனகுமார், மற்றும் லண்டனைச் சேர்ந்த நடராஜா ரமேஸ்குமார் ஆகியோரின் மைத்துனருமாவார். 

அன்னாரின் இறுதி வணக்க நிகழ்வு, மற்றும் இறுதிக்கிரிகைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். 


இவ் அறிவித்தலை தமிழீழ மக்கள், மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

தகவல் குடும்பத்தினர், தொடர்புகளுக்கு: 

மனைவி திருமதி றஞ்சினிதேவி சத்தியமூர்த்தி – 078 50 67 07 06, 020 86 81 17 56 

மகன் இளங்கோ – 079 06 30 77 06 

மகள் கவிதா – 077 03 55 77 98 

மற்றும், 

பொன். சத்தியசீலன் 079 03 75 02 45 

 

http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=19216:-----27-02-2013---&catid=1:aktuelle-nachrichten&Itemid=50

  • கருத்துக்கள உறவுகள்

இவர்உரையாடும் அழகே தனி அழகு.ஆழ்ந்த இரங்கல்கள்.

 

(இந்த இணைப்பை துயர்பகிர்வோம் பகுதியில் போடுவதற்க்கு யாராவது மட்டுக்கள் உதவி செய்தால் நல்லது)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

அன்னாரின் ஆத்மசாந்திக்கு பிரார்த்திப்பதுடன்... அவரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள். 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்..!

ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த  இரங்கல்கள்.  நல்ல ஒரு சே வை யாளனை  தமிழ் உலகம் இழந்து விட்டது.

ஆழ்ந்த இரங்கல்கள்...!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாட்டுப் பற்றாளர் மருத்துவர் சத்தியமூர்த்தி!- தமிழீழ விடுதலைப் புலிகள் இரங்கல்

நாட்டுப்பற்றாளர் மருத்துவர் சத்தியமூர்த்தி

தமிழ்மக்களுக்கும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும் அளப்பெரிய பணிசெய்த மருத்துவர் திரு. நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்கள் 27 .02 .2013 அன்று சுகவீனம் காரணமாகச் சாவடைந்தார்.

திருகோணமலையைச் சேர்ந்த திரு. மூர்த்தி அவர்கள் தொடக்ககாலம் முதலே எமது விடுதலைப் போராட்டத்தோடு இரண்டறக் கலந்து பணியாற்றியவர். 1981 ஆம் ஆண்டில் விடுதலைப்புலிகள் அமைப்புடன் சேர்ந்து  தன்னாலான பங்களிப்பினை வழங்கி இயக்கத்தின் தொடக்ககால வளர்ச்சிகளில் அளப்பெரிய பங்காற்றியவர்.

1983, 1984 ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் தமிழ் நாட்டில் எமது மக்களின் ஏதிலிகள் முகாம்களில் மருத்துவப் பணிகளில் ஈடுபட்ட அதேவேளை விடுதலைப்புலிகளின் மருத்துவப் பிரிவுடன் சேர்ந்து பயிற்சி முகாம்களிலும் தனது சேவையை ஆற்றினார். கால்நடையாகவும் ஈருருளிகளிலும் நீண்ட பயணங்களை மேற்கொண்டு  தனது சேவைகளை அர்ப்பணிப்போடு வழங்கி வந்தார். இதே காலப்பகுதியில் தமிழர் புனர்வாழ்வுக்கழகமானது இந்தியாவில் தொடங்கப்பட்டபோது அதன் தொடக்ககால உறுப்பினர்களுள் ஒருவராக மருத்துவர் மூர்த்தி அவர்களும் செயற்பட்டார்.

விடுதலைப்பணிகளை செய்ததற்காக  சிறிலங்கா அரசின் சித்திரவதை முகாமில் கைதியாக இருந்து சிங்கள இனவெறியர்களால் கடுமையான சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட மருத்துவர் மூர்த்தி அவர்களை இந்தச் சித்திரவதைகளும், கொடுமைகளும் நிரந்தர நோயாளி ஆக்கின. 

1987 ஆம் ஆண்டு ஐரோப்பாவிற்குப்  புலம்பெயர்ந்த  மருத்துவர் மூர்த்தி அவர்கள் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் விடுதலைப்போராடத்தினை முன்னெடுப்பதில் பெரும்பங்காற்றினார். ஊடகம், மருத்துவம், புனர்வாழ்வு போன்ற தளங்களில் தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் பல்வேறு சமூக சேவைகளை முன்னெடுத்து வந்தார்.

குறிப்பாக தமிழர் புனர்வாழ்வுக்கழகம், மருத்துவப் பிரிவு போன்ற பிரிவுகளில் தீவிரமாக தனது பங்களிப்பினை ஆற்றிவந்த இவர் 2004 ஆம் ஆண்டில்  “வெண்புறா“ நிறுவனத்தினை உருவாக்கி அதனூடாக உறுப்புக்களை இழந்த பொதுமக்களுக்கும் போராளிகளுக்கும் புனர்வாழ்வுப்பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார். “வெண்புறா மூர்த்தி“ என்ற பெயரால் இவர் அழைக்கப்படக் காரணமும் அதுவே.

தனது சமூகத்துக்கும் தான் வாழும் நாட்டிற்கும் ஆற்றிய சேவைகளுக்காக பிரித்தானிய மகாராணியால் 1993 ஆம் ஆண்டு 'Freeman of the City of London' என்ற உயர்விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டார்.

எண்ணற்ற தியாகங்களையும் அர்ப்பணிப்புக்களையும் சுமந்துகொண்டு பயணிக்கும் எமது விடுதலைப் போராட்டத்தில் மருத்துவர் மூர்த்தி அவர்களின் அர்ப்பணிப்பும் செயற்பாடுகளும் முக்கியமானவை. எமது போராட்டத்துக்காகவே வாழ்ந்து உயிர்நீத்த உணர்வாளர்கள் வரிசையில் மருத்துவர் மூர்த்தியும் இணைந்துகொள்கிறார். தமிழீழ விடுதலைக்காகவே இறுதிவரை உழைத்த இவரை ’நாட்டுப்பற்றாளர்’ என மதிப்பளிப்பதில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பெருமை கொள்கிறது.

அமைதியாகக் கண் மூடியுள்ள மருத்துவர் மூர்த்தி அவர்களை நினைவு கூரும் இவ்வேளையில் அவர் இழப்பால் தவிக்கும் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினருக்கும் எமது ஆறுதலைத் தெரிவிக்கின்றோம்.

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்

 ஆ.அன்பரசன்,

ஊடகப்பிரிவு,

தமிழீழ விடுதலைப் புலிகள்,

தமிழீழம்.

http://www.viduthalaipulikal.net/index.php?option=com_content&view=article&id=91:n-patraalar-dr-moorthy&catid=28:report&Itemid=2



சமூகப் போராளி ந.சத்திய மூர்த்தி அவர்கள் மறைவுக்கு தமிழர் புனர்வாழ்வுக் கழகம்
இரங்கல்.

MoorthyArikkaiTRO-1-1.jpg
 

MoorthyArikkaiTRO-1-2.jpg

 

MoorthyArikkaiTRO-1-3.jpg

Edited by Tamilvoice

  • கருத்துக்கள உறவுகள்
மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தியின் மறைவிற்கு தமிழர் புனர்வாழ்வுக்கழகம் இரங்கல் 
[Thursday, 2013-02-28 22:54:44]
 
தமிழர் புனர்வாழ்வுக்கழகம், 
முதன்மை செயலகம்
27/02/2013
இரங்கற் செய்தி
தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் நிறைவேற்றுக்குழுவின் மூத்த உறுப்பினரும், வெண்புறா அறக்கட்டளை அமைப்பின் நிறுவனருமான மருத்துவர் என். எஸ். மூர்த்தி காலமாகியுள்ளார் என்பதனை உலகத்தமிழர்களுக்கு மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம்.
  
பிரித்தானியாவை வாழ்விடமாகவும் திருகோணமலை மாவட்டத்தினை பிறப்பிடமாகவும் கொண்ட மருத்துவர், நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்கள் தொடக்ககாலம் முதலே விடுதலைச் செயற்பாடுகளிலும் சிறிலங்கா அரசாங்கங்களின் தமிழர் மீதான ஒடுக்குமுறைகளை எதிர்த்தும் செயற்பட்டுவந்தவர். மனித உரிமை, மனிதாபிமான செயற்பாடுகள், புனர்வாழ்வு நடவடிக்கைகள் என்ற தேச விடுதலைக்கான துணைச்செயற்பாடுகளில் இரண்டறக் கலந்து பணியாற்றியவர். 1981 ஆம் ஆண்டில் இருந்து தனது பணிகளை தீவிரமாக்கிய மருத்துவர் மூர்த்தி அவர்கள் போராளிகள், செயற்பாட்டாளர்கள் அனைவருக்கும் ஓர் வழிகாட்டியாகவும் செயற்பட்டுவந்துள்ளார்.
 
1983, 1984 ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் தமிழ் நாட்டில் தாயக மருத்துவப் பிரிவுடன் சேர்ந்து பயிற்சி முகாம்களிலும், எமது மக்களின் ஏதிலிகள் முகாம்களிலும் மருத்துவப் பணிகளை செய்துவந்தார். கால்நடையாகவும் ஈருருளிகளிலும் நீண்ட பயணங்களை மேற்கொண்டு தனது சேவைகளை அர்ப்பணிப்போடு வழங்கி வந்தார். இதே காலப்பகுதியில் தமிழர் புனர்வாழ்வுக்கழகமானது இந்தியாவில் உதயமாகியபோது அதற்கான முதல் நிதியினை தேசியத்தலைவர் வழங்கி இருந்தார். இந்த 50,000 இந்திய ரூபாய் நிதியுடன் புனர்வாழ்வுக்கழகம் தனது பணியினை ஆரம்பிக்கையில் அதன் செயற்பாட்டு உறுப்பினர்களில் ஒருவராக பணியாற்றி இருந்தார்.
 
மனிதாபிமானப் பணிகள் மற்றும் அரச எதிர்ப்பு செயற்பாடுகளில் ஈடுபட்டமைக்காக சிறிலங்கா அரசின் சித்திரவதை முகாமில் கைதியாக இருந்து சிங்கள இனவெறியர்களால் கடுமையான சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டார். இந்த சித்திரவதைகளும்,கொடுமைகளுமே அவரை நிரந்தர நோயாளி ஆக்கியது.
 
1987 ஆம் ஆண்டு ஐரோப்பாவிற்குப் புலம்பெயர்ந்த மருத்துவர் மூர்த்தி அவர்கள் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் ஊடகம், மருத்துவம், புனர்வாழ்வு போன்ற தளங்களில் தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் பல்வேறு சமூக சேவைகளை முன்னெடுத்து வந்தார்.
 
தமிழர் புனர்வாழ்வுக்கழகம், மருத்துவப் பிரிவு போன்ற பிரிவுகளில் தீவிரமாக தனது பங்களிப்பினை ஆற்றிவந்த இவர் 2004 ஆம் ஆண்டில் தாயக தேவை கருதி அங்கு இயங்கிவந்த வெண்புறா அமைப்பினை ஐரோப்பாவில் நிறுவினார். �வெண்புறா� நிறுவனத்தினை உருவாக்கி அதனூடாக உறுப்புக்களை இழந்த போராளிகள் மற்றும் பொதுமக்களுக்கு புனர்வாழ்வுப்பணிகளை மேற்கொண்டுவந்துள்ளார்.
 
தனது சமூகத்துக்கும் தான் வாழும் நாட்டிற்கும் ஆற்றிய சேவைகளுக்காக பிரித்தானிய மகாராணியால் Freeman of the City என்ற உயர்விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டார்.
 
மருத்துவக் கல்வி, சமூக விழிப்புணர்வு, ஊடகம்,அரசியல் , வரலாறு போன்ற விடயங்களில் கவனம் செலுத்தி அதனை புலம்பெயர்ந்துவாழும் இளையோர்களுக்கு எடுத்துக்கூறி அவர்களை தேசப்பணியில் இணைக்கவும் வழிவகை செய்தார்.
 
2004 ஆம் ஆண்டு சுனாமி பேரலை எமது தாயக பூமியைத் தாக்கியபோது மிகத்தீவிரமாக செயலாற்றி மக்களின் மீழ்கட்டுமானப் பணிகளுக்கு பெரும் பங்களிப்பினைப் பெற்றுக்கொடுத்தார்.
 
தனித்து புனர்வாழ்வு, மருத்துவப் பணிகள் மட்டுமன்றி உலக நாடுகளின் தலைவர்கள், சர்வதேச தொண்டு நிறுவனங்களின் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், வெளி நாட்டு இராஜதந்திரிகள் ஆகியோர்களை சந்தித்து எமது மக்களின் மனிதாபிமான பிரச்சினைகள், சிங்கள அரசின் மனித உரிமை மீறல்கள் ஆகியவை தொடர்பில் தெளிவுபடுத்தியும் வந்துள்ளார்.
 
பல்வேறு தளங்களில் தன் சக்திக்கு மீறிய சேவைகளைச் செய்துவந்ததன் விளைவாக அவர் கடந்த ஓர் ஆண்டாக கடுமையான சுகயீனமுற்று இருந்தார். ஆனாலும் அவர் தனது சுகயீனம் தொடர்பில் அதிக கவனம் எடுக்கவில்லை. தாயகத்தில் நடந்த பேரவலங்களும் துயரங்களும் அவரை வெகுவாக பாதித்துள்ளமையினை நேரடியாக அவதானிக்க முடிந்தது.
 
என்றாலும் மிகவிரைவில் சுகம் பெற்று எமக்கு எல்லாம் வழிகாட்டியாக தொடர்ந்தும் பணிபுரிவார் என நம்பி இருந்தோம். ஆனால் மிகவிரைவில் மக்களையும், மண்ணையும் விட்டு நிரந்தரமாக பிரிந்துவிட்டார். எனினும் ஆத்மார்த்தரீதியாக அவர் எம்மை விட்டு பிரியவில்லை. அவரின் நினைவாக நாம் தொடர்ந்தும் பணிகளை முன்னெடுப்போம் என்பதுடன் இந்த நேரத்தில் மருத்துவரின் பிரிவால் வாடும் குடும்பத்தார் மற்றும் உறவினர்களுடன் நாமும் சேர்ந்து துயரைப் பகிர்கின்றோம்.
 
நன்றி
 
நிறைவேற்றுப்பணிப்பாளர்
 
தமிழர் புனர்வாழ்வுக்கழகம்
  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயாவிற்கு என் கண்ணீர் அஞ்சலிகள்.

நெஞ்சை அடைக்கும் சோகம் – கண்ணீர் அஞ்சலி

 

டாக்டர் என்.எஸ். மூர்த்தி காலமானார் என்ற செய்திகேட்டு நெஞ்சம் கனத்த வேதனையுண்டாயிற்று.

தனக்கென வாழாது பிறர்க்கென வாழ்ந்து வந்த தூய மனிதன் இவ்வுலக வாழ்விலிருந்து இளைப்பாறிய செய்தி மிகவும் வேதனையளிக்கின்றது.

 

நாளும் பொழுதும் தான் பிறந்த இனத்துக்காகவும் ஈழத்தின் மேன்மைக்காகவும் நோயுற்ற அனைவருக்குமாக ஓடியோடி உழைத்த பெருமகனார் அமரத்துவமடைந்த வைத்தியர் ஐயா என் எஸ் மூர்த்தி அவர்கள்.

 

அவரிடம் நெருங்கி பழகாதவிடத்தும் அவர்கள் வானொலியிலும் தொலைக்காட்சியிலும் தந்த இனிய அன்பான அறிவுரைதரும் பேச்சுக்களை செவிமடுத்து ஐயாவை நெஞ்சில் வைத்து அன்பு செலுத்தியவர்களில் அடியேனுமொருவன்

 

அன்பிலாரெலாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு என்ற வள்ளுவன் வாசகத்துக்கு ஒப்ப தன்னை வாட்டி மக்களுக்கா சேவையாற்றிய மகான்.

 

மருத்துவர் அமரர் என் எஸ் மூர்த்தி அவர்கள் தனது சிரமத்தை பாராது ஓய்வு கொள்ளாது அங்குமிங்குமாக ஓடோடி மக்களுக்கு ஒளிதந்த விளக்கு அணைந்தமை ஈழமக்களுக்கு பேரிழப்பாகிவிட்டது.

 

சுனாமியில் உற்ற சகோதரனை பறிகொடுத்து உறவினர்களை பறிகொடுத்து சொல்லொணா நெஞ்ச வேதனை கொண்ட பொழுதிலும் வானொலியில் மணிக்கணக்காய் அமர்ந்து மக்களுக்கு துயராற்றிக்கொண்டிருந்த மாமனிதன்.
எவரால் முடியும் அதுபோல் ஒரு சூழ்நிலையில் கலங்காது செயலாற்ற குறள்வழி நின்று வாழ்ந்த குணக்குன்று எம்மையெல்லாம் விட்டு அகன்றது ஆற்றமுடியாத வேதனை .

 

அரச விருந்துக்கு தங்க வேலிகள் பக்கமாக பக்கிங்காம் அரண்மனையில் நடக்கும் பொழுது ஈழமண்ணில் உணவுக்கு வாடும் ஏழைகளை நினைத்து வருந்திய செய்தியை அன்று வானொலியில் பங்கிட்டார்.

 

எத்தகைய சூழலிலும் நாட்டையும் அங்கு துயருறும் மக்களையும் எண்ணிப்பார்க்க ஐயா மறந்ததேயில்லை என்பதை அந்நிகழ்வு துல்லியமாக எடுத்துக்காட்டுகின்றது.

 

சிரிக்கும் முகம் பாசம் தவழும் குரல்
நகைச்சுவையான அழைப்பு

 

ஆகா இப்படியும் ஒரு மனித செல்வமா
பூமியில் என்று
கேள்விகேட்க்க வைக்கும்
திருமலை பொக்கிஷம்

 

பூமுகம் காட்டி
புன்னகைத்த வள்ளலே
நீர் எதற்க்காக பிறந்தீரோ

 

அதைக்காட்டிலும்
ஏராளமாக ஈழவர்களுக்கு
தொண்டாற்றி உறைந்து விட்டீர்

 

மண்ணும் விண்ணும்
நல்ல மனிதர்களும் உள்ளவரை
உங்கள் பெயரும் புகழும்
வள்ளுவன் குறள்
போல் என்றும் நிலைக்கும்.

 

உங்கள் உண்மை அமைதிகொள்ளட்டும்

 

சாந்தி சாந்தி சாந்தி.


கண்ணீருடன்
ம. இரமேசு

 

http://www.alaikal.com/news/?p=123440

382282_486908271389058_1135863743_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

வைத்திய கலாநிதி “FREE MAN” DR.N.S.Moorthy லண்டனில் சாவடைந்தார்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு அளப்பெரிய பணிசெய்த மருத்துவர் திரு. நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்கள் 27 .02 .2013 அன்று சுகவீனம் காரணமாகச் பிரித்தானியாவிலுள்ள (MAY DAY HOSPITAL) மருத்துவ மனையில் சாவடைந்தார்.

தமிழீழத்தின் தலைநகரான திருகோணமலையைச் சேர்ந்த மருத்துவர் மூர்த்தி அவர்கள் தொடக்ககாலம் முதலே தமிழீழ விடுதலைப் போராட்டத்தோடு இரண்டறக் கலந்து பணியாற்றியவர்.

1981 ஆம் ஆண்டில் விடுதலைப்புலிகள்  இயக்கத்தின் தொடக்ககால வளர்ச்சிகளில் தன்னாலான பங்களிப்பினை வழங்கி பெரும்பங்காற்றியவர்.

1983, 1984 ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் தமிழ் நாட்டில் விடுதலைப்புலிகளின் மருத்துவப் பிரிவுடன் சேர்ந்து பயிற்சி முகாம்களிலும், எமது மக்களின் ஏதிலிகள் முகாம்களிலும் மருத்துவப் பணிகளை செய்துவந்தார். கால்நடையாகவும் ஈருருளியிலும் நீண்ட பயணங்களை மேற்கொண்டு  தமிழ் மக்களுக்கான சேவைகளை அர்ப்பணிப்போடு வழங்கி வந்தார்.

இந்தியாவில் 50,000 இந்திய ரூபாய் நிதியுடன் தமிழர் புனர்வாழ்வுக்கழகம் தொடங்கப்பட்டபோது அதன் தொடக்ககால உறுப்பினர்களுள் ஒருவராக மருத்துவர் மூர்த்தி அவர்களும் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையில், இந்திய இராணுவ காலப்பகுதியில் இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த வேளை கடுமையான சித்திரவதைகள் காரணமாக உடல் பாதிக்கப்பட்டும் இருந்தார்.

பிரித்தானியாவில் வாழ்ந்தாலும் பல தடவைகள் தாயகம் சென்று அங்கு உதவிகளை செய்வதிலும், குறிப்பாக கால்களை இழந்தவர்களுக்கான செயற்கை கால்களை பொருத்தி, அவர்களுக்கான பயிற்சிகளை வழங்கி அவர்களின் எதிர்கால வாழ்விற்காக பாடுபட்டவர் DR.N.S.Moorthy.

மருத்துவத்துறையில் தலைசிறந்து விளங்கிய வைத்திய கலாநிதி DR.N.S.Moorthy அவர்கள் பிரித்தானிய மகாராணியிடம் இருந்து FREE MAN பட்டம் பெற்றவர் என்பதும், உலகிலேயே இவர் தான் “FREE MAN” பட்டம் பெற்ற ஒரே ஒரு தமிழர் என்பதும் மிகவும் குறிப்பிடத்தக்க விடையமாகும்.

இவரின் இழப்பு  தமிழ்ச் சமூகத்திற்கும், மருத்துவத் துறைக்கும் ஏற்பட்ட  பேரிழப்பாகும். இவ்வேளையில் இவரின் பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தினருக்கு வருடல் இணையம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றது.

http://varudal.com/2013/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-free-man-dr-n-s-moorthy-%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F/

ஆழ்ந்த இரங்கல்கள்.
 

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்...!

  • கருத்துக்கள உறவுகள்

அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்



 

Edited by ரதி

மிகவும் துயரமான செய்தி. வைத்திய கலாநிதி மூர்த்தி அவர்களிற்கு ஆத்மார்த்தமான அஞ்சலிகள்!

 

தமிழ்விசன் தொலைக்காட்சியில் வைத்திய கலாநிதி மூர்த்தி அவர்களின் மருத்துவம் சம்மந்தமான நிகழ்ச்சியை சிறிது காலம் (2006ம் ஆண்டு என்று நினைக்கின்றேன்) பார்த்துள்ளேன். அவர் கூறிய விடயங்களில் வெந்நீரில் (சுடுதண்ணி) குளியல் செய்வதால் வரக்கூடிய ஆபத்துக்கள் பற்றிய விளக்கம் இன்றும் நினவில் உள்ளது. அவரது அறிவுரைக்கு பின்னர் குளிக்கும்போது சுடுநீரை பயன்படுத்துவதில் எச்சரிக்கையாக இருக்கின்றேன். குளிக்கும்போது சுடுநீர் நேரடியாக உடலில் படுவதால் மொட்டை விழுதல், தோல் சுருக்கம் இன்னும் பல தீமைகள் உள்ளன. குளிர்நாடுகளில் நாம் வாழ்ந்தாலும் குளிக்கும்போது இயலுமான அளவு ஓரளவு குளிர்மையான நீரை பயன்படுத்துவதே சிறந்தது.

ஆழ்ந்த இரங்கல்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

 

TYC-UK-seithy-20130203-150.jpg

 

தமிழீழ விடுதலைப் போராட்டதோடு நீண்ட காலமாக தன்னை இணைத்து , தமிழீழ விடியலுக்காக அயராது பாடு பட்டு , உலகமெங்கும் எம் இன விடுதலைக்காக குரல் கொடுத்த வெண்புறா ,எங்கள் நாட்டுப்பற்றாளர் மூர்த்தி ஐயா அவர்கள். எம் இனத்தின் விடுதலைக்கு இளைஞர்களின் பங்களிப்பின் முக்கியத்துவத்தையும், எவ்வாறு போராட வேண்டும் என்பதையும் கடந்தகால வரலாறுகளைச் சுட்டிக்காட்டி எங்களுக்குஆலோசனைகளும், உற்சாகமும் வழங்கிய ஒரு தலைசிறந்த வழிகாட்டி எமது இனத்துக்காக பல கடுமையான பாதைகளைத் தாண்டி, இறுதிவரை யாருக்கும் விலை போகாது, யாருக்கும் அடிபணியாது , எமது இலட்சியத்தை நோக்கிப் பயணித்த ஒரு தன்மானத் தமிழன் எங்கள் மூர்த்தி ஐயா அவர்கள் நோய் ஒருபுறம் வாட்டிவதைத்தாலும், அதை பொருட்படுத்தாது எம் இன விடுதலைப் போராட்டத்திற்கு தொடர் பணிகளை ஆற்றிக் கொண்டிருந்த அவர் 27.02.2013 அன்று சுகவீனம்காரணமாகச் சாவடைந்தார், என்ற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தோம்.

  

ஐயா! நீங்கள் எங்களை விட்டு பிரிந்தாலும், உங்கள் நினைவுகள் எங்களோடு வாழும் . இவ் வேளையில் ,உங்கள் இழப்பால்தவிக்கும் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர்களுக்கும் எமது ஆறுதலைத் தெரிவிக்கின்றோம்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

 

TYC-UK-seithy-20130203-851.jpg

 

http://www.seithy.com/breifNews.php?newsID=77136&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

மூர்த்தி  அண்ணாவுக்கான அஞ்சலி  நிகழ்வு ஒன்று நாளை (03-03-2013) ஞாயிறு மாலை 16 மணியிலிருந்து 19 மணிவரை

 Porte de Bagnolet  இல் அமைந்திருக்கும் எமது நிகழ்வுகள் நடைபெறும் சேர்ச் மண்டபத்தில் இடம் பெற இருக்கிறது.  முடிந்தவர்கள் ஏனையோருக்கும்  அறியத்தரவும்.
 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.