Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எங்கள் பெண் போராளிகள் - ஒருசிலரின் இன்றைய மனநிலை!

Featured Replies

இந்த விவரண படம் ( தாம் காணாமல் போனாலும் போகலாம் : http://www.yarl.com/forum3/index.php?showtopic=120099 )  கூறி நிற்பது தமிழர் பகுதிகளில் ஒரு அரசியல் தீர்வும் அந்த தீர்வால் வரும் ஆட்சியாளர்கள் புலிகளை போன்ற ஒரு சமூக பொருளாதார ஆட்சியையும் கொண்டிருக்க வேண்டும் என்பதே.

எத்தனை அமைப்புக்களால் எத்தனை நாட்களுக்கு எத்தனை பேருக்கு எவ்வாறு உதவ முடியும்?

தமிழர் பகுதியில் ஒரு அரசியல் தீர்வு இல்லாமல் எந்த உதவியோ இல்லை திட்டமோ பயனளிக்காமல் போகலாம். காரணம் சிங்கள அரசியல் தலைமை தம்மை வெற்றி தமிழர்கள் மீதான கொண்ட இனமான சிந்தனை கொண்டிருப்பதும் அதை முழுவதுமாக முழு மூச்சில் நிறைவேற்றி  வருவதுமே.

எனவே எம்மால் முடிந்தளவிற்கு நாம் எமது மக்களுக்கு நிச்சயமாக உதவும் அதேவேளையில் நிரந்த அரசியல் தீர்வையும் நோக்கி நகரவும் வேண்டும்.

இந்த இரண்டையும் செய்தே ஆகவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவா  இசை மற்றும் மணிவாசகனின்  ஆலோசனைகளைப்பார்த்தபோது சந்தோசமாக  இருக்கு

ஆனால் நடைமுறையில் இது பற்றி  பல திரிகளில் பல வருடங்களாக ஆராய்ச்சியிலும்  பேச்சிலும் இழுபறியிலுமே உள்ளது.  பேசுபவர்கள் எழுதபவர்கள் தூண்டுபவர்கள் காணாமல் போய் விடுகிறார்கள். தலைமை தாங்கி நடாத்த ஆட்களில்லை.  இப்படி நான் எழுதினால் உடனே நீங்கள் பொறுப்பெடுங்கள் என்று தான் சொல்கிறார்கள்.

நான் பலமுறை  இங்கு எழுதிவிட்டேன்

குறிப்பிட்ட ஒரு சிலர் மீதான 35 வருடகால அழுத்தங்கள் சுமைகள் தாங்கமுடியாதவை.

என் போன்றோர் தலைக்கு மேல் எமது சக்திக்கும  அதிகமான பழுவைச்சுமக்கின்றோம்.

அது எமது பொது வாழ்விலும் தனிப்பட்ட வாழ்விலும் ஏற்படுத்தி வரும் அழுத்தங்கள் கொஞ்ச நஞ்சமல்ல

இதற்கு ஒரே வழி

எல்லோரும் பொறுப்பெடுக்கணும்

எல்லோரும் பங்காளிகள் ஆகணும்

அதற்கான முயற்சிகளை  நாம் ஒவ்வொருவரும் முயற்சிக்கணும்.

ஒவ்வொருத்தரும் பத்து பேரையாவது  இதில் இணைக்கத்தொடங்கணும்.

புதிதாக அமைப்புக்களை தொடங்குவதில் எனக்கு உடன்பாடில்லை.

அவை மேலும் காலதாமதத்தையும்  இழுபறிகளையுமே தொடரச்செய்யும்

இருக்கும் அமைப்புக்களுக்கும் புகுந்து உங்களது கைகளில் அவற்றைக்கொண்டு வருவதற்காக ஒவ்வொருவரும் உழைக்கணும்

வெளியிலிருந்து கொண்டு கை நீட்டுவது மட்டுமே தற்பொழுது நடக்கிறது. இது ஆரோக்கியமானது அல்ல. உண்மையில் அந்த மக்கள் மீது பற்றிருந்தால் ஏதாவது ஒரு அமைப்புடன் உங்களை  இணைத்து வேலைத்திட்டங்களை  இன்றே தொடங்குங்கள்.

நான் அதைத்தான் செய்கின்றேன். வருடத்துக்கு சில ஆயிரங்களை நான் பங்களிக்கின்றேன்.  பணப்பங்களிப்பற்ற  எந்த எழுத்துக்களும் வீண் விரயமானவை.

இல்லாது விட்டால் சில நாட்களில் இந்த திரியும் பத்தோடு பதினொன்றாக காணாது போகும் :( :( :( :(

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு வெறுமனே சமுகத்தை மட்டும் குற்றம் சாட்ட முடியாது.... அந்தளவிற்கு இராணுவ அழுத்தங்கள் மக்கள் மீது கொடுக்கப்படுகின்றது......மக்கள் மிரட்டப்படுகின்றார்கள்....

முன்னாள் போராளிகளை அரவணைக்கும் போது இராணுவ புலனாய்வாளர்களால் மக்கள் மிரட்டபடுகின்றார்கள்....

ஆகவே வெறுமனே மக்களையும் யாழ்ப்பான சமுகத்தையும் நீங்கள் வெளிநாட்டில் இருந்து கண்டிப்பது மிக பெரிய தவறு......

அங்கிருக்கும் மக்களின் நிலைமையை சற்று சிந்தித்து பார்க்க வேண்டும்....

காணொளியை இன்னமும் சரியாகப் பார்க்கவில்லை என்று நினைக்கின்றேன். 20 நிமிடம் பொறுமையாகப் பார்த்தால் தற்போதைய சமூகப் பார்வை முன்னாள் போராளிகளின் குமுறலில் இருந்து விளங்கும்.

அங்குள்ள மக்களின் மனநிலை முன்னாள் போராளிகளை அரவணைத்துச் செயற்படும் நிலையில் இல்லை. இராணுவ அழுத்தம், ஒட்டுக்குழுக்களின் மிரட்டல் என்பவற்றுக்கு அப்பால் சிந்திக்காவிட்டால் எதுவும் செய்யமுடியாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜீவா  இசை மற்றும் மணிவாசகனின்  ஆலோசனைகளைப்பார்த்தபோது சந்தோசமாக  இருக்கு

ஆனால் நடைமுறையில் இது பற்றி  பல திரிகளில் பல வருடங்களாக ஆராய்ச்சியிலும்  பேச்சிலும் இழுபறியிலுமே உள்ளது.  பேசுபவர்கள் எழுதபவர்கள் தூண்டுபவர்கள் காணாமல் போய் விடுகிறார்கள். தலைமை தாங்கி நடாத்த ஆட்களில்லை.  இப்படி நான் எழுதினால் உடனே நீங்கள் பொறுப்பெடுங்கள் என்று தான் சொல்கிறார்கள்.

நான் பலமுறை  இங்கு எழுதிவிட்டேன்

குறிப்பிட்ட ஒரு சிலர் மீதான 35 வருடகால அழுத்தங்கள் சுமைகள் தாங்கமுடியாதவை.

என் போன்றோர் தலைக்கு மேல் எமது சக்திக்கும  அதிகமான பழுவைச்சுமக்கின்றோம்.

அது எமது பொது வாழ்விலும் தனிப்பட்ட வாழ்விலும் ஏற்படுத்தி வரும் அழுத்தங்கள் கொஞ்ச நஞ்சமல்ல

இதற்கு ஒரே வழி

எல்லோரும் பொறுப்பெடுக்கணும்

எல்லோரும் பங்காளிகள் ஆகணும்

அதற்கான முயற்சிகளை  நாம் ஒவ்வொருவரும் முயற்சிக்கணும்.

ஒவ்வொருத்தரும் பத்து பேரையாவது  இதில் இணைக்கத்தொடங்கணும்.

புதிதாக அமைப்புக்களை தொடங்குவதில் எனக்கு உடன்பாடில்லை.

அவை மேலும் காலதாமதத்தையும்  இழுபறிகளையுமே தொடரச்செய்யும்

இருக்கும் அமைப்புக்களுக்கும் புகுந்து உங்களது கைகளில் அவற்றைக்கொண்டு வருவதற்காக ஒவ்வொருவரும் உழைக்கணும்

வெளியிலிருந்து கொண்டு கை நீட்டுவது மட்டுமே தற்பொழுது நடக்கிறது. இது ஆரோக்கியமானது அல்ல. உண்மையில் அந்த மக்கள் மீது பற்றிருந்தால் ஏதாவது ஒரு அமைப்புடன் உங்களை  இணைத்து வேலைத்திட்டங்களை  இன்றே தொடங்குங்கள்.

நான் அதைத்தான் செய்கின்றேன். வருடத்துக்கு சில ஆயிரங்களை நான் பங்களிக்கின்றேன்.  பணப்பங்களிப்பற்ற  எந்த எழுத்துக்களும் வீண் விரயமானவை.

இல்லாது விட்டால் சில நாட்களில் இந்த திரியும் பத்தோடு பதினொன்றாக காணாது போகும் :( :( :( :(

விசுகு அண்ணா,

புதிதாக ஒரு அமைப்புத் தொடங்குவது காலதாமத்தத்தை ஏற்படுத்தும் என்பது உண்மை தான். ஆனால் உதாரணத்துக்கு எந்த அரசியல் கட்சியிலும் சாராத ஒருவர் நாடு கடந்த அரசுடன் இணைந்து வேலை செய்யவா? இல்லை உலத்தமிழர் பேரவையோடு சேர்ந்து வேலை செய்யவா? இல்லை பிரித்தானிய,கனடா தமிழர் பேரவையுடன் வேலை செய்யவா? இல்லை கே.பி யின் நேர்டோ அல்லது ஏதும் மாற்றுக்குளுக்களின் அமைப்புக்களுடன் வேலை செய்யவா?

எங்களுடைய நோக்கம் என்னவென்றால் உண்மையாக மக்களை நேசிக்கிற அத்தனை மக்களும் அது புலிகள் ஆதரவாளர்கள், மாற்றுக்கருத்து ஆதரவாளர்கள் எல்லாரையும் ஒரு குடையின் கீழ் பொதுமைப் படுத்த வேண்டும் என்பதே. அதை விடுத்து எப்படி எல்லாரையும் பங்காளியாக்க?

நல்ல உதாரணம் இப்ப தமிழகத்தில் நடைபெறும் மாணவர் போராட்டம்.

ஜீவா எழுதியதை விளங்கும் பக்குவத்தில் கூட இங்கு பலர் இல்லை .ஒரு சிறு விடயம் தொடங்கமுதல் புலி ராஜ்யம் ,ஒட்டுக்குழுக்கள் என விவாதிக்க வெளிக்கிட்டால் எதுவும் சாத்தியமாகாது .

மாணவர் போராட்டத்துக்கு அவர்கள் ஒரே இடத்தில் இருப்பது சாத்தியமாகியது

ஆனால் புலம் பெயர் நாடுகளில் அப்படியல்ல

உங்களைச்சுத்தி  உள்ள ஒரு சிலரை வைத்தே நீங்கள் உங்கள் பணியை ஆரம்பிக்கவேண்டும்

அதுவும் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு நிலைப்பாடு என்றால் முடிவு...........???

யாழில் எழுதுவதன் மூலம் ஒரு அமைப்பை உருவாக்கி அதை வளர்க்கமுடியும் என்பது  நியத்துக்கு ஒவ்வாதது.

எனவே நீங்களும் கொஞ்சம் மாறி உங்களை சுற்றி  இருப்பவர்களையும் சிறிது சிறதாக மாற்றுவதே இதற்கு ஒரே வழி.

எனக்கு இது தான் சரி  என்பதும் ஐனநாயகத்துக்கு பொருந்தாது அல்லவா?

இருக்கும் அமைப்புக்கள் நடாத்தும்  அதிலும் புலம் பெயர் மாணவர் சமூகம் நடாத்தும் நிகழ்வுகளிலாவது கலந்து கொண்டு ஒரு ஆள அகலம் பார்க்கலாமே..........???

  • கருத்துக்கள உறவுகள்

அதே தான் விசு அண்ணா இன்னொரு அமைப்பு தொடங்குவது என்பது just waste of time

  • கருத்துக்கள உறவுகள்

பிறகு மாற்றுக்கருத்தாளர் அதுக்குள்ளையும் ஒரு மாற்று கருத்தோட தான் வருவினம்.....

எப்பிடி புலிகளில் இருந்தவர்களுக்கு மட்டும் உதவலாம் இந்த அமைப்பில் புலி ஆதரவாளர்கள் கூட இருப்பதால் இது புலிக்கு சார்பான அமைப்பு அதனால இதில இருந்து நாங்க பிரிஞ்சு போறம் எண்டு ஒரு கோஷ்டி வெளிக்கிடும்.......

இதுக்குள்ள நடக்கிற பிரச்சனையல தீர்க்கவே நேரம் காணமல் இருக்கும்.....:D

ஒரு அமைப்பில் இருந்து பல அமைப்புகள் தோன்றி சிக்கி சின்னா பின்னமாகி கடைசியில் எதுவும் இல்லாமல் நடு ரோட்டில நிக்கிற இந்த சமுகத்திற்கு இன்னொரு அமைப்பு தேவையா.....

  • கருத்துக்கள உறவுகள்

பிறகு மாற்றுக்கருத்தாளர் அதுக்குள்ளையும் ஒரு மாற்று கருத்தோட தான் வருவினம்.....

எப்பிடி புலிகளில் இருந்தவர்களுக்கு மட்டும் உதவலாம் இந்த அமைப்பில் புலி ஆதரவாளர்கள் கூட இருப்பதால் இது புலிக்கு சார்பான அமைப்பு அதனால இதில இருந்து நாங்க பிரிஞ்சு போறம் எண்டு ஒரு கோஷ்டி வெளிக்கிடும்.......

இதுக்குள்ள நடக்கிற பிரச்சனையல தீர்க்கவே நேரம் காணமல் இருக்கும்..... :D

ஒரு அமைப்பில் இருந்து பல அமைப்புகள் தோன்றி சிக்கி சின்னா பின்னமாகி கடைசியில் எதுவும் இல்லாமல் நடு ரோட்டில நிக்கிற இந்த சமுகத்திற்கு இன்னொரு அமைப்பு தேவையா.....

எனது கருத்து அனுபவங்களின் அடிப்படையிலானது சுண்டல்

தலைவர் சொல்வது போல் வரலாறே வழிகாட்டியாக எம்முன் நிற்கிறது

முள்ளிவாய்க்காலுக்குப்பின்

வேறு மாதிரி  செயற்படுவோம்

புது வழிகளை உலகுக்கு காட்டுவோம் என்று தான் பல அமைப்புக்கள் தோன்றின

அதில் முதலாவது நாடு கடந்த அரசு

அதற்கு எனது முழு ஆதரவும்  இருந்தது

அது சரியில்லை

ஒவ்வொன்றாக தொடங்கி  இன்று நடுவகமும் வந்து அதுவும் இழுபட்டு  மக்களை விரக்திக்கு தள்ளியதைத்தவிர வேறு எதுவும் செய்யமுடியவில்லை.

எனவே தான் இனியாவது மக்களை ஒன்றிணைக்கும் முகமாக பழைய அமைப்புக்களை கட்டி எழுப்பணும்

அதற்காக அவர்களுக்கு பின் செல்லுங்கள் என்று எங்கும் எழுதவில்லை

அவற்றுக்குள் பகுந்து அவற்றின் நிர்வாகங்களை நீங்கள் பொறுப்பெடுங்கள் என்று தான் சொல்கின்றேன்.

அவர்களின் அலுவலகங்களுக்கு செல்பவன் என்ற ரீதியில் ஆயிரம்  அலுவல்கள் செய்ய  ஆளில்லாது முடங்கிக்கிடக்கும் கவலை எனக்கு.

ஜீவா எழுதியதை விளங்கும் பக்குவத்தில் கூட இங்கு பலர் இல்லை .ஒரு சிறு விடயம் தொடங்கமுதல் புலி ராஜ்யம் ,ஒட்டுக்குழுக்கள் என விவாதிக்க வெளிக்கிட்டால் எதுவும் சாத்தியமாகாது .

இங்கு புலிகள் பற்றியோ

ஒட்டுக்குழுக்கள் பற்றியோ யாரும் பேசவில்லை.

நான் பழைய அமைப்புக்கள் என்று சொலஇ;வதற்குள் வருவதற்கு கூட உங்களிடம் எதுவித அமைப்பும் இல்லாத குறைக்கு நான் பதில் தரமுடியாது.

புலத்தில் கூட எந்த அமைப்பையும் வழி நடாத்த தெரியாதவர்களது கருத்துக்குள்  ஐடத்துக்கு சமனானவை.

  • கருத்துக்கள உறவுகள்
இப்பவே இந்த திரி கீழ் இறங்கி போய் விட்டது...இதில வந்து எழுதின எத்தனை பேர் ஊரில போய் அந்தப் பெண்களை திருமணம் செய்யப் போறீர்கள்?...ஏற்கனவே திருமணம் செய்தவர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கோ அல்லது சகோதர‌ங்களுக்கோ அந்த பெண்களை திருமணம் செய்து வைப்பீர்களா?
 
எத்தனை பேர் முன் வருவீர்கள் ஊரில் போய் அவர்களுக்கு சேவை செய்ய?
 
நான் 5000 உழைத்துக் கொண்டு 1000 அவர்களுக்கு அனுப்புவதை விட‌ அவர்கள் நிர‌ந்தர‌மாக,நிம்மதியாக வாழ யாராவது வழியமைத்துக் கொடுக்க முன் வருவது தான் தற்போதைக்கு முக்கியம்  
  • கருத்துக்கள உறவுகள்

Confused.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த காணொளியில் முதற்பாகம் ஒன்றையும் பிற்பாகம் ஒன்றையும் சொல்லுகிறது. எல்லாரும் ஒன்றைத்தான் சொல்லுகிறார்களோ தெரியவில்லை, ஆனாலும் தெளிவான வேறுபாடுகளும் இருக்கிறது. அவர்கள் அமைப்பில் இணைந்ததில்  இருந்ததில், இன்று எதிர் நோக்குகிற பிரச்சனைகளில். இவர்களை சமூகத்தில் இணைக்க தடையாக உள்ள காரணிகளை நீக்கவிட்டால் இவர்களில் "புனர்வாழ்வு" என்பது அர்த்தமற்றதாகும். (?)ஆகக்குறைந்தது இவர்கள் ஒன்றாககூடி தங்களுக்குரிய இன்ப துன்பங்களை பகிர்ந்து கொள்ள சந்தர்பம் வழங்கப்பட வேண்டும். JVP மற்றும் மற்ற மற்ற தமிழ் போராளி  குழுக்கள் போல், இவர்களுக்கும் ஒரு அமைப்பில் இணைந்து செயற்பட சந்தர்பம் வழங்கப்பட வேண்டும். கஜேந்திரகுமார் போன்றவர்கள், தங்கள் கட்சிகளில் இவர்களை இணைக்க தங்களால் ஆனா முழு முயற்சியும் செய்ய வேண்டும். சமூகமும்  இவர்களும் தங்கள் உடன் பிறப்புகள் என்ற வகையில் நடக்க வேண்டும். ஒரு பலமான அமைப்பு வெளிப்படையாக இவர்களுக்கு உதவியாக நிற்கவேண்டும்.பெண் போராளிகளுக்கு மட்டுமல்ல ஆண் போராளிகளையும் நீண்ட காலத்தில் அரவணைக்கும் திட்டம் வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா ..இப்பவாவது இவங்கள் எல்லாம் ஏன் குப்பி அடிக்கேல்லை எண்டு கேட்காமல் . சபதமெடுப்போம். அழுதேன். கண்ணீர் விடுகிறேன். ஏதவது உதவலாம் என்கிற அளவில் விவாதிக்க தொடங்கியிருக்கிறதே மாற்றம் தான். ஆனால்  உடனடியாக  உதவவேண்டும்  என்கிற நல்லதொரு மாற்றம் வர பல வருடங்கள் ஆகும் அப்போ இவர்கள் யாரும் சிலநேரம் உயிருடன் இருக்கமாட்டார்கள். அல்லது ஊரில் இருக்க மாட்டார்கள்.அவ்வளவுதான். :icon_idea:

மனித நேயம் உள்ளவர்கள் உதவி செய்யலாம் சரி. அப்படி உதவி கிடைக்கப்பெற்ற இருவர் காணாமல் போயிருக்கிறார்கள். இது நீண்ட கால அடிப்படையில் ஒரு நிரந்தர தீர்வு வேண்டும் என்பதை சொல்லி நிற்கவில்லையா??
 
அல்லது அதற்கும் (காணாமால் போவோருக்கு) உங்களிடம் தீர்வு உள்ளதா என அறிய ஆவல்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=120099

உலகில் செய்திகளுக்கு தலைப்பிடுவதில் எமது ஊடகங்களுக்கு நிகர் எதுவும் இல்லை.

புனர்வாழ்வு முகாமில் இருந்து வெளிவந்த இரண்டு பெண்களை காணவில்லை. இதுதான் பொருள்.

இங்கே புரிந்துகொள்ளப்படுவது என்னவெனில் வெளிநாட்டில் இருந்து உதவிபெற்ற இரண்டுபேரை காணவில்லை என்பதாகும்.

இதன் விழைவு உதவிசெய்தாலும் கடத்திக்கொண்டு போய்விடுவார்கள் ஆதலால் உதவி செய்யாமல் இருப்பது கூட நல்ல விசயம் என்ற விசத்தை பரப்புவதாகும். கூடவே இந்த உதவிகளை புறந்தள்ளி நீ்ண்டகாலத்தீர்வு தனியரசு சுயாட்சி என்று பினாத்துபவர்கள் வாய்களுக்கு அவலாக திரிவுபடுத்துவது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொருளாதார உதவிகள் செய்வது . மக்கள் பாதுகாப்புக்காக குரல்கொடுப்பது. போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்துவது. நெருக்கடிக்கு உள்ளாகும் மக்களுக்கான மூன்றாந்தரப்பு கண்காணிப்பை வலியுறுத்துவது. இதுவே புலம்பெயர்ந்தவனின் போராட்ட எல்லை. அதற்கு மேற்பட்ட உரிமைப்போராட்டம் என்பது சொந்த மண்ணில் இருப்பவர்களின் கைகளில் தங்கியுள்ளது. விழுந்துகிடக்கும் மக்கள் எழுந்திருக்க உதவி செய்வதே எல்லை.

எல்லையை தாண்டும் ஒவ்வொரு கருத்தும் சிங்களப் பேரினவாத ஒடுக்குமுறையை ஊக்குவிக்கவே பயன்படும்.

புலம்பெயர்ந்தவனுக்கான வேலையும் அதன் எல்லையும் வெற்றிடமாகவே கிடக்கின்றது. இன்நிலையில்  தாயகத்தில் உள்ளவனின் வேலையை பார்க்கமுற்படுவது எந்தவிதத்திலும் பொருத்தமற்றது. அது அவர்களை சிதைத்து உருக்குலைக்கும். பேரினவாதத்தீயில் எண்ணை ஊற்றும்.

மனித நேயம் உள்ளவர்கள் உதவி செய்யலாம் சரி. அப்படி உதவி கிடைக்கப்பெற்ற இருவர் காணாமல் போயிருக்கிறார்கள். இது நீண்ட கால அடிப்படையில் ஒரு நிரந்தர தீர்வு வேண்டும் என்பதை சொல்லி நிற்கவில்லையா??

அல்லது அதற்கும் (காணாமால் போவோருக்கு) உங்களிடம் தீர்வு உள்ளதா என அறிய ஆவல்.

சிலருக்கு இந்த களத்திற்கு வருவதும் தமக்கு தேவையான திரிகளை மட்டும் கையில் எடுத்து யதார்த்தங்களை விடுத்து தமது உப்புச்சப்பு அற்ற கருத்துக்களை எழுதுவதே வழமையாகிவிட்டது  :rolleyes: 

டக்லஸ் சொல்வது போன்று இணக்க அரசியல் தான் ஒரே வழி என்று கூறினார்கள். இன்று மாணவர் எழுச்சி பற்றி இல்லாவிட்டாலும் முஸ்லீம் மக்கள் மீது நடாத்தப்படும் மத இனவாத தாக்குதல் பற்றி கூட இவர்களிடம் எந்த கருத்தும் இல்லை  :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலத்தில் வாழும் பலர் தங்கள் பிள்ளைகளுக்கு முன்னாள் போராளிகளை கட்டிக்கொடுக்க முன்வர வேண்டும்....

இதற்கு முன்னோடியாகச் சுண்டல் தான் இருக்க வேண்டும்!

போராட்டம் வென்றிருந்தால் தலையில் வைத்துக் கொண்டாடியிருப்பார்கள்.

கேவலம் கெட்ட இனத்திற்கு ஒரு விடுதலை வேண்டும் என்று முயற்சித்ததை விட  இவர்கள் செய்த தவறு என்ன?

போராட்டத்திற்குச் சேர்த்த பணத்தை அமுக்கியவர்களுக்கு இவர்கள் படும் கஷ்டம் தெரியவில்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

கட்டமைப்புப்படுத்தப்படாத எமது சமூக ஒழுங்கே இதற்குக் காரணம்.

எங்கள் மக்களை நாங்கள் பொறுப்பெடுத்து பாதுகாக்க வேண்டிய கடமையில் இருந்து நாங்கள் தொடர்ந்தும் தவறி வருகிறோம்.

அரசியல் செல்வாக்கு.. கல்வி.. அதிகாரம் உள்ளோர்.. சமூகச் செல்வாக்குள்ளோர்.. சமயச் செல்வாக்குள்ளோர்.. மாணவர்கள்.. புலம்பெயர் சக்திகள் இவர்கள் எல்லோரும் ஒருங்கிணைந்து ஒரு சட்ட.. சர்வதேச அனுசரணையுள்ள ஒரு அமைப்பினூடாக இந்தத் துன்பங்களுக்கு முடிவு கட்டலாம்.

ஆனால் அதைச் செய்யாமல்.. அந்தப் போராளிகளையும் மக்களையும்.. இனவெறி மற்றும் கூலிகளின் கையில் அவர்களையே பாதுகாப்பும் வாழ்வும் தேடச் சொல்லி கையளித்திருப்பதானது.. எமது சமூகத்தின் சுத்தச் சுயநலத்தையே இனங்காட்டி நிற்கிறது.

இதற்கு அப்பால் சென்று செயற்பட வேண்டின்.. இந்தப் போராளிகளுக்கு மறுவாழ்வளிக்க.. புலம்பெயர் நாடுகளில் உள்ளவர்கள் தான் இதய சுத்தியோடு முன்வரனும்..! இவர்கள் சிறீலங்கா என்ற எல்லைக்குள் உள்ள வரை சித்திரவதைகளுக்கும்.. வாழ்வை இழந்துவிட்டோம்.. பாதுகாப்பற்று வாழுகின்றோம் என்ற மனநிலையில் வாழும் நிலையே நீடிக்கும். எமக்கான அரசியல் விடுதலை கிடைக்கும் வரை.. இந்த நிலை இருக்கவே செய்யும்..! இவர்கள் அவர்களாகவே பாதுகாப்புத் தேடவும் வாழ்வை தேடவும் அனுமதித்ததன் விளைவே இந்தத் துன்பங்களுக்கு ஒரு காரணம்..! இவர்களுக்கு வேலியாக இருக்க வேண்டிய கடமை ஒவ்வொரு தமிழனினதும் பொறுப்பு. அதை எம்மில் பலர் உணரவும் இல்லை செய்ய முனையவும் இல்லை. அப்படி முனைந்திருந்தால்.. இந்தக் கொடூரங்கள் இன்று பதிவாகி எம்முன் வந்திருக்கும் நிலை உருவாகியிராது..! :icon_idea:

இதற்கு முன்னோடியாகச் சுண்டல் தான் இருக்க வேண்டும்!

இன்னொருவரை நோக்கி கைகாட்டி தப்புவதை விட்டுவிட்டு நீங்கள் என்ன செய்யமுடியும் என்பதை எழுதுங்கள்!

இன்னொருவரை நோக்கி கைகாட்டி தப்புவதை விட்டுவிட்டு நீங்கள் என்ன செய்யமுடியும் என்பதை எழுதுங்கள்!

நன்றி உங்கள் அற்புதமான கருத்துக்கு!

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

என்னை மன்னியுங்கள் சகோதரிகளே உங்களின் முன் நாம்...

இரண்டு மாவீரர் தினம்... இரண்டு முள்ளிவாய்கால் பாருங்கள்... சிந்தியுங்கள்... சேருங்கள்... மீட்டெடுப்போம்....

  • 1 month later...
  • தொடங்கியவர்

புலத்தில் வாழும் பலர் தங்கள் பிள்ளைகளுக்கு முன்னாள் போராளிகளை கட்டிக்கொடுக்க முன்வர வேண்டும்....

புலத்தில் உள்ளவர்கள் மட்டுமல்ல புலம் பெயர்ந்தவர்களும் முன்வரலாம் தானே!

அவர்கள் இந்கு வந்து வாழத் தயாராக இருந்தால் இன்னும் நல்லது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.