Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தலைமுறையொன்று தொலைகிறது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

headscratch.jpg

 

எங்கள் அரசியல்வாதிகளின் முகங்களில்,

இறுக்கம் தெரிந்தது!

சிங்கக் குரலோன் செருமிய போது,

கூட்டம் கொஞ்சம் கலங்கித் தான் போனது!

சங்கம் வளர்த்த இனம் நமதினம் என்றீர்கள்!

எங்கள் தோள்கள் கொஞ்சம் அசைந்ததும் உண்மை!

செருக்களமாடியது எமதினம் என்றீர்கள்!

பெருமையில் விரிந்தன எமது மார்புகள்!

 

ஒரே ஒரு தடவை மட்டும் ஒற்றுமை காட்டுங்கள்,

உலகத்தின் கண்கள் உற்றுப் பார்க்கின்றன!

ஓடோடி வரக் காத்திருக்கின்றன!

உங்கள் வாக்குகள் தான் எங்கள் அஸ்திரங்கள்,

மீண்டுமொரு முறை நம்பினோம்!

எத்தனை தலைமுறைகள் நம்பினோம்,

இன்னுமொரு முறை நம்புவதால்,

என்ன கேடா வந்துவிடப் போகின்றது?

இந்த முறை வாக்குகளைக் கிள்ளித் தரவில்லை!

அள்ளியே தந்தோம்!

 

வாக்குகள் எண்ணி முடிந்ததும்,

வார்த்தைகள் தடுமாறுகின்றன!

போர்க்குற்றமா?

புதினமாகக் கேட்கிறார்கள்?

போர்க்குற்றம் புரிந்தவனே சிரிக்கிறான்!

புலம் பெயர்ந்தவனெல்லாம்,

புண்ணாக்கு என அழைக்கப்படுகிறான்!

உண்ணாவிரதம் இருப்பவனைக் கூட,

கண்காணிக்கவென ஒரு கூட்டம்!

எங்கே போகின்றது எமது தலைமுறை?

 

தேசீய வாதத்திலும்,

சாதீயம் நுழைந்து விட்டது போலும்!

போலித் தேசீய வாதி,

போலியில்லாத தேசீய வாதி,

போராட்டத்தில் கூட சாதீயம்!

புலம் பெயர்ந்த போராளிகள்,

புலம் பெயராத போராளிகள்!

எங்கே போகிறது எமது தலைமுறை? :o 

,

 

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர்ந்தவனெல்லாம்,

புண்ணாக்கு என அழைக்கப்படுகிறான்!

உண்ணாவிரதம் இருப்பவனைக் கூட,

கண்காணிக்கவென ஒரு கூட்டம்!

எங்கே போகின்றது எமது தலைமுறை?

 

தேசீய வாதத்திலும்,

சாதீயம் நுழைந்து விட்டது போலும்!

போலித் தேசீயவாதி,

போலியில்லாத தேசீய வாதி,

போராட்டத்தில் கூட சாதீயம்!

புலம் பெயர்ந்த போராளிகள்,

புலம் பெயராத போராளிகள்!

எங்கே போகிறது எமது தலைமுறை:o

 

நன்றி  ஐயா

பேசவேண்டிய  நேரத்தில் பேசாதிருப்பதும்

குற்றத்துக்கு உடந்தையே.....

  • கருத்துக்கள உறவுகள்

பாதை தெரியாத பதகளிப்பில் காற்றில் ஓட்டை விழுகிறது என்றால் நம்பவா போகிறீர்கள்?

 

இன்றைய நாட்களை சொல்கின்றன வரிகள். வீரியம் மிக்க எழுத்துகளையோ சிந்தனைகளையோ எவராலும் பிரசவிக்கமுடியவில்லை. இப்படியே கவலைகள் கூடுகட்ட இருப்பையே காணாமல் போகச் செய்யப்போகிறது எங்கள் எல்லோருக்குமான விதி. :(

 

ரோமியோ பாராட்டுச் சொல்ல முடியவில்லை. வேதனைகளே மிஞ்சுகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

headscratch.jpg

 

எங்கள் அரசியல்வாதிகளின் முகங்களில்,

இறுக்கம் தெரிந்தது!

சிங்கக் குரலோன் செருமிய போது,

கூட்டம் கொஞ்சம் கலங்கித் தான் போனது!

சங்கம் வளர்த்த இனம் நமதினம் என்றீர்கள்!

எங்கள் தோள்கள் கொஞ்சம் அசைந்ததும் உண்மை!

செருக்களமாடியது எமதினம் என்றீர்கள்!

பெருமையில் விரிந்தன எமது மார்புகள்!

 

ஒரே ஒரு தடவை மட்டும் ஒற்றுமை காட்டுங்கள்,

உலகத்தின் கண்கள் உற்றுப் பார்க்கின்றன!

ஓடோடி வரக் காத்திருக்கின்றன!

உங்கள் வாக்குகள் தான் எங்கள் அஸ்திரங்கள்,

மீண்டுமொரு நம்பினோம்!

எத்தனை தலைமுறைகள் நம்பினோம்,

இன்னுமொரு முறை நம்புவதால்,

என்ன கேடா வந்துவிடப் போகின்றது?

இந்த முறை வாக்குகளைக் கிள்ளித் தரவில்லை!

அள்ளியே தந்தோம்!

 

வாக்குகள் எண்ணி முடிந்ததும்,

வார்த்தைகள் தடுமாடுகின்றன!

போர்க்குற்றமா?

புதினமாகக் கேட்கிறார்கள்?

போர்க்குற்றம் புரிந்தவனே சிரிக்கிறான்!

புலம் பெயர்ந்தவனெல்லாம்,

புண்ணாக்கு என அழைக்கப்படுகிறான்!

உண்ணாவிரதம் இருப்பவனைக் கூட,

கண்காணிக்கவென ஒரு கூட்டம்!

எங்கே போகின்றது எமது தலைமுறை?

 

தேசீய வாதத்திலும்,

சாதீயம் நுழைந்து விட்டது போலும்!

போலித் தேசீயவாதி,

போலியில்லாத தேசீய வாதி,

போராட்டத்தில் கூட சாதீயம்!

புலம் பெயர்ந்த போராளிகள்,

புலம் பெயராத போராளிகள்!

எங்கே போகிறது எமது தலைமுறை? :o 

,

 

யதார்த்தமான வரிகள் .....
 
நன்றி புங்கையூரான். 
  • கருத்துக்கள உறவுகள்

பாதை தெரியாத பதகளிப்பில் காற்றில் ஓட்டை விழுகிறது என்றால் நம்பவா போகிறீர்கள்?

 

இன்றைய நாட்களை சொல்கின்றன வரிகள். வீரியம் மிக்க எழுத்துகளையோ சிந்தனைகளையோ எவராலும் பிரசவிக்கமுடியவில்லை. இப்படியே கவலைகள் கூடுகட்ட இருப்பையே காணாமல் போகச் செய்யப்போகிறது எங்கள் எல்லோருக்குமான விதி. :(

 

ரோமியோ பாராட்டுச் சொல்ல முடியவில்லை. வேதனைகளே மிஞ்சுகின்றன.

 

மிகவும்  

அவநம்பிக்கைஎ  தரும் எழுத்து  சகாரா

உங்களிடம் இன்னும் இன்னும் எதிர்பார்த்து ஏமாந்து போனவன்.... :(  :(  :(

அண்ணா தொடர்ந்து எழுதுங்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

நிறைய நம்பிக்கைகளோடும் எதிர்பார்ப்புக்களோடும் இருந்து விட்டீர்கள் போலிருக்கே புங்கை அண்ணா!

தேசியவாதிகளில் பல பிரிவுகளும் உப பிரிவுகளும் உள்ளன!

கடுந்தேசியவாதி

மென்தேசியவாதி

போலித் தேசியவாதி

புலம்பெயர் தேசியவாதி

புலம்பெயரா தேசியவாதி

இன்னும் சொல்லலாம்..

மிக்க நன்றி புங்கை.

ஏக்கங்கள் ஒவ்வொரு வரியிலும் தெரிகிறது. ஆனால் நடக்குமா என்பது மட்டும்... நிச்சயமான கேள்விக்குறியுடன். :(

நன்றி புங்கையூரான் அகிம்சை வாதிகளிடம ஒரு தலைமுறை ஏமாந்தது. அவர்களை பின்தள்ளி ஆக்ரோசத்துடன் முன்வந்த ஆயுத போராட்ட தலைமை அடுத்த தலைமுறையை ஏமாற்றியது. மீண்டும் அகிம்சைவாதிகள் கிட்ட தட்ட அடுத்ததலைமுறையினர் முன்பாக.. நம்பிக்கையுடன் வாக்களித்த மக்கள். பொறுத்திருந்து பார்ப்போம்.

உண்மையில் சிந்திக்க வேண்டிய பொருளுடன் வந்துள்ளது கவிதை.

 

எவ்வளவு தூரம் நான் ஏமாற்றப்படுகிறோம் ஒவ்வொருமுறையும் ஏதாவது ஒரு சாக்குபோக்கு சொல்லி எங்களை முட்டாள் ஆக்கி விடுகிறார்கள். 

 

 

எவ்வளவு அழிவுகள் இழப்புகள் எல்லாவறையும் கேவலமாக்கி பேசும் எம்மவர்கள் ................

 

நன்றி நேரம் காலம் இடம் அறிந்து கவிதை ஆக்கியமைக்கு புங்கை அண்ணை 

  • கருத்துக்கள உறவுகள்
மீண்டுமொரு முறை நம்பினோம்!

 

மீண்டும் ஒரு முறை ஏமாறுவோமோ என மனம் பயப்படுகிறது. தோல்வியை தாங்குமளவுக்கு ஏமாற்றத்தை தாங்க முடியவில்லை.

 

வாக்குகள் எண்ணி முடிந்ததும்,

வார்த்தைகள் தடுமாறுகின்றன!

 

நெஞ்சில் நேர்மை கொண்ட மாவீரர்கள் மண்ணில் வித்தாகி விட்டார்கள்.

 

 

புலம் பெயர்ந்தவனெல்லாம்,

புண்ணாக்கு என அழைக்கப்படுகிறான்!

 

சப்பு சவர்களை பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ள தேவையில்லை.

 

 

தேசீய வாதத்திலும்,

சாதீயம் நுழைந்து விட்டது போலும்!

போலித் தேசீய வாதி,

போலியில்லாத தேசீய வாதி,

போராட்டத்தில் கூட சாதீயம்!

புலம் பெயர்ந்த போராளிகள்,

புலம் பெயராத போராளிகள்!

எங்கே போகிறது எமது தலைமுறை?

 

 

 

 

 

 

பிரிவுகளை உருவாக்க எதிரி தேவை இல்லை. இப்படியான புல்லுருவிகளே போதும்.

உங்கள் கவிதையின் பாடுபொருள் கனதியானது . எல்லோர்க்கும் எல்லாம் தெரியுமென்றால் அங்கே மேய்பர்களுக்கு வேலையில்லை . படைப்புக்குப் பாராட்டுக்கள் :) :) .

 

  • கருத்துக்கள உறவுகள்

headscratch.jpg

 

எங்கள் அரசியல்வாதிகளின் முகங்களில்,

இறுக்கம் தெரிந்தது!

சிங்கக் குரலோன் செருமிய போது,

கூட்டம் கொஞ்சம் கலங்கித் தான் போனது!

சங்கம் வளர்த்த இனம் நமதினம் என்றீர்கள்!

எங்கள் தோள்கள் கொஞ்சம் அசைந்ததும் உண்மை!

செருக்களமாடியது எமதினம் என்றீர்கள்!

பெருமையில் விரிந்தன எமது மார்புகள்!

 

ஒரே ஒரு தடவை மட்டும் ஒற்றுமை காட்டுங்கள்,

உலகத்தின் கண்கள் உற்றுப் பார்க்கின்றன!

ஓடோடி வரக் காத்திருக்கின்றன!

உங்கள் வாக்குகள் தான் எங்கள் அஸ்திரங்கள்,

மீண்டுமொரு முறை நம்பினோம்!

எத்தனை தலைமுறைகள் நம்பினோம்,

இன்னுமொரு முறை நம்புவதால்,

என்ன கேடா வந்துவிடப் போகின்றது?

இந்த முறை வாக்குகளைக் கிள்ளித் தரவில்லை!

அள்ளியே தந்தோம்!

 

வாக்குகள் எண்ணி முடிந்ததும்,

வார்த்தைகள் தடுமாறுகின்றன!

போர்க்குற்றமா?

புதினமாகக் கேட்கிறார்கள்?

போர்க்குற்றம் புரிந்தவனே சிரிக்கிறான்!

புலம் பெயர்ந்தவனெல்லாம்,

புண்ணாக்கு என அழைக்கப்படுகிறான்!

உண்ணாவிரதம் இருப்பவனைக் கூட,

கண்காணிக்கவென ஒரு கூட்டம்!

எங்கே போகின்றது எமது தலைமுறை?

 

தேசீய வாதத்திலும்,

சாதீயம் நுழைந்து விட்டது போலும்!

போலித் தேசீய வாதி,

போலியில்லாத தேசீய வாதி,

போராட்டத்தில் கூட சாதீயம்!

புலம் பெயர்ந்த போராளிகள்,

புலம் பெயராத போராளிகள்!

எங்கே போகிறது எமது தலைமுறை? :o 

,

 

போராடப் போகாமல் ஓடி வந்து விட்டு,நாட்டுக்கென்று உருப்படியாக ஒன்றும் செய்யாமல் புலத்தில் இருந்து கணணியில் தட்டும் நான் உட்பட பலர் புலம் பெயர் புண்ணாக்குகள் தான்.ஊரில் என்ன நடக்குது என்ற யதார்த்தம் புரியாமல் ஊரில் இருப்பவர்களை தங்கள் எண்ணத்திற்கு ஆட்ட நினைப்பவர்களை புண்ணாக்கு என்று சொல்வதில் தப்பில்லை.ஆனால் என்ன புண்ணாக்குத் தான் பாவம் :)
 
உண்ணாவிரதம் என்பது இப்போது கேலிக் கூத்தாகி போய் விட்டது.உ.வி இருக்கிறது என்டால் ஒழுங்காக இருக்க வேண்டும்.சும்மா போமாலிட்டிக்காக இருக்க கூடாது.அதை கண் காணிப்பதில் என்ன தப்பு?...ஒன்று நடக்காது என்று  தெரிந்தும்[ஒருத்தரும் உ.விரதம் உயிரை விடப் போறேல்ல அது வேற விசயம்]சும்மா பெயரை தக்க வைக்க ஏன் இந்த நாடகம்?...அகிம்சை வழியில் போராடத் தான் எத்தனையோ வழிகள் இருக்கே! <_<
 
என்ன நடந்தாலும் கேள்வி கேட்காமல்,குற்றம்,குறை சொல்லாமல் பூம்,பூம் மாடு மாதிரி தலையாட்ட வேண்டும்.இல்லையா புங்கையூரான்??????????அதைத் தானே நீங்கள் எதிர் பார்க்கிறீர்கள் :(
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கனமான வரிகள் புங்கை.. ஆனால் இதையெல்லாம் தாண்டியே எமது போராட்டம் வளர்த்தெடுக்கப்பட்டது.. :rolleyes:

பிறந்தநாள் வாழ்த்து பாடும்போது சில குரல்கள் அபசுரமாக ஒலிக்கும்.. அதையும் தாண்டி நாங்கள் பிறந்தநாள் விழா கொண்டாடுவதில்லையா? :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் உரிமைகளை புலிகள் வென்றெடுப்பார்கள் என்று மிகுந்த நம்பிக்கையோடும் எதிர்பார்ப்புகளோடும் இருந்தவர்கள், எவரும் எதிர்பார்க்காத வண்ணம் அவர்களின் அழிவையும் ஆயுதப் போரின் முடிவையும் கண்ட பின்னர் மிகவும் நம்பிக்கையீனம் கொண்டவர்களாகிவிட்டார்கள் என்பதுதான் உண்மை. இந்த நம்பிக்கையீனம்தான் எள்ளல்களாகவும், அவநம்பிக்கையான கருத்துக்களாகவும் வெளி வருகின்றன.

கிருபனின் கருத்துடன் நான் உடன்படுகிறேன். விடுதலைப்புலிகளின. தலைமை சரியான முடிவுகளை தகுந்த நேரத்தில் எடுத்திருந்தால் இன்று கூட்டமைப்பை எதிர்பார்க்க வேண்டிய மற்றும் அவநம்பிக்கையான நிலமை தமிழினத்தற்கு வந்திருக்காது.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் உரிமைகளை புலிகள் வென்றெடுப்பார்கள் என்று மிகுந்த நம்பிக்கையோடும் எதிர்பார்ப்புகளோடும் இருந்தவர்கள், எவரும் எதிர்பார்க்காத வண்ணம் அவர்களின் அழிவையும் ஆயுதப் போரின் முடிவையும் கண்ட பின்னர் மிகவும் நம்பிக்கையீனம் கொண்டவர்களாகிவிட்டார்கள் என்பதுதான் உண்மை. இந்த நம்பிக்கையீனம்தான் எள்ளல்களாகவும், அவநம்பிக்கையான கருத்துக்களாகவும் வெளி வருகின்றன.

 

 

இது ஏற்புடையதல்ல

பிழையான வழிகளை ஞாயப்படுத்தும் கருத்து கிருபன்

 

என்னைப்பொறுத்தவரை

இவர்கள் 

அன்றும் இருந்தார்கள்

இன்றும் இருக்கிறார்கள்

 

எம்மிடையே

செய்பவர்களைப்பிழைபிடிக்கும் கூட்டம் என்றுமே இருக்கிறது

ஏன் புலிகளின் அழிவை எதிர்பார்த்து

அதைக்கொண்டாடிய  எம்மவர்களுக்கு என்ன பதில்??? :(

நேர்த்தியாக வரைந்திருக்கிறார் புங்கையூரான்.

 

பத்துமாதம் சுமந்து விட்டால் பிள்ளை. பத்துவருடம் கழிந்துவிட்டால் பாலன் பஞ்சம் போய்விடும். வளரும் வடலியில் கூட "என்று ஒரு நாள் அந்த பாளை விரியும்" என்பது தெரியும்.

 

ஆனால் சுதந்திர போராட்டம்மட்டும் "என்று தனியும் இந்த சுதந்திர தாகம்" என்பது மட்டும்தான்.

 

சுதந்திரம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் தனியத்தனிய கிடைக்க வேண்டியது. ஆனால் அதை தனித்து நின்று பெற முடியாது.

 

தான் தான் போராடி பெற வேண்டியது. வாக்களித்துவிட்டால் வீடு தேடி வராது. 

 

தலைமையை அறியாமல் வாக்களித்துவிட்டால் நம்பிக்கைத் தளர்வாக இருக்கும். யதார்த்தத்தை அறிந்து வாக்களித்தவர்கள் வருமா என்று காத்து காவல் இருப்பதும் காணாதது. 

 

லெனின் கொடுத்த வாக்குறுதிகளை நம்பி போன ரூசிய மக்கள் கோபாச்சோ பதவிக்கு வரும் வரை வயிற்றை இறுக்கிக் கட்டிகொண்டிருந்தார்கள்.  இன்று வயிற்றுக்கு கிடைக்கிறது. ஆனாலும்......

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

இது ஏற்புடையதல்ல

பிழையான வழிகளை ஞாயப்படுத்தும் கருத்து கிருபன்

 

என்னைப்பொறுத்தவரை

இவர்கள் 

அன்றும் இருந்தார்கள்

இன்றும் இருக்கிறார்கள்

 

எம்மிடையே

செய்பவர்களைப்பிழைபிடிக்கும் கூட்டம் என்றுமே இருக்கிறது

ஏன் புலிகளின் அழிவை எதிர்பார்த்து

அதைக்கொண்டாடிய  எம்மவர்களுக்கு என்ன பதில்??? :(

ஓம். இருக்கின்றார்கள்தான். தாயகத்தில் இருக்க மகிந்தவும் கோத்தபாயவும் விடப்போவதில்லை. அதனால் முப்பது வருடங்களுக்கு முன்னரே வெளிநாடுகளுக்கு வந்து தேசிய ஊழியம் செய்யும் பிரிகேடியர்களுக்கும், கேணல்களுக்கும் கீழே இன்றும் இருக்கின்றார்கள். <_<

புலிகளின் அழிவை எதிர்பார்த்த எதிரிகளுக்கும் சுயநலமிகளுக்கும் மகிழ்வையும் புலிகளை நம்பிய பெரும் தொகையான தமிழ் மக்களுக்கு ஏமாற்றத்தையும் புலிகள் கொடுத்து சென்றுவிட்டார்கள் என்பதே உண்மை. சர்வதேசத்திற்கு சில விடயங்களை விட்டுப் கொடுத்து நல்லுறவை வளர்த்திருப்பதன் மூலம் தமிழ் மக்கள் தலை நிமிர்ந்து வாழக்கூடிய அரசியல் தீர்வை பெறக்கூடிய மாபெரும் பலம் விடுதலைப்புலிகளுக்கு அன்று இருந்தது. விடுதலைப்புலிகளின் வீரத்திற்கும், தியாகத்திற்கும் தலை வணங்கினாலும் தங்களின் பலத்தை சரிவர அவர்கள் பயன்படுத்தவில்லை

காங்கேயன்துறை தொகுதி எப்போதும் யார் கோட்டையாகவும் இருக்கவில்லை. ஆனால் அங்கு தான் சம்பந்த்ர் காலம் வரைக்குமான தமிழரசுக்கட்சியின் தலைவர்கள் இருந்தார்கள். இன்றும் சேனாதிராஜா அங்கிருந்துதான் வருகிறார். எனக்கு நடேசன் காலத்தை பற்றி தெரியாது. ஆனால் செல்வா காலத்தில் நடந்தவைகள் பலவற்றை தெரியும்.

 

சுந்தலிங்கம், பாஸ்கரன் பொன்னம்பலம் போன்றவர்களால் தமிழர்சுக்கட்சி  கிழி கிழி என்று கிழிக்கப்பட்து காங்கேயன் துறை தொகுதியில்தான் நடை பெற்றது. பொன்னம்பலம், சுந்தரலிங்கம் போன்றவர்களின் பேச்சுக்களுக்கு முன்னால் யாழின் மாற்றுக்கருத்துக்கள் தூசு.

 

ஆனால் கட்சி இன்றுவரை தமிழரக்கட்சி தளம்பிக் கொடுக்கவில்லை. மக்கள் அந்த கட்சியை விட்டு போகவில்லை. ஆனால் அன்றே குறை கண்டவர்கள் இன்றும் கூட எதுவும் செய்தில்லை.

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

அன்றிலிருந்து இன்று வரை தமிழன் தலைவர்களை
நம்பித் தான் வாழ்கின்றான்.
தலைவர்களும் மக்களை ஏமாற்றியே தங்கள் காலத்தை முடித்துவிடுகின்றார்கள்
இடையில் காக்கைகளும் எத்தர்களும்  தங்கள் கைவரிசையைக் காட்டுகின்றனர்.

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் புங்கையூரன்.

கவிதைக்கு நன்றி புங்க்ஸ் அண்ணா.

  • கருத்துக்கள உறவுகள்

வாக்குகள் எண்ணி முடிந்ததும்,

வார்த்தைகள் தடுமாறுகின்றன!

போர்க்குற்றமா?

புதினமாகக் கேட்கிறார்கள்?

போர்க்குற்றம் புரிந்தவனே சிரிக்கிறான்!

புலம் பெயர்ந்தவனெல்லாம்,

புண்ணாக்கு என அழைக்கப்படுகிறான்!

உண்ணாவிரதம் இருப்பவனைக் கூட,

கண்காணிக்கவென ஒரு கூட்டம்!

எங்கே போகின்றது எமது தலைமுறை?

 

 

புங்கையூரான் தமிழரின் இன்றைய யதார்த்த நிலையை அழகாக வடித்துள்ளீர்கள். பாராட்டுகள்!

விடுதலை என்பது கிடைக்கும் வரை போராட்டமென்பது இருக்கும். ஆனால், அதன் வடிவங்கள் வேறாகலாம்.அரசியல்வாதிகளிடம் நாம் அகப்பட்டுள்ளோம் அவர்களால் புரட்சிகரமாகப் பேசமுடியுமே தவிரப் புரட்சியை நடாத்த முடியாது.ஏனென்றால் இலங்கைத் தீவை மாறிமாறி அரசபயங்கரவாதமே ஆள்கிறது.ஆளும் வர்க்கம் ஒருபோதும் புரட்சியை ஏற்பதில்லை. அது சிறீலங்காவிலென்றாலும் சரி, தமிழீழத்திலென்றாலும் சரி ஒரேவிதமாகவே பேசுவார்கள். இந்தக் கிந்தியனும் அழிப்பதற்குத் துணைநிற்பான்.(1971 - 2009)  என்று எமக்கொரு அரசியலாளர் கிடைக்கிறாரோ அதுவரை இவர்போன்றவர்களை எமதினம் நம்பியே ஆகவேண்டிய சூழல். ஆனால் மாற்றத்திற்கான ஒரு புள்ளி தெற்கிலே தோன்றவேண்டும் அது வாக்காயினும் சரி வேட்டாயினும் சரி. வளர்ந்துவிட்ட பௌத்த பேரினவாதச் சிந்தனை மாறவிடுமா? என்பதைக் காலமே தீர்மானிக்கும். ஆனால் கைலாகாதவராகத் தமிழினம் இல்லை. இன்றைய நாளில் அது தனக்கான உரிமைக்காக ஏதோஒருவகையில் அயராது உழைத்த வண்ணமே உள்ளது. அது விடுதலை கிட்டும்வரை உழைக்கும்.

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=129539

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.