Jump to content

16 வது அகவை காணும் யாழ்.. 26 இல் எப்படி..இருக்கும்.?!


Recommended Posts

Posted

யாழ் களமும், ஒரு விதத்தில, தமிழ்க் கலியாணம் மாதிரித் தான்!

ஒரு அவசரத்துக்கு, விட்டிட்டு ஓடேலாது!

இது தான் புங்கையூரன் அண்ணா சொன்ன பதில் தமிழ்சூரியன்,

  • Replies 54
  • Created
  • Last Reply
Posted

யாழ் களமும், ஒரு விதத்தில, தமிழ்க் கலியாணம் மாதிரித் தான்!

ஒரு அவசரத்துக்கு, விட்டிட்டு ஓடேலாது!

இது தான் புங்கையூரன் அண்ணா சொன்ன பதில் தமிழ்சூரியன்,

உண்மை நவீனன் .............யாழில் இணைந்த தமிழ் உணர்வுள்ள எந்த தமிழனாலும் யாழை விட்டு வெளியே போக முடியாது . அரசியல் கருத்துக்களால் வேறு வேறு கோணத்தில் இருந்தாலும் ..அந்த தமிழ் உணர்வு ஒன்றாக இணைத்துவிடும் .அதுதான் யாழ் ........நான் கண்ட அனுபவம் 

Posted

கம்பியூட்டரில்  தமிழ் என்று அதிசயத்துடன் பார்த்து பிரமித்தும் கொண்டு  பார்த்து கொண்டும் இருக்கும் பொழுது இந்த யாழ் இணையம் எனக்கு கண்ணில பட்டது . இதில் பங்கு பெறுபவர்கள்  கல்வியாளர்களாக இருக்க கூடும்  மேதாவிகளாக இருக்க கூடும் நினைத்தேன் ,. நமக்கு இங்கு என்ன வேலை? அதுவும் அழகு தமிழில் எழுதி விவாதிக்கும் பொழுது பிரமிப்பு இருக்காதா என்ன?..

 

 

அத்துடன்  எனது வாழ்வுயிலில் கம்பியூட்டருக்கும் எனக்கு தொடர்பே இல்லாத நிலையில் இருந்தும் கூட இவர்கள் மாதிரி  தமிழ் எழுத மாட்டனா என்ற நப்பாசை ஏனோ எழுந்தது...

 

அதிர்சட வசமாக யாழ் இணையம் இலகுவாக அறிமுகபடுத்தி வைத்திருந்த பாமினி  உரு  தட்டச்சு முறை  தமிழில் எழுத பழக்கியது .அதன் மூலம் யாழில் எழுதி பார்த்தேன்  .ஆமா நானும் தமிழில் எழுதுகிறேன் என்று சந்தோசம் பொங்க  பிறவி பயன் பெற்ற இன்பத்தை அடைந்தேன்.

 

அந்த எழுத்தின் சில வரவேற்பு ஊக்கத்தின் மூலம்  வலைபதிவை உருவாக்கி   எழுத தொடங்கினேன் . இந்த சிறியோனை தமிழில் எழுத வைத்த யாழ் இணயத்துக்கு  எனது வாழ்த்துக்கள் . யாழ் இணையத்தின்  பொது கருத்தோடு சில  வேளை  ஒத்து போக முடியாமால் சந்தர்ப்பம் ஏற்பட்ட பொழுதும் வலிந்து ஒரு சமரச போக்கை என்னுள் உருவாக்கி  யாழ் இணையத்தில் இருந்து தூர போகாமால்  அதனுடன் பயணித்திருக்கிறேன் என்று நம்புகிறேன் .

 

மீண்டும் வாழ்த்துக்கள் யாழ் இணையத்துக்கு

Posted

நான் எவ்வளவு தூரம் பயணித்தாலும் யாழ் இணைம்  என்றென்றும் ஆழமாய் அடி மனதில்  புதைந்திருக்கும்.யாழிற்காக எழுதிய கதைகள்  கவிதைகள்  எனக்கே இப்போ நினைவில்  இல்லை.முக்கியமாக  என்னை அடையாளப் படுத்தியது ஜரோப்பிய  அவலம் என்கிற கட்டுரைகளும்  அதன் பின்னரான  நாடகங்களும். அதற்கடுத்ததாக  டண்னால் தொடங்கப் பட்ட  நேசக்கரம்  அமைப்பில்  நானும் இணைந்து பணியாற்றியது  அதன் பல அகவைகளிலும்  ஏதாவது ஒரு நிகழ்வினையும் நான்செய்திருக்கிறேன்.  குறிப்பாக பட்டி மன்றம் அதைப்போல தொடர்ந்தும் யாராவது ஏதாவது நிகழ்ச்சிகளை  செய்து சிறப்பிக்க வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இலங்கையில் வாழ்ந்த போது நான் மிகவும் நேசித்த சஞ்சிகை, டொமினிக் ஜீவா அவர்களால் நடத்தப்பட்ட 'மல்லிகை' ஆகும்!

 

எனது தந்தையார், ஒவ்வொரு இதழையும் தவறாமல் வாங்கி வருவார். ஆனால், அதை அவர் பெரிதாக வாசித்ததில்லை. அவரிடம், இதுபற்றிக் கேள்வி எழுப்பிய போது, அவர் அளித்த பதில், இன்றைய சூழ்நிலையிலும் மிகவும் பொருத்தமானது.

 

வாசிக்க வேண்டும் என்பது முக்கியமானதல்ல, வாங்க வேண்டும் என்பதே முக்கியமானது. அதாவது, உள்ளூர் பத்திரிகையான 'மல்லிகை' ஊக்குவிக்கப்பட வேண்டும் என்பதே அதன் பொருளாக இருந்தது! அதன் பின்னர், மல்லிகை, சிரித்திரன் போன்ற பத்திரிகைகளை எப்போதும் பணம் கொடுத்து வாங்கும் பழக்கம் என்னிடமும் தொற்றிக்கொண்டது.

 

விகடன், குமுதம் போன்ற பத்திரிகைகள் என்னை அவ்வளவுக்குக் கவரவில்லை. ஆனால், கலைமகள், மஞ்சரி, கல்கி போன்றவைகள் ஓரளவுக்கு, என்னைக் கவர்ந்தன என்றே சொல்லவேண்டும்!

 

யாழை, மஞ்சரியுடன் ஒப்பிடலாம் என நினைக்கிறேன்!

 

செய்திகள், சிறுகதைகள், கவிதைகள், சினிமா விமரிசனங்கள், அரசியல் விமரிசனங்கள் என்ற அனைத்தையும் ஓரிடத்தில் தருவது தான் யாழின் சிறப்பாகும் எனக் கருதுகின்றேன்!

 

யாழுக்கும், அதனைக் கொண்டு நடத்தும் நிர்வாகக் குழுவுக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆதங்கம் எனக்கு எப்போதுமே உண்டு. ஒரு சிறிய அங்கத்துவ சந்தா முறையை, வருங்காலத்தில் 'யாழ்' அறிமுகப்படுத்துமெனின், நாம் பெரிதும் மகிழ்ச்சியடைவேன்!

 

ஒரு உயர்ந்த அடுக்கு மாடிக் கட்டிடமொன்றுக்குள், உள்ளிடும் போது ஏற்படும் ஒரு விதமான தயக்க உணர்வு, யாழில் உள்ளிடும் போது எனக்கு ஏற்பட்டதில்லை. அதுவே 'யாழின்' சிறப்பும், தனித்துவமும் என்பேன்.

 

வெறும் பார்வையாளர்களாக இல்லாது, அனைவரும் பங்காளிகளாகிப் பயணிப்பதிலேயே, யாழின் வெற்றி தங்கியுள்ளதென நினைக்கிறேன்!

 

நெடுக மூஞ்சியை நீட்டிக்கொண்டிருக்காமல், கொஞ்சநேரம் சிரிப்பம் வாங்கோ, சிந்தனைக்குச் சில படங்கள், இன்றைய பாடல், போன்றவையும் கோமகன் போன்றவர்கள் நடத்தும், மரங்கள், பறவைகள், விலங்குகள் போன்றவற்றை அடையாளம் காணும் திரிகளும், அண்மையில் செங்கொடி ஆரம்பித்த 'விடுகதைகள்' திரியும், அனைவருமே யாழில் பங்காளிகளாகலாம் என உணர்த்தி நிற்கும் திரிகளாக மிளிர்கின்றன!

 

சுமேரியர் தொடங்கிய, 'யாழின் காதல் கதை', எத்தனையோ எழுத்தாளர்களை அடையாளம் காட்டியுள்ளது. இது போன்ற திரிகள், 'உள்ளுக்குப் போவமா அல்லது வெளியே போவமா என்று 'வாசல் படிகளில்' நிற்கும் உறவுகளை, 'பயப்பிடாமல் வாங்கோ' என்று உள்ளே அழைத்துச் செல்லும்!

 

ஒருவரது பதிவொன்றுக்கு, ஊக்கமளித்து நிற்கும் கருத்தாளர்களே, யாழ் களத்தின் தூண்கள் என்பதில் சந்தேகம் இல்லை!

 

ஈழத்தமிழனின் 'துயர் நிறைந்த வாழ்வு'  நீடிக்கும் வரையுமாவது, யாழ் களம் வாழவேண்டும்!

 

அவளை வாழவைக்க வேண்டிய தார்மீகக் கடமை, ' புலம் பெயர் தமிழர்', ''நிலம் வாழ் தமிழர்', 'தொப்புள் கொடித் தமிழர்'. ',மலையகத் தமிழர்' என்ற எல்லாவிதமான தமிழர்களின் பொறுப்பாகும் என்றே கருதுகின்றேன்!

 

நவீன தொழில் நுட்பங்களோடு, யாழ் மகள் வளர வேண்டும், தமிழிருக்கும் வரை அவள் வாழவேண்டும், என்பது தான் எனது ஆசை!

 

வாழ்க தமிழ்...... வாழ்க யாழ் களம்!  :D 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

------

யாழுக்கும், அதனைக் கொண்டு நடத்தும் நிர்வாகக் குழுவுக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆதங்கம் எனக்கு எப்போதுமே உண்டு. ஒரு சிறிய அங்கத்துவ சந்தா முறையை, வருங்காலத்தில் 'யாழ்' அறிமுகப்படுத்துமெனின், நாம் பெரிதும் மகிழ்ச்சியடைவேன்!

------

 

தினமும்... சும்மா வந்து எழுதிவிட்டுப் போகின்றோமே.. என்ற கூச்ச உணர்வு, என‌க்கும் ஏற்படுவதுண்டு.

புங்கை குறிப்பிட்ட... சிறிய சந்தா தொகையை, யாழ். எதிர்காலத்தில் அறிமுகப் படுத்தினால் மிக்க மகிழ்ச்சியடைவேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
 
Mar 28 at 10:57 AM
எனக்கு யாழ் களத்துடனான அறிமுகம் ஒன்றரை ஆண்டுகளே ஆயினும் எனக்குக் கிடைத்த அனுபவங்களும், அறிவும், மனித மங்களைத் தெரிந்துகொள்ளக்கூடிய அனுபவங்களும் வாழ்வில் மறக்க முடியாதவை. யாழ் இணையம் என்றாலே கவிதை நினைவில் வருவதும் தவிர்க்க முடியாததாகி விட்டது. பலவிதமான செய்திகளை அறிந்து கொள்வது மட்டுமல்லாது திண்ணை என்னும் தளம் பலரை மனம் விட்டுப் பேசச் சிரிக்க நட்புக்கொள்ள வைத்ததை மறக்கவோ மறுக்கவோ முடியாது.
 
எமக்குள் ஒளிந்திருந்த திறமைக்களை எல்லாம் இலகுவாக வெளிக்கொணர உந்து சக்தியாக விளங்கியது யாழ்களமும் அங்கு கருத்தெழுதும் உறவுகளும் தான். இதில் எள்ளளவும் ஐயமில்லை. என் திறமையை எனக்குணர்த்திய யாழ்களத்தை வாழ்வின் கடைசிவரை மறக்க முடியாது என்பதும் உண்மை.
 
பலர் வருகின்றனர். போகின்றனர். தொடர்ந்து தம் சொந்த வீடுபோல் ஒருநாள் வராவிடில் தூக்கம் தொலைப்பவர்களும் கூட இங்குள்ளனர். அத்தனை சிறப்புடன் மற்றவரைக் கட்டிப்ப் போட்டு வைக்கும் திறமை கொண்ட யாழ் களம் தொடர்ந்தும் எத்தனை காலத்துக்கு இப்படியே இருக்க முடியும் என்று நெடுக்ஸ் எண்ணியது போன்றே நானும் எண்ணியிருக்கிறேன். தமிழை எம் சந்ததி மறந்துகொண்டு வரும் நிலையில் இளைய சந்ததியை ஈர்க்காவிட்டால் எம்முடன் யாழும் போகவேண்டிய நிலையை தவிர்க்க முடியாது. 
 
என்னதான் யாழ் இணையம் எம்மை அரவணைத்தாலும், கதைகள் என்ற பதுதியில் நாம் எழுதும் கதைகள் எவையும் உள்ளடக்காப்படாமல் இருப்பது வேதனைக்குரியது. பொதுவாக யாழ்களத்தைப் பார்ப்பவர்களுக்கும் யாழில் எழுதும் அனைவரின் எழுத்தும் போய் சேர வேண்டியது. அதை பொறுப்பாளர்கள் கவனத்தில் கொள்ளவேண்டியது அவசியம். எல்லோரையும் பராபட்சம் இல்லது அரவணைத்துச் செல்வதும் மிக முக்கியமான ஒன்று. மனித மனங்கள் விசித்திரமானவை. சிலர் வெளியே கூறலாம். சிலர் கூறமுடியாது சொல்லாமற் கொள்ளாமல் வெளியேறுவதர்க்கும் இதுவே காரணமாக அமைந்திருக்கலாம்.
 
இதில் கருத்துக்களை எழுதும் உறவுகளுக்கும் ஒன்று கூற வேண்டும். எதையும் துணிவாக எழுதுங்கள். மற்றவரை நோகடிக்கவேண்டும், இவரை எழுதவே இனி விடக்கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு குழுநிலை சார்ந்த எழுத்தாக உங்கள் எழுத்துக்கள் இருப்பது அனைவருக்கும், ஏன் யாழ் களத்துக்கும் ஆரோக்கியமாக இருக்கும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள் நான் உட்பட.
 
கருத்துக்கள் எழுதி என்னை ஊக்கப்படுத்திய உறவுகளுக்கும் யாழ் இணையத்துக்கும் என்றும் நான் கடமைப்பட்டவள்.

 

Posted

வாழ்த்துக்கள் யாழ் இணயத்துக்கு ...ஜெயகாந்தனின் சினிமாவுக்கு போன சித்தாளு ...மற்றும் மதறாஸ் பாசையில் வந்த கதைகள்  திரைபடங்களில்  நாடகங்கள்  போன்ற தாக்கத்தினால்  இந்த கள பெயரை மதராசி என்று வைத்து கொண்டு  முடிந்தளவு   அந்த மொழியிலே எழுதி யாழ் களத்தில் விவாதித்தேன் .. இன்று நினைத்தாலும் அது போல எழுத முடியவில்லை ....

 

ஒரு விவாத்த்தின் பொழுது கிருபன் . குருவி பங்குற்று இருந்தார்கள் . அதில் நண்பர் நாரதரும் மதராசு மொழியில் என்னோடு பதிலுக்கு பதிலுக்கு மிக கச்சிதமாக  எழுதி இருந்தார் . அப்பொழுது யாழ் களத்தில் மட்டுறத்தினராக இருந்து  இளைஞன் அந்த மொழி விளங்காமால் நாரதரும் மதராசியும் தமிழில் எழுதி விவாதியுங்கள்  ஒரு வேண்டுகோளை கூட விட்டார் . அது அந்த மொழிநடையில் ஓரளவுக்கு எழுதி இருக்கிறேன் .சந்தோசத்தை தந்தது. ஏன் சொல்லுகிறேன் என்றால் யாழ் களம் எங்களின் பல பரீட்சத்தா முயற்சிகளை   விதைத்து பார்ப்பதற்கு நல்ல நிலமாக கூட இருந்திருக்கிறது ,,மீண்டும் நன்றிகள்

 

 

ஆரம்பத்தில் எழுதிய மதராஸி நடை மொழி போல் தொடர்ந்து எழுத முடியாமால் போய் விட்டது .இடையில் விட்டமையால் .....நாரதரும் மதராசியும் பேசும் பொழுது இளைஞன் குறுக்கீடு செய்த பதிவுகள் போன்ற பதிவுகளை தேடி பார்க்கிறன்  கண்டு பிடிக்க முடியவில்லை ..தேடி பதிவுகளை கண்டு பிடிக்க கூடிய அனுபவம் பெற்றவர்கள் யாரும் அதை பெற்ற தந்தால் நன்றி கள்

Posted

நாகேஷின்  வாழ்த்துக்கள்....சிறுகதை எழுதும் ஆர்வம் எனக்கு இருந்த்து ..எனக்கு என்னவோ நான் சிறுகதை வடிவத்தில் எழுதவில்லையோ மற்றவர்கள் அங்கீரிப்பார்களோ என்ற தயக்கமும் கூட இருந்த்து .அந்த தயக்த்தை உடைத்து  தொடர்ந்து சிறுகதை எழுதுவதற்கு  ஒரு ஊக்கத்தை முதலில் தந்த்து யாழ் இணையமே ,,நன்றிகள் பல கோடி

 

http://mithuvin.blogspot.co.uk/

  • கருத்துக்கள உறவுகள்
Posted
722151490_1925412.gif?4


 

ஆறு வருடங்களுக்கு... முன்பு, ஈழப் போர் மும்முரமாக நடந்த வேளை... அங்கிருந்து வரும் செய்திகளை அறிய... புதினம், பதிவு, தமிழ்நாதம் போன்ற இணையச் செய்திகள் மூலம் அறிந்து கொண்டு அதனைப் பற்றிய கருத்துக்களை... நண்பர்களுடன் விவாதிப்பது வழக்கம்.
 

அப்போது ஒரு நண்பர், யாழ்களத்தின் இணைய முகவரியை... தந்துதவினார்.
முதலாக‌ அந்த முகவரிக்குச் சென்று பார்த்த போது... நான் தேடிய ஆள் இவர் தான்.. அடைந்த, மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
 

ஆனாலும்... அங்கு பலர் அழகிய தமிழில், கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருந்ததைப் பார்த்து... என்னால் தமிழில்... எழுத முடியாதே என்ற தயக்கத்துடன், சிறிது நாட்கள் வாசகனாகவே... இருந்தேன்.
 

அப்படி என்னால்... தொடர்ந்து இருக்க முடியாததால், ஒரு நாள் தட்டுத்தடுமாறி... பல பிழைகளுடன் என்னை... அரிச்சுவடிப் பகுதியில் அறிமுகம் செய்து..... http://www.yarl.com/forum3/index.php?showtopic=35074&page=1 இன்று வரை அதனைப் பிரிய மனமில்லாது... தினமும் என்னை வர வைக்கும் இணையமாக யாழ் களம் இருக்கின்றது.

 

மனிதனானவன்... பலரும் போற்றும் வகையில்,  வாழ்க்கையில்... ஒரு சாதனையாவது செய்ய வேண்டும் என்று சொல்வார்கள். அந்த வகையில்... தனது இளமைக் காலத்தில்... யாழ்களத்தை ஆரம்பித்து, இன்று... அதனை 16 வயது கொண்டாடும் வயது வரை... வளர்த்தெடுத்த மோகன் அண்ணாவும் ஒரு சாதனையாளனே...

 

உண்மையில்... நான் யாழ்களத்தில் இணைந்திராவிட்டால்.... தமிழில் எனக்குரிய பரிச்சயம் வெகு தொலைவிற்கு போயிருக்கும் என்பதில் ஐயமில்லை. யாழில்... இணைந்தன் மூலம் ஒரு நெருங்கிய, நட்பு வட்டத்துக்குள் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுவதால்... பல கவலைகளை... மறக்கக் கூடியதாக உள்ளது.

 

யாழ்களம் தொடர்ந்தும்... பல ஆண்டுகளை கடக்க எனது வாழ்த்துக்கள். :)

Posted

நான் முதல் முதல் யாழில் இணைந்து ஆங்கிலத்தில் எழுதி தமிழில் எப்பிடி எழுதுவது என்று    ஏங்கி நின்ற வேளையில்  தமிழ் சிறி அண்ணாவே எனக்கு தமிழில் எப்பிடி எழுதி அதை ஓட்டுவது என்று அரிச்சுவடியில் எனக்கு கூற .அவர் கூறிய படி நான் செய்து அதை தமிழில் பார்க்க .அன்று மனம் பட்ட ஆனந்தம் ..................இன்றும் அதை மறக்க முடியவில்லை ..நன்றிகள் யாழ் இணையம் ...... :) 

Posted

யாழ் நிர்வாகத்திடம் இந்த 16 ஆவது அகவையை ஒட்டி திண்ணையில் தடை செய்த உறவுகளுக்கு பொது மன்னிப்பு அழிக்க அன்பு வேண்டுகோள் ஒன்று விடுத்தால் என்ன ??

Posted

பொது மன்னிப்பு வழங்கலாம் நல்ல முடிவு. மகிழ்வான நாளில் எல்லோரையும் மகிழ்ச்சிப்படுத்துதல் நல்லதே.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எனக்கும் யாழுக்குமான உறவு என்பது 2005 காலப்பகுதியில் ஆரம்பித்தது அந்நேரம் இந்தக்களத்திற்குள் உள்பட்டு எழுதத் தெரியாத ஒரு நிலை இருந்தது. என்னுடைய சில கவிதைகளை யாழ் மோகனுக்கு அனுப்பி வைப்பேன் அப்போது அவை எதுவும் தவறாமல் யாழின் முகப்பில் இணைக்கப்பட்டது எல்லா இடங்களிலும் எங்கள் படைப்புகளை உடனடியாக ஏற்றும் கொள்ளும் தன்மைகள் இருக்கவில்லை. ஏன் எத்தனையோ தடவைகள் கனடா உலகத்தமிழர் பத்திரிகைக்கு அனுப்பிய என்னுடைய ஆக்கங்கள் பிரசுரமாகமலே குப்பைத்தொட்டிகளுக்குள் போன சம்பவங்களும் உண்டு. அத்தகைய ஒரு காலகட்டத்தில்தான் எனக்கு தமிழ்நாதம், யாழ் இணையம் என்பன அறிமுகமாயின. அப்போது தமிழ்நாதத்திலும் யாழ் இணையத்திலும் என்னுடைய ஆக்கங்களை உடனடியாக ஏற்று பிரசுரிக்கும் தன்மைகளே இவ்விரு இணையங்களுடனான என்னுடைய தொடர்பை வளர்த்தன. 2005 பகுதியில் முதன் முதலாக வேறு சில புனை பெயர்களுடன் யாழில் நுழைந்தேன். அப்போது பெரிதாக எதையும் எழுதவில்லை சில மாதங்களுக்குள்ளாகவே கடவுச் சொற்கள் மறந்து விட்டன.. தொடர்ந்து 2006 காலப்பகுதியில் நான் ஏற்கனவே உள்ள எனது புனைபெயருடன் இந்தக்களத்தில் பதிவிட ஆரம்பித்தேன் சிறிது காலம் கவிதைப்பகுதியிலேயே எழுதிக் கொண்டிருந்தேன். அப்போது இளையவர்கள் அதிகமாக எழுதிக் கொண்டிருந்தார்கள். அத்தோடு புதிதாக வந்தவர்களிடம் இலகுவாக சினேகம் பாராட்டும் தன்மை குறைவாக இருந்ததும் பெண்களோடு உரையாட இங்குள்ளவர்களுக்கு சிறிது தயக்கமும் இருந்ததால் என்னுடைய ஆரம்ப நாட்கள் இங்கு தனிமைப்பட்ட உணர்வை எனக்குள் விதைத்திருந்தன. இங்கு இலகுவாக உரையாட முடியாமல் ஏதோ ஒரு கண்ணுக்குத் தெரியாத இடைவெளி ஒன்றும் இருந்தது. அப்போதெல்லாம் என்னுடைய எழுத்துக்கள் மிக சீரியசானதான இருந்ததும் அதற்கு காரணம் எனலாம். இலகுவாக நட்பு பாராட்டாத்தன்மையும் இருந்தது அந்த பிம்பத்தை மாற்றவேண்டும். இலகுவாக மற்றவர்களுடன் கலகலப்பாக உரையாட எனக்கு இன்னொரு முகத்தின் தேவை அந்நாட்களில் ஏற்பட்டது. அதுவும் எனக்கு இலகுவாக அமைந்தது. அந்தப்புதிய முகத்தின் பயணத்தில் எனக்கு எண்ணற்ற நண்பர்கள் உருவாகினர் அப்போது நாங்கள் இங்கு அடித்த லூட்டி இருக்கிறதே.. எத்தனை காலம் சென்றாலும் மாறாத புன்னகையை மட்டுமே வழக்கக்கூடியதாக இன்றும் இருக்கிறது. 

 

யாழின் தொடர் பயணத்தில் நிறையவே தாயகம் சார்ந்த விடயங்களில் ஈடுபட்டு பலரும் இணைந்து பெருவிடயங்களை நடைமுறைப்படுத்தினோம்... குறிப்பாக 2008 - 2009 காலப்பகுதியில் இங்கு இணைந்திருந்தவர்கள் செய்த இணையவள உதவிகள் மற்றும் தகவல் பதாகைகள் தயாரிப்பு என்று தமிழினத்தின் இன்னல் களைய உழைத்தவர்கள் ஏராளம். இந்தக்காலத்திலேயே நேசக்கரம் அமைப்பின் தோற்றமும் உருவானது இந்தக் காலம் என்பது மிகவும் பொற்காலம் ஒரு விடயத்தை முன்னெடுத்துச் செய்வது என்பது இலேசானது அல்ல அதுவும் உலகம் முழுவதும் பரவி இருக்கக்கூடிய உறவுகள் ஒரு தளத்தில் ஒரே எண்ணோட்டத்தில் இணைந்து செயல்படுவது என்பது சாத்தியமற்றது ஆனால் அந்த ஒற்றைத்தளம் இந்த இடத்தில் பரிபூரணப்பட்டிருந்தது. யாழ் என்பது காலம் எமக்களித்த பெரும் புதையல் அதனை உருவாக்கிய மோகனுக்கும் அவருக்கு உதவியாக முன்னின்று உழைத்த அவருடைய நண்பர்களுக்கும் தமிழினம் சார்ந்து பெரு நன்றியை இவ்விடத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

2014 - 2024

 

1003579_10151988431047944_504674900_n.jp

 

இது போன்ற செய்திகள்.. யாழ் போன்ற இணையப் பையன்களின் எதிர்காலத்தில் நிச்சயம் செல்வாக்குச் செய்யும். மக்கள் அதிக நேரம்.. சிமாட்போன்களில் செலவு செய்வதைக் குறைத்து.. எல்லா தகவல்களையும் ஓரிடத்தில்.. சுருங்க.. இரத்தினச் சுருக்கமாக அறியவும்.. தமக்கிடையே அங்கிருது..தொடர்வுகளை கொள்ளவும்.. விருப்பங்களை எண்ணங்களை சுருக்கமாகவும் குறுகிய நேரத்திலும்.. பதிவிடவுமே விரும்புவார்கள். அதை இட்டு யாழ் தனது எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்பதை நம்பலாம். யாழ் 2024 இலும் மிளிர்வான்..! நிச்சயம் மாற்றங்கள் அங்கும் இருக்கும். ஆனால்.. உறவாடல் என்பது தொடர்ந்திருக்கும்.

 

வாழ்க யாழ் பையா. நீ... நீடித்து நிலைக்க வாழ்த்துக்களும் ஒத்துழைப்பும் எப்போதும் உண்டு. :icon_idea::)


படச் செய்தி: பிபிசி.

Posted
பதினாறு....
 
பதினாறு 
அகவை..
என்பது..
..
அது ஒரு 
காலப்பதிவின்
ஆரம்பமல்ல..
 
கன்னி
பருவத்தின் 
முழுமை!
 
ஊரெல்லாம்
விழுந்த
இடியை
 
ஓசையில்லாமல்..
 
உனக்குள்
அழுதுகொண்டே
மெல்லமாய்
 
கர்ப்ப பையில்
யுத்த
கரு இறங்க
 
இரவல் 
களம்
தந்தவளே
தாயே..
 
 
குரல் வளை..
அறும் நிலை 
வந்தும்
 
எத்தனை ஆறும்
ஏழ் கடலும்
எங்களை
 
மூழ்கடிக்க வந்தும்..
பொத்தி 
வைத்திருந்தாயே..
வாழிய நீ!
 
வரலாறு..
என்பது
வேறொன்றும்
இல்லை..
 
வாழ
தெரிந்த
காலத்தை...
 
எப்படி
வாழ தெரியாமல்
வீணடித்தோம்
என்பதே!!
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதில நின்டு நான் என்ன செய்ய?????

 

தாவலாம்.. குதிக்கலாம்.. கும்மாளம் அடிக்கலாம்.. காகம் பற பற.. காகக் குஞ்சே பற பற.. காகத்தின் முட்டையே பற பறன்னு.. பர பரப்பா பேசலாம்.. எத்தினை செய்யலாம்.

 

1966958_10151988783437944_694120374_n.jp

 

1947623_10151988788852944_1176517771_n.j

 

இப்படிக் கனக்கச் செய்யலாமே.. ஆதியானவர். :):lol:

 

இப்ப எல்லாம்.. மனுசனட்ட மனிதாபிமானமும் அருகிட்டு.. ஜீவகாருணியமும் அருகிட்டு.. ஒரே பொய்யும் புரளியும் வெட்டும் குத்தும் போட்டியும் பொறாமையும்..ஆனால் மற்ற உயிரினங்களிடத்தில் மனிதனிடம் இல்லாத மனிதாபிமானம்.. ஜீவகாருணியம் கூடிக்கிட்டே வருகுது. !!! :)

Posted
16 ஆவது அகவை காணும் யாழுக்கு எனது வாழ்த்துக்கள்.
நாம பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது  போரடிக்கும் சமயங்களில் சும்மா இணைய உலா
செய்யும் போது நமது கண்ணில் பட்டதுதான் இந்த யாழ் இணையம். அப்போ நமக்கு ஒழுங்காக
தமிழில் தட்டச்சு செய்ய முடியாத காரணத்தால் உடனே இணைய முடியவில்லை பின்பு 2005 இல்
தான் இணையும் சந்தர்ப்பம் கிடைத்தது. அப்பவுமே தமிழ் ஒழுங்காக தட்டச்சு செய்ய தெரியா
ஒரு மாதிரி தட்டித் தடுமாறி தட்டச்சு செய்யப் பழகி பேந்து 24 மணித்தியாலமும் யாழ் தான் கவிதை
கதை கட்டுரை அரட்டை என மிக இனிமையான காலங்கள் மறக்கவே முடியாது. தற்பொழுது
நேரமின்மையால் யாழில் எழுத முடியவில்லையே ஒழிய யாழுக்கு வராமல் இருப்பதில்லை.
ஸ்ஸ்ஸ்ஸ் ..........யப்பா கொஞ்ச நாள் தமிழிலில் தட்டச்சு செய்யாதது கண்ணைக்கட்டுதப்பா தட்டச்சு செய்ய முடியலை
Posted

அலை பொழுது போக்க, சண்டை பிடிச்சுப் பழக  வரும் இடம் யாழ். யாழ் இல்லாட்டி யாரோடை தான் சண்டையைப் பிடிக்கிறதுபா??? 

வாழ்க யாழ்! வளர்க உன் புகழ்!!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
எல்லாரும் எழுதேக்கை நானும் எழுதோணும் போலை இருக்கு ......என்னத்தை பெரிசாய் சொல்ல இருக்கு........idea6ws_zpsa34812e4.gif
இவ்வளவுகாலமும் யாழ்களத்திலை கதை,கவிதை,கட்டுரை,நாடகம் ஒண்டுமே எழுதாமல் பத்தோடை பதிணொண்டாய் இழுபறிப்பட்டுக்கொண்டு வாற  ஒரேயொரு சீவன் ஆரெண்டால்?  
 
வேறை ஆர் நான் தான்! icon6m_zps6069767e.gif
 
funnyz_zps262977cc.gif வாற வரிசம் பாப்பம்....கிட்டத்தட்ட கம்பராமாயணம் ரேஞ்சிலை ஒரு கதை எழுதத்தான் இருக்கு cool2_zps0675623f.gif  funny-gifs-very-excitedaa_zps0e214d18.gi
 
 
Posted

2007 என்று நினைக்கின்றன் ஆஜீவன் சுவிஸில் இருந்து வந்து எனது வீட்டில் தங்கியிருந்தார் .தினமும் காலை எழும்பி லப் -டாப்பை திறந்து வைத்து என்னாவோ வாசிப்பார் எழுதுவார் .அவர் தான் யாழ் என்று ஒரு களம் இருக்கு என்று எனக்கு சொன்னவர் .அத்துடன் யாழ் கள அங்கத்தவர்கள் ஒரு சந்திப்பையும் அஜீவனுடன் நடாத்தினார்கள் அதற்கு நானும் போயிருந்தேன் அங்கு அவர்கள் கதைப்பதை பார்க்க ஒருவித ஆச்சர்யமாக இருந்தது .ஆளை ஆள் தெரியாமல் அவர்கள் எழுதுவதை வைத்து தங்களுக்குள் பரீட்சையம் ஆகி ஏதோ எல்லாம் கதைத்தார்கள் .எனக்கு தலை சுற்ற தொடங்கிவிட்டது ஆனால் ஒரு வித சுவாரஸ்யமாகவும் இருந்தது .

அடுத்தடுத்த வாரங்களில் நானும் யாழை வாசிக்க தொடங்கினேன் . பெரிதாக ஆர்வம் வரவில்லை காரணம் அந்த நேரத்தில் அனைத்து புலம் பெயர் ஊடகங்களும்  கையாண்ட புல்லரிப்பு  விடயங்கள் தான் அதிகமாக இருந்தது . இருந்தும் சிலவிடயங்களுக்கு பதில் எழுதவேண்டும் என்று தோன்றியதால் அங்கத்தவரானேன் ஆனால் எதுவும் எழுதவில்லை .ஆனால்தொடர்ந்து வாசிக்க தொடங்கியிருந்தேன் .அரசியலை தவிர்த்து மிக நல்லொதொரு இணையமாக கவிதை ,கதை என்று பல விடயங்கள் மிக ஆக்கபூர்வமாக இருந்தது .

2009 இற்கு பின்னர்தான் காலடி எடுத்துவைத்தேன் .அதுவும் எடுத்தவுடன் அரசியல் பெரிதாக எழுதவில்லை என நினைக்கின்றேன் .அப்படியே மெல்ல மெல்ல உள்ளே புகுந்து யாழை தினமும் மீட்டாமல் இருக்க முடியாது என்ற நிலைக்கு வந்துவிட்டேன் .

எழுதுவதில் மிகவும் சோம்பேறியான என்னை தட்டசில் தமிழை எழுத வைத்ததும் பின்னர் கதை எழுத வைத்ததும் யாழ் தான் .

யாழை நடத்த நிர்வாகம் படும் கஷ்டம் பற்றி (நிதி உட்பட ) சொல்ல தேவையில்லை . எனக்கும் ஏதாவது பங்களிப்பு செய்யவேண்டும் போல இருக்கும் .திட்டம் எதுவும் இருந்தால் சொல்லுங்கள் .

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழ் தேவி, காங்கேசு வரை ஊர்ந்து செல்லும்
பலாலி விமான தளம் கட்டாந்தரையாக அப்படியே இருக்கும்
ஆஸ்பத்திரி வீதி நடுவிலுள்ள மரங்கள் நீங்கி இருக்கும்
'செல்லா சினிமா' ஓட திணறிக்கொண்டிருக்கும்
சாலை சந்திப்பில் தானியங்கி விளக்குகள் முளைத்திருக்கும்
வெள்ளை வேன் பழுப்பு வேனாகி இருக்கும்
பூபாலசிங்கம் ஆன் லைனில் புத்தகம் விற்றுகொண்டிருப்பார்
இளசுகள் பிட்சா பர்கர் மட்டுமே சாப்பிடும்
'அண்ணே றைட்' என்பதற்கு பதில் 'அம்மே றைட்' என சிங்களத்தில் பலரும் கூவலாம்
இ.போ.ச வாகனம் சிவப்பிலிருந்து வெள்ளையாகியிருக்கும்
வேலணை சந்திப்பு புழுதியோடியேயிருக்கும்
கீரிமலையில் குளித்த யாழ் இனம், புலம் பெயர்ந்துகொண்டே இருக்கும்

ஆனால் நம் யாழில் மட்டும் தமிழ்மண் மனம் சுகந்தம் வீசிக்கொண்டே இருக்கும்!

 

 

மன்னிக்கவும்!

 

"26ல் யாழ்" என்றதும், "26ல் யாழ்ப்பாணம்" என்றே நினைத்துவிட்டேன்! :icon_idea:
 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
வேலணை சந்திப்பு புழுதியோடியேயிருக்கும்

 

 

வங்களாவடிச் சந்தி, புழுதியோடியிருக்கும்!

 

இவ்வளவு விடயங்கள் மதுரைக்குத் தெரிஞ்சிருக்குது எண்டால்.......... :o

 

இந்தச் சின்ன வீடு, சின்ன வீடு எண்டு சொல்லுறாங்களே, அப்படி ஏதாவது..... :D

 

ம்ம்ம்.... மதுரையாரா.. ஒருக்காலும் இருக்காது! :icon_idea:

 

யாழ் தேவி, காங்கேசு வரை ஊர்ந்து செல்லும்

 

காங்கேசன்துறை வரை....!

 

பலாலி விமான தளம் கட்டாந்தரையாக அப்படியே இருக்கும்

 

சீனாவின் இராணுவ விமானங்கள், தரித்து நிற்கும் இடமாக மாறியிருக்கும்! :o

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.