Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பண்டத்தரிப்பில் 300 கடாக்களின் தலை சிதறியது ( படங்கள் இணைப்பு)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பண்டத்தரிப்பு பிரான்பற்று கட்டுவரைப் புளியடி அம்மன் ஆலயத்தில் இன்று சனிக்கிழமை காலை மிருக வேள்வி இடம் பெற்றது. 

ஆலயத்தில் இடம் பெற்ற பொங்கல் படையல்களைத் தொடர்ந்து கடா வெட்டும் நிகழ்வும் இடம் பெற்றது. இதில் சுமார் 300 க்கும் மேற்பட்ட கடாகள் வெட்டப்பட்டுள்ளதுடன் 75 க்கும் மேற்பட்ட சேவல்களும் வெட்டப்பட்டுள்ளன. 

பிரான்பற்று கிராமம் உட்பட சுற்றுக் கிராமங்கள் பலவற்றில் இருந்து கடாகள் உழவுயந்திரங்கள், லாண்ட் மாஸ்டர்கள், வடி வாகனங்கள், பிக்கப் வாகனங்களில் ஊர்வலமாக ஆலயத்துக்குக் கொண்டுவரப்பட்டு பூசைகளின்போது பலியிடப்பட்டுள்ளன. 
Adu-Vlvi.jpg
Adu-Vlvi-01.jpg
Adu-Vlvi-02.jpg
Adu-Vlvi-03.jpg

 
 
www.lankaroad.net

நியானி: கொடூரமான காட்சியுள்ள படம் ஒன்று நீக்கப்பட்டுள்ளது.

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

சில பேர் என்னிடம் கேட்டார்கள் மோடி வெற்றி பெற்றதனால் உங்களுக்கு என்ன ஆகிவிட போகின்றது ஏன் அதிகமாக சந்தோஷப்படுகின்றீர்கள் என்று.....

நான் சொன்னது இரண்டு காரணங்கள்.....

ஓன்று காங்கிரஸ் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டது.......

மற்றது...... இனியாவது இந்தியாவில் இருக்கின்ற பெரும்பான்மை இந்துக்கள் சற்று தலைநிர்ந்து வாழ சந்தர்ப்பம் ஏற்ப்படுத்தப்பட்டு இருப்பது......மற்றும் இந்து மதம் காப்பற்றப்படும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை இருப்பது.... 

 

இது வேறு ஒரு திரியில் சுண்டல் அண்ணா எழுதியது.
 
"மதம்" வானுயர இப்போதே வளர்ந்துவிட்டது.
 
  • கருத்துக்கள உறவுகள்

இந்து மதம் இன்னும் வளரவேணும்.தலைப்பை பாத்திட்டு நான் நினைச்சன் இந்த முறை தேர் சில்லுக்க ஆட்டின்ர தலையை வச்சிட்டாங்களோ எண்டு

இந்த தமிழ்க் காட்டுவாசிகளைத் திருத்த  இன்னுமொரு ஆறுமுக நாவலர் தான் பிறந்து வர வேண்டும்.
 
அது சரி ஒட்டுமொத்த யாழ்ப்பாணத்திலும் 300 கிடாய் ஆடுகள் இருக்குமே ???
 
இந்த வெடிப்புளுகு எண்ணிக்கையை குடுத்தவர் யாரோ ? 
 
 
 
 
.
 

Edited by ஈசன்

இப்படி கோவிலில் வேள்விக்காக வெட்டப்படுவது பங்கு போடபட்டு எல்லாரும் உண்ண பட போவது தானே....  கொன்றால் பாவம் தின்றால் போச்சு...

  • கருத்துக்கள உறவுகள்

கோவில்களில்... பலி கொடுப்பது நிறுத்தப் பட வேண்டும்.
அதுவும்... ஒரு கொலையை, பலர் முன்னிலையில் செய்வது அருவருக்கத்தக்கது.
இதனைப் பார்க்கும் குழந்தைகளின் மனம் கூட... மாற வாய்ப்புண்டு.

கோவில்களில்... பலி கொடுப்பது நிறுத்தப் பட வேண்டும்.

அதுவும்... ஒரு கொலையை, பலர் முன்னிலையில் செய்வது அருவருக்கத்தக்கது.

இதனைப் பார்க்கும் குழந்தைகளின் மனம் கூட... மாற வாய்ப்புண்டு.

 

நான் நினைக்கவில்லை பிள்ளைகளை வைத்துகொண்டு இப்போ மிருக பலி கொடுப்பதாக (ஆனால் அந்த tractor இல் ஒரு சிறு பையனும் இருக்கிறான்)..... கோயிலிலிருந்தும் தள்ளி வைத்தே வெட்டுவார்கள்...இப்போ கோயிலில் வெட்டுவது வாழை மட்டுமே...

 

மடபசங்கள் இரத்தம் எல்லாத்தையும் வீனாகிவிட்டர்கள்...எடுத்து சுண்டி...சுடு பாணோடு சாப்பிட்டால்..அமிர்தமாக இருக்கும் :)

 

இது யாரும் மத வியாபாரிகளின் செய்தியாகவும் இருக்கும்.....

Edited by naanthaan

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தமிழ்க் காட்டுவாசிகளைத் திருத்த இன்னுமொரு ஆறுமுக நாவலர் தான் பிறந்து வர வேண்டும். எந்த ஆறுமுக நாவலர்? அவர் என்ன ஒரு சமுதாய சீர்திருத்தவாதியா? கேள்விபட்டதில்லை!

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவில் எல்லா உயிர்வதைகளுக்கும் பின்னணியில் மதம்பிடித்த மதங்கள் ஆட்சி செய்கின்றன... :(

  • கருத்துக்கள உறவுகள்

வெட்டப்பட்ட கடாக்கள் மீதோ

கழுத்தறுக்கப்பட்ட  சேவல்கள் மீதோ

இரக்கம் வரவில்லை

காரணம்

மனிதர்களை  வெட்டியபோதே

மௌனமாக  இருந்தவர் நாம்...

அத்துடன் மாதத்தில்  நாம் சாப்பிடும் மாமிசம் இதைவிட அதிகம் ...

 

எனக்கிருக்கும் ஒரேஒரு  சந்தேகம்

னக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை

தன் கண்முன்னே நடந்த பாதகங்களை

நினைத்து

மறக்கமாட்டேன் என  சபதமெடுத்து

பாதகங்களை  செய்தவர்களை  கண்முன் நிறுத்தி

இந்த மக்கள் செய்தார்களா?

செய்திருந்தால்..........?

நல்லவிடயம்

 

Edited by விசுகு

வெட்டப்பட்ட கடாக்கள் மீதோ

கழுத்தறுக்கப்பட்ட  சேவல்கள் மீதோ

இரக்கம் வரவில்லை

காரணம்

மனிதர்களை  வெட்டியபோதே

மௌனமாக  இருந்தவர் நாம்...

அத்துடன் மாதத்தில்  நாம் சாப்பிடும் மாமிசம் இதைவிட அதிகம் ...

 

எனக்கிருக்கும் ஒரேஒரு  சந்தேகம்

னக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை

தன் கண்முன்னே நடந்த பாதகங்களை

நினைத்து

மறக்கமாட்டேன் என  சபதமெடுத்து

பாதகங்களை  செய்தவர்களை  கண்முன் நிறுத்தி

இந்த மக்கள் செய்தார்களா?

செய்திருந்தால்..........?

நல்லவிடயம்

 

ஏன் முக்கியமான ஒன்றை விட்டு போட்டியல், பிரபாகரன் அழிந்தால் தான் தமிழனுக்கு விடிவு என்று நியாயப்ப்டுத்திய புண்ணியவான்கள் ஆச்சே !! அதாவது 150,000 பேர் இறந்ததை விட பிரபாகரன் ஒழிந்தான் என்று கொண்டாடிய அற்புதமான இனம் எங்களுடைய இனம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிருகபலி எடுப்பதில் தப்பேயில்லை. :)  :icon_idea:

கருணைக்கு பதில் கொலைகள்.. உங்களுக்கு விடுதலை கிடைக்காமல் போனதுக்கு இதுவும் ஒரு காரணமோ?

  • கருத்துக்கள உறவுகள்

கண்முன்னே 300 ஆடுகளைப் பலியிட்டதால்.. இத்தனை கூப்பாடு. இதே.. மேற்கு நாடுகளில்.. நாளுக்கு ஆயிரக்கணக்கான ஆடுகளும்.. பன்றிகளும்.. மாடுகளும்.. பலியிடப்படுவதோடு.. தேவைக்கு அதிகமான இறைச்சி உற்பத்தி மூலம்.. வறிய நாடுகள் வறுமையில் வாடவும் செய்யப்படுகின்றன.

 

இந்தக் கொடுமையை யார் கணக்கில் எடுக்கினம்.. எந்த மதத்தால்.. இதனை திட்டுறது..???!

 

அதற்காக.. ஜீவகாருணியமற்ற இந்தச் செயலை ஏற்றுக் கொள்ள முடியாது. இதுமட்டுமன்றி எல்லா ஜீவகாருணியமற்ற செயல்களும் தவிர்க்கப்பட வேண்டும். ஆனால்.. நிஜ யதார்த்தம் என்ற ஒன்றுள்ளது.. அதன்படி நின்று பார்த்தால்.. இது எந்தளவுக்கு சாத்தியம்..???! :icon_idea:

பாவம் அந்த அப்பாவி ஜீவன்கள்.

 

தன்னூன் பெருக்கற்கு பிறிதொன்றின் ஊணுண்பான்

எங்ஙெனம் ஆளும் அருள்.

 

- திருவள்ளுவர் -

  • கருத்துக்கள உறவுகள்

geary--4-.jpg

 

நேற்று நான் நன்பருடன் ஒட்டொ ரோட்டில் போகும்போது  இதுபோன்ற மூன்று லொறிகளில் (இதுவல்ல) நிறைய பன்றிகள் போய்க்கொண்டிருந்தது. நன்பர் சொன்னார் அண்ணே ! எல்லாரும் ஸ்லொட்டர் கவுசுக்கு (வெட்டுமிடம்) போகினம். நாளைக்கு கடைகளில் தொங்குவினம் என்றார்.

நான் சொன்னன் : வடிவாய்ப் பாரும். பண்டிக்கு வேர்க்காமல் ஃபான் போட்டுக் கொண்டு போறாங்கள். அதனால் காட்டுக்க விட்டு வளர்க்கப் போகினம். என்று.கொஞ்ச நேரன் அவர் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார் , கதைக்கவேயில்லை.

 

ஊரில வீட்டில வளர்க்கிற கிடாய்கள் வேள்விக்குப் போகாட்டில் , சுல்தான்ர கடைக்குப் போகப் போகுது. காரணம் விவசாயம்போல் அதுவும் ஒரு குடிசைத் தொழில். வீடுகளின் சிறு வருமானம். அவ்வளவுதான்...!

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

காட்டுமிராண்டித்தனம்... சாதாரணமாகக் கொல்லப்படுவது என்பது வேறு, மதத்தின் பெயரால் செய்யப்படுவது வேறு. மதத்தின் பெயரால் செய்யப்படப்போவது, காலத்துக்குக் காலம் ஊக்குவிப்பதோடு, அதற்கு நியாயப்படுத்தலும் கிடைக்கும். ஆனால் உணவுக்காகக் கொல்லப்படுவது என்பது காலத்தால் மாறிவிடக்கூடியது..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கூக்குரலிடுபவர்கள் முதலில் மாமிசம் உண்பதை நிறுத்துங்கள்....

அதன் பின் மதத்தின் பெயரால் மிருகவதை பற்றி பேசலாம்.

இயந்திர உற்பத்திசாலைகள் போல் இறைச்சி உற்பத்திசாலைகள் நிறையவே இருக்கின்றன.

அங்கு ஆறறிவு மனிதனின் வாய் உருசிக்காக ஐந்தறிவு ஜீவராசிகளின் மாதக்கணக்காண உயிர்ப்போராட்டங்களை கண்டு களியுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பெரியவர் யாரைச் சொல்கின்றார் எனத் தெரியவில்லை. இருப்பினும் கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் சைவ உணவுப்பிரியனாகவே இருப்பதால், இந்தக் காட்டுமிராண்டித்தனம் ப்றறிக் கதைக்க முழு உரிமையும் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

வாதம் என்று செய்தால்.... தாவரமும் உயிரி தானே. அதுக்கு இரத்தம் ஓடாது என்பதற்காக.. வலிக்காது என்பதற்காக.. அதைக் கொல்வது மட்டும்... ஏற்புடையதா..???!

 

அதற்காக.. இந்தக் காட்டிமிராண்டித்தனத்தை செய்யனுன்னு அவசியம் ஏதும் இல்லை..! மனிதன் ஜீவகாருணியம் உள்ளவனாக இருக்க வேண்டும்..!

 

பூமிப்பந்தில்.. இரையும்.. இரைகவ்வுதலும் நடந்தால் தான் உயிரின சுழற்சி.. உயிர் இரசாயன சுழற்சி.. நிகழ முடியும். அறிவியல் பூர்வமாக நோக்கினால்.. இதில் தப்புச் சொல்ல முடியாது. ஆனால்.. இந்தக் கூட்டுக் கொலை என்பது.. இயற்கைக்கு மாறான படுகொலை.. ஜீவகாருணியமற்ற செயலாகும்..!

  • கருத்துக்கள உறவுகள்

http://www.history.com/topics/why-did-the-dinosaurs-die-out

 

65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் டைனசோர்கள் இறந்துவிடுகின்றன. விண்கல் மோதியதால் ஏற்பட்ட காலநிலை மாற்றமே அவற்றின் அழிவுக்குக் காரணம் என்பது ஒரு கோட்பாடு மட்டுமே. இதற்கும் உறுதியான சான்றுகள் இல்லை.

 

இந்தப் பெரிய டைனசோர்கள் இறந்த பின்னால் மனிதனின் ஆதிக்கம் படிப்படியாக பூமியில் ஏற்படுகிறது. ஆறு அறிவு கொண்ட ஒரே இனம் இந்த மனிதன்தான். மனிதனுக்கு மட்டும் எவ்வாறு இந்த சிறப்பு கிட்டியது? நிகழ்தகவின் அடிப்படையில் இதற்கு சாத்தியம் மிகக் குறைவே.. இது எவ்வாறு ஏற்பட்டது? இதைத்தான் நாங்கள் சற்று ஆழமாகச் சிந்திக்க வேண்டும். :D

 

பூவுலகில் டைனசோர்களின் அழிவு வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்டது என்கிற இன்னொரு கோட்பாடும் உண்டு. அதாவது, பிரியோசனமற்ற இராட்சத டைனசோர்கள் அழிக்கப்பட்டு, மூளை வலுவுள்ள மனித இனம் குரங்கிலிருந்து மாற்றிப் படைக்கப் பட்டிருக்கலாம் என்கிறது அந்தக் கோட்பாடு.  :huh:

 

இந்த மாற்றங்களை நிகழ்த்தியவர்கள் நம்மைவிட அதிகூடிய வளர்ச்சியைப் பெற்றவர்களாக இருந்திருக்க வேண்டும். அவர்கள் ஏலியன்களாக இருக்கவே வாய்ப்பு உள்ளது.  :blink:

 

இத்தகைய ஏலியன்கள் பல காலங்கள் பூவுலகுக்கு வருவதும், போவதுமாக இருந்துள்ளார்கள். :huh: குரங்கு ஆராய்ச்சி எந்த அளவில் போகிறது என்பதை கண்காணிக்க வேண்டுமல்லவா.. மனிதனும் உருவாக்கப்பட்டு அவனால் கிரகிக்கும் தன்மையும் வளர்ந்துகொண்டு வருகிறது.

 

இந்த நிலையில், மனிதன் தான் காண்பவற்றை, செவி வழியாகவும், கல்லில் பொறித்தும் வருகிறான். அவற்றில், வானத்தில் இருந்து பறந்து வந்த இராட்சதப் பறவை (பறக்கும் தட்டு), அதி சக்தி வாய்ந்த கடவுள்கள் என்று குறிப்பிட்டு வருகிறான். இவர்களால் நினைத்த மாத்திரத்தில், புயல், வெள்ளம், சுட்டெரிக்கும் வெயில் போன்றவற்றை நிகழ்த்த முடிகிறது என்பதை அறிகிறான். :huh: அதனால் அவர்களை தங்களை விட உயர்வான கடவுளர் நிலையில் வைத்து தொழுகிறான்.  :(

 

இவ்வாறாக, தங்களது ஆராய்ச்சிகள் முடிவுற்றதும் ஏலியன்கள் நிரந்தரமாக திரும்பிச் சென்றுவிடுகிறார்கள். இன்னுமொரு காலத்தில் (கலியுகத்தில்) திரும்ப வருவோம் என சொல்லிவிட்டு.. :D இவ்வாறாக நம்மை உருவாக்கிய ஏலியன்களைத்தான் நாம் சிவன், சக்தி, முருகன், அல்லா இயேசு கர்த்தர் என தொழுது வருகிறோம்.  :D

 

பி.கு: மனிதனின் வேட்டைப் பல் மிருகங்களைப் போல் அல்லாமல் குறைந்த அளவு வளர்ச்சியுடன்தான் காணப்படுகிறது. ஆகவே, எங்களை இறைச்சியை சிறிதளவு உண்ணும்வகையில் ஏலியன்கள் படைத்துவிட்டுப் போயுள்ளார்கள். :D அல்லது ஏலியன்களை சுழித்துவிட்டு நாம் இறைச்சி சாப்பிட ஆரம்பித்ததால் பரிணாம வளர்ச்சியில் வேட்டைப்பல் சற்று முளைத்து வருகிறது.. :lol:

 

திருத்திய காரணம்: பொருட்பிழை நீக்கப்பட்டுள்ளது.. 

Edited by இசைக்கலைஞன்

இந்த தமிழ்க் காட்டுவாசிகளைத் திருத்த இன்னுமொரு ஆறுமுக நாவலர் தான் பிறந்து வர வேண்டும்.

எந்த ஆறுமுக நாவலர்? அவர் என்ன ஒரு சமுதாய சீர்திருத்தவாதியா? கேள்விபட்டதில்லை!

. நாவலர் பெருமான் சைவநெறி தழைத்தோங்கவும், தமிழ் மொழி செழித்து வளரவும் பெரும் பணியாற்றியவராவார். அவர் யாழ்ப்பாணம், நல்லூர் கந்தப்பிள்ளை, சிவகாமி அம்மையார் ஆகிய இருவருக்கும் புதல்வனாக 1822ம் ஆண்டு அவதரித்தார். இலங்கையும், இந்தியாவும் அந்நியர் ஆட்சியின் கீழ் இருந்த போது சைவமும், தமிழும் பெரும் ஆபத்துக்களை எதிர்நோக்கிய காலப் பகுதியிலே தோன்றியவர் தான் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர். பெற்றோர் அவருக்கு இட்ட பெயர் ஆறுமுகம்.வரலாற்றுக்கு முற்பட்ட சமயமாகவும், ஈழம் வாழ் மக்களின் பெரும்பாலானோரது உள்ளத்துள் ஒளி விளக்காய் சுடர்விட்டிலங்குவதுமான சைவ சமயம் அந்நியரது செல்வாக்கு வலிவுற்றிருந்த காலத்தில் சிறிது நலிவுற்றிருந்தது. இலங்கைக்கு வர்த்தக நோக்கோடு வந்த அந்நிய ஆட்சியாளர் அரசியலாதிக்கத்தைக் கைப்பற்றவும் தற்சமயம் கொள்கையை பரப்பவும் எண்ணங்கொண்டு கல்வி வழிப்பிரசாரம் செய்யத் தலைப்பட்டனர். அந்நியவெற்று நாகரீகப் போக்கில் ஈடுபாடு கொண்ட மக்கள் சுயமசய கலாசார வழிகளை மறந்து வாழ்வாராயினர்.

இவ்வாறு சைவ சமயம் நலிவுற்றிருந்த வேளையில் நாவலர் பெருமான் தனது சொல்லாலும் எழுத்தாலும் மக்கள் அகக் கண்களைத் திறந்து அவல நிலையை அவர்களுக்கு உணர்த்தியதோடு சைவமும், தமிழும் மீண்டும் புத்துயிர் பெறுவதற்காக தம்மாலியன்ற அத்தனை பணிகளையும் செய்தார். அவரின் கல்விப் புலமையையும், நாவன்மையை யும், சைவத் தமிழ் பணிகளையும் பாராட்டி திருவாடுதுறை ஆதீனம் அவருக்கு ‘நாவலர்’ என்ற பட்டத்தை வழங்கியது. சைவம் காத்த நாவலர் பெருமானை சைவமக்கள் ஐந்தாம் சமயக்குரவர் எனப் போற்றுகின்றனர்.

தமது இளமைப் பருவத்திலே நல்லூர் சுப்பிரமணிய உபாத்தி யாயர், இருபாலை சேனாதிராய முதலியார், நல்லூர் சரவணமுத் துப் புலவர் ஆகியோரிடம் குருகுல முறைப்படி இலக்கிய, இலக்கணங்களையும், சைவசமயம், சாத்திரங்களையும், பயின்று வட மொழியையும் பயின்றார். யாழ்ப்பாணம் வெஸ்லியன் மெதடிஸ்ட் மிஷன் மத்திய கல்லூரியில் ஆங்கில மொழியைக் கற்றதுடன் அக்கல்லூரியில் சிலகாலம் ஆசிரியராகவும் பணியாற்றினார்.

சவ சமயத்தை அழிய விடாது பாதுகாக்க நாவலர் பல முயற்சிகளை மேற்கொண்டார். சைவ சமயத்தவர் ஒரு சிலரிடம் காணப்பட்ட தவறான பழக்க வழக்கங்கள், செயல்கள் என்பவற்றை நீக்க முயன்றார். சைவப் பாடசாலைகளை நிறுவினார். அவர் நிறுவிய முதலாவது பாடசாலை வண்ணார்ப்பண்ணை சைவப் பிரகாச வித்தியாசாலையாகும். அது 1848ம் ஆண்டில் நிறுவப் பெற்றது. தமிழ் நாடு சிதம்பரத்திலும் சைவப் பிரகாச வித்தியாசாலை எனும் பெயரில் பாடசாலையொன்றை நிறுவி அங்கு போதிப்பதற்கு சைவசமய நூல்களைப் பிரசுரித்தார். இதற்காக சென்னையிலும் யாழ்ப்பாணத்திலும் அச்சுக்கூடங்களை நிறுவினார்.

சைவ வினாவிடை, பாலபாடம், பெரிய புராண வசனம், கந்தபுராண வசனம், திருவிளையாடற் புராண வசனம் முதலான பல நூல்களை எழுதி அச்சிட்டு வெளியிட்டார்.

ஏடுகளில் எழுதப்பட்டிருந்த பல பழந்தமிழ் நூல்களைப் பரிசோதித்து அச்சில் பதிப்பித்தவரும், அத்துறையில் ஏனையோருக்கு வழி காட்டியாக விளங்கியவரும் நாவலர் பெருமானே ஆவார். சைவத் தமிழ்ப் பணிகளை இடையூறின்றி செய்வதற்காக தமக்குக் கிடைத்த உத்தியோகத்தையும் தியாகம் செய்தவர் நாவலர் பெருமான். தமது வாழ்நாள் முழுவதும் பிரம்சாரியாகவே வாழ்ந்தவர். சிவாலயங்களிலும், மடாலயங்களிலும் சைவ சமய உண்மைகளை எடுத்துக் கூறி பிரசங்கம் செய்தல், புராணப் படலம் செய்தல் என்பவற்றினால் சைவப் பிரசாரம் செய்தவர் நாவலர் அத்துடன் துண்டுப் பிரசுரங்களையும் வெளியிட்டு சைவத்தின் உண்மையை விளக்கி சைவ மக்களிடையே புகுந்துள்ள மாசு நீக்கிப் புறச் சமயத்தவரின் தீவிர பிரசாரத்தை தடுக்க முற்பட்டவர்.

திருக்கேதீஸ்வரம், கீரிமலைச் சிவன் கோயில் என்பனவற்றின் தொன்மைச் சிறப்புக்களை மக்களுக்கு எடுத்துக் கூறி அவற்றைப் புனரமைத்து நித்திய, நைமித்திய பூஜைகளுக்கு வழிவகுக்குமாறு சைவ மக்களுக்கு விஞ்ஞாபனம் விடுத்தார். இதன் காரணமாக ஆலயங்கள் மீண்டும் அமையப் பெற்றன. இறைவனின் இயல்புகளும், இறை நெறியின் அறப்பண்புகளும் கற்பிக்கப்படுகின்றன. எமது கலைத்திட்டத்திலே சமயக் கல்விக்கு இன்று முக்கியத்துவம் தரப்படுகின்றது. இதனை ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே உணர்ந்து எங்கள் நாவலர் பெருமான் நடைமுறைப்படுத்தினார். இலவசக் கல்வி, இலவச நூல்கள், தாய்மொழிக் கல்வி என்று நாடு பெருமைப்படும் கல்விச் சாதனைகளை அன்றே அவர் நிலைநாட்டினார்.

கல்வியழகும், தெய்வ நெறியும், பொலிந்து விளங்கும் ஒரு சமூகத்தைக் காணத்துடித்தார். அதற்காக கடுமையாக அவர் உழைத்தார். அவரது வாழ்வின் இலட்சியமே இதுவாக இருந்தது. வசதியான உத்தியோகத்தைப் பெறும் வாய்ப்பிலிருந்தும் அவர் அதனை ஏற்கவில்லை. இல்வாழ்வில் புகவில்லை. இவையனைத்துக்கும் காரணம் சைவ சமயத்தையும் அதற்குக் கருவியாகிய கல்வியையும் வளர்த்தல் வேண்டும் என்ற பேராசை தம்மிடம் குடிகொண்டிருந்தமை யாகும் என ஒரு சந்தர்ப்பத்திலே தம் உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்தியுள்ளார் நாவலர்.

நெற்றியிலே நீறுபூசவும், வாழையிலையிலே அமுதுண்ணவும் கூட நம்மவர்கள் அஞ்சியஞ்சி வாழ்ந்து கொண்டிருந்த அவலங்கள் மாறவும், அன்று அந்நியரின் இன்னல் தாங்காது நாட்டை விட்டே வெளியேறிய ஞானப்பிரகாசர் போன்றோரின் பிரார்த்தனைகள் பலிக்கவும் நாவலர் எழுந்தார். எங்கள் கலாசாரம் பிழைத்துக் கொண்டது. சிவநெறி தழைத்து முன்பிருந்த எங்கள் சமயாச்சாரியார்கள் தாம் தரிசனம் செய்யப் போன தலங்களிலெல்லாம் பதிகங்கள் அருளிச் செய்தார்கள். இவரோ தாம் போன் இடங்களிலெல்லாம் லோகோபகாரமாகச் சைவப் பிரசங்கங்களைச் செய்து வந்தார். சமயப் பிரசங்கங்களுடன் சமயா சாரியார்களின் தேவார திருமுறைகளையும் விளங்கச் செய்தவர் நாவலர். அந்த நன்நெறிப் பயணத்திலே தான் எத்துணை இடர்கள், ஆதரவில்லாத அந்நியர்கள் இழைத்த இன்னல்கள்.

ஒரு புறம் அடியவர் போன்று வேஷமிட்டு ஏமாற்றும் நம்மவர் செய்கை, மறு புறம் அனைத்தை யும் தம் உறுதியான தெளிந்த உள்ளத்தினால் வென்றார். நாவலர் “நிலையில்லாத என் சரீரம் உள்ளபோதே என்கருத்து நிறைவேறுமோ நிறைவேறாதோ எனும் கவலை என்னை இரவு பகலாக வருத்துகின்றது என்று கூறிய நாவலர் பெருமானின் கருத்தின்படி தமிழ்க் கல்வியும், சைவ சமயமும், அபிவிருத்தியா வதற்கு கருவிகள் மற்றும் முக்கிய ஸ்தலங்கள் தோறும் வித்தியா சாலை தாபித்தலும் சைவப் பிரசாரம் செய்வித்தலு மாகும். இவற்றின் பொருட்டு சிரமமாகக் கற்று வல்ல உபாத்தியாயர்களும், சைவப் பிரசாரகர்களுமே தேவைப்படுவார்கள் என்ற நாவலரின் ஏக்கம் தீர இனைய நாவலர்கள் பலர் எழுந்தார்கள், பெருமானின் பணிகளிலே இவர்களும் கலந்தார்கள்.

1894ம் ஆண்டிலே நல்லூர் கந்தசாமி கோயிலிலே நிகழ்ந்த ஒரு அற்புதக் காட்சியை நாவலர் சரித்திரத்திலே பின்வருமாறு வர்ணிக்கின்றார் கனகரத்தினம் பிள்ளை, கந்தசாமி கோயிற் திருவிழா சமீபித்தபடியால் தேவாரத் திருக் கூட்டச் சிறப்பையும், தேவாரம் முதலியவை திருவிழா காலத்திலே சுவாமிக்குப் பின்னாக ஓதுவதற் சனங்களுக்குண்டாகும் கடவுட் பக்தியையும் மக்களுக்கு எடுத்துக்காட்ட நினைத்து திருவாவடுதுறையினின்று ஓதவார் சிலரை அழைப்பித்து திருவிழா காலத்திலே அவர்களுக்கும் இங்குள்ள மற்றைய சைவர்களுக்கும் நெற்கு வீதி மடத்திலே புண்ணியவான்கள் சிலரைக் கொண்டு மகேஷ்வர பூஜை செய்வித்து, சுவாமி வீதியிலே உற்சவங் கொண்டருளும் போது சுவாமிக்குப் பின்னாக அவர்களைக் கொண்டு தேவாரம் ஓதுவித்துக் கொண்டு வந்தார். இவர்கள் தமிழ் வேதமாகிய தேவாரத்தை ஓத அதனைக் கண்ட பிராமணர் தாங்களும் வந்து சுவாமிக்குப் பின்னாக வேதம் ஓதுவாராயினார்கள்.

நாவலரும் விபூதி உந்தூறனஞ் செய்து திரிபுண்டரந் தரித்து தலையிலேய சிரமாலையும் கழுத்திலே கண்டிகையுங் கையிலே பெளத்திர முந் தரித்து யாவர்க்கும் பக்தியை விளைவிக்கத்தக்க சிவ வேடப் பொலிவோடு திருக்கூட்டத் தலைவராய் நின்றார். அத்திருக்கூட்டத்தின் சிறப்பை என்னென்று சொல்வோம்! எதற்கொப்பிடுவோம், சுப்பிரமணிய பெருமானின் அவதாரமாய் விளங்கிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் பதினாராயிரம் திருக்கூடத்தோடு தோற்றிய சிறப்புக் கொப்பிடலாம்.

தம் வாழ்நாள் பூராவும் தமிழுக்கும் சைவத்துக்கும் சேவையாற்றி வந்த நாவலர் பெருமான் 1879ம் ஆண்டு கார்த்திகை மாதம் மக நட்சத்திரத்தில் இறை பதம் அடைந்தார்.

தமிழுக்கும், சைவத்துக்கும் அரும் தொண்டாற்றிய நாவலர் பெருமானை அவரது குரு பூசை தினத்தில் நினைத்து வழிபட்டு அவர் பெருமை பேசுவோமாக.

www.swisstamilsangam.blogspot.com

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.history.com/topics/why-did-the-dinosaurs-die-out

 

65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் டைனசோர்கள் இறந்துவிடுகின்றன. விண்கல் மோதியதால் ஏற்பட்ட காலநிலை மாற்றமே அவற்றின் அழிவுக்குக் காரணம் என்பது ஒரு கோட்பாடு மட்டுமே. இதற்கும் உறுதியான சான்றுகள் இல்லை.

 

இந்தப் பெரிய டைனசோர்கள் இறந்த பின்னால் மனிதனின் ஆதிக்கம் படிப்படியாக பூமியில் ஏற்படுகிறது. ஆறு அறிவு கொண்ட ஒரே இனம் இந்த மனிதன்தான். மனிதனுக்கு மட்டும் எவ்வாறு இந்த சிறப்பு கிட்டியது? நிகழ்தகவின் அடிப்படையில் இதற்கு சாத்தியம் மிகக் குறைவே.. இது எவ்வாறு ஏற்பட்டது? இதைத்தான் நாங்கள் சற்று ஆழமாகச் சிந்திக்க வேண்டும். 

 

பூவுலகில் டைனசோர்களின் அழிவு வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்டது என்கிற இன்னொரு கோட்பாடும் உண்டு. அதாவது, பிரியோசனமற்ற இராட்சத டைனசோர்கள் அழிக்கப்பட்டு, மூளை வலுவுள்ள மனித இனம் குரங்கிலிருந்து மாற்றிப் படைக்கப் பட்டிருக்கலாம் என்கிறது அந்தக் கோட்பாடு.  

 

இந்த மாற்றங்களை நிகழ்த்தியவர்கள் நம்மைவிட அதிகூடிய வளர்ச்சியைப் பெற்றவர்களாக இருந்திருக்க வேண்டும். அவர்கள் ஏலியன்களாக இருக்கவே வாய்ப்பு உள்ளது.  :blink:

 

இத்தகைய ஏலியன்கள் பல காலங்கள் பூவுலகுக்கு வருவதும், போவதுமாக இருந்துள்ளார்கள். :huh: குரங்கு ஆராய்ச்சி எந்த அளவில் போகிறது என்பதை கண்காணிக்க வேண்டுமல்லவா.. மனிதனும் உருவாக்கப்பட்டு அவனால் கிரகிக்கும் தன்மையும் வளர்ந்துகொண்டு வருகிறது.

 

இந்த நிலையில், மனிதன் தான் காண்பவற்றை, செவி வழியாகவும், கல்லில் பொறித்தும் வருகிறான். அவற்றில், வானத்தில் இருந்து பறந்து வந்த இராட்சதப் பறவை (பறக்கும் தட்டு), அதி சக்தி வாய்ந்த கடவுள்கள் என்று குறிப்பிட்டு வருகிறான். இவர்களால் நினைத்த மாத்திரத்தில், புயல், வெள்ளம், சுட்டெரிக்கும் வெயில் போன்றவற்றை நிகழ்த்த முடிகிறது என்பதை அறிகிறான்.  அதனால் அவர்களை தங்களை விட உயர்வான கடவுளர் நிலையில் வைத்து தொழுகிறான்.  :(

 

இவ்வாறாக, தங்களது ஆராய்ச்சிகள் முடிவுற்றதும் ஏலியன்கள் நிரந்தரமாக திரும்பிச் சென்றுவிடுகிறார்கள். இன்னுமொரு காலத்தில் (கலியுகத்தில்) திரும்ப வருவோம் என சொல்லிவிட்டு.. :D இவ்வாறாக நம்மை உருவாக்கிய ஏலியன்களைத்தான் நாம் சிவன், சக்தி, முருகன், அல்லா இயேசு கர்த்தர் என தொழுது வருகிறோம்.  :D

 

பி.கு: மனிதனின் வேட்டைப் பல் மிருகங்களைப் போல் அல்லாமல் குறைந்த அளவு வளர்ச்சியுடன்தான் காணப்படுகிறது. ஆகவே, எங்களை இறைச்சியை சிறிதளவு உண்ணும்வகையில் ஏலியன்கள் படைத்துவிட்டுப் போயுள்ளார்கள். :D அல்லது ஏலியன்களை சுழித்துவிட்டு நாம் இறைச்சி சாப்பிட ஆரம்பித்ததால் பரிணாம வளர்ச்சியில் வேட்டைப்பல் சற்று முளைத்து வருகிறது.. :lol:

 

திருத்திய காரணம்: பொருட்பிழை நீக்கப்பட்டுள்ளது..

 

 சில தினங்களுக்கு முன் இந்த பதிவை வாசித்தேன். அதன் பின் தினசரி ஒரு தடவையாவது ஏலியன்களை பற்றி சிந்தித்து பார்ப்பேன். ஒரு வித்தியாசமான முறையில் சிந்திக்க வைத்த கருத்துக்கள். :icon_idea:
 
நன்றி இசைக்கலைஞன். :)
 
You have posted a message with more emoticons than this community allows. Please reduce the number of emoticons you've added to the message
 
 
இவையின்ரை கண்டறியாத சட்டத்தாலை உங்கடை பதிவிலையிருந்து கொஞ்ச முகக்குறியளை நீக்கியிருக்கிறன்...மன்னிக்கவும் :(
  • கருத்துக்கள உறவுகள்

சில தினங்களுக்கு முன் இந்த பதிவை வாசித்தேன். அதன் பின் தினசரி ஒரு தடவையாவது ஏலியன்களை பற்றி சிந்தித்து பார்ப்பேன். ஒரு வித்தியாசமான முறையில் சிந்திக்க வைத்த கருத்துக்கள். :icon_idea:

 

நன்றி இசைக்கலைஞன். :)

 

You have posted a message with more emoticons than this community allows. Please reduce the number of emoticons you've added to the message

 

 

இவையின்ரை கண்டறியாத சட்டத்தாலை உங்கடை பதிவிலையிருந்து கொஞ்ச முகக்குறியளை நீக்கியிருக்கிறன்...மன்னிக்கவும் :(

அட.. முகக்குறி எல்லாம் ஒரு பிரச்சினையா? :D அதிகமாக அனுமதித்தால் வழங்கியின் பாரம் கூடிவிடும்.. (நிழலி) :icon_idea: 

 

நீங்கள் ஒருத்தராவது வாசித்து திறந்த மனத்துடன் பதில் சொன்னதே பெரும் திருப்தி.. :huh:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.