Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனைவியை அடிப்பது கணவனின் உரிமையா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மனைவியை அடிப்பது கணவனின் உரிமையா?

- இந்துஜா ரகுநாதன்

564xNxwife_1985727g.jpg.pagespeed.ic.U7T

ஜெர்மனியில் தேனிலவைக் கொண்டாட புதுமணத் தம்பதி சுகன்யாவும் அசோக்கும் (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) சென்றிருந்தனர். ஊரைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பிய இருவரும் ஹோட்டல் வாசலில் காருக்காகக் காத்திருந்த போது, அங்கிருந்த ஜெர்மானியர் ஒருவர் சுகன்யாவைப் பார்த்து, “யூ லுக் வெரி பியூட்டிஃபுல் இன் திஸ் இண்டியன் டிரெஸ்” (நீங்கள் இந்த இந்திய உடையில் மிக அழகாக இருக்கிறீர்கள்) என்று சொன்னார். அதற்கு நன்றி கூறிவிட்டு திரும்பிய சுகன்யாவுக்கு விழுந்தது கன்னத்தில் ஒரு அறை. அறைந்தது அவளுடைய கணவன் அசோக். சற்றும் எதிர்பாராமல் வந்த அடியின் அதிர்ச்சியில் உறைந்த சுகன்யா தான் செய்த தவறு என்ன என்று புரியாமல் நின்றாள். “எவனோ ஒருவன் உன்னைப் புகழ்ந்ததற்கு நன்றி வேறு சொல்கிறாயா?” என்று அனைவர் முன்பும் திட்டித் தீர்த்துவிட்டு மீண்டும் ரூமுக்கே கோபமாகத் திரும்பச் சென்றான் அசோக். கண்ணீர் மல்க அவன் பின்னால் ஓடினாள் சுகன்யா. பல கனவுகளோடு அடியெடுத்து வைத்த புதுவாழ்க்கையின் ஆரம்பத்திலேயே நடந்த இந்த நிகழ்வைத் திருமணமாகி 12 வருடங்கள் ஆகியும் சுகன்யாவால் மறக்க முடியவில்லை. இது சினிமாவில் பார்க்கும் காட்சிபோலத் தோன்றினாலும் உண்மையாக என் தோழிக்கு நடந்தது என்பதை என்னாலும் நம்ப முடியவில்லை.

கன்னத்தில் விழுந்த அறை

கிட்டத்தட்ட 18 வருடங்களுக்குப் பிறகு என்னுடன் பள்ளியில் படித்தவர்களைச் சந்திக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. பள்ளித் தோழிகள் 12 பேர் சந்தித்ததில் எல்லாருக்கும் ஏக சந்தோஷம். பள்ளி நாட்களின் நினைவுகளைப் பரிமாறிக்கொண்ட பின் அவரவரின் தற்போதைய வாழ்கையைப் பற்றி பேசத் தொடங்கினோம். என் தோழிகளில், மூன்று பேருக்கு திருமணமாகி விவாகரத்து ஆகி இருந்தது. மற்றவர்களின் மண வாழ்க்கை ஒவ்வொன்றும் வெவ்வேறாக இருந்தது. இதில் சுகன்யாவும் ஒருவர். சுகன்யாவின் கணவர் நன்கு படித்த பெரிய தொழிலதிபர் என்றாலும், தேனிலவில் ஆரம்பித்த அடி இன்றும் தொடர்வதாகச் சொல்லிக் குமுறினார். மற்றொரு தோழி கல்பனாவின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கணவரும் இதில் மாறுபடவில்லை.

கல்யாணமாகி முதன்முதலில் வெளியே சென்றபோது, கால் தடுக்கிக் கீழே விழுந்தபோது அவளுக்குக் கை கொடுத்து உதவவில்லை. ஏன் பார்த்து நடக்கவில்லை என்று கேட்டும் கன்னத்தில் அறைந்தார் என்று கண் கலங்கிச் சொன்னாள். பெற்றோரிடம் இது பற்றிச் சொன்னதற்கு, குடும்பம் என்றால் சற்று பொறுத்துதான்போக வேண்டும் என்றே சுகன்யா, கல்பனா இருவருக்கும் அறிவுரை கிடைத்திருக்கிறது.

தொடரும் குடும்ப வன்முறை

சென்னை மாநகரில் பிறந்து, வளர்ந்து, பிரபல பெண்கள் பள்ளியில் படித்த என் தோழிகள் திருமணமாகி, கணவரின் அடி உதையைப் பொறுத்துப் போகிறார்கள் என்பதைச் சற்றும் நம்ப முடியவில்லை. பள்ளிப் படிப்புக்குப் பிறகு பி.ஈ., எம்.எஸ், எம்.பி.ஏ. என்று ஐ.ஐ.டி. மற்றும் அமெரிக்காவில் உள்ள பொறியியல் கல்லூரியில் படித்துவிட்டுப் பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிகிறவர்கள் இவர்கள். தத்தம் துறைகளில் சாதித்த இந்தப் பெண்கள், கணவரின் வன்முறையைச் சகித்து வாழ்வது தங்கள் குழந்தை மற்றும் பெற்றவர்களுக்காக மட்டும்தான். இதில் ஒரே ஒரு ஆறுதல் என்னவென்றால் திருமண வாழ்வின் சில வருடங்களுக்குப் பின் கணவரின் தாக்குதலை எதிர்க்கத் தொடங்கியதால் வன்முறையின் அளவு சற்று குறைந்துள்ளது. தினம் தினம் வீட்டு வேலையோடு, குழந்தையைத் தயார் செய்து பள்ளிக்கு அனுப்பிவிட்டு, அலுவல் வேலையையும் முடித்து வீடு திரும்பும் எத்தனையோ படித்த பெண்களுக்கும் இதுதான் நடக்கிறதோ என்ற பய உணர்வு ஏற்படுகிறது.

பொறுத்துப் போகும் பெண்கள்

விவாகரத்து என்ற சொல்லைக் கேட்ட உடனே தொட்டதுக்கெல்லாம் டைவர்ஸ், பிரிந்துவிடுவது என்று ஏளனப் பேச்சு பேசுவோருக்குப் புரியாது பெண்களை அந்த முடிவுக்குத் தள்ளிய காரணங்கள் என்னவென்று. என் தோழிகளில் விவாகரத்து ஆன மூவரில், ஒருவரின் கணவர் திருமணத்திற்கு முன்பே அமெரிக்காவில் வேறு ஒரு பெண்ணை மணம் செய்து கொண்ட உண்மை தெரியவந்தது. மற்ற இருவரின் கணவர்களும் குடித்துவிட்டு வந்து தினம் தினம் அடி உதை, சந்தேகம் என்று சித்திரவதை செய்ததால் பொறுத்துக்கொள்ள முடியாத சூழ்நிலையில் கணவனை விட்டுப் பிரிந்து வாழ்கின்றனர். என் தோழிகள் 12 பேரில் ஐவர் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டார்கள் படித்த நகரப் பெண்களில் பலரும் ஏதோ ஒரு வகையில் கணவனால் ஒடுக்கப் படுகிறார்கள் என்று தெரிகிறது.

எப்போதும் கிடைக்கும் அறிவுரை

பலவகை சுதந்திரத்தைப் பற்றி பேசத் தொடங்கியுள்ள இந்த நூற்றாண்டிலா படித்த பெண்கள் மீதும் வன்முறை என்று பலர் நம்பக்கூட மறுப்பர். ஆனால் உண்மை இதுவே. குழந்தைகளின் எதிர்காலம், பெற்றோரின் அறிவுரை, சமூகத்தின் பார்வை இவை அனைத்திற்காகவும் அன்றும், இன்றும் பெண்கள் அடங்கி, தாங்கிக்கொண்டுதான் வாழ்கின்றனர். ஒரே ஒரு வித்தியாசம் இன்றுள்ள பெண்கள் படிப்பு, உயர் பதவி என்ற கூடுதல் தகுதிகளோடு அதே சூழ்நிலையில் உள்ளனர்.

மனைவியை அடித்து, உதைக்கும் ஆண்களில் பலரும் மேற்படிப்பு படித்து, வெளிநாடுகளுக்குச் சென்று, பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிந்தவர்களாக உள்ளனர். பணியிடத்தில் தங்களோடு பணிபுரியும் பெண்களிடம் காட்டும் அதே மரியாதையை மனைவியிடம் காட்டத் தவறுவது ஏன்? படிப்பறிவு என்பது ஒருவனுக்குப் பாட அறிவோடு, சமூகப் பார்வை, ஒழுக்கம், சக மனித மரியாதை போன்றவற்றைப் போதிக்க தவறியதைத்தான் காட்டுகிறது. சிறு வயதிலிருந்து ஆண்மகனை வளர்க்கும் தாய் ஒரு பெண்ணிடம் குறிப்பாக மனைவியிடம் நடந்துகொள்ளும் முறையை, நேயத்தைக் கற்பிக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. குழந்தையைக்கூட கைநீட்டி அடிக்கத் தடைவிதித்துள்ள பல நாடுகள் மத்தியில், பொது இடம் என்றும் பாராமல் சர்வ சாதாரணமாக மனைவியை அடித்துவிட்டுப் போகும் கணவன்களைப் பார்க்கும்போது வெட்கக்கேடாக உள்ளது.

மனைவிக்கு மரியாதை

சாலையோரத்தில் மனைவியை அடித்து உதைக்கும் பல கணவன்களைக் கண்டும் காணாமல் போவதன் அர்த்தம் இப்போதுதான் புரிகிறது. குடிசையில் வாழ்பவன் வீட்டுக்கு வெளியே மனைவியை அடிக்கிறான், அதைத் தாண்டிச் செல்பவன் பெரிய அடுக்குமாடி ஃபிளாட்டில் நான்கு சுவருக்குள் அதே கொடுமையைப் புரிகிறான் என்று. வேலையிலிருந்து களைப்புடன் திரும்பும் கணவன், கோபம் வந்து கை ஓங்கலாம் என்றால் வீட்டு வேலையோடு வேலைக்கும் சென்று திரும்பிவரும் பெண்களுக்கும் அதே கோபம் வந்தால் என்ன ஆகும் என்று சிந்திக்க வேண்டும். இத்தனை ஆண்டுகள் அடங்கியிருந்த பெண்கள் இன்று சுயமாக இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாத ஆண்களே வன்முறையில் இறங்குகிறார்கள். ஆனால் ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டியது ஒன்றுதான், இன்றளவும் பெண்கள் எவ்வளவோ விட்டுக் கொடுத்துதான் தங்கள் சுதந்திரத்தை நிலைநாட்டிக் கொள்கிறார்கள். அதைச் சரிவரப் புரிந்து கணவர்கள் மனைவியைச் சக மனுஷியாக நடத்தினாலே போதும்.

http://www.penniyam.com/2014/07/blog-post_14.html

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் எங்களை காப்பாற்றுறது எப்படி எண்டு யோசிக்கிறம்.. நீங்கள் வேறை.. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

மரியாதை.. அடி உதை எல்லாம் நடந்து கொள்ளுற மாதிரில தான் இருக்குது.

யாரும்.. சும்மா ஆக்களுக்கு அடிக்கமாட்டார்கள். பள்ளியில்.. வீட்டில் யாராவது சும்மா தண்டிக்கனமா..??! இல்லை இல்ல.

ஆணோ.. பெண்ணோ.. சரியான நடத்தையை சரியான இடத்தில் காண்பிக்கும் போது.. எதுக்கு கை கால் நீளப் போகுது...??!

வீட்டு வன்முறை என்பது வெறுமனவே பெண்கள் மீது என்ற பிலிம் காட்டல் இப்போது அவ்வளவாக எடுபடுவதில்லை. இரு பாலாரும் இதனால் பாதிக்கப்படுகின்றனர். கணவர்கள் மீது பல்வேறு வடிவங்களிலும் தாக்கும் மனைவியர் குறித்தும்.. நாம் பேச வேண்டியவர்களாக இருக்கிறோம்..! :icon_idea::)

மனைவியை அடிப்பது கணவனின் உரிமையா? நோஓஓஓஓஓஓஓ   :lol:  :lol: 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மேற்கு நாடுகளில் பாடசாலைகளில் தண்டித்தல் என்பது அடிபோடுவதாக இருப்பதில்லை. கையோங்குவது ஒரு பலவீனமான விடயம் என்பதை ஒத்துக்கொள்ளாமல் அதை வீரம் என்று நினைப்பவர்கள்தான் தமிழர்கள். ஆனாலும் ஒரு சிலர் பெட்டிப்பாம்பாக அடங்கியும் இருக்கின்றார்கள். அதுவும் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்லை!

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் எங்களை காப்பாற்றுறது எப்படி எண்டு யோசிக்கிறம்.. நீங்கள் வேறை.. :lol:

ஆயுதங்கள் கனடாவை வந்து சேர்ந்திட்டுது போல. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

பேசித்தீர்க்க  தெரியாதவர்களுக்கு  நீளுவது கை ......... :D பெண்டாடியை அடிச்சா ஒரு வீரம்போல.......

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் எங்களை காப்பாற்றுறது எப்படி எண்டு யோசிக்கிறம்.. நீங்கள் வேறை.. :lol:

வீட்டுக்கு வீடு வாசல்படி இதையெல்லாமா உப்பிடி பப்பிளிக் பன்னுவது யாரும் பெண்ணியவாதிகள் காதில் விழுந்து துலைக்கபோவுது அழுவாதிங்க அழுவாதிங்க ஆமா இடியப்ப உரலா? பூரிக்கட்டையா ? இடியப்ப உரல் என்டால் தென்னைமரகுடி எண்ணைதான் நல்லது. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் எங்களை காப்பாற்றுறது எப்படி எண்டு யோசிக்கிறம்.. நீங்கள் வேறை.. :lol:

"வேர்க் அவுட்" பண்ணி உடம்பை இரும்பாக்கி வைச்சிருங்க சகா! எல்லாம் பழகிரும்! :D

  • கருத்துக்கள உறவுகள்

மரியாதை.. அடி உதை எல்லாம் நடந்து கொள்ளுற மாதிரில தான் இருக்குது.

தமிழர் நடந்து கொண்ட மாதிரியில தான் இலங்கையில அடி விழுந்தது என்று சொல்லுறீங்க.

யாரும்.. சும்மா ஆக்களுக்கு அடிக்கமாட்டார்கள். பள்ளியில்.. வீட்டில் யாராவது சும்மா தண்டிக்கனமா..??! இல்லை இல்ல.

சும்மா அடிக்க மாட்டார்கள். மனைவிக்கு அறிவும், மொழி வளமும், மற்றவர்களை கவரும் ஆற்றலும் இருந்தால் அதனால் வரும் பொறாமை, தாழ்வு மனப்பான்மை போன்ற மன நோய் உள்ள ஆண்கள் தமக்கு பெண்களிலும் பார்க்க அதிகமாக உள்ள ஒன்றே ஒன்றான மிருக பலத்தை காட்டுவார்கள்.

ஆணோ.. பெண்ணோ.. சரியான நடத்தையை சரியான இடத்தில் காண்பிக்கும் போது.. எதுக்கு கை கால் நீளப் போகுது...??!

அது தானே? ஆமியும் போலிசும் சரியான நடத்தை இருந்திருந்தால் தமிழருக்கு கை காலை நீட்டி இருக்க மாட்டார்கள் தானே?

வீட்டு வன்முறை என்பது வெறுமனவே பெண்கள் மீது என்ற பிலிம் காட்டல் இப்போது அவ்வளவாக எடுபடுவதில்லை. இரு பாலாரும் இதனால் பாதிக்கப்படுகின்றனர். கணவர்கள் மீது பல்வேறு வடிவங்களிலும் தாக்கும் மனைவியர் குறித்தும்.. நாம் பேச வேண்டியவர்களாக இருக்கிறோம்..! :icon_idea::)

மனைவி உங்கள் மனநோய் முற்றிய வன்முறை தாங்காமல் விட்டுட்டு போய் கனகாலமோ?
  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் நடந்து கொண்ட மாதிரியில தான் இலங்கையில அடி விழுந்தது என்று சொல்லுறீங்க.

ஏன்  மேற்குல்க... காலனித்துவ வெளியேற்றத்தின் பின் சிங்களவர்கள் நடந்து கொள்ள ஆரம்பித்ததன் வடிவில் தான் இலங்கையில் அவர்களுக்கு அடி விழுந்தது என்று சொல்லலாம். :)

சும்மா அடிக்க மாட்டார்கள். மனைவிக்கு அறிவும், மொழி வளமும், மற்றவர்களை கவரும் ஆற்றலும் இருந்தால் அதனால் வரும் பொறாமை, தாழ்வு மனப்பான்மை போன்ற மன நோய் உள்ள ஆண்கள் தமக்கு பெண்களிலும் பார்க்க அதிகமாக உள்ள ஒன்றே ஒன்றான மிருக பலத்தை காட்டுவார்கள்.

இதன் மறுதலை குறித்தும் யோசிக்க வேண்டும். மனநோய் ஆண்களுக்கு மட்டுமானதல்ல. பெண்களுக்கும் வரும். இதன் மறுதலை யதார்த்தத்தை சிந்திக்க மறுப்பதும் ஒரு வகை மனநோய் தான். :lol:

அது தானே? ஆமியும் போலிசும் சரியான நடத்தை இருந்திருந்தால் தமிழருக்கு கை காலை நீட்டி இருக்க மாட்டார்கள் தானே?

ஆமியும் பொலிசும் இருக்க வேண்டி இடத்தில் இருந்திருந்தால்.. தமிழர்கள் நடக்க வேண்டிய விதத்தில் தங்கள் இடத்தில் நடந்து கொண்டிருப்பார்கள். வீட்டுக்குள் எவனும் ஆட்லறி அடிப்பதில்லை. :D

மனைவி உங்கள் மனநோய் முற்றிய வன்முறை தாங்காமல் விட்டுட்டு போய் கனகாலமோ?

இது தனிநபர் தாக்குதல். அதற்கான பதில் தாக்குதல்.. உங்கள் அளவுக்கு இன்னும் நிலைமை வரவில்லை. உங்கள் நிலையை இட்டு வருந்துகிறோம். விரைந்து முன்னேற கடவுளை பிரார்த்திக்கின்றோம். :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

கணவனை அடிப்பதும் மனைவியின் உரிமையா? 

  • கருத்துக்கள உறவுகள்
கடல் அலைக்கு கரை என்று ஆனபின் ..... அடிக்காதே என்றால் எப்படி?
அதற்காக கை  நீட்டி எல்லாம் அடிக்க கூடாது .
  • கருத்துக்கள உறவுகள்

அடிக்கின்ற கைகள் தானே அணைக்குமாம்

அதிக அன்பும் அதிக  உரிமையும் ஆண்களின் கைகளை நீள வைக்கின்றது
ஆனாலும் இந்த வன்முறை கண்டிக்கத்தக்கது

இந்த திரியை வாசிகிறதிக்கு நமக்கு அடி விழ போகுது ............................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சொன்னால் நம்பமாட்டியள் நான் இண்டுவரைக்கும் என்ரை இவவை எடி எண்டு கூட கூப்பிட்டதில்லை....அவ்வளவுக்கு எங்களுக்கை பெரிய வாரப்பாடு.. :wub:

தமிழ்ச் சமுதாயத்தில் மனைவிமார்கள் ஏற்படுத்தும் மனக் கஸ்டமும் ரொம்ப அதிகம். புருசன் மார்கள் ஒன்றுக்கு இரண்டு வேலைசெய்து மீதமான நேரத்தில் மனைவிமார்களுடன் அவர்கள் விரும்பியபடி நேரத்தை செலவளிக்கவும் வேண்டியுள்ளது. தாம் வைத்திருக்கும் வீடு அதிலுள்ள பொருட்கள் குழந்தைகளின் படிப்பு வாகனம் கொண்டாட்டங்கள் அனைத்தும் அடுத்தவனைப்பார்த்து அதைவிட திறமாகச் செய்யவேண்டும். அரங்கேற்றம் 50 ஆயிரத்தில் செய்யவேண்டும் என்ற பல வித மனோநிலையில் ஏராளமான புலம்பெயர் பெண்டுகள் இருக்கின்றார்கள். இவ்வாறான பெண்களுக்கு கணவராக இருப்பவர்கள் 40 , 45 வயதுகளில் இருதய நோயால் இறக்கவும் செய்கின்றார்கள். தூக்கமின்மையும் அதிக மன அழுத்தமும் இதற்கு காரணமாக உள்ளது. ஒரு அடி அடித்ததும் குடும்ப வன்முறை பெண்ணியம் என்று வெளிக்கிடுபவர்கள் பெண்கள் தரப்பாலும் கலாச்சார பழக்கவழக்கங்களாலும் பெண்களால் பல வன்முறைகள் திரைமறைவில் உயிரைக்குடித்துக்கொண்டிருக்கின்றது என்பதையும் பதிவுசெய்யவேண்டியுள்ளது.

சொல்லுங்கையா, சொல்லுங்க..... நாலு பேருக்கு உறைக்கிற மாதிரி....! :o

ஒரு தமிழ்ப் பெண்ணுக்கு ஏற்கனவே 'ஆயிரம்' காவலாளர்கள்..! 

இன்னொரு திரியில், பிழைப்புக்காகப் பனை எறியவனுக்கு, நடந்த அநியாயம் பற்றியும் எழுதிக்கிடக்கு...!

போதாக்குறைக்குப் புலம் பெயர்ந்த பெண், முதலாவது செய்வது... தனது அப்பா, அம்மாவையும், தனது சொந்தங்களையும் இறக்குமதி செய்வது தான்....! ஆணொருவன், நாய் போல உழைத்தாலும், அவனது பெற்றோரை அழைக்க, பெண்ணின் குடும்பத்தினரால் ஒரு போதும் 'முன்னுரிமை' அளிக்கப்படுவதில்லை..!

இதுவும் எமது கலாச்சாரத்தின் 'எச்சம்' தான்....!

சண்டமாருதன்..., உங்களது பல கருத்துக்களில், ஒரு ' உண்மை' எப்போதுமே மறைந்து கிடக்கும் என்பது எனது அவதானமாகும்!

மற்றைய மாற்றுக் கருத்தாளர்களைப் போன்று, 'சீண்டல்' இல்லாது உங்கள் பதிவுகள் அமைவது.... உங்கள் பதிவுகளின் சிறப்பாகும்...!

தொடர்ந்து இணைந்திருங்கள்! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

பேசித்தீர்க்க  தெரியாதவர்களுக்கு  நீளுவது கை .........  :D பெண்டாடியை அடிச்சா ஒரு வீரம்போல.......
பேசி பேசி பார்த்தோம் முடியாததால்தானே ஆயுதத்தை தூக்கினோம் 
அதன் பிறகு தானே எங்கட கதையும் எடுபட்டது 

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இவற்றில் அனுபவம் இல்லை..ஆனாலும் கருத்தை சொல்வதில் தப்பில்லை..சில பெண்களை நினைக்கும் போது அடிக்கிறது இல்ல....வந்த வழியைப் பார்த்து ஓடு என்று ஏறி உளைக்கிட்டு அனுப்பி வைக்கனும்.தானும் ஒரு பெண்ணாக இருந்து கொண்டு இப்படி எழுதிறாள் என்று நினைக்காதீர்கள்....அன்றாடம் கேள்விப்படும் விடையங்கள் நிறைய,நிறைய இருக்கிறது..அனேகமான இடத்து பிரச்சனைகள் வெளியில் தெரிவதில்லை.

வீடுகளில் குளப்பம் விளைவிக்கிற பெண்கள் தாங்கள் பெற்ற பிள்ளைகளையே கவனிக்கவே தவறுகிறார்கள் என்பதும் உண்மை.சொல்வளி கேட்பதில்லை,நினைச்ச உடன் நினைச்சது செய்யனும்,போகனும் கூத்தடிக்கனும் இப்படித் தான் உலகம் போய் கொண்டு இருக்கிறது...அதே நேரம் சில பெண்கள் செய்யும் தவறுகளால் எல்லாரையும் அதே வரைறைக்குள் வைத்துப் பார்ப்பவர்களும் இருக்கிறார்கள்..

பிரச்சனைப்படுபவர்களின்  பின்ணணியில் என்ன நடக்கிறது என்று கேட்டால் பிள்ளை குட்டி இல்லாதவர்களுக்கே கண்ணீரை வர வளைத்து விடும்..தான் எதிர் பார்த்த மாதிரி கணவர் அமையவில்லை என்றால் அதற்கு ஒன்றும் அறியாத குழந்தைகள் என்ன பாவம் செய்தார்கள்.

பள்ளி விடுமுறைக் காலத்தில் பிள்ளைகள் வீட்டில் இருக்கும் நேரத்தில் கூட  சில அம்மாக்கள் சாப்பாடு சமைக்கு கொடுப்பதில்லை.. நொறுக்குத் தீனியோடு நாள் முழுக்க இருக்கிற பிள்ளைகளும் இருக்கிறார்கள்...சில இடங்களில் தந்தைமார் காலையில் வேலைக்கு போனால் இரவு வீடு வந்து சமைச்சு கொடுத்தால் தான் பிள்ளைகள் சாப்பிடுகிறார்கள்..இந்த வயதில சாப்பாடு கொடுத்து,அன்பைக் கொடுத்து, அவர்கள் விரும்பியதை கொடுத்து வளர்க்கத் தெரியாத அம்மா,அப்பா எல்லாம் எதற்காக பிள்ளைகளைப் பெற்றீர்கள்.

திரும்ப திருமணம் செய்யும் நோக்கத்தில் ஏற்கனவே இருக்கும் பிள்ளைகளை அம்மம்மாவோடு உறவுகள் வீடுகளில்  என்று விட்டுட்டு வேலை,வெட்டி பிரன்ஸ் கூட படம் பாக்க போறது, ஊர் சுற்றல் என்று திரிகிற பெண்களின் பிள்ளைகள்  படும் துன்பம் தெரியுமா.....????

அன்ரி எங்களை காலையில் அம்மம்மா தண்ணி ஊத்தித் தான் நித்திரையில இருந்து எழுப்பிறா..காதுக்குள்ள தண்ணி போய் வருத்தம் அன்ரி...இப்படி சொல்லி அழுகிற பிள்ளைகள்  எத்தனை பேர் இருக்கிறார்கள்....வெளிநாடுகளில் பிறந்த பிள்ளைகளில் எத்தனை பேருக்கு காதுக்கை தண்ணி போனால் வெளியே எடுக்க தெரியும்......??????

அப்பனை மாதிரியே வந்து துலைச்சு இருக்குகள் என்று திட்டி தீர்த்துக் கொண்டு இருக்கிற அம்மாக்கள்,பேர்த்திமார் என்று எத்தனை பிரச்சனைகளுக்கு குழந்தைகள் முகம் கொடுக்கிறார்கள்.

ஏன் பிள்ளைகள் துன்படுகிறார்கள் திருமணம் செய்துட்டு தாங்கள் கஸ்ரபடுவதும் அல்லாமல் பிள்ளைகளையும் கொடுமைப்பட விடும் பெற்றோர் தான் காரணம்...

அனேகமான விடையங்கள் உளவியல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்தி விடக் கூடாது என்பதற்காக . யாழில் உலாவும் சில இளைய பெற்றோர்களுக்காக இப்படியான விடையங்கள் நிறைய எழுத விரும்புவதில்லை...பெற்றோர் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் ஏற்படுத்தும் அனைத்துப் பிரச்சனைகளும் தாக்குவது ஒன்றும் அறியாத அப்பாவிப் பிள்ளைகளை மட்டுமே.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்ச் சமுதாயத்தில் மனைவிமார்கள் ஏற்படுத்தும் மனக் கஸ்டமும் ரொம்ப அதிகம். புருசன் மார்கள் ஒன்றுக்கு இரண்டு வேலைசெய்து மீதமான நேரத்தில் மனைவிமார்களுடன் அவர்கள் விரும்பியபடி நேரத்தை செலவளிக்கவும் வேண்டியுள்ளது. தாம் வைத்திருக்கும் வீடு அதிலுள்ள பொருட்கள் குழந்தைகளின் படிப்பு வாகனம் கொண்டாட்டங்கள் அனைத்தும் அடுத்தவனைப்பார்த்து அதைவிட திறமாகச் செய்யவேண்டும். அரங்கேற்றம் 50 ஆயிரத்தில் செய்யவேண்டும் என்ற பல வித மனோநிலையில் ஏராளமான புலம்பெயர் பெண்டுகள் இருக்கின்றார்கள். இவ்வாறான பெண்களுக்கு கணவராக இருப்பவர்கள் 40 , 45 வயதுகளில் இருதய நோயால் இறக்கவும் செய்கின்றார்கள். தூக்கமின்மையும் அதிக மன அழுத்தமும் இதற்கு காரணமாக உள்ளது. ஒரு அடி அடித்ததும் குடும்ப வன்முறை பெண்ணியம் என்று வெளிக்கிடுபவர்கள் பெண்கள் தரப்பாலும் கலாச்சார பழக்கவழக்கங்களாலும் பெண்களால் பல வன்முறைகள் திரைமறைவில் உயிரைக்குடித்துக்கொண்டிருக்கின்றது என்பதையும் பதிவுசெய்யவேண்டியுள்ளது.

ஏன் சுகன் பெண்களுக்குத் தான் புத்தி இல்லை என்டால் ஆண்களுக்கும் சுயமாய் யோசிக்கும் அளவிறகு புத்தி இல்லையா??????...பெண் இரு வேலைக்கு போகச் சொல்லி ஆணை வற்புறுத்தினால் கட்டாயம் அவர் இரு வேலைக்கு போகத் தான் வேண்டுமா...எதற்கெடுத்தாலும் பெண்களை குற்றம் சொல்பவர் லிஸ்டில் சுகனும் சேர்ந்தது ஆச்சரியம்:(

ஏன் சுகன் பெண்களுக்குத் தான் புத்தி இல்லை என்டால் ஆண்களுக்கும் சுயமாய் யோசிக்கும் அளவிறகு புத்தி இல்லையா??????...பெண் இரு வேலைக்கு போகச் சொல்லி ஆணை வற்புறுத்தினால் கட்டாயம் அவர் இரு வேலைக்கு போகத் தான் வேண்டுமா...எதற்கெடுத்தாலும் பெண்களை குற்றம் சொல்பவர் லிஸ்டில் சுகனும் சேர்ந்தது ஆச்சரியம் :(

இப்படியும் ஒரு பிரச்சனை இருக்கின்றது என்பதை சொன்னேன். நான் பெண்ணை குற்றம் சொல்பவன் என்று நீங்கள் எனக்கொரு அடயாளம் கொடுப்பதுதான் ஆச்சரியமாக உள்ளது.

நாம் அன்றாட வாழ்வில் பல சம்பவங்களைப் பாரக்கின்றோம். பல தமிழ் யுவதிகள் கணவனை உச்சக் கட்டத்திற்கு ஆத்திரமூட்டி நிதானத்தை இழக்கும்வரை தர்க்கம் செய்து அடிவிழப்போகுது என்னும் கட்டத்தில் கதவைத் திறந்து முற்றத்துக்கு வந்துவிடுவார்கள். அவர்களுக்கு அடியும் வேணும் அதை அயலட்டை பாரக்கவும் வேணும். அது சாடசியாகவேணும். ஏதோ ஒரு காரணம் சொல்லி கணவனை துரத்தி விட்டு அவரிடம் இருந்து பிள்ளைகளுக்கான ஜீவனாம்சத்தையும் பெற்று அண்டத டேபிளில் வேலையும் செய்து சுகபோகம் அனுபவிக்கும் பெண்களும் உள்ளனர்.

இரு வேலைகள் செய்த பின்னர் மனைவியுடன் கொஞ்சநேரம் மன ஆறுதலாக இருக்கலாம் என்னும் போது அந்த சற்று நேரத்தில் கூட "அவங்கள் இப்படி ஒன்று வாங்கிவிட்டார்கள் நாங்களும் ஒன்று வாங்கவேணும் அல்லத நகைக் கதை என கிடைக்கும் சொற்ப நேரத்தையும் நரகமாக்கும் பெண்கள் பலர் உண்டு.

எத்தனையோ ஆண்கள் தமது குழந்தைகளுக்காக அவர்கள் மீது வைத்த பாசத்துக்காவே குடும்பவாழ்வை தொடர்கின்றனர்.

குடும்பங்களுக்கு உள்ளுக்கு இறங்கிப் பாரக்கும் போதுதான் அது பெண்ணியம் ஆணியத்தை கடந்து அணுகப்படவேண்டிய பல நிலைகளில் உள்ளது என்பது புரியும்.

அதற்காக ஆண்கள் பிழை செய்யவில்லை என்பது எனது கருத்தல்ல ஆனால் பெண்களும் ஆண்களுக்கு நிகராக அல்லத அதனிலும் மோசமாக பிழைகளை செய்துகொண்டுதான் இருக்கின்றனர். குற்றம் என்று வந்தவிட்டால் கையால் அடிப்பது மட்டும் குற்றமல்ல. ஒரு வனை கையால் அடித்தும் கொல்லலாம் வாயல் கதைத்தும் கொல்லலாம். குற்றங்களை இருவரும் செய்கின்றனர். இதுதான் என்கருத்து. குற்றம் செய்வது சரி என்பது எனது கருத்தல்ல.

(மேலே சொன்ன உவமானங்கள் பல்கலைக்கழகத்தில் தமிழர்களின் குடும்பவன்முறை குறித்த ஆய்வை புதிதாக தொடங்கியிருக்கும் ஒருவருடன் சற்றுக் காலத்துக்கு முன்பு கதைத்தபோது கிடைத்தவை.)

எனக்கு இவற்றில் அனுபவம் இல்லை..ஆனாலும் கருத்தை சொல்வதில் தப்பில்லை..சில பெண்களை நினைக்கும் போது அடிக்கிறது இல்ல....வந்த வழியைப் பார்த்து ஓடு என்று ஏறி உளைக்கிட்டு அனுப்பி வைக்கனும்.தானும் ஒரு பெண்ணாக இருந்து கொண்டு இப்படி எழுதிறாள் என்று நினைக்காதீர்கள்....அன்றாடம் கேள்விப்படும் விடையங்கள் நிறைய,நிறைய இருக்கிறது..அனேகமான இடத்து பிரச்சனைகள் வெளியில் தெரிவதில்லை.

வீடுகளில் குளப்பம் விளைவிக்கிற பெண்கள் தாங்கள் பெற்ற பிள்ளைகளையே கவனிக்கவே தவறுகிறார்கள் என்பதும் உண்மை.சொல்வளி கேட்பதில்லை,நினைச்ச உடன் நினைச்சது செய்யனும்,போகனும் கூத்தடிக்கனும் இப்படித் தான் உலகம் போய் கொண்டு இருக்கிறது...அதே நேரம் சில பெண்கள் செய்யும் தவறுகளால் எல்லாரையும் அதே வரைறைக்குள் வைத்துப் பார்ப்பவர்களும் இருக்கிறார்கள்..

பிரச்சனைப்படுபவர்களின்  பின்ணணியில் என்ன நடக்கிறது என்று கேட்டால் பிள்ளை குட்டி இல்லாதவர்களுக்கே கண்ணீரை வர வளைத்து விடும்..தான் எதிர் பார்த்த மாதிரி கணவர் அமையவில்லை என்றால் அதற்கு ஒன்றும் அறியாத குழந்தைகள் என்ன பாவம் செய்தார்கள்.

பள்ளி விடுமுறைக் காலத்தில் பிள்ளைகள் வீட்டில் இருக்கும் நேரத்தில் கூட  சில அம்மாக்கள் சாப்பாடு சமைக்கு கொடுப்பதில்லை.. நொறுக்குத் தீனியோடு நாள் முழுக்க இருக்கிற பிள்ளைகளும் இருக்கிறார்கள்...சில இடங்களில் தந்தைமார் காலையில் வேலைக்கு போனால் இரவு வீடு வந்து சமைச்சு கொடுத்தால் தான் பிள்ளைகள் சாப்பிடுகிறார்கள்..இந்த வயதில சாப்பாடு கொடுத்து,அன்பைக் கொடுத்து, அவர்கள் விரும்பியதை கொடுத்து வளர்க்கத் தெரியாத அம்மா,அப்பா எல்லாம் எதற்காக பிள்ளைகளைப் பெற்றீர்கள்.

திரும்ப திருமணம் செய்யும் நோக்கத்தில் ஏற்கனவே இருக்கும் பிள்ளைகளை அம்மம்மாவோடு உறவுகள் வீடுகளில்  என்று விட்டுட்டு வேலை,வெட்டி பிரன்ஸ் கூட படம் பாக்க போறது, ஊர் சுற்றல் என்று திரிகிற பெண்களின் பிள்ளைகள்  படும் துன்பம் தெரியுமா.....????

அன்ரி எங்களை காலையில் அம்மம்மா தண்ணி ஊத்தித் தான் நித்திரையில இருந்து எழுப்பிறா..காதுக்குள்ள தண்ணி போய் வருத்தம் அன்ரி...இப்படி சொல்லி அழுகிற பிள்ளைகள்  எத்தனை பேர் இருக்கிறார்கள்....வெளிநாடுகளில் பிறந்த பிள்ளைகளில் எத்தனை பேருக்கு காதுக்கை தண்ணி போனால் வெளியே எடுக்க தெரியும்......??????

அப்பனை மாதிரியே வந்து துலைச்சு இருக்குகள் என்று திட்டி தீர்த்துக் கொண்டு இருக்கிற அம்மாக்கள்,பேர்த்திமார் என்று எத்தனை பிரச்சனைகளுக்கு குழந்தைகள் முகம் கொடுக்கிறார்கள்.

ஏன் பிள்ளைகள் துன்படுகிறார்கள் திருமணம் செய்துட்டு தாங்கள் கஸ்ரபடுவதும் அல்லாமல் பிள்ளைகளையும் கொடுமைப்பட விடும் பெற்றோர் தான் காரணம்...

அனேகமான விடையங்கள் உளவியல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்தி விடக் கூடாது என்பதற்காக . யாழில் உலாவும் சில இளைய பெற்றோர்களுக்காக இப்படியான விடையங்கள் நிறைய எழுத விரும்புவதில்லை...பெற்றோர் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் ஏற்படுத்தும் அனைத்துப் பிரச்சனைகளும் தாக்குவது ஒன்றும் அறியாத அப்பாவிப் பிள்ளைகளை மட்டுமே.

ஆண்பெண் என்ற அடயாளங்களுக்கு அப்பால் பிரச்சனைகளை அணுகுவதற்காக உங்களை பாராட்ட வேணும்.

  • கருத்துக்கள உறவுகள்

இதில சுகனும் யாயினியும் எழுதிய விடையங்கள் பற்றி பலர் பேசுவதில்லை.பல பிரச்சனைகழுக்கு காரணம் பக்த்து வீட்டுக்காரர் தான்.அந்தப் பக்கத்து வீட்டுக்காறருக்கு பிரச்சனை அடுத்த பகத்து வீடு.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியும் ஒரு பிரச்சனை இருக்கின்றது என்பதை சொன்னேன். நான் பெண்ணை குற்றம் சொல்பவன் என்று நீங்கள் எனக்கொரு அடயாளம் கொடுப்பதுதான் ஆச்சரியமாக உள்ளது.

நாம் அன்றாட வாழ்வில் பல சம்பவங்களைப் பாரக்கின்றோம். பல தமிழ் யுவதிகள் கணவனை உச்சக் கட்டத்திற்கு ஆத்திரமூட்டி நிதானத்தை இழக்கும்வரை தர்க்கம் செய்து அடிவிழப்போகுது என்னும் கட்டத்தில் கதவைத் திறந்து முற்றத்துக்கு வந்துவிடுவார்கள். அவர்களுக்கு அடியும் வேணும் அதை அயலட்டை பாரக்கவும் வேணும். அது சாடசியாகவேணும். ஏதோ ஒரு காரணம் சொல்லி கணவனை துரத்தி விட்டு அவரிடம் இருந்து பிள்ளைகளுக்கான ஜீவனாம்சத்தையும் பெற்று அண்டத டேபிளில் வேலையும் செய்து சுகபோகம் அனுபவிக்கும் பெண்களும் உள்ளனர்.

இரு வேலைகள் செய்த பின்னர் மனைவியுடன் கொஞ்சநேரம் மன ஆறுதலாக இருக்கலாம் என்னும் போது அந்த சற்று நேரத்தில் கூட "அவங்கள் இப்படி ஒன்று வாங்கிவிட்டார்கள் நாங்களும் ஒன்று வாங்கவேணும் அல்லத நகைக் கதை என கிடைக்கும் சொற்ப நேரத்தையும் நரகமாக்கும் பெண்கள் பலர் உண்டு.

எத்தனையோ ஆண்கள் தமது குழந்தைகளுக்காக அவர்கள் மீது வைத்த பாசத்துக்காவே குடும்பவாழ்வை தொடர்கின்றனர்.

குடும்பங்களுக்கு உள்ளுக்கு இறங்கிப் பாரக்கும் போதுதான் அது பெண்ணியம் ஆணியத்தை கடந்து அணுகப்படவேண்டிய பல நிலைகளில் உள்ளது என்பது புரியும்.

அதற்காக ஆண்கள் பிழை செய்யவில்லை என்பது எனது கருத்தல்ல ஆனால் பெண்களும் ஆண்களுக்கு நிகராக அல்லத அதனிலும் மோசமாக பிழைகளை செய்துகொண்டுதான் இருக்கின்றனர். குற்றம் என்று வந்தவிட்டால் கையால் அடிப்பது மட்டும் குற்றமல்ல. ஒரு வனை கையால் அடித்தும் கொல்லலாம் வாயல் கதைத்தும் கொல்லலாம். குற்றங்களை இருவரும் செய்கின்றனர். இதுதான் என்கருத்து. குற்றம் செய்வது சரி என்பது எனது கருத்தல்ல.

(மேலே சொன்ன உவமானங்கள் பல்கலைக்கழகத்தில் தமிழர்களின் குடும்பவன்முறை குறித்த ஆய்வை புதிதாக தொடங்கியிருக்கும் ஒருவருடன் சற்றுக் காலத்துக்கு முன்பு கதைத்தபோது கிடைத்தவை.)

சுகன் நான் ஆண்கள் மட்டும் தான் குற்றவாளிகள்.பெண்கள் எல்லோரும் சுத்த தங்கம் என சொல்ல வரவில்லை. உங்களைப் பொறுத்த பெண்கள் பக்கத்து வீட்டுக்காரரைப் பார்த்து தாங்களும் அப்படி இருக்க வேண்டும் என்டு ஆசைப்படினம்.மனைவி ஆசைப்பட்டு விட்டார் என்பதற்காக கணவர் இரு வேலைக்கு போகிறார்.அதுவும் உண்மை தான்.அப்படியும் நடக்குது தான். இல்லை என சொல்லவில்லை.ஆனால் என் கேள்வி என்ன என்டால் மனைவி தான் பக்கத்து வீட்டைப் பார்த்து அது,இது என ஆசைப்பட்டால் அந்த கணவருக்கு எங்கே போச்சுது அறிவு?...ஏன் மனைவிக்கு எடுத்து சொல்ல அவரால் முடியவில்லை?...மனைவி சொல்லி விட்டார் என்பதற்காக கணவர் கண்ணை மூடிக் கொண்டு செய்ய வேண்டும் என்று இல்லைத் தானே!

இதற்கெல்லாம் ஆரம்பம் எங்கே தெரியுமா?...ஒரு ஆண் தனது திருமணத்திற்கு முன் தனது தகுதிக்கும் மீறி உழைச்சு,கடன் பட்டு பெற்றோருக்கும்,சகோதரங்களுக்கும் கொடுக்கிறது.பின்னர் தான் திருமணம் செய்யும் போது தன்னுடைய உண்மை நிலையைச் சொல்லி கட்டாமல்,பொய் சொல்லுறது.பின்னர் அதற்காக மாடாய் உழைக்கிறது.அதை விட முதலிலே எல்லோருக்கும் உண்மை நிலையை சொல்லி,அவருடைய தகுதிக்கு இவ்வளவு தான் உழைக்க முடியும் என சொல்லி இருந்தால் இவ்வளவு பிரச்சனை குடும்பத்தில் வராது அல்லவா.ஆண்கள் எப்போதும் தங்களை மற்றவர் புகழ வேண்டும் என ஆசை.இப்படியான ஆண்களுக்கு தாழ்வு மனப்பான்மை என நினைக்கிறேன்.தாங்கள் மற்றவனை காட்டில் அதிகமாக உழைக்க வேண்டும்.இல்ல்லா விட்டால் மதிக்க மாட்டார்கள் என தாயிலிருந்து,மனைவி,மகளுக்கும் பயப்படுவது.அதே நேரத்தில் பெண்களும் ஆண்கள் உழைக்கா விட்டால் மட்டம் தட்டுவதும் நடக்கின்றது. இதே நேரத்தில் ஆண்கள் ஒரே வேலை,வேலை எனத் திரிவதால் தனியே குழந்தைகளை கவனிக்க முடியாமல் பிள்ளைகளைக் கொண்டு விட்டு தாங்களும் தற்கொலை செய்யும் பெண்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.

திருமணம் செய்யேக்குள்ளேய்யே இருவரும் கதைத்துப் உண்மை பேசி,உண்மையாய் குடும்பம் நடத்தினால் ஒரு பிரச்சனையும் இருக்காது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.