Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சூப்பர் சிங்கர்: தமிழகத்தின் மாபெரும் பாலியல் வன்முறை!

Featured Replies

airtel%209514sd.jpg

 

1.ஐந்து வயது கூட நிரம்பாத குழந்தைகள், குமரிகளுக்கான விரக தாபத்துடன் ஐட்டம் பாடல்களைப் பாடுகிறார்கள். முக்கல் முனகல்களுடன் அபிநயிக்கிறார்கள். நடுவர்களை பார்த்து கண்ணடிக்கிறார்கள். இடுப்பைச் சுழற்றுகிறார்கள். இதனைப் பெற்றோர்கள் பார்த்து ஆர்ப்பரிக்கிறார்கள். நடுவர்கள், "உன் குரல்ல இன்னும் ஃபீல் பத்தல" என்று விமர்சிக்கிறார்கள். பத்து வயதுச் சிறுவன், பாடலை அவனது கேர்ள் பிரெண்டுக்கு அர்ப்பணிக்கிறான்.
 
2.குழந்தைகளின் திறமையை அளக்கும் அளவுகோல் என்பது தற்போது ஆட்டமும், பாட்டமுமே. மகன்கள் தோல்வியடைந்தால் தாய்மார்கள் கண்ணீர் சிந்துகிறார்கள். மகள்கள் வெற்றி பெறவில்லையெனில் தந்தைகள் முனகுகிறார்கள். ஒருசில நிகழ்ச்சிகளில், "நல்லா பாடலைன்னா அப்பா அடிப்பார்" என்றே கூட குழந்தைகள் வெளிப்படையாகக் கதறி இருக்கின்றன. பெற்றோர்கள் இந்த நிகழ்ச்சியை ஆரோக்கியமான போட்டியாகக் கண்டிப்பாக பார்ப்பதில்லை.
 
3.குழந்தைகள் தோல்வியடைந்தால் அவர்கள் அழாவிட்டாலும் பெற்றோர்கள் அழுகிறார்கள். தோல்வியடைந்த தங்கள் குழந்தைகளைத் தேற்ற வேண்டிய பெற்றோர்களே, தேம்புவதைப் பார்த்து குழந்தைகள் திகைத்துப்போய் மிரண்டு நிற்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு, இது போன்ற ரியாலிட்டி நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டதற்காக மனமுடைந்து கோமா நிலைக்குச் சென்ற ஒரு சிறுமியைப் பற்றி கேள்விப்பட்டிருக்கலாம்.
 
இதன் மறுபக்கமாக, வெற்றி பெற்ற குழந்தைகளோ மாபெரும் வீரர்களாக சித்தரிக்கப்படுகின்றனர். வழிபட வேண்டிய பிம்பமாகக் காட்டப்படுகின்றனர். சாதிக்கவே முடியாததை சாதித்துவிட்டதாக இறுமாப்புக் கொள்கின்றனர். சினிமா ஸ்டாருக்கான அந்தஸ்தைப் பெற்றுவிட்டதாக மாயையில் உழலுகின்றனர்.
 
ஆனால், தாம் இருப்பது திரிசங்கு சொர்க்கம்தான் என்பதை இறுதிவரை அவர்களால் உணர முடிவதில்லை. ஆயினும் ஓரிரு ஆண்டுகளுக்குப் பிறகு தான் ஒரு சாதாரணன்தான் என்ற உண்மை யதார்த்தம் சுடும் போது குறிப்பிட்ட குழந்தைகளின் ஆளுமை வெகுவாகச் சிதைகிறது.
 
4. விஜய் டிவியும், பெற்றோரும் சேர்ந்து கொண்டு குழந்தைப் பருவத்தை விட்டு துரத்தி இளம் பருவத்தினராக்கி விட விரும்புகிறார்கள். குழந்தைகள், பெரியவர்கள் போல் பேசுகிறார்கள். ஜோக் அடிக்கிறார்கள். ஆனால், குழந்தைகளாக நடிக்கிறார்கள். இந்த நிகழ்ச்சிக்காக அமைக்கப்படும் சுற்றுகளும் வயதுக்கு மீறியதாகவே இருக்கிறது. அதற்கேற்ப அவர்களது நடை, உடை, பாவனைகளும் மாறுகின்றது. குழந்தை உருவத்தில், பெரியவர்களுக்கான பாடல்களை பாடுகின்றனர்.
 
அங்க அசைவுகளை வெளிப்படுத்துகிறார்கள். சின்னஞ்சிறு வயதிலேயே வயதுக்கு மீறிய உடல் மொழி, உணர்வுகளை மெல்ல மெல்லக் கற்றுக் கொள்கிறார்கள். குழந்தைகளிடம் தாம் இப்படி, தகாத முறையில் பாலியலை அறிமுகப்படுத்தியதைப் பற்றி விஜய் டிவியோ அல்லது பெற்றோர்களோ கிஞ்சித்தும் கவலைப்படுவதில்லை. வெளிப்படையாக வல்லுறவு செய்தால்தான் பாலியல் வன்முறை என்பதில்லை. குழந்தைகளின் உணர்ச்சியை அளவு கடந்து தூண்டிவிடுதலும், குழப்புவதும் கூட பாலியல் வன்முறைதான்.
நன்றி: வினவு -
 
 
 
  • Replies 53
  • Views 13.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

...

 

அங்க அசைவுகளை வெளிப்படுத்துகிறார்கள். சின்னஞ்சிறு வயதிலேயே வயதுக்கு மீறிய உடல் மொழி, உணர்வுகளை மெல்ல மெல்லக் கற்றுக் கொள்கிறார்கள். குழந்தைகளிடம் தாம் இப்படி, தகாத முறையில் பாலியலை அறிமுகப்படுத்தியதைப் பற்றி விஜய் டிவியோ அல்லது பெற்றோர்களோ கிஞ்சித்தும் கவலைப்படுவதில்லை. வெளிப்படையாக வல்லுறவு செய்தால்தான் பாலியல் வன்முறை என்பதில்லை. குழந்தைகளின் உணர்ச்சியை அளவு கடந்து தூண்டிவிடுதலும், குழப்புவதும் கூட பாலியல் வன்முறைதான்.
 

 

 

vil-super.gif நல்ல கருத்து.

 

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப கைதட்டும் பெற்றோர், பிள்ளைகளின் நடவடிக்கை கைமீறும் போது தலையில் கை வைக்கதான் சரி.

 

குழந்தைகளுக்கான எத்தனையோ நல்ல பாடல்கள் இருக்க, இவர்கள் இப்படிப்பட்ட பாடல்களை ஊக்குவிப்பது ஏனோ?

 

படிக்கும் வயதிலேயே பேரும் புகழும் சேர, இவர்களின் நாட்டம் படிப்பில் குறைவாகவே இருக்கும் மற்றவர்களின் புகழ்ச்சியால்

எல்லோரும் புகழ் என்ற மாயையில் இருக்கும் போது இதை யார் யாருக்குத் தெளிவு படுத்துவது?? சுப்பர்சிங்கரில் தெரிவானால் ஏதோ ஒரு தனிநாட்டையே கைப்பற்றி அதற்கு அரசானாகிய ஒரு உணர்வு எல்லோருக்கும். போட்டி இருக்கத்தான் வேணும், ஆனால் அது ஒரு ஆரோக்கியமானதாக இருந்தால் தான் வளரும் சமுதாயத்திற்கு நல்லது.. இது எல்லாம் எப்போதுதான் பெற்றோருக்கு புரியப்போகுதோ? அது அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். 

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர்ந்த எங்களுக்கும் பங்குண்டு,....

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மாதிரி நிகழ்ச்சிகளை பார்க்காமல் விட்டதுக்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்.. :o:huh:

ஆரம்பத்தில் இருந்த ஆர்வம் அறவே போய்விட்டது .

 

தொடர்ந்து மனோ ,சித்திரா ,சுபா முகங்களையும் கோமான்சையும்  பார்க்க சகிக்கலை .

"குற்ற உணர்ச்சி இல்லாம செய்யுற எதுவுமே தப்பில்லை

நான் யாரையும் ஏமாத்தவில்லை எமாறத் தயார இருக்கிறவங்களுக்கு வாய்ப்புத் தாறன்"

 

சதுரங்க வேட்டை படத்தில் வரும் வசனங்கள் இந்த நிகழ்ச்சிக்கு நல்லாப் பெருந்தும்.  இது ஒரு வியாபராம். ரிவிக்காரன் விற்பனை செய்கின்றான் பார்வையாளன் வாங்குகின்றான். இது நல்ல பொருளா என்ற கேள்வி இப்போது எழுகின்றது.

 

 

 

 

இந்த மாதிரி நிகழ்ச்சிகளை பார்க்காமல் விட்டதுக்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்.. :o:huh:

 

நானும் சுப்பர் சிங்கர் பார்ப்பதில்லை.  இவ்வாறான நிகழ்ச்சிகளில் பல போலித்தனங்கள் இருந்தது மட்டுமின்றி வெளிப்படையான பாரபட்சங்களைஅதிகமாகப் பார்க்க முடிந்தது.  அதிலும் சித்ரா மிகவும் மோசம்.  சுபபர் சிங்கரில் அவர் நடுவராக வந்த பின்னர், அவரது  குரலில் வந்த பாடல்களை மட்டுமே ரசிக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

புகழ் கண்ணை மறைக்குது.

  • கருத்துக்கள உறவுகள்

அதுக்கு தான் நாங்க சொல்லுறம் சன் சிங்கர் பாருங்க எண்டு....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆரம்பத்தில் இருந்த ஆர்வம் அறவே போய்விட்டது .

 

தொடர்ந்து மனோ ,சித்திரா ,சுபா முகங்களையும் கோமான்சையும்  பார்க்க சகிக்கலை .

 

ஒருவருடத்திற்குமுன்..... சூப்பர்சிங்கர் நிகழ்ச்சியில் கனேடியபிள்ளை படிப்புகள் தொடர்பாக  ஒரு கருத்தை வைத்திருந்தேன். அதற்கான உங்களின் பதிலை மீண்டுமொருமுறை அசைபோட்டு பார்க்கின்றேன். :icon_mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

https://www.youtube.com/watch?v=-J13WklIckI

 

இங்கே எதை இரசிக்கின்றார்கள்/இரசிக்கின்றீர்கள்.எவ்வளவு விகாரமான பாட்டு இது. இதனை ஒரு குழந்தையின் வாயிலிருந்து வரவழைத்து இரசிக்கின்றார்கள்.
 
சர்க்கஸ் கொம்பனிகளுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம்? நாதாரிகள்.
  • கருத்துக்கள உறவுகள்

75 லட்சம் பெறுமதியான வீடு முதல் பரிசு என்பது நிகழ்ச்சியின் பரிமாணத்தையே மாற்றி விட்டது. அதனை அடைய எதனையும் செய்விக்க தொலைக்காட்சியும் பெற்றோரும் துணிந்து விட்டார்கள். இடையில் மாட்டுப்பட்டு தவியாய் தவிப்பது அப்பாவி குழந்தைகள் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

75 லட்சம் பெறுமதியான வீடு முதல் பரிசு என்பது நிகழ்ச்சியின் பரிமாணத்தையே மாற்றி விட்டது. அதனை அடைய எதனையும் செய்விக்க தொலைக்காட்சியும் பெற்றோரும் துணிந்து விட்டார்கள். இடையில் மாட்டுப்பட்டு தவியாய் தவிப்பது அப்பாவி குழந்தைகள் தான்.

 

ஒரு  தகப்பன் என்பதால்

இவற்றை  ஊக்கவிப்பதில்லை

இவ்வாறான நிகழ்ச்சிகளை  பார்ப்பதில்லை

 

எல்லாமே வியாபாரமாகிவிட்டதால் வந்த வினை   இது.

இதை தடுத்து நிறுத்தமுடியும் என நினைக்கவில்லை

எதுவுமே பார்பதில்லை. சீரியலும் பார்பத்தில்லை. ஆரம்பகாலத்தில் கே.பாலச்சந்தர் இயக்கிய சீரியல்கள் பார்க்காமல் விட்டதில்லை. உதாரணமாக
 
ரயில் சினேகம்..
கையளவு மனசு..
 
இப்போது எல்லாமே கன்றாவியாக இருக்கிறது. 
 
பிள்ளைகளை இவற்றைப் பார்க்கவிடுவதும் தப்பு.
 
ஒருவர் சொன்னார். சீரியல் குடும்த்துடன் பார்க்கும் பிள்ளை தன் தாயைக் கேட்டதாம்.. 
 
"முதல் இரவு என்றால் என்ன அம்மா ? " 
  • கருத்துக்கள உறவுகள்

நான் சின்ன வயசா இருக்கும் போது Wrestling அடிதடி ரீ.வி.யில இரவிரவா வாயை ஆஆஆ என்டு கொண்டு பாப்பம். 

இவ்வளவு அடி வாங்கியும் எப்பிடி உயிரோட இருக்கிறாங்கள் என்டு ஒரே ஆச்சரியம்  :icon_idea:

 

ஒரு வயசு வரதான் தெரிஞ்சது அதெல்லாம் ஒரு "Enertainment Show" என்று. வெற்றி தோல்வி முதலே நிட்சயிக்கப்பட்டுவிடும். அந்த வகை Enertainment  தான் இப்படியான நிகழ்ச்சிகளும். 

 

சமூகத்தை சிந்திக்கவிடாமல் செய்யிற வேலை தான் இது. நாட்டில என்ன நடந்தாலும் அதை பற்றி கவலைப்படாமல் இரவு வேலையால வந்தா இப்படியான நிகழ்ச்சிகளை பாத்து உலகறியா சமூகமாக வாழ வேண்டும் என்பதே அவர்கள் விருப்பம். இடையிடையே புலம்பெயர்ந்த தமிழர்கள் சிலரையும் சொருகி நம்மளையும் கொஞ்சம் கவர்ந்திழுப்பார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

குழந்தைகளை வைத்து அறிவியல் போட்டி நடத்தினாலும், காரியமில்லை.
சினிமாப் பாடலை வைத்து.... என்ன போட்டியோ. கறுமம் பிடிச்சவங்கள்.
குழந்தைகளின் எதிர்காலத்தை பாழாக்க இப்படியான நிகழ்ச்சிகளையும்,
தாய்... தகப்பனை முட்டாளாக்க தினமும் சினிமாப் படங்களையும், நாடகங்களையும் போட்டு.....

தமிழ்ச்சனத்தையே..... கோமா நிலையில் வைத்திருக்க...

இந்த தொலைக்காட்சி நிறுவனங்கள், போட்டி போடுகின்றன. 

இது இவருடைய குமுறல் மாத்திரமல்ல, என்போன்ற பல அப்பாக்கள், பார்வையாளர்கள், நலன் விரும்பிகள் என பலர் இவர் முன்னே குமுறலுடன் உள்ளனர், என்ன ,,,,தென்புள்ள இவர் கொட்டித்தீர்த்துவிட்டீர்கள். நீங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு வீதம் உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கொரு ஆசை.. நடுவர்கள் என்று இந்தப் போட்டிகளுக்கு வருவோரிடையே போட்டி நடத்தி.. அவர்களையும் அழவைச்சு.. ஆட வைச்சு பார்க்கனுன்னு..! :lol:

 

வரவர மனுசனுக்கு எதை ரசிக்கிறது.. எதை வளர்க்கிறது என்ன விவஸ்தையே இல்லாமல் போச்சுது.

 

இதில.. புலம்பெயர் தமிழர்கள்.. வெளிநாட்டில இருந்து கொண்டு.. வாக்கு வேற போடினமாம்..! சும்மா இருந்து கொண்டு.. ஏதேனும் சொறிவேலை செய்யுறதென்னா.. புலம்பெயர் தமிழர்களுக்கு சொர்க்கலோகம் போவது போல. அவைக்கென்ன... பொழுதுபோக்கு.. அங்க பிள்ளைகளை வறுத்தெடுக்கிறார்கள்..! :rolleyes::icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நிகழ்ச்சியை விரும்பி பார்க்கும் ஒருவரும் ஏன் தங்கள் கருத்தை இது வரை வைக்கவில்லை?...யாழில் கூட சுப்பர் சிங்கர் வீடியோக்களை கொண்டு வந்து இணைத்தார்கள்.இப்ப வாயை மூடிப் பேசாமல் இருக்கினம்

இந்த நிகழ்ச்சியை விரும்பி பார்க்கும் ஒருவரும் ஏன் தங்கள் கருத்தை இது வரை வைக்கவில்லை?...யாழில் கூட சுப்பர் சிங்கர் வீடியோக்களை கொண்டு வந்து இணைத்தார்கள்.இப்ப வாயை மூடிப் பேசாமல் இருக்கினம்

 

ரதி, நானும் கூட இந்த நிகழ்ச்சிகளை விரும்பிப் பார்த்து பல வீடியோக்களை இணைத்து இருக்கின்றேன். ஆனால் கடந்த சீசனுடன் இது வெறுத்துப் போச்சு. மிகவும் மிகைப்படுத்தப்பட்ட, ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட முடிவு கொண்ட  ஒரு நாடகத்தினை பார்ப்பது போன்று உள்ளது. அத்துடன் இக் கட்டுரை சொல்வதில் உள்ள நியாயமும் சரியாக இருக்கின்றது.

 

ஜூனியர் சுப்பர் சிங்கரின் முதலாம் சீசனைப் பார்த்ததால் தான் என் மகனுக்கு இசைக்கருவிகள் மீது நாட்டம் வந்து டிரம்ஸ் வாசிக்க விரும்பினார். இப்ப அதில் ஓரளவுக்கு தேர்ச்சி பெற்றுள்ளார். இன்னும் சில வருடங்களில் முழுமையாக படித்து முடித்து விடுவார்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நிழலி

ரதி ,

சூப்பர் சிங்கர் இப்போ எப்படி மிகை படுத்துப்பட்டு வெறும் வியாபாரம் போல ஆகிவிட்டதோ அதே போலத்தான் உந்த கட்டுரையும் .

 

நான் இன்றும் சூப்பர் சிங்கர் ,ஜோடி நம்பர் வன்,எல்லாம் தவறாது பார்த்துக்கொண்டே தான் இருக்கின்றேன் .பிடித்தால் பார்க்கிறது பிடிக்காவிட்டால் சானலை மாற்றி விடுகிறது இதுதான் எனது பொலிசி .பிடிக்காத எத்தனை சினிமா படங்கள் பார்க்கின்றோம் (போன வாரம் சந்தோஸ்சிவனின் ராதாவின் மகள் கார்த்திகா நடித்த படம் ஒன்று பார்த்தேன் .அதற்கு பிறகும் நான் தூக்கு போட்டு சாகாமல் இருப்பதே பெரியவிடயம் )

அப்படிதான் இதுவும் .உதுக்குள் போய் மெசேஜ் ,அரசியல் வக்கிரம் பிசினஸ் எல்லாம் பார்த்துக்கொண்டு இருக்கமுடியாது .

 

சும்மா எல்லாவற்றிலும் சரி பிழை கண்டுபிடித்து அரசியல் செய்ய நான் வேலை வெட்டியில்லாத தமிழ்நாட்டு அரசியல்வாதியல்ல .

 

ரதி ,

சூப்பர் சிங்கர் இப்போ எப்படி மிகை படுத்துப்பட்டு வெறும் வியாபாரம் போல ஆகிவிட்டதோ அதே போலத்தான் உந்த கட்டுரையும் .

 

நான் இன்றும் சூப்பர் சிங்கர் ,ஜோடி நம்பர் வன்,எல்லாம் தவறாது பார்த்துக்கொண்டே தான் இருக்கின்றேன் .பிடித்தால் பார்க்கிறது பிடிக்காவிட்டால் சானலை மாற்றி விடுகிறது இதுதான் எனது பொலிசி .பிடிக்காத எத்தனை சினிமா படங்கள் பார்க்கின்றோம் (போன வாரம் சந்தோஸ்சிவனின் ராதாவின் மகள் கார்த்திகா நடித்த படம் ஒன்று பார்த்தேன் .அதற்கு பிறகும் நான் தூக்கு போட்டு சாகாமல் இருப்பதே பெரியவிடயம் )

அப்படிதான் இதுவும் .உதுக்குள் போய் மெசேஜ் ,அரசியல் வக்கிரம் பிசினஸ் எல்லாம் பார்த்துக்கொண்டு இருக்கமுடியாது .

 

சும்மா எல்லாவற்றிலும் சரி பிழை கண்டுபிடித்து அரசியல் செய்ய நான் வேலை வெட்டியில்லாத தமிழ்நாட்டு அரசியல்வாதியல்ல .

 

இது அரசியல் இல்லை அர்ஜுன்.  இந்தக் கட்டுரை சமூகநோக்கிற்காக எழுதப்பட்டது.  குழந்தைகளைக் குழந்தைகளாகவே இருக்க, செயற்பட விடவேண்டும் என்பதற்காக எழுதப்பட்டது.   உங்களால், அரசியலையும். சமூக அக்கறையையும்கூட பிரித்துப் பார்க்க முடியாமல் இருக்கிறது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.