Jump to content

காமம் உடலின் இச்சையா ?? மனதின் இச்சையா ??


Recommended Posts

பிறவியிலிருந்து பாலுணர்வு சார்ந்த எந்த விடயத்தையும் அறியாத ஒருவனால் காமம் கொள்ள முடியுமா?? இது மூளையின் தூண்டுதலினால் நடக்கிறதா இல்லை மூளை உணர்வற்ற நிலையில்(brain dead) கூட காமம் சாத்தியமா? மூளை உணர்வற்ற நிலையில் சாத்தியமாயின் இதுவும் சிறுநீர் கழித்தல் போன்றதொரு இயல்பான நிகழ்வு தானே? இயல்பாக இருக்குமெனில் மானுடக் கூட்டம் மொத்தமும்  ஏன் இதற்குள் விழுந்துக் கிடக்கிறது ?
 
 
உங்களின் கருத்துக்களை அறிய ஆவல் 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூளை உணர்வற்ற நிலையில் சாத்தியமாயின் இதுவும் சிறுநீர் கழித்தல் போன்றதொரு இயல்பான நிகழ்வு தானே? இயல்பாக இருக்குமெனில் மானுடக் கூட்டம் மொத்தமும் ஏன் இதற்குள் விழுந்துக் கிடக்கிறது ?
சிறுநீர் கழித்தல் மனித வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியமோ அதேபோல் இதுவும் மனித வாழ்க்கைக்கு ரொம்ப அவசியம்......75% உடலின் இச்சை 25% மனதின் இச்சை
Link to comment
Share on other sites

நிச்சயமாக மனதின் இச்சைதான். மூளையின் தூண்டுதலே அது. அதனால் தான் தாங்கொணா மன உழைச்சல் அல்லது மனகவலையான, அதிர்ச்சியான உணர்வு இருக்கும்  தருணங்களில்  பாலுணர்வு தோன்றுவதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூளை உணர்வற்ற பின்னர் எப்படிக் காமம் சாத்தியமாகும்??? அப்படியாயின் கணவன் மனைவி இருவரில் ஒருவர் காம உணர்வுடன் அணுகும் போதெல்லாம் மற்றவருக்கும் உணர்வு ஏற்பட அல்லோ வேண்டும். அப்படி எல்லோருக்கும் ஏற்படுவதில்லையே.

Link to comment
Share on other sites

உடலையும் மனதையும் தனித் தனியாக பிரித்து அணுகுவது குழப்பமானது

உடலில் சக்தியற்றபோது காமம் சாத்தியமில்லை அதே நேரம் உடலில் சக்தியிருந்தும் மன அழுத்தம் கவலை துக்கம் போன்றவற்றால் மனம் பாதிக்கப்பட்டிருக்கும் போதும் சாத்தியம் இல்லை.

காமம் உடல் சார்ந்த இயக்கமாகவும் அதை கட்டுப்படுத்தும் சக்தி மனம் சார்ந்ததாகவும் இருக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாவற்றுக்கும் எமது மூளையே முதற்காரணம்.
ஒரு அழகான பூவை எமது கண் பார்த்துவிட்டால் கண் உணர்ச்சி நரம்புகள்  மூலமாக
மூளைக்குத் தகவல் அனுப்பப்பட்டு மூளையின் தூண்டுதலால்
அந்தப்பூவை ரசிக்கின்றோம். :lol:

அதாவது மூளை தவல்களைப் பெற்று தேவைக்கேற்றவாறு உடல் உறுப்புக்களை இயங்க வைக்கின்றது

என்று  சொல்ல வருகின்றேன்.  
மூளையைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் எதையும் வெல்லும் சக்தி எமக்குக் கிடைக்கும் :D .

 

Link to comment
Share on other sites

 

பிறவியிலிருந்து பாலுணர்வு சார்ந்த எந்த விடயத்தையும் அறியாத ஒருவனால் காமம் கொள்ள முடியுமா?? இது மூளையின் தூண்டுதலினால் நடக்கிறதா இல்லை மூளை உணர்வற்ற நிலையில்(brain dead) கூட காமம் சாத்தியமா? மூளை உணர்வற்ற நிலையில் சாத்தியமாயின் இதுவும் சிறுநீர் கழித்தல் போன்றதொரு இயல்பான நிகழ்வு தானே? இயல்பாக இருக்குமெனில் மானுடக் கூட்டம் மொத்தமும்  ஏன் இதற்குள் விழுந்துக் கிடக்கிறது ?
 
 
உங்களின் கருத்துக்களை அறிய ஆவல் 

 

 

 

காமம் என்பது இயற்கையின் விதி. ஒரு உயிரினம் தன் இனம் அழியாமல் இருக்க, சந்ததியை பெருக்க இயற்கை காம உணர்வை அனைத்து உயிரினங்களுக்குள்ளும் விதைத்துள்ளது. தன்னை தானே புணரும் மண் புழுவில் இருந்து (ஆண் பெண் இரண்டும் ஒரே புழுவில் இருக்கும்) மனிதன் வரைக்கும்  காமம் இன்றேல் சந்ததி பெருக்க முடியாது. Reproduction இற்கு தேவையானதை இயற்கை விதைத்துள்ளது.

 

பிறவியில் இருந்து ஒருவனால் / ஒருத்தியால் பாலுணர்வு சார்ந்த விடயத்தினை அறியாமல் இருக்க முடியாது. தன் பாலுறுப்புகளினை தொடுவதன் மூலம் உண்டாகும் கிளர்ச்சியை ஒரு குழந்தை தன் மூன்றாவது மாதத்திலேயே உணரத் தொடங்கி விடும் என்று மருத்துவர்கள் / விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.  ஒரு வயது / இரு வயது குழந்தைகள் தம் பாலுறுப்புகளை தொட்டும் பிடித்தும் தடவியும் கொண்டு இருப்பதை சாதாரணமாகவே காணமுடியும். எனவே அது மருத்துவரீதியிலான காராணங்களை தவிர்த்து பிறவியில் இருந்தே பாலுணர்வை அறிய முடியாமல் ஒருவர் இருக்க முடியாது.

 

பசி எடுத்தால் தான் சாப்பிட முடியும். சாப்பிட்டால் தான் உடலுக்கு தேவையான சக்தியை பெற முடியும். காமம் வந்தால் தான் உடலுறவு கொள்ள முடியும், உடலறவு கொண்டால் தான் சந்ததியை பெருக்க முடியும். எல்லாம் இயற்கை விதி!

Link to comment
Share on other sites

 ஒரு வயது / இரு வயது குழந்தைகள் தம் பாலுறுப்புகளை தொட்டும் பிடித்தும் தடவியும் கொண்டு இருப்பதை சாதாரணமாகவே காணமுடியும். 

 

:D  :D

 

சுய சரிதை மாதிரி இருக்கே நிழலி.

 
(எல்லாக் குழந்தைகளும் இப்படிச் செய்வதில்லை)  :D
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பசித்தால் சாப்பிடுகின்றோம்

 

இதில் நேரம்

மனம்

மூளை

மகிழ்ச்சி

துன்பம்............ என்று ஏதுமில்லை....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

100 % அனுபவிப்பாளனாக மனம்தான் உள்ளது. அதற்கு உடல் ஒரு கருவியாகும். உடலில் சக்தியற்ற நிலையிலும் மனம் காமத்தை அனுபவித்துக் கொண்டிருக்க முடியும், அப்போது ஏற்படும் உடலின் இயலாமையின் துயரையும் அந்த மனமே அனுபவித்து சலிப்பும் அடைகிறது.

 

காச்சலுக்கு ஒரு ஊசி போடவரும் வைத்தியரிடம் எனக்கு ஊசி வேண்டாம், குளிசையோ, மருந்தோ தாருங்கோ என அடம்பிடிக்கும் மனம், அதுவே உனது வருத்தத்துக்கு தினமும் ஊசி போடவேண்டும் எனும் நிலை வரும்போது அதை ஏற்றுக்கொண்டு உடலையும் அதுக்குத் தயார்ப் படுத்தி விடுகிறது.

 

காமத்தைப் பொறுத்தவரை பெற்றோர்களின் அதி உச்ச காமத்தினின்றும் ஜனித்த இந்த உடம்பானது காமக் களியாட்டக் கூடமாகத்தான் இருக்கும் / இருக்கிறது. ஆகவே இதிலிருந்து எல்லாப் பக்கமும் காமக் கதிர்தான் கிளம்பிக் கொண்டிருக்கும். அது இயல்பானது. இங்கேதான் மனதின் செயல் ஆரம்பிக்கின்றது. சொந்த உறவுகளாகிய தாய்மார் ,சகோதரங்கள் , பிள்ளைகள் ,மற்றும் உறவுகள் அருகில் காமம் மனதால் நினைக்கப் படுவதில்லை. ஆனால் தனிமையில் இருக்கும்போதோ,அன்றி வேறு புற வேலைகளில் இருக்கும்போதோ எங்கோ தொலைவில்  இருக்கும் ஒரு பெண்ணையோ, நடிகைகளையோ கனவுகண்டு கிளர்ச்சி யடைகிறது. அதனால்தான் சம்சாரிகளும், பிரமச்சாரிகளும் தனிமையஐத் தவிர்க்கவேண்டும் என்றும், உண்மையான சந்நியாசிகள் (பாலின கவர்ச்சியை கடந்தவர்கள்) தனிமையை நாடவேண்டும் என்றும் சைவமதம் வலியுறுத்துகின்றது.

 

இங்கும் மனதுக்கு ஒரு இடஞ்சல் உண்டு. மனம் எப்போதும் ஒன்றை நினைத்தால் அதையே மீன்டும்,மீன்டும் விரிவாக நினைத்துக் கொண்டே போகும் தன்மையது. காமம் சார்ந்தும் அது அப்படியே செய்கிறது. ஆனால் இடையிலே நாம் வேறொரு நல்ல நினைவைப் புகுத்தினால் அது முதலாவதை விட்டுட்டு, இதைப் பிடித்துக் கொண்டு போகும் . ஒருவழிப் பாதைபோல்.

 

ஆகவே சமந்தாவை நினைத்து மனம் விரிந்துகொண்டு போகும்போது, சமர்த்தாய் சண்முகனை நினைத்து வீடுபேறு அடையுங்கள்...! :)

 

 

 

Link to comment
Share on other sites

ஆகவே சமந்தாவை நினைத்து மனம் விரிந்துகொண்டு போகும்போது, சமர்த்தாய் சண்முகனை நினைத்து வீடுபேறு அடையுங்கள்...! :)

 

இது சண்முகனுக்கே பிடித்திருக்காது. சண்முகனே தெய்வானை இருக்க சமந்தாவில் இல்லை இல்வை வள்ளி வந்தவுடன் மனத்தை பறிகொடுத்தவர். நாம் எம்மாத்திரம்.  :icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen:

 

Link to comment
Share on other sites

\\காமம் உடலின் இச்சையா ?? மனதின் இச்சையா ??\\

 

நான் நினைக்கிறேன் இந்த விடை ஒவ்வொரு ஆண்மகனதும் கைகளிலேயே தங்கி இருக்குது என்று ... :rolleyes:  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனம் அல்லது மனசு என்றால் என்ன? தயவுசெய்து யாரும் தெளிவுபடுத்துவீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடலில் எழுச்சி, குறைந்த ஒருவர்... உறவு கொள்ள விரும்பினாலும், முடியாது என்று தெரிந்த போது... அதனை நிறைவேற்றியே.... தீர வேண்டும் என்று மனம் சொல்லும் போது......
 

மனதின் ஒரத்திலிருந்து... ஒரு குரல், "ஏம்பா... இதுக்கு கவலையாய் இருக்கிறாய்?, உடனே.... ஒரு வயாக்கிரா  குளுசையை வாங்கி, விழுங்கு." என்று கட்டளையிடுகிறது.
 

எனவே.... காமம், மனதின் இச்சை என்றே கூற வேண்டும். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனம் அல்லது மனசு என்றால் என்ன? தயவுசெய்து யாரும் தெளிவுபடுத்துவீர்களா?

இதுதான் கேள்வி !
 
இதுக்கு பதில் இல்லாமல் ....... எப்படி. அதனால் மனத்தால் வருகிறது என்று சொல்ல முடியும்?
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி சொன்னது போல. இயற்கை உயிரிகளின் 'உடல் 'நிற மூர்த்தங்களில்' 'காமத்தை' புரோகிராம் பண்ணி வைச்சிருக்கிறது போல தான் கிடக்கு!

 

கோழிக்கு முட்டைகளை ஒரே இடத்தில இடும் படியும், அதன் மீது படுத்திருந்து அடை காக்கும்படி எவரும் சொல்லிக்கொடுப்பதில்லை!

 

எனது வீட்டில் இருக்கும் சில கிளிகள் தங்கள் வாழ்நாளிலேயே, செயற்கைக் கூட்டில் பிறந்தவை! இயற்கைக் கூட்டை என்றுமே பார்த்திராதவை! நான் ஒரு நாள் சந்தைக்குப் போய், ஒரு நன்றாகக் காய்ந்து போன மரக் குற்றி ஒன்றை வாங்கி வந்து கூட்டினுள் வைத்தேன்!

 

அடுத்த நாளே, அவை செயற்க்கைக் கூட்டை விட்டு விட்டு, அந்த மரத்தில் துளை போட்டு, அந்தப் பொந்துக்குள்ளேயே .. முட்டையிட்டுக் குஞ்சுகளும் பொரித்தன!

 

அத்துடன்  காமமானது மனது சம்பந்தப்பட்டதாயின்,, மனதை வென்ற விசுவாமித்திரன், இந்திரன், நித்தியானந்தா. மற்ற மதத்தின் குருமார்கள் எல்லாரும் பெண்களின் பின் ஓடினார்கள்? நம்ம சிவனே ... மோகினி வடிவம் கொண்ட விஷ்ணுவைக் கலைத்ததாகக் 'கதை' உள்ளதே?

 

எனவே காமம் என்பது.. வெறும்  உடற் கவர்ச்சியினால் மட்டுமே முதலில் ஏற்படுகின்றது! பின்னர் நாங்கள் சமாதானத்துக்காக, ஆயிரம் சாட்டுக்கள் கூறி, அதற்குப் புனித முலாம் பூசுகிறோம்!

Link to comment
Share on other sites

நிழலி ,புங்கை உங்கள் கருத்துக்கள் சரி என்றாலும் கேள்வி அதுவல்ல என நினைக்கின்றேன் .நான் விளங்க்கிக்கொண்டது இப்படித்தான் ,

 

மனம் தான் காமத்தின் இச்சை . மனத்தால் உருவாகி உடலால் தீர்க்கப்படுவதுதான் காமம் .

 

ஒருவரை பார்க்கும் போதும் அல்லது படம் பார்க்கும் போது கூட காமம் (பாலுணர்வு) உண்டாகின்றது என்றால் இங்கு அலைபாய்வது மனம் தான் . மனம் அந்த உணர்வில் இல்லாத போதும் கூட ஸ்பரிசத்தால் ஒருவரின் தொடுகையில் காமம் பாலுணர்வு உண்டாகின்றது ஆனாலும் மனம் தான் அந்த உணர்வை கொண்டுவருகின்றது .

.

 

 

 

 

 

Link to comment
Share on other sites

 

இதுதான் கேள்வி !
 
இதுக்கு பதில் இல்லாமல் ....... எப்படி. அதனால் மனத்தால் வருகிறது என்று சொல்ல முடியும்?

 

 

 

மனம் அல்லது மனசு என்றால் என்ன? தயவுசெய்து யாரும் தெளிவுபடுத்துவீர்களா?

 

 

மனம் என்றால் என்ன?
 
அதிகாலையில் எழுந்ததும் பல் துலக்கிவிட்டுநெற்றிக்கு இட்டுக்கொண்டு,நேற்று பாதியில் நிறுத்திவிட்ட பாடத்தைப் படிக்க ஆரம்பிக்கிறார் நமதுநண்பர் முருகன்இந்த வேலைகளை செய்வதற்கு அவரது கண்கள்முதலான ஐம்புலன்களும் கால் கை முதலான உடல் கருவிகளும்உதவுகின்றனகண் முதலான கருவிகளை அறிவுக் கருவிகள் என்றும் கைமுதலான கருவிகளை செய்கருவிகள் என்றும் நாம் அழைக்கலாம்இவையாவும் முருகனின் உடம்புக்கு வெளியே நிகழும் செயல்களுக்குக்காரணமாக உள்ளனஆதலால் இவற்றைப் புறக் கருவிகள் என்றுஅழைப்பது வழக்கம்.

முருகனின் செயல்களுக்கெல்லாம் புறக்கருவிகள் மட்டுமே காரணம் என்றுஎப்படிச் சொல்ல முடியும்இவை வேலைகளைச் செய்வதற்கு முன்புமுருகனுக்குள்ளேஅவனது மூளையில் எண்ணங்கள் உருவாகவேண்டுமல்லவாஅந்த எண்ணங்களின் தொகுப்பைத்தான் நாம் பொதுவாகமனம் என்று குறிப்பிடுகிறோம்மனமானது உள்ளிருந்தபடிசெயல்படுவதால்தான் முருகனின் உடல் வெளியிருந்தபடி செயல்படுகிறது.ஆதலால் மனத்தொகுப்பை அகக் கருவி என்று சொல்கிறார்கள்.

கண்முதலான அறிவுக்கருவிகளையும்கை முதலான செய்கருவிகளையும் புறக்கருவிகள் என்றும் மனத்தை அகக்கருவி என்றும்வகைபடுத்துகிறோம்மனம் என்ற அகக்கருவியை மனம்புத்தி,அகங்காரம்சித்தம்என்று விரித்து நான்காவும் சொல்லலாம்மனம் என்றுஒரு பொதுச் சொல்லலும் அழைக்கலாம்மனத்தை ஒரு பொருளாகக்கொள்ளாமல் மனம்புத்திசித்தம்ஆங்காரம் என்று நான்காக விரித்துஅழைப்பதற்குக் காரணம் இருக்கிறதுமனம் செயல்படும் விதத்திலிருந்துஇப்படி நால்வகை பிரிவுகளை அறிய முடிகிறதுமேலை நாட்டுவிஞ்ஞானமும் உளவியலும் மனத்தை இப்படி பாகுபடுத்தி அறியமுற்படுவதில்லைஇந்திய சித்தாங்களில் மட்டுமே இது போன்ற விரிவானவிளக்கங்கள் காணப்படுகின்றன.

கண்கள் காண்பதை காது அறிவதில்லைஅதுபோலவே காது அறிந்ததைகண்களோ நாக்கோ அறிவதில்லைஎனவே அறிவுக்கருவிகளாகிய இவைவெறும் கேமராமைக் போன்ற சாதனங்களே ஒழிய கண்டதையோஉண்டதையோ கேட்டதையோ தாமாக அறிவதில்லைமூளையில்இவற்றிற்கென்று ஒதுக்கப்பட்ட பகுதிகளில் இவற்றிலிருந்து வழங்கப்பட்டதகவல்கள் யாவும் உணர்வுகளாக மாற்றப்பட்டு மனம் என்றகருவியாலேயே அறியப்படுகிறதுமனமானது ஐந்து புலன்களிலிருந்தும்வரும் தகவல்களை ஒருங்கிணைத்து அறிகிறதுமனத்தின் வேலைதகவல்களை ஒருங்கிணைப்பதாக இருந்தாலும் அதனால் கண்டதையோகேட்டதையோ இன்னதென்று அறிவதற்கு அது புத்தியின் துணைவேண்டும்.

புத்தி என்பது கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க் போன்றதுஅதில் பிறந்ததுமுதல் கண் காது முதலான அறிகருவிகள் மூலம் அறிந்ததுஅனுபவத்தால்கற்றதுபள்ளிக்கூடத்தில் பயின்றது ஆகிய அனைத்தையும் பதித்துவைத்துக்கொண்டுள்ளதுமனித மூளையின் செரிபிரல் கார்ட்டெக்ஸின்பெரும்பகுதி இந்தத் தகவல்களுக்காகத்தான் ஒதுக்கப்பட்டுள்ளதுபுத்தியில்தகவல்களைப் பதிக்கும் வேலையை மூளையின் மையத்தில் இருபக்கவாட்டிலுமுள்ள ஹிப்போகேம்ப்பஸ் என்ற எழுத்தாணிதான்செய்கிறது.

மனமானது புத்தியின் உதவியுடன் கருவிகள் மூலம் அறிந்ததை இன்னதுஎன்று தெளிகிறதுமனத்தை நாம் கம்ப்யூட்டரின் ரேம் நினைவாகக்கொள்ளலாம்தற்காலிக நினைவு மட்டுமே மனத்தில் இருக்கும்அவைநிரந்தரமாக்கப்படவேண்டுமாயின் புத்தியில் அவை பதிந்தாக வேண்டும்.சித்தம் என்பது சிந்திக்கும் வேலையைச் செய்யும் அகக்கருவிபுத்தி வெறும்நினைவகமாக இருப்பதால் அது கோப்புகளை சேமித்து வைக்கும் கிடங்குஎன்றுதான் கொள்ளவேண்டும்எனவே சித்தம் எனும் அகக்கருவிமனத்தினால் அறிந்ததை புத்தியின் கண் உள்ள தகவலின் அடிப்படையில்இது இப்படித்தான் என்று நிச்சயிக்கும் வேலையையும் எதிர்காலத்தைப்பற்றி சிந்திக்கும் செயலையும்இப்படி செய்யலாம் என்று திட்டம் போடும்வேலையையும் செய்கிறது.

மனம் அறிந்ததை சித்தமானது புத்தியின் உதவியால் நிச்சயம் செய்கிறதுஎன்பதை அறிந்தோம்இத்தனை செயலும் யாருக்காக எனில் அதுஆங்காரம் எனப்படும் இன்னொரு அகக்கருவியின் பயனுக்காகவாம்.ஆங்காரம் அல்லது அகங்காரம் இல்லாமல் மனமோ புத்தியோ சித்தமோசெயல்பட்டுப் பயனில்லைகம்ப்யூட்டரில் புத்திக்கு நிகரான திடநினைவகம் இருந்தும்மனத்திற்கு நிகரான ரேண்டம் அக்சஸ் நினைவுஇருந்தும்சித்தத்திற்கு நிகரான மென் பொருட்கள் செயல்பட்டாலும் அதில்ஆங்காரம் எனும் அங்கம் இல்லாதால் கம்ப்யூட்டர் என்ன செய்தாலும்அதன் பயனை அது அனுபவிக்க முடியாமல் போகிறதுமனம்புத்திசித்தம்,என்ற மூன்று உறுப்புகளை கம்ப்யூட்டர் பெற்றிருந்தாலும் அதற்குஆங்காரம் எனப்படும் "நானிருக்கிறேன்என்னுடையதுபோன்ற செயல்கள்இல்லாததால் அது சடக் கருவியாகவே உள்ளது.

இன்றைய நவீன உளவியலும் நரம்பியலும் சேர்ந்து மூளையின்செயல்களை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து ஆராய்ந்துகொண்டிருக்கிறதுஅவர்கள் மனம் புத்தி சித்தம் ஆங்காரம் என்றுவேறுபடுத்தி ஆராயாவிட்டாலும் மேற்கூறிய பகுதிகளை வேறுபெயர்களில் சுட்டிக்காட்டியபடி இருக்கிறார்கள்ஆங்காரம் என்பதைஅவர்கள் கான்சியஸ் என்று அழைக்கிறார்கள்கான்சியஸானது மூளையில்எப்படி உருவாகிறது என்பதில் நிறைய கருத்து வேறுபாடுகள் உள்ளனபுத்திஎனும் பகுதியை மெமொரி என்று அழைக்கிறார்கள்மனம் என்பதைமென்ட்டல் ஆக்டிவிட்டி என்றும் வெறுமனே மைன்ட் என்றும்அழைக்கிறார்கள்சித்தம் என்பதை 'தாட்என்று சொல்கிறார்கள்.

உயிரியல்நரம்பியல்மற்றும் உளவியல் வல்லுநர்கள் மனத்தைமூளையின் செயல்களினால் ஏற்படும் ஒரு நிகழ்வதாக கருதி மூளைநரம்பமைப்பின் அடிப்படையில் மனத்தை விளக்குகிறார்கள்இதை நியூரல்கோரிலேட்ஸ் ஆஃப் கான்சியஸ்னஸ் என்று அழைக்கிறார்கள்மனமானதுமூளையில்தான் தோன்றி செயல்படுகிறது என்பதற்கு நிறைய ஆதாரங்கள்இருக்கின்றனமூளையில் அடிபட்டால் மனம் கலக்கமடைவதை நாம்அறிகிறோம்மனத்தில் ஏற்படும் சித்தக் கோளாறுகளுக்கு மூளையில்செயல்படும் மருந்தைத்தான் பயன்படுத்துகிறோம்மூளையைச்சரிசெய்தால் மனம் சரியாவதை அறிகிறோம்மூளையை பாதிக்கும் கள்சாராயம் மற்றும் லாகிரிப் பொருட்கள் மனத்தையே பாதிக்கின்றனஎன்பதையும் நாம் அறிவோம்எனவே சுருங்கச் சொல்லவேண்டுமாயின்மனமும் மூளையும் ஒன்றேமூளை கருவி என்றால் மனம் அதன்செயலாகும்.

இது இப்படியிருக்க சித்தாந்திகள் மனத்தை மூளையிலிருந்து பிரித்துசுதந்திரமாகவும் தனியாகவும் செயல்படும் கருவியாக வைக்கிறார்கள்.மனிதன் இறந்து அவன் உடல் மண்ணில் மறைந்த பிறகும் மனமானதுசூக்கும வடிவத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் என்று சொல்கிறார்கள.இந்த இடத்தில் அறிவியலும் ஆன்மிகமும் முறண்பட்டுக் கொள்கின்றன.மனமானது மூளையிலிருந்து பிரிக்க முடியாதது என்று அறிவியல்சொல்லஆன்மிகமோ மூளையிலிருந்து தனித்தும் மனம் செயல்படும்என்று சொல்கிறதுஅறிவியல் தன் கருத்தை வலியுறுத்த ஏராளமானஆதாரங்களை முன்வைக்கிறதுஆனால் ஆன்மிகமோ சித்தர்களின் சொல்ஒன்றையே ஆதாரமாகக் கொள்கிறதுவேறு நேரடியான காட்சி ஆதாரம்அதனிடம் இல்லைஅறிவியல் ஆய்வாளர்கள் மேலும் ஆராய்ச்சி செய்தால்ஆன்மிகம் சொல்வது உண்மையா இல்லையா என்பது வெளிப்படும்.

அறிவியல்கூட மூளை என்ற சடப்பொருளிலிருந்து எப்படி மனம் என்கிறஉணர்வு எழும்புகிறது என்பதற்கு சரியான விளக்கங்களைத் தரவில்லை.அவர்களும் குழம்பிக் கொண்டிருக்கிறார்கள்மூளையின் செயலும்கம்ப்யூட்டரின் செயலும் அடிப்படையில் ஒன்றுபோலவே இருக்கின்றன.இரண்டிலும் மின்சாரம்தான் செயல்படும் சக்தியாக இருந்துவருகிறது.நரம்பில் மின்சாரம் பாய்வதுபோல கம்ப்யூட்டரின் சிப்பத்திலும் மின்சாரமேபாய்ந்து வேலைகளை செய்கிறதுஅப்படியானால் மூளையில் மனம் எனும்உணர்வு எழுவது போல கம்ப்யூட்டரிலும் ஒரு உணர்வு எழுந்தாகவேண்டும்.

வருங்காலத்தில் மனிதர்கள் கம்ப்யூட்டரை மனித நியூரான்களுக்கு நிகராகச்செயல்படும்படி வைத்துவிட்டார்களானால் அப்போது மனம் என்ற உணர்வுகம்ப்யூட்டருக்கு ஏற்படலாம்ரோகர் பென்ரோஸ் போன்ற தலை சிறந்தகணித கணிணி மேதைகள் மனிதனால் கம்ப்யூட்டருக்கு மூளையின்செயலைப்போன்ற மென்பொருளை வழங்கவே முடியாது என்றுஉறுதியுடன் இருக்கிறார்கள்.

மூளையின் செயல்பாட்டைப்போல கம்ப்யூட்டரால் ஒருக்காலும்செய்யவோ செய்விக்கவோ முடியாது என்று நிச்சயமாக நம்புகிறார்கள்.ஒருவேளை சித்தாந்திகள் கூறுவதுபோல மூளை வெறும் கருவிமாத்திரம்தனோஅதில் மனம் எனும் வேறு ஒரு சக்தி நுழைந்து அதைஆட்டுவிக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறதுஅப்படி மனமானதுமூளைக்கு வேறான சக்தி என்றால் ஏன் பிறந்தபோதே அது முழுவீச்சில்செயல்படாமல் வயதுக்கேற்பமூளை வளர்ச்சிக்கெற்ப அதுவும்வளருகிறதுமூளைக்கு வெளியிலிருந்து செயல்படும் ஒரு சக்திமூளையை வாகனமாகப் பயன்படுத்துமேயானால் அது வாகனத்தின்வளர்ச்சியை நம்பியிருக்கக்கூடாதுஎன்று வாதிடத் தோன்றுகிறதுஒருவேளை மூளை மெள்ள முதிர்வடைவதால்தான் மனத்தின் செயலும்மெள்ள முதிர்வடைவது போலத் தெரிகிறதோ என்றும் வாதிடலாம்இந்தவாத விவாதங்கள் பல நூற்றாண்டுகளாக உலகெங்கும் நிகழ்ந்தபடிஇருக்கிறதுமுடிவு என்று வருமோ தெரியவில்லை.

முனைவர்மணிபேராசிரியர்பி.எஸ்.ஜிகலை அறிவியல்கல்லூரிகோயம்புத்தூர்.

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடல் படுத்து நல்ல நித்திரையில் இருக்கும் போதே நயன்தாரா கனவில் வந்து காதல் உறவாடி கடைசியில் எல்லாம் (அதாம்பா!!அதி உச்சம்)நடந்து முடிகிறதே????மனம் நித்திரை கொள்ளாதா?மூளை ஓய்வெடுப்பதில்லையா?

Link to comment
Share on other sites

கருத்திட்ட அனைத்து கள உறவுகளுக்கும் நன்றி. மனது பற்றி நுணா ஒரு பெரிய கட்டுரையே இணைத்துள்ளார்.அதற்கும் நன்றி !!
 
உடல் சரியில்லாவிட்டாலும் / மனது சரியில்லாவிட்டாலும் காமம் கொள்ள முடியாது. இதுதான் பொதுப்பார்வையாக உள்ளது. உடல் ஒரு திடப்பொருள்.  வெளியிலிருந்து அதன் உறுதியைக் குலைக்க முடியும். உடல் சரியில்லாவிட்டால் காமம் கொள்ள முடியாது என்பது ஏற்புடையது.
 
ஆனால் மனம் !!?? மனம் எனபது என்ன?? மனம் என்பது எண்ணங்கள் தானே. இதுவரை நாம் கண்ட விடயங்கள், கேட்ட அனுபவங்கள் இவற்றைச் மூளையில் சேமித்து அதனிலிருந்து  தேவைப்படும்போது முடிவு எடுக்கவும் அதனை செயற்படுத்தவும் ஆவன  செய்யும் ஓர் ஏவலாளி தானே?? 
 
ஒரு பெண்ணையோ ஆணையோ தீண்டும்போது எல்லா நேரத்திலும் ஒரே மாதிரியான உணர்வு தோன்றுவதில்லை. எனக்கு இங்கே தொட்டால்தான் பிடிக்கும்... இப்படி பார்த்தால் தான் பிடிக்கும்.. இந்த உடை உடுத்தும்போது எனக்கு உணர்வு தூண்டப்படுகிறது, இப்படி பேசும்போது எனக்கு உணர்வு தூண்டப்படுகிறது என்று சொல்வதெல்லாம் மனதிற்கு ஊட்டப்பட்ட கற்பிதங்கள் தானே?? இது நாம் பார்த்த விடயங்கள் நமக்கு சொல்லப்பட்ட விடயங்கள் இவற்றிலிருந்து பெற்றவை தானே.. இது இயல்பானது இல்லையே!!  
 
அப்படியெனில் மனம் எந்தவிதமான எண்ணத்தையும் கொண்டிருக்காமல் / வெற்றாகா(Empty) இருக்கும்போது அதாவது மூளையில் எந்தவிதமான எண்ணமும் சேமிக்கப்படாமல் இருக்கும்போது, ஒரு ஆணின் பரிசம் பெண்ணையோ / பெண்ணின் பரிசம் ஆணையோ காமத்துக்கு உள்ளாக்குமா? 
 
 உடலும் மனதும் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும்போது கூட ஆழ்ந்த நித்திரையில் இருக்கும் சிலர் காமம் கொண்டு உச்சம் அடைவது உண்டு. இங்கு மனதின் வேலை என்ன? 
 
பண்டைய எகிப்தில் ஒரு கதை உண்டு. பூமிக் கடவுளுக்கும் ஆகாய தேவதைக்கும் பிறந்த முதல் மகன் ஓசிரிஸ். அவனது மனைவி ஐரிஸ். ஓசிரிஸ்-ன் இளைய சகோதரன் ‘ஸேத்' அவனை வெட்டிக் கொன்று விடுகிறான். இறந்த கணவனின் உடலுடன் உறவு கொண்டு ஐரிஸ் கருத்தரித்து ‘ஹோரஸ்' என்ற சக்தியுள்ள மகள் பிறக்கிறாள். ஹோரஸ் தனது அதீத திறனால் தனது சித்தப்பா ‘ஸேத்'ஐ கொல்கிறாள்.
 
அறிவியல் பூர்வமாக இறந்த பின்னும் ஒரு விந்தணு 40 முதல் 70 மணி நேரம் வரை உயிருடன் இருக்கவல்லது. மேலும் அகால மரணமடைந்த உடலில் குறிப்பிட்ட காலத்திற்குள் ஆணுறுப்பின் எழுச்சி சாத்தியம் என்று கூறுகின்றனர்.  ஆணுறுப்பின் எழுச்சியும் / உச்சமும் பெரும்பாலும் நம்மையறியாமல் நிகழ்வது. இதயத்துடிப்பு நின்ற பின்னரும், மூளை இறந்த பின்னரும் எழுச்சி சாத்தியமாயின் மனதுக்கும் காமத்துக்கும் என்ன சம்பந்தம்??
 
 
தன் பாலுறுப்புகளினை தொடுவதன் மூலம் உண்டாகும் கிளர்ச்சியை ஒரு குழந்தை தன் மூன்றாவது மாதத்திலேயே உணரத் தொடங்கி விடும் என்று மருத்துவர்கள் / விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

 

நிழலி சொன்ன இந்தக் கூற்றை ஏற்பதில் எனக்கு தயக்கம் உள்ளது. மூன்று மாதக் குழந்தைக்கு பாலுறுப்பை தொடுவதினால் கிளர்ச்சி வருமா என்ன?? 
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காமம் உடலின் இச்சை தான்.மனம் நினைத்தால் அதனைக் கட்டுப்படுத்தலாம்.

Link to comment
Share on other sites

 

 

 
 
 
நிழலி சொன்ன இந்தக் கூற்றை ஏற்பதில் எனக்கு தயக்கம் உள்ளது. மூன்று மாதக் குழந்தைக்கு பாலுறுப்பை தொடுவதினால் கிளர்ச்சி வருமா என்ன?? 

 

 

 

ஆதித்ய இளம்பிறையன் மற்றும் ஈசனுக்கு,

 

இங்கு கனடாவில் எமக்கு இரண்டாவது  குழந்தை பிறந்த நேரத்தில் Parent guide என்ற மருத்துவத் துறையின் அங்கீகாகரம் பெற்ற ஒரு கையேடு ஒன்றை தந்தார்கள். அதில் குழந்தையும் பாலுணர்வும் என்றதன் கீழ் குறிப்பிட்டவற்றின் சாரம்சத்தினைத் தான் எழுதியிருந்தேன்.

 

இங்கு சென்று வாசித்து பாருங்கள்:

 

Common Sexual Behaviors in Childhood1,

http://nctsn.org/nctsn_assets/pdfs/caring/sexualdevelopmentandbehavior.pdf

 

Understanding early sexual development

http://kidshealth.org/parent/growth/sexual_health/development.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.