Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி காலமானார்

Featured Replies

article_1436845535-msv.gif

     
மெல்லிசை மன்னர் என தமிழ்ச் சமூகத்தால் அன்புடன் அழைக்கப்பட்ட பிரபல இசையமைப்பாளர் எம். எஸ் விஸ்வநாதன்( வயது 87) இன்று அதிகாலை 4.15 மணிக்கு மரணமடைந்தார்.

மனயங்கத் சுப்ரமணியன் விஸ்வநாதன் என்ற இயற்பெயர் கொண்ட எம். எஸ் விஸ்வநாதன் பாலக்காட்டில் உள்ள எலப்புள்ளி கிராமத்தில் மனயங்கத் சுப்பிரமணியன் - நாராயணி குட்டி தம்பதியினருக்கு 1928இல் பிறந்தார்.

நான்கு வயதில் தந்தையை இழந்து வறுமையில் வாடிய விஸ்வநாதன் மிக இளம் வயதிலேயே நாடகக் குழுவில் சேர்ந்தார். நடிக்கவும், பாட்டுப் பாடவுமே அவரது விருப்பமாக இருந்தது. 13 வயதில் திருவனந்தபுரத்தில் தனது முதல் மேடைக் கச்சேரியை நடத்திய அவர், 1950களில் எஸ். எம் சுப்பையா நாயுடு மற்றும் சி.ஆர் சுப்பாராமன் ஆகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றினார்.

1952இல சி ஆர் சுப்பாராமன் காலமாகிவிட, அந்த நேரத்தில் அவர் பணியாற்றிக் கொண்டிருந்த மருமகள், சண்டி ராணி, தேவதால் மற்றும் ஜெனோவா போன்ற படங்களை முடித்துக் கொடுத்தவர் எம்.எஸ். தான். பின்னர் கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன் தயாரித்த பணம் படத்துக்கு இசையமைப்பாளர்களாக எம்.எஸூம் டிகே ராமமூர்த்தியும் ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.

எம்.எஸ் - டி.கே ராமமூர்த்தி இரட்டை இசையமைப்பாளர்கள் முதன் முதலில் அதிகாரப்பூர்வமாக அறிமுகமான படம் பணம்-தான். அதன் பின்னர் இந்த இரட்டையர்கள் காலம்தான் தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறந்தது. 1952இலிருந்து 1965 வரை இந்த இருவரும் இணைந்து காலத்தால் மறக்க முடியாத பல காவியப் பாடல்களைப் படைத்தனர்.

இருவரும் இணைந்து 100க்கும் அதிகமான திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளனர். இது ஒரு மிகப்பெரிய சாதனையாகும். டிகே ராமமூர்த்தியைப் பிரிந்த பிறகு, தனியாக 700க்கும் மேற்பட்ட படங்களில் இசையமைத்தார் எம்.எஸ் விஸ்வநாதன். கடைசியாக அவர் இசையமைத்த படம் சுவடுகள்.

தமிழ் தவிர, மலையாளத்தில் 74 படங்களுக்கும், தெலுங்கில் 31 படங்களுக்கும் இசையமைத்துள்ளார் எம்.எஸ. கடந்த சில வாரங்களாகவே உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எம்.எஸ்.விஸ்வநாதன் இன்று அதிகாலை 4.15 க்கு காலமானார்.

இவர் தென்னிந்திய பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருதும், சிறந்த இசையமைப்பாளருக்கான கேரள அரசு விருதும் பெற்றவர். காலத்தால் அழியாத பல காவியப் பாடல் தந்த எம்.எஸ் விஸ்வநாதனின் மனைவி ஜானகி கடந்த 2012ஆம் ஆண்டு மறைந்தார். எம்.எஸ். - ஜானகி தம்பதிக்கு நான்கு மகன்கள், மூன்று மகள்கள்மார் உள்ளனர் அவரது உடல் சென்னை சாந்தோமில் உள்ள இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதிச் சடங்குகள் நாளை நடைபெறும்.

http://www.tamilmirror.lk/150198#sthash.PEJddxdm.dpuf

Edited by நிழலி
தலைப்பில் திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்

காலத்தால் அழியாத, மிக இனிமையான, எண்ணிலடங்கா பாடல்களின் சிற்பி..

 

roses-beautiful-bouquet-cool-elegantly-f

ஆழ்ந்த அஞ்சலிகள்..!

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு இசை சகாப்தம் நிறைவுக்கு வந்தது. ஐயா நீங்கள் போனாலும் உங்கள் இசை வாழும். ஆழ்ந்த அஞ்சலிகள்.

'மெல்லிசை மன்னர்' எம்.எஸ்.விஸ்வநாதன் மறைவு

 
 
எம்.எஸ்.விஸ்வநாதன் | கோப்புப் படம்
எம்.எஸ்.விஸ்வநாதன் | கோப்புப் படம்

பழம்பெரும் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் இன்று (செவ்வாய்கிழமை) காலமானார். அவருக்கு வயது 87.

தமிழ் திரையுலகின் மெல்லிசை மன்னர் என்று அழைக்கப்படுவர் எம்.எஸ்.விஸ்வநாதன். எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதித்து, மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தார்கள்.

உடல்நிலை சீரானதைத் தொடர்ந்து வீட்டுக்கு அழைத்து செல்ல குடும்பத்தினர் முடிவு செய்த நேரத்தில், மீண்டும் எம்.எஸ்.விஸ்வாநனின் உடல்நிலை மோசம் அடைந்தது.

இந்நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி அதிகாலை 4:15 மணிக்கு அவருடைய உயிர் பிரிந்தது. சென்னை சாந்தோமில் உள்ள அவரது இல்லத்தில் திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவருடைய உடல் வைக்கப்பட்டுள்ளது.

எம்.எஸ்.விஸ்வநாதனின் இறுதி சடங்கு நாளை (புதன்கிழமை) காலை நடைபெற உள்ளது.

எம்.எஸ்.விஸ்வநாதனின் வாழ்க்கைக் குறிப்பு:

* கேரளாவின் பாலக்காடு அருகே உள்ள எலப்புள்ளி கிராமத்தில் (1928) பிறந்தவர். 4 வயதில் தந்தையை இழந்தவர், கண்ணனூரில் தாத்தா வீட்டில் வளர்ந்தார். பள்ளியில் படித்ததில்லை. தியேட்டர்களில் நொறுக்குத் தீனி விற்பார். நீலகண்ட பாகவதரிடம் இசை பயின்றார். 13 வயதில் மேடைக் கச்சேரி நிகழ்த்தினார்.

* நடிகர், பாடகராக வரவேண்டும் என்பது அவரது விருப்பம். அது நிறைவேறவில்லை. சினிமா கம்பெனியில் சர்வராக வேலை பார்த்தார். பிறகு, இசையமைப்பாளர் சி.ஆர்.சுப்புராமன் குழுவில் இவர் ஆர்மோனியக் கலைஞராகவும், டி.கே.ராமமூர்த்தி வயலின் கலைஞராகவும் சேர்ந்தனர்.

* சுப்புராமனின் திடீர் மறைவால் பாதியில் நின்ற அவரது படங்களை இவர்கள் இருவரும் முடித்துக் கொடுத்தனர். ‘தேவதாஸ்’, ‘சண்டிராணி’ படங்களின் இணை இசையமைப்பாளர்களாக அறிமுகமாயினர். ‘பணம்’ திரைப்படத்தில் ஆரம்பித்து, ‘ஆயிரத்தில் ஒருவன்’ வரை 700 திரைப்படங்களுக்கு இணைந்து இசையமைத்தனர்.

* எம்எஸ்வி தனியாக 500 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். இளையராஜாவோடு சேர்ந்து 3 படங்களுக்கு இசையமைத்தார். ‘கண்ணகி’, ‘காதல் மன்னன்’, ‘காதலா காதலா’ உட்பட 10-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

* பீம்சிங், கிருஷ்ணன் பஞ்சு, திருலோகசந்தர், கே.பாலசந்தர் ஆகிய 4 இயக்குநர்களிடம் அதிகம் பணிபுரிந்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உட்பட பல மொழிகளிலும் 1,200 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார்.

* ‘புதிய பறவை’ படத்தில் வரும் ‘எங்கே நிம்மதி’ பாடலுக்கு அதிகபட்சம் 300 இசைக் கருவிகளையும், ‘பாகப்பிரிவினை’ படத்தில் வரும் ‘தாழையாம் பூ முடிச்சு’ பாடலுக்கு 3 இசைக் கருவிகளையும் பயன்படுத்தியவர். பியானோ, ஆர்மோனியம், கீ போர்டு அற்புதமாக வாசிப்பார். ‘நீராரும் கடலுடுத்த..’ என்று தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு இசையமைத்தவர்.

* கர்னாடக இசை மேதைகள் எம்.எல்.வசந்தகுமாரி, பாலமுரளி கிருஷ்ணா போன்றவர்களை தன் இசையில் பாடவைத்துள்ளார். இவரும் பல பாடல்களைப் பாடியுள்ளார்.

* இந்தியா - பாகிஸ்தான் போரின் முடிவில் 1965-ல் போர் முனைக்குத் தன் குழுவினரோடு சென்று ஆர்மோனியத்தை கழுத்தில் மாட்டிக்கொண்டு, காயமுற்ற படை வீரர்களுக்காகப் பாடினார்.

* ஒரே பிறந்த தேதியைக் கொண்ட தமிழ்த் திரையுலக ஜாம்பவான்கள் எம்எஸ்வி-யும், கவியரசு கண்ணதாசனும் சிறந்த நட்புக்கு உதாரணமாகத் திகழ்ந்தனர். இவர் இசையமைத்த ‘அத்தான் என்னத்தான்’ போன்ற பாடல்களைப் பாடும் வாய்ப்பு தனக்குக் கிடைத்தால் சென்னையிலேயே தங்கிவிடுவேன்’ என்று லதா மங்கேஷ்கர் ஒருமுறை கூறினார்.

* மெல்லிசை மன்னர், கலைமாமணி, திரை இசை சக்கரவர்த்தி உள்ளிட்ட பல பட்டங்களையும் ஃபிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது உட்பட பல விருதுகளையும் பெற்றவர்.

http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/மெல்லிசை-மன்னர்-எம்எஸ்விஸ்வநாதன்-மறைவு/article7420166.ece

 

ஆழ்ந்த அனுதாபங்கள்.:(

ஒன்றா இரண்டா எத்தனை  பாடல்கள் அவர் இசை அமைத்த சில பாடல்கள்

 

 

 

 

 

மறைந்த இசை மன்னர் எம்.எஸ்.வி-யின் பெர்சனல் பக்கங்கள்

இரண்டு தலைமுறையை இசையில் தாலாட்டி மறைந்த இசை மன்னர் எம்.எஸ்.வி-யின் பெர்சனல் பக்கங்கள்...

star_1.jpgஎம்.எஸ்.விஸ்வநாதன் பிறந்தது கேரளாவில் பாலக்காடு அருகில் எலப்புள்ளி என்ற கிராமத்தில். பிறந்த வருடம் 1928 ஜூன் 24.

personal_1.jpg



star_1.jpgஅன்புக்கு உகந்த மனைவி ஜானகி அம்மாள். கோபி கிருஷ்ணா, முரளிதரன், பிரகாஷ், அரிதாஸ் என நான்கு மகன்கள். லதா மோகன், மதுபிரசாத் மோகன், சாந்தி குமார் என மூன்று மகள்கள். ஆனால், யாருக்கும் இசையில் நாட்டம் இல்லை!

star_1.jpgதமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் சேர்த்து 1,200 படங்களுக்கு மேல் இசை அமைத்திருக்கிறார். கிட்டத் தட்ட 1951-ல் ஆரம்பித்து 1981 வரை 30 வருடங்கள் எம்.எஸ்.வி-யின் இசை ராஜ்யம்தான்!

star_1.jpgநடிக்கவும் ஆர்வம். 'கண்ணகி' படத்தில் நடிக்க ஆரம்பித்த எம்.எஸ்.வி, 'காதல் மன்னன்', 'காதலா... காதலா' உட்பட 10 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார். நகைச்சுவையில் கொடி கட்டுவார்எம்.எஸ்.வி.

msv_350_1.jpg



star_1.jpgஇசையில் மகா பாண்டித்யம் பெற்ற எம்.எஸ்.வி, கல்விக்காக பள்ளிக்கூடம் பக்கமே கால்வைத்தது இல்லை!

star_1.jpgமெல்லிசை மன்னருக்கு கலைமாமணி, ஃபிலிம்ஃபேர் வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் கிடைத்தன. ஆனால், பேரதிர்ச்சி... தேசிய விருதோ, தமிழ்நாடு அரசு விருதோ இவருக்குக் கிடைக்கவில்லை!

star_1.jpgகுரு நீலகண்ட பாகவதரிடம் பயின்று கர்னாடக கச்சேரி தனியாகச் செய்திருக்கிறார். குருவுக்குத் தட்சணை கொடுக்க இயலாமல், அவருக்குப் பணி விடை செய்து அந்தக் கடமையை நிறை வேற்றினார்!

star_1.jpgஇஷ்ட தெய்வம் முருகன். எந்தக் கணமும், பேச்சுக்கு நடுவிலும் உச்சரிக்கும் வார்த்தையும் 'முருகா முருகா'தான்!

p26b%281%29.jpg



star_1.jpgமிக அதிகமாக, பீம்சிங், கிருஷ்ணன் பஞ்சு, ஏ.சி.திருலோகசந்தர், கே.பாலசந்தர் என இந்த நான்கு டைரக்டர்களிடம் வேலை பார்த்திருக்கிறார். அது, தமிழ் சினிமாவின் பொற்காலம்!

star_1.jpgசொந்தக் குரலில் பாடுவதில் பெரும் பிரபலம் அடைந்தார் மெல்லிசை மன்னர். குறிப்பாக,உச்சஸ் தாயியில் பாடின பாடல்கள் பெரும்புகழ் பெற்றவை. 'பாசமலர்' படத்தில் ஆரம்பித்தது இந்தப் பாட்டுக் கச்சேரி!

star_1.jpgஎம்.எஸ்.விஸ்வநாதன், இசையமைப்பாளர் ராமமூர்த்தியோடு இணைந்து 10 வருடங்களுக்கு மேல் கொடிகட்டிப் பறந்தார். அந்த நாட்களில் விஸ்வநாதன்-ராமமூர்த்தி இணை பெரிதாகப் பேசப் பட்டது வரலாறு. பிறகு, அவர்கள் பிரிந்தார்கள்!

star_1.jpgமெல்லிசை மன்னர், சினிமா கம்பெனியில் சர்வராக வேலை பார்த்திருக்கிறார். இப்பவும் நடிகர் p26s.jpgகளுக்கு காபி, டீ கொடுத்த விவரங்களை நகைச்சுவையோடு நண்பர்களிடம் சொல்லி மகிழ்வார்!

star_1.jpgஇளையராஜாவோடு சேர்ந்து, 'மெல்லத் திறந்தது கதவு', 'செந்தமிழ்ப் பாட்டு', 'செந்தமிழ் செல்வன்' என மூன்று படங்களுக்கு இசை அமைத்தார். ஒரு காலத்தில் தனக்குப் போட்டியாளராகக் கருதப்பட்ட ராஜாவோடு சேர்ந்து அவர் இசை அமைத்ததே, அவரது விசால மனப்பான்மைக்கு அடையாளம்!

star_1.jpg'புதிய பறவை' படத்தில் 300-க்கும் மேற்பட்ட இசைக் கருவிகளைக்கொண்டு 'எங்கே நிம்மதி' பாடலுக்கு இசைக் கோர்ப்பு செய்தார். 'பாகப் பிரிவினை' படத்தில் 'தாழையாம் பூ முடிச்சு' பாடலுக்கு மூன்றே இசைக் கருவிகளைக்கொண்டு இசைக்கோர்ப்பு செய்தார்!

star_1.jpgதன் குரு எஸ்.எம்.சுப்பையா நாயுடு இருக்கும்போதே அவருக்கு பாராட்டுக் கூட்டம் நடத்தி, பொற்கிழி அளித்தார். அவர் இறந்த பிறகு, அவரது மனைவியைத் தன் தாய்போல் கருதி, அவரது கடைசிக் காலம் வரை தன் வீட்டிலேயே வைத்திருந்து இறுதிக் கடமைகள் செய்தார்!

star_1.jpg1965-ல் இந்தியா-பாகிஸ்தான் போரின் முடிவின்போது போர் முனைக்குச் சென்ற குழுவோடு போய், கழுத்தில் ஆர்மோனியத்தை மாட்டிக்கொண்டு காயமுற்ற படை வீரர்களுக்குப் பாடினார். உடன் ஆடிக் காட்டியவர் சந்திரபாபு!

star_1.jpgதமிழ்த் தாய் வாழ்த்தான 'நீராடும் கடலுடுத்த' பாடலுக்கு இசைக் கோர்ப்பு செய்த பெருமை எம்.எஸ்.வி-க்கு சேர்கிறது. முதலில் பிறந்த ராகம் எனக் கருதப்படும் மோகனத்தில் இயல்பாக அமைந்த பாடலாக அது சிறப்புப் பெறுகிறது!

star_1.jpgஉலக இசையைத் தமிழில் புகுத்தி எளிமைப்படுத்திய பெருமையும் இவருக்குத்தான். எகிப்திய இசையைப் 'பட்டத்து ராணி' பாடலும், பெர்சியன் இசையை 'நினைத்தேன் வந்தாய் நூறு வயது'விலும், ஜப்பான் இசையைப் 'பன்சாயி, காதல் பறவை'களிலும், லத்தீன் இசையை 'யார் அந்த நிலவிலும்', ரஷ்ய இசையைக் 'கண் போன போக்கிலே கால் போகலாமா'விலும், மெக்சிகன் இசையை 'முத்தமிடும் நேரமெப்போ' பாடலிலும் கொண்டுவந்தார்!

star_1.jpg'நெஞ்சில் ஓர் ஆலயம்' படத்தில் இடம்பெற்ற 'முத்தான முத்தல் லவோ' பாடல்தான் 20 நிமிஷங்களில் இவர் இசைக்கோர்ப்பு செய்த பாடல். 'நெஞ்சம் மறப்பதில்லை' பாடல் உருவாகத்தான் இரண்டு மாதம் ஆனது!

star_1.jpgஇந்தியாவில் முதன்முதலாக முழு ஆர்கெஸ்ட்ராவை மேடையில் ஏற்றி நிகழ்ச்சியை நடத்திக் காட்டியவரும் எம்.எஸ்.விதான். சேலத்தில் நடைபெற்ற அந்த இசை நிகழ்ச்சி அந்த நாளில் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது!

star_1.jpgபியானோ, ஹார்மோனியம், கீ-போர்டு மூன்றையும் பிரமாத மாக வாசிப்பார். சற்று ஓய்வாக இருக்கும் பொழுதுகளில் வீட்டில் பியானோவின் இசை பெருகி நிரம்பி வழியும்!

personal_2.jpg



star_1.jpgசினிமா இசையில் இருந்து அதிகமாக ஒதுங்கி இருந்த எம்.எல்.வசந்தகுமாரி, பாலமுரளி கிருஷ்ணா, மகாராஜபுரம் சந்தானம், பாம்பே ஜெயஸ்ரீ போன்றவர்கள் மெல்லிசை மன்னரின் இசைக்குக் கட்டுப் பட்டுப் பாடி இருக்கிறார்கள்!

star_1.jpgவி.குமார், இளையராஜா, ரஹ்மான், கங்கை அமரன், தேவா, யுவன்ஷங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ் போன்ற அனைத்து இசையமைப்பாளர்களிடமும் பாடி இருக்கிறார். எம்.எஸ்.வி, தன் இசையறிவை பெரிதாக நினைத்துக்கொள்ளாத பெரும் மனப்போக்கினால் நிகழ்ந்தது இது!

personal_4.jpg



star_1.jpg'அத்தான்... என்னத்தான்...' பாடலைக் கேட்டுவிட்டு, இந்த மாதிரி பாடலைப்பாட வாய்ப்புகிடைத்தால், சென்னையிலேயே வந்து தங்கிவிடுவேன்' என்று ஒருமுறை மேடையில் லதா மங்கேஷ்கர் சொன்னார். கைதட்டலில் அதிர்ந்தது அரங்கம்!

- ஆனந்த விகடன் இதழிலிருந்து....

http://www.vikatan.com/news/article.php?aid=49408

  • கருத்துக்கள உறவுகள்

ஆத்மா சாந்தியும், ஆழ்ந்த அனுதாபங்களும்..........

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இசை மாமேதை மறைந்தாலும் அவர் இசையமைத்த பாடல்களும் இசையும் பூமி இருக்கும் வரைக்கும் ஒலித்துக்கொண்டேயிருக்கும்.

ஆழ்ந்த அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

Best of MSV

 

 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
  • கருத்துக்கள உறவுகள்

 விடை கொடு எங்கள் நாடே

 

Edited by Nathamuni

ஆழ்ந்த அனுதாபங்கள் ! நீங்கள் மறைந்தாலும் நீங்கள் தந்த மெல்லிசை என்றுமே காலத்தால் மறையாது!

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அஞ்சலிகள்...!

உங்களது சங்கீத சாகரத்தில் அமிழ்ந்து கிடக்கவே விரும்புகின்றோம் , எழுந்துவர மனமில்லை...!

நோயும் முதுமையும் வாட்டி நொடிந்து போன மெல்லிசை மன்னரின் இறுதிக்காலத் தோற்றம்.. பாடும் நிலா SPB கடந்த மே மாதம் MSV அவர்களை நலம் விசாரிக்கச் சென்றவேளையில்..

mm

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் காலமானார்

பழம்பெரும் இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன் சுகயீனம் காரணமாக இன்று அதிகாலை காலமானார்.

சென்னை தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த, நிலையில் இன்று அதிகாலை 4.15 மணியளில் காலமானதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. இறக்கும் போது அவருக்கு வயது 87.

சென்னை சாந்தோமில் உள்ள அவரது இல்லத்தில் உடல் வைக்கப்பட்டுள்ளது.

1200 திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார். ராமமூர்த்தி உடன் 700 படங்களுக்கும் தனியாக 500 படங்களுக்கும் இசை அமைத்துள்ளார். அத்துடன் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
மெல்லிசை மன்னர் இறுதியாகப் பாடிய பாடல் 

Theepan Nainai இன் புகைப்படம்.

இசை மாமேதைக்கு கண்ணீர் அஞ்சலிகள் .

விருதுகளால் மேதைகள் அங்கீகரிக்கப்படுவதில்லை, மேதைகளால் தான் விருதுகள் அங்கீகாரம் பெறுகின்றன. # RIP MSV

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அஞ்சலிகள்

  • கருத்துக்கள உறவுகள்

காலத்தால் அழியாத பல பாடல்களைத் தந்த மெல்லிசை மன்னரின் மரணத்தால் துயருற்றிருக்கும் அவர் குடும்பத்தாருக்கும் கலையுலகத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அஞ்சலிகள்

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்! இசை உலகின் மறக்க முடியாத விற்பனர்களில் ஒருவர்!

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சகாப்தம் நிறைவுக்கு வந்தது.

ஐயா நீங்கள் போனாலும் உங்கள் இசை வாழும். ஆழ்ந்த அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

இக்கரைக்கு அக்கரைப் பச்சை.. (அக்கரைப் பச்சை)

கடல் நீரில் விழுந்தோர்கள் நீந்துங்கள்
கனி மீது விழுந்தோர்கள் உண்ணுங்கள்....
வழிச்சாலை கண்டோர்கள் செல்லுங்கள் ...
போக வழியின்றி நிற்பவர்கள் நில்லுங்கள்

கல் தரையில் கைபோட்டு நீந்துகின்ற மனிதா காலமிட்ட கட்டளையை மீறுவது எளிதா!!
மழை நாளில் உன் கண்கள் வெயில் தேடும்
கோடை வெயில் நாளில் உன் மேனி குளிர் தேடும்

அது தேடி இது தேடி அலைகின்றாய்
வாழ்வில் எது வந்து சேர்ந்தாலும் தவிக்கின்றாய் அவரவர்க்கு வாய்த்த இடம் அவன் போட்ட பிச்சை அறியாத மானிடர்க்கு அக்கரையும் இச்சை

இல்லாத பொருள் மீது எல்லோர்க்கும் ஆசை வரும் இக்கரைக்கு அக்கரைப் பச்சை...

கண்ணதாசன் எழுதியதை எம்எஸ்வி குரலில் கேட்கும் பரவசத்துக்கு இணையாகுமா!

.இசை மாமேதைக்கு கண்ணீர் அஞ்சலிகள்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.