Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'வெளிநாட்டில் வாழ்வோர் ஊர் வந்து பணியாற்ற வேண்டும்' - விக்னேஸ்வரன்

Featured Replies

இலங்கையின் இலவசக் கல்வி மூலம் பட்டம் பெற்றபின் வெளிநாடுகளுக்குச் சென்று குடியேறுபவர்கள் உள்நாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அங்கிருந்து குரல் கொடுப்பதைவிட, இங்கு வந்து அவர்களுக்கு சேவையாற்ற முன்வர வேண்டும் என வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்திருக்கின்றார்.

வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன்
வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன்

யாழ் நகரில் உள்ள தனியார் கல்வி நிறுவனம் ஒன்றின் ஆசிரியர்கைளப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இந்த வேண்டுகோளை வெளியிட்டிருக்கின்றார்.
பட்டப்படிப்பு முடிந்த பின்னர், பொறியியல் மற்றும் மருத்துவ துறைசார்ந்தவர்கள் திறன்சார் குடிபெயர்வில் வெளிநாடுகளில் சென்று குடியேறிவிட்டு, உள்நாட்டில் ஈழம் வேண்டும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிபுரிய வேண்டும் என்று குரல் கொடுப்பதையும் விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டினார்.
வெளிநாட்டில் உள்ளவர்கள் தமது உழைப்பின் மூலம் கிடைக்கும் பணத்தை மாத்திரம் அனுப்பினால் போதாது, யுத்தத்தினால் பல வழிகளிலும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நேரடியாக இங்கு வந்து சேவையாற்ற வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளார்.
எனவே, பட்டப்படிப்பு முடிந்ததும் துறைசார்ந்தவர்கள் குறைந்தது மூன்று வருடங்களாவது உள்நாட்டில் பணியாற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தியிருக்கின்றார்.
இதற்காக சட்டம் கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டிருப்பதாகவும் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

http://www.bbc.com/tamil/sri_lanka/2015/10/151025_vicknes

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு முதலமைச்சர் நியாயமாகப் பேசி இருக்கின்றார். 

இலங்கையின் இலவசக் கல்வி மூலம் பட்டம் பெற்றபின் வெளிநாடுகளுக்குச் சென்று குடியேறுபவர்கள் உள்நாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அங்கிருந்து குரல் கொடுப்பதைவிட, இங்கு வந்து அவர்களுக்கு சேவையாற்ற முன்வர வேண்டும் என வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்திருக்கின்றார்.

யாழ் நகரில் உள்ள தனியார் கல்வி நிறுவனம் ஒன்றின் ஆசிரியர்கைளப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இந்த வேண்டுகோளை வெளியிட்டிருக்கின்றார்.
பட்டப்படிப்பு முடிந்த பின்னர், பொறியியல் மற்றும் மருத்துவ துறைசார்ந்தவர்கள் திறன்சார் குடிபெயர்வில் வெளிநாடுகளில் சென்று குடியேறிவிட்டு, உள்நாட்டில் ஈழம் வேண்டும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிபுரிய வேண்டும் என்று குரல் கொடுப்பதையும் விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டினார்.
வெளிநாட்டில் உள்ளவர்கள் தமது உழைப்பின் மூலம் கிடைக்கும் பணத்தை மாத்திரம் அனுப்பினால் போதாது, யுத்தத்தினால் பல வழிகளிலும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நேரடியாக இங்கு வந்து சேவையாற்ற வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளார்.
எனவே, பட்டப்படிப்பு முடிந்ததும் துறைசார்ந்தவர்கள் குறைந்தது மூன்று வருடங்களாவது உள்நாட்டில் பணியாற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தியிருக்கின்றார்.
இதற்காக சட்டம் கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டிருப்பதாகவும் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

http://www.bbc.com/tamil/sri_lanka/2015/10/151025_vicknes

 

Edited by வாலி

  • கருத்துக்கள உறவுகள்

மொதல்ல.. சிங்கள இராணுவத்தை அகற்றுங்க. அப்புறம் சிங்கள புலனாய்வுத்துறை.. மிச்சமுள்ள தமிழ் ஒட்டுக்குழுக்கள்.. சண்டியன்குழுக்கள்.. இப்படி எல்லாத்தையும் அகற்றிட்டு.. மாகாண சபைக்கு பொலிஸ் நிர்வாகம் உட்பட அதிகாரங்களை எடுங்க.. செயற்படுத்துங்க. மக்கள் பயமின்றி அச்சமின்றி வந்து போகும் நிலையை உருவாக்குங்க. நீங்க சட்டம் போடாமலே பலர் வந்து சேவையற்ற தயாராக இருக்கினம். அதை விட்டிட்டு.. ஆக்கிரமிப்பாளன் உள்ள இடத்தை வா வந்து சேவையாற்று என்றால் யார் வருவினம். tw_blush:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் 'simplistic' ஆன அணுகு முறை!

அனேகமாக வெளிநாடுகளுக்கு அகதிகளாகச் சென்றவர்கள்... படித்த படிப்புக்கு ஏற்ற வேலையைச் செய்ய இயலாத சூழ்நிலையில் தான் வெளியில் சென்றார்கள்!

இன்றும் கூட... இலங்கையின் வட கிழக்குப் பிரதேசங்களில் பாதுகாப்பாக வாழக்கூடிய சூழ்நிலை உருவாகவில்லை!

முதல்வரின் இத்தகைய வேண்டுகோள்கள்.. கரகோசங்களை அவருக்குப் பெற்றுத் தரக் கூடும்!

ஆனால் வெளி நாடுகளிகளில்  வாழ்பவர்கள் எந்த வித அழுத்தங்களுமின்றி. நாடு திரும்பக் கூடிய சூழ்நிலையை உருவாக்குவதுடன் மட்டுமன்றி, அவ்வாறன நிலை நாட்டில் உள்ளது என்ற தோற்றத்தை உருவாக்க முதல்வர் முனைவாராகில் அது அதிக பலனைத் தரும்!

இத்தகைய வேண்டுகோள்கள்.. இலங்கை அரசு இனப்பிரச்சனையைப் புறம் தள்ள மட்டுமே உதவும்!

நாங்கள் சந்தர்ப்பவாதிகள், பிரபாகரனால் இங்கவந்து கொஞ்சம் படித்துபோட்டு வெள்ளையளுக்கு சொறியிறம், ஒரு பு ..க்கும் செய்யமாட்டம். யார் என்ன எழுதினாலும், சொண்னாலும், செய்தாலும் சொறிஞ்சுகொண்டெ (சமூகத்ததிருத்திகிறதுக்கு) இருப்பம், ஒரு ம ..ம் செய்யமாட்டம்.  Online யிருக்கு அத்துடன் மேலும் வசதிகள் இருக்கு, ஆனாலும் ஒரு பு ..க்கும் செய்யமாட்டம். வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் எல்லாம் செய்தாபிறகுதான் பாதுகாப்பாக நாங்கள் 95 வயதில் அங்கபோய் எல்லாத்தையும் செய்வம், அங்கயிருக்கும் மக்களென்ன அவ்வளவு மடையர்களா?, அங்கிருப்போர் எல்லாம் நல்லதாகவே செய்திருப்பார்கள் காலத்திற்கேற்ப.

அப்போ நாங்கள் வேனுமென்றால் கொஞ்சம் கள்ளவேன்டி குடிச்சிட்டு வேப்பமரத்துக்குகீள படுத்திருக்கலாம். Too late.

உனை நீ அறி

Edited by Knowthyself

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கையின் இலவசக் கல்வி மூலம் பட்டம் பெற்றபின் வெளிநாடுகளுக்குச் சென்று குடியேறுபவர்கள் உள்நாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அங்கிருந்து குரல் கொடுப்பதைவிட, இங்கு வந்து அவர்களுக்கு சேவையாற்ற முன்வர வேண்டும் என வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்திருக்கின்றார்.

வெளிநாட்டில் உள்ளவர்கள் தமது உழைப்பின் மூலம் கிடைக்கும் பணத்தை மாத்திரம் அனுப்பினால் போதாது, யுத்தத்தினால் பல வழிகளிலும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நேரடியாக இங்கு வந்து சேவையாற்ற வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளார்.
எனவே, பட்டப்படிப்பு முடிந்ததும் துறைசார்ந்தவர்கள் குறைந்தது மூன்று வருடங்களாவது உள்நாட்டில் பணியாற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தியிருக்கின்றார்.

 நாசமறுப்பு...ஆரோ காட்டிக்குடுத்துட்டாங்கள்....:cool:

அது சரி சட்டம் எண்டு வேறை அந்தாள் வெருட்டுது....:shocked:

என்ரை சிவனே எங்கை போய் முடியப்போகுதோ :(

77க்கு முதல் மேற்படிப்பு மண்ணாங்கட்டி எண்டு வெளிக்கிட்டு வந்து......வேரூன்றி விட்டு தமிழினத்துக்கு எந்த ஆதரவும் தெரிவிக்காமல் தமிழ் கதைப்பவனையே ஏளனமாகப்பார்க்கும் ------------.......அகதிகளைப்போல் கப்பலேற்றி ஊருக்கு அனுப்ப வேண்டும்.

Edited by குமாரசாமி
பயங்கரமான சொல் நீக்கப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

நோ ,நோ ......எங்களுக்கு காசு மட்டும் அனுப்ப முடியும் உங்க வந்து வியர்வை சிந்தி வேலை செய்ய முடியாது......வட் யூ மீன் பை சேவை,ஒன்லி தட்டச்சு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நோ ,நோ ......எங்களுக்கு காசு மட்டும் அனுப்ப முடியும் உங்க வந்து வியர்வை சிந்தி வேலை செய்ய முடியாது......வட் யூ மீன் பை சேவை,ஒன்லி தட்டச்சு

குடில் எண்டாலும் ஏசி பூட்டி தருவம். தென்னங்குத்தியிலை குந்தியிருக்கிற கக்கூசும் எவரெடி....பிளீஸ் கம்

  • கருத்துக்கள உறவுகள்

தற்போது எங்களுடைய நம்பிக்கையாக திரு விக்னேஸ்வரன் விளங்குகின்றார். அவர் சொல்லுவதையும் சொல்லாதவற்றையும் ஊதிப்பெருப்பிக்கும் நாங்கள் இதை மட்டும் உதாசீனம் செய்வது ஏன்? ஓ இப்ப விளங்குது அவர் மருத்துவர்களையும் பொறியியலாளர்களையும் சொல்லி இருக்கிறார். <_<

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்தமுறை சீவிக்கு கோவிந்தா கோவிந்தாதான்.  கஜே கோஸ்டியோட சேர்ந்து பிரேமானாந்தா பஜனை பாடப்போறார்.

தற்போது எங்களுடைய நம்பிக்கையாக திரு விக்னேஸ்வரன் விளங்குகின்றார். அவர் சொல்லுவதையும் சொல்லாதவற்றையும் ஊதிப்பெருப்பிக்கும் நாங்கள் இதை மட்டும் உதாசீனம் செய்வது ஏன்? ஓ இப்ப விளங்குது அவர் மருத்துவர்களையும் பொறியியலாளர்களையும் சொல்லி இருக்கிறார். <_<

அப்பிடி மூன்று வருஷம் ஊரிலை வேலை செய்தா வெளிநாட்டுக்கு போக நீங்க உதவி செய்விங்களா சார்?

முதல்ல ஊரில இருக்கு பட்டதாரிங்களுக்கு வேலை குடுங்க சார். பாவம் அவங்க வேலையும் இல்லாம வெளியிலையும் போக முடியாம தவிக்கிறாங்க சார்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்பிடி மூன்று வருஷம் ஊரிலை வேலை செய்தா வெளிநாட்டுக்கு போக நீங்க உதவி செய்விங்களா சார்?

முதல்ல ஊரில இருக்கு பட்டதாரிங்களுக்கு வேலை குடுங்க சார். பாவம் அவங்க வேலையும் இல்லாம வெளியிலையும் போக முடியாம தவிக்கிறாங்க சார்.

அவருடைய எண்ணமும் சிந்தனையும் சரி .......
ஈழத்தமிழன் கீழ்நிலைக்கு சென்றுகொண்டு இருப்பதற்கு காரணம் சுயநலம்தான்.
உச்ச நிலையை ஒரு காலத்தில் ஒரு குறிப்பிட பேர்கள் தமது தன்நிகர் அற்ற தியாகத்தால் உருவாக்கினார்கள்.
இனி எக்காலமும் அப்படி ஒரு நிலைமை வரும் சாத்திய கூறுகள் இல்லை.

ஊரில் வேலை இல்லது இருப்பவர்களின்........... வேலையின்மையை போக்குவது என்றால்.
இங்கிருக்கும் நாம் அங்கு வேலை செய்ய தொடங்க வேண்டும்.
இங்கு யாழ் களத்தில் நீங்கள் பார்த்தால் கூட 
யாழில் பஸ் ஓடுது... ரயில் ஓடுது.... விஜயின் புலி... ஓடுது அங்கே மக்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்.
என்ற பாணியில் ஒரு கூட்டம் பிரச்சாரம் செய்வார்கள்.

அவை எல்லாம் உள்நாட்டு பொருளாதரத்தை சுரண்டும் வேலைகள் மட்டுமே.
ஏற்றுமதியும் இறக்குமதியும் ஒரு சராசரி நிலைமையில் நிறுத்தப்பட வேண்டும். 
உள்நாட்டு பொருளாதார வளர்ச்சி என்பது உள்நாட்டு உற்பத்தியில் தங்கி நிற்க வேண்டும்.

இப்போ வெறும் காசு புளக்கம்தான் அங்கே இருக்கிறது இங்கிருந்து அங்கு காசை கொண்டு சென்று கொட்டுகிறார்கள் 
இந்தியா புடவை... சினிமா.... தங்கநகை ... போன்றவற்றை கொண்டுவந்து கொட்டிவிட்டு. காசை அள்ளிக்கொண்டு போகிறார்கள் 
இந்த தற்காலிக நிலைமைதான் அங்கே இருக்கிறது.

நெடுக்காலபோவன் மேலே சொன்னார் பாதுகாப்பை தாருங்கள் நாங்கள் வருகிறோம் என்று.
அதே கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை ..
எமது பாதுகாப்பை நாம்தான் உருவாக்க வேண்டும். இங்கிருக்கும் நாம்தான் அதை நோக்கியும் நகர வேண்டும்.
தற்போதைய தமிழ் அரசியல் தலைமைகள் விலைபோன நிலையில் நாம் ஒரு புதிய அரசியல் தலைமையை உருவாக்க வேண்டும்.
(அதைதான் நெடுக்கரும் எழுதினாரோ தெரியாது) 
புலிகள் பயங்கரவாதிகள் என்று பின்நின்ற சர்வதேச சக்திகளிடம் இப்போ என்ன குறைபாடு என்று ? தட்டி கேட்கும் 
தலைமைகள் உருவாகும் அதே நேரம் ...... எமது தேசத்தில் யாழ்பாணம் திருகோணமலையை மையமடுத்தி உருவாக சாத்தியமாக 
இருக்க கூடிய திறந்த சந்தை பற்றிய பேச்சுக்களை சர்வதேச முதலீட்டு தரகர்களுடன் பேரம் பேச வேண்டும். 

எங்களிடம் பாரிய மனித சக்தி இல்லை....
பிராந்திய அமைவிட சந்தர்ப்பம் ஒன்றுதான் எமது உண்மையான சக்தி. அதை சரிவர பயன்படுத்த வேண்டும்.
அதை விலை பேசி விற்கும் அரசியல் துரோகிகளை முதலில் காலி செய்யவேண்டும். 

இங்கிருந்து நாம் அங்கு செல்ல வேண்டிய தேவை அதில் இருந்துதான் பிறக்கிறது.
வெறும் உல்லாச பிரயாணம் கண்ணுக்கு மினுமினுக்கும் ..
உள்ளூரில் தூர நோக்கில் ஒரு வெறுமையையே உருவாக்கும். 

துபாய் நாட்டில் என்ன நடக்கிறது என்பதை நாம் கொஞ்சம் உள்வாங்கி கொள்ளலாம் 
1985இல் சிங்கபூர் எப்படி முன்னேற தொடங்கியது என்பதில் இருந்து கற்றுகொள்ளலாம். 
ஆப்ரிக்க நாடுகள் ஏன் இப்போதும் பின்தங்கி கிடக்கிறது என்பதை ஆராய வேண்டும். 

சிவி சரியாகத்தான் கூறி உள்ளார்.

மனம் உண்டானால் இடம் உண்டு. இதறகுமேல் எழுத விரும்பவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் எழுதுபவர்களில் நிறைய படிச்சாக்கள் இருக்கினம். அவை நினைத்தால் ஊரில போய் சேவை ஆற்றலாம். ஆனால் போக மாட்டினம்.கேட்டால் 108 நொண்டிச் சாட்டு சொல்லுவினம்...அங்கு இருக்கின சனம் ஆமியோட இருக்கேல்ல இவையலுக்குத் தான் ஆமிப் பயம்.ஏதோ புலியில் இருந்து வெட்டிப் புடுங்கின மாதிரி

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்காவில் கல்வி கற்ற அங்கு வாழ்ந்த விக்கியரே.. பல பத்தாண்டுகளுக்கு பிறகு.. இப்ப தான்..  வடக்கிற்கு வந்திருக்கிறார். அதுவும் முதலமைச்சர் பதவி.. பந்தாவோடு.

இங்கு கருத்தெழுதும் சிலர் தங்களைப் போலவே எல்லோரும் சும்மா வீட்டில குந்தி இருந்திட்டு வெளிநாட்டுக்கு கிளம்பி வந்தவை என்ற நினைப்பில கருத்தெழுதிக்கிட்டு இருக்கினம். 

வெளிநாட்டுக்கு வந்த ஒவ்வொரு படிச்சவனும் பல படிநிலைகளில் பல கஸ்டங்களை பட்டுத்தான் முன்னேறி இருக்கான். அவன் ஒன்னும் வரம் பெற்று எல்லாத்தையும் பெறவில்லை.

உள்ளூரில் வேலையற்ற பட்டதாரிகள் பிரச்சனை.. உள்ளூரில்.. சரியான வேலை வாய்ப்பின்றி இளைய சமூகம் போதையில்... பெண் மோகத்தில்.. சினிமாவில் சீரழியுது... அத்தோடு ஆக்கிரமிப்பாளனின் இருப்பு இறுகி வருகிறது.. இத்தனைக்கும் மத்தியில்.... இலவசக் கல்வி ஒன்றைக் காட்டி மொத்த முயற்சிகளுக்கும் விலை பேச எவராலும் முடியாது. சிறீலங்காவில் எல்லாருக்கும் தான் இலவசக் கல்வி. அதனை ஒழுங்காக படிச்சுப் பெற முடியாமல் வீணடிச்ச கூட்டங்கள் செலவழிச்ச மக்களின் வரிப்பணத்துக்கு யார் கணக்குக் காட்டிறது.

எமது தேசத்தை நாம் ஆளவும்.. எமது மக்களின் உயர்வை அவர்களே தீர்மானிக்கும் நிலை வந்தால் தான்.. படித்த தமிழர்களின் எண்ணங்கள் தாயகத்தில் அதனை சிறப்படுத்த முடியும். சிங்கள..ஹிந்திய.. ஆக்கிரமிப்பு.. அரசியல்.. இராணுவ செல்வாக்கு எங்கும் இருக்கும் நிலையில்.. சிறீலங்காவில் சுயாதீன ஆற்றலுக்கு அறிவுக்கு அவற்றை பயன்படுத்த களம் அமைய வாய்ப்பே இல்லை.

இந்திய வீட்டுத்திட்டம் போல் தான் எல்லாம் முடியும். அதையே கண்காணிக்க முடியாமல் திணறும் மாகாண சபை.. வெளிநாட்டு படித்த தமிழர்களை சொறீலங்காவுக்கு வா என்று அழைப்பது அர்த்தபுஷ்டியான ஒன்றல்ல. அது வேர்க் அவுட் ஆகாது. tw_blush:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சேவையாற்ற முன்வர வேண்டும்

ஓடிவந்தவர்கள் ஒரு நாளும் போகமாட்டார்கள் .தமிழ் ஈழம் வந்திருந்தாலுமே  இவர்கள் போயிருக்க மாட்டார்கள் .அப்படி எண்ணம் இருப்பவர்கள் என்றால் புலி ஒரு அரசை அமைத்து வைத்திருந்தது என்று புழுகி கொண்டு திரிந்த நேரம் போயிருப்பார்கள் .

போகாமாட்டதற்கு ஆயிரம் சளப்பல் காரணங்கள் சொல்ல மட்டுமே இவர்களால் முடியும் .

ஓடிவந்தவர்கள் ஒரு நாளும் போகமாட்டார்கள் .தமிழ் ஈழம் வந்திருந்தாலுமே  இவர்கள் போயிருக்க மாட்டார்கள் .அப்படி எண்ணம் இருப்பவர்கள் என்றால் புலி ஒரு அரசை அமைத்து வைத்திருந்தது என்று புழுகி கொண்டு திரிந்த நேரம் போயிருப்பார்கள் .

போகாமாட்டதற்கு ஆயிரம் சளப்பல் காரணங்கள் சொல்ல மட்டுமே இவர்களால் முடியும் .

சரி ஓடிவந்தவர்கள் போகமாட்டார்கள். நடந்து வந்த நீங்கள் போகவேண்டியது தானே. இங்கு வந்து புராணம் பாட மட்டும் தான் தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்பிடி மூன்று வருஷம் ஊரிலை வேலை செய்தா வெளிநாட்டுக்கு போக நீங்க உதவி செய்விங்களா சார்?

முதல்ல ஊரில இருக்கு பட்டதாரிங்களுக்கு வேலை குடுங்க சார். பாவம் அவங்க வேலையும் இல்லாம வெளியிலையும் போக முடியாம தவிக்கிறாங்க சார்.

சூறாவளி ஜீ 
வேலையற்ற பட்டதாரிகள் கதையே வேற .....அதையே ஐயாவே தெளிவாக வேறொரு இடத்தில் சொல்லியிருக்கிறார் ....இவர்கள் எல்லோருக்கும் அரச தொழிலே வேண்டும் ...பென்சன் ...இதர  விடயங்கள் எல்லாம் இவர்கள் கூறும் நொண்டிச்சாட்டு ....உண்மையான காரணம் நோகாமல் நோம்பு கும்பிடுவது வேலை கிடைத்தால் செய்தாலோ ..செய்யாவிட்டாலோ சம்பளம் உறுதி ..ஆபிசிட்கு போய் குந்தியிருந்து விட்டு வந்தால் போதும் ...இங்கே வந்து பாருங்க ..சில முனிசிபல் கவுன்சில்களில் சமீபத்தில் அளவுக்கதிமாக அள்ளிப்போட்ட M.A க்கள் (Management Assistants) கதிரை மேசை இல்லாததால் நின்று கொண்டு வேலை பார்க்கினம். ஒருத்தரும் பிரைவேட் /கார்பொரேட் வேலைக்கு தயாரில்லை காரணம் உந்த பருப்பெல்லாம் அங்கே கனகாலத்திட்கு வேகாது .வாங்கிற காசிற்கு வேலை செய்தே ஆகவேண்டும் ...இல்லை அடுத்த நொடி தம்பி வெளியில ...இது தவிர பல பட்டதாரிகள் உந்த பதவிகளுக்கு போட்டி போடும் திறமையில்லாமல் நேர்முகத்தேர்விலேயே பல்பு வாங்கிவிடுகிறார்கள். பிறகென்ன வேலையற்ற பட்டதாரிகள் அதிகரிக்கதானே செய்வார்கள் .....பட்டமும்....அதற்கேற்ற திறமையும்....உழைப்பும்....நேர்மையும் இருந்தால் அவர்களுக்கேற்ற ஒரு தொழிலை தேடிக்கொள்ள முடியாத நிலை இங்கில்லை ..... ஆனால் வேலையே செய்யாமல் வேலை செய்து சம்பளம் வாங்க வேண்டுமென்றால் அரச தொழிலே அதற்க்கு வழி ....ஒன்றும் செய்ய முடியாது லைனில் நிற்க வேண்டியது தான் 

 

  • கருத்துக்கள உறவுகள்

 

ஓடிவந்தவர்கள் ஒருபோதும் போகமாட்டார்கள் ........
மற்றவை மக்களின் விண்ணர்கள் .... அங்குபோய் வீதி வீதியாய் கூடி பெருக்கி ...
கிடைக்கும் இடைநேரத்தில் "யாழ்" என்ற பேரில் இருப்பதால் இங்கும் இடைக்கிடை 
வந்து போவது என்பது ஒரு சிறப்பு !


இத்தனைபேர் இவர்களிடம் இந்த விண்ணாணத்தை கற்றுக்கொள்ள போகிறார்களோ தெரியவில்லை.  

  • கருத்துக்கள உறவுகள்

சிவி சரியாகத்தான் கூறி உள்ளார்.

மனம் உண்டானால் இடம் உண்டு. இதறகுமேல் எழுத விரும்பவில்லை.

அருமை ஜீவா

நாங்கள் உரிமைக்காக மட்டும் போராடுவோம்.....கடமையை செய்ய காலியில இருந்து காமினி வருவான்....!!!! - வைதேகி பாலமுரளி--
**********************************************************

இன்று முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் உள்ள பெண்கள் சிறுவர் பிரிவின் மாதாந்த கூட்டத்துக்கு சென்றிருந்தேன். வழமைபோல கூட்டத்தில் சுவாரசியமான விடயங்கள் (பெண்கள் சிறுவர் சம்பந்தப்படாத) பற்றி ஆராய்ச்சி செய்யப்பட்டது....அடுத்த கூட்டத்தையும் இதே போல பயனுள்ளதாக(?) இருக்குமாறு பார்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்று உறுதி பூண்டு கூட்டத்தை நிறைவு செய்தனர்.

கூட்டம் முடிந்து, வெளி நோயாளர் பிரிவைத் தாண்டி வெளியே வந்து கொண்டிருந்தேன். கணிசமான அளவு கூட்டம் வெளி நோயாளர் பிரிவில் காத்திருந்தது. கூட வந்த அலுவலக நண்பர் வேறொரு நபரை சந்திக்கச் சென்ற படியால் அவருக்காக நானும் OPD இல் காத்திருந்தேன்.

காத்திருந்த வேளை.....வைத்தியரின் அறையில் நடப்பதை கண்ணூடாக காணமுடிந்தது...கண்ட காட்சியில் சற்றே சுவாரசியம் பிறந்தது...ஒரு அறுபது வயது மதிக்கதக்க பெண்மணி, வைத்தியருக்கு என்னத்தையோ நடித்துக் காட்டிக் கொண்டு இருந்தார்.

அவரின் உடல் மொழியால் மருத்துவருக்கு எதையோ அவர் விளங்கப்படுத்த முயல்வது எனக்கு தெரிந்தது....பாவம் அந்த அம்மணி வாய் பேச முடியாதவர் போல..எவ்வளவு கடினமாக தனது நோயை மருத்துவருக்கு புரிய வைக்கின்றார் என்று பெருமூச்சை விடத் தொடங்க...........வந்த பெருமூச்சு பாதியில தங்கி விட்டது. ஏனெண்டா இப்பொழுது மருத்துவரும் நடிக்கத் தொடங்கி இருந்தார்....அட கஷ்டகாலமே டாக்குத்தரும் "மியூட்" போல எண்டு உத்துக் கவனிக்கத் தொடங்கினேன்.

இரண்டு பேரும் கைப்பாஷை தான்....திடீரென்று டொக்டர் எழும்பி தன்ர ட்ரௌசர் பொக்கட்டுக்குள்ள அகழ்வாராய்ச்சி செய்து போனை எடுத்து காதுக்க வச்சு வாயால கதைக்க தொடங்கினார்.

எனக்கு ஆர்வம் தாங்க முடியேல்ல....பிறவி விடுப்புக் குணம் என்னை இருக்க விடேல்ல. வேலை முடிஞ்சு "போவமே" எண்டு வந்த நண்பரை OPD இல் இருக்கச் சொல்லிப்போட்டு எழும்பிப் போய் அறை வாசலில் நின்ற மருத்துவ தாதியிடம் விசாரித்தேன். உள்ளுக்க என்ன நடக்குது ஆருக்கு குறைபாடு எண்டு.

அவ சொன்னா டொக்டரும் கதைப்பாராம்....அம்மணியும் கதைப்பாவாம்....ஆனா டொக்டர் "சீனா"வாம் அம்மணி "தானா"வாம்..

"அப்ப "தானா" வில டொக்டர் இல்லையோ" என்றேன்.

"இருக்கினம்....ஆனா கொஞ்சப்பேர்"

"கொஞ்சமெண்டா எத்தனை?"

"ஆறு"

"இந்த ஆஸ்பத்திரியில் மொத்தம் எத்தினை டொக்டர்ஸ்?" என்றேன் குழப்பத்துடன்.

"முப்பத்துநாலு" எண்டா தெளிவா.

"அப்ப மிச்சம் இருபத்தெட்டும்.....?"

"சீனா"

முப்பத்துநாலு மருத்துவர்களுக்குள்....இருபத்தெட்டு பேர் தென்னிலங்கையிலிருந்து வந்து முல்லைத்தீவில் வந்து தங்கி இருந்து சேவையாற்றுகின்றார்கள்....நம்மவர்கள் வெறும் ஆறுபேர் தான்.

அதிலும் ஐவர் முல்லைத்தீவையும் ஒருவர் கிளிநொச்சியையும் சொந்த இடமாகக் கொண்டவர்கள். அவர்களிலும் மூண்டு பேர் மக்களின்ர வரிப்பணத்தில படிக்காமல் ஆத்தை அப்பன்ர சொந்தக் காசில ரஷ்யாவில படிச்சவையளாம்....

கோபத்தை விட வெட்கம் தான் நிறைய வந்தது எனக்கு...

ஒரு வருடத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து மருத்துவ பீடத்துக்கு தெரிவு செய்யப்படுபவர்கள் ஐந்து அல்லது ஆறு பேர்...அப்ப எப்படி இது சாத்தியம்?

சிலவேளை முல்லைத்தீவை சேர்ந்த டொக்டர்ஸ் படித்து முடித்ததும்...முல்லைத்தீவை விட பின் தங்கிய மாவட்டங்களுக்கு சேவையாற்றப் போயிருப்பினமோ எண்டு...நினைச்சா...முல்லைத்தீவு தானாம் இலங்கையில "அதிகஷ்ட பிரதேசம்" எண்டு கூகிள் சொல்லுது. பிறகு நானென்னத்தை சொல்ல?

ஆரும் எங்கையெண்டாலும் போகட்டும்.......என்ர கேள்வி என்னெண்டா.....

கொக்கிளாயில வயல் காணிய சிங்களவன் பிடிச்சு வயல் செய்தா வரிஞ்சு கட்டிக் கொண்டு போய்...போட்ட கதியாலுகளை புடுங்கி எறியிறம்......நல்ல முயற்சி!

செம்மலையிலையும்...மாத்தளனிலையும் கரைவலையை அவன் கொண்டு வந்து போட்டு மீன் பிடிச்சா...அடிச்சுப் பதறி ஐ.நா வரைக்கும் மனு குடுக்குறம்....மிக நல்ல முயற்சி!!!!

எங்கட வளங்கள் சூறையாட நாங்கள் ஒருபோதும் இடமளிக்க கூடாது..... எவன் வந்தாலும் விடமாட்டம்.

ஆனா...படிச்சு, டாக்குத்தரா வந்ததும் நாங்கள் நைஸாக கழண்டு கொள்வோம். இதுக்கெண்டு சேவை செய்ய தெற்கில இருந்து அவங்கள் வருவாங்கள்.

கொக்கிளாயிலையும் கொக்குதொடுவாயிலையும் தூக்கிப்பிடிச்ச கொடிய மாஞ்சோலை ஆஸ்பத்திரியிலையும் பிடிக்கிறது தானே?

வளங்கள் எண்டா எங்களுக்கு பௌதீக வளங்கள் மட்டும் தான் கண்ணுக்க தெரியும். மனித வளங்களை மறந்து விடுவோம். அப்படித்தானே?

அந்த இருபத்தெட்டு டாக்குத்தர்மாரும் தாங்கள் கும்பிட, மாஞ்சோலை ஆஸ்பத்திரியில புத்தர் சிலை வச்சா..... அப்ப தூக்கிப் பிடிச்சுக் கொண்டு வாங்கோ பிக்கானையும், மண்வெட்டியையும்!!!!!

-திருமதி வைதேகி பாலமுரளி  via Facebook 

Edited by அபராஜிதன்

நாங்கள் உரிமைக்காக மட்டும் போராடுவோம்.....கடமையை செய்ய காலியில இருந்து காமினி வருவான்....!!!! - வைதேகி பாலமுரளி--

........

அந்த இருபத்தெட்டு டாக்குத்தர்மாரும் தாங்கள் கும்பிட, மாஞ்சோலை ஆஸ்பத்திரியில புத்தர் சிலை வச்சா..... அப்ப தூக்கிப் பிடிச்சுக் கொண்டு வாங்கோ பிக்கானையும், மண்வெட்டியையும்!!!!!

-திருமதி வைதேகி பாலமுரளி  via Facebook 

அபராஜிதன் : அருமையான பதிவு - நன்றி

இது இன்று நேற்றல்ல பல காலமாக நடைபெறும் விடயம் .இலங்கையில் இலவச கல்வி வைத்திய படிப்பு உட்பட .

படிப்பு முடிய பலர் உடனே வெளியே பறந்துவிடுவார்கள் .பின்னர் ஒரு சட்டத்தை இலங்கை அரசு கொண்டுவந்தது.கட்டாய சேவை சில வருடங்கள் செய்யவேண்டும் என்று .அதற்கும் குற்ற தண்டனையை கட்டிவிட்டு பறந்தவர்கள் தான் அதிகம் .

சிங்கள அரசிற்கு கீழே இருந்ததாலோ என்னவோ "நாட்டு பற்று " என்ற ஒன்று எம்மவர்களுக்கு இருக்கவேயில்லை .வெளிநாடுகளில் கூட பலர் நிலை அதுதான் .பொப் ரே ஒரு கூட்டத்தில் நேரிடையாக சொன்னார் ."நீங்கள் கனேடியர்கள்ஆக வந்தபின்பும் தமிழர்கள் தமிழர்கள் என்று கொண்டிராமல்  கனேடியர்களாகவும் உணரவேண்டும்  என்றும்  "  .எமது அடையாளத்தை தொலைக்க தேவையில்லை ஆனால் அந்த நாட்டின் பிரஜைகளாக இருக்கவேண்டும் .

எங்கிருந்தாலும் உழைத்து விட்டு ஓடிவிடுவம் என்ற சிந்தனைதான் காரணம் என்று நம்புகின்றேன் .

புலிகள் ஆட்சியில் வன்னி இருந்த காலத்தில் அங்கு போய் பகுதி நேர வேலை பார்த்தவர்களும் சிலர் இருக்கின்றார்கள் என்பதும் உண்மை .

 

  • கருத்துக்கள உறவுகள்

வெளி நாட்டில் இருப்பவர்கள் ஒருவரும் கஸ்டப்படாமல் முன்னுக்கு வந்திருக்க முடியாது. அப்படி வந்திருந்தால் அவர்கள் ஏதோ சட்ட விரோதமாக செய்கிறார்கள் என்று தான் அர்த்தம். இங்கு கொஞ்சப் பேர் படிக்க வந்தவர்கள் மட்டும் கஸ்டத்தை அனுபவிப்பது போலவும்,மற்றவர்கள் நல்ல வசதியாக இருக்கின்ற மாதிரியும் எழுதியுள்ளார்கள்.

சீவி புலத்தில் இருக்கின்ற படித்தவர்களை ஊரில் வந்து குடியேற சொல்லி கேட்கவில்லை. உங்களுக்கு நேரம் கிடைக்கும் நேரத்தில் ஊருக்கு கொஞ்ச காலம்[3 வருடம்] வந்து நின்று சேவையாற்ற சொல்லித் தான் கேட்டவர். இங்கு ஒருத்தரையும் கட்டாயப்படுத்தவில்லை. நீங்கள் ஊரில் போய் சேவையாற்ற முடியாமைக்கு உங்களுக்கு தனிப்பட்ட காரணங்கள் ஆயிரம் இருக்கலாம். ஆனால் அதை எல்லாம் விடுத்து சிங்களவன்,எங்கட பூமி அன்னியனின் ஆக்கிரமிப்பில் இருக்குது என்று சும்மா தேவையில்லாமல் சப்பு கட்டு கதைக்கின்ற கதைகளை விடுங்கோ!...எழுதும் போது கொஞ்சமாவது மனட்சாட்சியோடு எழுதுங்கள்...நீங்க்ள் தான் கொஞ்ச காலத்திற்கு முந்தி உங்கட சிங்கள் புரபசரை புகழ்ந்து யாழில் எழுதினீர்கள்.உங்களிட்ட நல்ல திறமையும்,அறிவும் இருந்தும் அவர்களோட தயவு இல்லாமல் புலத்திற்கு படிக்க வந்திருக்க் முடியாது இருந்திருக்கும் என நீங்கள் தான் எழுதுதினீர்கள். அவர்களுக்கு எல்லாம் நீங்கள் காட்டும் நன்றிக் கடன் என்ன? அவர்கள் என்ன சிங்களம்,தமிழ் பார்த்தா உங்களுக்கு படிப்பித்தார்கள்?...அவர்கள் 100 பேரை உருவாக்கினால் உங்களைப் போன்றவர்கள் 1000 பேரை உருவாக்கிவீர்கள் என்று தானே படிப்பித்தார்கள்.

உங்களைப் போன்றவர்கள் இங்கே இருந்து கொண்டு ஊரில் இளைஞர்கள் கூட்டம் தடம் புரண்டு போய் விட்டார்கள்,போதைவஸ்து பாவனை அதிகரித்து விட்டது என்று கூப்பாடு போடுவதில் என்ன பிரயோசனம்?...படித்தவர் கூட்டம் கொஞ்சம்,கொஞ்சமாக நாட்டை விட்டு வெளியேறினாலும் புலிகள் இருக்கும் மட்டும் கொஞ்சம் பயம் இருந்தது. புலிகள் இல்லை என்று அங்குள்ள மக்களை தவிர்க்க விட்டு விடுவீர்களா? இல்லை என்ட படியால் தானே உங்களால் முடிந்த அளவு காசு அனுப்புகிறீர்கள்.

ஊரில் போய் கொஞ்சக் காலம் நின்று சேவை செய்வதற்கு பரந்த மனசு தான் தேவை.அதை அப்படியே ஒத்துக் கொண்டு இருந்தால் திரி இப்படியே நீண்டு இருக்காது. உங்களுக்கு எல்லாம் சேவை மனப்பான்மையும், உங்கட கல்வியறிவையும் தாயக மக்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்ட எண்ணம் இல்லை. அப்படி இருந்திருந்தால் சுனாமியின் போதே ஊரில் போய் சேவை செய்திருப்பீர்கள்.

இங்கு தான் நீங்கள் என குறிப்பிட்டது தனியே நெடுக்கரை மட்டுமல்ல,நெடுக்கரோடு ஒத்த கருத்தை கொண்டு இருந்த அனைவருக்கும் தான்.

ஒரு பாதை மாறி போகும் சமுதாயத்தை அறிவார்ந்த சமுதாயமாக மாற்ற நிறைய புத்திசாலிகள்,அறிவுஜீவிகளின் உதவி தேவை...அங்குள்ள மக்களுக்கு இப்போது தேவை நிறைய உள,நல,மருத்துவ ஆலோசனைகள் வழ்ங்கக் கூடியோர்,மருத்துவர்கள்,கல்வி கற்பிக்க கூடிய ஆசான் போன்ற இன்னும் பலர்....இவர்கள் எல்லாம் ஊரில் போய் தவணை முறையில் சேவை ஆற்றினாலே வளம் மிக்க சமுதாயத்தை உருவாக்கலாம்.படித்தவர்கள் எல்லாம் ஊரை விட்டு வெளியேறுவதால் தானே சீனாக்காரனும்,இந்தியக்காரனும் அங்கே போகின்றான்...படித்தவர்கள் எல்லாம் ஊரிலே இருந்திருந்தால் கண்ட,கண்ட கழிசடை எல்லாம் எங்கட ஊரில் போய் இருக்க முடியுமா?


பி;கு; நெடுக்கு நான் ஊரிலேயே படிக்கவில்லைத் தான். அதற்காக இப்ப கவலைப்ப்டுகிறேன்.அப்படி படித்திருந்தால் இங்கே வந்து கஸ்டப்பட்டு கொண்டு இருக்க மாட்டேன். அங்கேயே நிம்மதியாய் ஒரு உத்தியோகத்தில் இருந்திருப்பேன்.




Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.