Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாருக்காவது ஆசை இருக்கா ????

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்தவரை.. அடுத்தவர்களுக்கு..  கைகாட்டி விட்டு தாங்கள் செளகரியமான இடத்தில் வாழ்ந்து கொள்வது நம்மவருக்கு கைவந்த கலை. tw_blush:

மக்கள் ஓரிருவரின் சொல் செயலில் முடிவெடுக்க வேண்டியதில்லை. நிலமைகளை தொடர்ந்து ஆராய்ந்தால் நல்லம்.

பிரித்தானியா கூட சொறீலங்காவில்.. தனது பிரஜைகளுக்கு இராணுவ நடமாட்டங்கள் இனவாதிகள் உள்ள இடங்களுக்குச் செல்ல எச்சரித்துள்ளது.  அவுஸியும் கூட. 

பிரித்தானிய குடியகழ்வு குடிவரவுத் துறை.. உள்நாட்டு அமைச்சகம்.. நாடுகள் பற்றிய வருடாந்த அறிக்கையை  (country guidance) சமர்ப்பிக்கின்றது. அவற்றை வாசித்து ஓரளவு நடுநிலைமையாக விடயங்களை உணர்ந்து கொண்டு.. செயற்படுவதே நன்று.

சொறீலங்கா.. சிங்கள இராணுவம்.. ஒட்டுக்குழு.. காடைக்குழுக்கள்.. வாள்வெட்டுக் குழுக்கள்.. கொள்ளைக் குழுக்கள்.. செயற்பாடுகளின் கீழ் பாதுகாப்பான ஓர் இடம் இல்லை. குறிப்பாக வடக்குக் கிழக்கு நிலைமை மோசம். 

மேலும் வெடிபொருட்களின் ஆபத்தும் வடக்குக் கிழக்கில் உள்ளது. 

ஒரு சிலரின் அரைவேக்காட்டுத்தனமான சிந்தனைகளுக்கு மக்கள் பலியாக வேண்டும் என்றில்லை. மக்கள் நிலைமைகள் ஆராய்ந்து தீர்மானித்து முடிவெடுப்பது நல்லம். tw_blush:

  • Replies 168
  • Views 22k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஊருக்கு போவதும் விடுவதும் அதற்க்குச் சொல்லும் காரணங்களும் ஒரு புறம் இருக்க.புலம் பெயர்ந்தவாகள் நாடு திரும்புவது அவர்களுக்கு நன்மையோ இல்லையோ நாட்டுக்கு பல நன்மைகள் உண்டு.இங்கு ஆக்கிரமிப்பு என்டு கத்துறம்.ஆனால் அங்கு பல ஊர்கள் வெறிச்சோடிப்போய் உள்ளது.மற்றும் இன்னும் பலர் வெளி நாடு வரும் நோக்கில் வீடு வழவுகளை எந்த இனத்தவருக்கும் விற்பதற்க்கு தயாராக உள்ளனர்.எம்மவர் அங்கு சென்று வாழ்வதோடு அங்கு உள்ளவர்களையும் வாழ்வதற்க: ஊக்குவிக்க வேண்டும்.இல்லேயில் அங்குள்ள அனைவரையும் வெளிநாட்டிற்க்கு எடுத்து விட்டால் பிரச்சனை முடிஞ்சுது.
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, சுவைப்பிரியன் said:

நீங்கள் கூறுவது சரிதான் சுவைப்பிரியன். எல்லோரும் பயந்துகொண்டு இருப்பதில் பயன் இல்லை. காலம் போகப் போக ஒருவரை பார்த்து ஒருவர் தம் மனதை மாற்றிக்கொள்ளவும் வாய்ப்பு உண்டு

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஊரில் போய் இருக்க ஆசை.ஆனால் ஆசைப்படுவதெல்லாம் நடந்து விடுமா என்ன?...என்னிடம் தற்போது அங்கு போய் இருப்பதற்கான பொருளாதாரா வசதிகள் இல்லை.அங்கு போய் நல்ல வேலை எடுப்பத்ற்குரிய கல்வித் தகமைகளும் இல்லை. இருந்திருந்தால் நிட்சயம் போய் இருந்திருப்பேன்.கொஞ்ச காகத்திற்குப் பிறகு போகும் எண்ணம் இருக்குது.பார்ப்போம்!

ஓரே ஒரு விடயம் அங்கு இல்லாதது இங்கு இருக்குது.சுதந்திரம் அது இங்கு அதிகம்.அங்கு இல்லை என்றே சொல்லலாம். அதுவும் அங்கு போய் இருக்க யோசிக்க வைக்குது

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ஜீவன் சிவா said:

மனம் இருந்தால் இடம் உண்டு தாயே

நல்லதொருபதில் ஜீவா. இதுதான் உண்மையான காரணம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, ரதி said:

எனக்கு ஊரில் போய் இருக்க ஆசை.ஆனால் ஆசைப்படுவதெல்லாம் நடந்து விடுமா என்ன?...என்னிடம் தற்போது அங்கு போய் இருப்பதற்கான பொருளாதாரா வசதிகள் இல்லை.அங்கு போய் நல்ல வேலை எடுப்பத்ற்குரிய கல்வித் தகமைகளும் இல்லை. இருந்திருந்தால் நிட்சயம் போய் இருந்திருப்பேன்.கொஞ்ச காகத்திற்குப் பிறகு போகும் எண்ணம் இருக்குது.பார்ப்போம்!

ஓரே ஒரு விடயம் அங்கு இல்லாதது இங்கு இருக்குது.சுதந்திரம் அது இங்கு அதிகம்.அங்கு இல்லை என்றே சொல்லலாம். அதுவும் அங்கு போய் இருக்க யோசிக்க வைக்குது

உண்மைதான் ரதி. ஆனால் நாம் எம்பாட்டில் இருந்தால் என்ன செய்வார்கள் மற்றவர். வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் என்றாலே தமது எதிரிகள் என்பதுபோல் பார்க்கின்றனர் என்றார் சமீபத்தில் ஊருக்குப் போய் வந்த பெண் ஒருவர்.அங்கிருப்பவர்களின் மனநிலை யாரையும் மதிக்காததாக அலட்சியம் கொண்டதாகவும் இருக்கிறது என்றார் அவர்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nedukkalapoovan said:

நீங்கள் எவ்வளவு காலம் சிங்களவனோடு அவனுடைய இடத்தில் வாழ்ந்துவிட்டு இதை அவர்கள் சொல்கிறார்கள் என்று ஒருக்கா கேட்டுச் சொல்லுறீங்களா..??! வெள்ளவத்தையில் பம்பலப்பிட்டியில் கொட்டகேனவில் மோதரையில் குப்பை கொட்டிட்டு அள்ளிவிடக் கூடாது. சும்மா சும்மா எல்லாம் எடுத்துவிடக் கூடாது. tw_blush:

சிங்களவனின் உண்மை முகம் பல்கலைக்கழகத்தில் இருந்து அவனுடைய பட்டிதொட்டி வரை அனுபவித்தவர்கள் நாங்கள் (எல்லா சமூகத்திலும் நல்லவர்கள் கெட்டவர்கள் இருக்கிறார்கள்.. ஆனால் ஒரு பொதுமைப்பாடான சிந்தனை குறித்தே இங்கு பேசுகிறோம்). பெருமையாக அல்ல.. யதார்த்தமாகச் சொல்கிறோம். அதுதான். tw_angry:

உண்மைதான் இனம் என வரும் போது சிங்களவர்களை மாற்ற முடியாது நெடுக்ஸ். 

83 கலவரத்தில் அடித்தபோது பல நல்ல சிங்களவர்களை நான் கண்டடேன். அதை என் வாழ் நாளில் மறக்கவே முடியாது. 

ஐந்து தலை முறையாக மோதரயில்தான் குப்பை கொட்டினோம், ஆனால் இப்போழுது அது யாழ்பாணிகள் நிறைந்து விட்டது. 

மோதரா நன்னத்தாரவேலா தெங்.....:grin:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, arjun said:

சுரேஸ் ,சிவாஜியை சாட்சிக்கு இழுக்க வேண்டிய அவலம் .அரசியல்வாதிகள் சொல்வதை கேட்டு வாழ்கையை தொலைத்துவிடாதீர்கள் 

யாழ் உறவு ஜீவன் நாட்டில் தான் நிற்கின்றார் .

எல்லோரும் தமிழர்கள் தான். ஆனால் எல்லா தமிழர்களுக்கும் அரசியல் பிரச்சனைகள் இருப்பதில்லை. உங்கள் பிரச்சனை ஜீவனுக்கு இல்லை. எனது பிரச்சனை உங்களுக்கும் இல்லை. ஜீவனுக்கும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

எல்லோரும் தமிழர்கள் தான். ஆனால் எல்லா தமிழர்களுக்கும் அரசியல் பிரச்சனைகள் இருப்பதில்லை. உங்கள் பிரச்சனை ஜீவனுக்கு இல்லை. எனது பிரச்சனை உங்களுக்கும் இல்லை. ஜீவனுக்கும் இல்லை.

நன்றிகள் குசா. நான் எழுத நினைத்ததை நீங்கள் எழுதிவிட்டீர்கள். எங்கே தனிமனித தாக்குதல் என்று சொல்வார்களோ என்று எழுதவில்லை. 

17 minutes ago, குமாரசாமி said:

எல்லோரும் தமிழர்கள் தான். ஆனால் எல்லா தமிழர்களுக்கும் அரசியல் பிரச்சனைகள் இருப்பதில்லை. உங்கள் பிரச்சனை ஜீவனுக்கு இல்லை. எனது பிரச்சனை உங்களுக்கும் இல்லை. ஜீவனுக்கும் இல்லை.

எனது மனதிற்கு பிடித்ததை செய்பவன். இது எனது சுய விருப்பம். மற்றவர்களிற்கு எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கலாம். எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது பயன்படுத்துகிறேன் அவ்வளவுதான். 

நன்றி குமாரசாமி அண்ணை 
மேலுள்ளது ஏற்கனவே என்னால் பதியப்பட்டதுதான் இருப்பினும் மறுபடியும் பதிகிறேன்.  அவர்களுக்கு அவர்களின் பிரச்சனைகள், யாரையுமே யாரும் இப்படித்தான் வாழ் என்று வற்புறுத்த முடியாது. அவர்கள் தங்கள் தேவை நிலைமை சார்ந்துதான் முடிவேடுக்க வேண்டும்.

ஆனால் தாயகத்தை மறந்திடாதீங்க 

பல காலமாகவே புலம்பெயர் தமிழர்களும், தாயக வரவும் எனும் தலைப்பில் அரசியலை தவிர்த்து பொருளாதார ரீதியிலான அணுகுமுறையில் ஒரு கட்டுரை எழுத  விரும்பினான். இத் திரி அதற்கு ஒரு ஊக்கத்தை தந்துள்ளது - நன்றி 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஜீவன் சிவா said:

உங்களை ஒருவர் மேற்கோள்காட்டி எழுதிய போது இதனை நீங்கள் எழுதியிருக்க வேண்டும். 

1 minute ago, MEERA said:

உங்களை ஒருவர் மேற்கோள்காட்டி எழுதிய போது இதனை நீங்கள் எழுதியிருக்க வேண்டும். 

:grin:

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இப்படி பயமுறுத்துகிறீர்கள்

2 minutes ago, ஜீவன் சிவா said:

:grin:

2 minutes ago, MEERA said:

ஏன் இப்படி பயமுறுத்துகிறீர்கள்

முழுமையாக வாசியுங்கள்  புரியும் 

  • கருத்துக்கள உறவுகள்

யாருக்குதான் ஆசையில்லை? அங்கு போய் பார்த்தபின் அந்த ஆசை பேய்விட்டது. அங்கு நான் ஒரு அந்நியன், அல்லது பணம் காய்க்கும் மரம். பாதுகாப்பு பூச்சியம்.

கொழும்பிலொன்றால் வாழ முடியுமென்று நினைத்தேன், அதுவும்  KEELS சுப்ப மாக்கெற்றில் நடந்த அனுபவந்தால் வேண்டாமென்று போய்விட்டது. வரிசையில் நிற்க்கும்போது ஒருத்தான் தள்ளிக்கொண்டு நின்றான், ஏன்டாப்பா தள்ளுகின்றாய் என்றது தான் தாமதம்,
உனக்கு இங்கென்ன வேலை அப்படியென்று கனக்க கத்த தொடங்கி, பிறகு phone எடுத்து மாச்சான் எல்லாரையும் கூட்டியா இங்கு ஒருத்தருக்கு பாடமெடுக்கனுமென்று கூப்பிட்டான். நான் கூட்டிவந்த ஆட்டோகாரனால் அன்று தப்பினேன்.

இலங்கை இப்ப ரொளடிகளின் உலகம். கதைத்தால் தப்புவது கஷ்டம் எங்கென்றாலும்.

50 minutes ago, உடையார் said:

அண்ணை வெளிநாட்டில் இருந்துவிட்டுபோய் அங்குள்ள நடைமுறைகளுக்கு எம்மை மாற்றுவது கொஞ்சம் கடினமாய் இருக்கும். கொஞ்சநாள் போக பழகிவிடும். பலர் நாடு திரும்பி தாம் ஒண்டு தன்பாடோண்டு எண்டு இருக்கின்றனர். என்ன போதுவிசையங்களில் அவசரப்பட்டு மூக்கை நுழைக்காமல் கொஞ்சம் மெதுவாக முன்னேறவேண்டும். 

நீங்கள் கூறும் ரௌடி விசையம் எங்கைதான் இல்லை. UKஇல் நான் வேலை செய்யும் போது எத்தனை கறுப்பினதவர், பாகிஸ்தானி, ஐரிஸ் காரன்(கவுன்சில் குடியிருப்புகளில் இருபவர்கள்), ஏன் ஊத்தை வெள்ளைகள் என பலரின் பிரச்னைகளை பார்த்திருக்கின்றேன். ஏன் எங்கடை தமிழ் பொடி ஒண்டு கள்ளநோட்டை கிழித்து கையில் குடுக்க பெரிய சீன் போட்டது இப்பவும் மனதுக்குள் நிக்குது.

உங்களுக்கு நடந்த விடயம் கவலைக்குரியதுதான்.

கொஞ்சக்காலம் தொடர்ந்து இருந்து முயற்சித்து பாருங்கள்.......பின்னர் வெளிக்கிட மாட்டீங்கள். 

ஜீவன் சிவா அண்ணை இனி வெளிக்கிட மாட்டார். ஆரம்பத்தில் ஒருவருடம் என்று தான் போனார். தொடக்கத்தில் ஊருக்கு சேவைஎன்று அவர் தொடங்கியபோது பல சிரமங்கள் எதிர்நோக்குவதாய் கூறியிருந்தார்.

உரிமையுடன் உங்களுடன் கதைப்பது ஏனெனில்,நான் கல்வி வேலைகளுக்காக 9 வருடங்கள் வெளிநாடுகளில் வாழ்ந்தாலும் புலம்பெயர் தமிழன் கிடையாது. ஆனால் உங்கள் உங்கள் சொந்தப்பிரச்சனைகளை வைத்து முடிவெடுப்பது உங்கள் விருப்பம்.   

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பதிவு தான் அக்கா 

சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊர போல வருமா எந்நாடு என்றாலும் அது நம் நாட்டிற் ஈடாகுமா

கடும் வெயில்  இப்ப வாய்காலில் குளித்து கொண்டு இருக்கிறன் ஆஹா ஓகோ ??

சிறு வயதில் வெளிநாடு வந்துவிட்டேன். பெரிய வயதும் இல்லை. நாட்டுக்கு சென்று அங்கு வாழ ஆசை. திருமணம் குட்டி என்று ஆனபிறகு சாத்தியம் இல்லாமல் போய்விடுமா என்று மனது உருக்குகின்றது. பிள்ளையின் படிப்பு முக்கியம். எனக்கு அங்கு என்ன வேலை வாய்ப்பு உண்டு? பிள்ளையின் எதிர்காலம் என்ன. எல்லாத்துக்கு வினா கிடைக்குமா... 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Karan T. said:

 உங்கள் தகமைக்கு அரச வேலையோ அல்லது தனியார் இடத்தோ வேலை பார்க்கலாம் ஆனால் முதலீடு செய்து ஒரு தொழில் தொடங்கியும்  வாழலாம் நானே ராஜா நானே மந்திரி  

ஆனால் அரச தொழில் ஆயீரம் பேருக்கு பயப்பட வேண்டும் ?

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டில் இருப்பவன் என்ற அடிப்படையில் நானும் சில விடயங்களை பகிரலாம் என்று நினைக்கிறேன் ......
நீங்கள் எண்பதுகளில் நாட்டை விட்டு சென்றவர்கள் என்றால் ....உங்கள் நினைவில் இருக்கும் நாட்டை மறந்து விடுங்கள் 
நாடு எவ்வளவோ முன்னேறிவிட்டது ....உதாரணமாக 50 சதம் வாங்கிய பிச்சைகாரர்களின் தற்போதைய மிகக்குறைந்த தொகை 10 ரூபாய் 
இல்லாவிட்டால் கொடுக்கும் சில்லறையால் எறி வாங்க வேண்டி வரும் .....வாழ்வாதார செலவு மலைக்குமளவு   
(பணப்பையை விட்டு எடுக்கும் ஒரு மயில் அரை மணி நேரத்தினுள் பறந்துவிடும் ----மயில் -ஆயிரம் ரூபாய் தாள் )....

On 4/10/2016 at 1:43 PM, arjun said:

நாங்கள் போகாவிட்டாலும் போகின்றவர்களை தடுக்கும் வேலைக்கு போகக்கூடாது அதைவிட எனக்கு போக விருப்பமில்லை என்பதற்காக பொய்யாக ஆயிரம் நொண்டி சாட்டுக்களை வைக்ககூடாது .

நாட்டில் தேனும் பாலும் ஓடவில்லை ஆனால் நிம்மதியாக வாழத்தடையில்லை

நிச்சயமாக ஏற்று கொள்ளக்கூடிய கருத்து ...நிம்மதியாக வாழ தடையில்லை ....Round UP, Police பதிவு,checkpoint இப்படி எதுவுமில்லை 
ஆனால் என்னவென்று கூற முடியாத வெறுமை ஒன்றுண்டு ....தகுந்த கல்வித்தகுதி இருப்பின் உரிய தொழில் ஒன்றை அடைவது ஒன்றும் குதிரைக்கொம்பல்ல...மென்பொருள் துறை அசுர வளர்ச்சி அடைந்துகொண்டு வருவது பல முதலீடுகளையும் ,உட்கட்டுமான அபிவிருத்தியையும் 
நிட்சயப்படுத்துகிறது (தற்போதைய நாட்டின் மொத்ததேசிய உற்பத்தியின் அந்நிய நாட்டு செலவாணியை அதிகமாக ஈட்டி தரும் நான்காவது துறை மென்பொருள்)....

மேலும் தொழிநுட்பம் மேற்கத்திய நாடுகளுக்கு நிகரான வகையில் அபிவிருத்தியடைகிறது ....
32 Mbps 4G LTE -முதன்முதலாக ஆசியாவிலே இலங்கையில் தான் அறிமுகப்படுத்தப்பட்டது....இங்கே ஒரு I Phone 6 S வாங்குவது பிரித்தானியாவில் வாங்குவதை விட மலிவு. தற்போதைய இளம் சந்ததிகள் அனாயசமாக 6 இலக்க சம்பளங்களை தொடுகிறார்கள்....
கூடுதலாக மென்பொருள் துறையில் இருப்பவர்கள்  வன் நாணயங்களில் சம்பளம் வழங்கும் நிறுவனங்களில் வேலை செய்கிறார்கள் (USD,GBP மற்றும் SGD)....

22 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உண்மைதான் ரதி. ஆனால் நாம் எம்பாட்டில் இருந்தால் என்ன செய்வார்கள் மற்றவர். வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் என்றாலே தமது எதிரிகள் என்பதுபோல் பார்க்கின்றனர் என்றார் சமீபத்தில் ஊருக்குப் போய் வந்த பெண் ஒருவர்.அங்கிருப்பவர்களின் மனநிலை யாரையும் மதிக்காததாக அலட்சியம் கொண்டதாகவும் இருக்கிறது என்றார் அவர்.

அக்கோய் 

வெளிநாட்டிலிருந்து வந்தால் அடக்கிகொண்டிருக்கோணும்..வெற்று பந்தா (கூடுதலாக யூகே பாட்டிகளிடம் தான் இதை பாத்திருக்கிறேன்)
நுனி நாக்கு ஆங்கிலம் ....English Accent,பிள்ளைகளின் பிகினி ஆடை  இதெல்லாம் அங்கே வைத்துகொள்ளுங்கள் இங்கே காட்டினால் மலைத்த காலம் போயிட்டு இப்ப சிரிச்சு விட்டுடுவினம்  எல்லாவற்றுக்கும் மேலாக ஒவ்வொரு வெளி  நாட்டையும் பற்றி எங்கடை சனம்  நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறார்கள்....ஒரு காலத்தில் அமெரிக்காகாரன் ,யூகே காரன் என்று விழி விரிந்து பார்த்தகாலம் எல்லாம் மலையேறி போய்விட்டது ...இப்போது வெளிநாட்டுகாரர்களை இங்கிருப்பவர்கள் ஏளனமாக பார்க்கிறார்கள்....காரணம் எங்கடை சிங்கங்கள் அங்கே செய்த ஒட்டுமொத்த மொள்ளமாரித்தனத்தையும் இங்கே வந்து எதோ சாதனை செய்ததாக அடித்து விட்டது இப்போது ஒழுங்காக வெளி நாட்டில்  சம்பாத்தித்து செட்டிலானவனையும் கள்ள மட்டை என்று பெயர் வாங்கி கொடுத்திருக்கு ,ஸ்டுடென்ட் விசா என்று போய் கள்ளத்தனமாக உழைச்சு பிடிபட்டு Deported, Exit ஆன திருவாளர்களின் வித்தைகள் எல்லாம் ஊரின் அடிமட்டம் வரை ஊடுருவிஇருப்பதால்...வெளிநாட்டுக்காரன் அதிலும் யூகே காரன் என்றால் சனம் அருவருப்புடன் பார்க்கும் காலமாகியிருக்கிறது..உங்களை யூகேயில் இருந்து வந்ததால் மட்டும் மதிக்கவேணும் என்று நினைக்கும் பார்ட்டிகள் வராமலிருப்பதே மேல், வந்தால் உப்பிடித்தான் வெட்கப்படவேண்டிவரும் ....

ஆகமொத்தத்தில் திரும்பி இங்கே செட்டில் ஆக விரும்புபவர்கள் உங்கள் மேலைத்தேய அடையாளங்களை முழுவதுமாக திறக்க தயாராக வேண்டும் 
ஆடை விடயத்திலிருந்து ...சிந்திக்கும் மனப்பாங்கு வரை    

  • கருத்துக்கள உறவுகள்

அங்குள்ள யதார்த்தத்தைத் தெரிவித்தமைக்கு நன்றி நன்பரே...! ஆனாலும் இங்கிருந்து பணம் அனுப்புங்கோ, செல்போன் அனுப்புங்கோ, மடிக்கணனி வேணும் என்று கேட்கின்றார்களே, அதுவும் அங்கு நல்ல வேலை செய்பவர்கள்கூட...!

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, suvy said:

அங்குள்ள யதார்த்தத்தைத் தெரிவித்தமைக்கு நன்றி நன்பரே...! ஆனாலும் இங்கிருந்து பணம் அனுப்புங்கோ, செல்போன் அனுப்புங்கோ, மடிக்கணனி வேணும் என்று கேட்கின்றார்களே, அதுவும் அங்கு நல்ல வேலை செய்பவர்கள்கூட...!

சொந்தம் விட்டுப் போகக் கூடாது பாருங்க...!

அதுக்காக உங்களுக்கு அடிக்கடி நினைவூட்டிறாங்கள் போல கிடக்கு!

பகிர்வுக்கு நன்றி....அக்கினி!

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, suvy said:

அங்குள்ள யதார்த்தத்தைத் தெரிவித்தமைக்கு நன்றி நன்பரே...! ஆனாலும் இங்கிருந்து பணம் அனுப்புங்கோ, செல்போன் அனுப்புங்கோ, மடிக்கணனி வேணும் என்று கேட்கின்றார்களே, அதுவும் அங்கு நல்ல வேலை செய்பவர்கள்கூட...!

சுவி அண்ணை 
முக்கியமாக இதிலும் சில விடயங்களை குறிப்பிடவேண்டும் ....எங்கடை வெளிநாட்டு தங்கங்கள் குடும்ப பாசம் காரணமாக ..தாங்கள் ஒவ்வொரு நிமிடமும் போராடி ...இரண்டு வேலை ...மூன்று வேலை செய்து சம்பாதித்த பணத்தை தண்ணீராய்  இறைப்பது....எங்கடை சனம்  வெளிநாட்டு தியாகிகளை பணமிறைக்கும் மெசினாக மட்டுமே பார்க்கும் நிலைக்கு தள்ளிவிட்டுள்ளது ....யார் திருந்த வேண்டும் என்பதை உங்களின் தீர்ப்பிற்கே விடுகிறேன் ....

செல்போன், மடிக்கணணிக்கு பச்சை தண்ணியில் பலகாரம் சுடுவதை விடுத்து  வேறு ஒரு காரணமும் உண்டு  ....இலங்கை சீனாவுடன்  நேரடி தொடர்பில் இருப்பதால் அவங்களின்ட டமால் டுமீல் பொருட்கள் பைப்பிலிருந்து கொட்டும் தண்ணி போல இங்கே நிறைந்து போய் கிடக்கு ...எனக்கே தனிப்பட்ட அனுபவம் அதிகம் (Dell இரண்டு கிழமைகளில் Doll ஆனது )  தற்போது நான் பாவிக்கும் மடிக்கணணி  சிங்கப்பூரில் இருந்து நேரடியாக  கொள்வனவு செய்தது....

பொதுவாக வெளிநாட்டு உறவுகள் பணத்தை அனுப்புங்கோ வாங்கிக்கொண்டு வாறோம் என்று செக் வைக்க வேண்டும் 

18 hours ago, குமாரசாமி said:

எல்லோரும் தமிழர்கள் தான். ஆனால் எல்லா தமிழர்களுக்கும் அரசியல் பிரச்சனைகள் இருப்பதில்லை. உங்கள் பிரச்சனை ஜீவனுக்கு இல்லை. எனது பிரச்சனை உங்களுக்கும் இல்லை. ஜீவனுக்கும் இல்லை.

எழுத்தை பார்த்தால் இவர்தான் பொட்டம்மனுக்கே புலனாய்வு தகவல் கொடுப்பவர் போல இருக்கு ,

போராட்டம் என்றவுடன் நாட்டை விட்டு ஓடிவந்து விட்டு,  நாட்டில் என்ன நடந்தது என்றே தெரியாமல்  இங்கும்  பலர் உப்பிடி சொல்லிக்கொண்டு திரியினம் 

முடிந்தால் அப்படி என்ன பிரச்சனை என்று ஒருக்கா எழுதுங்கோ ?

Edited by arjun
எழுத்து திருத்தம் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Just now, arjun said:

எழுத்தை பார்த்தால் இவர்தான் பொட்டம்மனுக்கே புலனாய்வு தகவல் கொடுப்பவர் போல இருக்கு ,

போராட்டம் என்றவுடன் நாட்டை விட்டு ஓடிவந்து விட்டு நாட்டில் என்ன நடந்தது என்றே தெரியாமல்  இங்கும்  பலர் திரியினமம் 

தகவல் குடுத்தது/குடுக்கிறது ஒருபக்கம் இருக்கட்டும்.
தங்களுக்கு இதை விட்டால் வேறை வசனமே தெரியாதா? சும்மா கீறல் விழுந்த ரெக்கோட் தட்டுமாதிரி ஒரே இடத்திலை   நிண்டு  கீச்சுட்டுக்கொண்டு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.