Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பாடகி சுசித்ரா தனுஷ் தொடர்பில் பரபரப்பு தகவல் : டுவிட்டரில் சர்சையான படங்களும் பதிவேற்றம்

Featured Replies

பாடகி சுசித்ரா தனுஷ் தொடர்பில் பரபரப்பு தகவல் : டுவிட்டரில் சர்சையான படங்களும் பதிவேற்றம்

தமிழ் சினிமாவின் பிரபல பாடகியான சுசித்ரா நேற்று தனது டுவீட்டர் பக்கத்தில் நடிகர் தனுஷ், பாடகி சின்மயி, ஆன்மிகவாதி சத்குரு இவர்களையெல்லாம் விமர்சிக்கும்  விதமாக டுவீட்களை பதிவு செய்துள்ளார்.

dhanush-suchitra3-22-1487747881.jpg

மேலும் குறித்த டுவீட்டர் பதிவில், அவருக்கும் இவர்களுக்கும் இடையில் என்ன பிரச்சினை என்பதை வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை. ஆனால் அவர் காயமுற்ற அவரது கையை புகைப்படம் எடுத்து அதையும்  டுவீட்டரில் பதிவிட்டுள்ளார்

s7_17100.png

எந்த முடிவுக்கும் வர முடியாத குழப்பமான அவரது டுவீட்டர் பதிவுகள், பலராலும் கவனிக்கப்பட்ட நிலையில், அவற்றில் சிலவற்றை அவர் அழித்தும் வருகிறார். 

இந்நிலையில் சுசித்ராவின் சமூக வலைத்தள கணக்கானது  சில விஷமிகளால் ஊடுருவப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் அதையும் மறுத்து, தனது கணக்கு யாராலும்  ஊடுறவப்படவில்லை என்ற விளக்கத்தையும் சுசித்ரா பதிவு செய்துள்ளார்.

1487756079-758.jpg

குறித்த பதிவுகளால் தனுஷ், சிம்பு உள்ளிட்டவர்கள் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களாக பார்க்கப்படுவதாகவும், சுசித்ராவின் பதிவுகள் தனுஷை குற்றவாளியாக அடையாளப்படுத்துவதால் அவர் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற வகையில் பல்வேறு தகவல்கள் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/16986

  • Replies 51
  • Views 7.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

காயம்பட்டது, கையா காலாtw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, நந்தன் said:

காயம்பட்டது, கையா காலாtw_blush:

படத்தை சூம் பண்ணி போட்டிருங்காங்கையா 

  • கருத்துக்கள உறவுகள்

இரவிரவாய் குடிச்சிப் போட்டு கூத்தடிக்கிறது...எதாவது நடந்தவுடனே வந்து ஒப்பாரி வைக்கிறது...மனிசருக்கு வேற வேலை இல்லை<_<

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

சுசித்ராவின் ட்விட்டர் கணக்கில் தொடரும் ட்வீட்கள்: திரையுலகினர் கடும் அதிர்ச்சி

பாடகி சுசித்ரா | கோப்பு படம்
பாடகி சுசித்ரா | கோப்பு படம்
 
சுசித்ராவின் ட்விட்டர் கணக்கில் தொடர்ச்சியாக புகைப்படங்களை வெளியீட்டு வரும் ட்வீட்களால், தமிழ் திரையுலகினர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தனது ட்விட்டர் தளத்தில் வெளியாகும் கருத்துக்களால் கடும் சர்ச்சையில் சிக்கியிருப்பவர் சுசித்ரா. மார்ச் 3-ம் தேதி காலையில் தனுஷ் - த்ரிஷா, அனிருத் - ஆண்ட்ரியா, டிடி மற்றும் ஹன்சிகா உள்ளிட்டவர்களின் புகைப்படங்கள் சுசித்ராவின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டு 'இது இவருடைய லீலை' என்று கூறப்பட்டிருந்தது. இப்படங்களால் கடும் சர்ச்சை உண்டானது.

அனுயா, சஞ்சிதா ஷெட்டி உள்ளிட்டவர்களின் புகைப்படங்கள், செல்வராகவன் - ஆண்ட்ரியா இருவருக்கும் இடையேயான இ-மெயில் உரையாடல்கள் என தொடர்ச்சியாக சுசித்ராவின் ட்விட்டர் கணக்கில் வெளியானது. மேலும், திங்கட்கிழமை அன்று பல்வேறு வீடியோக்களை வெளியிட இருப்பதாகவும் தகவல் வெளியிடப்பட்டது.

தற்போது சுசித்ராவின் ட்விட்டர் தளத்தில் வெளியிடப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள், இ-மெயில்கள் என அனைத்துமே நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சுசித்ராவை சாடிய சின்மயி

சுசித்ராவின் ட்விட்டர் கணக்கில் சின்மயி பற்றியும் தகவல்கள் வெளியாகின. இது குறித்து சின்மயி, "இந்த சர்ச்சை ஆரம்பிக்கும்போதே நானும் ராகுலும் கார்த்திக் குமாரிடம் பேசினோம். சுசித்ராவுக்கு உடல்நலம் சரியில்லை என அவர் கூறியதும் உடனடியாக நிலையை புரிந்துகொண்டோம். யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம்.

நேற்று கார்த்திக் குமார் பேஸ்புக்கில் ஆதரவு தருபவர்களுக்கு நன்றி தெரிவித்து ஒரு வீடியோ பதிவேற்றியிருந்தார். நாமே நேர்மையாக சிந்தித்தால் தெரியும், நம்மில் பலர் அதிக மன அழுத்தத்தை கடந்து வந்திருப்போம் அல்லது நமது குடும்பத்தினரில் யாராவது கடந்து வந்திருப்பார்கள். அது பற்றி நாம் பேச மாட்டோம். அவ்வளவே.

ஆனால், தற்போது அவரது ட்விட்டர் பக்கத்தில் நடந்து கொண்டிருப்பது முற்றிலும் தவறானது. (அவர் எப்போதோ என்னை அவரது பக்கத்திலிருந்து முடக்கிவிட்டார். காரணம் அவருக்கே வெளிச்சம்). எது நடந்தாலும் எனது மனசாட்சி தெளிவாக இருக்கிறது. எது குறித்தும் நான் பயப்படத் தேவையில்லை. நான் நல்ல மனிதியாக இருக்க வேண்டும் என்றே விரும்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், சுசித்ராவின் ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டு "நான் திறமையை வைத்து மட்டுமே முன்னேறியுள்ளேன். யாருக்கும் அனுசரித்தல்ல. நம்மை மதிப்பிட்டுக்கொள்வது போல் தான் பிறரையும் மதிப்பிடுவோம் என கூறுவார்கள். உங்கள் வாழ்க்கையைப் பாருங்கள். என்னுடையதை அல்ல. உங்களிடம் எந்த விதமான ஆதாரமும் இல்லை எனத் தெரியும் சுசித்ரா. ஏனென்றால் அப்படி எதுவும் இல்லை. விரைவில் குணமடைவீர்கள் என நினைக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

சுசித்ராவின் உணர்ச்சி வசப்பட்ட நிலையின் வெளிப்பாடு: கார்த்திக்

சுசித்ராவிடமிருந்து விவாகரத்து பெற்ற கணவர் கார்த்திக் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், " சுசித்ராவின் ட்விட்டர் பக்கத்தில் நிலவி வரும் சர்ச்சைக்கு நடுவில், இந்த நிலையிலும் கிடைத்துவரும் ஆதரவும், புரிதலும் எனக்கும் பெரு மகிழ்ச்சியைத் தருகிறது.

அதில் அவதூறாக குறிப்பிடப்பட்டுள்ள நபர்கள் நேரடியாக என்னைத் தொடர்பு கொண்டனர். நடந்தது என்னவென்று தெளிவாகப் புரிந்து கொள்ள முயற்சித்தனர். அது சுசித்ரா தற்போது அனுபவித்து வரும் உணர்ச்சி வசப்பட்ட நிலையின் வெளிப்பாடு என நானும் அவர்களிடம் நேர்மையாக நிலையை விளக்கியுள்ளேன். நாங்கள் ஒரு குடும்பமாக அவரது நிலையைப் புரிந்து கொள்ள, சரிசெய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

என்ன சொல்கிறார் சுசித்ரா?

ட்விட்டர் தளத்தின் நிகழ்வுகள் குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் சுசித்ரா, "இது முதல் முறையல்ல. ஏற்கெனவே ஒரு முறை மகாசிவராத்திரி அன்று ஹேக் செய்யப்பட்டு, தனுஷுக்கு எதிரான விஷயங்களை பதிவிட்டு இருந்தார்கள். அப்போதே நான் சைபர் க்ரைமிற்கு தெரிவித்துவிட்டேன். இந்த முறையும் ஏற்கெனவே ஹேக் செய்யப்பட்ட இடத்திலிருந்தே நடந்துள்ளது என்பது தெரியவந்துள்ளது. எதற்காக என்னுடைய ட்விட்டர் தளம் மூலமாக பதிவிடுகிறார்கள் என்பது தெரியவில்லை. இந்த விஷயங்கள் தொடர்பாக தனுஷ் அலுவலகத்திலிருந்து என்னிடம் பேசி வருகிறார்கள்.

தற்போது தனியார் துப்பறியும் நிறுவனத்தை அணுகியுள்ளேன். ஏனென்றால் முதலில் ட்விட்டர் கணக்கை மூடுங்கள் என சைபர் க்ரைம் அலுவலகத்தில் சொல்கிறார்கள். அவ்வாறு மூடிவிட்டால், யார் என் கணக்கில் பதிவிடுகிறார்கள் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் போய்விடும். பிறகு இது சகஜமான ஒன்றாகிவிடும். இதனால் நானும் பல பிரச்சினைகளை சந்தித்துவருகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

சுசித்ராவின் ட்விட்டர் தளத்தில் தொடர்ச்சியாக சர்ச்சைக்குரிய புகைப்படங்கள், தகவலால் சமூக வலைதளத்தில் பலரும் விவாதிக்கத் தொடங்கியுள்ளார்கள். இதனால் தமிழ் திரையுலகினர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/சுசித்ராவின்-ட்விட்டர்-கணக்கில்-தொடரும்-ட்வீட்கள்-திரையுலகினர்-கடும்-அதிர்ச்சி/article9570763.ece?homepage=true

  • கருத்துக்கள உறவுகள்

C6DgW2nWQAAcoc4.jpg

  • கருத்துக்கள உறவுகள்

சினிமா கூத்தாடிகளை கல்யாணம் கட்டுபவர்கள் ஒன்றுக்கு  பல முறை யோசிக்க வேண்டும்  :cool:

  • கருத்துக்கள உறவுகள்

சுள்ளான் நுள்ளான் கடிச்சு விளையாடி இருக்குது. tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

சமூக வலைதளங்கள் எவ்வளவு ஆபத்தானவை என்பது புரிந்தால் சரி..

  • தொடங்கியவர்

சுசித்ரா ட்விட்டர் ஹேண்டில் கற்றுத் தரும் பாடங்கள்!

கோப்புப் படம்.
கோப்புப் படம்.
 
ஒருபக்கம் நெடுவாசல், தாமிரபரணி, நீட் தேர்வு விவகாரங்களுக்கான ஹேஷ்டேக் உடன் கருத்துகளும் கோபங்களும் தெறிக்கும் போராட்டக் களமாக இருந்தது தமிழில் எழுதும் சமூக வலைதள உலகம். அதேநேரத்தில், மறுபக்கம் பாடகர், நடிகர் சுசித்ராவின் ட்விட்டர் பக்கத்துடன் தொடர்புடைய கலாய்ப்பு, காரசார பகிர்வுகள் மீதான ஹேஷ்டேக் இந்திய அளவில் முன்னிலை வகித்தது. அதாவது, நொடிக்கு நூற்றுக்கணக்கான பதிவுகள் அதுகுறித்து கொட்டப்பட்டன.

இதுதான் சமூக வலைதளத்தின் நிஜ முகம். இது குறைகூறத்தக்கது அல்ல. ஆனால், கவனித்து விவாதிக்கத்தக்கது. எப்போதும் போலவே இதுவும் இணையத்தில் ஒருசேர ஒலிக்கும் குரலை மடைமாற்றிவிடும் சதி என்ற அளவில் மட்டும் பார்த்துவிட முடியாது. சுசித்ரா ட்விட்டர் ஹேண்டில் பகிர்வுகள் கற்றுத் தரும் பாடங்களை கொஞ்சம் கூர்ந்து உள்வாங்க வேண்டும்.

* பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்கள், வீடியோ காட்சிகளை கசியவிட்டதாக சொல்லப்படும் சுசித்ராவின் ட்விட்டர் ஹேண்டில் உண்மையிலேயே ஹேக் செய்யப்பட்டதா?

* அப்படி ஹேக் செய்யப்பட்டு மீட்ட பிறகும் மீண்டும் மீண்டும் ஹேக் செய்யப்பட்டு அந்தரங்கப் பதிவுகள் பகிரப்படும்போது, அந்தக் கணக்கையே உடனடியாக அதன் சொந்தக்காரர் அதிகாரபூர்வமாக முடக்கவைக்கலாமே?

* ஏதோ ஒரு வகையில் மனரீதியாக பாதிப்புக்கு ஆளாக்கப்பட்டதன் விளைவாக, பொதுவெளியில் மேற்கொள்ளப்பட்டும் பழிதீர்க்கும் செயலா? அல்லது இந்த விவகாரத்தின் பின்னணியில் கோலிவுட் கரங்கள் ஏதேனும் மறைந்திருக்கிறதா?

* முன்னணி நடிகர்கள், இயக்குநர்களிடம் வாய்ப்புகள் வேண்டி 'அட்ஜஸ்ட்' செய்வதற்காக எடுத்துக்கொள்ளப்பட்ட படங்கள் - வீடியோக்கள் என்று சொல்லும் சுசித்ராவின் ட்விட்டர் ஹேண்டில் நபர், உண்மையிலேயே அந்த நடிகைகளின் மீது அக்கறை இருந்தால் அவர்களது அந்தரங்கங்களை அம்பலப்படுத்தியிருப்பாரா?

* 'அட்ஜஸ்ட்மென்ட்' எனச் சொல்லும் பதிவுகளைத் தாண்டி, சம்பந்தப்பட்ட தரப்புகளின் ஒருமித்த சம்மதத்துடன் பதிவு செய்யப்பட்டவையும் பகிர்ந்தன் பின்னணி சொல்வது என்ன?

இந்தக் கேள்விகளுக்கான பதில்களைத் தேடுவது நமக்கு அந்தந்த நேரத்தில் ஏதோ ஒருவகையில் நம் தகவல் பசியைப் பூர்த்திசெய்துகொள்ள உதவலாம். அவ்வளவுதான். ஆனால், உணவு - உடை - உறைவிடத்துக்கு முன்பாக ஸ்மார்ட்ஃபோனை அத்தியாவசியமாகக் கொண்டு வாழும் காலத்தில், நாமும் தொடர்புடைய பார்வையில் இந்த விவகாரத்தை அணுகுவது அவசியமாகிறது.

ஸ்மார்டஃபோன் தொழில்நுட்பமும், இணையம் தரும் கட்டற்ற சுதந்திரமும் சங்கமிக்கும்போது, நம் தனிப்பட்ட விஷயங்களுக்கு பாதுகாப்பு என்ற ஒன்றே துளியும் இல்லை என்பதை உணர வேண்டும்.

இ-மெயிலில் பகிரப்படும் தரவுகள், ஃபேஸ்புக், ட்விட்டர் முதலான சமூக வலைதளங்களில் தனிப்பட்ட முறையில் இன்பாக்ஸில் பகிரப்படுபவை, வாட்ஸ் அப் முதலான குறுஞ்செய்தி சமூக ஊடகங்களில் நண்பர்களுடன் பகிரக் கூடியவை அனைத்துமே சம்பந்தப்பட்ட நாம் மட்டுமே சென்றடையும் பகிர்வுகள் என்று நாம் நம்பிக்கொண்டிருக்கிறோம். ஆனால் அதுவும் ஒருவித மூடநம்பிக்கையே.

நேர்மறைக் காரணங்களுக்காக ஹேக்கிங் தொழில்நுட்பத்தில் ஈடுபடுவோரை விட எதிர்மறை நோக்கத்துடன் ஹேக்கிங்கில் வல்லுநர் ஆவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருப்பது தெளிவு. பூட்டுக்கு இன்னொரு சாவி செய்வது எவ்வளவு எளிதோ அதைப் போன்றதே ஒருவரின் கணக்குக்குள் ஊடுருவி தரவுகளை அடைவதும். எனவே, தொழில்நுட்ப ரீதியில் ஃபேஸ்புக், கூகுள் முதலான பெரிய தலைகள் எல்லாம் நமக்கு அளிக்கும் தனிப் பாதுகாப்பு உறுதிகளை ஆறுதல் மொழியாகவே எடுத்துக்கொள்ள வேண்டும்.

தொழில்நுட்ப ரீதியிலான ஓட்டைகள் ஒருபக்கம் இருக்கட்டும். கருத்து ஒருமித்த இருவருக்குள் நிகழும் அந்தரங்க பகிர்வுகள் எல்லாம் நடக்கும் சூழல்களையும், அதன் பின்விளைவுகள் எனக் கணிக்கக் கூடியவற்றையும் உளவியல் ரீதியில் இன்னும் ஆழமாகப் பார்ப்போம்.

வாழ்வாதாரத்துக்காக வெளிநாட்டில் பிழைப்பவர்கள் தங்களுக்குக் கிடைக்கக் கூடிய அன்பாலான இன்பத்தை மனைவியிடம் இருந்து பெறவும் தரவும் 'வெர்ச்சுவல்' எனப்படும் மெய்நிகர் வாழ்க்கையின் துணையை நாடுவதும் நடக்கிறது. ஆனால், அதுபோன்ற பகிர்வுகள் கூட எளிதில் களவாடப்பட்டு, கண்ட கண்ட வலைதளங்களில் தனிப் பிரிவுகளில் காட்சிப்படுத்தப்படுவதும் இதே இணையத்தில்தான் நடக்கிறது.

அதீதக் காதலின் அடையாளமாக தங்களை முழுமையாக ஒப்படைத்து விடுவதையும் காதலர்கள் சிலர் நிழலாகப் பதிவு செய்கின்றனர். அது பேரன்பின் வெளிப்பாடாகவும் இருக்கலாம். ஆனால், பிற்காலத்தில் நேர்வதற்கு சாத்தியமான பிரிவும் முறிவும் பழிவாங்கல் என்ற பெயரில் பகீர் செயலுக்கு வித்திடும் என்பது அவர்களுக்கு ஆனந்த தருணங்களில் அலசி ஆராய்ந்திட நேரம் இருப்பது இல்லை.

உண்மையோ பொய்யோ, சூழல்களால் உருவாகும் மாற்றுக்காதல் தரும் நம்பிக்கைகளில் எதற்கும் துணிவதும் அபாயமானதுதான். களிப்புடன் விளையாட்டாக பதிந்து பகிரும் அந்தரங்கங்களும் இப்படி பொதுவெளிக்கு வெவ்வேறு காரணங்களால் கசிவதும் நடக்கிறது.

இணையம் குறித்த அறிமுகமே இல்லாத நபர்களைவிட, இந்தத் தொழில்நுட்பத்தில் மலிந்துள்ள ஓட்டைகள் குறித்து முற்றிலும் அறிந்தவர்கள்தான் குருட்டுத் துணிச்சலில் பெரும் பாதிப்புக்கு ஆளாகின்றனர் என்பதுதான் இங்கே நகைமுரண்.

'லிவ் த மொமன்ட்' என்று கடைப்பிடிக்கத்தக்க தாரகமந்திரம்தான். ஆனால், அது நாமே படம்பிடிக்கத்தக்கதா? படம்பிடிக்க அனுமதிக்கத்தக்கதா?

'நாம் பாதிக்கப்படவில்லையே, இதுபற்றி நமக்கு என்ன கவலை' என்று நினைக்கலாம். 'ஒருவேளை பாதிப்பு ஏற்பட்டால் என்ன ஆகும் என்று யோசித்துப் பாருங்கள்; உங்கள் நேசத்துக்குரியவர்களுக்கும் பாசத்துக்கு உரியவர்களுக்கும் இந்த நிலை ஏற்பட்டால் உங்கள் நிலைப்பாடு என்னவாக இருக்கும்?' - இது அப்பட்டமான மிகவும் பழைய பாணி அறிவுரைக் கேள்விதான்.

ஆனால், இப்படிப்பட்ட தங்களுக்கே தெரிந்த விழிப்புணர்வுகளையும் அறிவுறுத்தல்களையும் சாதாரணமாகக் கருதி அலட்சியப்படுத்தியவர்கள், தங்களுக்கு அந்தப் பாதிப்பு வந்ததும் மன உளைச்சலுடன் பதறி வாடுவதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது.

இங்கே அதிகாரபூர்வ 'போர்ன்' விஷயங்களை ரசித்துத் திளைத்தல் பற்றி எந்தக் கருத்தையும் பதியவில்லை. மாறாக, நம் நான்கு சுவற்றுக்குள் அனுபவித்த மகிழ்ச்சி, யாரோ ஒருவரின் கிளர்ச்சித் தேவையைப் பூர்த்திச்செய்ய நாமே வித்திடுவது குறித்த பார்வையைதான் முன்வைக்கிறேன்.

இது, இந்த விஷயங்களில் ஆர்வம் மிக்கவர்களுக்கு மட்டும் அல்ல; எனக்கும் பொருந்தக் கூடிய ஒன்றுதான் என்ற தகுதியே இந்தப் பாடங்கள் குறித்து உங்களில் பலருக்கும் தெரிந்தவற்றை மீண்டும் ஒருமுறை நினைவூட்ட தூண்டுகோலாக இருந்தது என்பது நிஜம்.

http://tamil.thehindu.com/opinion/blogs/சுசித்ரா-ட்விட்டர்-ஹேண்டில்-கற்றுத்-தரும்-பாடங்கள்/article9570909.ece?homepage=true

  • கருத்துக்கள உறவுகள்

பிரச்சனைகள் எல்லாம் முடிய ...........

இப்போ யார் யார் சிங்கிள் ..?
யார் யாருடன் ஜோடி ? 
என்ற 

தகவல்களை மட்டும் பகிர்ந்தால் 
என்னை போன்ற இளைஞர்கள் .... அடுத்த கட்ட நவடிக்கையை தொடர வசதியாக இருக்கும்.

போர் என்று போனால் சில நகக்கீறல்கள்  காயங்கள் வருவது வழமைதானே 
அதெல்லலாம் கால போக்கில் ஆறிவிடும். 

  • தொடங்கியவர்

சுசித்ராவின் ட்விட்டர் கணக்கில் தொடரும் ட்வீட்கள்: திரையுலகினர் கடும் அதிர்ச்சி

பாடகி சுசித்ரா | கோப்பு படம்
பாடகி சுசித்ரா | கோப்பு படம்
 
சுசித்ராவின் ட்விட்டர் கணக்கில் தொடர்ச்சியாக புகைப்படங்களை வெளியீட்டு வரும் ட்வீட்களால், தமிழ் திரையுலகினர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தனது ட்விட்டர் தளத்தில் வெளியாகும் கருத்துக்களால் கடும் சர்ச்சையில் சிக்கியிருப்பவர் சுசித்ரா. மார்ச் 3-ம் தேதி காலையில் தனுஷ் - த்ரிஷா, அனிருத் - ஆண்ட்ரியா, டிடி மற்றும் ஹன்சிகா உள்ளிட்டவர்களின் புகைப்படங்கள் சுசித்ராவின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டு 'இது இவருடைய லீலை' என்று கூறப்பட்டிருந்தது. இப்படங்களால் கடும் சர்ச்சை உண்டானது.

அனுயா, சஞ்சிதா ஷெட்டி உள்ளிட்டவர்களின் புகைப்படங்கள், செல்வராகவன் - ஆண்ட்ரியா இருவருக்கும் இடையேயான இ-மெயில் உரையாடல்கள் என தொடர்ச்சியாக சுசித்ராவின் ட்விட்டர் கணக்கில் வெளியானது. மேலும், திங்கட்கிழமை அன்று பல்வேறு வீடியோக்களை வெளியிட இருப்பதாகவும் தகவல் வெளியிடப்பட்டது.

தற்போது சுசித்ராவின் ட்விட்டர் தளத்தில் வெளியிடப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள், இ-மெயில்கள் என அனைத்துமே நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சுசித்ராவை சாடிய சின்மயி

சுசித்ராவின் ட்விட்டர் கணக்கில் சின்மயி பற்றியும் தகவல்கள் வெளியாகின. இது குறித்து சின்மயி, "இந்த சர்ச்சை ஆரம்பிக்கும்போதே நானும் ராகுலும் கார்த்திக் குமாரிடம் பேசினோம். சுசித்ராவுக்கு உடல்நலம் சரியில்லை என அவர் கூறியதும் உடனடியாக நிலையை புரிந்துகொண்டோம். யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம்.

நேற்று கார்த்திக் குமார் பேஸ்புக்கில் ஆதரவு தருபவர்களுக்கு நன்றி தெரிவித்து ஒரு வீடியோ பதிவேற்றியிருந்தார். நாமே நேர்மையாக சிந்தித்தால் தெரியும், நம்மில் பலர் அதிக மன அழுத்தத்தை கடந்து வந்திருப்போம் அல்லது நமது குடும்பத்தினரில் யாராவது கடந்து வந்திருப்பார்கள். அது பற்றி நாம் பேச மாட்டோம். அவ்வளவே.

ஆனால், தற்போது அவரது ட்விட்டர் பக்கத்தில் நடந்து கொண்டிருப்பது முற்றிலும் தவறானது. (அவர் எப்போதோ என்னை அவரது பக்கத்திலிருந்து முடக்கிவிட்டார். காரணம் அவருக்கே வெளிச்சம்). எது நடந்தாலும் எனது மனசாட்சி தெளிவாக இருக்கிறது. எது குறித்தும் நான் பயப்படத் தேவையில்லை. நான் நல்ல மனிதியாக இருக்க வேண்டும் என்றே விரும்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், சுசித்ராவின் ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டு "நான் திறமையை வைத்து மட்டுமே முன்னேறியுள்ளேன். யாருக்கும் அனுசரித்தல்ல. நம்மை மதிப்பிட்டுக்கொள்வது போல் தான் பிறரையும் மதிப்பிடுவோம் என கூறுவார்கள். உங்கள் வாழ்க்கையைப் பாருங்கள். என்னுடையதை அல்ல. உங்களிடம் எந்த விதமான ஆதாரமும் இல்லை எனத் தெரியும் சுசித்ரா. ஏனென்றால் அப்படி எதுவும் இல்லை. விரைவில் குணமடைவீர்கள் என நினைக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

சுசித்ராவின் உணர்ச்சி வசப்பட்ட நிலையின் வெளிப்பாடு: கார்த்திக்

சுசித்ராவிடமிருந்து விவாகரத்து பெற்ற கணவர் கார்த்திக் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், "சுசித்ராவின் ட்விட்டர் பக்கத்தில் நிலவி வரும் சர்ச்சைக்கு நடுவில், இந்த நிலையிலும் கிடைத்துவரும் ஆதரவும், புரிதலும் எனக்கும் பெரு மகிழ்ச்சியைத் தருகிறது.

அதில் அவதூறாக குறிப்பிடப்பட்டுள்ள நபர்கள் நேரடியாக என்னைத் தொடர்பு கொண்டனர். நடந்தது என்னவென்று தெளிவாகப் புரிந்து கொள்ள முயற்சித்தனர். அது சுசித்ரா தற்போது அனுபவித்து வரும் உணர்ச்சி வசப்பட்ட நிலையின் வெளிப்பாடு என நானும் அவர்களிடம் நேர்மையாக நிலையை விளக்கியுள்ளேன். நாங்கள் ஒரு குடும்பமாக அவரது நிலையைப் புரிந்து கொள்ள, சரிசெய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

என்ன சொல்கிறார் சுசித்ரா?

ட்விட்டர் தளத்தின் நிகழ்வுகள் குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் சுசித்ரா, "இது முதல் முறையல்ல. ஏற்கெனவே ஒரு முறை மகாசிவராத்திரி அன்று ஹேக் செய்யப்பட்டு, தனுஷுக்கு எதிரான விஷயங்களை பதிவிட்டு இருந்தார்கள். அப்போதே நான் சைபர் க்ரைமிற்கு தெரிவித்துவிட்டேன். இந்த முறையும் ஏற்கெனவே ஹேக் செய்யப்பட்ட இடத்திலிருந்தே நடந்துள்ளது என்பது தெரியவந்துள்ளது. எதற்காக என்னுடைய ட்விட்டர் தளம் மூலமாக பதிவிடுகிறார்கள் என்பது தெரியவில்லை. இந்த விஷயங்கள் தொடர்பாக தனுஷ் அலுவலகத்திலிருந்து என்னிடம் பேசி வருகிறார்கள்.

தற்போது தனியார் துப்பறியும் நிறுவனத்தை அணுகியுள்ளேன். ஏனென்றால் முதலில் ட்விட்டர் கணக்கை மூடுங்கள் என சைபர் க்ரைம் அலுவலகத்தில் சொல்கிறார்கள். அவ்வாறு மூடிவிட்டால், யார் என் கணக்கில் பதிவிடுகிறார்கள் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் போய்விடும். பிறகு இது சகஜமான ஒன்றாகிவிடும். இதனால் நானும் பல பிரச்சினைகளை சந்தித்துவருகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

சுசித்ராவின் ட்விட்டர் தளத்தில் தொடர்ச்சியாக சர்ச்சைக்குரிய புகைப்படங்கள், தகவலால் சமூக வலைதளத்தில் பலரும் விவாதிக்கத் தொடங்கியுள்ளார்கள். இதனால் தமிழ் திரையுலகினர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/சுசித்ராவின்-ட்விட்டர்-கணக்கில்-தொடரும்-ட்வீட்கள்-திரையுலகினர்-கடும்-அதிர்ச்சி/article9570763.ece?homepage=true&ref=tnwn

  • கருத்துக்கள உறவுகள்
On 23/02/2017 at 1:45 PM, ரதி said:

இரவிரவாய் குடிச்சிப் போட்டு கூத்தடிக்கிறது...எதாவது நடந்தவுடனே வந்து ஒப்பாரி வைக்கிறது...மனிசருக்கு வேற வேலை இல்லை<_<

தனிய பொம்பிளையலா, தனிய ஆம்பிளையலா குடிச்சா பரவாயில்லை. இது எல்லோரும் சேர்ந்து கூடிக் குடிச்சு கும்மாளம் அடிக்க வேணும் எண்டால் ?

இந்த திரிஷா: ஐயோ, ஐயோ.... நீலாங்கரையில், பீச் பக்கமா, நண்பிகளுடன் தண்ணி அடித்து, சத்தம் போட, போலீஸ் வார்ன் பண்ணி அனுப்பியிருந்தது. இப்ப வேற ரூட்டில...

சுள்ளான் பெரிய நுள்ளான். இவனை அடக்க தான், இவன் என மகன் என்று, யாரோ பெரிய பார்ட்டியின் ஆதரவுடன், ஒரு ஜோடி கிளம்பி இருக்குது.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

சுசித்ராவின் கணக்கில் இதெல்லாம் வந்தது என்பதை எப்படி நம்ப முடியும்? :unsure: வலைத்தளங்களில் கண்டதையும் எழுதுவார்கள். ஆதாரம் இல்லாமல் நான் நம்பமாட்டன். tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, இசைக்கலைஞன் said:

சுசித்ராவின் கணக்கில் இதெல்லாம் வந்தது என்பதை எப்படி நம்ப முடியும்? :unsure: வலைத்தளங்களில் கண்டதையும் எழுதுவார்கள். ஆதாரம் இல்லாமல் நான் நம்பமாட்டன். tw_blush:

அது தானே?

நானும்  தான்...tw_blush:

  • தொடங்கியவர்

பிரபலங்களின் புகைப்படங்கள் வெளியீடு: மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் சுசித்ரா

பாடகி சுசித்ரா. பட உதவி: அவரின் ட்விட்டர் பக்கம்
பாடகி சுசித்ரா. பட உதவி: அவரின் ட்விட்டர் பக்கம்
 
தனுஷ், அனிருத், டிடி உள்ளிட்ட பிரபலங்கள் சிலரது புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளதால், மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் சுசித்ரா.

அவரது ட்விட்டர் தளத்தில் வெளியாகும் கருத்துக்களால் கடும் சர்ச்சையில் சிக்கியிருப்பவர் சுசித்ரா. மார்ச் 3-ம் தேதி காலையில் தனுஷ் - த்ரிஷா, அனிருத் - ஆண்ட்ரியா, டிடி மற்றும் ஹன்சிகா உள்ளிட்டவர்களின் புகைப்படங்கள் சுசித்ராவின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டு 'இது இவருடைய லீலை' என்று கூறப்பட்டிருந்தது. இப்படங்களால் கடும் சர்ச்சை உண்டானது. திரையுலக பிரபலங்கள் பலரும் கடும் அதிர்ச்சியடைந்தார்கள்.

அதனைத் தொடர்ந்து சுசித்ரா, "நான் இதைப் போன்ற மோசமானவற்றை பகிர்வேன் என நினைப்பவர்கள் என்னைத் தொடர வேண்டாம் என வேண்டி கேட்டுக் கொள்கிறேன். ஏனென்றால் இது அடிக்கடி நடக்கிறது. எனக்கும் எரிச்சலாக இருக்கிறது.

நான் நடிகர் நடிகைகளுடன் பேசுவதில்லை. அவர்கள் புகைப்படங்கள் எதுவும் என்னிடம் இல்ல. இதையெல்லாம் விட, நான் இப்படி இழிவுபடுத்தும் ஆள் கிடையாது.

இதை செய்து கொண்டிருக்கும் நபரின் ஆசை நான் எனது ட்விட்டர் கணக்கை முடக்க வேண்டும் என்பதே. அதை இப்போது செய்து விடுவேன். ஆனால் இங்கு என்னை நிஜமாகவே நேசிக்கும் மக்கள் இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். எனவே, என்ன செய்ய முடியும் என்பதை யோசித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் அழுத்தம் அதிகமாக இருப்பதால் இப்போது முடக்கவுள்ளேன். என்னை உண்மையாக பின்தொடர்பவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

என்னை வெறுப்பவர்களுக்கு சின்ன எச்சரிக்கை - நீங்களாகவே என்னைத் தொடர்வதை நிறுத்திவிடுங்கள். என்னால் யாருக்கும் தொந்தரவு வேண்டாம். என் கணக்கை ஹேக் செய்தவருக்கும் வேண்டாம். தயவு செய்து தொடராதீர்கள்.

சரிபார்க்கப்பட்ட தகவல்: கணக்கை ஹேக் செய்தவர், அவர் இருக்கும் படத்தையும் சேர்த்து பதிவிட்டால் அவர் மேல் சந்தேகம் வராது என நினைத்துக் கொண்டிருக்கிறார். நான் யாரையும் குற்றம் சொல்லப்போவதில்லை. காவல்துறையிடம் புகார் செய்யப்போவதும் இல்லை. வெறுப்பவர்கள் - தயவு செய்து என்னைத் தொடர வேண்டாம். மற்றவர்கள், என் மீது நம்பிக்கை வையுங்கள். நாம் இதை வென்று காட்டுவோம்" என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பிப்ரவரி 20-ம் தேதி சுசித்ராவின் ட்விட்டர் பக்கத்தில், சுசித்ராவின் காயம்பட்ட கையின் புகைப்படத்தைப் பகிர்ந்து, "இது தனுஷ் குழுவின் மோசமான கையாளால் ஆன காயம். மன்னித்துவிடுங்கள். நீங்கள் தகுதி இழந்துவிட்டீர்கள்" என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், தனுஷ் மீது சில குற்றச்சாட்டுகளை முன்வைத்தும் ட்வீட் இருந்தது..

சுசித்ராவின் கணவர் கார்த்திக் குமார், சுசித்ராவின் ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டதாக விளக்கம் அளித்தார். இதுகுறித்து அவர் ''சுசித்ராவின் ட்விட்டர் பக்கம் இன்று மீட்கப்பட்டது. கடந்த சில நாட்களாக சுச்சியின் ட்விட்டரில் வெளியான செய்திகள் அனைத்துமே பொய்யானவை. இதில் சம்பந்தப்பட்ட நபர்களும் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்பதால் அவர்களிடம் நான் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்'' என்று தெரிவித்திருந்தார்.

மேலும், "புரளிகளுக்கு விளக்கம் அளிக்கிறேன். தனுஷ் என்னை தாக்கவில்லை. அது ஒரு விளையாட்டு. சற்று கட்டுப்பாடு மீறிச் சென்றது. எனது கை ஒரு குழுவால் தாக்கப்பட்டது" என்று சுசித்ரா தனது ட்விட்டர் தளத்தில் தெரிவித்திருந்தார்.

http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/பிரபலங்களின்-புகைப்படங்கள்-வெளியீடு-மீண்டும்-சர்ச்சையில்-சிக்கினார்-சுசித்ரா/article9568910.ece?homepage=true&ref=tnwn

ஹ்ம்ம்ம் சுசித்திராவுக்கு நன்றி! இல்லாட்டி எனக்கு எப்படி சஞ்சிதா ரெட்டியின் (சூது கவ்வும் படத்தின நாயகி) அற்புதமான வீடியோவும்,நகரம் / சிவா மனசில சக்தி / நண்பன் படங்களில் நடித்த Anuya Bhagvath வின் எழில்மிகு படங்களும் பார்க்க கிடைத்து இருக்கும்?tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, Nathamuni said:

தனிய பொம்பிளையலா, தனிய ஆம்பிளையலா குடிச்சா பரவாயில்லை. இது எல்லோரும் சேர்ந்து கூடிக் குடிச்சு கும்மாளம் அடிக்க வேணும் எண்டால் ?

இந்த திரிஷா: ஐயோ, ஐயோ.... நீலாங்கரையில், பீச் பக்கமா, நண்பிகளுடன் தண்ணி அடித்து, சத்தம் போட, போலீஸ் வார்ன் பண்ணி அனுப்பியிருந்தது. இப்ப வேற ரூட்டில...

சுள்ளான் பெரிய நுள்ளான். இவனை அடக்க தான், இவன் என மகன் என்று, யாரோ பெரிய பார்ட்டியின் ஆதரவுடன், ஒரு ஜோடி கிளம்பி இருக்குது.

உது சிம்புவோட வேலையாத் தான் இருக்கும்:unsure:

  • தொடங்கியவர்
1 hour ago, இசைக்கலைஞன் said:

சுசித்ராவின் கணக்கில் இதெல்லாம் வந்தது என்பதை எப்படி நம்ப முடியும்? :unsure: வலைத்தளங்களில் கண்டதையும் எழுதுவார்கள். ஆதாரம் இல்லாமல் நான் நம்பமாட்டன். tw_blush:

1 hour ago, விசுகு said:

அது தானே?

நானும்  தான்...tw_blush:

தனுஷ், அனிருத், டிடி, ஹன்சிகா அந்தரங்க போட்டோக்களை வெளியிட்ட சுசித்ரா

தனுஷ், அனிருத் ஆகியோரின் அந்தரங்க போட்டோக்களை வெளியிட்டு மீண்டும் சுசித்ரா சர்ச்சையில் சிக்கியுள்ளார். இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.

201703031544028765_Suchitra-again-contro
 
கடந்த சில நாட்களாக பின்னணி பாடகி சுசித்ராவின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் தளத்தில் சர்ச்சைக்குரிய பதிவுகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து சுசித்ரா எதுவும் வாய் திறக்காத நிலையில், அவரது கணவர் கார்த்திக், சுசித்ராவின் டுவிட்டர் கணக்கை யாரோ சிலபேர் முடக்கிவிட்டதாகவும், அவர்கள்தான் தகாத பதிவுகளை வெளியிட்டதாகவும், தற்போது சுசித்ராவின் டுவிட்டர் கணக்கை திரும்ப பெற்றுவிட்டதாகவும் விளக்கம் அளித்தார்.

இனிமேல், அவரது டுவிட்டர் கணக்கில் இதுபோன்ற சர்ச்சைக்குரிய பதிவுகள் வராது என்று எண்ணியிருந்த வேளையில், திடீரென்று அவரது டுவிட்டர் தளத்தில் தனுஷ்-திரிஷா, அனிருத்-ஆண்ட்ரியா, டிடி, ஹன்சிகா உள்ளிட்டவர்களின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டு, மீண்டும் சர்ச்சையில் சிக்கினார். இந்த படங்களால் திரையுலக பிரபலங்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

08626578-69CC-4483-A750-CBB9422A4FA3_L_s

அந்த புகைப்படங்களை பதிவு செய்த சிலமணி நேரங்களிலேயே சுசித்ராவின் டுவிட்டர் கணக்கில் இருந்து அந்த புகைப்படங்கள் எல்லாம் அகற்றப்பட்டுவிட்டது. இதுகுறித்து விளக்கம் அளிக்கும்வகையில் சுசித்ராவின் டுவிட்டர் கணக்கில் மேலும் சில பதிவுகள் வெளிவந்துள்ளது.

அதாவது, நான் இதைப் போன்று மோசமானவற்றை பகிர்வேன் என்று நினைப்பவர்கள் என்னை தொடரவேண்டாம். இதுபோல் அடிக்கடி நடப்பது எனக்கு எரிச்சலாக இருக்கிறது. நான் நடிகர், நடிகைகளுடன் பேசுவதே கிடையாது. அவர்களின் புகைப்படங்கள் எதுவும் என்னிடம் கிடையாது. இதையெல்லாம்விட நான் இப்படி மற்றவர்களை இழிவுபடுத்தும் ஆளும் கிடையாது.

050D2B2E-F7ED-41D2-9B1D-CAD7F9DC1A07_L_s

இந்த மாதிரி வேலை செய்துகொண்டிருக்கும் நபரின் ஆசை நான் எனது டுவிட்டர் கணக்கை முடக்கிவிட வேண்டும் என்பதே. என்னை நிஜமாகவே நேசிக்கும் மக்கள் இங்கு இருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியும். எனவே, என்ன செய்யவேண்டும் என்பதை யோசித்துக் கொண்டிருக்கிறேன். என்னை உண்மையாக பின்தொடர்பவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

E1D11621-B537-4124-9C7D-712A0A3F636D_L_s

என்னை வெறுப்பவர்கள் நீங்களாகவே என்னை தொடர்வதை நிறுத்திவிடுங்கள். என்னால் யாருக்கும் தொந்தரவு வேண்டாம். என் கணக்கை முடக்கியவர்களும் என்னை தயவுசெய்து தொடரவேண்டாம். இந்த விஷயத்தில் நான் யாரையும் குற்றம் சொல்லப்போவதில்லை. காவல்துறையிடமும் புகார் செய்யப்போவதில்லை. வெறுப்பவர்கள் தயவுசெய்து என்னை தொடரவேண்டாம் என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வளவு விளக்கம் வந்தபோதிலும், இந்த பதிவுகளையும் சுசித்ராதான் பதிவு செய்தாரா? என்ற கேள்வி அனைவர் மனதிலும் ஏற்பட்டுள்ளது. இதற்கு சுசித்ரா நேரில் வந்து பதில் சொன்னால்தான் இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி விழும் என்று கோலிவுட் வட்டாரங்களில் கூறப்படுகிறது. 

http://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2017/03/03154359/1071665/Suchitra-again-controversy-photos-release-in-twitte.vpf

  • கருத்துக்கள உறவுகள்

நானும் ஒரு ட்விட்டர் கணக்கு ஒன்று ஆரம்பிக்கத் தான் இருக்கு.பேஸ்புக்கில சுட சுட ஒன்றுமே வருதில்ல.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரிஷா, டிடி எல்லாத்தையும் சேத்து கிட்டமே ஒரு பிரச்னை வந்ததா? இந்த பன்னியை சேர்த்து ஊர் உலகம் எல்லாம் நாறியாச்சே என்று சுள்ளான் கவலைப் படுவார் போல. tw_anguished:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

நானும் ஒரு ட்விட்டர் கணக்கு ஒன்று ஆரம்பிக்கத் தான் இருக்கு.பேஸ்புக்கில சுட சுட ஒன்றுமே வருதில்ல.

வா ராசா வா.....நான் அங்கைதான் தவம் செய்கிறேன்...அங்கை இன்னொரு உலகமே தெரியுது :cool:

சொன்னால் நம்பமாட்டியள் டொனால்ட் ரம்பும் என்ரை பிரண்ட்....:grin:

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, இசைக்கலைஞன் said:

சுசித்ராவின் கணக்கில் இதெல்லாம் வந்தது என்பதை எப்படி நம்ப முடியும்? :unsure: வலைத்தளங்களில் கண்டதையும் எழுதுவார்கள். ஆதாரம் இல்லாமல் நான் நம்பமாட்டன். tw_blush:

ஆதாரம் இருக்கு 
யாழ் பக்கம் கொண்டுவரேலாது ....

நீங்கள்தான் ரிஸ்க் எடுத்து இறங்கவேணும்.
இந்திய தளங்கள் என்றால் நான் எட்டியும் பார்ப்பதில்லை 
பிறகு வைரஸ் கலைக்கிறதிலேயே காலம் போயிடும். 

நிழலி ... எதோ பார்த்தது ... பார்த்தது என்கிறார் 
வழிமுறைகளைத்தான் சொல்கிறார்கள் இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நிழலி said:

ஹ்ம்ம்ம் சுசித்திராவுக்கு நன்றி! இல்லாட்டி எனக்கு எப்படி சஞ்சிதா ரெட்டியின் (சூது கவ்வும் படத்தின நாயகி) அற்புதமான வீடியோவும்,நகரம் / சிவா மனசில சக்தி / நண்பன் படங்களில் நடித்த Anuya Bhagvath வின் எழில்மிகு படங்களும் பார்க்க கிடைத்து இருக்கும்?tw_blush:

சுஜித்திராவின் டுவிட்டர் கணக்கினால் கற்பனை கனவுப்படங்களை  நல்ல தெளிவாக பார்க்க முடிந்தது இன்னும் வரும் போல் இருக்கிறதே  படங்களை சொன்னது 

1 hour ago, Maruthankerny said:

ஆதாரம் இருக்கு 
யாழ் பக்கம் கொண்டுவரேலாது ....

நீங்கள்தான் ரிஸ்க் எடுத்து இறங்கவேணும்.
இந்திய தளங்கள் என்றால் நான் எட்டியும் பார்ப்பதில்லை 
பிறகு வைரஸ் கலைக்கிறதிலேயே காலம் போயிடும். 

நிழலி ... எதோ பார்த்தது ... பார்த்தது என்கிறார் 
வழிமுறைகளைத்தான் சொல்கிறார்கள் இல்லை. 

உன்மைதான் மருதர்  சினிமா உலகம் இப்படி நாறி கிடக்கிறதே அடேங்கப்பா என்ன படம் 

  • தொடங்கியவர்

அந்த போட்டோ என்னுடையதல்ல: சஞ்சிதா ஷெட்டி விளக்கம

சஞ்சிதா ஷெட்டி பெயரில் உலவும் நிர்வாண போட்டோ தன்னுடையதல்ல என்று அவர் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.

201703051148451780_Suchi-leaks-Glamour-p
 
பின்னணி பாடகி சுசித்ராவின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கிலிருந்து வெளியான வீடியோக்களும், போட்டோக்களும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமில்லாமல், அந்த டுவிட்டர் கணக்கில் இன்னும் பல பிரபலங்களின் புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியிடப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஆனால், இது எல்லாவற்றயும் தான் செய்யவில்லை என்று சுசித்ரா மறுப்பு தெரிவித்துள்ளார். அவரது டுவிட்டர் கணக்கை யாரோ ஒருவர் முடக்கிவிட்டதாகவும், தான் எந்த கருத்தும் பதிவு செய்யவில்லை என்று கூறியிருந்தார். இருப்பினும், அவரது பெயரில் வெளியிடப்பட்ட போட்டோக்களில் நடிகை சஞ்சிதா ஷெட்டியின் நிர்வாண புகைப்படமும் இடம்பிடித்திருந்தது.

EE42CAC6-9EE2-4066-9C51-56DFB71328C9_L_s

இதுகுறித்து, சஞ்சிதா ஷெட்டி அளித்துள்ள விளக்கத்தில், சமூக வலைத்தளத்தில் நேற்று முதல் நடப்பவற்றையெல்லாம் நான் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறேன். என் பெயரில் உலவும் நிர்வாண போட்டோ என்னுடையதல்ல என்று கூறியுள்ளார். சஞ்சிதா ஷெட்டி தமிழில், ‘வில்லா’, ‘சூது கவ்வும்’, ‘என்னோடு விளையாடு’, ‘ரம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

http://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2017/03/05114844/1071945/Suchi-leaks-Glamour-photo-not-me-sanchita-shetty-explain.vpf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.