Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பாடசாலை நிகழ்வுகளில் பரதம், காவடி இனி வேண்டாம்

Featured Replies

பாடசாலை நிகழ்வுகளில் பரதம், காவடி இனி வேண்டாம்

பாடசாலை நிகழ்வுகளில்  பரதம், காவடி இனி வேண்டாம்
 
தமிழ் இனத்­தின் புனி­தம் மிக்க பாரம் ப­ரி­யத்தை எடுத்­துக்­கூ­றும் பர­த­நாட்­டி­யம் மற்­றும் காவ­டியை மாண­வர்­க­ளுக்­குப் பழக்கி அவற்றை சாலை­க­ளில் ஆடி அவற்­றின் தரத்­தைக் குறைக்­கா­தீர்­கள். எமது பாரம்­ப­ரி­யக் கலை­களை அவ­ம­திக்­கும் செயற்­பா­டா­கவே இத­னைக் கரு­து­கி­றேன்.

வருங்­கா­லத்­தில் பாட­சா­லை­க­ளில் நடத்­தப்­ப­டும் நிகழ்­வு­க­ளில் பர­தம் மற்­றும் காவடி போன்­ற­வற்றை நடத்­த­வேண்­டாம்.

-இவ்­வாறு வடக்கு மாகாண கல்வி பண்­பாட்­ட­லு­வல்­கள் விளை­யாட்­டுத் துறை மற்­றும் இளை­ஞர் விவ­கார அமைச்­சர் க. சர்வேஸ்வரன் தெரிவித்தார்.

தென்மராட்சிக் கல்­வி­வ­ல­யத்­தின் முழு­நிலா நாள் நிகழ்­வில் கலந்­து­ கொண்டு உரை­யாற்­றி­ய­போதே அவர் இவ்­வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

பர­த­மும், காவ­டி­யும் எமது இனத்­தின் பாரம்­ப­ரிய கலை­க­ளாக இன்­றும் மதிக்­கப்­ப­டு­கின்­றன.

பர­தம் என்­றால் மேடை­க­ளில் மட்­டும் ஆற்­று­கைப்­ப­டுத்­தல்­வேண்­டும். காவடி என்­பது ஆல­யங்­க­ளில் வைக்­கப்­ப­டும் நேர்த்­தி­க­ளுக்­காக, அடி­யார்­க­ளால் பய­பக்­தி­யு­டன் எடுக்­கப்­ப­டு­கின்­றது.

இவற்­றைக் காட்­சிப்­ப­டுத்­தும் வகை­யில் தெரு­வோ­ரங்­க­ளில் வைத்து காண்­பித்து புனி­த­மான கலை­க­ளின் பெரு­மையை நாமே அழிக்­கக்­கூ­டாது. இவை எம்மை அறி­யா­மல் எமது பாரம்­ப­ரி­யக் கலையை கேவ­ல­மா­கக் கருத வைக்­கும் செயற்­பா­டாக அமைந்­து­வி­டும்.

வருங்­கா­லத்­தில் பாட­சாலை மாண­வர்­கள் மூலம் பர­தம் மற்­றும் காவடி போன்­ற­ வற்றை நிகழ்­வு­க­ளில் பயன்­ப­டுத்­தக்­கூ­டாது.

இன்­னி­யம் போன்ற எம் மத்­தி­யி­லி­ருந்து மறைந்து போயுள்ள பல இசைக்­க­ரு­வி­களை மீண்­டும் மாண­வர்­களுக்கு பயிற்­று­வித்து அதன்மூலம் கலையை வளர்க்­க­ வேண்­டும்.
இன்­னி­யம் போன்ற எமது பாரம்­ப­ரிய இசை­யு­டன் கலந்த நட­னக் கலையை வளர்க்­க­வேண்­டும்.

எதிர்­கா­லத்­தில் ஒவ்­வொரு மக்­கள் பிர­தி­நி­தி­யும் இன்­னி­யம் இசைக்­க­ரு­வி­க­ளைக் கொள்­வ­னவு செய்ய நிதி ஒதுக்­கீடு செய்­ய­வேண்­டும்.

வடக்கு மாகா­ணத்­தில் உள்ள மேல்­நிலை வகுப்­பு­க­ளைக் கொண்ட அனைத்­துப் பாட­சா­லை­க­ளி­லும் இன்­னி­யக் கலை­யினை வளர்க்க நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும்.

இந்­தி­யா­வி­லி­ருந்து பயிற்­று­விப்­பா­ளர்­களை வர­வ­ழைத்து மாண­வர்­க­ளுக்­குப் பயிற்­சி­களை வழங்கி எமது பாரம்­ப­ரியக் கலையை வளர்ப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுப்­பேன் – என்­றார்.

http://newuthayan.com/story/35612.html

பரத நாட்டியம் தமிழர்களின் கலையா?

காவடி என்பது  நேர்த்திக்காக செய்யப்படுவது என்றால் நேர்ததி என்றால்  இதை எனக்கு தந்தால் இதை உனக்கு தருவேன் என்று கடவுளிடம் செய்து கொள்ளப்படும் லஞ்ச உடன்படிக்கையா? 

எந்த  seriousness ம் இல்லாமல்  மக்களை மகிழ்விக்கும் தமிழர். கலைகள் எவை ? 

தேவையற்ற பயபக்தி சென்றிமென்ற் இல்லாத,  மக்களை  மகிழ்விக்கும் தமிழர் கலைகளே ஊக்குவிக்க வேண்டிய கலைகள். 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, tulpen said:

பரத நாட்டியம் தமிழர்களின் கலையா?

காவடி என்பது  நேர்த்திக்காக செய்யப்படுவது என்றால் நேர்ததி என்றால்  இதை எனக்கு தந்தால் இதை உனக்கு தருவேன் என்று கடவுளிடம் செய்து கொள்ளப்படும் லஞ்ச உடன்படிக்கையா? 

எந்த  seriousness ம் இல்லாமல்  மக்களை மகிழ்விக்கும் தமிழர். கலைகள் எவை ? 

தேவையற்ற பயபக்தி சென்றிமென்ற் இல்லாத,  மக்களை  மகிழ்விக்கும் தமிழர் கலைகளே ஊக்குவிக்க வேண்டிய கலைகள். 

பரதநாட்டிய அரங்கேற்றத்திலே  கேட்ட ஒருவிடயம். அதாவது தமிழர்கலையாக இருந்தததை வேற்றவரால் எடுத்தாளப்பட்டு அவர்களதாக்கப்பட்டுவிட்டதாக  ஒரு அன்பர் தனதுரையிலே குறிப்பிட்டபோது நானும் யோசித்தேன். தமிழரின் கலைகளான காவடி கரகம் பொய்க்கால்குதிரை தப்பாட்டம் போன்றனவற்றுள் காவடியை ஆலயத்தை நோக்கி உள்ளிளுத்தவிட்டு ஏனையவற்றைக் கழித்தும் கீழ்மைப்படுத்தியும் விட்டார்களென்பதே எனது ஊகம். கலைஞர்கள் அல்லது ஆயவாளர்கள் தெளிவுபடுத்துவது வரவேற்கத்தக்கது.

கடந்தவருடம்  "பரதம் தமிழரின் கலையா"   என்றொருதிரியைத் தொடங்கினேன். பரதம் பற்றியதொரு புரிதலுக்காக அறிந்தவர்கள் எழுதுவார்களென்று ஆனால்  எவருமே எழுதவில்லை. சிக்கலானதென்றா ? ஏனிந்தச் சோலியென்றா? அல்லது  களத்திலே பரதத்தை அறிந்தவரென்று எவருமில்லையா தெரியவில்லை. 

https://www.yarl.com/forum3/topic/177413-பரதம்-தமிழரின்-கலையா /?tab=comments#comment-1193251

Edited by nochchi

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பரதநாட்டியம் சிவனுக்கு உரித்தானது எண்டு கேள்விப்பட்டன்.
அதாவது...
ஆடவர் கலை..:grin:

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

பரதநாட்டியம் சிவனுக்கு உரித்தானது எண்டு கேள்விப்பட்டன்.
அதாவது...
ஆடவர் கலை..:grin:

சிவனின் கலையென்றால் அது தமிழரின் கலையாகத்தானிருக்க வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

பரத சாஸ்த்திரம் என்பது தான் பரதநாட்டியத்தின் மூலம் எனக் கூறப்படுகின்றது!

அப்படிப் பார்த்தால்....இராஜ ராஜன் மீது திணிக்கப்பட்ட குப்பைகளுக்குள் பரதமும் அடங்கும் என நினைக்கிறேன்!

கோவில்களில்...தேவதாசிகள் எனப் பட்டம் கட்டப்பட்டவர்களால்...இந்த நாட்டியங்கள் ஆடப்பட்டன!

அரேபிய ஷேக்குகள் .....சுத்தி வர இருந்து...பெல்லி டான்ஸ் பார்ப்பது போல...செல்வந்தர்கள் ...மன்னர்கள்..போன்றவர்கள்..மணி மண்டபங்களிலிருந்து பார்த்து மகிழ்ந்திருப்பார்களோ என்னவோ?!

பரதத்தின் 'அபிநயங்களின்' பெயர்கள் இன்றும் தேவ பாஷையிலேயே இருக்கின்றன! அதனால் தான் இவை...ஆரிய ஊடுருவல்களின் போது ஊடுருவி இருக்கலாம்!

சிவனின் நடனமானது ...உண்மையில் ஆடுவது என்பது அர்த்தமல்ல என்று நினைக்கிறேன்!

அது...பிரபஞ்சத்தின் இயக்கத்தைக் குறிக்கின்றது என்பது எனது கருத்தாகும்!

நானசைந்தால்....அசையும் அகிலம் எல்லாமே....!

அறிவாய் மனிதா...உன் ஆணவம் பெரிதா?

பரதம் எங்கிருந்த வந்தது என்பதை விடவும்...எமது மேல் மட்டத்தினருக்கு..அது ஒரு சமூக அந்தஸ்தைக் கொடுக்கின்றது என்பது மட்டும் உண்மை!

மதத்தின் பெயரால்..தமிழனது வெற்றிகள் அனைத்தும்....ஆரியத்துக்கே சொந்தமாகி விட்டது!

பிரித்தானியனும், பிரஞ்சுக்காரனும், ஸ்பானியனும் ...காலனித்துவப் படுத்திய இடங்களிலெல்லாம்...எடுப்பதையும் எடுத்துக் கொண்டு..தனது மொழியையும்..மதத்தையும் விட்டுச் சென்றான்!

ராஜ ராஜன் என்னத்தை விட்டு விட்டு வந்தான்!

ஆரியத்தின் அடையாளங்களை மட்டுமே விட்டு ..விட்டு வந்தான்!  

43 minutes ago, புங்கையூரன் said:

Bharatanatyam was originally an art form practiced by dEvadAsis or women who were married to the Gods in the Temples, who made their offering to the Gods through their dance. However, due to colonization in India, the art lost its original sanctity and women who practiced the form were known as nautch girls of the East.

உங்கள் பார்வையோடு சம்மந்தப்பட்டதுதான் பரதநாட்டியம். இதைச் சுற்றியுள்ள புனைவுகள் புனிதங்கள் அனைத்தும் மாயை. பரத்தையாட்டம் அல்லது பரத்தையர் ஆட்டம். தேவதாசிகளிடம் இருந்து பிடுங்கப்பட்டு புனித பிம்பங்கள் கட்டியமைக்கப் பட்டதே இந்த ஆட்டம். தமிழ்நாட்டில் பெரும்பான்மையான மக்கள் இந்த நடனம் ஆட தங்கள் பிள்ளைகளை விட மாட்டார்கள். தற்போது இவ் நிலை மாறிவருகின்றது. ஆங்கிலேய ஆட்சி வரையில்  இது கோயிலோடு தொடர்புடைய மேட்டுக்குடி ஆண்களின் காமப் பசிக்கு விருந்தாகும் தேவதாசிகளின் நடனம். இன்று இதற்கு சிவனின் ஆட்டம் என்று கதைகட்டி தமிழன் என்ற இனத்தின் கலையாக உருவகப்படுத்துகின்றார்கள். ஆம் என்று ஏற்றுக்கொள்ள வேண்டியது தான். எமது வரலாறுகள் அனைத்திலும் கலப்படம் உண்டு. திருமூலரின் திருமந்திரம் கூட கலப்படம் உள்ளதுதான். சில பாடல்கள் நீக்ப்பட்டு அவர் பாணியிலேயே செருகப்பட்டும் உள்ளது. கோயில்களில் பிள்ளையார் இடையில் செருகப்பட்டதுதான். எதுவும் செய்ய முடியாது. தமிழர்களின் பாரம்பரிய கலை பரதம் என்று சொல்வதில் தவறில்லை ஏனெனில் தேவதாசிகளும் தமிழர்கள் தானே !! 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nochchi said:

சிவனின் கலையென்றால் அது தமிழரின் கலையாகத்தானிருக்க வேண்டும். 

இன்னும் கொஞ்சம் காலம் போன பின்பு போலிவூட் நடனமும் யாழ்ப்பாணத்து பாரம்பரிய நடனம் என்று சனம் சொல்லும் ...யாழ்ப்பாணத்தில் பொலிகண்டி என்ற ஊரிலிருந்துதான் ஆரம்பமானது என்று சொன்னால் நம்பத்தான் வேணும்....:10_wink:

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, சண்டமாருதன் said:

....இதைச் சுற்றியுள்ள புனைவுகள் புனிதங்கள் அனைத்தும் மாயை. பரத்தையாட்டம் அல்லது பரத்தையர் ஆட்டம். தேவதாசிகளிடம் இருந்து பிடுங்கப்பட்டு புனித பிம்பங்கள் கட்டியமைக்கப் பட்டதே இந்த ஆட்டம். தமிழ்நாட்டில் பெரும்பான்மையான மக்கள் இந்த நடனம் ஆட தங்கள் பிள்ளைகளை விட மாட்டார்கள். தற்போது இவ் நிலை மாறிவருகின்றது...

இந்நாட்டியம் மேட்டுக்குடி மக்களுக்கு மட்டுமே உரித்தாக்கப்பட்ட உயர்மொழி ஆட்டம்தானே? தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், கான சபாக்கள் அனைத்திலும் நன்னா பேசிண்டு, பேஷா, ஷேமமா திரிவதை பார்த்தாலே புரியும்.

தமிழர்களுக்கு இந்த கரகாட்டம், ஒயிலாட்டம் சொந்தமென பிடித்துக்கொள்ள வேண்டியதுதான்..!

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ராசவன்னியன் said:

இந்நாட்டியம் மேட்டுக்குடி மக்களுக்கு மட்டுமே உரித்தாக்கப்பட்ட உயர்மொழி ஆட்டம்தானே? தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், கான சபாக்கள் அனைத்திலும் நன்னா பேசிண்டு, பேஷா, ஷேமமா திரிவதை பார்த்தாலே புரியும்.

தமிழர்களுக்கு இந்த கரகாட்டம், ஒயிலாட்டம் சொந்தமென பிடித்துக்கொள்ள வேண்டியதுதான்..!

சிலம்பாட்டமும் எங்கடை..தான்.!

8 minutes ago, ராசவன்னியன் said:

இந்நாட்டியம் மேட்டுக்குடி மக்களுக்கு மட்டுமே உரித்தாக்கப்பட்ட உயர்மொழி ஆட்டம்தானே? தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், கான சபாக்கள் அனைத்திலும் நன்னா பேசிண்டு, பேஷா, ஷேமமா திரிவதை பார்த்தாலே புரியும்.

தமிழர்களுக்கு இந்த கரகாட்டம், ஒயிலாட்டம் சொந்தமென பிடித்துக்கொள்ள வேண்டியதுதான்..!

நிச்சயமாக பிடித்துக்கொளள வேண்டும். ஆனால் தற்போதைக்கு பரதம் மட்டும்தான் தமிழர்களின் கலை என்றளவில் சிந்திக்கும் ஈழத்தமிழர்கள் அதிகம். பெண்பிள்ளைகளுக்குப் பரதம் ஆண் பிள்ளைகளுக்கு தவில் வாசிக்க கற்றுக்கொடுப்பது. வீணையை வாசிக்கத் தெரியாவிட்டாலும் வீட்டில் வாங்கி வைத்துக்கொள்வது. இதுவே உயர் அந்தஸ்த்து அடயாளமாக கருதப்படுகின்றது. தமிழ்நாட்டிலும் தொலைக்காட்சிகள் மானாட மயிலாட கிங் டான்ஸ் அது இது என்று புது பாரம்பரியத்தை போட்டி போட்டு உருவாக்குகின்றது. கால ஓட்டத்தை கட்டுப்படுத்த முடியாது. கலைகள் அனைத்தும் காலத்துக்கேற்ப மாறும் போதுதான் அது உயிர்ப்புடன் இருக்கும். பாரம்பரியக் கலைகள் அடயாளமாகவேனும் தக்கவைக்கப் படவேணும். தமிழனுக்கென்று தனி அரசு இன்றி இவைகள் நடமுறையில் சாத்தியம் இல்லை. நுற்றுக்கணக்கான வட்டார கலைவடிவங்கள் ஏற்கனவே அழிந்துவிட்டது. இருப்பதை என்றாலும் தக்க வைக்க வேண்டும். 

https://ta.wikipedia.org/wiki/தமிழர்_கலைகள்

மக்களின் கலைகள் என்னும் போது அவை மக்களை மகிழ்விப்பதோடு அவர்களால் இலகுவாக கையாளக்கூடியதாகவும் இருக்க வேண்டும். தேவையற்ற வித்ததில் புனிதத் தன்மையையை திணிக்கும் மதத்தை சொல்லி பயபக்தியை உண்டாக்கும்  முட்டாள்தனம் கலை வளரச்சிக்கு உதவப் போவதில்லை.

துரதிஷ்ரவசமாக தமிழ் மக்களில் படித்தவர்கள் என்று கூறப்படுபவர்களில்  பெரும்பான்மையினர் பழமைவாதத்தை எந்த சுயஆய்வுக்கும் உட்படுத்தாமல் அப்படியே ஏற்றுக்கொள்பவர்களாகவும் பத்தாம்பசலித்தனத்தையும் மூடப்பழக்கங்களையும்  ஊக்குவிப்பவர்களகவுமே இருக்கிறார்கள்.   

தமிழர்களின் ஆதி நடன வடிவம் கூத்துதானே? கூத்துக்கும் பரதத்துக்கும் இடையில் ஏதேனும் தொடர்புகள் உள்ளனவா ?
 
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, சண்டமாருதன் said:

Bharatanatyam was originally an art form practiced by dEvadAsis or women who were married to the Gods in the Temples, who made their offering to the Gods through their dance. However, due to colonization in India, the art lost its original sanctity and women who practiced the form were known as nautch girls of the East.

உங்கள் பார்வையோடு சம்மந்தப்பட்டதுதான் பரதநாட்டியம். இதைச் சுற்றியுள்ள புனைவுகள் புனிதங்கள் அனைத்தும் மாயை. பரத்தையாட்டம் அல்லது பரத்தையர் ஆட்டம். தேவதாசிகளிடம் இருந்து பிடுங்கப்பட்டு புனித பிம்பங்கள் கட்டியமைக்கப் பட்டதே இந்த ஆட்டம். தமிழ்நாட்டில் பெரும்பான்மையான மக்கள் இந்த நடனம் ஆட தங்கள் பிள்ளைகளை விட மாட்டார்கள். தற்போது இவ் நிலை மாறிவருகின்றது. ஆங்கிலேய ஆட்சி வரையில்  இது கோயிலோடு தொடர்புடைய மேட்டுக்குடி ஆண்களின் காமப் பசிக்கு விருந்தாகும் தேவதாசிகளின் நடனம். இன்று இதற்கு சிவனின் ஆட்டம் என்று கதைகட்டி தமிழன் என்ற இனத்தின் கலையாக உருவகப்படுத்துகின்றார்கள். ஆம் என்று ஏற்றுக்கொள்ள வேண்டியது தான். எமது வரலாறுகள் அனைத்திலும் கலப்படம் உண்டு. திருமூலரின் திருமந்திரம் கூட கலப்படம் உள்ளதுதான். சில பாடல்கள் நீக்ப்பட்டு அவர் பாணியிலேயே செருகப்பட்டும் உள்ளது. கோயில்களில் பிள்ளையார் இடையில் செருகப்பட்டதுதான். எதுவும் செய்ய முடியாது. தமிழர்களின் பாரம்பரிய கலை பரதம் என்று சொல்வதில் தவறில்லை ஏனெனில் தேவதாசிகளும் தமிழர்கள் தானே !! 

பரதநாட்டியம்  ஆயுள்வேதம் யோகா மற்றும் பல ஆண்டுகள் கடந்தவை யாவும் 
தமிழருக்கு மட்டுமே சொந்தமாக இருக்க 99% சாத்தியம் உண்டு.

இந்த இந்துமதம் என்ற பிரமையே 14ஆம் நூற்றாண்டின் பின் தோன்றியிருக்கவே 
வாய்ப்பு உண்டு அதன் முன்பு வேதங்கள் 6 மட்டுமே. சைவமும் வைஷ்ணமும் 
கலப்படம் ஆகும்போதுதான் இந்த இந்துமதம் என்ற இரண்டும் கெட்டான் பூதம் 
தலை தூக்கியிருக்கிறது 

15ஆம் நூற்றாண்டு முன்பு விஜநகரம் தாண்டி எந்த படை எடுப்பும் வந்ததில்லை 
அதே போல் விஜயநகர (நாயக்கர்) ஆட்சி கூட அதன் பின்புதான் தமிழ் மன்னர்களுள் 
வரும் உள் மோதல்களாலும் காட்டி கொடுப்புகளாலும் தெற்கு நோக்க்கி விரிகிறது 

அதன் முன்பு விஜய நகரம் வரை வந்த படை எடுப்புகளும் முற்றிலும் இஸ்லாமிய 
படை எடுப்புகள்தான் .... மாறி மாறி வந்த வீழ்ச்சிகளாலும் எழுச்சிகளாலும் சைவர்கள் 
ஆகிய நாயக்கர்கள்தான் முதன் முதலில் கலப்படம் ஆகி இருக்கிறார்கள்.
பின்பு தெற்கு நோக்கி விரிந்த விஜயநகர படை எடுப்பின் போதே இங்கு கலப்படம் வந்திருக்க 
வாய்ப்பு உண்டு.

இராஜேந்திர சோழனின் ஒரே மகன் மகாராஷ்ட்டிரா நோக்கிய ஒரு படை எடுப்பில்தான் 
இறந்து  இருக்கிறான்  அது படை எடுப்பாக கூட இருக்கவில்லை ..... அதே நேரத்தில் 
கஜனி முகமது எல்லா இடங்களையும் கைப்பற்றிக்கொண்டு கலிங்கம் நோக்கி போகிறான் 
என்ற செய்தி அறிந்து இராஜேந்திர சோழன் தனது படையுடன் கலிங்கம் செல்வதற்காக தஞ்சை க்கு  
திரும்பிவரும்போதுதான் அவனது மகன் இறந்து போகிறான் 
இந்த கால எல்லைவரையில் சைவத்தில் கலப்படம் இருந்திருக்க வாய்ப்பில்லை 

விஜயநகரம் இரண்டு முறை மகாராஷ்ட்ராவை கைப்பற்றி இருக்கிறது அப்போதான் 
இந்த கலப்படம் நிகழ்ந்து இருக்க வாய்ப்பு இருந்து இருக்கும் என்று நான் நம்புகிறேன் 
வீர சிவாஜியின் எழுச்சியுடன் மகாராஷ்ட்டிரா ஆட்சி பலம் பெற்று விரிவடையும்போதுதான் 
விஜயநகர ஆட்சி தெற்கில் இலங்கை வரை வருகிறது.

தேவதாசிகளின் ஆட்டம் பாடடம் எல்லாம் நாயக்கரின் காலத்தில்தான் சோழர்களால் 
உள்வாங்க பட்டு இருக்கவேண்டும். பின்பு பாண்டிய அரசு நில வாரியாக எல்லாவற்றையும் 
அடித்து விரட்டி இருந்தாலும் கலைகள் ..... மதங்கள் சார்ந்து அவர்கள் எதையும் பெரிதாக 
செய்ததாக தெரியவில்லை. அப்போ கடல் வழி தொடர்புகள் பண்டமாற்றம் ... என்பன 
ஐரோப்பிய அரேபிய சீனர்களுடன் எல்லாம் தொடங்கி இருப்பதால் ..... 
இங்கு இருந்ததெல்லாம்  எங்களுடையது என்று புகுத்த படடதுகளையும் உள்வாங்கி இருக்கலாம். 

சைவ மத 64 நாயனார்கள் களின் கால எல்லையை சரியாக யாரவது 
கணிப்பீட்டு எழுதினால் சில விடயங்களை மேலும் புரிந்துகொள்ள வசதியாக இருக்கும்.
நாயன்மாரின் கதைகளில் கால நேரம் சரியாக இல்லை. ஏன் என்றால் இவர்களுடைய 
தேவாரங்கள் வாழ்க்கை பயணங்கள் கோவிலை சார்ந்து இருப்பதால் .... அந்த அந்த கோவில்களின் 
கால எல்லையை சரியாக கணிப்பிட உதவும்.
சைவத்திற்கும் ... சமணத்துக்கும் ஆனா சண்டை என்பது அப்பர் சம்மந்தர் காலத்தில்தான் 
முடிவு பெற்று சைவம் தலை  தூக்கி இருக்கிறது. மங்கையற்கரசியின் கணவர் சமண துறவியாக இருந்து இருக்கிறார். 

உங்களின் கருதும் கணிப்பும் சரியாகத்தான் இருக்கும் 
தேவதாசிகள் தமிழர்கள்தான் ..... ஆனால் இந்த கோவிலில் ஆடும் 
விளையாட்டு விஜயநகர விரிவாக்கத்தால் வந்திருக்க வாய்ப்பு உண்டு 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Maruthankerny said:

ராஜ ராஜ சோழனின் இயற்பெயர் அருண் மொழித்தேவர் என்பதாகும்!

இவரது காலம் கிறிஸ்துவுக்குப் பின்னர் இரண்டாம் நூற்றாண்டு எனக் கூறப்படுகின்றது!

சேக்கிழார் காலத்தில் தான் திருமுறைகள் தொகுக்கப்பட்டன! அது சரியாக இருக்குமெனின்..நாயன்மார்களின் காலமும்..நிச்சயம் அதற்கு முற்பட்டதாக இருந்திருக்க வேண்டும் என அனுமானிக்கலாம்! எவ்வாறாயினும் இரண்டாயிரம் வருடங்களுக்கு முற்பட்டதாக இருந்திருக்க வேண்டும்!

வேதங்களின் காலம்......ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்டது!

வேதங்கள் உண்மையில் ஆரியர்களின் வருகைக்கும் முற்பட்டதாக நிச்சயம் இருக்க வேண்டும்!

நீங்கள் கூறும் யோகா, வானியல் சாத்திரங்கள் போன்றவை இந்து வெளி, ஹரப்பா, மொஹாஞ்சி தாரோ காலப்பகுதியில் உருவாக்கி இருக்கவே வாய்ப்புகள் அதிகம் உண்டு!

இயற்கையை வழிபடுபவர்கள்....சித்தர்கள் என அழைக்கப்படுபவர்கள்..மேலே குறிப்பிடப் பட்ட காலப் பகுதியில் வாழ்ந்தவர்களே எமது மூதாதைகளாக இருந்திருக்க வேண்டும்!

இந்தப் பகுதிகளில் வளர்ந்திருந்த ஒரு நாகரீகமைடைந்த நிலையிலிருந்த ஒரு இனக்குழுமம் ...மாயர்களைப் போல திடீரென மறைந்து போகின்றது! அதற்கான காரணங்கள் எதுவும் தெளிவாக எங்கும் சொல்லப்படவில்லை!

அமைதியையும், சமாதானத்தையும் விரும்பிய இனமொன்று...தியானம், சாத்வீகம், போன்றவற்றை மட்டுமே முன்னெடுத்து வாழ்ந்தது! எந்த விதமான போருக்கும், யுத்தங்களுக்கும் அது தன்னைத் தயார் படுத்தி இருந்திருக்கவில்லை!

அதனால் தான்....ஆரிய ஊடுருவலின் போது அந்த இனத்தால்..தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியவில்லை!

இன்றும்..அடுக்கடுக்காக ஒன்றுக்கு..மேல் ஒன்றாக அடுக்கப் பட்ட புதை குழிகள்...அவ்வாறு ஒரு சம்பவம் நிகழ்ந்ததமைக்குச் சான்று பகர்கின்றன! அந்த உடலங்கள் ...காலரா போன்ற நோய்களின் தாக்கங்களினால்..இறந்தமைக்கான சான்றுகள் எதுவும் இல்லை! ஏனெனில் அவற்றின் தலைகள் வெட்டப்பட்ட நிலையிலேயே அவை காணப்படுகின்றன!

அங்கு வந்த ஆரியர்கள்...அந்த இனக்குழுமத்தின் அளப்பரிய சொத்துக்களான...அறிவு நூல்களையும் அபகரித்துக் கொள்கின்றார்கள்!

அவையே வேதங்களாகப் பின்னர் உருமாறுகின்றன!

ஏனெனில்...வேதங்களின் வரும்...அசுவமேத யாகங்கள் போன்றவை..இந்தியாவில் நடந்திருக்க வாய்ப்பே இருந்திக்கவில்லை! இந்தியாவில் அந்தக் காலப்பகுதியில் குதிரைகளே இருந்த்ருக்கவில்லை! ஆயினும்..அசுவ மேத யாகம் போன்ற ஒரு சடங்கு..அயர்லாந்தில்..அந்தக் காலத்தில் நடந்திருக்கிறது என்பதற்கான ஆதராங்கள் இன்றும் உள்ளன!

இவ்வாறு திருடப்பட்ட கலைகளில்...யோகக் கலையும், சோதிடக் கலையும், நிச்சயம் இருந்திக்கின்றன! நீங்கள் கூறும் பரதக் கலையும் அதனுள் அடங்கியிருந்திருக்கலாம்!

மூல வேதங்களின் நாயகன்...சிவன்!

அவன் பின்னர் புறக்கணிக்கப்பட்டு...பிரமாவும், விஷ்ணுவும் ,முன்னெடுக்கப் படுகின்றனர்! 

மூல நாயகனான சிவன்....பின்னர் உருத்திரன் என்னும்...சுடலைகளில் ஆடுபவனாகத் தரமிறக்கப் பட....சோமனும் ( சந்திரன்), இந்திரனும் முன்னெடுக்கப் படுகின்றார்கள்!

கிருஷ்ணனும், இராமரும்...இந்து வெளி..நாகரீகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்திருக்கலாம்! ஏனெனில் இவர்கள் நிறம் கருப்பாகவே உள்ளது!

இராமாயணத்தில் வருகின்ற..சரயு நதி ( சரஸ்வதி நதி) ஓடிய பாதையானது..இந்த நாகரீகப் பிராந்தியதுக்குள்ளேயே உள்ளது!

மகாபாரதத்தில் வருகின்ற காந்தார தேசமானது...இன்றைய ஆப்கானிஸ்தான் பகுதியில் உள்ளது! இதுவும் இந்தப் பிராந்தியத்துக்குள் தான் உள்ளது!

பின்னர் ஆங்கிலேயர் ஊடுருவிய காலப்பட்குதியில்...இவ்வாறான அளப்பரிய அறிவுக் குவியல்களைக் கண்ட ஆங்கிலேயர்கள்...இந்த நூல்களை மொழி பெயர்க்கும் பொறுப்பை...மாக்மில்லன் எனும் ஜெர்மானியரிடம் கொடுக்கிறார்கள்!

அவரும்..இந்த நூல்கள் கறுப்பான இந்தியர்களிடம் இருந்து வந்திருக்கும்..என்பதை முன்னிலைப் படுத்த மனமில்லாமல்..வெள்ளை இனத்தவரான ஆரியர்களிடமிருந்து தான் இவை வந்திருக்க முடியும் என்று...தனது மொழி பெயர்ப்புகளில் கூறுகின்றார்!

அவையே....ஆரியர்கள்....தங்களை முன்னிலைப் படுத்துவதற்கான முக்கிய காரணமாகும்!

அதனால் தான் அதனை மறுதலிக்கும்...எந்த ஆய்வையும் ..ஆரியர்கள் ஒரு போதும் செய்ய அனுமதிக்க மாட்டார்கள்!

ஏன் ...ராஜ ராஜனின் சிலை கூட...அவனால் கட்டப்பட்ட பெரிய கோவிலின் மூலையில் கூட நிற்க அனுமதிக்கப் படவில்லை!

அது தூக்கப் பட்டு...தமிழ் நாட்டின் ஒரு தெருவோரத்தில் ...நிறுவப்பட்டுள்ளது!

காரணம் என்னவெனில்...பெரிய கோவிலைப் பார்க்க வருபவர்கள்...அதைக் கட்டியவன் ஒரு தமிழன் என்பதை அறியக்கூடாது என்பதே!

இவ்வாறு எவ்வளவோ வரலாற்றுச் சான்றுகள்...அழிந்து போகின்றன !

11 hours ago, நிழலி said:

தமிழர்களின் ஆதி நடன வடிவம் கூத்துதானே? கூத்துக்கும் பரதத்துக்கும் இடையில் ஏதேனும் தொடர்புகள் உள்ளனவா ?
 
கூத்தொரு பாதை பரதம் ஒரு பாதை. கூத்து நடந்த ஒன்றை எடுத்துக்கூறுவதில் ஆரம்பித்து கற்பனைகளை எடுத்துக் கூறுவதாக நகர்ந்தது. பரதம் உடல் மற்றும் உணர்வுகளை வெளிப்டுத்துவது. எதிர்பார்ப்புக்கு ஏற்றாற்போல் வெளிப்டுத்துவதில் ஆரம்பித்தது. இரண்டும் தனது சுயத்தை இழந்துவிட்டது என்பதில் தொடர்புபடுகின்றது.  

கூத்துக்களை பொறுத்தவரை ஆதிகாலத்தில் தம்மை ஆபத்துக்களில் இருந்து காத்தவர்களின் வீர தீரங்களை நடித்தும் பாடியும் அடுத்த அடுத்த தலைமுறைக்கு கடத்தினார்ள். வரலாறும் இவ்வாறுதான் பதிவு செய்யப்பட்டது. பின்னர் போரில் நடந்த வீர நிகழ்வுகள் வரலாறுகளை கூத்தாக நகர்த்தினார்கள். முன்னாளைய வீரர்கள் தான் பின்னாளைய வழிபாட்டுக் கடவுளாக இருந்தார்கள். கால நகர்வில் கற்பனைப் புராண கடவுள்களின் வருகையோடு வழிபாட்டுக் கடவுள்கள் பலர் காணாமல் போயினர். பல வழிபட்டுக்கடவுகளின் இடத்தை புராண கற்பனைக் கடவுள்கள் ஆக்கிரமித்துக்கொண்டது. நூற்றுக்கணக்கான அம்மன் மாரியம்மன் வழிபாடுகள் அனைத்தும் ஒருகாலத்தில் உயிரோடு வாழ்நத பெண்கள் கதைகள் தான். பின்னர் துர்கா லட்சுமி சரசுவதி போன்ற புராணக் கலப்புகள் முன்னுக்கு வந்துவிட்டது. இருநதும் அம்மன் வழிபாடு தொடர்கின்றது. 

இவ்வாறான நகர்வோடு தான் கூத்தும் நகர்கின்றது. 

Quote

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொடுகொட்டி - சுடுகாட்டிலே சிவபெருமான் உமையொரு பாகனாக வெற்றிக்களிப்பில் ஆடிய கூத்து.

  • பாண்டரங்கக் கூத்து - பிரம்மன் முன்னர் பாரதி வடிவமாகிய இறைவன் வெண்ணீறு அணிந்து ஆடியது.
  • அல்லியத் தொகுதி - கஞ்சனின் வஞ்சனையை வெல்லும் பொருட்டுக் கரிய நிறததோனாகிய மாயோன் ஆடிய கூத்து.
  • மல்லாடல் - வாணாசுரன் எனும் அசுரனை வெல்லும் பொருட்டு அஞ்சனவண்ணன் மல்லனாக ஆடியது.
  • துடிகொட்டி - சூரபத்மனை வென்ற முருகன் ஆடிய கூத்து
  • குடைக்கூத்து - தோற்ற அசுரர்கள் முன் தன் குடையைச் சாய்த்துச் சாய்த்து முருகன் ஆடிய கூத்து
  • குடக்கூத்து - மாயோன் குடத்தைக் கொண்டு ஆடிய கூத்து
  • பேடிக்கூத்து - ஆண்தன்மை நீங்கி பெண் தன்மையோடு காமன் ஆடிய கூத்து
  • மரக்கால் கூத்து - துர்க்கை அசுரரை அழித்து சினத்தோடுஆடிய கூத்து
  • பாவைக்கூத்து - செந்நிறமுடைய திருமகள் கொல்லிப்பாவை வடிவுடன் ஆடிய கூத்து
  • கடையக்கூத்து - இந்திராணி உழவர்கள் குலத்துக் கடைசியர் வடிவு கொண்டு ஆடிய கூத்து
  • சாந்திக்கூத்து - நாயகன் சாந்தமாக ஆடிய கூத்து

கூத்துக் கலையும் காலத்துக்கேற்ப தன்னை கடத்திக்கொண்டு வந்துள்ளது.  கால நகர்வில் வழிபாட்டுக் கடவுள்கள் இருந்த இடத்தில் லட்சுமி சரசுவதி துர்க்கா போல இப்போது கூத்தின் இடத்தில் சினிமா இருக்கின்றது. பரதத்தை பொறுத்தவரை அது தேவதாசிகள் அடியபோது  அந்தக் கால மேட்டுக்குடிகளின் கிளப் கபரே போன்றது. கூத்து கதைகளை வரலாறுகளை கூறுவதாக தனது தொடக்கத்தை கெண்டிருந்தது பின்னர் கடவுள் கற்பனைகளை கூறுவதாக நகர்ந்தது. பரதம் பாவனையில் உணர்வுளளை வெளிபடுத்துவதாக அமைந்தது. உடலையும் உணர்வையும் வெளிப்படுத்துவதை அடிப்படையாகக்கொண்டது.குறிப்பா ஆண்களின் ரசனைக்கு ஏற்றாற் போல் இருக்க வேண்டும். அதற்கும் கடவுள் புனிதம் போன்ற சாயம் பூசப்பட்டது. இப்போது பரதம் ஒரு கலாச்சார அந்தஸ்த்து அடயாளமாக தன்னை அடயாளப்படுத்துகின்றது. ஒருகாலத்தில் மாடுகள் குதிரைகளை கொன்று யாகம் செய்த பிரமணர்கள் இன்று வெயிரேறியன் போல் தான் இன்றய பரதத்தின் பல்டி அடித்த நிலை. பரதம் தேவதாசிகள் ஆடியபோது தனியே அது அழகியலாக மட்டும் இருக்கவில்லை. என்னுமொரு பக்கம் அது ரணமுமாக இருந்தது. சுருக்ககமாகச் சொன்னால் ஆடும் ஆட்டத்தில் அவள் கருத்தரிக்க மாட்டாள் அவ்வாறு தரித்தாலும் கலைந்துவிடும். கோமன்கள் சீமான்களின் கொளரவம் காக்கப்படும். தாம் தரிகிட தீம் என்ற கிழட்டு எருமைக் குரலும் அதற்கு ஒரு இளம் பெண் தனது உடல் உணர்வை வெளிப்படுத்துவதும் எங்கோ உணர்வில் இப்போதும் உதைக்கும். கட்டப்பட்ட புனித தூய்மை கடவுள் கலந்த பிம்பங்களை கடந்து ஒற்றைக்கால் நடராசரையும் கடந்து உணர்வில் உதைக்கத்தான் செய்யும். 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, புங்கையூரன் said:

ராஜ ராஜ சோழனின் இயற்பெயர் அருண் மொழித்தேவர் என்பதாகும்!

இவரது காலம் கிறிஸ்துவுக்குப் பின்னர் இரண்டாம் நூற்றாண்டு எனக் கூறப்படுகின்றது!

சேக்கிழார் காலத்தில் தான் திருமுறைகள் தொகுக்கப்பட்டன! அது சரியாக இருக்குமெனின்..நாயன்மார்களின் காலமும்..நிச்சயம் அதற்கு முற்பட்டதாக இருந்திருக்க வேண்டும் என அனுமானிக்கலாம்! எவ்வாறாயினும் இரண்டாயிரம் வருடங்களுக்கு முற்பட்டதாக இருந்திருக்க வேண்டும்!

வேதங்களின் காலம்......ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்டது!

வேதங்கள் உண்மையில் ஆரியர்களின் வருகைக்கும் முற்பட்டதாக நிச்சயம் இருக்க வேண்டும்!

நீங்கள் கூறும் யோகா, வானியல் சாத்திரங்கள் போன்றவை இந்து வெளி, ஹரப்பா, மொஹாஞ்சி தாரோ காலப்பகுதியில் உருவாக்கி இருக்கவே வாய்ப்புகள் அதிகம் உண்டு!

இயற்கையை வழிபடுபவர்கள்....சித்தர்கள் என அழைக்கப்படுபவர்கள்..மேலே குறிப்பிடப் பட்ட காலப் பகுதியில் வாழ்ந்தவர்களே எமது மூதாதைகளாக இருந்திருக்க வேண்டும்!

இந்தப் பகுதிகளில் வளர்ந்திருந்த ஒரு நாகரீகமைடைந்த நிலையிலிருந்த ஒரு இனக்குழுமம் ...மாயர்களைப் போல திடீரென மறைந்து போகின்றது! அதற்கான காரணங்கள் எதுவும் தெளிவாக எங்கும் சொல்லப்படவில்லை!

அமைதியையும், சமாதானத்தையும் விரும்பிய இனமொன்று...தியானம், சாத்வீகம், போன்றவற்றை மட்டுமே முன்னெடுத்து வாழ்ந்தது! எந்த விதமான போருக்கும், யுத்தங்களுக்கும் அது தன்னைத் தயார் படுத்தி இருந்திருக்கவில்லை!

அதனால் தான்....ஆரிய ஊடுருவலின் போது அந்த இனத்தால்..தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியவில்லை!

இன்றும்..அடுக்கடுக்காக ஒன்றுக்கு..மேல் ஒன்றாக அடுக்கப் பட்ட புதை குழிகள்...அவ்வாறு ஒரு சம்பவம் நிகழ்ந்ததமைக்குச் சான்று பகர்கின்றன! அந்த உடலங்கள் ...காலரா போன்ற நோய்களின் தாக்கங்களினால்..இறந்தமைக்கான சான்றுகள் எதுவும் இல்லை! ஏனெனில் அவற்றின் தலைகள் வெட்டப்பட்ட நிலையிலேயே அவை காணப்படுகின்றன!

அங்கு வந்த ஆரியர்கள்...அந்த இனக்குழுமத்தின் அளப்பரிய சொத்துக்களான...அறிவு நூல்களையும் அபகரித்துக் கொள்கின்றார்கள்!

அவையே வேதங்களாகப் பின்னர் உருமாறுகின்றன!

ஏனெனில்...வேதங்களின் வரும்...அசுவமேத யாகங்கள் போன்றவை..இந்தியாவில் நடந்திருக்க வாய்ப்பே இருந்திக்கவில்லை! இந்தியாவில் அந்தக் காலப்பகுதியில் குதிரைகளே இருந்த்ருக்கவில்லை! ஆயினும்..அசுவ மேத யாகம் போன்ற ஒரு சடங்கு..அயர்லாந்தில்..அந்தக் காலத்தில் நடந்திருக்கிறது என்பதற்கான ஆதராங்கள் இன்றும் உள்ளன!

இவ்வாறு திருடப்பட்ட கலைகளில்...யோகக் கலையும், சோதிடக் கலையும், நிச்சயம் இருந்திக்கின்றன! நீங்கள் கூறும் பரதக் கலையும் அதனுள் அடங்கியிருந்திருக்கலாம்!

மூல வேதங்களின் நாயகன்...சிவன்!

அவன் பின்னர் புறக்கணிக்கப்பட்டு...பிரமாவும், விஷ்ணுவும் ,முன்னெடுக்கப் படுகின்றனர்! 

மூல நாயகனான சிவன்....பின்னர் உருத்திரன் என்னும்...சுடலைகளில் ஆடுபவனாகத் தரமிறக்கப் பட....சோமனும் ( சந்திரன்), இந்திரனும் முன்னெடுக்கப் படுகின்றார்கள்!

கிருஷ்ணனும், இராமரும்...இந்து வெளி..நாகரீகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்திருக்கலாம்! ஏனெனில் இவர்கள் நிறம் கருப்பாகவே உள்ளது!

இராமாயணத்தில் வருகின்ற..சரயு நதி ( சரஸ்வதி நதி) ஓடிய பாதையானது..இந்த நாகரீகப் பிராந்தியதுக்குள்ளேயே உள்ளது!

மகாபாரதத்தில் வருகின்ற காந்தார தேசமானது...இன்றைய ஆப்கானிஸ்தான் பகுதியில் உள்ளது! இதுவும் இந்தப் பிராந்தியத்துக்குள் தான் உள்ளது!

பின்னர் ஆங்கிலேயர் ஊடுருவிய காலப்பட்குதியில்...இவ்வாறான அளப்பரிய அறிவுக் குவியல்களைக் கண்ட ஆங்கிலேயர்கள்...இந்த நூல்களை மொழி பெயர்க்கும் பொறுப்பை...மாக்மில்லன் எனும் ஜெர்மானியரிடம் கொடுக்கிறார்கள்!

அவரும்..இந்த நூல்கள் கறுப்பான இந்தியர்களிடம் இருந்து வந்திருக்கும்..என்பதை முன்னிலைப் படுத்த மனமில்லாமல்..வெள்ளை இனத்தவரான ஆரியர்களிடமிருந்து தான் இவை வந்திருக்க முடியும் என்று...தனது மொழி பெயர்ப்புகளில் கூறுகின்றார்!

அவையே....ஆரியர்கள்....தங்களை முன்னிலைப் படுத்துவதற்கான முக்கிய காரணமாகும்!

அதனால் தான் அதனை மறுதலிக்கும்...எந்த ஆய்வையும் ..ஆரியர்கள் ஒரு போதும் செய்ய அனுமதிக்க மாட்டார்கள்!

ஏன் ...ராஜ ராஜனின் சிலை கூட...அவனால் கட்டப்பட்ட பெரிய கோவிலின் மூலையில் கூட நிற்க அனுமதிக்கப் படவில்லை!

அது தூக்கப் பட்டு...தமிழ் நாட்டின் ஒரு தெருவோரத்தில் ...நிறுவப்பட்டுள்ளது!

காரணம் என்னவெனில்...பெரிய கோவிலைப் பார்க்க வருபவர்கள்...அதைக் கட்டியவன் ஒரு தமிழன் என்பதை அறியக்கூடாது என்பதே!

இவ்வாறு எவ்வளவோ வரலாற்றுச் சான்றுகள்...அழிந்து போகின்றன !

துவாரகை நகரம் மிக அண்மையில்தான் கடலுக்கு அடியில் 
கிடக்கிறது பல வெளிநாட்டு நிறுவனங்கள் அகழ்வாராய்ச்சி செய்ய 
கேட்டும் இந்திய அரசு அவர்களை விடுகிறார்கள் இல்லை 
எல்லா அகழ்வாராய்ச்சியையும் நிறுத்தி வைத்திருக்கிறது

எனக்கு என்னமோ .......... அங்கு நிறைய தமிழ் சார்ந்து இருக்க 
நிறைய சாத்தியம் இருப்பதாகவே படுகின்றது.

வைஸ்ணவம் சார்ந்ததும் ...... ஆரியம் சார்ந்தும் இருப்பின் 
சொந்த செலவிலேயே போயிருப்பார்கள் 
தாமும் போகாது ... போகிறவனையும் தடுக்கிறார்கள் 
என்றால் கொஞ்சம் யோசிக்க வேண்டி இருக்கிறது 

  • கருத்துக்கள உறவுகள்

On 10/10/2017 at 11:53 PM, நவீனன் said:

தமிழ் இனத்­தின் புனி­தம் மிக்க பாரம் ப­ரி­யத்தை எடுத்­துக்­கூ­றும் பர­த­நாட்­டி­யம் மற்­றும் காவ­டியை மாண­வர்­க­ளுக்­குப் பழக்கி அவற்றை சாலை­க­ளில் ஆடி அவற்­றின் தரத்­தைக் குறைக்­கா­தீர்­கள். எமது பாரம்­ப­ரி­யக் கலை­களை அவ­ம­திக்­கும் செயற்­பா­டா­கவே இத­னைக் கரு­து­கி­றேன்.

இவரிடமிருந்து இப்பிடியொரு படுமுட்டாள் கருத்தை யாரும் எதிர்பாத்திருக்கமாட்டாங்கள்.

பாடசாலை பயிலுமிடம். குறைகள் இல்லாமால் எதையும் பழக்க முடியாது. இங்கு சிறியவர்கள் பழகாவிட்டால் சில தசாப்தங்களில் இந்த கலைகள் அழிவடைந்து போகலாம். இப்படியான சர்வநாசங்களை செய்யும் இந்த சர்வேஸ்வரன் எங்களுக்கு தேவையா?

17 hours ago, Maruthankerny said:

பரதநாட்டியம்  ஆயுள்வேதம் யோகா மற்றும் பல ஆண்டுகள் கடந்தவை யாவும் 
தமிழருக்கு மட்டுமே சொந்தமாக இருக்க 99% சாத்தியம் உண்டு.

பதஞ்சலி மாமுனிவரின் பூர்வீகம் திருகோணமலை என்று எங்கோ படித்த ஞாபகம்.

ஈழ மக்களால் நீண்ட காலம் பராமரிக்கப்பட்ட இராமேஸ்வரத்தில் பல ஆதாரங்கள் புதைந்துள்ளதாக கூறுகின்றனர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, Maruthankerny said:

துவாரகை நகரம் மிக அண்மையில்தான் கடலுக்கு அடியில் 
கிடக்கிறது பல வெளிநாட்டு நிறுவனங்கள் அகழ்வாராய்ச்சி செய்ய 
கேட்டும் இந்திய அரசு அவர்களை விடுகிறார்கள் இல்லை 
எல்லா அகழ்வாராய்ச்சியையும் நிறுத்தி வைத்திருக்கிறது

எனக்கு என்னமோ .......... அங்கு நிறைய தமிழ் சார்ந்து இருக்க 
நிறைய சாத்தியம் இருப்பதாகவே படுகின்றது.

வைஸ்ணவம் சார்ந்ததும் ...... ஆரியம் சார்ந்தும் இருப்பின் 
சொந்த செலவிலேயே போயிருப்பார்கள் 
தாமும் போகாது ... போகிறவனையும் தடுக்கிறார்கள் 
என்றால் கொஞ்சம் யோசிக்க வேண்டி இருக்கிறது 

இப்பவெல்லாம் எங்கடை தமிழ்ச்சனமே தமிழ்கதைக்க வெட்கப்படீனம்....நிலமை இப்பிடியிருக்கேக்கை பழசுகளை கிண்டிக்கிளறி என்ன பிரயோசனம்? :cool:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இப்பவெல்லாம் எங்கடை தமிழ்ச்சனமே தமிழ்கதைக்க வெட்கப்படீனம்....நிலமை இப்பிடியிருக்கேக்கை பழசுகளை கிண்டிக்கிளறி என்ன பிரயோசனம்? :cool:

நான் தமிழ் மட்டும் தான் கதைக்கிற நான் வேற மொழிகள் கதைப்பதில்லை  இலங்கையில் இருப்பதால் ஆனால் வெளிநாடு மக்கள் பாவம் வெள்ளைக்காரன் கடையில் போய் காப்போத்தல் பால் தா என்று கேட்கேலாது இருந்தாலும் எங்கடதுகள் நாலு சேர்ந்தால் இங்கிலிசு ,ஹிந்தி , பஞ்சாபி, டொச்சு அது கிது எண்டெல்லாம் கதைக்கிற வழமைதானே . நானும் இங்க வந்து கதைச்சதை பார்த்திருக்கன்  உள்ளுக்குள்ள சிரிப்பன் வெளியே தெரியாது சாமியார்tw_blush:

இந்தாளை கைலாசத்துக்கு அனுப்பி எடுத்தால் என்ன ??

On 10/11/2017 at 5:20 AM, குமாரசாமி said:

பரதநாட்டியம் சிவனுக்கு உரித்தானது எண்டு கேள்விப்பட்டன்.
அதாவது...
ஆடவர் கலை..:grin:

இது உண்மை!

அதில் சில நடன ஜதிகள் பெண்களால் ஆட முடியாதவை.

On 10/10/2017 at 11:53 PM, நவீனன் said:

இந்­தி­யா­வி­லி­ருந்து பயிற்­று­விப்­பா­ளர்­களை வர­வ­ழைத்து மாண­வர்­க­ளுக்­குப் பயிற்­சி­களை வழங்கி

தமிழர்களின் பாரம்பரிய கலைகளையும் அழிக்க சிலர் வரிந்துகட்டிக்கொண்டு நடப்பதாக தெரிகிறது.

காவடி ஆட்டம் இலங்கையில் தான் மிகச் சிறப்பாக இருந்தும் வருகிறது என்று நினைக்கிறேன். அதுக்குள்ள இவ்வாறு இந்தியாவில் இருந்து எதுக்கு ஆட்களை கொண்டு வரவேண்டும்.  

ஹிந்திய போர்க்குற்றவாளிகளின் கைக்கூலியாக சர்வேஸ்வரன் மீண்டும் மாறிவிட்டார் என்றும், ஒருகாலத்தில் இவரும் சுரேஷும் ஹிந்திய போர்க்குற்றவாளிகளின் ஜால்றாங்களாக இருந்தவர்கள் தான் என்றும் மக்கள் பரவலாக கதைக்க தொடங்கியிருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On ‎11‎.‎10‎.‎2017 at 3:18 PM, நிழலி said:

தமிழர்களின் ஆதி நடன வடிவம் கூத்துதானே? கூத்துக்கும் பரதத்துக்கும் இடையில் ஏதேனும் தொடர்புகள் உள்ளனவா ?
 
Professor Richard Martin மற்றும் Tony Joseph உலகப்புகழ்பெற்ற Oxford பல்கலைக்கழகத்தின் வரலாறு, தொல்லியல் மற்றும் மரபணுவியல் (genetical) துறையின் பேராசிரியர்களின் ஆராய்ச்சியில், உலகில் மனிதன் தோன்றியது எங்கே ?? ஆசியாவின் பூர்வ குடிகள் யார் ??இந்தியாவின் மற்றும் அமெரிக்காவின் ஆதி மக்கள் யார் ??  என்று இந்திய துணைக்கண்டம், மற்றும் ஈரான் ஈராக் அமெரிக்கா ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் பர்மா மலேசியா நேபாளம் பங்களாதேசம் ஆகிய நாடுகளில் மக்களிடம் லட்சக்கணக்கான மரபணுக்களை ஆராய்ச்சி செய்து கண்ட முடிவின்படி... ரிக் வேதம் எழுதப்பட்ட காலகட்டத்திலே நாகரீகத்துடன் திராவிடர்கள் என்று அழைக்கப்படும் தமிழர்கள் வாழ்ந்து வந்தனர் என்றும் ஆதாரப்பூர்வமாக நிரூபித்தும் உள்ளனர்.

உண்மையிலேயே வரலாற்றை புரட்டி பார்த்தால் நாகரீகத்தின் ஆவணங்களில் தமிழனின் வாழ்க்கை, பழக்க வழக்கம், வழிபாடு முறைகள் என அனைத்தும் இயற்கையை தழுவியே இருந்திருக்கின்றன. தமிழ் மொழியும் கூட மனித இனத் தொடக்கத்தின் ஊடாகவே இணைந்து, பிறந்து,  வளர்ந்து வாழ்ந்துக் கொண்டிருக்கும் ஒரு இயற்கை மொழி.  இயற்கையின் தாண்டவம் உலகம் அறிந்தது. "தாண்டவம்" அதுதான் நடனம். இயற்கையையே முழுமுதற் கடவுளாக, சிவபெருமானாக, தமிழர்கள் உருவகப்படுத்தினர் எனக் கொள்ளலாம். சிவபெருமான், தண்டு முனிவருக்கும், பரத முனிவருக்கும் தாண்டவங்களைக் கற்பித்தார் என்று நாட்டிய சாத்திரத்தின் நாலாவது அத்தியாயமான தாண்டவலட்சணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக விக்கிப்பீடியாவிலும் தெரிவிக்கப்படுகின்றது. 

  • கருத்துக்கள உறவுகள்
On 10/12/2017 at 4:16 AM, குமாரசாமி said:

இப்பவெல்லாம் எங்கடை தமிழ்ச்சனமே தமிழ்கதைக்க வெட்கப்படீனம்....நிலமை இப்பிடியிருக்கேக்கை பழசுகளை கிண்டிக்கிளறி என்ன பிரயோசனம்? :cool:

நேரம் இருந்தால் நான் இணைத்த இரண்டாவது வீடியோவை பார்க்கவும் 
ஒரே கால கட்டிடத்தில்தான் மேலே துவாரகை தெற்கே இலங்கை இந்திய எல்லை பகுதியில் 
ஒரு நகரமும் அழிந்து இருக்கிறது. 

 இரண்டிலும் கண்டு எடுக்கப்படட பொருட்கள் ஒரே கால மாக இருக்கிறது 
அதுதான் எனது சந்தேகம் ....
இரண்டும் ஒரே மக்களாக இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது 
இவை 2500 வருடங்கள் முந்தியவை 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Maruthankerny said:

நேரம் இருந்தால் நான் இணைத்த இரண்டாவது வீடியோவை பார்க்கவும் 
ஒரே கால கட்டிடத்தில்தான் மேலே துவாரகை தெற்கே இலங்கை இந்திய எல்லை பகுதியில் 
ஒரு நகரமும் அழிந்து இருக்கிறது. 

 இரண்டிலும் கண்டு எடுக்கப்படட பொருட்கள் ஒரே கால மாக இருக்கிறது 
அதுதான் எனது சந்தேகம் ....
இரண்டும் ஒரே மக்களாக இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது 
இவை 2500 வருடங்கள் முந்தியவை 

எல்லாம் சரி தான்.இப்ப நாங்கள் தாயகம் என்று சொல்கிற இடங்களில் மக்கள் தொடர்ந்து இருக்க வைக்கிற வழியையும் பாக்க வேணும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.