Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு இளை­ஞர்க­ளி­டம் வெளி­நாட்டு மோகம் அதி­க­ரிப்பு!!

Featured Replies

வடக்கு இளை­ஞர்க­ளி­டம்  வெளி­நாட்டு மோகம் அதி­க­ரிப்பு!!
 
வடக்கு இளை­ஞர்க­ளி­டம் வெளி­நாட்டு மோகம் அதி­க­ரிப்பு!!

வடக்கு மாகா­ணத்தை பொறுத்­த­வ­ரை­யில் இளை­ஞர் சமு­தா­யம் கல்­வி­யி­லும் தொழில் துறை­யி­லும் நாட்­டம் செலுத்­து­வது மிக­வும் அரி­தாகி வரு­கி­றது. அநே­க­ மா­னோர் வெளி­நா­டு­க­ளுக்கு செல்ல வேண்­டும் என்ற ஆசை­யில் தங்­க­ளின் வாழ்க்­கை­யின் அரை­வாசிக் காலத்தை வீண­டிக்­கின்­ற­னர். என சமூக ஆர்­வ­லர்­கள் சுட்­டிக்­காட்­டி­யுள்­ள­னர். இது தொடர்­பில் அவர்­கள் மேலும் தெரி­வித்ததா­வது:

யாழ்ப்­பாண பல்­க­லைக்­க­ழ­கத்­துக்கு தெரி­வா­கும் தமிழ் மாண­வர்­க­ளின் வீதம் சடு­தி­யாக குறை­வ­டைந்து வரு­கிறது. கலைப்­பீ­டத்­துக்கே அதி­க­ள­வான தமிழ் மாண­வர்­கள் தெரி­வா­கின்­ற­னர். விஞ்­ஞான, வணிக பீடங்­க­ளுக்கு தென்­ப­கு­தி­யைச் சேர்ந்த மாண­வர்­களே அதி­க­ள­வில் தெரி­வா­கின்­ற­னர்.

இந்த நிலை தொடர்ந்­தால் எமது பாரம்­ப­ரி­ய­மான யாழ்ப்­பாண பல்­க­லைக்­க­ழ­கத்தை பெரும்­பான்மை மாண­வர்­க­ளி­டம் தார­வார்க்­கின்ற அபாய நிலை ஏற்­ப­டும். எனவே இந்த நிலை­மையை மாற்ற இளைய சமு­தா­ய­மும் கல்வி அதி­கா­ரி­க­ளும் உரிய நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்­டும். தொழில் பயிற்சி நெறிக்கு என அதி­க­ள­வில் விண்­ணப்­பிக்­கின்­ற­னர்.

எனி­னும் பயிற்­சி­யினை நிறைவு செய்­வ­தற்கு முன்­னரே அதி­க­ள­வா­னோர் இடை வில­கு­கின்­ற­னர். இவ்­வா­றான நிலை­மை­களை மாற்­றி­ய­மைத்து போரால் பாதிக்­கப்­பட்ட எமது பிர­தே­சத்தை பொரு­ளா­த­ரத்­தா­லும் கல்­வி­யா­லும் மீள கட்­டி­யெ­ழுப்ப அனை­வ­ரும் ஒன்­றி­ணைய வேண்­டும்–என்­ற­னர்.

http://newuthayan.com/story/56805.html

  • கருத்துக்கள உறவுகள்

இது சிங்களத்தின் மிகவும் உடல், உள, மதி வளமுள்ள இளம் தமிழரின் சனத்தொகையை குறைப்பதற்காண  திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலின் பிரதி பலிப்பே ஆகும்.

புகளிடத் தமிழரில் பிழைகள் இல்லாமல் இல்லை. ஆயினும், இந்த வெளி நாட்டு மோக பிரதிபலிப்பானது, ஓர் நிறுவனப்மயப் படுத்தப்பட்ட திட்டம் இல்லாமல்,  இவ்வளவு பூதாகரமானதாகவும், வேகமாகமும் இருக்க முடியாது.    

Classic strategy for depopulating able-bodied, minded and brained young persons.

  • கருத்துக்கள உறவுகள்

சமீபத்தில் மிருக பலி தடை என்பதன் மூலமாக வேள்வி நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டது. அதிலே அந்த மண்ணிலிருந்து வரும் நோக்குகளை இன்று குறிப்பிட்டுளேன்.  நேரம் இருந்தால் வாசிக்கவும்.

இவை எல்லாம் தனித்தனியே நோக்கும் பொது ஓர் தனித்தன்மையுள்ள பிரச்னையாஏ தோன்றும். ஆனாலும் இவனில் எல்லாம் ஓர் ஒருங்கிணைக்கப்பட்ட திட்டத்தின் தனிப்பட்ட அலகுகள் ஆகும்.

இவற்றின் இலக்கும், ஒருங்கிணைந்த விளைவும், இறுதியாக ஈழத்து தமிழரின் அழிவை. அடையாளத்தை அழிப்பதின் ஊடாகவோ, சனத்தொகை குறைபின்னூடவவோ, அல்லது ஓர் நலிந்த சமூகமாகமாக மாற்றுவதிலோ முடியும்.

ஓர் நலிந்த ஈழத்து தமிழ் சமூகத்தை சிங்கத்துள் சீரழிப்பது (அசிமிலேஷன்) மிகவும் இலகு, எதிர்ப்பு எதுவும் இருக்காது.   

Edited by Kadancha
correction.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே அண்டா,குண்டா  கழுவி பிழைப்பு நடத்திட்டு  அங்குபோய் அண்ணாமலை ரஜனி ரேஞ்சில கூலிங்கிளாஸ் மாட்டி விலை உயர்ந்த கார், பைக் என்று வித்தை காட்டுபவர்களும்,  வெளிநாட்டிலிருந்து வரும் பணத்தில்,இங்கிருக்கும் உழைப்பின் கஷ்டம் புரியாமல் ஊதாரிதனமா செலவுபண்ணி தற்பெருமை காண்பிப்பவர்களுமே வெளிநாட்டு மோகத்தை அங்கிருப்பவர்களுக்கு தூண்டுகின்றனர்!

படிக்காட்டில் என்ன, வெளிநாடுபோய் சம்பாதிக்கலாம் என்ற எண்ணம் இனி நிறைவேறாது!

நாட்டு பிரச்சனை முடிந்தவுடன்  இனிமே வெளிநாடுகளுக்கு அரைகோடிக்குமேல் செலவழித்து வருவது மிகவும் ஆபத்தானது, அகதியாகவோ, இல்லை தாயகத்தில் நமக்கு பிரச்சனை என்பதோ ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள்!

ஆக குறைந்தது ஒரு வருஷத்திற்குள் திருப்பி அனுப்பிவிடுவார்கள், மிகபெரும் கடனாளியாவது மட்டுமல்லாமல், ஊர் திரும்பிபோய் அடுத்ததா என்ன செய்வதென்றே தெரியாமல் எதிர்காலத்தை இழக்க நேரிடும்!

இது ஒன்றும் அவர்களுக்கு வெளிநாட்டு ஆசை இருக்ககூடாது என்பதாகவோ, அல்லது இங்கு வரகூடாது என்பதற்காகவோ சொல்லப்பட்டதல்ல, யதார்த்ததை சொன்னேன்.

படித்து கல்வி தகமையுடன் வெளிநாடுகளுக்கு வரபாருங்கள் அதுவே இனி சாத்தியபடகூடியதும், தாயக புலங்களில் தகுதியானவர்களாய் வாழ்வதற்கும் உதவும்!

உங்கு வந்து கலர்படம் காட்டுபவர்கள் பல தசாப்தங்களுக்கு முன்னர் வெளிநாடு வந்தவர்கள் அதனால பணமும், வதிவிட அனுமதியும் அவர்களுக்கு சாத்தியமாச்சு,  அவர்களைபோல் நீங்களும் ஆகலாம் என்பது இனிமேல் 99% நடைமுறை சாத்தியமில்லை!

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, valavan said:

45 minutes ago, Kadancha said:

இது சிங்களத்தின் மிகவும் உடல், உள, மதி வளமுள்ள இளம் தமிழரின் சனத்தொகையை குறைப்பதற்காண  திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலின் பிரதி பலிப்பே ஆகும்.

புகளிடத் தமிழரில் பிழைகள் இல்லாமல் இல்லை. ஆயினும், இந்த வெளி நாட்டு மோக பிரதிபலிப்பானது, ஓர் நிறுவனப்மயப் படுத்தப்பட்ட திட்டம் இல்லாமல்,  இவ்வளவு பூதாகரமானதாகவும், வேகமாகமும் இருக்க முடியாது.    

Classic strategy for depopulating able-bodied, minded and brained young persons.

புலத்தின்  உண்மை  நிலையை  சொன்னால்

யார் கேட்கிறார்கள்??

வைத்தியம்

பொறியியல் படித்தவர்கள் கூட வேலைக்கு  போகாமல்

புலம்  பெயர தரணம் பார்த்தபடி???

நான் இலங்கை சென்றபோது பார்த்த ஒரு விடயம் பல இளைஞர்கள், குடும்பஸ்தர்கள் வெளிநாடு வரும் விருப்பத்தில் இருக்கின்றார்கள். அவர்களுக்கு என்னால் இயன்ற அளவு வெளிநாட்டு சீவியத்தில் உள்ள சிக்கல்கள் பற்றி கூறினேன். அத்துடன் போர் நிறைவுற்றபின் அகதி அஸ்தஸ்து கோருவதில் உள்ள விடயங்கள், திருப்பி அனுப்பப்படுவது பற்றி எல்லாம் கூறினேன்.

பிரான்சுக்கு வரலாம், அவன் போனான் இவன் போனான், சுவிசுக்கும் போகலாம் என்று எல்லாம் சொன்னார்கள். ஒரு ஆட்டோகாரர் சொன்னார் தான் பத்துஇலட்சம் காசை கொடுத்து பிரான்சு செல்ல வெளிக்கிட்டு இடைவழியில் ரஷ்யாவில் பிடிபட்டு கடந்த வருடம் திரும்பி வந்ததாக. நான் நினைக்கின்றேன் ஏஜென்சி வேலை செய்பவர்கள் அங்கு உள்ளவர்களுக்கு யதார்த்த நிலமையை புரியவைக்காது வெளிநாடு போகலாம் நல்லாய் வாழலாம் என்று இப்படி ஆசை காட்டுகின்றார்களோ தெரியாது.

எனது ஒரு நண்பன் இலங்கையில் உள்ள தனது வீடு, காணிகளை விற்று (ஏனென்சியின் வேலை) லண்டனில் உள்ள பெண் ஒன்றை இரண்டாம் தாரமாக திருமணம் (அவனுக்கு ஏற்கனவே திருமணம் செய்து மனைவி, பிள்ளைகள் உண்டு) செய்து வரும் ஒரு திட்டத்தில் இருந்தான். நான் உரிய புத்திமதியை கூறி, வெளிநாட்டில் உள்ள நண்பர்கள் சிலர் சேர்ந்து அவனுக்கு காசு அனுப்பி அங்கு ஓர் சுய தொழிலை செய்வதற்கு வழி காட்டியுள்ளோம். நான் நினைக்கின்றேன் அங்கு உள்ள விபரம் தெரியாதவர்களிடம் பணம் புடுங்க ஏஜென்சிகாரர் செய்யும் விளையாட்டுக்கள் பற்றி விழிப்புணர்வு தேவை என்று.

இலங்கையில் இருந்து கனடாவுக்கு வர இப்போது ரேட் அறுபது இலட்சமாம். இப்போதும் ஒருவர் இருவர் வந்துகொண்டு இருப்பதாக கேள்விப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றேன். யாராவது ஒருவர் இருவர் அப்படி வந்தால் உடனே அங்கு இருப்பவர்கள் தாங்களும் போக ஆசை கொள்கின்றார்கள். 

ஆசைகள், விருப்பங்கள் எல்லாருக்கும் உண்டு. அதை தடுக்க எமக்கு உரிமை இல்லை. நாங்கள் அறிவுரை கூறலாம், அதற்குமேல் என்ன செய்வது..

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி அங்கிருக்கும் வெளிநாட்டு மோகத்தில் இருப்பவையை ஊருக்கு  ஒராளை பிடிச்சு நல்ல விண்டருக்குள் xmas பிசியில் இருக்கும் லோன்ரி(சலவையகம் ) ,ரெஸ்ரோறன் (சாப்பாட்டு கடை), பேக்கரி (வெதுப்பகம் ) போன்ற இடங்களில் கனக்க வேண்டாம் ஒரு கிழமை வேலை செய்ய அதுவும் பஸ்சில் போய் வர விடனும் .முன்றாம் நாள் தலை தெறிக்க ஓடி போய்  ஊர்  போவதுக்கு லைனில் நிப்பினம். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, பெருமாள் said:

இப்படி அங்கிருக்கும் வெளிநாட்டு மோகத்தில் இருப்பவையை ஊருக்கு  ஒராளை பிடிச்சு நல்ல விண்டருக்குள் xmas பிசியில் இருக்கும் லோன்ரி(சலவையகம் ) ,ரெஸ்ரோறன் (சாப்பாட்டு கடை), பேக்கரி (வெதுப்பகம் ) போன்ற இடங்களில் கனக்க வேண்டாம் ஒரு கிழமை வேலை செய்ய அதுவும் பஸ்சில் போய் வர விடனும் .முன்றாம் நாள் தலை தெறிக்க ஓடி போய்  ஊர்  போவதுக்கு லைனில் நிப்பினம். 

அவையளுக்கு உதெல்லாம் ரஸ்க் சாப்பிடுறமாதிரி.....

விட்டால் வெறும் மேலோடை நிண்டு சினோ வழிப்பாங்கள்....

பேஸ்புக்கில பாக்கேல்லை????? :grin:

12 hours ago, valavan said:

இங்கே அண்டா,குண்டா  கழுவி பிழைப்பு நடத்திட்டு  அங்குபோய் அண்ணாமலை ரஜனி ரேஞ்சில கூலிங்கிளாஸ் மாட்டி விலை உயர்ந்த கார், பைக் என்று வித்தை காட்டுபவர்களும்,  வெளிநாட்டிலிருந்து வரும் பணத்தில்,இங்கிருக்கும் உழைப்பின் கஷ்டம் புரியாமல் ஊதாரிதனமா செலவுபண்ணி தற்பெருமை காண்பிப்பவர்களுமே வெளிநாட்டு மோகத்தை அங்கிருப்பவர்களுக்கு தூண்டுகின்றனர்!

படிக்காட்டில் என்ன, வெளிநாடுபோய் சம்பாதிக்கலாம் என்ற எண்ணம் இனி நிறைவேறாது!

நாட்டு பிரச்சனை முடிந்தவுடன்  இனிமே வெளிநாடுகளுக்கு அரைகோடிக்குமேல் செலவழித்து வருவது மிகவும் ஆபத்தானது, அகதியாகவோ, இல்லை தாயகத்தில் நமக்கு பிரச்சனை என்பதோ ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள்!

ஆக குறைந்தது ஒரு வருஷத்திற்குள் திருப்பி அனுப்பிவிடுவார்கள், மிகபெரும் கடனாளியாவது மட்டுமல்லாமல், ஊர் திரும்பிபோய் அடுத்ததா என்ன செய்வதென்றே தெரியாமல் எதிர்காலத்தை இழக்க நேரிடும்!

இது ஒன்றும் அவர்களுக்கு வெளிநாட்டு ஆசை இருக்ககூடாது என்பதாகவோ, அல்லது இங்கு வரகூடாது என்பதற்காகவோ சொல்லப்பட்டதல்ல, யதார்த்ததை சொன்னேன்.

படித்து கல்வி தகமையுடன் வெளிநாடுகளுக்கு வரபாருங்கள் அதுவே இனி சாத்தியபடகூடியதும், தாயக புலங்களில் தகுதியானவர்களாய் வாழ்வதற்கும் உதவும்!

உங்கு வந்து கலர்படம் காட்டுபவர்கள் பல தசாப்தங்களுக்கு முன்னர் வெளிநாடு வந்தவர்கள் அதனால பணமும், வதிவிட அனுமதியும் அவர்களுக்கு சாத்தியமாச்சு,  அவர்களைபோல் நீங்களும் ஆகலாம் என்பது இனிமேல் 99% நடைமுறை சாத்தியமில்லை!

நீங்கள் இங்க POLITICAL SCIENCE முடிச்சுப்போட்டு SIMPLE ஆ இருக்கிறீங்களாக்கும்!

"இங்கே அண்டா,குண்டா  கழுவி பிழைப்பு நடத்திட்டு"

அண்ணா, தம்பி, ஐயா, அப்பு; இப்பிடியெழுதுவது தப்பு

Edited by Knowthyself

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, விசுகு said:

புலத்தின்  உண்மை  நிலையை  சொன்னால்

யார் கேட்கிறார்கள்??

வைத்தியம்

பொறியியல் படித்தவர்கள் கூட வேலைக்கு  போகாமல்

புலம்  பெயர தரணம் பார்த்தபடி???

உந்த பிரச்சனை எங்கன்ட "பரம்பரை அலகு பிரச்சனை". மலேயான் பென்சன் எடுக்கிற காலத்தில இருந்து வெளிநாடு என்று சனம் வெளிக்கிடுது ....எங்கன்ட காலத்திலயும் அதே ஆசை இருந்தது...ஒரு சின்ன உதாரணம் என்னுடன் ஆறம் வகுப்பு(1972) முதல் உயர்தரம் (1980)வரை படித்தவர்கள் 80 பேர் வரை இருக்கும் அதில் கிட்டதட்ட 60 பேர் வெளிநாட்டில் வாழ்கிறார்கள்......நான் போய் அங்கு வாழ்பவர்களுக்கு  உபதேசம் பண்ண தகுதியில்லை ...மற்றும்படி இங்கு வந்தவர்கள் எவரும் தெருவில் நின்று பிச்சை எடுக்கவில்லை என்பதும் நிதர்சனம் .....

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன் எழுதிய கருத்து உண்மையானது. 78 79 80 களில் கூட அக்கால இளைஞர்கள் கொழும்பு வந்து ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல காத்திருப்பதை சிறுவயதில் நான் க‌ண்டுள்ளேன். ஆக எப்பவும் வெளி நாடு சென்று உழைப்பதற்கென்றே ஓர் இளைஞர் கூட்டம் தயாராக எமது சமூகத்தில் இருக்கும். இதை தவிர்க்க முடியாது. மேலும் சிங்களவன் இதை ஊக்குவிக்கின்றான் என கூறுவது பிழை. சிங்களவனது விருப்ப நாடுகளான இத்தாலி / ஜப்பான் போன்ற நாடுகளுக்கு அவனும் இதேபோல் பல வழிகளில் செல்கின்றான். 

இங்கு இளஞர்களுக்கு சொல்லவருவது, தவறான பாதையை தேர்ந்து எடுக்காமல், நேரான வழியில் ஒரளவு தகமைகளுடன் போகவே உற்சாகப்ப்டுத்துகின்றோம்.

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டுக்குப் போனால்தான் வாழ்வில் முன்னேறலாம் என்று இளைஞர்கள் நினைக்கும் அளவிற்கு தாயகத்தில் முன்னேற வாய்ப்புக்கள் இல்லை என்றே இதனை நான் புரிந்துகொள்கின்றேன். அதேவேளை வெளிநாட்டுக்கு வந்தால் எல்லாப் பிரச்சினைகளும் உடனடியாக இலகுவாக தீர்ந்துபோய்விடும் என்று நினைத்து இங்கு வருபவர்களுக்கு இங்குள்ள கடினவாழ்வு ஆரம்பத்தில் அதிர்ச்சியைக் கொடுக்கலாம்.

ஆனால்  வாழ்வில் முன்னேறவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு புலம்பெயர் நாடுகளில் வாய்ப்புக்கள் அதிகம் என்பதைத்தான் இங்கு வேரூன்றி வளமாக வாழுபவர்கள் சாட்சியாக இருக்கின்றார்கள். எனினும் வெளிநாடு போகாமலேயே வாழ்வில் முன்னேற முடியும் என்று சலிக்காமல் உழைப்பவர்கள் பலர் தாயகத்தில் நல்ல நிலையில் உள்ளார்கள் என்பதையும் காண்கின்றோம்.

எனவே ஆசையுள்ளவர்கள் வரட்டும். ஆனால் புகலிட நாடுகளில் அகதியாக வந்து தஞ்சம் கோருவதை பல நாடுகள் ஏற்பதில்லை என்ற நிலையைப் புரிந்துகொள்ளவேண்டும். அதற்கான மாற்று வழிகளை யோசித்து வந்தால் நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

உந்த பிரச்சனை எங்கன்ட "பரம்பரை அலகு பிரச்சனை". மலேயான் பென்சன் எடுக்கிற காலத்தில இருந்து வெளிநாடு என்று சனம் வெளிக்கிடுது ....எங்கன்ட காலத்திலயும் அதே ஆசை இருந்தது...ஒரு சின்ன உதாரணம் என்னுடன் ஆறம் வகுப்பு(1972) முதல் உயர்தரம் (1980)வரை படித்தவர்கள் 80 பேர் வரை இருக்கும் அதில் கிட்டதட்ட 60 பேர் வெளிநாட்டில் வாழ்கிறார்கள்......நான் போய் அங்கு வாழ்பவர்களுக்கு  உபதேசம் பண்ண தகுதியில்லை ...மற்றும்படி இங்கு வந்தவர்கள் எவரும் தெருவில் நின்று பிச்சை எடுக்கவில்லை என்பதும் நிதர்சனம் .....

இரண்டுக்கும்  வேறுபாடு  உண்டல்லவா புத்தர்?

ஒரு காலத்தில் படித்தவர்கள் வேலை தேடிப்போனார்கள்

திரும்பினார்கள்

அதன் பின்னர் மேல்ப்படிப்புக்கு மேலேத்தேயம் போனார்கள்

திரும்பினார்கள்

அதன் பின்  படிக்காதவர்கள் (ஒரு அளவுக்கு மேல்)

மத்திய கிழக்கு நாடுகளுக்கு எடுபிடி வேலைகளுக்கு சென்றார்கள்

திரும்பினார்கள்

பின்னர் போர் காரணமாக புலம் பெயர்ந்தார்கள்

ஆங்காங்கே கால் ஊன்றினார்கள்

ஆனால் இன்று நாட்டைவிட்டே புலம் பெயர்வது

அதற்காக  தமது எதிர்காலத்தையே   (படிப்பு உட்பட) அனைத்தையுமே   பணயம் வைப்பது

இழக்க தயாராக இருப்பது தான் ஆபத்தாக  பார்க்கப்படுகிறது

புலத்தில் எதிர்காலம் சிறப்பாக  இருக்கும் என்பது அவர்களது உழைப்பில் தான் உள்ளது

அது தற்போது தாயகத்திலும் உள்ளது தானே??

எனவே இக்கரைக்கு அக்கரைப்பச்சை என்பதைத்தான் பார்க்கமுடிகிறது

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

புலத்தில் எதிர்காலம் சிறப்பாக  இருக்கும் என்பது அவர்களது உழைப்பில் தான் உள்ளது

அது தற்போது தாயகத்திலும் உள்ளது தானே??

எனவே இக்கரைக்கு அக்கரைப்பச்சை என்பதைத்தான் பார்க்கமுடிகிறது

புலத்தில்! அதாவது அமெரிக்க, ஐரோப்பிய, அவுத்திரேலிய கண்டங்களுக்கு புலம்பெயர்ந்து வந்தவர்கள், உழைத்தாலும் உழைக்காவிட்டாலும், எதிர்காலம் சிறப்பாக அல்லது சிறப்பற்று இருக்கும் என்பதற்கும் அப்பால், அங்கு அவர்களைச் சேரும் பணம், இலங்கையில் அவர்களைக் குபேரனாக்கி உயர்மட்டத்தில் கொண்டுவிடுகிறது என்பதை மறுக்க முடியாது. ஆகவே இன்று நாட்டைவிட்டே புலம் பெயர்பவர்களைத் தடுப்பது என்பது கடினமாகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:

அவையளுக்கு உதெல்லாம் ரஸ்க் சாப்பிடுறமாதிரி.....

விட்டால் வெறும் மேலோடை நிண்டு சினோ வழிப்பாங்கள்....

பேஸ்புக்கில பாக்கேல்லை????? :grin:

#ஊரான ஊர் #இழந்தோம்

சரி, வெளி நாட்டு மோகத்தை பற்றி கதைக்க முதல் வடக்கு மாகாணத்தில் என்னதொழில் வாய்ப்பு இருக்கு ? அரசியல்வாதிகளும் பணம் படைத்த புலம் பெயர் மக்களும் என்ன செயதனர் , இங்கு மாவீரர் தினம் கொண்டாடின காசை கொண்டு போய் ஊரில் பொருளாதார அபிவிருத்தியில் செலவிடலாமே? இலங்கையிலேயே வறுமை கூடிய மாகாணம் வடக்கு மாகாணம் என்று ஒரு அறிக்கை கூறுகிறது அப்படியாயின் மக்கள் புலம் பெயரத்தான் செய்வார்கள்.

கல்யாண மண்டபம் கட்டி விடும் பன்னாடைகளும் கொஞம் கணக்கில் எடுத்து உருபடியாக எதையாவது செய்யவும்.

இங்க இந்தியாவில் இருந்து நல்லெண்ணை வாங்கி அதை ஆணைகோட்டை நல்லெண்ணை என்று விற்கும் வெங்காயங்கள் இருக்கும் வரை எம்மினம் உருப்பட போவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
On 23/12/2017 at 10:16 AM, கிருபன் said:

வெளிநாட்டுக்குப் போனால்தான் வாழ்வில் முன்னேறலாம் என்று இளைஞர்கள் நினைக்கும் அளவிற்கு தாயகத்தில் முன்னேற வாய்ப்புக்கள் இல்லை என்றே இதனை நான் புரிந்துகொள்கின்றேன். அதேவேளை வெளிநாட்டுக்கு வந்தால் எல்லாப் பிரச்சினைகளும் உடனடியாக இலகுவாக தீர்ந்துபோய்விடும் என்று நினைத்து இங்கு வருபவர்களுக்கு இங்குள்ள கடினவாழ்வு ஆரம்பத்தில் அதிர்ச்சியைக் கொடுக்கலாம்.

ஆனால்  வாழ்வில் முன்னேறவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு புலம்பெயர் நாடுகளில் வாய்ப்புக்கள் அதிகம் என்பதைத்தான் இங்கு வேரூன்றி வளமாக வாழுபவர்கள் சாட்சியாக இருக்கின்றார்கள். எனினும் வெளிநாடு போகாமலேயே வாழ்வில் முன்னேற முடியும் என்று சலிக்காமல் உழைப்பவர்கள் பலர் தாயகத்தில் நல்ல நிலையில் உள்ளார்கள் என்பதையும் காண்கின்றோம்.

எனவே ஆசையுள்ளவர்கள் வரட்டும். ஆனால் புகலிட நாடுகளில் அகதியாக வந்து தஞ்சம் கோருவதை பல நாடுகள் ஏற்பதில்லை என்ற நிலையைப் புரிந்துகொள்ளவேண்டும். அதற்கான மாற்று வழிகளை யோசித்து வந்தால் நல்லது.

அங்கிருந்து வெளிநாடு வர விரும்புவர்களில் அநேகர் வெளியில் உளைத்து ஊரில் வசதியாக வாழலாம் என்றே நினைக்கிறார்கள்.வெளியில் உளைத்து அங்கே வாழவதில் உள்ள நிலமை பலருக்கு புரிவது இல்லை.மற்றது ஊரில் உள்ளவர்கள் உரிலேயே வாழலாம் என்று ஊக்கப்படுத்துவது ஓரளவில் புலத்தாரின் நடவடிக்கைகள் மற்றும் கருத்துக்களிலும் தங்கி உள்ளது.

1 hour ago, Dash said:

வடக்கு மாகாணத்தில் என்னதொழில் வாய்ப்பு இருக்கு ?

வளமான மண் உண்டு! உழவுத் தொழிலே உயர்ந்த தொழில் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.
இம்முறை வன்னி மாவட்டத்தில் பலர் விவசாயத்தில் கூடிய நம்பிக்கையுடன் இறங்கியிருப்பது ஆறுதலான செயல்.

பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், தேங்காய், நெல், முந்திரி போன்றவை வருமானம் தரும் பயிர்களாக உள்ளன. 

28 minutes ago, போல் said:

ஆனால் இது ஒரு குறிபிட்ட ஒரு துறை தான், அதை விட முக்கியம் அதில் என்ன வருமானம் வரும் என்பது.

அதை விட. எதுவும் இல்லை ஒரு சில வங்கி மற்றும் நிதி நிறுவன. துறை  ஆகியவற்றில்  தவிர வேறு எதுவும் இல்லை.அதுவும் நன்றக படித்தவத்களுக்கு மட்டும் தான்.

ஆனால் தென் இலங்கையில் மிக குறைந்த தராதரத்துடன் ஒரு தொழிலை பெற முடியும் ஏன் என்றால் அங்கு வேலை வாய்ப்புக்கள் அதிகம்.

10 minutes ago, Dash said:

அத்துடன் மாபெரும் வளமாக கடல்வளம் உள்ளது.

வடமாகாண மீனவர்கள் தமது கடலுணவுகளை மேலை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் சில சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். காரணம், சில தரச் சான்றிதழ்களை அவர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும். இது சம்பந்தமாக அவர்கள் யாழ் பல்கலைக்கழக விவசாய பீடத்தையும், விலங்கியல் துறையையும் அணுகியிருந்தாலும் அவர்களிடமிருந்து சாதகமான பதில் கிடைக்கவில்லை என சொல்லுகின்றனர்.

சில உபகரணங்கள் இருந்தால் யாழ் பல்கலைக்கழகம் தேவையான சான்றிதழ்களை வழங்கமுடியும் என்று மீனவர்கள் கூறுகின்றனர். இந்த விடயத்தில் புலம்பெயர் அறிவியல் அறிஞர்கள் உதவலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
On ‎22‎.‎12‎.‎2017 at 6:09 PM, Kadancha said:

இது சிங்களத்தின் மிகவும் உடல், உள, மதி வளமுள்ள இளம் தமிழரின் சனத்தொகையை குறைப்பதற்காண  திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலின் பிரதி பலிப்பே ஆகும்.

புகளிடத் தமிழரில் பிழைகள் இல்லாமல் இல்லை. ஆயினும், இந்த வெளி நாட்டு மோக பிரதிபலிப்பானது, ஓர் நிறுவனப்மயப் படுத்தப்பட்ட திட்டம் இல்லாமல்,  இவ்வளவு பூதாகரமானதாகவும், வேகமாகமும் இருக்க முடியாது.    

Classic strategy for depopulating able-bodied, minded and brained young persons.

இது மறுக்கமுடியாத உண்மை.

இலங்கையில் தமிழரின் வாழ்க்கை வண்டியின் கடிவாளம் சிங்கள அரசிடம் உள்ளது. அது செலுத்தும் பாதையில்தான் தமிழரால் ஓடமுடியும்.

அந்தப் பாதையைச் சீர்செய்து கொடுக்க இருக்கவே இருக்கிறார்கள் பல தமிழரென்று தங்களை வெளிப்படுத்தும் தலைவர்களும் மக்களும். :shocked:

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்களை மட்டும் குற்றம் சொல்ல இயலாது பாருங்க பெண்கள் எந்த வகையில் குறைஞ்ச ஆட்களா இப்ப ஆண்களை விட பெண்களே அதிகம் அழகாக காட்டி ஐரோப்பா போக ரெடியாகிறார்கள் கன பிள்ளைகளை கல்யாணம் என்ற பெயரில் பார்ஷம் ஆகுதுகள் இதனால் நமக்கும் பாதிப்பாக இருக்கு  அலேக்காக துக்கிட்டு போறாங்கள் வெளிநாட்டு பொடியள் 

22 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அழகாக காட்டி ஐரோப்பா போக ரெடியாகிறார்கள்

இப்படியும் ஒரு வழி இருக்கோ?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Rajesh said:

இப்படியும் ஒரு வழி இருக்கோ?

ஊர் வந்து பாருங்க அந்த கால மஞ்சள் பூசிய எம் அழகிகள் இல்லை ஏதோ ஓர் கிறிமை தடவி அவிஞ்சு போன கலரு போல ஓர் உருவம் எல்லாம் வெள்ளை தோல் மோகம் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.