Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் பிறந்த நாள் தொட்டு பெற்றோரை, கணவனை, பிள்ளைகளை நம்பித்தான்  அல்லது சார்ந்துதான் வாழவேண்டுமா??? என்றால் இல்லை என்னும் பதில் பல ஆண்களிடம் இருந்து வரலாம். ஆனால் அவள் பிறப்புத் தொடக்கம் இறப்புவரை ஆண்களால் கட்டுப்படுத்தப்பட்டு தன் சுய விருப்பு வெறுப்புக்களை மென்று விழுங்கியபடி மற்றவருக்காக வாழவேண்டிய நிலைதான் எம் பெண்களுக்காக விதிக்கப்பட்டிருக்கிறது. தாயகத்தை விடுவோம். புலம் பெயர்ந்து  மற்றைய சமூகத்துடன் வாழும் எம்சந்ததிப் பெண்கள் அந்நாடுகளில் பல நிலைகளில் இருந்தாலும் இன்னும் ஆணுக்கு ஆணின் விருப்பு வெறுப்புகளுக்கு ஈடுகொடுக்க முடியாது வாழ்ந்து வருவது உங்களுக்குத் தெரியாததல்ல.

ஆண்கள் சிறுவர்களாக இருந்தபோதும் சரி வாலிபர்களானபின்னும்சரி மணமுடித்த பின்னும்கூட தம் நண்பர்களுடன் சுதந்திரமாக திரிவதும், விடுமுறைக்குச் செல்வதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட எம் சமூகத்தில் பெண்கள் தனியாக இன்னொரு பெண்ணுடன் சேர்ந்து விடுமுறைக்குச் செல்வது இலகுவாக ஏற்றுக்கொள்ளப் படுவதில்லை. இள வயதுப் பெண்கள் குழந்தைகளைத் தனியே விட்டுவிட்டுச் செல்வது முடியாதது. பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களானபின்னும் பெண்ணுக்கு கணவனுடன் மட்டுமே விடுமுறையைக் கழிக்க வேண்டிய கட்டாயம்.

ஏன் இரு பெண்களோ அல்லது அதற்கு மேற்பட்ட பெண்களோ சுதந்திரமாக ஓரிடத்துக்குச் சென்று கணவனோ பிள்ளைகளோ இன்றி ஒரு மாதம் இளைப்பாறி, விருப்பமானதை துணிவாகச் சுதந்திரமாகக் கதைத்துச் சிரித்துவிட்டு வருவதை எத்தனை கணவர்கள் மனதார அனுமதிக்கிறார்கள்???????

இன்னும் நான் எழுதிக்கொண்டே போகலாம். ஆனால் உங்கள் மனங்கள் என்ன சொல்கின்றன என்று பார்ப்போம் உறவுகளே. உங்கள் கருத்துக்களை மனம் திறந்து எழுதுங்கள்.

  • Replies 85
  • Views 13.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இன்னும் நான் எழுதிக்கொண்டே போகலாம். ஆனால் உங்கள் மனங்கள் என்ன சொல்கின்றன என்று பார்ப்போம் உறவுகளே. உங்கள் கருத்துக்களை மனம் திறந்து எழுதுங்கள்.

நிஞாயமான கேள்வி தான்.ஆனால் இன்னமும் மேலைத் தேச பெண்களுக்கே முழு சுதந்திரமும் விடைக்கவில்லை.அவர்களைப் பார்த்து தானே நமது சந்ததி வளர்ந்து கொண்டிருக்கிறது.உங்களுக்கில்லாவிட்டாலும் உங்கள் பிள்ளைகள் நீங்கள் நினைத்த மாதிரி வாழ்வார்கள்.

இப்போதே திருமணத்திற்கு முன்னர் பச்சுலர் பாட்டி என்று மணமகனின் நண்பர்கள் தனியாகவும் மணமகளின் நண்பிகள் தனியாகவும் வெவ்வேறு இடங்களுக்கு போய் 5 6 நாள் என்று நின்று குத்தாட்டம் போடுகிறார்கள்.

இதுக்காகத் தான் வேலை தவிர்ந்த வேறெங்கும் தனியே போவதில்லை.போனால் மனைவியுடன் தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சும்மா ஏதோ பொம்புளையள் கஸ்டப்படுற மாதிரி கதையும் கட்டுரையும் பீலாக்களும்.....
நூற்றுக்கு தொண்ணூறு வீதமான பொம்புளையள் தாங்கள் நினைச்சதை செய்துகொண்டுதான் இருக்கினம்.....நேரத்துக்கு ஒரு சாறி...சட்டையள்....செருப்பு...நகை நட்டுகள் எண்டு சொல்லி வேலையில்லை.....ஆனால் நாங்கள் அண்டைக்கு வாங்கின சாரமும் கோட்டுச்சூட்டும்.....எப்பவும் எங்கையும்......

இந்த வேப்பங்காய் பள்ளிக்கூடத்து குத்தியாட்ட வீடியோவை  பாக்க அவையின்ர சுதந்திரம் வீட்டிலை எப்பிடியிருக்குமெண்டு தெரிய வேணுமெல்லோ...

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஏன் இரு பெண்களோ அல்லது அதற்கு மேற்பட்ட பெண்களோ சுதந்திரமாக ஓரிடத்துக்குச் சென்று கணவனோ பிள்ளைகளோ இன்றி ஒரு மாதம் இளைப்பாறி, விருப்பமானதை துணிவாகச் சுதந்திரமாகக் கதைத்துச் சிரித்துவிட்டு வருவதை எத்தனை கணவர்கள் மனதார அனுமதிக்கிறார்கள்???????

அண்மையில் யாழ் பல்கலைக்கழகத்து மருத்துவ துறையில் கற்று வைத்தியராகி பல நாடுகளிலும் வாழும் பலர் ஒன்று கூடி இலங்கைக்கு போனார்கள். இவர்களில் பெண்களும் அடங்குவர். ஆண்கள் இவர்களின் கணவர்கள் அல்ல. இப்படி பல ஒன்று கூடல்களும் விடுமுறைகளும் இடம் பெறுகின்றன. இது வித்தியாசமான சமுக நிலையுடன், தொழில் துறையுடன் மற்றும் கல்வி நிலையுடன் சம்பந்தபட்டதாக தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

நிறையக் காலம் பின் தங்கி விட்டீர்கள் என்று நினைக்கிறேன். இந்தப் பக்கம் வேறை மாதிரி.  ஏனுங்க வீட்டில் பிரச்சினையா?

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவேளை மேலை நாடுகளில் தனியாக போகலாம், ஓரளவிற்கு சமூக பாதுகாப்பு இருக்கும்..

ஆனால் ஆசிய நாடுகளில் 3 வயது பெண் குழந்தைகள் முதல் எழுபது வயது பாட்டிகளுக்குமே பாதுகாப்பு இல்லை.. இதில் தனியாக சுற்றினால்.. என்னாவது..?

சில சுய விருப்பு வெறுப்புகளுக்கு, திருமணமான பெண்களுக்கு முழுசுதந்திரம் இல்லை என்பது உண்மைதான்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்கள் கூட்டமாக வெளியே சென்றால் சந்தோஷமாக பார்க்கப்படுகிறது...பெண்கள் கூட்டமாக வெளியே சென்றால் சந்தேகமாக பார்க்கப்படுகிறது...

...இதை கல்யாணத்தின்போது தலையை குனிந்தபடி தாலியை நீயே கட்டு என்று கழுத்தை நீட்டியபோது,  நீ எதுக்கு தாலிகட்டி என்னை உன் பொறுப்பில் எடுக்கவேண்டும்?, நான்தான் தாலி கட்டுவேன் என்று புரட்சிகரமாக அப்போதே யோசித்திருக்கவேண்டும் ...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ஈழப்பிரியன் said:

இப்போதே திருமணத்திற்கு முன்னர் பச்சுலர் பாட்டி என்று மணமகனின் நண்பர்கள் தனியாகவும் மணமகளின் நண்பிகள் தனியாகவும் வெவ்வேறு இடங்களுக்கு போய் 5 6 நாள் என்று நின்று குத்தாட்டம் போடுகிறார்கள்.

நான் எமக்கு அடுத்த சந்நிதி பற்றிக் கதைக்கவில்லை ஈழப்பிரியன்.

11 hours ago, குமாரசாமி said:

சும்மா ஏதோ பொம்புளையள் கஸ்டப்படுற மாதிரி கதையும் கட்டுரையும் பீலாக்களும்.....
நூற்றுக்கு தொண்ணூறு வீதமான பொம்புளையள் தாங்கள் நினைச்சதை செய்துகொண்டுதான் இருக்கினம்.....நேரத்துக்கு ஒரு சாறி...சட்டையள்....செருப்பு...நகை நட்டுகள் எண்டு சொல்லி வேலையில்லை.....ஆனால் நாங்கள் அண்டைக்கு வாங்கின சாரமும் கோட்டுச்சூட்டும்.....எப்பவும் எங்கையும்......

இந்த வேப்பங்காய் பள்ளிக்கூடத்து குத்தியாட்ட வீடியோவை  பாக்க அவையின்ர சுதந்திரம் வீட்டிலை எப்பிடியிருக்குமெண்டு தெரிய வேணுமெல்லோ...

நான் கேட்ட கேள்விக்கு நீங்கள் ஒழுங்காகப் பதில் சொல்லவில்லை. சீரை சட்டை உடுப்பதை விடுங்கள். உங்கள் மனைவி தன் நண்பிகளுடன் ஒருவாரம் விடுமுறையில் செல்ல விடுவீர்களா????

7 hours ago, Jude said:

அண்மையில் யாழ் பல்கலைக்கழகத்து மருத்துவ துறையில் கற்று வைத்தியராகி பல நாடுகளிலும் வாழும் பலர் ஒன்று கூடி இலங்கைக்கு போனார்கள். இவர்களில் பெண்களும் அடங்குவர். ஆண்கள் இவர்களின் கணவர்கள் அல்ல. இப்படி பல ஒன்று கூடல்களும் விடுமுறைகளும் இடம் பெறுகின்றன. இது வித்தியாசமான சமுக நிலையுடன், தொழில் துறையுடன் மற்றும் கல்வி நிலையுடன் சம்பந்தபட்டதாக தெரிகிறது.

இப்படித் துறைசார் காரணங்களுக்காகப் பல கணவர் அனுமதிப்பதுதான். ஆனால் தனியாக விடுமுறை என்றால்  சிக்கல்தான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kavi arunasalam said:

நிறையக் காலம் பின் தங்கி விட்டீர்கள் என்று நினைக்கிறேன். இந்தப் பக்கம் வேறை மாதிரி.  ஏனுங்க வீட்டில் பிரச்சினையா?

நான் ஒன்றும் பின்தங்கவில்லை. ஒருவீதம் நடப்பதைப்பற்றிப் பேசவும் இல்லை. தாயகத்துக்கு அல்லது இந்தியாவுக்கு உறவினரைப் பார்க்க தனியாகச் செல்வதையும்கூடக் குறிப்பிடவில்லை. 

ஏனுங்க உங்கவீட்டில் நடக்கிற பிரச்சனையைத் தான் நீங்கள் பொதுவெளியில் எழுதுவீர்களா????

  • கருத்துக்கள உறவுகள்

தாராளமாக பெண்கள் தனியாக போகலாம் வரலாம்.... அவர்கள் பத்திரமாக திரும்பி வருகின்றார்கள் அல்லது வருவதை சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளுமே தீர்மானிக்கின்றன....!ஆபத்துகள் ஆண்களால் மட்டும்தான் வரவேண்டும் என்பதில்லை. கூட பயணிக்கும் பெண்களாலும் கூட வரலாம். விவாதிக்க வேண்டிய விடயத்தை எடுத்திருக்கின்றிர்கள் சகோதரி.....!   tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

என்னக்கா அங்காலை வாகனம் பழுகினால் ஆண்கள் தான் தள்ளவேண்டும் என்று சொல்லுகிறீர்கள் பிறகு இங்காலை சம உரிமை பற்றி கதைக்கிறியள். ஏன் பழுதாகின வாகனத்தை நீங்கள் இறங்கி தள்ளியிருக்கலாம் தானே?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, வாதவூரான் said:

என்னக்கா அங்காலை வாகனம் பழுகினால் ஆண்கள் தான் தள்ளவேண்டும் என்று சொல்லுகிறீர்கள் பிறகு இங்காலை சம உரிமை பற்றி கதைக்கிறியள். ஏன் பழுதாகின வாகனத்தை நீங்கள் இறங்கி தள்ளியிருக்கலாம் தானே?

நானும் சேர்ந்துதான் தள்ளினது கடைசியில கதிர்காமத்தில

4 hours ago, suvy said:

தாராளமாக பெண்கள் தனியாக போகலாம் வரலாம்.... அவர்கள் பத்திரமாக திரும்பி வருகின்றார்கள் அல்லது வருவதை சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளுமே தீர்மானிக்கின்றன....!ஆபத்துகள் ஆண்களால் மட்டும்தான் வரவேண்டும் என்பதில்லை. கூட பயணிக்கும் பெண்களாலும் கூட வரலாம். விவாதிக்க வேண்டிய விடயத்தை எடுத்திருக்கின்றிர்கள் சகோதரி.....!   tw_blush:

ஆனால் விவாத்துக்குத்தான் ஆரும் வருகினம் இல்லையே

9 hours ago, ராசவன்னியன் said:

ஒருவேளை மேலை நாடுகளில் தனியாக போகலாம், ஓரளவிற்கு சமூக பாதுகாப்பு இருக்கும்..

ஆனால் ஆசிய நாடுகளில் 3 வயது பெண் குழந்தைகள் முதல் எழுபது வயது பாட்டிகளுக்குமே பாதுகாப்பு இல்லை.. இதில் தனியாக சுற்றினால்.. என்னாவது..?

சில சுய விருப்பு வெறுப்புகளுக்கு, திருமணமான பெண்களுக்கு முழுசுதந்திரம் இல்லை என்பது உண்மைதான்.

நீங்களாவது ஒத்துக்கொண்டீர்களே அண்ணா முழு சுதந்நிரம் இல்லை என்று.

வணக்கம் சுமே அக்கா.
போன வருடம் நானும் எனது நண்பிகளும் விடுமுறை போனோம். ஒவ்வொரு வருடமும் நண்பிகள் அவர்கள் கணவர்கள் பிள்ளைகள் என்று ஒன்றாக விடுமுறை போவோம். போன வருடம் ஒரு மாறுதலுக்காக 6 நண்பிகள் தனியாக போனோம். ( சில நண்பிகளுக்கு 4 வயதில் குழந்தை இருந்தது)  அனைவரது கணவர்களும் தமது குழந்தைகளை பார்த்துக்கொண்டு மனைவிமாரை அனுப்பிவைத்தார்கள்.
இரண்டு நாட்கள் தான் நின்றோம் ... நிறைய சிரித்தோம் நிறைய கதைத்தோம் ஆனால் என்ன ஒவ்வொருவரும் தனியாக போய்விட்டோமே தவிர உள்ளுக்குள் பிள்ளைகளை விட்டுவிட்டு போனதை நினைத்து கவலைப்பட்டோம்.........ஒழுங்காக சாப்பிட கூட முடியல. எமக்கு கணவர்கள் சுதந்திரம் தந்தாலும் எம்முள் இருகும் பாசப்பிணைப்பு எம்மை நிம்மதியாக இருக்கவிடல. இது தான் யதார்த்தம்.
நாம் என்ன தான் வெள்ளைகள் செய்கிறார்கள் என்று முயற்ச்சி செய்தாலும் நாம் நம் கலாச்சாரம் அன்பு பாசம் என்பது எம்மோடு கூடபிறந்தது. எம்மால் அவர்களை போல் குடும்பத்தை விட்டு விட்டு தனியா மகிழ்வாக இருக்க முடியல.
இனி போவதென்றால் பிள்ளைகள் 16 தாண்டியபின்பு தான் போவது என்று முடிவெடுத்து திரும்பிவந்தோம் :)

ஆனால் எனக்கு தெரிந்து பல வீடுகளில் பெண்கள் விரும்பினாலும் ஆண்கள் அனுமதிப்பதில்லை என்பது உண்மை. அதற்கு முதல் காரணம் எமது நாட்டு வளர்ப்பு முறை. சிறு வயதில் இருந்தே ஆண்களுக்கு கொடுக்கும் சுதந்திரம் பெண்களுக்கு கொடுத்து வளர்ப்பதில்லை அதைப்பார்த்து வளரும் ஆண்கள் அதையே தமது திருமணத்தின் பின்பும் பின்பற்றுகின்றார்கள். ( நான் எல்லா ஆண்களையும் குறிப்பிடவில்லை :) ).

  • கருத்துக்கள உறவுகள்

கேள்வி என்னமோ நியாமானது என்றாலும் ......
பதில் ஒரு வரியில் எழுத கூடியதில்லை.

எனக்கு பெண் சகோதரர்கள் இருக்கிறார்கள் 
ஒரு வீட்டிலேயே வளர்ந்தோம் ஒரே அப்பா ஒரே அம்மா 
நான் 15 வயதிலேயே வீட்டை  விட்டு வெளிக்கிட்டு விட்டேன் 
பின்பு வந்து வந்து போவது ..... போய் போய் வாறது 
என்ற மாதிரி இருக்கும்போது கூட என்னை அம்மாவோ அப்பாவோ 
எதுவும் கேட்பதில்லை.
பின்பு இந்திய இராணுவம் போர் தொடங்கியபின்பு ... நான் எங்காவது 
சென்றுவிட்டு திரும்பாது இருந்தால் ... அம்மா கொஞ்சம் பரபரப்பாக 
இருப்பதை அவதானிக்க தொடங்கினேன் ... அதன் பின்பு எங்கு போனாலும் 
இங்கு போகிறேன் எப்போது வருவேன் என்று சொல்லிவிட்டு போவதுண்டு.

இதே சுதந்திரம் எனது சகோதரர்களுக்கு இருந்ததா என்றால் இல்லை 
பள்ளி முடிந்து..... வந்தால் டியூசன்..... முடிந்து வந்தால் வீடு. இப்படித்தான் 
இருந்தார்கள். 

இரு வேறு பாரிய வேறுபாடு இருந்தது என்னவோ உண்மைதான்.
ஆனால் யாரை கை நீட்டுவது என்பதில்தான் பிரச்சனை.

பிள்ளைகளை வீட்டுக்குள் வைத்து பூட்டும் எண்ணம் பெற்றோரிடம் இருக்கவில்லை 
வெளியில் திரிய வேண்டும் எனும் எண்ணம் பெண் பிள்ளைகளிடமும் இருக்கவில்லை 
அப்படி திரிந்தால் ........... அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் சமூகத்திடம் இருக்கவில்லை.
அதையும் மீறி திரிய போய் .... போனவராக திரும்பிய பெண்கள் யாரையும் எனக்கு தெரியாது.
ஒன்று காணவில்லை என்று இன்றும் தேடிக்கொண்டு இருக்கிறார்கள் .... அல்லது அப்பாவை 
தெரியாத பிள்ளைகளுடன் அல்லல் படுகிறார்கள். 

யார்? ஏன் ? எங்கு ? எப்போது ?
என்பதுதுக்கான விடையை தேடுதல்தான் புரிந்துணர்வுக்கும் பக்குவத்துக்கும் 
உள்பட்ட்து. ஆண்கள் திரிகிறார்கள் என்றால்.........  
என்றுவிட்டு திரிய வெளிக்கிட்ட மேலை நாடுகளில்தான் இன்று மீ டூ ( )
அமைப்பு முழு வீச்சாக எழும்புகிறது? 

ஒரு பெண் தாய் ஆகும்போது அவளுக்கு ஒரு ஆன் பிள்ளை பிறக்கும்போது 
ஒரு வேளை ..... தனது முன்னை நாள் ஆச பாசங்கள் அடக்கு முறைகளை சொல்லி வளர்த்தால் 
பின்னாளில் ஆண்கள் பக்குவ படுவார்களோ தெரியாது ....... 
நடைமுறையில் .... ஆண் பிள்ளைக்காகவே காத்தருந்த மாதிரி நேர் எதிராகவே பெண்கள் 
செயல்படுகிறார்கள்   ..... சீதன கொடுமையில் ... இன்னொரு பெண் மறுபக்கத்தில் இருக்கிறாள் 
என்று எண்ணும் தாய்மாரை காண்பது அரிதிலும் அரிது. 

பலவிதமான தீர்வுகளை பெண்களும் தேடி பார்த்து இறுதியில் 
பெண்ணை பெண்ணே திருமணம் செய்யும் நிலையில் கூட அவர்கள் 
சுதந்திரமாக இருக்கிறார்களா? என்றால் இல்லை என்றுதான் கூற வேண்டும்.

ஆனால் எமக்கு தெரிந்து ஒவ்வையார் பல ஆயிரம் ஆண்டு முன்பு கோவில் கோவிலாக 
தன்பாட்டுக்கு திரிந்து இருக்கிறார் ....... ஆண்களும் பெருமைப்படுகிறார்கள் 
ஆட்டகாறி என்று ஒவ்வையாரை திட்டுபவர்களை நான் காணவில்லை.

இதைத்தான் நான் முன்பே குறிப்பிடடேன் ...
யார்? ஏன் ? எங்கு? எப்போது? என்று 
காரணம் நான்கும் ஒன்றோடு ஒன்று தொடர்பு உடையது.

விமான பணி பெண்கள் நாடு நாடாக திரிகிறார்கள் ....
இஸ்லாம் ... தொட்டு  பிராமண பெண்கள் வரை நாம் 
நாளும் விமானத்தில் சந்திக்கிறோம்தானே?  

  • கருத்துக்கள உறவுகள்

இது மீ டு அமைப்பின் இணையதளம் 
இவர்களுடன் நீங்கள் தொடர்பை பேணினால் 
சில விடைகள் புரிந்து உணர்வுகள் வரலாம் 

https://metoomvmt.org/

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரம் வரையான விடீயோக்கள் இருக்கும்போது 
இதை ஏன் இணைத்தேன் என்றால் .........
இவர்கள் ஆண்களுக்கு நிகராக யுத்த களத்தில் போராடுபவர்கள் 
மனோ வலிமை ... உடல் வலிமை என்று சாதாரண பெண்களை விட கொஞ்சம் 
உயர்வானவர்கள் ... இவர்கள் நிலைமையே இப்படித்தான் இருக்கிறது. 

கணவர் உங்கள் மேல் உள்ள காதலால் கூட 
உங்களுக்கு ஏதும் ஆகிவிட கூடாது என்பதாலும் தடுக்கலாம் 
ஆணாதிக்க எண்ணத்தில் இருந்தும் தடுக்கலாம்.
ஆணாதிக்க எண்ணத்திலும் கொஞ்சம் பெண் ஆதிக்கம் இருக்கிறது. 
 
  • கருத்துக்கள உறவுகள்

முள் மீது சேலை வீழ்ந்தாலும் சேலைக்குத்தான் சேதம் சேலை மீது முள் விழுந்தாலும் சேலைக்குத்தான் சேதம் எங்கும் செல்லலாம் ஆனால் ஒரு கரப்பான் பூச்சிக்கு இருக்கும் பயம் வரும் பிரச்சினைகளையும் வென்று திரும்புவார்கள் என்றால் அவர்களுக்கு ஒரு சல்யூட் அடிக்கலாம் ஆனால் அப்படி நடப்பதில்லை 

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே பதில்..

அக்காவின் மகள் GCSE தாண்டினாப் பிறகு, நானோ இந்த மாதிரி கேள்வி கேட்டனான் எண்டப்போறியள்.

உங்கண்ட வளர்க்கப்பட்ட கதை வேற, இப்பத்தையான் பிள்ளவளர்புக்கதை வேற...

கண தாய்தகப்பன்மார் மெல்லவும் முடியாம, விழுங்கவும் முடியாம திரியினம்.

உங்க ஒரு தாய் மனிசி, மகளுக்கு சமரில கல்யாணம். கொலிடே புக் பண்ணிப் போடாதீங்க எண்டு சொல்லிக் கொண்டு இருந்தவ.

மகள், தானே அரேஞ்ச் பண்ணிப் போட்டு, உங்கண்ட இரண்டு குடும்பம், அப்பாட இரண்டு குடும்பம் மட்டும் தான் வரலாம் எண்டு சொல்லிட்டா.

பின்ன, பண்ணிப் பாருங்கோவன்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நீங்களாவது ஒத்துக்கொண்டீர்களே அண்ணா முழு சுதந்நிரம் இல்லை என்று.

நீங்கள் விரும்பும் முழு சுதந்திரம் தான் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்தில் அல்லது தமிழகத்தில் அதிகளவு சுதந்திரம் இல்லாவிட்டாலும் வளர்ச்சியடைந்த நாடுகளில் வசிப்பர்களுக்கு கட்டற்ற சுதந்திரம் உண்டு.  எனவே தனியே என்றாலும் நண்பிகளோடும் விடுமுறையில் தாராளமாகச் செல்லலாம். பிள்ளைகள் இருந்தால் அவர்களைப் பொறுப்பாகப் பார்க்க கணவன்மார்கள் அல்லது உறவினர்களைக் கேட்கலாம்தானே.

ஆனால் பல பெண்கள் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள், என்ன கதைப்பார்கள் என்று தாங்களாகவே வேலிகளையும், விலங்குகளையும் தங்களுக்குப் போட்டு புழுங்கிக்கொண்டிருப்பார்கள்.  இந்த நிலையும் மாறிக்கொண்டுதான் வருகின்றது. 

ஏன் ஆண்களின் அனுமதி வேண்டும் என்று பெண்கள் நினைக்கின்றார்கள்? இந்த அடிமைப் புத்தியை  பெண்கள் முதலில் விட்டுத்தள்ளவேண்டும். ஏதாவது அறிவுரை, விளக்கம் வேண்டுமென்றால் நெடுக்ஸை தனிமடலில் அணுகவும்? 

  • கருத்துக்கள உறவுகள்

நான் வசிக்கும் கனடாவில் இப்போது பெண்களுக்கு எந்தவிதத்தடையும் இல்லை அவரவர் சிந்தனைக்கு ஏற்ப தம்மை வடிவமைத்து வாழ்பவர்கள் பெண்களே. அதி உச்ச சுதந்திரத்தை இங்கு வாழ்பவர்களிடையே காணக்கூடியதாக இருக்கிறது. விலங்குகளாக பொறுப்புகளை மாட்டிக் கொண்டு இருப்பவர்கள் நாம்தான். சுமே ஆண்கள் கட்டுப்படுத்துகிறார்கள் அடக்குகிறார்கள் என்று பேசுவது என்னைப் பொறுத்தவரை நான் வாழும் கனடாவில் சுத்த முட்டாள்த்தனம். ஆண்களை முட்டாள்களாகவும், கோமாளிகளாகவும் கோபக்காரர்கள் ஆக்குவதும் தற்போதைய நிலவரத்தின்படி பெண்களாகவே உணர்கிறேன். கலாச்சாரம் பண்பாடுகளைக்கடந்த எல்லையற்ற சுதந்திரம் இன்று பல பெண்களைத் தனிமரமாகவும், போதைக்கு அடிமையானவர்களாகவும், மன அழுத்தம் நிறைந்தவர்களாகவும்,  அதி உச்ச விரக்தியுற்றவர்களாகவும் மாற்றிப்போட்டிருக்கிறது. இந்தத் தரவு உவகை மணமக்கள் இணைப்பின் வாயிலாக பெற்றவை. எல்லையற்ற சுதந்திரவெளியை அனுபவிக்கும் திறமை பெண்களிடம் கிடையாது. இத்தகைய சுதந்திரவெளியை நமது சமூகம் சார்ந்தவகையில் சில பெண்களாலேயே இயலும். எல்லையற்ற சுதந்திரம் என்பதும் துறவு என்பதும் ஒன்று. உறவுகளுக்குள் ஒட்டு இல்லாமல் பெண்களால் வாழ்க்கையை அனுபவிப்பது என்பது சாத்தியமற்றது. பெண்களுக்கு இயற்கை தந்த தாய்மை.,

அது மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்குகள் பறவைகள் ஆகிய அனைத்திற்கும் பொருந்தும். தன்னுடைய சந்ததியை பாதுகாக்கும் பெரும் பொறுப்பை முதலில் தாயே ஏற்கிறாள். ஆக தாயிலிருந்தே பிள்ளைகளுக்கான கட்டுப்பாடுகள் ஆரம்பிக்கின்றன. தற்காலத்தில் சமூகவட்டம் சிதறிப்போயுள்ளது. யாரும் எப்படியும் வாழலாம் என்ற கோலம் பற்றற்ற வாழ்க்கையைத்தவிர எந்த ஒரு பெருமையையும் தரப்போவதில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நான் கேட்ட கேள்விக்கு நீங்கள் ஒழுங்காகப் பதில் சொல்லவில்லை. சீரை சட்டை உடுப்பதை விடுங்கள். உங்கள் மனைவி தன் நண்பிகளுடன் ஒருவாரம் விடுமுறையில் செல்ல விடுவீர்களா????

 அவசியம் என வரும்போது பல தடவைகள் சென்று வந்துள்ளார்.

நானும் என் நண்பர்களுடன் சென்று வந்துள்ளேன்.

நான் நினைக்கின்றேன் நீங்கள் ஒரு குறுகிய வட்டத்திற்குள் நின்று கொண்டு சுழல்கின்றீர்கள். வெளியில் வந்து பாருங்கள் ஒரு அழகான சமூகம் சுதந்திரமாக சுற்றிக்கொண்டிருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, குமாரசாமி said:

 அவசியம் என வரும்போது பல தடவைகள் சென்று வந்துள்ளார்.

நானும் என் நண்பர்களுடன் சென்று வந்துள்ளேன்.

நான் நினைக்கின்றேன் நீங்கள் ஒரு குறுகிய வட்டத்திற்குள் நின்று கொண்டு சுழல்கின்றீர்கள். வெளியில் வந்து பாருங்கள் ஒரு அழகான சமூகம் சுதந்திரமாக சுற்றிக்கொண்டிருக்கின்றது.

ஊர்ல இருந்து அப்படியே கிரேனால, அப்படியே தூக்கி வைத்த மாதிரி கொஞ்சப்பேர் தம்மை முன்னேற்ற முனையாமல் வாழ்கின்றனர். 

குறைந்தது ஆங்கில அறிவைக் கூட வளர்க்காத தம்மை பற்றி எந்த வித சுஜ மதிப்பு இன்றி, தாழ்வு மனப்பான்மையோடு வாழும் அவர்கள் குறித்தே இந்த திரி விவாதிக்கிறது என்றே நினைக்கின்றேன்.

அவர்கள் தான், தீடீரென தமக்கு சுதந்திரம் இல்லை என்பார்கள். இரண்டு சாரியும், ஒரு படமும் காட்டியவுடன்.... பழைய குருடி கதவை திறடி
கதை தான்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.