Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வட வரணியில் உள்ள ஆலயம் ஒன்றில் JCP கொண்டு தேர் இழுத்த சம்பவம்

Featured Replies

வட வரணியில் உள்ள ஆலயம் ஒன்றில் JCP கொண்டு தேர் இழுத்த சம்பவம்

 

 

IMG_5793.jpg?resize=480%2C640
தென்மராட்சி வடவரணி பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் JCP கொண்டு தேர் இழுத்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.  குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன
IMG_5792.jpg?resize=480%2C640IMG_5794.jpg?resize=480%2C640IMG_5795.jpg?resize=480%2C360IMG_5796.jpg?resize=480%2C360

http://globaltamilnews.net/2018/82585/

  • கருத்துக்கள உறவுகள்

JCP என்பதை JCB (Joseph Cyril Bamford) என்று மாற்றவும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கிராமத்தவர் பும் பெயர்ந்து இருந்தால்....கோவணம் கட்டாமலே திரியச் சொல்லுங்கள்...டஇதுக்கு ஒரு தனிநாடு எமக்கு...

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, alvayan said:

இந்த கிராமத்தவர் பும் பெயர்ந்து இருந்தால்....கோவணம் கட்டாமலே திரியச் சொல்லுங்கள்...டஇதுக்கு ஒரு தனிநாடு எமக்கு...

இதுதான் காரணமா?...

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, MEERA said:

இதுதான் காரணமா?...

iஇதுபோல பல உண்டு....

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, alvayan said:

இந்த கிராமத்தவர் பும் பெயர்ந்து இருந்தால்....கோவணம் கட்டாமலே திரியச் சொல்லுங்கள்...டஇதுக்கு ஒரு தனிநாடு எமக்கு...

 

2 hours ago, MEERA said:

இதுதான் காரணமா?...

அல்வாயன், மீரா.... இரண்டு விதமான கருத்துக்கள் நிலவுகின்றது.
முகநூலில் பார்த்த, பதிவு  இரண்டை    கீழே இணைத்துள்ளேன். 

######## ################

//பெருமைக்கு தேரைச்செய்து எருமையை வச்சு இழுத்தானாம்...

நீங்கள் ஊரில இருக்கிற சனம் எத்தின அதில கோவிலுக்கு வார சனம் எவ்வளவு என்றெல்லாம் யோசிக்காம சந்நிதியான் தேருக்கு சளைக்காமல் இருக்கோனும் எங்கட தேர் பக்கத்து ஊர் தேரை விட பத்து இஞ்சியாவது உயரமா இருக்கோனும் காசைப்பற்றி யோசிக்காமல் தேரைச்செய்யுங்கோ என்று சொல்லி வெளிநாட்டில் இருந்து காசனுப்புவியல் அவங்களும் யோசிக்காமல் செய்திடுவாங்கள்

ஆனா அந்தப்பெரிய தேரை இழுக்க ஆட்கள் வேணுமே? ஊருக்கு ஊர் கோவில் எல்லாக்கோவிலும் தேர் அவனவன் தன் ஊர் தேரை இழுக்கவே ஆள் இல்லாமல் இருக்கிறான் இதுக்க உங்களுக்கு வந்து இழுத்தே குடுக்கப்போறான்? ஆம்பிளைகள் வயசுக்கு வந்த பொம்பிளைகள் முழுக்க வெளிநாடு கிழடுகட்டைகள் மட்டும்தான் ஊரில இருக்கு அதுகளை தேரை இழு என்றா இழுக்க முடியுமோ? JCB வச்சுத்தான் இழுக்கோனும்.

இதுக்கு தீர்வாய் ஒன்றில் வெக்கேசன் ரைமுக்கு திருவிழாவை மாத்துங்கோ டிக்கெட்டைப்போட்டு ஊருக்கு போய் கூடி நின்று தேர் இழுக்கலாம் இல்லாட்டில் இருக்கிற தேரை கொஞ்சம் சின்னதா வெட்டிக்குறையுங்கோ இது ரெண்டும் செய்யாட்டில் JCB தான் தேரை இழுக்கும் அரோகராவை சனம் போடும்.//

-சுப்பிரமணிய பிரபா.-

########## ############# 

//சாதித்திமிர் அவ்வளவு அதிகமா????
யூன் 06,2018

தென்மராட்சி வடவரணி பகுதியில் உள்ள ஆலயம் JCP இயந்திரத்தின் மூலம் தேர் இழுக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியிலுள்ள ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த மக்கள் தேரை இழுக்ககூடாது என்பதற்காகவே, இந்த “நவீன“ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த பகுதியிலுள்ள ஒடுக்கப்பட்ட சமூகங்களை சேர்ந்த மக்களும் தேர் இழுப்பதற்கு முயற்சிக்கிறார்கள் என ஆலய நிர்வாகம் கடந்த சில வருடங்களாக, அவர்களுடன் மல்லுக்கட்டி வந்தது. ஆலயத்தில் தேர் இழுக்கும் தமது உரிமையை அந்த மக்கள் விட்டுக்கொடுக்க தயாராக இருக்கவில்லை. இதையடுத்து, இந்த நவீன ஏற்பாட்டில் தேர் இழுக்கப்பட்டுள்ளது.

-ராசன் சிறி.-//

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்

யாழில் சமூகப் பிரச்சினை காரணமாக ஜேசிபியால் தேர் இழுப்பு

 

யாழில் சமூகப் பிரச்சினை காரணமாக ஜேசிபியால் தேர் இழுப்பு

யாழ்ப்பாணத்தில் முதன்முறையாக சமூகப் பிரச்சினையை மையமாக வைத்து ஜேசிபி வாகனம் கொண்டு தேர் இழுத்த சம்பவம் பலராலும் விமர்சிக்கப்படுகிறது.குறித்த சம்பவம் தென்மராட்சி வரணி வடக்கில் உள்ள ஆலயம் ஒன்றில் நடைபெற்றதாக அறியமுடிகிறது.மேலும் இது குறித்து சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்ச்சிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த சம்பவமானது சித்திரத் தேரில் சுவாமி வீற்றிருக்க ஜேசிபி வாகனம் தேரை இழுத்தாக தெரிவிக்கப்படுகிறது.(15)

 

http://www.samakalam.com/செய்திகள்/யாழில்-சமூகப்-பிரச்சினை/

  • கருத்துக்கள உறவுகள்

சாதி திமிர்: JCP இயந்திரத்தின் மூலம் தேர் இழுத்த வரணி கண்ணகை அம்மன் ஆலயம்!

June 6, 2018
34366860_1971305006212949_46946768167895

தென்மராட்சி வடவரணி பகுதியில் உள்ள ஆலயம் JCP இயந்திரத்தின் மூலம் தேர் இழுக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியிலுள்ள ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த மக்கள் தேரை இழுக்ககூடாது என்பதற்காகவே, இந்த “நவீன“ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வட வரணி சிமில் கண்ணகை அம்மன் ஆலயத்திலேயே இந்த விபரீத சம்பவம் நடந்துள்ளது. அந்த பகுதியிலுள்ள ஒடுக்கப்பட்ட சமூகங்களை சேர்ந்த மக்களும் தேர் இழுப்பதற்கு முயற்சிக்கிறார்கள் என ஆலய நிர்வாகம் கடந்த சில வருடங்களாக, அவர்களுடன் மல்லுக்கட்டி வந்தது.

 

இம்முறை திருவிழா ஏற்பாடுகள் நடந்தபோதும், தேர் இழுப்பது தொடர்பான சர்ச்சை எழுந்தது. குறிப்பிட்ட சமூகங்களை சேர்ந்தவர்கள் தேர் இழுக்ககூடாது என்பதில் ஆலய நிர்வாகம் விடாப்பிடியாக நின்றது.

34366860_1971305006212949_46946768167895

எனினும், ஆலயத்தில் தேர் இழுக்கும் தமது உரிமையை அந்த மக்கள் விட்டுக்கொடுக்க தயாராக இருக்கவில்லை. இதையடுத்து, இந்த “நவீன ஏற்பாட்டில்“ தேர் இழுக்கப்பட்டுள்ளது.

ஆலய நிர்வாகத்தின் இந்த செயற்பாட்டிற்கு சமூக வலைத்தளங்களில் கடுமையான கண்டனங்கள் எழுப்பப்பட்டு வருகிறது. நவீன சமூகத்தில் இப்படி பிற்போக்குத்தனமாக சிந்திப்பவர்களும் இருக்கிறார்களே என அதில் விசனம் வெளியிடப்பட்டு வருகிறது.

 

http://www.pagetamil.com/7364/

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை சாதிப்பிர்ச்சனையால் தேரை இழுக்க JCP பாவிக்கப்பட்டது என்பது....பல கோவில்களில் சகல‌ ரும் வடம்பிடித்து தேரை இழுக்கிறார்கள்...மற்றும் இன்ன சாதி என்று அடையாள அட்டை  உடன சனம் திரிகின்றது

  • கருத்துக்கள உறவுகள்

வானத்தை அண்ணார்ந்து பார்க்கிறேன்!

 

கருக்கொண்ட மேகங்கள்,

விலகிச் செல்லுகின்றன!

 

இனிமேல்....,

இந்த மண்ணில்..,

எங்களுக்கு வேலையில்லை...,

என்று நினைத்தனவோ என்னவோ?

  • கருத்துக்கள உறவுகள்

ஊர் கூடித் தேர் இழுப்பது என்பதுதான் வழமையான செயல். பொதுவாக பிராமணர்கள் கோவிலினுள் கருமமாற்றுபவர்கள்.அக்காலங்களில் அவர்கள் தொடுதல்,உரசல் இன்றி தீட்டு இல்லாமல் இருப்பார்கள். ஏனையோர் இனப்பாகுபாடுகளின்றி வெளியில் இருந்து வணங்குவதுடன் சரீர உழைப்பையும் சேவைகளையும் வழங்குவார்கள்.ஆனால்  இந்தத் தேர்த்திருவிழாவில் மட்டும் எல்லோரும் பிராமணர் உட்பட எவ்வித பாகுபாடுமின்றி தோளோடு தோள் உரச வடம் பிடித்து தேரை இழுத்து வருவார்கள். அது மட்டுமல்ல தேர் வடம் பிடித்த பிற்பாடு அன்று யாரும் குளிக்கவும் மாட்டார்கள். அதுதான் இவ் விழாவின் விசேஷம். ( இது "தெவ்வத்தின் குரல்" லில் வாசித்த ஞாபகம்).

அந்தப் பெரிய தேரை இழுக்க ஆட்கள் பற்றாகுறையினால் யந்திரத்தை நாடினார்களோ தெரியாது. படத்தில் ஒரு இளைஞர்களையும் காணவில்லை. அதனால் மேம்போக்கா சாதியை கிளப்பி விடுகினமோ தெரியாது. ஆனாலும் இப்படியே போனால் எதிர்காலத்தில் கருவறைக்குள் ரோபோதான் அர்ச்சனை செய்து ஆரத்தி காட்டும்.j . c .b . யை யார் ஓட்டுவது என்ற பிரச்சினை வரும்போது தானியங்கி வாகனம் பயன்படுத்தப்படும்.....!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் தனித்துவமாகத் தலை நிமிர்ந்து வாழ முடியாமைக்கு இதுவும் ஒரு காரணம்.

பானையில் உள்ளதுதான் அகப்பையில் வரும்.

இருக்கும் முகத்தை தானே கண்ணாடியில் பார்க்க முடியும்.

யதார்த்தம் சுட்டெரிக்கின்றது என்றால் மாறவேண்டியது நாங்கள் தான். 

  • கருத்துக்கள உறவுகள்

கிறிஸ்தவ வெள்ளைக்காரன் கண்டுபிடித்த JCP இயந்திரம் கொண்டு இந்து கண்ணகியை இழுத்தாலும் இழுப்போம் ..

சாதி குறைந்த ஒரு இந்துவை வைத்து இந்து தெய்வத்தை தேரிழுக்க நாம் தயாரில்லை என்ற  சித்தாந்தம் பாராட்டுதலுக்குரியது.

சிங்களவரிடமிருந்து தமிழர்களை காபாற்றாவிட்டாலும் பரவாயில்லை, தமிழர்களிடமிருந்து தமிழர்களை காப்பதற்காகவாது

பிரபாகரன் இன்னும் சிலகாலம் உயிருடன் வாழ்ந்திருக்கணும் என்ற ஏக்கம்  எப்போதுமே காயப்படுபவர்களிடம் இருந்துகொண்டே இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக்கோவிலுக்கு பிறசாதிக்காரர்கள் போகாமல்விட்டால் அலுவல் முடிஞ்சுபோச்சு போகாதையுஙோ உண்டியலில் காசுபோடாதையுங்கோ, அவர்களுக்கு ஏதாவது ஆத்திரம் அவசரம் என்றால் போகாதையுங்கோ அவர்களது விவச்சயக்காணியில் வேலை செய்யாதையுங்கோ, அவர்கள் படிக்கும் பள்ளிக்கூடத்தில் படிகாதையுங்கோ ஒட்டுமொத்தமாக வர்களை நீங்கள் புறக்கணியுங்கோ அப்ப வழிக்குவருவினம். பிற ஊர்களிலிருந்து யாராவது அவர்களது சாதி தவிர்ந்த ஏனையோர் அவர்களது உதவிக்கோ வேலைக்கொ வந்தால் வாளெடுத்து வெட்டுங்கோ அதுக்குப்பிறகுதெரியும். அவர்கள் சந்தைக்குக் காய்கறி வாங்கவந்தால் அவர்களது சாதி இல்லாதவர்கள் அவர்களுக்குக் காய்கறி விற்கவேண்டாம் பல இடங்களிலும் அவர்களுக்குத் தடை விதியுங்கள் ஊரைவிட்டு ஓடிப்போய்விடுவினம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒழிக்க முடியாதது சாதி ஒன்றுதான் இன்று முகநூலில் பற்ற வைத்துள்ளார்கள் என்றே சொல்லலாம்  போர் நீண்டு இருந்தால் இந்த சாதி ஒழிந்திருக்கும்  ஆனாலும் நீறு பூத்த நெருப்பு போல் இருந்ததை கிளறியுள்ளார்கள் இதனால் பிரதேச வாதம் கிளறப்படும் மீண்டும் தமிழருக்குள் கருத்து முரண்பாடு வரும் ஆக மொத்தத்தில் எங்கோ இருந்து எய்யப்படும் அம்புகள்  நம்மை குத்திக்கிழிக்க போகின்றது என்பது தெரிகிறது.

தேர் இழுக்க ஆள் இல்லையென்றால் நாலு பேராவது சுமந்து சென்று இருக்கலாம் அம்மனை இப்ப சாதியென்ற தீக்குச்சியை உரசிவிட்டிருக்கிறார்கள் என்று சொல்லலாம் செய்திக்காக கூட இருக்கலாம் tw_unamused:

  • கருத்துக்கள உறவுகள்

 வரணியில் இளையவர்கள் இல்லை என்று சொல்லமுடியாது. 90 களின் பின்னர் பிறந்த பலர் இன்று இளையவர்களாக பெருமளவில் இருக்கின்றார்கள். முகநூலில் வரும் கிரிக்கெட் போட்டிகள், உதைபந்தாட்ட போட்டிகளைப் பார்த்தாலே நன்கு தெரியும். எனவே இளைஞர்களின் பற்றாக்குறையினால் ஜேசிபியினால் தேர் இழுக்கும் நிலை என்பதில் உண்மை இல்லை.

 

தலைவர் பிரபாகரன் இருந்தபோதும் புலிகளைச் சுழிச்சுக்கொண்டு சாதி பார்த்துத்தான் அனுமதித்த கோவில்களும் உண்டு.

இந்திய இராணுவ ஆக்கிரமிப்புக் காலத்தில் வடமராட்சிக் கோயில் கிணறு ஒன்றில் தண்ணீர் அள்ளிய பிரச்சினையில் அந்த நேரத்தில் ஒளித்துத் திரிந்த புலிகள் வந்து தலையிடமுயன்றும் தண்ணீர் அள்ளுவதிலும் சாதி பார்த்து கோயிலுக்குள் அனுமதிப்பதிலும் எதையும் செய்யமுடியவில்லை.

இந்திய இராணுவம் நீங்கி புலிகளின் ஆளுகைக்குள் யாழ்ப்பாணம் முழுமையாக வந்தபோது இந்தப்பிரச்சினையைத் தவிர்க்க புதுமையான வகையில் பூசகர்களைத் தவிர எவரையும் கோயிலுக்குள் அனுமதிக்கவில்லை. 1995 இல் புலிகள் யாழை விட்டு நீங்கியவுடன் மீண்டும் சாதி பார்த்து அனுமதிக்கும் நடைமுறையை உண்டாக்கி அது இப்போதும் தொடர்கின்றது.

ஒரு திருவிழாக்காரர் நாலு கூட்டு மேளம் பிடித்தால் அடுத்த திருவிழாக்காரர் எட்டு கூட்டு மேளம் பிடிப்பதும், ஒரு திருவிழாவுக்கு இரண்டு சிகரங்கள் கட்டினால் மற்றவர்கள் நாலு சிகரங்கள் கட்டுவதும், சின்னமேளம், பெரியமேளம் என்று கூத்துக்கட்டுவதும் போட்டியாகி இன்று ஒரு திருவிழாக்காரர் பொலிஸை விருந்தினர்களாக அழைத்தால் அடுத்த திருவிழாக்காரர் இராணுவ கொமாண்டர்களை விருந்தினர்களாகக் கூப்பிடுவதும் என்று மாறியுள்ளது.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

ஊர் கூடித் தேர் இழுப்பது என்பதுதான் வழமையான செயல். பொதுவாக பிராமணர்கள் கோவிலினுள் கருமமாற்றுபவர்கள்.அக்காலங்களில் அவர்கள் தொடுதல்,உரசல் இன்றி தீட்டு இல்லாமல் இருப்பார்கள். ஏனையோர் இனப்பாகுபாடுகளின்றி வெளியில் இருந்து வணங்குவதுடன் சரீர உழைப்பையும் சேவைகளையும் வழங்குவார்கள்.ஆனால்  இந்தத் தேர்த்திருவிழாவில் மட்டும் எல்லோரும் பிராமணர் உட்பட எவ்வித பாகுபாடுமின்றி தோளோடு தோள் உரச வடம் பிடித்து தேரை இழுத்து வருவார்கள். அது மட்டுமல்ல தேர் வடம் பிடித்த பிற்பாடு அன்று யாரும் குளிக்கவும் மாட்டார்கள். அதுதான் இவ் விழாவின் விசேஷம். ( இது "தெவ்வத்தின் குரல்" லில் வாசித்த ஞாபகம்).

அந்தப் பெரிய தேரை இழுக்க ஆட்கள் பற்றாகுறையினால் யந்திரத்தை நாடினார்களோ தெரியாது. படத்தில் ஒரு இளைஞர்களையும் காணவில்லை. அதனால் மேம்போக்கா சாதியை கிளப்பி விடுகினமோ தெரியாது. ஆனாலும் இப்படியே போனால் எதிர்காலத்தில் கருவறைக்குள் ரோபோதான் அர்ச்சனை செய்து ஆரத்தி காட்டும்.j . c .b . யை யார் ஓட்டுவது என்ற பிரச்சினை வரும்போது தானியங்கி வாகனம் பயன்படுத்தப்படும்.....!  tw_blush:

தேர் இழுத்து முடித்து கோபுர வாசல் வந்ததும் ஐயர் போய் குளித்து விட்டு வந்து தான் சாமிக்கு பச்சை சாத்துவார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

தேர் இழுத்து முடித்து கோபுர வாசல் வந்ததும் ஐயர் போய் குளித்து விட்டு வந்து தான் சாமிக்கு பச்சை சாத்துவார்கள்

இருக்கலாம்.....தகவலுக்கு நன்றி சகோதரி..... சரியாக எனக்கும் தெரியாது....!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

நாகரிகமடையாமல் இன்னும் இப்படியான மக்கள் வாழ்கின்றார்களா?
இன்னும் எத்தனை காலத்திற்கு இவற்றை தூக்கிப்பிடித்து கொண்டிருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, colomban said:

நாகரிகமடையாமல் இன்னும் இப்படியான மக்கள் வாழ்கின்றார்களா?
இன்னும் எத்தனை காலத்திற்கு இவற்றை தூக்கிப்பிடித்து கொண்டிருப்பார்கள்.

நாகரீகமான மக்கள்தான் இன்னும் தூக்கிப்பிடித்துக்கொண்டிருக்கின்றார்கள் கொழும்பான்.

தற்போதைய அரசியல்வாதிகள் இப்படியான விடயங்களில் ஒன்றும் செய்யாது மெளனமாக இருப்பார்கள். 

 

ஷோபா சக்தி முகநூலில் இவ்வாறு எழுதியிருந்தார்..

 

1853 -ல் கார்ல் மார்க்ஸ் 'ரயில் அறிமுகமும் தொழில்நுட்ப வளர்ச்சியும் இந்தியாவில் சாதிப் பிரிவினைகளை ஒழித்துப்போடும்' என்றார். 

இன்று யாழ்ப்பாணத்து வரணியில் ஒடுக்கப்பட்ட சாதியினர் தேர்வடம் பற்றி இழுப்பதைத் தவிர்ப்பதற்காக கனரக இயந்திரத்தில் கட்டித் தேரை இழுக்கும் காட்சி இது.

மார்க்ஸ் தோற்கடிக்கப்பட்ட இடத்தில் பழனிபாரதியின் வரிகள் பொருந்திப் போகின்றன:

"சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் "

 

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று JCB இயந்திரத்தின் மூலம் தேர்; இன்று தீர்த்தக்கேணியை சுற்றி முள்கம்பி வேலி: அடங்க மறுக்கும் வரணி ஆலயம்!

June 7, 2018
34366860_1971305006212949_46946768167895

யாழ்ப்பாணம் வரணி சிமில் கண்ணகை அம்மன் ஆலயத்தில், சாதிய பாகுபாடு காரணமாக நேற்று JCB இயந்திரத்தின் மூலம் தேர் இழுத்த விவகாரத்தை தமிழ்பக்கம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருந்தது. ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் இது பெரும் விவாதமாக இன்று மாறிய நிலையிலும், இன்றும் அநாகரிகமான நடவடிக்கையில் ஆலய நிர்வாகம் ஈடுபட்டது.

தீர்த்தக்கேணியை சுற்றி முள்கம்பி வேலியிட்ட பின்னரே தீர்த்தோற்சவம் நடந்தது.

 

ஆலய சூழலில் உள்ள ஒடுக்கப்பட்ட சமூக மக்கள் யாரும் தீர்த்தக்கேணிக்குள் இறங்ககூடாது என்பதற்காக, தீர்த்தக்கேணியை சுற்றிலும் முள்கம்பி வேலியிடப்பட்டிருந்தது.

அதே சமயத்தில், இன்று தீர்த்தோற்சவத்தை யாரும் புகைப்படம் எடுக்காமலும் கவனித்துக் கொண்டது ஆலய நிர்வாகம்.

நேற்று தொடக்கம் சமூக வலைத்தளங்களில் இந்த விவகாரம் பெரும் சரச்சையை ஏற்படுத்தியுள்ளது. பலரும் இதற்கு தமது எதிர்ப்பை வெளியிட்டு வருகிறார்கள். இந்தநிலையில், நாளை கண்ணகை அம்மன் ஆலய திருவிழாவில் பங்குபற்ற அனுமதிக்கப்படாத ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பில் இளைஞர்கள் சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

 

http://www.pagetamil.com/7495/

 

  • கருத்துக்கள உறவுகள்

நிலை மாறினால் குணம் மாறுவான் - பொய்
நீதியும் நேர்மையும் பேசுவான் - தினம்
சாதியும் பேதமும் கூறுவான் - அது
வேதம் விதி என்றோதுவான்
மனிதன் மாறிவிட்டான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெள்ளாளர் குடும்பத்திலை மாப்பிளை/பொம்புளை எடுத்துட்டம் சம்பந்தம் வைச்சிட்டம் எண்டு கும்மாளம் போடுற கோஷ்டி இருக்கும் வரைக்கும் சாதிப்பிரச்சனையை மாத்தேலாது. :cool:
ஊரைப்பாத்து நாக்கூத்தை வழிக்கிற நேரம் புலம்பெயர்ந்து ஐரோப்பா அமெரிக்க கண்டங்களிலை சீவிக்கிற சீவன்களும் குறைஞ்ச ஆக்களில்லை. கோயில் குளங்களிலை பொதுப்படையாய் ஒத்து போனாலும் ......கலியாணம் பேசிப்பாருமன் பாப்பம்? :grin:

  • கருத்துக்கள உறவுகள்

34564353_357047678034817_4862488138301308928_n.jpg?_nc_cat=0&oh=ad0a90f0a2803807a3c5ff72d000fbcc&oe=5BB8154A

கந்தக வெடிப்புகைக்கு
அஞ்சிக்
கைகளைக் காலிடுக்கில்
கரந்து வைத்த அந்தப் பேய்
முந்தநாள் வந்தது முழுநரகத்திலிருந்து.

செந்தழலால் நிலமிழந்து 
சேர்த்து வைத்த புகழிழந்து
வெந்துயர் கண்டும்
வேரறா இனமென வேற்றவனும் போற்றும் என்னினம்
தேர்வடம் பிடிக்க வரும் ஓயாக்கரங்களைப்
புறமொதுக்கித்

தூர் வாரும் இயந்திரத்தால்
தூய தேர் இழுக்கிறது

சந்நிதித் தேர் எரித்தவன்
சந்தியில் நின்று சிரிக்கின்றான்

பேயின் கோரப்பற்களின்
நுனிக்குருதி பட்டுத்
தேய நகர்கிறது தாயின் ரதம்...

- நவரத்தினம் சத்தியவேந்தன்.-

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.