Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சியில் யுவதி ஒருவரின் சடலம் மீட்பு கொலை எனச் சந்தேகம்….

Featured Replies

கிளிநொச்சியில் யுவதி ஒருவரின் சடலம் மீட்பு கொலை எனச் சந்தேகம்….

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

Kili-Girl-Body2.jpg?resize=800%2C450

 

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகர் பிரிவுக்கு உட்பட்ட பிரவுன் வீதி பகுதியில் உள்ள வயல் கால்வாயில் இன்று காலை யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று 29-08-2018 காலை அப்பகுதிக்கு பின்புறமாக உள்ள குளத்திற்கு மீன்பிடிக்க சென்ற இருவர் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியதனை அடுத்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த யுவதிக்கு வயது சுமார் இருபது மதிக்கதக்கது என தெரிவிக்கப்படுகிறது. சடலத்தின் முகப்பகுதியில் பாரிய காயம் இருப்பதுடன் உள்ளாடைகளுடன் சடலம் அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளமையால் இது கொலையாக இருக்கலாம் எனவும் சில வேளைகளில் இது வன்புணர்வின் பின் கொலையாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இதுவரை குறித்த சடலம் யாருடையது என அடையாளம் காணப்படாத நிலையில் சம்பவ உள்ளது.

இதேவேளை  சம்பவ இடத்திலிருந்து சிவில் பாதுகாப்பு அதிகாரிகளின் சீருடை இடுப்புப்பட்டி மற்றும் பேனா உட்ப சில தடயப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன இதனையடுத்து குறித்த பகுதிக்கு சென்றுள்ள காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Kili-Girl-Body1.jpg?resize=800%2C450  Kili-Girl-Body3.jpg?resize=800%2C450Kili-Girl-Body4.jpg?resize=800%2C450Kili-Girl-Body5.jpg?resize=800%2C450Kili-Girl-Body6.jpg?resize=800%2C450Kili-Girl-Body7.jpg?resize=800%2C450Kili-Girl-Body8.jpg?resize=800%2C450Kili-Girl-Body9.jpg?resize=800%2C450Kili-Girl-Body10.jpg?resize=800%2C450Kili-Girl-Body11.jpg?resize=800%2C450

http://globaltamilnews.net/2018/93222/

  • Replies 58
  • Views 6.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

கிளிநொச்சி யுவதியின் சடலம் அருகே, பாதுகாப்புத் தரப்பு பயன்படுத்தும், இடுப்பு பட்டி உள்ளிட்ட தடயங்கள்…

 

 

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

Kili-Girl-Body-New1.jpg?resize=800%2C534

 

கிளிநொச்சி பண்ணங்கண்டி பிரதேசத்தில் நீர்ப்பாசன வாய்க்கால் பகுதிக்குள் இன்று (29.8.18) காலை காணப்பட்ட இளம் யுவதியின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. குறித்த யுவதி கொலை செய்யப்பட்ட பின்னர் நீர்ப்பாசன வாய்க்கால் பகுதிக்குள் கொண்டு சென்று போடப்பட்டிருக்கலாம் என வலுவாக நம்பப்படுகிறது. சடலத்தில் உள்பாவாடை உள்ளிட்ட உள்ளாடைகள் மாத்திரமே காணப்பட்டதாகவும் மேலாடைகள் எதுவுமே காணப்படவில்லை எனவும் காதில் தோடும் காணப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

சடலத்தின் சுற்றுப்புறச் சூழலில் பாதுகாப்புத் தரப்பினர் பயன்படுத்தும் இடுப்பு பட்டி, ஒரு கோர்வையில் நான்கு திறப்புக்கள், பியர் ரின், நீலம் மற்று மஞ்சல் நிறங்களில் செருப்புக்கள் இரண்டு சோடி, கால் சங்கிலி, சிவப்பு பேனை ஒன்று நீல பேனை ஒன்று ஆகிய சான்றுப்பொருட்கள் காணப்பட்டுள்ளன.

மேலும் கழுத்து இறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் வகையில் கழுத்தில் கறுப்பு அடையாளம் காணப்படுவதுடன் முகமும் சேதப்படுத்தப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளது.

அறுவடை செய்யப்பட்ட வயல் நிலங்களில் எரிக்கப்பட்ட வைக்கோல்கள் மத்தியில் சடலம் இழுத்துச் செல்லப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. காரணம் சடலத்தின் கால்களில் கரி படிந்திருக்கிறது. அத்தோடு சடலம் காணப்படும் இடத்தின் சூழலில் சிதறி கிடக்கும் சான்றுப்பொருட்களை அவதானிக்கின்ற போது குறித்த பகுதியில் சடலமாக காணப்படும் யுவதிக்கும் சம்மந்தப்பட்டவர்களுக்கும் இடையே முரண்பாடுகளும், இழுபறிகளும் இடம்பெற்றிருக்கலாம் எனவும் பலமாக சந்தேகிக்கப்படுகிறது

சம்பவ இடத்திற்கு பிற்பகல் 2.45 மணிக்கு சென்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதிபதி சடலத்தை பார்வையிட்டுள்ளார். அத்தோடு மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி தடயவியல் காவல்துறையினர் உட்பட காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். சடலம் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

 Kili-Girl-Body-New2.jpg?resize=800%2C534Kili-Girl-Body-New03.jpg?resize=800%2C45Kili-Girl-Body-New3.jpg?resize=800%2C534Kili-Girl-Body-New4.jpg?resize=800%2C534Kili-Girl-Body-New5.jpg?resize=800%2C534Kili-Girl-Body-New6.jpg?resize=800%2C534Kili-Girl-Body-New7.jpg?resize=800%2C534Kili-Girl-Body-New8.jpg?resize=800%2C534Kili-Girl-Body-New9.jpg?resize=800%2C534Kili-Girl-Body-New10.jpg?resize=800%2C53

http://globaltamilnews.net/2018/93249/

  • தொடங்கியவர்

கிளிநொச்சியில் சடலமாக மீட்கப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டார் 

 

 
 

கிளிநொச்சியில் சடலமாக மீட்கப்பட்டவர் முல்லைத்தீவு முறுகண்டியைச்  சேர்ந்த 32 வயதான கருப்பையா நித்தியகலா என அடையாளம் காணப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

kili02.jpg

குறித்த சம்பவம் இடம்பெற்ற பகுதியில் பாதுகாப்பு உத்தியோகத்தரின் இடுப்புப் பட்டி மற்றும் இரண்டு நீல மற்றும் சிவப்பு பேனைகள் இருந்ததால் இவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் என சந்தேகம் கொண்ட எமது பிராந்திய செய்தியாளர் மற்றும் கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ஒருவரும் இணைந்து தேடுதளில் ஈடுபட்டனர்.

kili034.jpg

.இந்நிலையில் கிளிநொச்சியில் உள்ள அனைத்து பாதுகாப்பு உத்தியோகத்தர்களை மேற்பார்வை செய்யும் நிறுவனங்களுக்கு சென்று பெண் பாதுகாப்பு உத்தியோகத்தர் யாரும் இன்று வருகை தரவில்லை என வினவிய பொழுது அறிவியல் நகரில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் வேலை பார்க்கும் ஒரு உத்தியோகத்தர் வரவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. 

kili03.jpg

இதனையடுத்து ஆடைத் தொழிற்சாலை உத்தியோகத்தர்களுடன் அவரது வீட்டுக்கு சென்று அவரது உறவினர்களிடம் விசாரித்ததன் பின்னர் அவர்களை வைத்தியசாலைக்கு அழைத்து சென்று சடலம் அவர் தான் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

kili06.jpg

குறித்த சம்பவம் குறித்த ஊடகவியலாளரினால் கிளிநொச்சி பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது

http://www.virakesari.lk/article/39383

  • கருத்துக்கள உறவுகள்

மிகக் கொடுமையான மனித இனமே அருவருக்கத்தக்க படுகொலைகளையும் பாலியல் போர்க்குற்றங்களையும் இழைத்த சிங்கள அரச பயங்கரவாதப் படைகளும் அதன் அடிவருடிகளும் சர்வதேச சமூகத்தாலும் ஐநாவாலும் பாதுகாக்கப்படும் நிலையில்.. இப்படியான தமிழின இன அழிப்பின் எச்சங்கள் தொடரவே செய்யும்.

இன நல்லிணக்கம் பேசும் உலகம்.. இந்தப் படுகொலைகள்.. நில ஆக்கிரமிப்பு.. பெளத்த ஆலயங்களிம் நிர்மானம்.. கடல் வள அபகரிப்புக் குறித்து எதுவுமே உச்சரிப்பதில்லை. ஏன் கண்டுகொள்வதே இல்லை.

தங்களின் மேலாதிக்கத்தை யார் அதிகம் இலங்கைத் தீவில் திணிப்பது என்பதில் தான் இப்போ போட்டா போட்டி நிகழ்கிறது.

அதில் தமிழன அழிப்பு.. இனப்படுகொலை.. போர்க்குற்றம் எல்லாம் சுருங்கிச் சின்னாபின்னமாகி விட்டது. இலங்கைத் தீவு மனித இனவிரோதக் குற்றவாளிகளின் கூடாரமாக்கப்பட்டு விட்டது. நீதி என்பது நிரந்தரமாகச் சாகடிக்கப்பட்டு  விட்டது. ?

இந்த படுபாதாகச் செயலைப் புரிந்த சிங்கள-பௌத்த முப்படைப் பயங்கரவாதிகளை சிங்கள-பௌத்த போலீஸ் பயங்கரவாதிகள் கைது செய்வார்களா? 

 

 

கொடிகாமம் முதல் வவுனியாவரை உள்ள வீதியில் முப்படை உறுப்பினர்கள் அவர்களின் சிங்கள நண்பர்களுடன் / முஸ்லீம் வியாபாரிகளுடன் இணைந்து பல கடத்தல் பாலியல் வன்கொடுமைகளை நிகழ்த்தியுள்ளனர். இவற்றில் ஒருசிலவே வெளிவந்துள்ளன.

சிங்கள / முஸ்லீம் காடையர்களால் பாதுகாப்பு தரப்பினரின் ஒத்துழைப்புடன் வாகனங்களில் பலவந்தமாக கடத்தி பாலியல் துஸ்பிரயோகம் செய்யும் செய்கைகளின் வரிசையில் இதுவும் ஒன்றாக இருக்கலாம்.

  • தொடங்கியவர்

கிளிநொச்சி விவகாரம் ; மேலும் சில தடையப்பெருள்கள் மீட்பு

 
 

கிளிநொச்சி, பன்னங்கண்டிப் பகுதியில் நேற்றையதினம் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் உடைமைகள் சில இன்று மீட்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி – அம்பாள் குளத்தின் கலிங்குப் பகுதியில் வைத்து இன்று காலை 11 மணியளவில் தடையப் பொருள்கள் சில கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த பெண் அணிந்து சென்ற பாதுகாப்பு உத்தியோகத்தருக்கான சீருடையின் மேல் ஆடை, அவருடைய தேசிய அடையாள அட்டை, அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் அடையாள அட்டை மற்றும் கைப் பை என்பன இதுவரை கைப்பற்றப்பட்டிருந்தன.

இந்த நிலையிலேயே, இன்று காலை 11 மணியளவில் மேலும் சில பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

https://newuthayan.com/story/16/கிளிநொச்சி-விவகாரம்-மேலும்-சில-தடையப்பெருள்கள்-மீட்பு.html

  • தொடங்கியவர்

கிளிநொச்சியில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் குறித்த பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியது !

 

 
 

கிளிநொச்சி - கரைச்சி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பிரவுண் வீதிப் பகுதியிலுள்ள வயல் கால்வாயிலிருந்து நேற்றுக் காலை சடலமாக மீட்கப்பட்ட யுவதியின் சடலம் மீதான பிரேத பரிசோதனை இன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றது.kili02__2_.jpgகிளிநொச்சி - கரைச்சி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பிரவுண் வீதிப் பகுதியில் உள்ள வயல் கால்வாயில் இருந்து நேற்றுக் காலை குறித்த யுவதியின் சடலம் மீட்கப்பட்டது.

வயலுக்கு பின்புறமாக உள்ள குளத்திற்கு மீன்பிடிக்க சென்ற இருவர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் யுவதியின் சடலத்தை மீட்டனர்.

சடலமாக மீட்கப்பட்ட யுவதிக்கு சடலத்தின் முகப் பகுதியில் காயங்கள் இருப்பதாலும் சடலமானது உள்ளாடைகளுடன் மீட்கப்பட்டுள்ளமையாலும் குறித்த யுவதி பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதன் பின்னர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் ஆரம்பத்தில் சந்தேகத்தினர்.

இந்நிலையில் குறித்த சடலம் மீதான பிரேத பரிசோதனை இன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் விசேட சட்ட வைத்திய நிபுணர் மயூரதன் தலைமையில் இன்று இடம்பெற்றது.

குறித்த பிரேத பரிசோதனை அறிக்கையில் சடலமாக மீட்கப்பட்ட பெணணின் இறப்புக்கான காரணமாக கயிறு ஒன்றினால்  கழுத்து நெரித்துக்கொலைசெய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதேவேளை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமைக்கான ஆதாரங்கள் இல்லையெனவும் குறித்த பெண் 5 மாத கர்ப்பிணியெனவும் பெண்ணின் இடது கண்ணுக்கு மேற்பகுதியில்  குத்தப்பட்ட உட்காயம் ஒன்று இருப்பதாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில்  மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

சடலமாக மீட்கப்பட்ட பெண் 32 வயதுடையவரெனவும் கணவரைப் பிரிந்து வாழ்பவரெனவும் இவருக்கு 5 வயதில் பெண் பிள்ளையொன்று இருப்பதாகவும் குறித்த பிள்ளை மாற்றுத்திறனாளியெனவும் பொலிஸ் விராரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

பிரேத பரிசோதனைகளையடுத்து பெண்ணின் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவிர்கான பிரதிப் பொலிஸ்மா அதிபரின் பணிப்பின் பெயரில் அமைக்கப்பட்டுள்ள விசேட பெரும் குற்றப் பிரிவு குழுவினர் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர் .

அதன் அடிப்படையில் குறித்த பெண் பயன்படுத்திய கையடக்கத்தொலைபேசியின் தரவுகள் மற்றும் பொலிசாரால் சந்தேக நபர்களாக கணிக்கப்பட்டுள்ளவர்களின் கையடக்கத்தொலைபேசியின் தரவுகள் மற்றும் பொலிசாருக்கு தேவையான இடங்களிலுள்ள கண்காணிப்புக் கமராக்களின் பிரதியினைப் பெறுவதற்கான நீதிமன்ற அனுமதியினை இன்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் கோரியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.  

http://www.virakesari.lk/article/39435

  • தொடங்கியவர்

கிளிநொச்சி யுவதி படுகொலை: சந்தேகநபர் கைது

 

 

கிளிநொச்சி பன்னங்கண்டி பகுதியில் இடம்பெற்ற படுகொலை சம்பத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றுக்கு அமைய குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் தொலைபேசியிலிருந்து இறுதியாக குறித்த சந்தேகநபரின் தொலைபேசி இலக்கத்திற்கே அழைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

கிளிநொச்சி, பன்னங்கண்டி பகுதியிலிருந்து நேற்று முன்தினம் யுவதியொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

ஆடைத் தொழிற்சாலையொன்றில் பாதுகாப்பு அதிகாரியாகக் கடமையாற்றி வந்த பெண்ணொருவரின் சடலமே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டிருந்தது.

குறித்த யுவதி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. ஆனால் நேற்று மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனைகளில் அவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படவில்லை என்றும், கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தமையும் தெரியவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/கிளிநொச்சி-யுவதி-கொலை-சந/

  • தொடங்கியவர்

“இருவருக்கும் உறவு இருந்தது – என்னுடையதே குழந்தை, கழுத்தை நெரித்தே கொலை செய்தேன்!”

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

Kili-Murder1.jpg?resize=800%2C533

 

கிளிநொச்சியில் படுகொலை செய்ப்பட்ட குடும்ப பெண்ணை கழுத்தை நெரித்தே கொன்றேன் என கைது செய்யப்பட்ட சந்தேக நபரான கிளிநொச்சி விநாயகபுரத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கிருஸ்னகீதன் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்

குறித்த அவரது ஒப்புதல் வாக்கு மூலத்தில் குறித்த பெண்ணுடன் தனக்கு தொடர்பு இருந்தது எனவும் அவரது வயிற்றில் வளர்ந்த குழந்தை என்னுடையதுதான் எனவும் வாக்கு மூலம் அளித்துள்ளார்.

வாக்கு மூலத்தில் மேலும் குறிப்பிடுகையில், தான் கர்ப்பமாக உள்ளதால் தன்னை கூட்டிச் செல்லுமாறு வற்புறுத்தினாள் பின்னர் நாம் இருவரும் நஞ்சு குடித்து இறந்துவிடுவோம் என்று கடந்த 28ஆம் திகதி முடிவெடுத்தோம்.

அதன் பிரகாரம் அன்றைய தினம் அவள் கடமை முடிந்து தொழிற்சாலையை விட்டு வெளியில் வந்ததும் நான் எனது வீட்டில் இருந்து நடந்து வந்து அவளது மோட்டார் சைக்கிளில் அவளை ஏறிக் கொண்டு, அம்பாள் குள வீதியூடாக கிளிநொச்சி வந்து உள் பாதைகளால் கரடிப்போக்கு வந்து பின்னர் மீண்டும் உள் பாதைகளால் சம்பவ இடத்திற்கு சென்றோம்.

வரும் போதே அவள் மருந்துப் போத்தல் ஒன்றை வாங்கிவந்தாள் அங்கு சென்றதும் குடிப்போம் என்றதும் எமக்க்குள் சிறு பிரச்சனை வந்துவிட்டது அதன் பின்னரே அவள் பாதுகாப்பு உத்தியோகத்தரின் உடையில் வந்தமையால் அவளது கழுத்தில் அவளது தொழில் அடையாள அட்டை தொங்கிக் கொண்டிருந்தது கழுத்தில் இருந்த பட்டியைக் கொண்டே அவளது கழுத்தை நெரித்துக் கொலை செய்தேன்.

Kili-Murder2.jpg?resize=800%2C533

பின்னர் இறந்தவள் பாதுகாப்பு உத்தியோகத்தர் என அடையாளம் காணக் கூடாது என்பதற்காக் அவளது பாவாடை மேற் சட்டடை எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு அவளது உடலை அருகில் இருந்த வயல் கால்வாய்க்குள் இழுத்துச் சென்று போட்டுவிட்டு, மோட்டார் சைக்கிளில் வந்து கனகபுரம் பகுதியில் அவளின் பாவாடையை எறிந்துவிட்டு கைப்பை (கான்பாக்) மற்றும் மேல் சேட்டு என்பவற்றை அம்பாள் குளப்பகுதியில் எறிந்துவிட்டு மோட்டார் சைக்கிளில் நள்ளிரவு போல் வீட்டுக்கு வந்தேன்.

வீட்டுக்கு வந்து பின்பக்காக இருக்கும் அறையில் மோட்டார் சைக்கிள் , தலைக்கவசம் ( கெல்மற்) என்பவற்றை ஒழித்து வைத்து விட்டு மருந்துப் போத்தலைக் கொண்டுவந்தேன் குடித்து நானும் சாவோம் என்று முடிவெடுத்த போது, பிள்ளைகள் நினைவு வந்ததால் அதனையும் வீடுக்குள் ஒளித்துவைத்திவிட்டேன்.

சம்பவ இடத்தில் இடுப்புப்பட்டி (பெலிட்) மற்றும் சில தடயங்களைத் தவிர மற்றது எல்லாவற்றையும் நானே கொண்டு வந்தேன் இக் கொலையை நான் மட்டுமே செய்தேன் என்னால் சம்பவ இடம் மற்றும் பொருட்கள் வீசப்பட்ட இடங்கள் என எல்லாவற்றையும் அடையாளம் காட்ட முடியும் நான் தான் இதனை செய்தேன் என குறித்த வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kili-Murder2.jpg?resize=800%2C533

காவற்துறை விசாரணை.

தொலைபேசித் தரவுகள் என்பவற்றைக் கொண்டு குறித்த பெண்ணின் தொலைபேசியின் தரவை பரிசீலனை செய்த பொழுது குறித்த பாதுகாப்பு உத்தியோகத்தரின் தொலைபேசியில் இருந்தே இறுதியாக அழைப்பு எடுக்கப்பட்டுள்ளதுடன் தொலைபேசியில் இவருடனே அதிகளவாக தொடர்பில் இருந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் சம்பவம் நடைபெற்ற அன்று இரு தொலைபேசிகளும் நீண்ட நேரமாக ஒரே கோபுர அலையிலையே நகர்ந்துள்ளமை என்பவற்றைக் வைத்து இன்று மதியம் குறித்த ஆடைத் தொழிற் சாலையில் கடமையில் இருந்த குறித்த உத்தியோகத்தரை கைது செய்து விசாரணைக்கு உட்ப்படுத்திய பொழுதே சந்தேக நபர் மேற்கண்டவாறு ஒப்புதல் வாக்கு மூலத்தினை வழங்கியுள்ளார்

வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னர் அவரால் படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் உடமைகள் வீசப்பட்ட இடமான கனகபுரம் பகுதியில் இருந்து குறித்த பெண்ணின் பாவடை போன்றவற்றை மீட்ட காவற்துறையினர் அவரது வீட்டுக் சென்று மோட்டார் சைக்கில் அவர் பாவித்த தொலைபேசி, தலைக்கவசம், மற்றும் மருந்துப் போத்தல் என்பவற்றை மீட்டுள்ளனர்.

பின்னர் சந்தேக நபரின் மனைவியின் வாக்குமூலம் என்பன பதிவு செய்யப்பட்டு குறித்த விசாரணை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. சந்தேக நபர் கிளிநொச்சிப் காவல் நிலைய தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன் சட்ட ரீதியான ஆவணங்கள் தயார் படுத்தப்பட்டு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆயர்ப்படுத்தப் பட இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

http://globaltamilnews.net/2018/93621/

சந்தேக நபருக்கு இரண்டு பிள்ளைகள் (+ மனைவி), கொலையுண்டான பெண்ணுக்கு 5 வயதில் மாற்றுத்திறனாளி மகள்.... ஆனால் இரண்டும் தம் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய எந்த அக்கறையும் இல்லாமல்  தங்கள் 'அமரத்துவ' காதலுக்காக தற்கொலை செய்ய வெளிக்கிட்டு இருக்கினம்.

பாவம் அந்த பிள்ளைகள் தான். முக்கியமாக அந்த பெண் பிள்ளை

வழக்கம் போல நடந்தது என்னவென்று தெரியும் முன்னரே நெடுக்கரும் போலும் சிங்களம் தான் இதுக்கு காரணம் என்று முழங்கி போட்டினம். 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

வழக்கம் போல நடந்தது என்னவென்று தெரியும் முன்னரே நெடுக்கரும் போலும் சிங்களம் தான் இதுக்கு காரணம் என்று முழங்கி போட்டினம். 

தாயகத்தில் இப்படி பல கேடுகெட்ட சமூக விரோதச் செயல்கள் பெருக.. சிங்கள ஆக்கிரமிப்பும்.. சிங்களப் படை இருப்பும் முக்கிய காரணம். ஏலவே தென்னிலங்கையில் ஆடைத்தொழிற்சாலைகள் சார்ந்து பல சமூக விரோதச் செயல்கள் பதிவாகி இருக்கும் நிலையில்.. இப்போ அது தமிழர் தாயகம் நோக்கியும் நகர்த்தப்படுகிறது.

மேலும் சிங்களப் பொலிஸாரின் ஒப்புதல் வாக்கு மூலம் எல்லாம் உண்மை என்று எடுத்த எடுப்பில் எப்படி நீங்கள் நம்புகிறீர்களோ தெரியவில்லை. ஏன் இந்தக் கொலையை திசை திருப்பும் நோக்கில்.. இந்த சிங்களப் பொலிஸ் ஊடகங்களுக்கு இப்படி ஒரு ஒப்புதல் வாக்கு மூலமும்.. கைதும் என்று செய்தி விட்டிருக்க முடியாது..??! அப்படி ஒரு சாத்தியமும் உள்ளது.

எனவே இந்தச் சம்பவம் தொடர்பில்.. உள்ளூர் மக்கள்.. பாதுகாப்புக் கோரி ஆர்ப்பாட்டம்  செய்துள்ள நிலையில்.. இந்த பொலிஸ் அறிவிப்பு முரணாக அமைகிறது. இந்தக் கொலையின் பின்னணி வேறாக இருக்கலாம். இப்போ சிங்களப் பொலிஸின் தேவைக்கு ஏற்ப சம்பவங்கள்.. மாற்றி அமைக்கப்பட்டிருக்க சாத்தியமுள்ளது. 

ஆனால்.. தமிழர் தாயகத்தில் சமூக விரோதச் செயல்கள் அதிகரிக்க.. சிங்கள அரச பயங்கரவாத ஆக்கிரமிப்பு என்பது ஒரு முக்கிய காரணி என்பது நிதர்சனமாகும். 

Edited by nedukkalapoovan

On 8/30/2018 at 3:02 PM, Rajesh said:

 

 

கொடிகாமம் முதல் வவுனியாவரை உள்ள வீதியில் முப்படை உறுப்பினர்கள் அவர்களின் சிங்கள நண்பர்களுடன் / முஸ்லீம் வியாபாரிகளுடன் இணைந்து பல கடத்தல் பாலியல் வன்கொடுமைகளை நிகழ்த்தியுள்ளனர். இவற்றில் ஒருசிலவே வெளிவந்துள்ளன.

சிங்கள / முஸ்லீம் காடையர்களால் பாதுகாப்பு தரப்பினரின் ஒத்துழைப்புடன் வாகனங்களில் பலவந்தமாக கடத்தி பாலியல் துஸ்பிரயோகம் செய்யும் செய்கைகளின் வரிசையில் இதுவும் ஒன்றாக இருக்கலாம்.

முஸ்லிம் வியாபாரிகளின் குறை சொல்ல முன் அவர்களிடம் பொருட்கள் கொள்வனவு செய்யும் தமிழர்கள் அதை நிறுத்தினால், அவர்கள் தாமவே சென்று விடுவார்கள்.

  • தொடங்கியவர்

 

கழுத்தை நெரித்தே கொலை செய்தேன் சந்தேகந பர் ஒப்புதல் வாக்குமூலம்

https://www.tamilwin.com/community/01/192216?ref=home-imp-parsely

 

 

கிளிநொச்சியில் கொல்லப்பட்ட நித்தியகலா! சந்தேகநபருக்கு நீதிமன்றம் கொடுத்துள்ள உத்தரவு

கிளிநொச்சியில் நித்தியகலா கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபரை எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட கிளிநொச்சி, விநாயகபுரம் பகுதியை சேர்ந்த சந்தேகநபர் யாழ். சட்ட வைத்திய அதிகாரியிடம் அழைத்து செல்லப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இதன்பின் அவர், கிளிநொச்சி பொலிஸ் நிலைய பெரும் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி ஜெசிந்தனால் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

இதன்போது பொலிஸாரினால் சமர்ப்பிக்கப்பட்ட குற்றப்பத்திரிகை உண்மை என நீதிமன்றில் வைத்து சந்தேகநபர் ஏற்றுக் கொண்டுள்ளார்.

 

https://www.tamilwin.com/community/01/192277?ref=home-latest

17 hours ago, நிழலி said:

சந்தேக நபருக்கு இரண்டு பிள்ளைகள் (+ மனைவி), கொலையுண்டான பெண்ணுக்கு 5 வயதில் மாற்றுத்திறனாளி மகள்.... ஆனால் இரண்டும் தம் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய எந்த அக்கறையும் இல்லாமல்  தங்கள் 'அமரத்துவ' காதலுக்காக தற்கொலை செய்ய வெளிக்கிட்டு இருக்கினம்.

பாவம் அந்த பிள்ளைகள் தான். முக்கியமாக அந்த பெண் பிள்ளை

வழக்கம் போல நடந்தது என்னவென்று தெரியும் முன்னரே நெடுக்கரும் போலும் சிங்களம் தான் இதுக்கு காரணம் என்று முழங்கி போட்டினம். 

அரசியலில இதெல்லாம் சகஜமப்பா / கண்டுக்கப்படாது

சிங்கள பேரின அராஜகவாதிகளின் அட்டகாசம் எண்டு எழுதினால்த்தானே நாலு லைக் விழும் - உண்மையை எழுதினா எவன் சட்டை செய்கின்றான்.

நடக்கட்டும்

  • கருத்துக்கள உறவுகள்

தொடுப்பு இருந்து பிள்ளை உண்டானால்  தற்கொலை செய்யவேண்டும் கொலை செய்யவேண்டும் என்று ஏன் யோசிக்கின்றார்கள்? யுத்தம் மூலம் உருவான பாதிப்பு இன்னும் மாறவில்லை.

பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டால், கொலை செய்யப்பட்டால் அது சிங்கள இராணுவம், முஸ்லிம் வியாபாரிதான் காரணம் என்று தமிழர்கள் உடனடியாக முடிவெடுப்பதனால் சில தமிழர்களும் இப்படியான குற்றங்களை பிடிபடமாட்டோம் என்று நினைத்துச் செய்கின்றார்கள்.

17 minutes ago, கிருபன் said:

பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டால், கொலை செய்யப்பட்டால் அது சிங்கள இராணுவம், முஸ்லிம் வியாபாரிதான் காரணம் என்று தமிழர்கள் உடனடியாக முடிவெடுப்பதனால் சில தமிழர்களும் இப்படியான குற்றங்களை பிடிபடமாட்டோம் என்று நினைத்துச் செய்கின்றார்கள்.

அதுவும் சிங்கள பௌத்த பேரின அராஜகவாதிகளின் அட்டகாசம் எண்டு இன்றும் எழுத ஆட்கள் இருக்கும்போது // என்ன பயம் 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

தொடுப்பு இருந்து பிள்ளை உண்டானால்  தற்கொலை செய்யவேண்டும் கொலை செய்யவேண்டும் என்று ஏன் யோசிக்கின்றார்கள்? யுத்தம் மூலம் உருவான பாதிப்பு இன்னும் மாறவில்லை.

பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டால், கொலை செய்யப்பட்டால் அது சிங்கள இராணுவம், முஸ்லிம் வியாபாரிதான் காரணம் என்று தமிழர்கள் உடனடியாக முடிவெடுப்பதனால் சில தமிழர்களும் இப்படியான குற்றங்களை பிடிபடமாட்டோம் என்று நினைத்துச் செய்கின்றார்கள்.

எமது  ஊரிலே இவ்வாறு நடந்த ஒரு கொலையை 

இராணுவத்தின்  காவலரனுக்கு  பக்கத்தில் சடலத்தை  போட்டுவிட்டு

திசை  திருப்பி  இருந்தது

வித்தியாவின் கொலைக்குப்பின்பே  தெரிய  வந்தது

தமிழ் மக்களிடையே  சிங்கள  ராணுவமும்  அரசும்  எடுத்து  வைத்திருக்கும்

மதிப்பும்   நம்பிக்கையும் தான் இவற்றிற்கு  ஊக்குவிப்பாகிறது

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நவீனன் said:

 

கழுத்தை நெரித்தே கொலை செய்தேன் சந்தேகந பர் ஒப்புதல் வாக்குமூலம்

https://www.tamilwin.com/community/01/192216?ref=home-imp-parsely

 

 

கிளிநொச்சியில் கொல்லப்பட்ட நித்தியகலா! சந்தேகநபருக்கு நீதிமன்றம் கொடுத்துள்ள உத்தரவு

கிளிநொச்சியில் நித்தியகலா கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபரை எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட கிளிநொச்சி, விநாயகபுரம் பகுதியை சேர்ந்த சந்தேகநபர் யாழ். சட்ட வைத்திய அதிகாரியிடம் அழைத்து செல்லப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இதன்பின் அவர், கிளிநொச்சி பொலிஸ் நிலைய பெரும் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி ஜெசிந்தனால் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

இதன்போது பொலிஸாரினால் சமர்ப்பிக்கப்பட்ட குற்றப்பத்திரிகை உண்மை என நீதிமன்றில் வைத்து சந்தேகநபர் ஏற்றுக் கொண்டுள்ளார்.

https://www.tamilwin.com/community/01/192277?ref=home-latest

 

ஒரு பாரதூரமான குற்றச் செயல் ஒன்றுக்கான விசாரணை என்பது மீடியாக்கள் முன்னிலையில் காட்சிப்படுத்தப்படுவது.. நீதியான விசாரணை நிகழ்கிறது என்பதைக் காட்டப் போதுமானதல்ல. மாறாக சிங்கள பொலிஸ் படை நினைப்பதற்கு அமைய திசை திருப்பல் நோக்கம் கொண்டதா என்று சந்தேகிக்கச் செய்கிறது.

எந்த நீதிமன்ற பிரசன்னமும் இன்றி.. நீதிமன்ற நடவடிக்கைகளும் இன்றி... விசாரணைகள் சிங்களப் பொலிஸ் படையினரால்.. மீடியாக்களுக்கு  காட்சிப்படுத்தப்படுவது என்பது சிங்களப் பொலிஸ் படை மீது திசை திருப்பல் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ?

  • கருத்துக்கள உறவுகள்

பொலீசார் சந்தேக நபரை விசாரணை  செய்யும் முறையும்  தடையப்பொருட்களை கையாளும் விதமும் அவர்கள் அதற்கு இன்னும் ஒரு படி மேலே போய் இதை அனைத்தையும் காணொளியில் பதிவுசெய்து இணையத்தில் தரவேற்றி பகிரங்கப்படுத்துவதும் பொலீசார் நீதிக்கு முரணாக செயற்படுவதாகவே பார்க்கத் தோன்றுகிறது. ஒரு நீதிமன்றில் தீர்ப்பு வழங்கும்வரை அவர் ஒரு சந்தேகநபர் மட்டும்தான் என்பதும் நீதிமன்றில் அவர் குற்றம் நிருபிக்கப்படாவிட்டால் அவர் விடுதலையும் செய்யப்படலாம். நெடுக்கர் சொல்வதுபோல் பொலீசார் திட்டமிட்டு நாடகமொன்றை மேடையேற்றுகிறார்களோ என சந்தேகிக்க  நிறையவே இடமுண்டு.

Edited by vanangaamudi

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, நிழலி said:

சந்தேக நபருக்கு இரண்டு பிள்ளைகள் (+ மனைவி), கொலையுண்டான பெண்ணுக்கு 5 வயதில் மாற்றுத்திறனாளி மகள்.... ஆனால் இரண்டும் தம் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய எந்த அக்கறையும் இல்லாமல்  தங்கள் 'அமரத்துவ' காதலுக்காக தற்கொலை செய்ய வெளிக்கிட்டு இருக்கினம்.

பாவம் அந்த பிள்ளைகள் தான். முக்கியமாக அந்த பெண் பிள்ளை

வழக்கம் போல நடந்தது என்னவென்று தெரியும் முன்னரே நெடுக்கரும் போலும் சிங்களம் தான் இதுக்கு காரணம் என்று முழங்கி போட்டினம். 

இதென்ன புதுசே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, சுவைப்பிரியன் said:

இதென்ன புதுசே.

பொலிசு சொன்னால் எல்லாம் உண்மையாய்த்தான் இருக்கும்.......அவங்கள் எல்லாரும் அரிச்சந்திரன் வீட்டுக்கு பக்கத்து வீடெல்லே tw_glasses:

14 hours ago, கிருபன் said:

தொடுப்பு இருந்து பிள்ளை உண்டானால்  தற்கொலை செய்யவேண்டும் கொலை செய்யவேண்டும் என்று ஏன் யோசிக்கின்றார்கள்? யுத்தம் மூலம் உருவான பாதிப்பு இன்னும் மாறவில்லை.

 

 

சமூக இறுக்கம், அழுத்தம் தான் இவ்வாறான சம்பவங்களுக்கு பின்னணியில் இருக்கின்றது. கணவனை பிரிந்துவாழும் பெண்ணுக்கு குழந்தை பிறந்தால் அக் குழந்தை குறித்த ஊராரின் கேள்விகளுக்கு என்ன பதிலை சொல்வது ? சாதியத்தை காப்பாற்றும் பொருட்டு ஒழுக்கத்தை எமது சமூகம் ஆண்பெண் உறவிலேயே பிரதானமாக வைத்திருக்கின்றது. அதிலிருந்தே தூய்மைவாதம் கட்டியெழுப்பப்படுகின்றது. குறிப்பாக பெண்ணின் நடத்தை பிரதானமானது. பல நாடுகளில் இவை கொலைக்கோ தற்கொலைக்கோ சென்றிருக்காது. இவ்வாறான சம்பவங்கள் காலாகலம் நடந்துகொண்டுதான் இருக்கின்றது. இவ்வாறான இக்கட்டுக்குள் சிக்குபவர்கள் பலர் கர்ப்பத்தை மறைத்து குழந்தை பிறந்ததும் கொல்லைப்புறத்திலோ தோட்டம் துரவுகளிலோ புதைத்து விடுவார்கள். சாத்தியப்பட்டால் கருக்கலைப்பு செய்வார்கள். இவைகள் சாத்தியமில்லாதபோது தற்கொலை செய்வார்கள். இந்த சம்பவத்தில் தற்கொலை ஒரு கொலையில் முடிந்திருக்கின்றது. அதற்கு குடும்ப பின்னணி காரணமாக இருக்கின்றது. இக்கெலைக்கு உடந்தையாக, தூண்டுதலாக சமூகத்தின் இறுக்கமே இருக்கின்றது. ஒரு காண்டம் வாங்குவது ஆணுக்கொ பெண்ணுக்கோ சாதரணமானதாக சமூகத்தில் இருந்தால் கூட இந்த சம்பவம் நடக்காமல் போயிருக்கலாம் ஆனால் ஒரு பெண் காண்டம் வாங்கினால் அது ஒரு பாரிய குண்டுவெடிப்புக்கு நிகரான செய்தியாவே இச் சமூகத்தில் இருக்கும். இச் சம்பவத்தின் ஊடாக எமது சமூகத்தின் அருவருக்கத்தக்க மனநிலையைதான் புரிந்துகொள்ள முற்படவேண்டும். 

இயற்கையான பாலியல் உணர்வுக்கு எதிராக இச்சமூகத்தின் உளவியல் இயங்கும் விதத்திற்கு விலையாக பாலியல் வல்லுறவுகள் துன்புறுத்தல்கள் கொலைகள் விலையாக கொடுப்பது தவிரக்க முடியாதது. 


 

Quote

 

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் 
பெய்யெனப் பெய்யும் மழை. 

கற்புடைய பெண் தெய்வத்தைக் கூட தொழமாட்டாள். அவள் கணவனையே தெய்வமாக வணங்கிச் சிறப்படைவாள். அப்படிப்பட்டவள் பெய் என்று சொன்னால் மழை பெய்யும்படியான தெய்வபலம் உள்ளவள்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, கிருபன் said:

தொடுப்பு இருந்து பிள்ளை உண்டானால்  தற்கொலை செய்யவேண்டும் கொலை செய்யவேண்டும் என்று ஏன் யோசிக்கின்றார்கள்? யுத்தம் மூலம் உருவான பாதிப்பு இன்னும் மாறவில்லை.

பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டால், கொலை செய்யப்பட்டால் அது சிங்கள இராணுவம், முஸ்லிம் வியாபாரிதான் காரணம் என்று தமிழர்கள் உடனடியாக முடிவெடுப்பதனால் சில தமிழர்களும் இப்படியான குற்றங்களை பிடிபடமாட்டோம் என்று நினைத்துச் செய்கின்றார்கள்.

இப்படியான சமூக பிறழ்வுக்கு சிங்கள அரசும் இராணுவமும் காரணம் இல்லை என  சொல்ல  வருகின்றீகளா?? அல்லது சில பச்சைக்காக ஏங்குகிறீர்களா??
சிங்கள அரசும் அதன் அடிவருடிகளும் எப்படி செயற்படுகிறார்கள் என தெரியவில்லை என்றால் சொல்லுங்கள்  அதற்கான  அத்தாட்சிகளை  சமர்ப்பிக்க எப்போதும் தயங்குவதில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

கொடியில் போட்ட பாவாடை காணவில்லை என்றால் கூட‌
சிங்கள ராணுவம் என கூறும் மக்களிடம் என்னவென்று கதைப்பது. அதற்காக சிங்கள ராணுவம் ஒழுக்க சீலர்கள் என்று சொல்லவரவில்லை.

இத்தகைய சமூக பிறழ்வுகள் உலகம் முழுவதும் காலம் காலமாக நடைபெறுகின்றது. தனிப்பட்ட நப‌ர்களின் பிரச்சினை. கொலையாளியால் வாக்குமூலமும் வழங்கப்பட்டுள்ளது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.