Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியலை முன்னெடுப்பதற்கு விடுதலைப்புலிகள் தடையாக இருந்தனர்.-சுமந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
m.a.jpg?zoom=1.1024999499320984&resize=8
தமிழ் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கத்திற்கு முன்னர் தமிழ் அரசியல் கட்சிகள் ஜனநாயக அரசியலை முன்னெடுப்பதற்கு விடுதலைப்புலிகள் தடையாக இருந்தனர்.  என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
 
யாழில் உள்ள அவரது இல்லத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, அண்மையில் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் கே. சயந்தன் தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுதலை புலிகளுடனான டீலில் உருவானது என கருத்து தெரிவித்தமை தொடர்பில் கேட்ட போதே அவ்வாறு பதிலளித்தார்.
 
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,
 
 தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவான போது நான் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருக்கவில்லை. அதனால் எந்தவிதமான டீல் நடந்தது என்றோ , அல்லது டீல் நடந்ததா ? என்பது பற்றி எனக்கு  தனிப்பட்ட அறிவு கிடையாது, ஆனாலும் பொதுவாக எல்லோருக்கும் தெரிந்த உண்மை இருக்கின்றது.
 
அது என்னவெனில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கத்திற்கு முன்னர் தமிழ் அரசியல் கட்சிகள் ஜனநாயக அரசியலை முன்னெடுப்பதற்கு விடுதலைப்புலிகள் தடை விதித்திருந்தனர்.

அதனை மீறி ஜனநாயக அரசியலில் ஈடுபட்டவர்கள் அதனை மீறியமைக்காக படுகொலை செய்யப்பட்டனர். தமிழ் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கத்திற்கு பின்னரே தமிழ் அரசியல் கட்சிகள் அரசியலை முன்னெடுக்க விடுதலைப்புலிகள் இணங்கினார்கள்.
 
விடுதலைப்புலிகள் பேச்சு வார்த்தைகளுக்கு வரும் போது அதன் இடைநடுவில் செயற்பட்ட நேர்வே போன்ற நாடுகள் அவர்களுக்கும் ஜனநாயக சக்தி இருப்பது அவசியம் என வலியுறுத்தி இருந்தனர். அவ்வாறு இருந்தாலே சர்வதேச நாடுகளுடன் பேச முடியும், இலங்கை அரசாங்கத்துடன் பேசி சில இணக்க பாடுகளை ஏற்படுத்த முடியும் என்ற ஆலோசனைகளை விடுதலைப்புலிகளுக்கு பல நாடுகள் கொடுத்தன.
 
தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கத்தின் போது ஜனநாயக ரீதியில் அரசியலை முன்னெடுத்தவர்களினதும் ,  புலிகளினதும் தேவைப்பாடுகளும் சந்தித்தன. அதனாலையே ஜனநாயக ரீதியில் அரசியல் செய்வதற்கான அனுமதி விடுதலைப்புலிகளால் கொடுக்கப்பட்டது. என தெரிவித்தார்.
  • Replies 108
  • Views 12.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இந்த எட்டு வருட காலத்தில் புலி இல்லையே நீங்கள் பாரளுமன்றத்தில் கேட்டு பெற எவ்வளவோ சந்தர்ப்பங்கள் வந்தனவே அப்பவும் புலிகளா முட்டுகட்டை போட்டனர் ?

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு எல்லாம் கிடச்சிட்டுதே...ஏன் மற்றவையப்பற்றிக் கவலை...

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கினார்கள் காரணம் ஜனநாயகத்தை அவ்வளவு தூரம் அவர்கள் மதித்தார்கள் என்பதையே காட்டுகிறது.

19 minutes ago, nunavilan said:

விடுதலைப் புலிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கினார்கள் காரணம் ஜனநாயகத்தை அவ்வளவு தூரம் அவர்கள் மதித்தார்கள் என்பதையே காட்டுகிறது.

நுணா,

தமிழ் தேசியக் கூட்டமைப்பை புலிகள் உருவாக்கவில்லை என்பதையும், கிழக்கிலங்கை பத்திரிகையாளர் அமைப்பும், கிழக்கை சேர்ந்த மேலும் சில புத்திசீவிகளும் இணைந்தே தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கினர்கள் என்பதையும் எத்தனையோ பேர் தெளிவாக பலமுறை சொல்லியிருப்பதை அறியவில்லையா?. த.தே.கூ உருவாக்கத்தில் டி.சிவராமுக்கு பெரும் பங்கு உண்டு என்பதையும் மறந்து விட்டீர்களா?
த.தே.கூ உருவாக்கப்பட்ட பின் சந்தித்த முதல் தேர்தல் 2001 இன் போது முழுக்க முழுக்க த.தே.கூ. வினால் தெரிவு செய்யப்பட்ட வேட்பாளர்கள் தான் தேர்தலில் நின்றனர். அதன் பின்னர் தான் புலிகளால் தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்வாங்கப்பட்டு அடுத்த தேர்தலில் கணிசமான வேட்பாளர்கள் புலிகளின் பரிந்துரைப்பினால் தேர்தலில் நிறுத்தப்பட்டனர்

ஒரு பொய்யை திருப்பி திருப்பி சொல்வதால் மட்டும் அது உண்மையாகி விடாது.

அத்துடன், புலிகள் தமிழ் கட்சிகளின் சார்பாக தேர்தலில் நின்ற / நின்று வென்ற பலரை கொல்லும் போது, மனமகிழ்ந்தவர்களும் அதை ஆதரித்தவர்களும், பட்டாசு கொளுத்தியவர்களும் தான் இன்று சயந்தனும் சுமந்திரனும் புலிகள் தமிழ் அரசியல்வாதிகளை சொன்றனர் என்று சொல்வதை பார்த்து பொங்கி எழுகின்றனர். மாற்று இயக்கம் சார்பாக, ஐதேக, சுதந்திரக் கட்சிகள் சார்பாக மட்டுமல்ல நவசமசமாஜக் கட்சியில் நின்று போட்டியிட்ட அண்ணாமலை போன்ற ஆயுதம் என்றால் என்னவென்றே தெரியாதவர்களையும் புலிகள் கொன்று உள்ளனர்.

இப்பவாவது ஆயுதம் ஏந்தாத தமிழ் வேட்பாளர்களை / வென்றவர்களை கொன்றது சரியான செயல் இல்லை என்று புரிந்து கொள்கின்றார்கள் என்பதை காணும் போது சந்தோசம் வந்தாலும், இந்த புரிதல் ஒரு சந்தர்ப்பவாதம் என்பதையும் மறுக்க மனம் ஒப்புதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, நிழலி said:

சம்பந்தரே மறுப்பு தெரிவிக்கவில்லை. இதுக்குள்ளே நீங்கள் வேறை நிழலி. புலிகள் இல்லாமல் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு அங்குலம் கூட அசைந்து இருக்க முடியாது. சிவராம் போன்றவர்கள் உறுதுணையாக இருந்திருக்கலாம். அக்கால கட்டத்தில் அரசியல் கட்சியின் மூலம் பல தொடர்புகளை ஏற்படுத்த புலிகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு போன்ற  ஒரு அரசியல் கட்சியும் தேவைப்பட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, nunavilan said:

நிச்சயமாக  நுணா நீங்கள்  சொல்வது தான்  உண்மை

புலிகளால்  மட்டுமே அது சாத்தியமானது

அதற்கு  சாட்சியாக  இதுவரை தமிழ்க்கட்சிகள் வேறு எந்த முனைப்புக்களையும்  எடுத்ததுமில்லை

எடுத்து வென்றதுமில்லை

அப்படியானவர்கள் கூட்டமைப்பில்  தொடர்ந்து தொங்குவதற்கும்  நிழலி  குறிப்பிட்டது போல சுயநலமே  காரணம்

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவில்லை. நாலாம் நாள் வந்து ஆலோசனை கூட்டமாம். மட்டக்களப்பில் நடந்த   வெள்ள அனர்த்தங்களில் (சில காலத்துக்கு முன்) ஜே வியினர் கூட வீதிகளில் இறங்கி மக்களுக்கு உதவினார்கள்.

49178053_2210970435619714_73443574400889

11 minutes ago, விசுகு said:

நிச்சயமாக  நுணா நீங்கள்  சொல்வது தான்  உண்மை

புலிகளால்  மட்டுமே அது சாத்தியமானது

அதற்கு  சாட்சியாக  இதுவரை தமிழ்க்கட்சிகள் வேறு எந்த முனைப்புக்களையும்  எடுத்ததுமில்லை

எடுத்து வென்றதுமில்லை

சில மேலைநாடுகளின் ஆலோசனைகளின் படி தமிழீழ விடுதலைப்புலிகளால் வித்திடப்பட்டு/வழிடத்தப்பட்டு  அன்டன் பாலசிங்கம், சிவராம், நடேசன் உட்பட 30 க்கு மேற்பட்டவர்களின் பங்களிப்புடன் உருவானதே தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகும்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் வழிநடத்தல் இல்லையென்றால் இவர்கள் ஒன்றிணைந்திருக்க மாட்டார்கள். இதற்காக நடந்த முன்னேற்பாடுகளை சம்மந்தன் போன்ற பலர் இறுதிவரை அறிந்திருக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Quote

ஒரு பொய்யை திருப்பி திருப்பி சொல்வதால் மட்டும் அது உண்மையாகி விடாது.

அத்துடன், புலிகள் தமிழ் கட்சிகளின் சார்பாக தேர்தலில் நின்ற / நின்று வென்ற பலரை கொல்லும் போது, மனமகிழ்ந்தவர்களும் அதை ஆதரித்தவர்களும், பட்டாசு கொளுத்தியவர்களும் தான் இன்று சயந்தனும் சுமந்திரனும் புலிகள் தமிழ் அரசியல்வாதிகளை சொன்றனர் என்று சொல்வதை பார்த்து பொங்கி எழுகின்றனர். மாற்று இயக்கம் சார்பாக, ஐதேக, சுதந்திரக் கட்சிகள் சார்பாக மட்டுமல்ல நவசமசமாஜக் கட்சியில் நின்று போட்டியிட்ட அண்ணாமலை போன்ற ஆயுதம் என்றால் என்னவென்றே தெரியாதவர்களையும் புலிகள் கொன்று உள்ளனர்.

இப்பவாவது ஆயுதம் ஏந்தாத தமிழ் வேட்பாளர்களை / வென்றவர்களை கொன்றது சரியான செயல் இல்லை என்று புரிந்து கொள்கின்றார்கள் என்பதை காணும் போது சந்தோசம் வந்தாலும், இந்த புரிதல் ஒரு சந்தர்ப்பவாதம் என்பதையும் மறுக்க மனம் ஒப்புதில்லை.

இதற்கு ஒரு தலைப்பு திறந்து வாதிடுங்கள். உங்களின் தராசுக்கு இணையாக அல்லது மேலாக படிகளை போட தயாராக உள்ளோம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, போல் said:

அதே...

சம்பந்தர்  இறுதி  நேரத்தில்  தான்  தலைவராக்கப்பட்டார் (அதுவும்  கிழக்கு மாகாணத்தவர்  என்பதால்)

3 hours ago, பிழம்பு said:

தமிழ் அரசியல் கட்சிகள் ஜனநாயக அரசியலை முன்னெடுப்பதற்கு விடுதலைப்புலிகள் தடையாக இருந்தனர்.  என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஜனநாயகம் - சமத்துவம் என்ற போர்வையில் திருடர்களின், கயவர்களின், கடத்தல்காரர்களின், கப்பக்காரர்களின், காமுகர்களின், ஒட்டுண்ணிகளின், கொள்ளைக்காரர்களின்,  ........  அரசியல் பித்தலாட்டங்களுக்கு விடுதலைப்புலிகள் தடையாக இருந்தனர் என்பதே உண்மையானதும், வரலாறும் ஆகும்.

49 minutes ago, nunavilan said:

சம்பந்தரே மறுப்பு தெரிவிக்கவில்லை. இதுக்குள்ளே நீங்கள் வேறை நிழலி. புலிகள் இல்லாமல் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு அங்குலம் கூட அசைந்து இருக்க முடியாது. சிவராம் போன்றவர்கள் உறுதுணையாக இருந்திருக்கலாம். அக்கால கட்டத்தில் அரசியல் கட்சியின் மூலம் பல தொடர்புகளை ஏற்படுத்த புலிகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு போன்ற  ஒரு அரசியல் கட்சியும் தேவைப்பட்டது.

சம்பந்தர் மறுப்பு தெரிவிக்காதமையாலோ அல்லது சிறிதரன் புலிகளால் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவானதாக சொல்வதாலோ உண்மையும் இறந்த காலத்தில் நிகழ்ந்ததும் மாறிவிடப் போவதில்லை. சம்பந்தருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் புலிகளின் பெயரைச் சொல்லி அரசியல் நடத்தும் தேவை இன்றும் இருப்பதால் கள்ள மவுனம் சாதிக்கின்றனர். இதனாலும் வரலாறு மாறிவிடப் போவதும் இல்லை.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்தில் புலிகளின் பங்கு இருக்கவில்லை. ஆனால் அதன் பின் ஒரு சனனாயக ரீதியில் தெற்கிலும் சர்வதேச ரீதியிலும்  இயங்க கூடிய ஒரு proxy தேவைப்பட்டதால் தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஆசிர்வதித்து உள்வாங்கினர். எவ்வளவு தான் அவர்கள் அப்படி ஆசிர்வதித்து உள்வாங்கி இருந்தாலும், தம் இறுக்கமான பிடியை அவர்கள் மீது வைத்து இருந்தாலும், அவர்களால் குறிப்பிடப்பட்டவர்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களாக நியமித்து இருந்தாலும், தமிழ் மக்களை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்கும் படி அவர்கள் ஒரு போதும் வெளிப்ப்டையாக அறிவிப்பதில் இல்லை என்பதிலும் தெளிவாக இருந்தனர்.

26 minutes ago, nunavilan said:

இதற்கு ஒரு தலைப்பு திறந்து வாதிடுங்கள். உங்களின் தராசுக்கு இணையாக அல்லது மேலாக படிகளை போட தயாராக உள்ளோம்.

இந்த செய்தியில் புலிகளின் தமிழ் அரசியல்வாதிகள் மீதான படுகொலை பற்றியும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கம் பற்றியும் இருக்கு. இதற்கு ஏன் இன்னொரு திரி? இதுவே போதும்.. நீங்கள் தராசுக்கான படிகளை போடுவதாலோ அல்லது போட மறுப்பதாலோ கண்ணுக்கு முன் நிகழ்ந்த எதுவும் மாறிவிடப்போவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கத்தின்மூலம் விடுதலைப்புலிகள் சொல்லவந்த செய்தி - இன்னும் சுமே, சம்போ, மாவோ உட்படபல பூவாகி, காயாகி, பழுத்த, வெம்பிப்பழுத்த தமிழ் அரசியல்வாதிகளுக்கும்கூட மண்டையில் ஏறாதது - ஏற்றிக்கொள்ள விரும்பாத அரசியல் தாரக மந்திரம் - தமிழரின் ஒற்றுமை, ஒற்றுமை, மீண்டும் ஒற்றுமையே. அரசியலில் ஒற்றுமை தான் தமிழனின் வாக்குப் பலம். அதுதான் அரசியலில் தீர்மானிக்கும் சக்தி.  அந்த சக்திதான் நம் கொள்கையின் வெற்றி.

Edited by vanangaamudi

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நிழலி said:

நுணா,

தமிழ் தேசியக் கூட்டமைப்பை புலிகள் உருவாக்கவில்லை என்பதையும், கிழக்கிலங்கை பத்திரிகையாளர் அமைப்பும், கிழக்கை சேர்ந்த மேலும் சில புத்திசீவிகளும் இணைந்தே தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கினர்கள் என்பதையும் எத்தனையோ பேர் தெளிவாக பலமுறை சொல்லியிருப்பதை அறியவில்லையா?. த.தே.கூ உருவாக்கத்தில் டி.சிவராமுக்கு பெரும் பங்கு உண்டு என்பதையும் மறந்து விட்டீர்களா?
த.தே.கூ உருவாக்கப்பட்ட பின் சந்தித்த முதல் தேர்தல் 2001 இன் போது முழுக்க முழுக்க த.தே.கூ. வினால் தெரிவு செய்யப்பட்ட வேட்பாளர்கள் தான் தேர்தலில் நின்றனர். அதன் பின்னர் தான் புலிகளால் தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்வாங்கப்பட்டு அடுத்த தேர்தலில் கணிசமான வேட்பாளர்கள் புலிகளின் பரிந்துரைப்பினால் தேர்தலில் நிறுத்தப்பட்டனர்

ஒரு பொய்யை திருப்பி திருப்பி சொல்வதால் மட்டும் அது உண்மையாகி விடாது.

அத்துடன், புலிகள் தமிழ் கட்சிகளின் சார்பாக தேர்தலில் நின்ற / நின்று வென்ற பலரை கொல்லும் போது, மனமகிழ்ந்தவர்களும் அதை ஆதரித்தவர்களும், பட்டாசு கொளுத்தியவர்களும் தான் இன்று சயந்தனும் சுமந்திரனும் புலிகள் தமிழ் அரசியல்வாதிகளை சொன்றனர் என்று சொல்வதை பார்த்து பொங்கி எழுகின்றனர். மாற்று இயக்கம் சார்பாக, ஐதேக, சுதந்திரக் கட்சிகள் சார்பாக மட்டுமல்ல நவசமசமாஜக் கட்சியில் நின்று போட்டியிட்ட அண்ணாமலை போன்ற ஆயுதம் என்றால் என்னவென்றே தெரியாதவர்களையும் புலிகள் கொன்று உள்ளனர்.

இப்பவாவது ஆயுதம் ஏந்தாத தமிழ் வேட்பாளர்களை / வென்றவர்களை கொன்றது சரியான செயல் இல்லை என்று புரிந்து கொள்கின்றார்கள் என்பதை காணும் போது சந்தோசம் வந்தாலும், இந்த புரிதல் ஒரு சந்தர்ப்பவாதம் என்பதையும் மறுக்க மனம் ஒப்புதில்லை.

ஒரு பொய்யை திருப்பி திருப்பி சொல்வதால் மட்டும் அது உண்மையாகி விடாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, பெருமாள் said:

அப்ப இந்த எட்டு வருட காலத்தில் புலி இல்லையே நீங்கள் பாரளுமன்றத்தில் கேட்டு பெற எவ்வளவோ சந்தர்ப்பங்கள் வந்தனவே அப்பவும் புலிகளா முட்டுகட்டை போட்டனர் ?

அவையள் சாகும் வரைக்கும் சாட்டு...குறை குற்றங்கள் சொல்ல புலிகள் வேணும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள்.... சும்   வரத் தடையாக புலிகள் இருந்தனர் என்பதே சரியான அவரின் கருத்து....அப்ப இவரு வேலிக்கரையில் பிப்பீ அடிதுத் திரிந்த காலம்......

  • கருத்துக்கள உறவுகள்

இவர் அரசியலுக்கு வர முதல் இவர் அப்பா களவெடுத்து விடுதலைப்புலிகளால் தண்டிக்கப்பட்டவர்.. என்ற காரணத்தால் தான் புலிகளை பார்த்து இந்தக் குரை குரைக்கிறார். 

இவர்கள் சட்டம் படித்தது நீதியை காப்பற்ற அல்ல.. அநீதிக்கு நீதியின் முன் விலை பேசி காசுழைக்க. அந்த வகையில் இவரிடம்.. இதை விட வேறு எதனையும் எதிர்பார்க்க முடியாது.

சொறீலங்காவில் உண்மையான சனநாயகம் என்பதே கிடையாது. குறிப்பாக தமிழர்களிடம் அது காலணித்துவத்தின் இருப்போடு இல்லாமலே போய்விட்டது.

மக்களின் ஆணையைப் பெற்ற பின்.. அந்த மக்களை ஏமாற்றி.. மக்கள் விரோத அரசியலை முன்னெடுப்பது என்பது எந்த வகையிலும் சனநாயகம் ஆகாது. அந்த வகையில்.. விடுதலைப்புலிகள்... தமிழ் மக்கள்.. ஏமாற்று மக்கள் விரோத பாசிச அரசியல்வாதிகளின் போலித் தனங்களை தகர்த்தெறிய முற்பட்டது எந்த விதத்திலும்.. தவறும் இல்லை. 

மேற்குலகின் தேவைகளுக்கு.. ஹிந்தியாவின் தேவைகளுக்கு.. சிங்களவனின் தேவைகளுக்கு.. துரோகக் கும்பல்களின் தேவைகளுக்கு.. பச்சோந்திகளின் தேவைகளுக்கு.. புலிகள் செயற்பாடு கசப்பான சனநாயக விரோதமாகத் தோன்றி இருக்கலாம்..

ஆனால்.. மக்கள் விரோதிகளாக செயற்பட்ட போலிச் சனநாயக சாயம் பூசிய.. அரசியல் வியாதிகளை.... மக்கள் மத்தியில் இருந்து அகற்றப்பட்டமை தொடர்பில் தமிழ் மக்கள் உண்மையில் நிம்மதிப் பெருமூச்சு விட்ட தருணங்களே அதிகம். 

இன்று கடந்த காலத்தை முற்றாக மறந்து விட்டு அல்லது மறைத்துவிட்டு எல்லாமே புலிகளால் தான் என்போருக்கு... தமிழரசுக் கட்சி.. தமிழர் காங்கிரஸ்.. தமிழர் விடுதலைக் கூட்டணி.. ரெலோ.. புளொட்.. ஈபி.. ஈ என் டி எல் எவ்.. ஈரோஸ்.. ரெலா.. கருணா குழு.. ஈபிடிபி..  தமிழ் தேசிய கூட்டமைப்பு.. தமிழ் தேசிய முன்னணி.. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்.. இப்படி ஆயிரெத்தெட்டு.. காட்டிக்கொடுப்பு கட்சிகள் அமைத்து.. நீங்கள் சாதித்த சனநாயகம் தான் என்ன.. தமிழ் மக்களுக்கு..??!

நிழலி இன்னும்.. சரிநிகர் காலத்து போலி சனநாயகம் பேசி காலம் கழிக்கலாம் என்று நினைக்கிறார் போலும். உண்மையில்.. சரிநிகர் பேசியது சனநாயகம் அல்ல.. மாற்றுக் கருத்து நடுநிலை என்ற போர்வையில்..  அநீதிகளுக்கு.. மக்கள் விரோத சக்திகளுக்கு.. சனநாயகம் முலாம் பூசியதே அதிகம். 

புலிகள் இல்லாத இந்தக் காலத்திலும் அதையே செய்து மக்களை ஏமாற்ற விளைகின்றனரே தவிர.. புலிகள் தடையாக இருந்திருந்தால்.. புலிகளின் தடை நீங்கிய கடந்த 10 ஆண்டுகளில்.. ஒரு தசாப்த்த காலத்தில்... அரசியல் கட்சிகள் என்று சொல்லி  வருமானத்துக்கு கட்சி வைத்திருக்கும்.. இவ்வளவு பேரும்.. மக்களுக்கு சனநாயகத்தின் மூலம் பெற்றுக் கொடுத்தது என்ன..?! 

இதற்கு நிழலி... சயந்தன்.. சுமந்திரன் போன்ற அதி உத்தம.. சனநாயக வாதிகள் என்னத்தை சொல்லப் போகினம்...???????! 🙁

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nunavilan said:

சம்பந்தரே மறுப்பு தெரிவிக்கவில்லை. இதுக்குள்ளே நீங்கள் வேறை நிழலி. புலிகள் இல்லாமல் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு அங்குலம் கூட அசைந்து இருக்க முடியாது. சிவராம் போன்றவர்கள் உறுதுணையாக இருந்திருக்கலாம். அக்கால கட்டத்தில் அரசியல் கட்சியின் மூலம் பல தொடர்புகளை ஏற்படுத்த புலிகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு போன்ற  ஒரு அரசியல் கட்சியும் தேவைப்பட்டது.

நுணா சொல்வது போல புலிகளின் ஆசீர்வாதம் இல்லாமல் த.தே.கூ ஒரு அங்குலம் கூட நகர்ந்திருக்க இயலாது தான்! படுகொலைகள் நிறுத்தப் படும் என்பதற்கு இந்த ஆசீர் முன்னறிவித்தலாக வந்தது, த.தே.கூ தேர்தலில் நின்றது. இதையே சும் சொன்னால் கிழித்துக் காயப் போட்டு விடுவர், நுணா வேறு வார்த்தைகளில் சொன்னால் அதைப் பெருமிதத்துடன் ஏற்றுக் கொள்வர். 

நுணா உங்களிடம் ஒரு கேள்வி: அந்தக் காலப்பகுதியில் அவதானிகளாக இருந்த பலர் நிழலியின் பதிவில் உள்ள தரவை ஆவணப் படுத்தியிருக்கிறார்கள்! சம்பந்தர் வாய் திறந்து சொல்லாதது தான் உங்கள் வலுவான ஆதாரமா? சம்பந்தர் பல விடயங்களைப் பற்றி வாய் திறப்பதில்லையே?

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி அவர்களே,

சரி புலிகள்தான் இவற்றிற்கெல்லாம் காரணம் அவர்களது காலத்தில் ஜனநாயகம்(?)  காணாமல் போயிட்டுது.

எழுபத்துநாலாம் ஆண்டளவில் புலிகளது சிறு தாக்குதல்கள் இடம்பெற்று அவை மெல்ல மெல்ல அதிகரித்து தென்னிலங்கையுடன் சேர்ந்து அரசியல் செய்வோரை அச்சுறுத்தியதன் காரணமாகவும் படுகொலைசெய்ததன் காரணமாகவும் கூட்டணிக்குச் சாதகமான சூழல் ஏற்பட்டு தேர்தலில் அவர்களுக்கு நல்ல அறுவடையின் காரணமாக முதல் முதலில் ஒரு தமிழர் எதிர்கட்சியாக வந்தபோது இந்த ஜனநாயக ஓலங்கள் எல்லாம் எங்கே போனது எம்பி பதவியைத் தூக்கி வீசியிருக்கலாமே இந்தக்கண்ணியமானவர்கள் அக்காலத்தில் அமிர்தலிங்கத்தாருக்கு இருந்த சிறப்பு என்ன தெரியுமா இந்தியப்பிரதமர் இந்திராகாந்தியுடன் நேரடியாகத் தொலைபேசியில் தொடர்புகொள்ளக்கூடியதாக இருந்தது. இந்தப் பகட்டுகளை எல்லாம் கூட்டமைப்பு புலிகளது ஜனநாயக விரோத செயற்பாடுகளினாலேயே (?) பெற்றுக்கொண்டது. 

புலிகள் அதி உச்ச போராளிகளாக வலம்வந்தகாலம் என்பது யாழ் குடாநாட்டை தமது காலப்பகுதியில் வைத்திருக்க முயன்ற எண்பத்து ஆறாம் ஆண்டளவில். இன்றோடு இரண்டாயிரத்து ஒன்பதின் ஆரம்பத்துக்கும் அதற்கும் உள்ள கால இடைவெளி அங்கும் இங்கும் விட்டுக்கொடுத்துப்பார்தால் இருபத்து  ஐந்து வருடங்கள். அவர்கள் இல்லாதுபோய் ஜனநாயகவாதிகள் என தங்களை முன்னிறுத்துவோர் அச்சுறுத்தல் எதுவுமின்றி அரசியல் செய்வது பத்துவருடத்துக்கு இன்னும் ஐந்து மாதங்களே இருக்கு அக்கால கட்டத்தில் இவர்கள் சாதித்ததென்ன கிட்டத்தட்ட புலிகளது காலத்திலிருந்து பாதிதூரத்தைக கடந்து வந்துவிட்டார்கள் இப்போதும் அவர் சாதித்த ஜனநாயகத்தின்மூலம் வாக்குகள் பாராளுமன்ற உறுப்பினராக பதவிவகிக்கும் டக்ளசுக்கு வடக்குக் கிழக்குத் தொடர்பான அமைச்சுப்பதவியோ அன்றேல் தமிழர்கள் எவருக்கும் அமைச்சுப்பதவியோ கொடுக்கக்கூடாது சிங்களவர் ஒருவருக்கே கொடுக்கவேண்டும் எனுக்கூறும் ஜனநாயகத்தைவிட எதைச்சாதித்தார்கள்.

டக்லசுக்கு வாக்களித்தால் உள்ளூரில் படித்த இளையோருக்கு வேலைவாய்ப்பாகுதல் கிடைக்கும் இணக்க அரசியல் நடாத்தும் கூத்தமைப்பு இதுவரை வடக்குக் கிழக்கின் படித்த இளையோரில் எத்தனை விகிதமானவர்க்கு அரசில் வேலைவாய்ப்பையாகுதல் ஏற்படுத்திக்கொடுத்திருக்கு. அனந்தி சசிதரனது செயலாளரிலிருந்து வடக்குக் கிழக்கின் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களது பாதுகாப்பளர்கள் வரைக்கு சிங்களவர்களும் முஸ்லீம்களுமே உள்ளனர் அவர்கள் அப்படித்தான் கேதிறார்கள் தமிழர்கள்மீது தமிழ் அரசியல்வாதிகளுக்கே நம்பிக்கை இல்லை என தற்போதைய ஆளுனர் சிறிசேனகுரே கூறியத மறந்துவிட்டீர்களா?

சுமந்திரன் ஒண்டுக்கும் பெறுமதி இல்லாத சமாதான நீதவான் பட்டத்தை வடமராட்சியில் தனக்குத் தேர்தலில் கள்ள்வோட்டுப்போட்டவர்க்கு வேண்டிக்கொடுத்ததை விட டக்ளஸ் வடக்கின் இளையோருக்கு அரசாங்கத்தில் வேலை வாங்கிக்கொடுத்தது அதிகம்

சரி ஒரு செய்தியாகவே கூறுகிறேன் யாழில் உள்ள தமிழர்களில் அனேகமானவர்கள் உடலில் ஓடுவது சிங்களவர் இரத்தமே என இதே ஆளுனர் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக்கல்லூரியில் இரட்டை அர்த்தத்தில் கூறியதை என்ன நினைக்கிறியள். பல்லாயிரக்கணக்கான குண்டுமழைக்குள் காயப்பட்டுக்கிடந்த தமிழர்களுக்கு அந்தவேளையில் தேவையான இரத்தத்தை சிங்களவர்களா தந்தார்கள் இல்லையே.

அதைவிடுங்க புலிகள் இல்லை, புலிகளே அச்சுறுத்தலாளர்கள் கொலையாளிகள், இல்லாத புலிகளை இந்தியாவும் சிங்களமும் தமது தேவைக்காய் இருப்பதாகச் சொல்வதும், மகிந்த பிரதமராக வந்தால்தான் புலிகளது அச்சுறுதலிலிருந்து நாட்டைக்காப்பாற்ற முடியுமெனக் கூற வவுணதீவில் இரண்டு போலீசாரை கருணாவைவைத்துப் போட்டுத்தள்ளியது இது வேற விடையம். ஜனநாயகம் தழைத்தோங்குகிறது அதன்பின்பு சுமந்திரன் உமக்கெதுக்கு அதிரடிப்படைப்பாதுகாப்பு?

மடைதிறந்த ஜனநாயகவாதி சுமந்திரன் தேர்தல்செலவுக்குப் புலம்பெயர்தேசங்களில் சேர்த்த பணத்துக்குக் கணக்குச்சொல்ல முடியுமா ?

இதுவும் ஜனநாயக விழுமியங்களில் ஒன்றுதானே

சரி அதைவிடுங்கோ

ஒரு சம்பவம் வலிகாமம் பகுதியில் ஒரு அபிவிருத்திச்சபையின் தவிசாளர், அவரது மகனுக்கு அரச வங்கியில் வேலை தேவை டக்ளசும் சித்தார்தனும் ஒரு  கனவான் ஒப்பந்த செய்தார்கள் வவுனியாவில் இருக்கும் டக்ளஸ் ஆதரவாளருக்கு சித்தார்த்தன் செல்வாக்கில் வவுனியா வங்கிக்கிளையில் வேலை அபிவிருத்திச்சபை தவிசாளருக்கு டக்ளசது செல்வாக்கில் யாழில் உள்ள அரச வங்கியில் வேலை இதுதான் இவர்கள் கண்ட ஜனநாயகம். 

வேலைவாய்ப்பு, மதுபானக்கடை, பேர்மிற் மண்பேர்மிற் , இதைப்போல வேற செல்வாக்குகளுக்காக டக்ளசுக்கும் வியஜகலாவுக்கும் அங்கஜனுக்கும் வடக்கில் மக்கள் வாக்களிக்கிறார்கள்.

விட்டுக்கொடாதன்மை, இந்திய எதிர்ப்பு, இ ணக்க அரசியல் இல்லை, சாத்தியமோ சாத்தியமில்லையோ புலிகள் காலத்திலிருந்த வர்களது கொள்கைகளுக்குப் பொருந்திப்போவதான கொள்கைப்பிடிப்பு இவற்குக்காக தமிழ் தேசிய மக்கள் முண்ணணிக்கு மக்கள் வாக்களிக்கிறார்கள். 

இவர்களுக்கு நாம் வாக்களித்தது ஜனநாயகத்தைப் புத்துயிர் ஊட்டத்தானே இவர்கள் கடந்த ஒன்பதரை வருடங்களுக்கு முன்பு காணாமல் போன ஜனநாயகத்தைத் தேடி இன்னமும் புத்துயிர் ஊட்டாமல் என்ன செய்கிறார்கள், இணக்க அரசியல் கொள்கைமூலம் தீர்வு எனக்கூற நாம் இவர்களுக்கு வாக்களித்தோம் அடுத்த தேர்தலும் வரப்போகுது எங்கே தீர்வு 

இரண்டாயிரத்துப்பதினாறில் தைப்பொங்கள் பானை பொங்குபோது எல்லோர் வீட்டுப் பொங்கல்பானையிலும் தீர்வு பொங்கும் என சுமந்திரனது துரோணாச்சாரியார் சிங்கக்கொடி புகழ் சம்பந்கன் ஐயா கூறினாரே எங்கே போனது தீர்வுப்பொங்கல்.

இவர்களது இணக்க அரசியல் ஜனநாயகம்மூலம் இவர்கள் தமிழ்மக்களுக்கு புலிகளல்லாத பத்து வருடங்களில் எதக்கொண்டுவது சேர்த்தார்கள் எமக்காக.

பத்துவருடம் ஆகிறது இதுவரை அவர்களது ஜனநாயகம் சாத்தித்ததென்ன? தவிர இப்போது ஜனநாயகம் என்ன புலிகள்காலத்து, முள்முடி தவிர்த்து தங்கத்தால் செய்து வைரம் பதித்த முடிசூடியா வடக்குக் கிழக்கிம் நடனமாடுகிறது

Edited by Elugnajiru

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Elugnajiru said:

சரி! தேவையற்ற சத்தங்களை விடுவோம். இலங்கையில் தமிழர் பிரச்சினை இடியப்பச் சிக்கல் என்பது அனேகமானோர் ஏற்றுக் கொண்ட ஒன்று. இந்தச் சிக்கலில் பங்களிக்கும் காரணிகள் எவையென்று இங்கே ஒரு பட்டியல் மட்டும் தருவீர்களா? அது புலிகள் வர முன்னர்/வந்த பின்னர் ஆகப் பிரித்துச் சொன்னாலும் சரி. தர முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் ஜனநாயக ரீதியிலான அரசியலை எதிர்த்தார்கள் அல்லது, நடத்தவிடாமல் தடுத்தார்கள் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 

புலிகளாலும் மற்றைய இயக்கங்களாலும்  கொல்லப்பட்ட பல தமிழ் அரசியல் வாதிகளை கொன்றதற்கான காரணங்கள் எவ்வாறானதாக இருந்தபோதும், அவற்றின் விளைவுகள் எமக்கு எந்தவிதத்திலும் உதவவில்லை என்பதோடு மட்டுமல்லாமல், இறுதி முடிவினை எந்தவிதத்திலும் மாற்றக்கூடியனவாகவும் இருக்கவில்லை.

சிலவேளை முள்ளிவாய்க்கால் அவலம் நடைபெறாது, முற்றான வெற்றியுடனான விடுதலை சாத்தியமாகியிருந்தால் இந்தப் படுகொலைகள் நியாயப்படுத்தப்பட்டிருக்கலாமோ என்னவோ, ஆனால் நடைபெறவில்லை என்பதுதான் யதார்த்தம்.

சில தமிழ்த் தலைவர்களின் தன்னிச்சையான முடிவுகள் அவர்களின் கொலைக்குக் காரணமாக அமைந்திருந்தன. அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், யோகேஸ்வரன், திருமதி யோகேஸ்வரன், நீலன் திருச்செல்வம், கதிர்காமர், துரையப்பா போன்றோர் ஏதோ ஒருவிதத்தில் தமிழர் நலனிற்கு எதிரான வகையில் ஏதோவோரிடத்தில் செயற்பட்டார்கள். அதற்காக அவர்கள் கொல்லப்பட்டது சரியா என்றால், இல்லையென்பதே பதில். ஏனென்றால், இக்கொலைகள் எல்லாம் புலிகள்மீது பயங்கரவாதிகள் எனும் நாமத்தை மேலும் மேலும் ஆணித்தரமாக இறுக்குவதற்குப் பயன்பட்டனவேயன்றி எமக்கு உதவவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ragunathan said:

வேடிக்கையாக இருக்கிறது ரகு உங்கள் சமாளிப்பு! புலிகளின் பூரண கட்டுப் பாட்டில் இருந்த வடக்கு அல்லது கிழக்கில் எத்தனை அரசியல் கட்சிகள் இயங்கின என்று உங்களால் சொல்ல முடியுமா? புலிகளால் எடுக்கப் பட்ட முடிவுகள் (திரைப்படத் தடை, சினிமாப் பாட்டுத் தடை, பாஸ், பிணை. போன்றவை) எத்தனை பொதுஜன அமைப்புகளால் சவாலுக்குட்படுத்தப் பட்டன? 

புலிகள் கொன்றது பிழை, ஆனால் அது அவர்களை கெட்ட விம்பமாகக் காட்டியது என்ற ஒரே காரணத்திற்காக என்கிறீர்கள்! மேலுள்ள பட்டியலில் உள்ளோரில் பலர் கொலை செய்யப் பட வேண்டிய அளவுக்கு என்ன செய்தார்கள் என்று சொல்லுங்கள்? யோகேஸ்வரன், திருமதி யோகேஸ்வரன், நீலன் திருச்செல்வம், ஏன் அமிர் கூட-இவர்களின் குற்றம் என்னவென்று நீங்களே இங்கு பட்டியலிட முடியுமா? 

இலங்கையில் பொளத்த பேரினவாத அரசிடம் இருந்து தமிழர்களுக்கான அடிப்படை உரிமைகளை அடையும் முயற்சியில் அரசியல் அணுகுமுறையில் முன்னேற்றம் அற்ற நிலையிலேயே ஆயுதப்போராட்டம் உருவாகியது. இவ் ஆயுதப்போராட்டம் வலுவடையும்போது ஆயுதப்போராட்டத்தில் இருந்து அந்நியப்பட்டும் ஆயுதப் போராட்டத்தை எதிர்த்தும் அல்லது சந்தேகத்திற்கு இடமாக  செயற்பட்ட அரசியல் முன்னெடுப்புகள் அது சார்ந்த செயற்பாடுகள் இயல்பாக எதிர்க்கப்பட்டது. கொலைகள் நடைபெற்றது. எதிர்காலத்தில் மீள ஒரு ஆயுதப்போராட்டம் தோன்றினாலும் அதற்கு அந்நியப்பட்ட அரசியல் செயற்பாடுகள் எதிர்க்கப்படும். கொலைகள் நடைபெறும். இவ்வாறான நிகழ்வுகளை அந்தந்த காலச் சமூக அரசியல் சூழலே தீர்மானிக்கும். 

தமிழ்ச்சமூகத்தில் உள்ள சமூக முரண்பாடுகள் சாதீயத் தளங்களின் பண்பாட்டு உளவியல் அமைப்பு, மத பிரிவினைகள், மதப் பிரிவினைகள் எனும்போது இஸ்லாமிய இந்து முரண்பாடுகள், கத்தோலிக்க இந்து இணக்கப்பாடும் அதே நேரம் புரட்டஸ்தாந்து இந்து எதிர்ப்பு நிலைப்பாடும். (நவாலி தேவாலயப் படுகொலையை சிங்களப் பேரினவாதிகளை முந்திக்கொண்டு கதிர்காமர் நியாயப் படுத்தியதற்கும் சிங்களத்திற்கு வக்காலத்து வாங்கியதற்கும் UTHR அமைப்பின் சதிப்பிரச்சாரங்களும் புரட்டஸ்தாந்து முரண்பாடுகளை தவிர்த்துப் பார்க்க முடியாது) இதற்கு அப்பால் பிரதேசவாதப் பேதங்கள், புத்திஜீவிகள் என்றழைக்கப்படுவோர்க்கும் பொளத்த பேரினவாதகளுக்கும் இடையேயான அனுசரிப்பு போக்கு, புறநிலையில் இந்திய மத்திய ஆழும்வர்க்கத்தின் பிரித்தாளும் சூழ்ச்சி விழையாட்டுக்களில் சிக்குண்ட ஆயுதமேந்திய இயக்கங்களும் என ஜனநாயகத்திற்கு சம்மந்தமில்லாத ஒரு தளச் சூழுலில் நடந்த ஆயதப்போராட்டத்தில் தியாகங்கள் அர்பணிப்புகள் படுகொலைகள் ஜனநாயகம் பயங்கரவாதம் அனைத்தும் இருந்தது. இனி ஒரு ஆயுதப்போராட்டம் ஆரம்பித்தாலும் இவை அனைத்தும் இருக்கும் ஏனெனில் போராட்டத்திற்கு முன்னரும் போராட்டகாலத்திலும் போராட்டத்தின் பின்னரான தற்போதும் அரசியலும் ஆயுதப்போராட்டமும் நடக்கும் தளம் ஒன்றுதான். அதில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஏற்படவும் முடியாது. 

41 minutes ago, Justin said:

புலிகள் கொன்றது பிழை, ஆனால் அது அவர்களை கெட்ட விம்பமாகக் காட்டியது என்ற ஒரே காரணத்திற்காக என்கிறீர்கள்! மேலுள்ள பட்டியலில் உள்ளோரில் பலர் கொலை செய்யப் பட வேண்டிய அளவுக்கு என்ன செய்தார்கள் என்று சொல்லுங்கள்? யோகேஸ்வரன், திருமதி யோகேஸ்வரன், நீலன் திருச்செல்வம், ஏன் அமிர் கூட-இவர்களின் குற்றம் என்னவென்று நீங்களே இங்கு பட்டியலிட முடியுமா? 

இவர்களைக் கொன்றது புலிகள் தான் என்பதற்கு உறுதியான ஆதாரங்களை உங்களால் தர முடியுமா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.