Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பதவிகளைத் துறக்க தீர்மானம் ?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பதவிகளைத் துறக்க தீர்மானம் ?

அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சு பதவிகளை துறக்க தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Risignation.jpg

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன்  அலரி மாளிகையில் இடம்பெற்ற  கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பை விடுப்பதற்கான ஊடக சந்திப்பு இன்று பிற்பகல் 2 மணிக்கு இடம்பெறவுள்ளது.

அமைச்சர் ரிஷாத் பதியுதீன், மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் ஆகியோரை பதிவியிலிருந்து ஜனாதிபதி விலக்க வேண்டும் அல்லது அவர்கள் பதவிகளில் இருந்து விலக வேண்டும் எனக் கோரியும் அவர்களை குற்றப்புலனாய்வு பிரிவில் விசாரணைக்குட்படுத்த வேண்டும் எனக் கோரியும் கண்டியில் அதுரலிய ரத்ன தேரர் கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து ( 31.05.2019 )உண்ணாவிரதப் போராட்டத்திலீடுபட்டு வருகின்றார்.

இந்நிலையிலேயே தற்போது நாட்டின் அரசியல் விவகாரம் சூடு பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.virakesari.lk/article/57375

 

போர்க்குற்றம் தொடர்பில் இராணுவத்திற்கு எதிரான விசாரணை அவசியமில்லை. போரில் நடந்த இழப்புக்களுக்கும் குற்றங்களுக்கும் தீர்வு வேண்டும் என்று தமிழ் மக்கள் அடம்பிடித்தால், நல்லிணக்கம் ஏற்பட மாட்டாது என்று தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைப்பு அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிர ஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் 2016இல் தெரிவித்திருந்தார்.

இன்றைய நிலையில், தமிழ் பேசும் மக்கள் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு சகல முஸ்லீம்களும் தண்டிக்கப்பட வேண்டும் எனவோ இல்லை சிங்கள இனவாத அரசு செய்யும் குற்றங்களை ஆதரிக்கவோ மாட்டார்கள்.

ஆனால், முஸ்லீம் தலைவர்கள் தமிழர் தலைமையுடன் இணைந்து பயணித்தால் மட்டுமே சிங்கள பௌத்த சிந்தாத்தத்தில் இருந்து நாம் மீள முடியும். இல்லையேல் நாம் இரண்டு சிறுபான்மை இனமும் அழிந்தேவிடுவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை நாடாளுமன்றம்: முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் ராஜிநாமா

 
முஸ்லிம்களின் பாதுகாப்புக்கு மிகக் கடுமையான அச்சுறுத்தல்படத்தின் காப்புரிமை Getty Images

இலங்கை நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் தங்கள் பதவியை கூட்டாக ராஜிநாமா செய்துள்ளனர்.

தங்கள் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை முடியும் வரை தாங்கள் பதவியில் இருக்க விரும்பவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை நாடாளுமன்றம்: முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் ராஜிநாமா

முன்னதாக, முஸ்லிம்களின் பாதுகாப்புக்கு மிகக் கடுமையான அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளமை காரணமாக, கிழக்கு மாகாண ஆளுநர் பதவியை தான் ராஜிநாமா செய்துள்ளதாக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.

"இன ரீதியாக முஸ்லிம்களுக்கு கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனால் நாட்டு மக்களுக்கும் கடுமையான பாதிப்பு ஏற்படும். ஏற்கனவே, முஸ்லிம்களின் சொத்துக்கள் வன்முறையின் மூலம் அழிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் மீண்டும் முஸ்லிம் சமூகத்துக்கு ஒரு அழிவு ஏற்படக் கூடாது என்பதில் நான் கவனமாக உள்ளேன்.

எனவே, முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும், அந்த சமூகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக வேண்டியும் நான் ராஜிநாமா செய்துள்ளேன்" என்றும் ஆளுநர் ஹிஸ்புல்லா கூறினார்.

இதேவேளை, முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு ஜனாதிபதியிடம், இந்த ராஜிநாமா மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் பிபிசியிடம் ஹிஸ்புல்லா மேலும் தெரிவித்தார்.

ஹிஸ்புல்லா Image caption ஹிஸ்புல்லாவின் ராஜிநாமா கடிதம்

ஆளுநர்களான அசாத் சாலி மற்றும் எம்.எல்.ஏ மற்றும் எம்.ஹிஸ்புல்லா ஆகியோரின் ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக்கொண்டுள்ளார். ஜனாதிபதி ஊடகப்பிரிவின் ட்விட்டர் தளத்தில் இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

என்ன நடந்தது?

முஸ்லிம் அமைச்சர் ஒருவர் மற்றும் இரண்டு முஸ்லிம் ஆளுநர்களை பதவி நீக்கம் செய்யுமாறு வலியுறுத்தி கண்டி நகரில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

கண்டியில் வெடித்தது போராட்டம்: முஸ்லிம் அமைச்சர், ஆளுநர்களை நீக்கக்கோரிக்கை

அமைச்சர் ரிசாட் பதியூதீன், மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஆகியோரையே பதவி நீக்குமாறு வலியுறுத்தி, நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரெலிய ரத்தன தேரர் கடந்த 31ஆம் தேதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்திருந்தார்.

கண்டி தலதா மாளிகைக்கு முன்னபாக அத்துரெலிய ரத்தன தேரரினால் ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரத போராட்டம் நான்காவது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

முஸ்லிம் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: இலங்கை ஆளுநர் ராஜிநாமா

இந்த நிலையில், அத்துரெலிய ரத்தன தேரர் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், மட்டக்களப்பில் போராட்டமொன்றை ஆரம்பித்திருந்தனர்.

அத்துடன், அத்துரெலிய ரத்தன தேரருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், கண்டி தலதா மாளிகைக்கு அருகில் சென்ற பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர், நேற்றைய தினம் விசேட அறிவிப்பொன்றை விடுத்திருந்தார்.

இன்று நண்பகல் 12 மணிக்கு முன்னதாக குறித்த அரசியல்வாதிகள் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என அரசாங்கத்திற்கு கலகொடஅத்தே ஞானசார தேரர் காலக்கேடு விதித்தார்.

இந்த நிலையில், கண்டி நகரிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடுமாறு கண்டி வர்த்தக சங்கம் அறிவித்தல் விடுத்துள்ளது.

இதன்படி, கண்டி நகரிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளதுடன், பல்வேறு ஆர்ப்பாட்ட பேரணிகளும் இன்று காலை முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கண்டி நகரை சேர்ந்த வர்த்தகர்கள், தேரர்கள் உள்ளிட்ட பலர் இந்த ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அமைச்சர் ரிஷாட் பதியூதீன், ஆளுநர்களான அசாத் சாலி மற்றும் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஆகியோரை பதவி நீக்கம் செய்யுமாறு வலியுறுத்தும் பதாகைகளை ஏந்தியவாறு இந்த ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கண்டி நகர் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், அங்கு மக்கள் நடமாட்டமும் குறைவடைந்துள்ளது.

https://www.bbc.com/tamil/sri-lanka-48497343

61696328_507476089790609_511547975519331

 

இருபத்திஒன்று கையொப்பங்களை கண்டு பல சிங்களவர்கள் எழுப்பும் கேள்வி : எவ்வாறு இவ்வளவு அமைச்சர்கள் உருவெடுத்தார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ampanai said:

.....முஸ்லீம் தலைவர்கள் தமிழர் தலைமையுடன் இணைந்து பயணித்தால் மட்டுமே சிங்கள பௌத்த சிந்தாத்தத்தில் இருந்து நாம் மீள முடியும். இல்லையேல் நாம் இரண்டு சிறுபான்மை இனமும் அழிந்தேவிடுவோம்.

தீர்க்கமான கருத்து சகோ,ஆனால் இதை உணரும் ஆற்றலும் திறமையும் முஸ்லிம் தலைமைகளுக்கு இல்லையே.அவர்களின் முயற்சி ஒன்றுதான் அதாகப்பட்டது தமிழரைஏறி மிதித்து மேலாகச்சென்று தம்மையும் தமது இனத்தையும் அபிவிருத்தி செய்வது.

சுதந்திரத்துக்கு முன்னர் ஆசியாவின் சொர்க்க பூமியாகவே இலங்கை விளங்கியது. சுதந்திரம் கிடைத்த பின்னரும் நாட்டு மக்கள் ஐக்கியமாகவே வாழ்ந்தனர். எனினும், பௌத்த மத அடிப்படைவாதிகளாலேயே நாட்டின் தலைவிதி தலைகீழாக மாறியது.

இன, மதம், குல பேதங்களால் மக்களிடையே முரண்பாடுகள் உருவாகின. இதனால், பொருளாதாரரீதியிலும் வீழ்ச்சியந்தது இலங்கை.

ஒரு காலகட்டத்தில் சிங்கபூரை இலங்கைபோல் மாற்றுவேன் என அந்நாட்டு பிரதமர் லீ குவான் அறிவித்திருந்தார். ஆனால், இன்று சிங்கபூர் எங்கே? இலங்கை எங்கே?

பண்டா, செல்வா உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டிருக்குமானால் இலங்கையில் உள்நாட்டுப் போர் இடம்பெற்றிருக்காது. தமிழ் மக்களும் தனிநாடு வேண்டுமென கோரியிருக்கமாட்டார்கள். பிக்குகள் சிலர் போர்க்கொடி தூக்கியதாலேயே உடன்படிக்கையை கிழித்தெறிய வேண்டிய நிலை பண்டாரநாயக்கவுக்கு ஏற்பட்டது. அவர் இறுதியில் ஒரு பௌத்த பிக்குவால் கொல்லப்பட்டார். இதன் விளைவு பாரதூரமாக அமையும் என பண்டாரநாயக்க எச்சரிக்கை விடுத்திருந்தார். அவர் கூறியது போலவே உள்நாட்டு போர் தலைதூக்கியது.

நகத்தால் கிள்ளியெறிந்து தீர்த்து வைக்கக்கூடிய பிரச்சினையை, அடிப்படைவாதிகளே போர்க்களத்தை நோக்கி நகர்த்தினர். இதனால் 30 ஆண்டுகள் இன்னல்களை எதிர்கொண்டோம். எமது இன்னல்களில் முஸ்லீம் அரசியல்வாதிகள் பங்கெடுக்கவில்லை, நடுநிலைமையும்  வகிக்கவில்லை. 

இன்று, சிங்கள ஆட்சியாளர்கள் முஸ்லீம்களை குறிவைக்கிறார்கள்.

எமது தலைவர்கள் முன்னாள் இரண்டு தெரிவுகள் உள்ளன. உண்மையின் பக்கம் நிற்பது, அடுத்தது சிங்கள பேரினவாதத்துடன் இணைவது. 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:

சுதந்திரத்துக்கு முன்னர் ஆசியாவின் சொர்க்க பூமியாகவே இலங்கை விளங்கியது. சுதந்திரம் கிடைத்த பின்னரும் நாட்டு மக்கள் ஐக்கியமாகவே வாழ்ந்தனர். எனினும், பௌத்த மத அடிப்படைவாதிகளாலேயே நாட்டின் தலைவிதி தலைகீழாக மாறியது.

என்று இலங்கையில் புத்தபிக்குகளின் அரச ஆதிக்கம் உடைந்து, அரசானது பாராளுமன்றப் பிரதிநிதிகளின் கட்டுப்பாட்டுக்குள் மட்டும் செயல்படத் தொடங்குகிறதோ, அன்றுதான் மொழிப் பிரச்சனையில் தொடங்கி, இலங்கை மக்களிடம் புகுத்தப்பட்டுள்ள மதவெறியும் அடங்கி, ஒரு புதுயுகம் மலர வழியேற்படும். அனைத்து மதத்தினரதும் மதக் கோட்பாடுகளும் இலங்கை அரசின் சட்டங்களை மீறாமலே கடைப்பிடிக்கும் நிலையை ஏற்படுத்தினால்... ஆசியாவில் மட்டுமல்ல, இந்தப் பூமிப் பந்திலேயே இலங்கை ஒரு சொர்க்கபுரியாக விளங்கும்.!  

5 hours ago, Paanch said:

என்று இலங்கையில் புத்தபிக்குகளின் அரச ஆதிக்கம் உடைந்து, அரசானது பாராளுமன்றப் பிரதிநிதிகளின் கட்டுப்பாட்டுக்குள் மட்டும் செயல்படத் தொடங்குகிறதோ, அன்றுதான் மொழிப் பிரச்சனையில் தொடங்கி, இலங்கை மக்களிடம் புகுத்தப்பட்டுள்ள மதவெறியும் அடங்கி, ஒரு புதுயுகம் மலர வழியேற்படும். அனைத்து மதத்தினரதும் மதக் கோட்பாடுகளும் இலங்கை அரசின் சட்டங்களை மீறாமலே கடைப்பிடிக்கும் நிலையை ஏற்படுத்தினால்... ஆசியாவில் மட்டுமல்ல, இந்தப் பூமிப் பந்திலேயே இலங்கை ஒரு சொர்க்கபுரியாக விளங்கும்.!  

 

நீங்கள் சொன்னது நடக்க சாத்தியம்  மிக குறைவு. மாறாக இலங்கை மூன்றாக பிரிய கூடிய சாத்தியம் தான் கூட. அது ஒரு அரசியல் பொறிமுறை ஊடக நடக்கலாம் (ஈராக்கில் அரசியல் சாசனத்தின் கீழ் பிரகடனப்படுத்தப்படட  குர்திஷ் சுயநிர்வாக கட்டமைப்பு ). எல்லா சமூகங்களும் முன்னேற இதுதான் சிறந்த வழி . 

தமிழ் பேசும் முஸ்லிம்களும் நாங்களும் ஒன்று தான் என்று கற்பனை  செய்து அவர்களும் நாங்களும் ஒன்றாக ஒரு அலகின் கீழ் வாழலாம் என்று நினைத்தால் ஒருவரும் முன்னேறமாட்டார்கள். எங்கள்  இரு இனமும் சிறுபான்மையினர் என்ற அடிப்படையிலும்  அப்பாவி முஸ்லிம்கள் மீது நடக்கிற வன்முறைகளை நாங்களும் அனுபவித்தவர்கள் என்ற அடிப்படையிலும் மாத்திரம் எங்களுக்கும் அவர்களும் இடையில் ஒற்றுமை இன்று துளிர்விடுகிறது. ஆனால் இந்த அனுதாபபும் அரசியல் வாதிகளின் கருத்துக்களும் நிரந்தர ஒற்றுமைக்கு வழிவகுக்கும் என்பது ஒருவித அங்கலாய்ப்பு மட்டுமே. 

உலகளாவிய இஸ்லாமிய சித்தாந்தத்திலும், சவூதி வகாபி ஆதரவில் நடக்கும் மன்னர் ஆட்சி மற்றும் பலஸ்தீன-இஸ்ராயீல் பிணக்கிலும் மாற்றம் வரும் வரை பிரச்சினைகள் தொடர சாத்தியங்கள் தான் கூட. என்னை பொறுத்தவரையில் பிரச்சினைகள் இன்னும் கூர்மையடைய கூடிய வாய்ப்புகள் தான் அதிகம். தமிழரை பொறுத்தவரையில் முஸ்லீம் பெரும்பான்மை பிளவு இலங்கை இதுவரை தனது அரசியல் அமைப்பு மற்றும் நாட்டின் கட்டமைப்பு பற்றி சர்வதேச அளவில் வைத்திருந்த பிம்பத்தை உடைக்க இன்னொரு வாய்ப்பை தந்துள்ளது. இதுவரை பாலஸ்தீனம் உட்பட பல அராபிய சக்திகளை தன் பக்கம் இழுத்து தன் பக்க அநியாயங்களை நியாயங்களாக இந்த முஸ்லீம் அரசியல் வாதிகள் ஊடக இலங்கை செய்துவந்துள்ளது. இன்று அங்கு முஸ்லிம்களுக்கு நடக்கிற விடயங்கள் இந்த அநியாயங்களை நியாயங்களாக படம்காட்டி இலங்கையின் சிறுபான்மையினரின் பாதுகாப்பை தகுந்த அரசியல் கட்டமைப்பு ஊடக உறுதிப்படுத்த தவறியதன் பின் விளைவே என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. இந்த கடுப்பான உண்மையை புறம் தள்ளி நாம் தொடர்ந்து அரசியல் செய்து கொண்டு இருப்பதாக தான் எனக்குப்படுகிறது .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களம் தான் மட்டும் வாழ பல மெலோடிகளை வைத்திருக்கின்றது. அது தமிழர் முஸ்லீம் என்று மாற்றி மாற்றி வாசிக்கின்றது. இன்று முஸ்லீம்களை நோக்கி வாசிக்கின்றது

முஸ்லீம் கட்சிகள் ஒன்றாக, கட்சி சார்பற்ற,  பதவி விலகிய, ஒற்றுமை பாரட்டத்தக்கது. 

அது, தமிழர் தரப்பில் இன்றும் இல்லை. 

நாளை சிங்கள இனவாதிகள் கட்சிரீதியாக கூட்டுச்சேரவும், உள்ளூராக மதிக்கவும் கூட முஸ்லீம் தலைவர்களுடன்  முனைவார்கள். முஸ்லீம் தலைவர்களும் தங்கள் மக்களை பல்வேறு வழிகளிலும் வளர்த்துவிடுவார்கள், குறிப்பாக பொருளாதார ரீதியாக. . 

தமிழர் தலைமைகளை தொடர்ந்தும் பிரித்தே ஏமாற்றுவார்கள், சிங்கள இனவாதிகள்.

எமது அரசியலில் பலவேறு தலைமைகள் இருப்பதில் தவறு இல்லை. ஆனால், எமது மக்களுக்கா என்றும் ஒன்று சேராமல் இருப்பதே எமது ஊழ்வினை.  

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம் அரசியல் தலைவர்கள் மிகத்தெளிவான செய்தியொன்றை சிங்களத்திற்கு சொல்லியுள்ளார்கள் வரும் காலத்தில் பாராளுமன்றத்தில் பேசிப்பேசி வாழ்க்கையை ஒட்டுபவர்கள் அல்ல என்பதே அச்செய்தி , ஒரு காலத்தில் போர் என்றால் போர் சமாதாமனம் என்றால் சமாதானம் என்று சிங்களம் அலட்சியப்படுத்தியபோது எமது அரசியல் தலமைகள் பதவி ஆசைக்காக பாராளுமன்ற ஆசனங்களை விடமால் எமது மக்களின் உரிமைகளை அன்றும் இன்றும் விற்றுப்பிழைக்கும் தமிழ் அரசியல்வாதிகள் இவர்களிடமிருந்து பாடம் கற்க வேண்டும் , மறு வளமாக முஸ்லீம்களின் ஒற்றுமை உணர்வு சகல தரப்புகளிலும் காணப்படுகிறது இவர்களை தமிழரின் போராட்டத்தை அழித்தது போல் அழிக்கமுடியாது என்பது தெளிவாக தெரிகிறது , முஸ்லீம்களின் போர் அறைகூவலாகவே இந்த இராஜினாமா உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, vasee said:

முஸ்லீம் அரசியல் தலைவர்கள் மிகத்தெளிவான செய்தியொன்றை சிங்களத்திற்கு சொல்லியுள்ளார்கள் வரும் காலத்தில் பாராளுமன்றத்தில் பேசிப்பேசி வாழ்க்கையை ஒட்டுபவர்கள் அல்ல என்பதே அச்செய்தி , ஒரு காலத்தில் போர் என்றால் போர் சமாதாமனம் என்றால் சமாதானம் என்று சிங்களம் அலட்சியப்படுத்தியபோது எமது அரசியல் தலமைகள் பதவி ஆசைக்காக பாராளுமன்ற ஆசனங்களை விடமால் எமது மக்களின் உரிமைகளை அன்றும் இன்றும் விற்றுப்பிழைக்கும் தமிழ் அரசியல்வாதிகள் இவர்களிடமிருந்து பாடம் கற்க வேண்டும் , மறு வளமாக முஸ்லீம்களின் ஒற்றுமை உணர்வு சகல தரப்புகளிலும் காணப்படுகிறது இவர்களை தமிழரின் போராட்டத்தை அழித்தது போல் அழிக்கமுடியாது என்பது தெளிவாக தெரிகிறது , முஸ்லீம்களின் போர் அறைகூவலாகவே இந்த இராஜினாமா உள்ளது.

சிங்களத்தின்....அடுத்த  தெரிவு.....அனேகமாக.....இராணுவ ஆட்சியை நோக்கியதாகவே இருக்கும்!

அந்தத் தெரிவை....எடுக்கும் போது.....போராட்டங்களை...நசுக்க வேண்டிய தேவையே வராது!

இதுவே...எமக்கான தீர்வையும் நோக்கிய பயணத்தின்.....ஆரம்பமாகவும்....அமையும் ..!

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ampanai said:

முஸ்லீம் கட்சிகள் ஒன்றாக, கட்சி சார்பற்ற,  பதவி விலகிய, ஒற்றுமை பாரட்டத்தக்கது. 

அது, தமிழர் தரப்பில் இன்றும் இல்லை. 

நாளை சிங்கள இனவாதிகள் கட்சிரீதியாக கூட்டுச்சேரவும், உள்ளூராக மதிக்கவும் கூட முஸ்லீம் தலைவர்களுடன்  முனைவார்கள். முஸ்லீம் தலைவர்களும் தங்கள் மக்களை பல்வேறு வழிகளிலும் வளர்த்துவிடுவார்கள், குறிப்பாக பொருளாதார ரீதியாக. . 

தமிழர் தலைமைகளை தொடர்ந்தும் பிரித்தே ஏமாற்றுவார்கள், சிங்கள இனவாதிகள்.

எமது அரசியலில் பலவேறு தலைமைகள் இருப்பதில் தவறு இல்லை. ஆனால், எமது மக்களுக்கா என்றும் ஒன்று சேராமல் இருப்பதே எமது ஊழ்வினை.  

இவர்கள் எல்லோரும் எதோ ஒரு வகையில் 
குண்டு வெடிப்பு பயங்கரவாதிகளுடன் தொடர்பு உடையவர்கள் 
குண்டு வெடிப்பு வழக்கு வரும்போது பல சிக்கல் வர இருக்கிறது 

இவர்கள் இப்படியே இருந்தால் இவர்களில் சிலர் சிறைபோவது உறுதி 
ஆதலால் இப்படி ஒரு நாடகம் போடுகிறார்கள் இதன் மூலம் அரசை 
பணிய வைக்க பார்க்கிறார்கள் ....

சிங்களவன் இவர்களை வென்றவன் என்பதுதான் இனி சிக்கலானது. 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

சிங்களம் தான் மட்டும் வாழ பல மெலோடிகளை வைத்திருக்கின்றது. அது தமிழர் முஸ்லீம் என்று மாற்றி மாற்றி வாசிக்கின்றது. இன்று முஸ்லீம்களை நோக்கி வாசிக்கின்றது

நாங்கள் தமிழர் தலைமைகளை விமர்ச்சித்தோம், எங்களை நாங்களே விமர்ச்சித்தோமா.....? இன்றும் சிந்துநதியின் மிசை நிலவினிலே பாடலை தமிமினம் ரசிக்கத்தான் செய்கிறது. அதன் உள்ளார்த்தம் என்ன? சிங்களமா மெலோடி வைத்தது.? எந்தத் தமிழனாவது... நான் உட்பட வெகுண்டெழவில்லையே ஏன்.? எனக்கே புரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

 இப்ப எந்த அரசு அதிகாரத்தில் இருக்கு.....இவர்கள் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருக்கினம் ......பா.உறுப்பினராக தொடர்ந்து பணியாற்றுவார்களா?

மேல் மாகாணத்திற்கான புதிய ஆளுநராக ஏ.ஜே.எம்.முஸம்மில் நியமிக்கப்பட்டுள்ளார்.  ஆம், இதன் மூலம் இஸ்லாமிய இனத்தின் ஒற்றுமையை கேள்விக்குறியாக்கியுள்ளது சிங்களம்.  

https://en.wikipedia.org/wiki/A._J._M._Muzammil
     

  • கருத்துக்கள உறவுகள்

ஜெய் ஜக்கம்மா ...ஜெய் ஜெய் ஜக்கம்மா !!!!
நல்ல காலம் பொறந்திருக்கு ...நல்ல காலம் பொறந்திருக்கு 🐃 🐃 🐃 🐃

ஆபத்தான அப்துல்லா ...அன்பழகனாகவும் 
முக்காடு முனீரா ... மீனாட்சியாகவும் 
துறந்து போன தங்கள் ஆணிவேரை 
தேடி வரும் காலம் வரும் !!!

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியும் சொல்லுறீங்க.. அங்கால பார்ளிமன்ரில போய் வாயால விளாசிட்டும் இருக்கினமே. எதுதான் உண்மையோ.. இல்ல வழமையை விட.. அடிக்கடி.. பிரட்டிப் பிரட்டிப் போடினமோ..?! 😂

சுயநலம் கருதாத அரசியலே விடுதலையைப் பெற்றுத் தரும்!

கட்சி பேதங்கடந்து, தேர்தல் அரசியல் பற்றி இம்மியும் கருதாமல் முஸ்லிம் இனம் என்ற ஒரே இலக்கில் முஸ்லிம் அரசியல் கட்சிகள் ஒன்றுபட்ட விதத்தைக் கண்டு வியக்காமல் இருக்க முடியாது.

தமிழ் மக்கள் வன்னிப் போரில் கொன்றொழிக்கப்பட்டபோதுகூட எங்கள் அரசி யல்வாதிகள் ஒன்றுபடவில்லை.  இனியும் ஒற்றுமைப்படப் போவதில்லை என்பது நிறுதிட்டமான உண்மை.

மிகப்பெரும் தியாகத்தை நடத்திய வீர இளைஞர்கள் பிறந்து வாழ்ந்த தமிழினத்தில் இன்று துரோகிகள் சொந்த இலாபத்துக்காகவும் பதவி ஆசையாலும் எங்கள் இனத்தை விற்றுவிட்டதுதான் மிகப்பெரிய வேதனை.
 
ஐ.நா மனித உரிமைகள் பேரவை இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது என்பதில்கூட ஒருமித்துத் தீர்மானம் எடுக்க முடியாத தமிழ் அரசியல்வாதிகளை இன்னும் நம் தமிழினம் நம்புகிறது என்றால் யார்தான் என்ன செய்ய முடியும். 
 
தமிழ் மக்களின் ஏகோ பித்த ஆதரவைப் பெற்ற வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை இரவோடு இரவாக ஆளு நர் அலுவலகத்தில் கையளிக்கின்ற கயமை நடந்தது. எப்படி இருக்கிறது எங்கள் இனத்தின் ஒற்றுமை?
 

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யாவிட்டால், எதிர்க்கட்சித் தலைவர் பதவி யில் இருந்து விலகுவேன் என்று கூறுகின்ற திராணி சம்பந்தரிடம் இருந்ததா? அல்லது இதையாவது எடுத்துக்கூறும் துணிவேனும் அறம் உரைப்போரிடம் இருந்ததா?

சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளுக்காக எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இராஜினாமாச் செய்திருந்தால் அது ஒரு வரலாறாகி இருக்கும்.
 
ஆனால் நடந்தது என்ன? நீங்கள் எதிர்க் கட்சித் தலைவராக இருக்க முடியாது என்று கூறி சபாநாயகர் துரத்துமளவுக்கு நிலைமை வந்தது என்றால், இனிமேலாவது; இனத்துக் காக ஒன்றுபடுவது எப்படி என்பதை முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் இருந்து கற்றுக் கொள்ளுங்கள்.
 
குறிப்பு : வலம்புரி பத்திரிக்கை ஆசிரியர் தலையங்கத்தில் இருந்து 
18 hours ago, nedukkalapoovan said:

இப்படியும் சொல்லுறீங்க.. அங்கால பார்ளிமன்ரில போய் வாயால விளாசிட்டும் இருக்கினமே. எதுதான் உண்மையோ.. இல்ல வழமையை விட.. அடிக்கடி.. பிரட்டிப் பிரட்டிப் போடினமோ..?! 😂

அவர்கள் பதவியிலிருந்து தான் விலகினார்கள், பாராளுமன்ற உறுப்பினர்களாக இருப்பதிலிருந்து விலகவில்லை. தாம் இந்த அரசாங்கத்துக்கு பக்க பலமாக தொடர்ந்து இருப்போம் என்றும் ஹக்கீம் கூறியிருந்தார்.

இன்னொரு தேர்தலில் போட்டியிட மாட்டோம் என்றோ மீண்டும் அமைச்சுப்பதவிகளை ஏற்க மாட்டோம் என்றோ கூட யாரும் சத்தியம் செய்யவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

 

பொதுபல சேனாவை பெயர் சொல்லாமல் 'பயங்கரவாதிகள்' என றிசாத் ஆவேசத்துடன் குறிப்பிடுகின்றார். ஏன் பெயர் சொல்ல தயங்குகிறார்? என்ற கேள்வி எழுகின்றது. 

இந்த பேச்சில் தமிழ் அரசியல் கைதிகள், பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்களுக்காவும் இவர் குரல் கொடுக்காமல் போனது வருத்தமானதே. 

  • கருத்துக்கள உறவுகள்

கிஸ்புல்லாவின் அறக் கருத்துக்கள்.
இதை ஒரு தமிழன்  பேசி இருந்தால்,  அவன்  இனவாதி.  இதை எந்த வகையில் எடுத்து கொள்வது...??

10 hours ago, தமிழ் சிறி said:

கிஸ்புல்லாவின் அறக் கருத்துக்கள்.
இதை ஒரு தமிழன்  பேசி இருந்தால்,  அவன்  இனவாதி.  இதை எந்த வகையில் எடுத்து கொள்வது...??

அவர் வார்த்தைக்கு வார்த்தை புலிகளை இழுத்து கதைத்ததால் அவர் இனவாதி இல்லை. 😀

புலிகள் வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகம் என்று இஸ்லாமியர்களையும் உள்ளடக்கி தான் சொன்னார்கள். இவர் முஸ்லிம் ஒருவர் கிழக்கிற்கு முதலமைச்சராக வந்தால் பின் புலிகள் வடக்கு கிழக்கு தமிழரின் தாயகம் என்று சொல்லுவினமோ என்று கேட்டிருக்கிறார். 

தமிழர்கள் வேறு முஸ்லிம்கள் வேறு என்று இவர்கள் போட்ட கூத்து இப்ப இலங்கை முஸ்லிம்கள் இஸ்லாமியப் பயங்கரவாதிகள் என்ற பெயரில் வந்து நிற்கிறது. சாதாரண சிங்கள மக்கள் முஸ்லிம்களை சமூக வலைத்தளங்களில் நல்லா வெளுத்து வாங்கினம்.

பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் 9/11 தாக்குதலுக்கு முன் 80% ஆன பயங்கரவாத தற்கொலைக்குண்டு தாக்குதல்களை தமிழ் புலிகள் நடத்தியிருந்தார்கள், ஆனால் அதை இந்துக்களின் தாக்குதல் என கூறவில்லை, அது உண்மை, மதத்திற்கும் இதற்கும் சம்பந்தமில்லை என லூசுத்தனமா கூற (அவருக்கும் புலிகளை இழுக்காவிட்டால் செமிக்காது போல) அதை சில முஸ்லிம்கள் தூக்கிப்பிடித்து பகிர, சிங்களவர்கள், புலிகளின் தாக்குதல்களுக்கு அரசியல் காரணம் இருந்தது, அவர்கள் மதம் சார்ந்து இயங்கவில்லை, அவர்களில் இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதத்தவர்கள் இருந்தார்கள் என எழுதுகிறார்கள். 😎

அதை பொறுக்கேலாமல் முஸ்லிம்கள் அவர்களுக்கெதிரா வேறு தம்மை நல்லவர்களாக காட்டி எழுதுகிறார்கள். இது ஒரு உதாரணம். 😀

F12BC848-6B42-4EB6-A9F5-B9E1D4F7D4B4.jpg

Edited by Lara

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.