Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சீமானின் இன்னொரு புருடா பேச்சு - ஆள் வைத்து உபசரித்தார் பிரபாகரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ராசவன்னியன் said:

எங்காவது அப்படி சொல்லி இருக்கிறேனா..?

ஒவ்வொருவருக்கும் சில விருப்பு, வெறுப்புகள் இருக்கின்றன, சிலருக்கு சீமானின் உணர்ச்சிகரமான பேச்சுகள் பிடித்திருக்கிறது, ஆனால் அவைகள் பெரும்பான்மையோரை கவர்ந்திழுத்து ஈழத்திற்கு உதவும் சக்தியாக மாறுமா? என்பதுதான் கேள்வி. மாறினால் அனைவருக்கும் சந்தோசம்

சில முதிர்ச்சியற்ற பேச்சுகள் இருக்கும் ஆதரவு தளத்தையும் குறைத்துவிடக் கூடாது என்ற ஆதங்கம் தானப்பு.

உங்களாலோ அல்லது இங்கு சீமானுக்கு எதிராக கருத்து எழுதுபவர்களால் அல்லது என்னால் கூட தமிழர்களுக்காக சீமானின் அசுரத்தனமான இயங்கு நிலைக்கு போக முடியாது எங்களால் முடியாத ஒன்றை சீமான் செய்கிறார் தமிழுக்காய் உண்மையில் தமிழ் நல்லா இருக்கணும் என்றால் என்ன செய்யணும் ?

பதில் உங்களின் சிந்தனைக்கு .

சீமான் உங்களிடமோ எங்களிடமோ வந்து சொத்தை பிரித்து தா என்று திமுக அல்லது அதிமுக போன்று அராஜகம் பண்ணுவதில்லை அவர் சரியாக கதைக்கிறார் பிழையாக கதைத்தாலும் அது அவர் கொண்ட பாதை நாங்க அழுது ஒண்டும் ஆவபோவதில்லை .

  • Replies 193
  • Views 19.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அணுகுமுறையை மாற்றி ஈழ ஆதரவு சக்திகளை ஒருங்கிணைத்து செல்ல, விலைபோகாத அதே சமயம் மக்களுக்கு தீர்க்கமான முடிவெடுக்க, தமிழ் நலன் காக்க வசீகரமான தலைமை வேண்டும். தமிழ்நாட்டில் இதுவரை அப்படி யாரும் வரவில்லை. (தமிழை பேசி, தமிழால் தன்னை மட்டும் உயர்த்திக்கொண்டவர்களை பார்த்திருப்பீர்கள்.) மக்கள்தான் தேடி தெரிவு செய்ய வேண்டும்.

ஒருவேளை சீமான் பக்குவப்பட்டு அந்த இடத்திற்கு வந்தால் மிக்க மகிழ்ச்சியே.   

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ராசவன்னியன் said:

அவர் அப்படி வரும்வரை நாங்கள் அவர்மீது  கல்லெறிவதை நிப்பாட்டி வைப்போமே ...

  • கருத்துக்கள உறவுகள்

றீ

33 minutes ago, பெருமாள் said:

அவர் அப்படி வரும்வரை நாங்கள் அவர்மீது  கல்லெறிவதை நிப்பாட்டி வைப்போமே ...

அப்படீங்றீங்க..?

சரியானால் ஓ.கே! vil-donne5.gif

2 hours ago, ராசவன்னியன் said:

அணுகுமுறையை மாற்றி ஈழ ஆதரவு சக்திகளை ஒருங்கிணைத்து செல்ல, விலைபோகாத அதே சமயம் மக்களுக்கு தீர்க்கமான முடிவெடுக்க, தமிழ் நலன் காக்க வசீகரமான தலைமை வேண்டும். தமிழ்நாட்டில் இதுவரை அப்படி யாரும் வரவில்லை. (தமிழை பேசி, தமிழால் தன்னை மட்டும் உயர்த்திக்கொண்டவர்களை பார்த்திருப்பீர்கள்.) மக்கள்தான் தேடி தெரிவு செய்ய வேண்டும்.

ஒருவேளை சீமான் பக்குவப்பட்டு அந்த இடத்திற்கு வந்தால் மிக்க மகிழ்ச்சியே.   

அவ்வாறான எந்த ஒரு தலமையும் உருவாக ஈழத்திலும் தமிழகத்திலும் வாய்ப்பே இல்லை. புலிகளின் முடிவுக்குப் பின்னர் புலிக்கொடியையும் தலைவர் உருவப்படத்தையும் வெளிப்படையாக முன்நிறுத்தி செல்லும் சீமானின் போக்கு ஏனைய ஈழ ஆதரவாளர்களிடம் இருநது வேறுபடுகின்றது. இதற்கக சீமானை தூக்கி உள்ளுக்கு போட்டிருக்கலாம் , ராஜீவை தமிழ்மண்ணில் கொன்றோம் என்றதற்காகவேனும் உள்ளுக்கு போட்டிருக்கலாம். இருந்தும் அவை நடக்கவில்லை. புலிகளின் அடயாளத்தை முன்றாக அழிப்பதால் எந்த நன்மையும்  இலங்கை தொடர்பான அணுகுமுறையில் இந்தியாவுக்கு கிடையாது. இனிவரும் காலங்களில் இலங்கை இந்திய உறவுகளின் போக்குக்கு ஏற்ப இநத நிலமை மாறலாம் இதன் அடிப்படையில் சீமான்மேலும் வளரலாம் அல்லது காணாமல் போகலாம். புலிகளின் முடிவு, அதன் பின்னரான இலங்கை இந்திய உறவு, இவற்றின் மீதான உளவுத்துறையின் கவனிப்பு என்ற பலதரப்பட்ட நிலையில் ஒரு வாய்ப்பு சீமானுக்கு ஏற்படுகின்றது. அதை சரியாகப் பயன்படுத்திக்கொண்டார்.  ஈழப்போராட்ட முடிவோடு ஏற்பட்ட வாய்ப்பை திராவிட கருத்தியலை கடந்த தமிழ்த்தேசீய கருத்தியலை முன் நகர்த்தவும் தமிழ்நாட்டின் இயற்கை வளங்கள் மீதான விழிப்புணர்வு. அணு உலை மீதேன் திட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள் என பலதை இந்த வாய்ப்போடு இணைத்துக்கொண்டார். ஈழத்தமிழர்கள் மீதான மத்திய அரசின் துரோகங்கள் வெளிப்படையக பேசப்பட்டது. தமிழக அரசியலில் புதியதொரு சிந்தனை தோற்றுவிக்கப்பட்டது. சீமான் ஆட்சியை பிடிப்பார் அல்லது டெப்பாசிட் வாங்கமாட்டார் என்பது பெரியவிசயமில்லை. எதிர்காலத்தில் என்ன ஆவார் என்பது கூட நிச்சயமில்லை. ஆனால் ஒரு வாய்ப்பை தமிழர்கள் சார்பான பால பிரச்னைகளை பேசவும் பல கேள்விகளை எழுப்பவும் பல கோணத்திலும் சிந்திக்கவும் என பயன்படுத்திக்கொண்டார்.  இந்த வாய்பை எப்படி புரிந்துகொள்வதென்றால் புலிகள் போராட்டம் உயிர்ப்புடன் இருக்கும் போது சீமான் புலிக்கொடியை தூக்கியிருந்தால் அதை ஒருபோதும் இந்திய உளவுத்துறை அனுமதித்திருக்காது. 

எம்மவர்களிடம் தமது இனம் குறித்து மேன்மையான இனம் என்ற ஒரு கற்பனை இருக்கின்றது,,  அந்த கற்பனை மேன்மைக்கு ஏற்ப ஒரு தலமையையும் கற்பனை செய்கின்றபடியால் முட்டையில் மயிர் புடுங்கிக்கொண்டிருப்பார்கள். யதார்த்தத்தில் சாதி மதம் பிரதேசவாத ஏற்றதாழ்வுகளை கடந்து இனம் என்ற ஒரு கட்டமைப்பை நோக்கி நகர எத்தனிக்கின்றோமே தவிர நாம் ஒரு முழுமையான இனக்கட்டமைபில் இல்லை.பானையில் இல்லாத ஒன்றை அகப்பையில் தேடுவது போல தலமையை தேடுகின்றோம். 

சீமான் பேசுவதில் ஒரு குறை கண்டுபிடிப்பதை விட ஒன்பது நிறைவை கேட்க முடியும். ஒன்றை விட ஒன்பது பெரிது என கருதுவதே ஆரோக்கியமானது. இல்லை என்பவர்கள் ஒரு குறையும் இல்லாத ஒரு அரசியல் தலமையை சுட்டிக்காட்டுங்கள் அத்தலமைக்கு ஆதரவை கொடுப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, சண்டமாருதன் said:

எப்படியாகினும் இன உணர்வும், தமிழரின் தனித்தன்மையும் தக்க வைக்கப்படல் வேண்டும். இல்லையெனில் போலி தேசியத்தில் அமிழ்ந்துவிடும் நிலை உள்ளது.

சிவப்பில் குறிக்கப்பட்டுள்ளவை கசப்பான உண்மைதான்.

சுகன் அவர்களுக்கும் இனத்தின் மீது சற்றே மனக்கசப்பும், துறவறம் போன்ற மனநிலையும் அவரின் அனுபவ பதிவில் உணர முடிகிறது.

கருத்திற்கு நன்றி, திரு.சுகன்.

  • கருத்துக்கள உறவுகள்

த‌லைவ‌ர் அருகில் நிக்கும் இந்த‌ ஜ‌யா யார் என்று தெரியுதா , த‌ன‌து இர‌ண்டு ம‌க‌ன்க‌ளையும் போராட்ட‌த்தில் இணைத்த‌வ‌ர் , த‌மிழீழ‌த்தில் மாவீர‌ர் துயிலும் இல்ல‌த்தை இந்த‌ ஜ‌யா தான் திற‌ந்து வைச்ச‌வ‌ர் , அண்ண‌ன் மாவீர‌ நாளில் பேசும் போது ஜ‌யாவும் முன்னுக்கு இருந்து அண்ண‌ன் சீமானின் பேச்சை கேட்டு கொண்டு இருந்தார் /

இதை பார்த்த‌ பிற‌க்கும் அண்ண‌ன் சீமான் பொய் பேசுகிறார் என்று நீங்க‌ள் எழுதினா உண்மையில் உங்க‌ளை விட‌ அடி முட்டாள்க‌ள் இந்த‌ உல‌க‌த்தில்  இருக்க‌ மாட்டின‌ம் 

20191202-114005.png
20191202-113940.png

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

முத‌ல் க‌ரும்புலி ( மில்ல‌ரின் அம்மாவுட‌ன் அண்ண‌ன் சீமான் )

இவ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைச்சா யோசிக்க‌ வேண்டிய‌ விடைய‌ம் , த‌லைவ‌ர் அருகில் இருந்த‌ ப‌ல‌ உற‌வுக‌ள் அண்ண‌ன் சீமானோடு இருக்கிறார்க‌ள் ,

சிங்க‌ள‌வ‌னை விட‌ த‌மிழின‌த்தில் இருக்கும்  ஒரு சில‌ கொசுக்க‌ளில் தொல்லை தாங்க‌ முடிய‌ல‌ 😁😂🤣

20191202-121333.jpg

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, சண்டமாருதன் said:

எம்மவர்களிடம் தமது இனம் குறித்து மேன்மையான இனம் என்ற ஒரு கற்பனை இருக்கின்றது,,  அந்த கற்பனை மேன்மைக்கு ஏற்ப ஒரு தலமையையும் கற்பனை செய்கின்றபடியால் முட்டையில் மயிர் புடுங்கிக்கொண்டிருப்பார்கள். யதார்த்தத்தில் சாதி மதம் பிரதேசவாத ஏற்றதாழ்வுகளை கடந்து இனம் என்ற ஒரு கட்டமைப்பை நோக்கி நகர எத்தனிக்கின்றோமே தவிர நாம் ஒரு முழுமையான இனக்கட்டமைபில் இல்லை.பானையில் இல்லாத ஒன்றை அகப்பையில் தேடுவது போல தலமையை தேடுகின்றோம். 

சீமான் பேசுவதில் ஒரு குறை கண்டுபிடிப்பதை விட ஒன்பது நிறைவை கேட்க முடியும். ஒன்றை விட ஒன்பது பெரிது என கருதுவதே ஆரோக்கியமானது. இல்லை என்பவர்கள் ஒரு குறையும் இல்லாத ஒரு அரசியல் தலமையை சுட்டிக்காட்டுங்கள் அத்தலமைக்கு ஆதரவை கொடுப்போம்.

அதே...

நன்றி  ஐயா

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, ஈழப்பிரியன் said:

சீமான் சொல்லும் நல்ல விடயங்களைப் பற்றி கதைக்க உற்சாகப்படுத்த யாருமே முன்வருவதில்லை.

அருமையான‌ ப‌திவு ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா , த‌மிழ் நாட்டுக்கு போனால் அண்ண‌னை நேரில் ச‌ந்திச்சு க‌தைச்சு பாருங்கோ , ப‌ல‌ உண்மைக‌ள் அப்ப‌ தெரியும் , 
இவ‌ர்க‌ள் யாரையும் விட்டு வைக்க‌ மாட்டின‌ம் , ஒருத‌ர் மெதுவாய் வ‌ள‌ந்து வ‌ருகிறார் என்றால் அவ‌ர் மீது அதிக‌ க‌ல் எறிக‌ள் விழும் ,

அண்ண‌ன் சீமானின் பெற்றோர் குடுசை வீட்டில் தான் வாழுகிறார்க‌ள் , இதை நான் சொன்னால் யாராவ‌து ந‌ம்புவின‌ம்மா ,

த‌மிழ் நாட்டுக்கு போகும் போது வைப்ப‌ரில் சொல்லுங்கோ , அண்ண‌னுட‌ன் ச‌ந்திப்பை நான் ஏற்ப‌டுத்தி தாறேன் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா , 

இதுவ‌ரை யாழ் உற‌வுக‌ள் பார்க்காத‌ நிறைய‌ ப‌ட‌ங்க‌ள் இருக்கு அண்ண‌ன் சீமான் வ‌ன்னியில் நின்ற‌ போது எடுத்த‌ ப‌ட‌ங்க‌ள் , 

7 hours ago, சண்டமாருதன் said:

சீமான் பேசுவதில் ஒரு குறை கண்டுபிடிப்பதை விட ஒன்பது நிறைவை கேட்க முடியும். ஒன்றை விட ஒன்பது பெரிது என கருதுவதே ஆரோக்கியமானது. இல்லை என்பவர்கள் ஒரு குறையும் இல்லாத ஒரு அரசியல் தலமையை சுட்டிக்காட்டுங்கள் அத்தலமைக்கு ஆதரவை கொடுப்போம்.

சீமான் பேசுவதில் உள்ளது குறை அல்ல. அவர் ஈழம் தொடர்பாக, தலைவர் தொர்பாக பேசுவது பொய்,பம்மாத்து, பித்தலாட்டம்.

போலி திராவிடம் பேசும் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக தன் கட்சியை மக்கள் முன் நிறுத்துகின்றேன் என்று பறை சாற்றும் சீமான் பேசுவதும் பொய்யும் பித்தலாட்டமும் பாசிசமும் தான். பிரச்சனைகளின் மூலத்தினை விட்டு விட்டு தமிழகத்தின் பிரச்சனைகளுக்கு திராவிடமும், தமிழர் அல்லாதவர்களும் மட்டுமே காரணம் என்கின்ற பாசிசமும் அவரின் அரசியல் முழுதும் வியாபித்து கிடக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

அண்ண‌ன் சீமான் ஆயிர‌ம் ந‌ல்ல‌ விடைய‌ங்க‌ளை பேசி இருக்கிறார் , அது இவ‌ர்க‌ளில் காதில் கேக்காது , 200ரூபாய்க்கு அண்ண‌ன் சீமானுக்கு எதிரா மிம்ஸ் புர‌ளிய‌ கில‌ப்ப‌ த‌மிழ் நாட்டில் ப‌ல‌ர் இருக்கின‌ம் 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

அருமையான‌ ப‌திவு ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா , த‌மிழ் நாட்டுக்கு போனால் அண்ண‌னை நேரில் ச‌ந்திச்சு க‌தைச்சு பாருங்கோ , ப‌ல‌ உண்மைக‌ள் அப்ப‌ தெரியும் , 
இவ‌ர்க‌ள் யாரையும் விட்டு வைக்க‌ மாட்டின‌ம் , ஒருத‌ர் மெதுவாய் வ‌ள‌ந்து வ‌ருகிறார் என்றால் அவ‌ர் மீது அதிக‌ க‌ல் எறிக‌ள் விழும் ,

அண்ண‌ன் சீமானின் பெற்றோர் குடுசை வீட்டில் தான் வாழுகிறார்க‌ள் , இதை நான் சொன்னால் யாராவ‌து ந‌ம்புவின‌ம்மா ,

த‌மிழ் நாட்டுக்கு போகும் போது வைப்ப‌ரில் சொல்லுங்கோ , அண்ண‌னுட‌ன் ச‌ந்திப்பை நான் ஏற்ப‌டுத்தி தாறேன் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா , 

இதுவ‌ரை யாழ் உற‌வுக‌ள் பார்க்காத‌ நிறைய‌ ப‌ட‌ங்க‌ள் இருக்கு அண்ண‌ன் சீமான் வ‌ன்னியில் நின்ற‌ போது எடுத்த‌ ப‌ட‌ங்க‌ள் , 

அப்படியே  வல்வை சகாறாவைத் தெரியுமா என்றும் கேட்டு சொல்லுங்க......

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, வல்வை சகாறா said:

அப்படியே  வல்வை சகாறாவைத் தெரியுமா என்றும் கேட்டு சொல்லுங்க......

இது  தான்  உங்க பிரச்சினையா?🤣

  • கருத்துக்கள உறவுகள்

****

11 hours ago, சண்டமாருதன் said:

அவ்வாறான எந்த ஒரு தலமையும் உருவாக ஈழத்திலும் தமிழகத்திலும் வாய்ப்பே இல்லை. புலிகளின் முடிவுக்குப் பின்னர் புலிக்கொடியையும் தலைவர் உருவப்படத்தையும் வெளிப்படையாக முன்நிறுத்தி செல்லும் சீமானின் போக்கு ஏனைய ஈழ ஆதரவாளர்களிடம் இருநது வேறுபடுகின்றது. இதற்கக சீமானை தூக்கி உள்ளுக்கு போட்டிருக்கலாம் , ராஜீவை தமிழ்மண்ணில் கொன்றோம் என்றதற்காகவேனும் உள்ளுக்கு போட்டிருக்கலாம். இருந்தும் அவை நடக்கவில்லை. புலிகளின் அடயாளத்தை முன்றாக அழிப்பதால் எந்த நன்மையும்  இலங்கை தொடர்பான அணுகுமுறையில் இந்தியாவுக்கு கிடையாது. இனிவரும் காலங்களில் இலங்கை இந்திய உறவுகளின் போக்குக்கு ஏற்ப இநத நிலமை மாறலாம் இதன் அடிப்படையில் சீமான்மேலும் வளரலாம் அல்லது காணாமல் போகலாம். புலிகளின் முடிவு, அதன் பின்னரான இலங்கை இந்திய உறவு, இவற்றின் மீதான உளவுத்துறையின் கவனிப்பு என்ற பலதரப்பட்ட நிலையில் ஒரு வாய்ப்பு சீமானுக்கு ஏற்படுகின்றது. அதை சரியாகப் பயன்படுத்திக்கொண்டார்.  ஈழப்போராட்ட முடிவோடு ஏற்பட்ட வாய்ப்பை திராவிட கருத்தியலை கடந்த தமிழ்த்தேசீய கருத்தியலை முன் நகர்த்தவும் தமிழ்நாட்டின் இயற்கை வளங்கள் மீதான விழிப்புணர்வு. அணு உலை மீதேன் திட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள் என பலதை இந்த வாய்ப்போடு இணைத்துக்கொண்டார். ஈழத்தமிழர்கள் மீதான மத்திய அரசின் துரோகங்கள் வெளிப்படையக பேசப்பட்டது. தமிழக அரசியலில் புதியதொரு சிந்தனை தோற்றுவிக்கப்பட்டது. சீமான் ஆட்சியை பிடிப்பார் அல்லது டெப்பாசிட் வாங்கமாட்டார் என்பது பெரியவிசயமில்லை. எதிர்காலத்தில் என்ன ஆவார் என்பது கூட நிச்சயமில்லை. ஆனால் ஒரு வாய்ப்பை தமிழர்கள் சார்பான பால பிரச்னைகளை பேசவும் பல கேள்விகளை எழுப்பவும் பல கோணத்திலும் சிந்திக்கவும் என பயன்படுத்திக்கொண்டார்.  இந்த வாய்பை எப்படி புரிந்துகொள்வதென்றால் புலிகள் போராட்டம் உயிர்ப்புடன் இருக்கும் போது சீமான் புலிக்கொடியை தூக்கியிருந்தால் அதை ஒருபோதும் இந்திய உளவுத்துறை அனுமதித்திருக்காது. 

எம்மவர்களிடம் தமது இனம் குறித்து மேன்மையான இனம் என்ற ஒரு கற்பனை இருக்கின்றது,,  அந்த கற்பனை மேன்மைக்கு ஏற்ப ஒரு தலமையையும் கற்பனை செய்கின்றபடியால் முட்டையில் மயிர் புடுங்கிக்கொண்டிருப்பார்கள். யதார்த்தத்தில் சாதி மதம் பிரதேசவாத ஏற்றதாழ்வுகளை கடந்து இனம் என்ற ஒரு கட்டமைப்பை நோக்கி நகர எத்தனிக்கின்றோமே தவிர நாம் ஒரு முழுமையான இனக்கட்டமைபில் இல்லை.பானையில் இல்லாத ஒன்றை அகப்பையில் தேடுவது போல தலமையை தேடுகின்றோம். 

சீமான் பேசுவதில் ஒரு குறை கண்டுபிடிப்பதை விட ஒன்பது நிறைவை கேட்க முடியும். ஒன்றை விட ஒன்பது பெரிது என கருதுவதே ஆரோக்கியமானது. இல்லை என்பவர்கள் ஒரு குறையும் இல்லாத ஒரு அரசியல் தலமையை சுட்டிக்காட்டுங்கள் அத்தலமைக்கு ஆதரவை கொடுப்போம்.

சீமான் ,புலிக் கொடியையும்,தலைவர் படத்தையும் வைத்து எதுவும் செய்யலாம் ...இந்திய அரசு கண்டு கொள்ளாது....சீமான் றோவின் ஆள் என்று தெரியாதா?...தலைவரது படத்தை ,புலிக் கொடியை வைத்து வைகோவோ அல்லது வேறு யாராவது தமிழகத் தலைவர் ஆர்ப்பாட்டம் செய்தால் உடன் உள்ளுக்கு போய் விடுவார்கள்

Edited by மோகன்
*** நீக்கப்பட்டுள்ளது -மோகன்

  • கருத்துக்கள உறவுகள்

பாட்டி வ‌டை சுட்ட‌ க‌தை முடிஞ்சு , இப்ப‌ வாத்து முட்டை இட்ட‌ க‌த‌ தொட‌ங்கியாச்சு ,

பொட்டு அம்மானுக்கு ப‌க்க‌த்தில் நின்ற‌வை கூட‌ இப்ப‌டி ம‌ட்ட‌மாய் எழுத‌ மாட்டின‌ம் ,

ச‌கோத‌ர‌ன் ( இடும்பாவ‌ன‌ம் கார்த்திக் ) போன‌ ஆண்டு சிறை வாழ்க்கையை அனுப‌விச்ச‌ அவ‌னுக்கு தான் தெரியும் ) 

20191202-191802.png
upload image

அண்ண‌ன் சீமான் மீது எத்த‌னை வ‌ழ‌க்குக‌ள் இருக்கு என்று கூட‌ தெரியாது , ஏதோ சும்மா கிறுக்கி போட்டு போக‌னும் சீமான் இந்திய‌ன் உள‌வுத்துறை ஆள் என்று , 

ஒரு பொது கூட்ட‌ம் போட‌ இட‌ம் எடுக்க‌ க‌ட்சி தொண்ட‌ர்க‌ள் ப‌டும் பாடு அவைக்கு தான் தெரியும் ,

அண்ண‌ன் சீமான் த‌மிழ் நாட்டு காவ‌ல்துறையுட‌ன் ச‌ண்டை போட்ட‌வ‌ர் , த‌லைவ‌ர் ப‌ட‌த்தை எல்லாம் எடுக்க‌ முடியாது என்று , 

சில‌ருக்கு விடியுர‌தும் தெரியாது இருளுற‌தும் தெரியா , சும்மா சீமான் மீது வாந்தி ம‌ட்டும் எடுக்க‌ தெரியும் , 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

இது  தான்  உங்க பிரச்சினையா?🤣

முகவர்களின் உண்மை முகத்தை அறிய ஆவல்  அதான்

  • கருத்துக்கள உறவுகள்

boo-final.jpg

8 hours ago, பையன்26 said:

பாட்டி வ‌டை சுட்ட‌ க‌தை முடிஞ்சு , இப்ப‌ வாத்து முட்டை இட்ட‌ க‌த‌ தொட‌ங்கியாச்சு ,

பொட்டு அம்மானுக்கு ப‌க்க‌த்தில் நின்ற‌வை கூட‌ இப்ப‌டி ம‌ட்ட‌மாய் எழுத‌ மாட்டின‌ம் ,

ச‌கோத‌ர‌ன் ( இடும்பாவ‌ன‌ம் கார்த்திக் ) போன‌ ஆண்டு சிறை வாழ்க்கையை அனுப‌விச்ச‌ அவ‌னுக்கு தான் தெரியும் ) 

20191202-191802.png
upload image

அண்ண‌ன் சீமான் மீது எத்த‌னை வ‌ழ‌க்குக‌ள் இருக்கு என்று கூட‌ தெரியாது , ஏதோ சும்மா கிறுக்கி போட்டு போக‌னும் சீமான் இந்திய‌ன் உள‌வுத்துறை ஆள் என்று , 

ஒரு பொது கூட்ட‌ம் போட‌ இட‌ம் எடுக்க‌ க‌ட்சி தொண்ட‌ர்க‌ள் ப‌டும் பாடு அவைக்கு தான் தெரியும் ,

அண்ண‌ன் சீமான் த‌மிழ் நாட்டு காவ‌ல்துறையுட‌ன் ச‌ண்டை போட்ட‌வ‌ர் , த‌லைவ‌ர் ப‌ட‌த்தை எல்லாம் எடுக்க‌ முடியாது என்று , 

சில‌ருக்கு விடியுர‌தும் தெரியாது இருளுற‌தும் தெரியா , சும்மா சீமான் மீது வாந்தி ம‌ட்டும் எடுக்க‌ தெரியும் , 

வாத்து முட்டை தான் போடும் பையா,

குட்டி ஈணாது 

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, வல்வை சகாறா said:

முகவர்களின் உண்மை முகத்தை அறிய ஆவல்  அதான்

அப்படியானால்  எனது  பெயரை  முதலாவதாக  பதிந்து  வைத்துக்கொள்ளுங்கள்

தமிழன்  ஒன்று படாமல் 

சிங்களத்தை  சிறுபான்மையாக்காமல்

எமக்கு  விடிவில்லை

அதற்காக நான்  ஒரு  முகவர்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, அபராஜிதன் said:

வாத்து முட்டை தான் போடும் பையா,

குட்டி ஈணாது 

சம்பந்தன் கொம்பனியும் ஊழலின் இமயம் கருணாநிதி வம்சங்களும் போட்ட பொன்வாத்து முட்டைகள் எத்தனை?

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, நிழலி said:

சீமான் பேசுவதில் உள்ளது குறை அல்ல. அவர் ஈழம் தொடர்பாக, தலைவர் தொர்பாக பேசுவது பொய்,பம்மாத்து, பித்தலாட்டம்.

போலி திராவிடம் பேசும் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக தன் கட்சியை மக்கள் முன் நிறுத்துகின்றேன் என்று பறை சாற்றும் சீமான் பேசுவதும் பொய்யும் பித்தலாட்டமும் பாசிசமும் தான். பிரச்சனைகளின் மூலத்தினை விட்டு விட்டு தமிழகத்தின் பிரச்சனைகளுக்கு திராவிடமும், தமிழர் அல்லாதவர்களும் மட்டுமே காரணம் என்கின்ற பாசிசமும் அவரின் அரசியல் முழுதும் வியாபித்து கிடக்கு.

பிரச்சனைகளின் மூலத்தை யாழ்கள உறவுகளுக்காக உங்களால் கொஞ்சம் விளக்கி எழுத முடியுமா?
சீமான் கூறும் காரணிகளே மூலமானவை என்பதை சீமானுக்கு முந்திய திராவிட கட்சிகளும் 
சொல்லி இருக்கின்றன அதை பின்னாளில் வெறும் பார்ப்பனிய எதிர்ப்பாக சுருக்கிக்கொண்டு விடார்கள்.
ஒரு பகுதியை கம்யூனிஸ்ட் கட்சிகள் தமது கொள்கை பரப்பாகவே செய்கிறார்கள். 
அதுதான் உண்மை என்று ........ இன்னொரு வடிவில் யாரும் பேசாததால் நான் சீமானை நம்பி வருகிறேன்.

உங்களிடம் இன்னொரு மூலம் இருக்கிறது என்றால் அதை அறிய வேண்டும் என்று எண்ணுகிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
On 12/1/2019 at 9:11 PM, ராசவன்னியன் said:

அணுகுமுறையை மாற்றி ஈழ ஆதரவு சக்திகளை ஒருங்கிணைத்து செல்ல, விலைபோகாத அதே சமயம் மக்களுக்கு தீர்க்கமான முடிவெடுக்க, தமிழ் நலன் காக்க வசீகரமான தலைமை வேண்டும். தமிழ்நாட்டில் இதுவரை அப்படி யாரும் வரவில்லை. (தமிழை பேசி, தமிழால் தன்னை மட்டும் உயர்த்திக்கொண்டவர்களை பார்த்திருப்பீர்கள்.) மக்கள்தான் தேடி தெரிவு செய்ய வேண்டும்.

ஒருவேளை சீமான் பக்குவப்பட்டு அந்த இடத்திற்கு வந்தால் மிக்க மகிழ்ச்சியே.   

உங்கள் எதிர்பார்ப்பு சரியானது   தமிழக தளம் பிழையானது.
தமிழ்த்தேசியம் என்னும்  கருத்து சீமானுக்கு சொந்தம் என்றுதான் பலரும் எண்ணுகிறார்கள் 
சில நூறு வருடம் முன்பே தமிழ் தேசிய கருத்தாக்கம் இருந்து இருக்கிறது. அதை திராவிட விற்பன்னர்கள் 
மழுங்கடித்து உணர்வாளர்களை பார்ப்பான்தான் உன் எதிரி என்று காட்டி திசை திருப்பினார்கள். பார்ப்பான் 
எதிரி என்பதால் அது உணர்வாளர்கள் தளத்தில் இலகுவாக பற்றியது என்பதுதான் உண்மை. 

உலகின் ஒட்டுமொத்த மீடியாவும் பண முதலாளிகள்  அரசியல் கட்சிகள் சார்ந்தவை 
சீமானின் 1 மணிநேர பேச்சில்  1 நிமிடத்தை மக்களிடம் சேர்த்து வெறுப்பை உண்டுபண்ணுவது என்பதை 
தமிழக மீடியாக்கள் சிறப்பாக செய்துவருகிறார்கள். இதை செய்கிறார்கள் என்பது தெரிந்துகொண்டும் 
அசதியாக இருக்கும் சீமானின் போக்கில் உங்களைப்போல எனக்கும் உடன்பாடு இல்லை. 

இங்கு யாழ்களத்தில் ஈழத்தவர்கள் எழுதுகிறார்கள் என்றால் இவர்கள் எதோ புலிபற்றி 
தெரிந்தவர்கள் என்று பொருள் கிடையாது எல்லோரும் தம் தம் பாதுகாப்பு கருதி ஓடியவர்கள்தான் 
நடுநிலை வாதி என்று இல்லாத ஒரு நிலையில் தொங்கிக்கொண்டு வாந்தி எடுப்பதை தவிர இவர்கள் யாரும் 
புடுங்கியது என்று ஒரு ஆணியும் கிடையாது. இதை பலமுறை நான் நேரிலேயே பார்த்தவன். 1987 கடைசிகளில்  நான் புலி ஆதரவாளனே கிடையாது ... நான் டெலோ இயக்கத்தை சார்ந்து இருந்தததால் என்னைக்கூட  புலிகள் கொண்டு சென்று வைத்திருந்தார்கள் ..... அதிர்ஷ்டவசமாக டெலோ அப்போது தாஸ் க்ரூப்  பொபி குரூப் ஏன்னு பிரிந்து இருந்தது தலைமை (சிறிசபாரட்ணம்) பொபியோடு இருந்தார் இருவரும் கூடியே  தாஸை சுட்டு கொன்றார்கள்.  இதில் தாஸ் குரூப்பை சார்ந்தவர்களிடம் ஆயுதங்களை வாங்கிவிட்டு மேலதிக  விசாரணைகளையும் செய்துவிட்டு 3-10 நாட்களுக்குள் விட்டு விடார்கள் அவர்கள் அவர்கள் பற்றிய  பொறுப்புகள்  ஆயுத கையாளுதல் என்பதால் சிலர் முன்னும் பின்னுமாக விடுதலை ஆனார்கள். நான் சிறுவனாக  இருந்தேன் 4ஆவது நாளே என்னை விட்டு விடார்கள்.  1987 கடைசியில் இந்திய இராணுவ சண்டை தொடங்கியவுடன்  பிரபாகரனின் மனைவியும் மகள் துவாராகவும் வந்தது எமது ஊருக்குத்தான் அங்கிருந்து எங்கோ கொண்டுசெல்ல  அவர்கள் திட்டம் இருந்து இருக்கும் அது சூழ்நிலை சரியில்லாத காரணத்தால் பின்தள்ள பட்டுக்கொண்டே இருந்தது. அப்போ இங்கு யாழ்களத்தில் குப்பை கொட்டுபவர்கள் போல இருந்த எந்த புலி  ஆதர்வாள்களும் அடைக்கலம் கொடுக்க தயாரில்லை. அவர்கள் இவர் இன்னார்தான் என்பதை யாருக்கும் சொல்லவும் இல்லை (ஒருவேளை தெரிந்து இருந்தால் கொடுத்து இருப்பார்களோ தெரியாது) அனேகணவர்கள்  அது இறந்துபோன புலேந்திரன் அம்மானின் மனைவி என்று ஊகித்து கொண்டார்கள் . இவர்களை  அப்போது ஒரு பாதுக்காப்பான இடத்தில் கொண்டு சென்று விட்டது நானும் எனது நண்பனும்.
பின்னாளில் ஒரு புலி ஆதரவு காரன்  அதில் பங்குபற்றிய புலிக்கு சொல்லியிருக்கிறார் .... என்னை நம்ப வேண்டாம் என்றும் நான்  டெலோவை சேர்ந்தவன் என்றும். அதை அவர் என்னிடம் சிரித்துக்கொண்டே சொன்னார்  காரணம் 1987இல் அவர்கள் ஓடிக்கொண்டு இருந்தபோது இருந்த நிலைமை அவர்களுக்கு தெரியும் என்பதால். இது யாழ்ப்பாண தமிழனின் இரத்தத்தில் ஊறியது ....  தானும் படுக்கான் தள்ளியும் படுக்கான்  என்று சொல்வதைப்போல. தானும் செய்யான் .... செய்கிறவனையும் விட மாட்டான். 

இப்போ சீமானை பற்றி இகழும் யாருக்கும்  முத்துக்குமார் எப்படி அநாதை பிணமானான்? என்பது மறந்து போயிருக்கும்  தமிழக அரசியல் தளத்தில் நான் புலி ஆதரவாளன் என்று நின்றது எவ்ளவு பெரியது என்று  பழையதை  மறந்து இருந்தால்  2008க்கு முந்திய தமிழகம் உங்களுக்கே ஞாபகம் இருக்காது. 
பிரபாகரன் எமது தலைவன் என்று இன்று தமிழகத்தில் எவன் சொன்னாலும் அதுக்கு சீமான்தான் காரணம்.
அப்படி ஏற்றுக்கொள்ளும் மனநிலை யாருக்கும் இருந்து இருந்தாலும் அரசியல் லாபம்  சொந்த வாழ்வு என்று எண்ணி  பயநிலையில்தான் இருந்தார்கள். அதை தகர்த்து ஒரு அக்கினி குஞ்சை முதலில் வைத்தது சீமான்தான் அதனால் அவர் சிறைக்கு கூட போனார் ........ அடங்கவில்லை தொடர்ந்தார். 

நேர்த்தியாக நீங்கள் விரும்புவதுபோல பேசிக்கொண்டு இருந்தால் ....... சீமானை எனக்கே தெரியாமல் போயிருக்கும். மீடியாக்கள் அப்படியே மழுங்கடித்து இருப்பார்கள். இப்போது கரி பூசுவத்துக்காவது 1 நிமிடம் என்றாலும்  சீமானை காட்டுகிறார்கள்.  சர்ச்சை பேச்சு வேண்டாம் என்று உங்களைப்போல நானும் விரும்புகிறேன் .......... சர்ச்சை இல்லாதுபோனால்  சீமானும் இல்லாமல் போய்விடுவார் என்ற இன்னொரு கசப்பான  உண்மையும் இருக்கிறது. 

உங்கள் விருப்பம்போல எல்லோரையும் ஒன்று சேர்ப்பது என்பது முடியாத காரணம் 
சீமானின் நிலைப்பாடே அவர்களுடன் கூடாது இருப்பதுதான். சீமானின் அரசியல் வேறுவிதமானது 
அதில் தோல்வி கிடையாது  .......தேர்தல் ஆடசி என்பது எல்லாம் இரண்டாம் பட்ஷம். அவர்களிடம் இருந்து பறிக்க வேண்டும்  என்பதுதான் முன்னிலை ....... ஆளுதல் என்பது இரண்டாம் நிலை அதனால்தான் தூர பார்வை  இல்லையோ என்று கூட எண்ணுகிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்

Wஎல்லோருக்கும் என்னதான் பிரச்சனை   ? 

சீமான் தன்னை தலைவரோடு சேர்த்து பேசுவதா ??? 

சீமான் பேசினால் பேசிவிட்டு போகட்டுமே.  அதனால் உங்களுக்கென்ன பிரச்சனை  ?  சீமான் அதிகமாக கதைப்பதுதான்  பிரச்சனை என்றால் அது அவர் அரசியல் செய்யும் தமிழகம் பார்த்துக்கொள்ளும்.  உங்களுக்கென்ன வந்தது  ???? 

சீமான் பிரபாகரனை தவறான விடயங்களுக்கு பாவித்ததால் அது எவ்வளவு காலத்துக்கு நின்று பிடிக்கும்  ? 

கொஞ்சம் யோசிக்க வேண்டாமா  ? 

நாங்கள் மட்டும்தான் பிரபாகரனையும் விடுதலைப் புலிகளையும் தத்தெடுத்துக் கொண்டோமா ? 

எல்லோருக்கும் என்னதான் பிரச்சனை  ? 

Karl marx,  Lenin,  Fidel Castro,  Che Guvera எல்லோரையும் எங்கள் விருப்பப்படி கதைப்போம் ஆனால் பிரபாகரனை எண்களைத் தவிர வேறு ஒருவரும் கதைப்பது கூடாதா ? 

என்ன மனநிலை இது  ? 

அதுக்குள்ள கேலிச்சித்திரம் வேற.

பிரபாகரனை  தமிழக மக்கள் கதைக்காமல் வேறு யாருக்கு கதைக்க உரிமை இருக்கு ?  

(சீமானின் பேச்சில் தவறுகளிருந்தால் அதனை ஒரு தாய் தகப்பன்,  ஆசிரியர் நிலையில் இருந்து திருத்துவீங்களா,  அதை விடுத்து........ )

Edited by Maharajah
எழுத்துப்பிழை

2 hours ago, குமாரசாமி said:

சம்பந்தன் கொம்பனியும் ஊழலின் இமயம் கருணாநிதி வம்சங்களும் போட்ட பொன்வாத்து முட்டைகள் எத்தனை?

அதை ஏன்யா என்கிட்ட கேட்கிறீங்க நான் என்ன நீங்க சீமானுக்கு முட்டு கொடுப்பது போல சம்பந்தன் சுமந்திரன் அல்லது் கருணாநிதி குடும்பத்துக்கு கண்ணை மூடிக்கொண்டு என்ன செய்தாலும் சரி என்டு  முட்டு கொடுத்தேனா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.