Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டு.களவாஞ்சிக்குடி மாணிக்கப் பிள்ளையார் ஆலய கிணறு திடீரென்று நிரம்பி வழிகிறது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: plant and outdoor

No photo description available.

Image may contain: one or more people, people standing and outdoor

Image may contain: 1 person, standing and outdoor

Image may contain: one or more people, people standing, outdoor and nature

Image may contain: one or more people and outdoor

Image may contain: one or more people, people standing, outdoor and nature

Image may contain: 1 person, standing and outdoor

Image may contain: 1 person, standing and outdoor

Image may contain: one or more people, outdoor, water and nature

புதினம் பார்க்க...மக்கள் கூடினர். கூடவே சொறீலங்கா பொலிஸ் மற்றும் இராணுவம் போர்க்கால அடிப்படையில் ஆயுதங்களுடன் குவிப்பு.

நன்றி: முகநூல்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாணிக்கப்பிள்ளையாருக்கு  அரோகரா 🙏🏿

ம்ம் அதிசயம் தன். 

5 hours ago, nedukkalapoovan said:

Image may contain: one or more people, outdoor, water and nature

ஒரு வேளை மசகு எண்ணெய் கிணறோ என பார்க்கின்றாரா ? 🙂 

Edited by ampanai
Spelling error

  • கருத்துக்கள உறவுகள்

இதே கிந்தியா என்றா இந்நேரம் சுற்றி தேங்காய் , பூ , கற்பூரம் , ஊது பத்தி இன்னும் பிற அர்ச்சனை ஐயிட்ட கடை போட்டு தாக்கி இருப்பாங்க.☺️ அர்யூன் சம்பத் நேர்த்தி கடன் செலுத்தி இருப்பார்..😊

  • கருத்துக்கள உறவுகள்

கீழாழை பாறை வெடிக்க போகுது என்று சொல்லினம் 
 
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

கீழாழை பாறை வெடிக்க போகுது என்று சொல்லினம் 
 
பாறை வெடிச்சாப்பிறகு என்ன செய்வதாக உத்தேசம் ? 😀 

நிலக் கீழ் நீரோட்டப் பாதைகள் ஏதும் அடைபட்டிருக்கலாம் என எண்ணுகிறேன்🤥

இதற்கு சரியான அறிவியற் காரணங்கள் யாராலும் கூற முடியுமா ? 🤔

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

பாறை வெடிச்சாப்பிறகு என்ன செய்வதாக உத்தேசம் ? 😀 

நிலக் கீழ் நீரோட்டப் பாதைகள் ஏதும் அடைபட்டிருக்கலாம் என எண்ணுகிறேன்🤥

இதற்கு சரியான அறிவியற் காரணங்கள் யாராலும் கூற முடியுமா ? 🤔

இரண்டு மட்டத்தில் நிலக்கீழ் தண்ணி இருக்கும். இரண்டையும் பிரிக்கும் பாறைகளில் ஏதாவது வெடிப்பு வந்து அதனூடாக இரண்டாவது  மட்டத்தில் உள்ளநீர் கிணற்றுக்கு வந்திருக்கும்.  

http://www.env.gov.bc.ca/wsd/plan_protect_sustain/groundwater/flowing_artesian_wells.pdfspacer.png

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, nilmini said:

ஆகா....

இதெல்லாம் சேர்ப்பில்லை.

எங்கண்ட பிள்ளையாரின் விளையாட்டு....

இதை சொல்லாவிடில்... புத்தரிண்ட விளையாட்டு என்று முடித்து விடுவார்கள்.😎

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

ஆகா....

இதெல்லாம் சேர்ப்பில்லை.

எங்கண்ட பிள்ளையாரின் விளையாட்டு....

இதை சொல்லாவிடில்... புத்தரிண்ட விளையாட்டு என்று முடித்து விடுவார்கள்.😎

புத்தர் பாவம். பிரிக்கமுடியாது என்று நினைத்த அணுவையே பிரித்து Sub atomic particles ஐ பற்றியெல்லாம் விளக்கம் சொல்லிவிட்டு போனவர். இந்த மோ .... சிங்களவர்களோட ஒண்டும் செய்யேலாது 🙂

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, nilmini said:

இரண்டு மட்டத்தில் நிலக்கீழ் தண்ணி இருக்கும். இரண்டையும் பிரிக்கும் பாறைகளில் ஏதாவது வெடிப்பு வந்து அதனூடாக இரண்டாவது  மட்டத்தில் உள்ளநீர் கிணற்றுக்கு வந்திருக்கும்.  

http://www.env.gov.bc.ca/wsd/plan_protect_sustain/groundwater/flowing_artesian_wells.pdfspacer.png

நன்றி அக்கா. 👍

பலரது ஐயங்களை நிவர்த்திசெய்துள்ளீர்கள் என நம்புகிறேன். 👏

1 hour ago, nilmini said:

இரண்டு மட்டத்தில் நிலக்கீழ் தண்ணி இருக்கும். இரண்டையும் பிரிக்கும் பாறைகளில் ஏதாவது வெடிப்பு வந்து அதனூடாக இரண்டாவது  மட்டத்தில் உள்ளநீர் கிணற்றுக்கு வந்திருக்கும்.  

http://www.env.gov.bc.ca/wsd/plan_protect_sustain/groundwater/flowing_artesian_wells.pdfspacer.png

அக்கா சரியான விளக்கம் கொடுத்திருக்கிறார்கள்। எங்கள் ஊரில் 24 மணித்தியாலமும் தண்ணீர் ஊற்றெடுக்கும் ஒரு கிணறு இருக்குகிறது। இது நில மடடத்திட்கு மேல் 6 அல்லது 7 அடிக்கு பாயும்। மழை காலங்களில் இன்னும் அதிகமாக உயரத்துக்கு  பாயும்। Hydrology படித்தவர்களுக்கு இதன் உண்மைத்தன்மை தெரியும்। இது அதிக அமுக்கத்தில் நீர் வெளியேற்றப்படும்போது (Confined Aquifer ) நிகழும் ஒரு நிகழ்வு। இருந்தாலும் இங்கு நடக்கும் நிகழவை வைத்து பார்க்கும்போது கோவில் கட்டினாலும் கட்டுவார்கள்।

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Vankalayan said:

கோவில் கட்டினாலும் கட்டுவார்கள்।

???

மட்டு.களவாஞ்சிக்குடி மாணிக்கப் பிள்ளையார் ஆலய கிணறு!!!!

5 minutes ago, Nathamuni said:

???

மட்டு.களவாஞ்சிக்குடி மாணிக்கப் பிள்ளையார் ஆலய கிணறு!!!!

இருந்தாலும் அதுக்கு மேலும் இன்னொரு கோவில் கட்டிடலாம்தானே?

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, Nathamuni said:

???

மட்டு.களவாஞ்சிக்குடி மாணிக்கப் பிள்ளையார் ஆலய கிணறு!!!!

நான் பகிர்ந்தது விஞ்ஞான  விளக்கம் தான். ஆனால் எமது கோவில்களில் அதிசயங்கள்  நடப்பது உண்மையே. இன்னொரு கோணத்தில் பார்த்தால்  எமது பண்டைய கோயில்களெல்லாம்  இப்ப கண்டுபிடிக்கும் விஞ்ஞான விளக்கங்களையெல்லாம் அப்பவே கண்டுபிடித்து விட்டார்கள். எமக்கு மேலால் ஒரு சக்தி இருக்கு அதை நம்பித்தான் ஆகவேணும். 

Edited by nilmini

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, nilmini said:

நான் பகிர்ந்தது விஞ்ஞான  விளக்கம் தான். ஆனால் எமது கோவில்களில் அதிசயங்கள்  நடப்பது உண்மையே. இன்னொரு கோணத்தில் பார்த்தால்  எமது பண்டைய கோயில்களெல்லாம்  இப்ப கண்டுபிடிக்கும் விஞ்ஞான விளக்கங்களையெல்லாம் அப்பவே கண்டுபிடித்து விட்டார்கள். எமக்கு மேலால் ஒரு சக்தி இருக்கு அதை நம்பித்தான் ஆகவேணும். 

நான் சொல்ல வந்தது...

கோவில் கிணறு என்று இருக்கும் போதே. அங்கே கோவில் கட்டி விடுவார்கள் என்று சொன்னதை பத்தி தான்....😄

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

மட்டு.களவாஞ்சிக்குடி மாணிக்கப் பிள்ளையார் ஆலய கிணறு!!!!

43 minutes ago, nilmini said:

நான் பகிர்ந்தது விஞ்ஞான  விளக்கம் தான். ஆனால் எமது கோவில்களில் அதிசயங்கள்  நடப்பது உண்மையே. இன்னொரு கோணத்தில் பார்த்தால்  எமது பண்டைய கோயில்களெல்லாம்  இப்ப கண்டுபிடிக்கும் விஞ்ஞான விளக்கங்களையெல்லாம் அப்பவே கண்டுபிடித்து விட்டார்கள். எமக்கு மேலால் ஒரு சக்தி இருக்கு அதை நம்பித்தான் ஆகவேணும். 

கோவில் கிணறுகள் வற்றாத நீரூற்று உள்ள இடத்தில் அமைக்கப்பட்டிருப்பதும், அப்படியான கிணறு உள்ள இடத்தில் கோவில் கட்டிவிட்டிருப்பதும் சாத்தியமானது. ஊர்மக்கள் அனைவருக்கும் குடிநீர் வழங்கும் கிணறும், ஆறுதல் அளிக்கும் கோவிலுமாக இவை நீண்டகாலமாக இருந்திருக்கும். வற்றாத நீரூற்று அப்படி இருப்பதற்கு காரணமே, அதன் கீழ் வேறு நீர்வளம் இருப்பதாக இருக்க வேண்டும். ஏதொ ஒரு உடைப்பு காரணமாக, நீர் கிடைத்த துளையான கிணறு வழியாக மேலெழுந்து விட்டது. இந்த உடைப்பின் பின் விளைவுகள் பற்றி இலங்கை அரசு மற்றும் பல்கலைக்கழக புவியியல் ஆய்வாளர்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டும். இந்த பின்விளைவுகள் பாதிப்பை வேறு பகுதியில் உருவாக்க கூடும்.

6 hours ago, ரதி said:

கீழாழை பாறை வெடிக்க போகுது என்று சொல்லினம் 
 
Edited by கற்பகதரு

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Vankalayan said:

இருந்தாலும் அதுக்கு மேலும் இன்னொரு கோவில் கட்டிடலாம்தானே?

வாஸ்து சாத்திரப் படி.... ஒரு கோயிலுக்கு மேல்,  இன்னொரு கோயில் கட்ட முடியாது. :grin:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Vankalayan said:

அக்கா சரியான விளக்கம் கொடுத்திருக்கிறார்கள்। எங்கள் ஊரில் 24 மணித்தியாலமும் தண்ணீர் ஊற்றெடுக்கும் ஒரு கிணறு இருக்குகிறது। இது நில மடடத்திட்கு மேல் 6 அல்லது 7 அடிக்கு பாயும்। மழை காலங்களில் இன்னும் அதிகமாக உயரத்துக்கு  பாயும்। Hydrology படித்தவர்களுக்கு இதன் உண்மைத்தன்மை தெரியும்। இது அதிக அமுக்கத்தில் நீர் வெளியேற்றப்படும்போது (Confined Aquifer ) நிகழும் ஒரு நிகழ்வு। இருந்தாலும் இங்கு நடக்கும் நிகழவை வைத்து பார்க்கும்போது கோவில் கட்டினாலும் கட்டுவார்கள்।

அது அகலமான குழாக்கிணறு என்று நினைவில் உள்ளது.

மெல்லிய உவர்ப்பு நீர் கடற்கரைக்கு அருகில்,  குழாய்க் கிணற்றையும் மேவிப் பாய்ந்து கடலுடன் கலக்கிறது. 😀

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nilmini said:

புத்தர் பாவம். பிரிக்கமுடியாது என்று நினைத்த அணுவையே பிரித்து Sub atomic particles ஐ பற்றியெல்லாம் விளக்கம் சொல்லிவிட்டு போனவர். இந்த மோ .... சிங்களவர்களோட ஒண்டும் செய்யேலாது 🙂

அப்படியெல்லாம் திட்டப்படாது..! :)

என்ன இருந்தாலும், ஒரே குடையின் கீழ் பல்லாண்டு காலம் வாழப்போகிறவர்கள், தமிழரும், சிங்களரும்..! 😉

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ராசவன்னியன் said:

அப்படியெல்லாம் திட்டப்படாது..! :)

என்ன இருந்தாலும், ஒரே குடையின் கீழ் பல்லாண்டு காலம் வாழப்போகிறவர்கள், தமிழரும், சிங்களரும்..! 😉

அது புரிகிறது. ஆனால் நடப்பவைகளை பார்க்கும்போதும் கேட்கும்போதும்  கோபம் வரும்தானே? ஒன்றும் செய்யமுடியாது. சும்மா இப்படி பதிவுகள் போடுவதுதான் மிச்சம். 

  • கருத்துக்கள உறவுகள்

இஞ்சை ஒரு மனுசனை சற்று ஒய்வாக இருக்க விடமாட்டீங்களா பாவிகளா😄

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, சுவைப்பிரியன் said:

இஞ்சை ஒரு மனுசனை சற்று ஒய்வாக இருக்க விடமாட்டீங்களா பாவிகளா😄

😃😀

கடலிலும் அலை வழமையை விட அதிகம் உள்ளே வந்ததாக கூறுகிறார்கள்.

புவிப் பெருந்தட்டுகளின் நகர்வால் ஏற்பட்ட அமுக்கத்தினால் இருக்கும் சாத்தியமுண்டு. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.