Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருணாவால் புலிகள் தோற்கவில்லை! – பொன்சேகா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கருணாவால் புலிகள் தோற்கவில்லை! – பொன்சேகா

Fonseka_Press_Conference-960x1283.jpg?189db0&189db0

கருணா பிரிந்ததாலேயே புலிகள் அமைப்பு பலவீனமடைந்ததாக கூறுவதும், அதனாலேயே அவர்கள் போரில் தோல்வி அடைந்தனர் என கூறுவதும் தவறு. அவர் புலிகளிடம் இருந்து பிரிந்த இரண்டே வாரங்களில் கிழக்கின் பலத்தைப் புலிகள் கைப்பற்றினர். இதனால் கருணா கொழும்புக்கு தப்பியோட வேண்டிய நிலை ஏற்பட்டது”

இவ்வாறு இறுதிக்கட்டப் போரை வழிநடத்திய முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

புலிகள் அமைப்பில் இருந்து கருணா பிரிந்ததாலேயே புலிகளை பலவீனப்படுத்தி போரை வெல்ல முடிந்ததாக பொதுஜன பெரமுன கட்சியினர் அண்மைக்காலமாக கூறு வருகின்றனர். இது குறித்து கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு சரத் பொன்சேகா தெரிவித்தார். மேலும்,

“கருணா வெளியேறினார் என்பதால் புலிகள் அமைப்பு இரண்டாக பிளவுபடவுமில்லை. பலவீனமடையவுமில்லை. இரண்டு வாரங்கள் மட்டுமே கிழக்கை கருணா கைப்பற்றி வைத்திருந்தார். எனினும் கிழக்கை மீட்க உடனடியாக பிரபாகரன் தாக்குதல் அணி ஒன்றை அனுப்பியிருந்தார்.

வாழைச்சேனை பகுதியில் உள்ள கஜூவத்தை பகுதியில் கடல் வழியாக வந்த புலிகளின் தாக்குதல் படையணி, தாக்குதல் நடத்தி கருணாவின் உறுப்பினர்களை கொன்றது. இந்த தாக்குதலால் கருணாவுக்கு நடுக்கம் வந்துவிட்டது. இரண்டு நாட்களுக்குள் தம்முடன் இருந்த பெண் போராளிகள், சிறுவர் போராளிகள் ஆகியோரை ஆயுதங்களைப் போட்டுவிட்டு வீடுகளுக்கு தப்பிச் செல்லுமாறு கூறியதுடன், சுங்காவில் பகுதியிலுள்ள பிள்ளையானின் முகாமில் தஞ்சமடைந்தார்.

நூற்றி ஐம்பது பேர்தான் இறுதியில் எஞ்சினர். அதிலும் பலர் சிறுவர் போராளிகள். அங்கிருந்தும் கொழும்புக்கு கருணா ஓடிவந்தார். அதன்பின்னர் புலிகளின் மற்றொரு தளபதியான ரமேஷ் என்பவர் வீடுகளுக்கு சென்ற போராளிகளை ஒன்றிணைத்து இரண்டு மூன்று வாரங்களுக்குள் கிழக்கில் புலிகளின் பலத்தை நிலை நிறுத்தினார். எனவே கருணாவின் பிரிவால் கிழக்கில் புலிகளின் பலம் குறையவில்லை. அவ்வாறு கூறுவது தவறு” – என்றார்

https://newuthayan.com/கருணாவால்-புலிகள்-தோற்கவ/

  • Replies 138
  • Views 13.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர்கள் நன்றி மறந்தவர்கள், நவீன போரியலின் கடவுள் எனக்கூறப்படும் நெப்போலியனின் அடிப்படையான கோட்பாடு " அதிகமாக போரிடாதே நீயாகவே உனது உத்திகளை எதிரிக்கு கற்றுக்கொடுத்துவிடுவாய்

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் கூடியிருந்து பேசி இந்த நாதாரியைப்பற்றி ஒரு முடிவுக்கு வாருங்கள், பிறகு ஒன்றாகஅறிக்கை விடுங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

மற்றவர் எப்போ ""இல்லை, என்னால்தான் புலிகள் தோற்கடிக்கப்பட்டனர். பொன்சேகா சொல்லுறது முழுப் பொய்"" என்று மறுப்பறிக்கை விடப்போகின்றார் 

😂

  • கருத்துக்கள உறவுகள்

பொன்சேகா வள்ளுவரின் திருக்குறளை எங்கோ படித்துவிட்டார் போலுள்ளது. தங்களுடைய மூவாயிரம் இராணுவத்தினரை கருணா கொன்ற தீமையை மறந்துவிட்டுப் புலிகளை அழிப்பதற்கு அவர் உதவிய நன்றியை மறக்கவில்லை.

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று. 

  • கருத்துக்கள உறவுகள்

தோல்விக்குத்தான் பலர்

ஆனால் வெற்றிக்கு சிங்களம் மட்டுமே

அவன் தெளிவாக  இருக்கிறான்

நம்மவர்கள்  தான் இன்றும்

 கிழக்கை  இசுலாமியரிடமிருந்து 

மீட்டு சிங்களவன் தமிழிரிடம் தருவான்  என்ற  கனவில்?????😢

17 minutes ago, விசுகு said:

 கிழக்கை  இசுலாமியரிடமிருந்து 

மீட்டு சிங்களவன் தமிழிரிடம் தருவான்  என்ற  கனவில்?????😢

இரத்தினச் சுருக்கமாக சொல்வது என்பது இது தான்!

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, விசுகு said:

தோல்விக்குத்தான் பலர்

ஆனால் வெற்றிக்கு சிங்களம் மட்டுமே

அவன் தெளிவாக  இருக்கிறான்

நம்மவர்கள்  தான் இன்றும்

 கிழக்கை  இசுலாமியரிடமிருந்து 

மீட்டு சிங்களவன் தமிழிரிடம் தருவான்  என்ற  கனவில்?????😢

அண்ணா ,உங்களை போன்றவர்களுக்கு ஊர் நிலவரம் விளங்காது ...அதுவும் மட்டு,அம்பாறை  நிலவரம் பூச்சியம்... கிழக்கை சிங்களவர்கள் வைத்துக் கொண்டாலும் பரவாயில்லை ஆனால் முஸ்லீம்களது கையிற்கு போக கூடாது என்பது தான் அங்குள்ளவர்களது நிலைப்பாடு ....கருணாவும் தான் அது எடுத்துத் தருவேன் ,இது எடுத்து தருவேன் என்று சொல்லி வாக்கு கேட்கவில்லை ...அந்த மக்களும் அவர் எடுத்துத் தருவார் என்பதற்காக அவர் பின்னால் போகவில்லை...கருணாவால் தான் இரு பக்கத்தையும் சமப்படுத்த முடியும் என்று அவர்கள் நினைக்கிறார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

கும்மானும் கிடையாது இவரும் கிடையாது. இவர் இறுதிப் போரின் போது வெளிநாடுகளில் தான் அதிகம் கிடந்தார்.

ஆனால்.. இராணுவம் கிளிநொச்சியை நெருங்க முடியாமல் தவித்த போது.. சர்வதேச படைத்தளபதிகள் களத்துக்கு விரைந்து திட்டம் வகுத்துக் கொடுத்தவை எல்லாம் நாம் இலகுவாக மறந்து விட்டோம். 

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, ரதி said:

அண்ணா ,உங்களை போன்றவர்களுக்கு ஊர் நிலவரம் விளங்காது ...அதுவும் மட்டு,அம்பாறை  நிலவரம் பூச்சியம்... கிழக்கை சிங்களவர்கள் வைத்துக் கொண்டாலும் பரவாயில்லை ஆனால் முஸ்லீம்களது கையிற்கு போக கூடாது என்பது தான் அங்குள்ளவர்களது நிலைப்பாடு ....கருணாவும் தான் அது எடுத்துத் தருவேன் ,இது எடுத்து தருவேன் என்று சொல்லி வாக்கு கேட்கவில்லை ...அந்த மக்களும் அவர் எடுத்துத் தருவார் என்பதற்காக அவர் பின்னால் போகவில்லை...கருணாவால் தான் இரு பக்கத்தையும் சமப்படுத்த முடியும் என்று அவர்கள் நினைக்கிறார்கள் 

எப்படி சமப்படுத்துவார் 🤔

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Kapithan said:

எப்படி சமப்படுத்துவார் 🤔

நீங்கள் விரும்புறீங்களோ ,இல்லையோ கிழக்கில் முஸ்லிம்களுக்கு இவர் மேல் பயம் ...இவர் இருந்தால் தேவையில்லாமல் கை வைக்க மாட்டார்கள் ...அரசை எடுத்துக் கொண்டால் இவர் அவர்களை சமாளித்து நடந்து கொள்வார் ...இங்குள்ள பலர்ஆசைப்படுகிற மாதிரி கோத்தா சகோதரங்கள் இப்போதைக்கு இவரை தூக்கி  எறிய மாட்டார்கள் ...  அவர் ஒன்றும் முட்டாள் இல்லை ...அவரும் கோ.சகோதரர்களை பகைக்க மாட்டார் ...கொஞ்ச காலத்திற்கு வண்டி ஸ்மூர்த்தாய் போகும் 🙂
 
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

அண்ணா ,உங்களை போன்றவர்களுக்கு ஊர் நிலவரம் விளங்காது ...அதுவும் மட்டு,அம்பாறை  நிலவரம் பூச்சியம்... கிழக்கை சிங்களவர்கள் வைத்துக் கொண்டாலும் பரவாயில்லை ஆனால் முஸ்லீம்களது கையிற்கு போக கூடாது என்பது தான் அங்குள்ளவர்களது நிலைப்பாடு ....கருணாவும் தான் அது எடுத்துத் தருவேன் ,இது எடுத்து தருவேன் என்று சொல்லி வாக்கு கேட்கவில்லை ...அந்த மக்களும் அவர் எடுத்துத் தருவார் என்பதற்காக அவர் பின்னால் போகவில்லை...கருணாவால் தான் இரு பக்கத்தையும் சமப்படுத்த முடியும் என்று அவர்கள் நினைக்கிறார்கள் 

அதாவது எனக்கு இரண்டு கண்களும் போனாலும் பரவாயில்லை எதிரிக்கு ஒரு கண்ணாவது போகணும் என்கிறீர்கள். உங்களுக்கு முரளிதரனைத்தான் தெரியவில்லை என்று நினைத்தேன் சிங்களத்தையும் தெரியவில்லை இசுலாமியர்களின் பலத்தையும் தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

நீங்கள் விரும்புறீங்களோ ,இல்லையோ கிழக்கில் முஸ்லிம்களுக்கு இவர் மேல் பயம் ...இவர் இருந்தால் தேவையில்லாமல் கை வைக்க மாட்டார்கள் ...அரசை எடுத்துக் கொண்டால் இவர் அவர்களை சமாளித்து நடந்து கொள்வார் ...இங்குள்ள பலர்ஆசைப்படுகிற மாதிரி கோத்தா சகோதரங்கள் இப்போதைக்கு இவரை தூக்கி  எறிய மாட்டார்கள் ...  அவர் ஒன்றும் முட்டாள் இல்லை ...அவரும் கோ.சகோதரர்களை பகைக்க மாட்டார் ...கொஞ்ச காலத்திற்கு வண்டி ஸ்மூர்த்தாய் போகும் 🙂
 
நீண்ட கால நோக்கில் கிழக்கு வாழ் தமிழர்களுக்கு என்ன நன்மை 🤔

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

நீண்ட கால நோக்கில் கிழக்கு வாழ் தமிழர்களுக்கு என்ன நன்மை 🤔

அதைப்பற்றி யாருக்கும் கவலை இப்ப? எரியிற வீட்டில் பிடுங்கும் வரைக்கும் லாபமே!!!

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரதி said:

நீங்கள் விரும்புறீங்களோ ,இல்லையோ கிழக்கில் முஸ்லிம்களுக்கு இவர் மேல் பயம் ...இவர் இருந்தால் தேவையில்லாமல் கை வைக்க மாட்டார்கள் ...அரசை எடுத்துக் கொண்டால் இவர் அவர்களை சமாளித்து நடந்து கொள்வார் ...இங்குள்ள பலர்ஆசைப்படுகிற மாதிரி கோத்தா சகோதரங்கள் இப்போதைக்கு இவரை தூக்கி  எறிய மாட்டார்கள் ...  அவர் ஒன்றும் முட்டாள் இல்லை ...அவரும் கோ.சகோதரர்களை பகைக்க மாட்டார் ...கொஞ்ச காலத்திற்கு வண்டி ஸ்மூர்த்தாய் போகும் 🙂
 
அஸ்ரப்பானஅஸ்ரப்பையே போட்டு தள்ளியவர்களுக்கு முரளிதரனை போடுவது கஸ்டமா என்ன?

கூட்டணி வருவதை விட முரளிதரன் பரவாயில்லை.
பார்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

https://www.tamilwin.com/election/01/251774?ref=home-top-trending
 
இந்த தேர்தல் கணிப்பீட்டில் முரளிதரன் வெற்றிக்கு கிட்டவே இல்லையே!

யாராவது முழு கணிப்பீட்டையும் பதிவு செய்ய முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, ஈழப்பிரியன் said:

இந்த தேர்தல் கணிப்பீட்டில் முரளிதரன் வெற்றிக்கு கிட்டவே இல்லையே!

யாராவது முழு கணிப்பீட்டையும் பதிவு செய்ய முடியுமா?

கருணாவோ ,குருணாவோ 
கிழக்கு மாகாண தமிழ் மக்களுக்கு மாற்றுத்தெரிவின் அவசியம் இந்த தேர்தலில்  புரிந்திருக்கிறது.
பிரதிநிதியை கூட்டத்தமைப்பிற்கு கொடுத்தாற்போல என்ன செய்து கிழிப்பினம் ,அங்கே போய் தூங்கி கிடந்து விட்டு வருவினம். வடக்கு மாக்கள் தமது பெருவாரியான வாக்கை கூத்தமைப்பிற்கு வழங்குவதன் மூலம்  அம்பிகாவின் ரிட்டயார்மண்ட்டை  அர்த்தமுள்ளதாக்கி தொடர்ந்து உங்களுக்கு நீங்களே ஆப்பு சொருகிக்கொள்ள வேண்டுகிறேன்...ஞாபகம் வச்சிக்கொள்ளுங்கோ போனஸ் முக்கியம்    

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்டு மட்டும் தெளிவாய் தெரியுது.தாயகத்தில் உள்ளவர்களுக்கும் வெளி நாட்டில் உள்ளவர்களுக்கும் இடைவெளி மிகப்பெரியது.ஒன்டு கனவு மற்றது யதார்த்தம்.

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, விசுகு said:

தோல்விக்குத்தான் பலர்

ஆனால் வெற்றிக்கு சிங்களம் மட்டுமே

அவன் தெளிவாக  இருக்கிறான்

நம்மவர்கள்  தான் இன்றும்

 கிழக்கை  இசுலாமியரிடமிருந்து 

மீட்டு சிங்களவன் தமிழிரிடம் தருவான்  என்ற  கனவில்?????😢

அப்போ அண்ணன் கூட்டமைப்பு மீட்டு தரும் என்று நினைக்கிறாறோ என்னவோ தெரியல😜🤠

கிழக்கை அல்ல வடக்கை கூட மீட்க முடியாது என்று அண்ணனுக்கு விளங்க நாள் எடுக்கும் காரணம் நீங்கள் அறிந்து கொள்ள வாய்ப்பில்லை அரசின் நிகழ்ச்சி நிரல் வேறு வடக்கில் ஓர் ராணுவ கெப்டன் தேர்தலில் நிற்கிரார் அவருக்கு வடக்கு மக்கள் பிரியாவிடை எப்படி கொடுத்தார்கள் என்று உங்களுக்கு தெரிந்திருக்கும் 

கிழக்கை கர்ணாவோ அரசோ மீட்டு தமிழர்களிடம் கொடுக்கும் என்று மக்கள் நினைக்கவில்லை மக்கள் பிரச்சினைய கதைக்க ஒருத்தர் வேண்டும் அதுதான் மக்கள் எதிர்பார்ப்பது 

13 hours ago, ரதி said:

அண்ணா ,உங்களை போன்றவர்களுக்கு ஊர் நிலவரம் விளங்காது ...அதுவும் மட்டு,அம்பாறை  நிலவரம் பூச்சியம்... கிழக்கை சிங்களவர்கள் வைத்துக் கொண்டாலும் பரவாயில்லை ஆனால் முஸ்லீம்களது கையிற்கு போக கூடாது என்பது தான் அங்குள்ளவர்களது நிலைப்பாடு ....கருணாவும் தான் அது எடுத்துத் தருவேன் ,இது எடுத்து தருவேன் என்று சொல்லி வாக்கு கேட்கவில்லை ...அந்த மக்களும் அவர் எடுத்துத் தருவார் என்பதற்காக அவர் பின்னால் போகவில்லை...கருணாவால் தான் இரு பக்கத்தையும் சமப்படுத்த முடியும் என்று அவர்கள் நினைக்கிறார்கள் 

ரதி அண்ணன் இப்பவும் வடகிழக்கு தமிழர் கைகளில்தான் இருக்கிறது என நினைத்துக்கொண்டிருக்கிறார் ஊர்ல நிலவரம் என்ன நடக்கிறது ஒரு வியாபாரத்தை கூட எப்படி தடுக்கிறார்கள் என்று அண்ணனுக்கு தெரியாது குறிப்பா தமிழர் ஒரு கிலோ மரக்கறி 100 ரூபாவுக்கு விற்றால் அதை உடைக்க 50  ருபாய்க்கு விற்கிரார்கள் வியாபார தந்திரமும் நஸ்டம் ஏற்படுத்தி அவர்கள் காலில் வீழ்ந்து கிடக்க வேண்டுமெனவும் இதையெல்லாம் சொல்ல நேரம் எடுக்கும்  விளங்கவும் மாட்டாது 

பழைய புராணத்தை அந்த இடத்திலே நிற்பதை விட புதியதை பயன்படுத்தி செல்ல வேண்டும் இல்லையென்றால் இன்னும் தெருவில்தான் நிற்க வேண்டும் வடகிழக்கு மக்கள் கிழக்கு வீழ்ந்துவிட்டது வடக்கு வெகுதொலைவில் இல்லை 

6 hours ago, ரஞ்சித் said:

அதைப்பற்றி யாருக்கும் கவலை இப்ப? எரியிற வீட்டில் பிடுங்கும் வரைக்கும் லாபமே!!!

கிழக்கு மக்களுக்கு புடுங்கிற வரைக்கும் லாபமே காளிகோவிலை உடைத்து நொருக்கி கடை கட்டுகிறான் , தனக்கு சாதமாக்க வழக்கில் நீதிபதியை மாற்றுகிறான் இதையெல்லாம் தெரிந்தும் கூத்தமைப்பு முதலைமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்க்கிறது இதை பார்ர்த்து கிழக்கு மக்கள் என்ன செய்ய வேண்டும் கூத்தமைப்பு கொடுக்கும் அடி  அவர்கள்  உணரவேண்டும் ஆனால் உணர வாய்ப்பில்லை அவர்களுக்கு வடக்கு மட்டுமே வேண்டும் 

நாங்கள் இப்ப எறியிறவன் கையில் பொல்லை கொடுக்கிறோம் கிடைத்தாலும் நன்மை கிடைக்காவிட்டால் பழகிப்போன ஒன்று 

5 hours ago, ஈழப்பிரியன் said:

கூட்டணி வருவதை விட முரளிதரன் பரவாயில்லை.
பார்ப்போம்.

மட்டக்களப்பில் பிள்ளையான் அம்பாறையில் கர்ணா அம்மான் வரலாம் வயது வந்தவர்களை விட பல இளையவர்கள் கர்ணாவை விரும்புகிறார்கள் பழையதை மறந்து 

3 hours ago, அக்னியஷ்த்ரா said:

கருணாவோ ,குருணாவோ 
கிழக்கு மாகாண தமிழ் மக்களுக்கு மாற்றுத்தெரிவின் அவசியம் இந்த தேர்தலில்  புரிந்திருக்கிறது.
பிரதிநிதியை கூட்டத்தமைப்பிற்கு கொடுத்தாற்போல என்ன செய்து கிழிப்பினம் ,அங்கே போய் தூங்கி கிடந்து விட்டு வருவினம். வடக்கு மாக்கள் தமது பெருவாரியான வாக்கை கூத்தமைப்பிற்கு வழங்குவதன் மூலம்  அம்பிகாவின் ரிட்டயார்மண்ட்டை  அர்த்தமுள்ளதாக்கி தொடர்ந்து உங்களுக்கு நீங்களே ஆப்பு சொருகிக்கொள்ள வேண்டுகிறேன்...ஞாபகம் வச்சிக்கொள்ளுங்கோ போனஸ் முக்கியம்    

எப்பா கல்முனையில் பாண்டிருப்பில் மக்கள் வெள்ளம் பழைய கோட்டை ஆச்சே பாண்டிருப்பு கோமாரு பொத்துவில் அக்கறைப்பற்று கொலனி , பொத்துவில் தம்பிலுப்ல் எல்லாம் சனக்கூட்டம் கூட்ட்மைப்பு அடங்கி விட்டது மக்கள் யார் பக்கம் என தெரிந்து கொண்டு 

1 hour ago, சுவைப்பிரியன் said:

ஒன்டு மட்டும் தெளிவாய் தெரியுது.தாயகத்தில் உள்ளவர்களுக்கும் வெளி நாட்டில் உள்ளவர்களுக்கும் இடைவெளி மிகப்பெரியது.ஒன்டு கனவு மற்றது யதார்த்தம்.

தாயகத்தில் உள்ள பிரச்சினைகளை தெளிவாக புரிந்து கொள்ளவில்லை என்பேன் யுத்தம் முடிந்த பிறகும் அதனால்தான் பாரிய இடைவெளி நிலவுகிறது இது இன்னும் விரிசல்தான் அடையும் 

10 hours ago, Kapithan said:

நீண்ட கால நோக்கில் கிழக்கு வாழ் தமிழர்களுக்கு என்ன நன்மை 🤔

இதுவரைக்கும் என்ன கிடைத்திருக்கிறது சொல்லுங்கள்😬

  • கருத்துக்கள உறவுகள்

கருணா யாருக்காக திகாமடுல்லையில் தேர்தலில் நிற்கிறான் என்கிற தெளிவிருந்தாலே போதும், நடப்பதை அறிவதற்கு. ஆனால், சிலருக்குத் தெரியாது, யாழ்ப்பாணத்தானிற்குச்  சகுனம் பிழக்க வேண்டும் என்பதற்காக தமது தலையையும் இழக்கத் தயார் சிலர்.

உங்கள் தெரிவு, உங்கள் முடிவு, அனுபவிக்கப்போவதும் நீங்கள். ஏதோ செய்யுங்கள். 

பழதை மறந்துவிட்டார்களாம். நீங்கள் அப்படி இலகுவாக மறந்துவிட்டு துரோகிகளின் பின்னாலும், எதிரியின் பின்னாலும் செல்வதற்கு நடத்தப்பட்டது ஒன்றும் உங்கள் தனிப்பட்ட பிரச்சினையில்லை. அது கொல்லப்பட்ட ஒன்றரை லட்சம் அப்பாவிகளினது உயிரும், எமது உயிரிலும் மேலான தாயக விடுதலைப் போராட்டத்தினதும் அழிப்பும், எமக்கு இருந்த ஒரே காவல் அரணின் நிரந்தரமான முடிவும்தான்.

சலுகைகளுக்காகவும், பிரதேசவாதத்திற்காகவும் இனத்தைக் காட்டிக்கொடுத்துச் சோரம்போகும் அடிவருடிகளுக்கு இது புரியப்போவதில்லை.  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

ஒன்டு மட்டும் தெளிவாய் தெரியுது.தாயகத்தில் உள்ளவர்களுக்கும் வெளி நாட்டில் உள்ளவர்களுக்கும் இடைவெளி மிகப்பெரியது.ஒன்டு கனவு மற்றது யதார்த்தம்.

ஓம்....அந்த பெரிய இடை வெளி என்னவெண்டால் நாங்கள் கோப்பை/ கக்கூஸ் கழுவி உழைச்ச காசிலை அவையள் ஜாலியாய் மோட்டச்சைக்கிள் அது இது எண்டு காலுக்கு மேலை கால் போட்டுக்கொண்டு சாப்பிட்டுக்கொண்டு இருக்கினம்.
அவையின்ர நக்கல் சொல்லி வேலையில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

கிழக்கை கர்ணாவோ அரசோ மீட்டு தமிழர்களிடம் கொடுக்கும் என்று மக்கள் நினைக்கவில்லை மக்கள் பிரச்சினைய கதைக்க ஒருத்தர் வேண்டும் அதுதான் மக்கள் எதிர்பார்ப்பது

கதைப்பதற்கு, கருணாவை, பிள்ளையானை  விட  மாற்று அணி தெரிவு நல்லது. 

எவர் என்றாலும் பலன் இல்லை முடிவெடுத்து விட்டதால். 

கோத்த, மகிந்தவின் திட்டம் பொருளாதார அபிவிருத்தி என்பதால், கருணா, பிள்ளையான்  வந்தால் கதைக்க கூட முடியாமல் போகும்.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ரதி said:

அண்ணா ,உங்களை போன்றவர்களுக்கு ஊர் நிலவரம் விளங்காது ...அதுவும் மட்டு,அம்பாறை  நிலவரம் பூச்சியம்... கிழக்கை சிங்களவர்கள் வைத்துக் கொண்டாலும் பரவாயில்லை ஆனால் முஸ்லீம்களது கையிற்கு போக கூடாது என்பது தான் அங்குள்ளவர்களது நிலைப்பாடு ....கருணாவும் தான் அது எடுத்துத் தருவேன் ,இது எடுத்து தருவேன் என்று சொல்லி வாக்கு கேட்கவில்லை ...அந்த மக்களும் அவர் எடுத்துத் தருவார் என்பதற்காக அவர் பின்னால் போகவில்லை...கருணாவால் தான் இரு பக்கத்தையும் சமப்படுத்த முடியும் என்று அவர்கள் நினைக்கிறார்கள் 

வடக்கு தமிழர்களை விடுங்கள்.

 கிழக்கில் முஸ்லீம்களால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் தேர்தலில்  இரு பக்கத்தையும் சமபடுத்தும்  கருணாவை பெரும் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்கும் வாய்ப்பு இருக்கிறதா?

முதலில் அவர் நேரடியாக தேர்தலில் நிற்கும் வாய்ப்பு இருக்கிறதா?

  • கருத்துக்கள உறவுகள்
On 22/7/2020 at 19:35, உடையார் said:

கருணா பிரிந்ததாலேயே புலிகள் அமைப்பு பலவீனமடைந்ததாக கூறுவதும், அதனாலேயே அவர்கள் போரில் தோல்வி அடைந்தனர் என கூறுவதும் தவறு. அவர் புலிகளிடம் இருந்து பிரிந்த இரண்டே வாரங்களில் கிழக்கின் பலத்தைப் புலிகள் கைப்பற்றினர். இதனால் கருணா கொழும்புக்கு தப்பியோட வேண்டிய நிலை ஏற்பட்டது”

ணாவால்-புலிகள்-தோற்கவ/

உண்மைதான் , இறுதிபோரில் சிங்களவர்கள் வெற்றி பெற்றதுக்கு கருணா மட்டுமே காரணமல்ல..

இறுதி போரின் வெற்றிக்கு சிங்களத்தின் கனரக ஆயுத பலமும், புலிகளுக்கு வரவிருந்த கனரக ஆயுதங்களின் வழங்கல் தடைப்பட்டதுதான் பிரதான காரணம்.

ஆனால் ஒரு தலைமைபீடத்தின் ரகசியத்தை, அதன் போர் திட்டங்களை கூட இருந்தவனே காட்டி கொடுக்காமல் இருந்திருந்தால்,

போராட்ட யுக்தியை சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாற்றி ஒரு விடுதலை இயக்கம் எதிரிக்கு எப்போதுமே குடைச்சல் கொடுத்து கொண்டே இருந்திருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

இதுவரைக்கும் என்ன கிடைத்திருக்கிறது சொல்லுங்கள்😬

ஆகக் குறைந்தது,  நாங்கள் எல்லோரும் ஒன்றாக, தமிழராக இருந்தோம். (எனது கேள்வியின் அர்த்தம் புரியாத ஆளல்ல நீங்கள். இருந்தும் உங்களால் முன்வைக்கப்பட் வெற்றுக் கேள்விக்கான பதில் மட்டுமே இது) ☹️

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.