Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முன்னாள் போராளிகளை இணைத்து பயங்கரவாதத்தை தலைதூக்கச் செய்ய புலம்பெயர் தரப்பு முயற்சி- பாதுகாப்புச் செயலாளர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Robinson cruso said:

இங்குஇன்னொரு மொழியை கற்க வேணுமா இல்லை வேண்டாமா என்பதை யார் தீர்மானிப்பது? அரசியல் கட்சியா இல்லை தனி மனிதனா? அல்லது தேசியம் என்று சொல்லி வேறு மொழியை கட்காமல் இருக்க வேண்டுமா? இதட்கும் விளக்கம் தந்தாள் நல்லது.தான் பிரச்சனை ஆரம்பமாகிறது. 😜

இப்படியான கேள்விகளை ஒரு சிங்களம் மட்டுமே தெரிந்தவர் கேட்கும்போது என்ன பதில் சொல்லலாம் என்று யோசித்தால் விடை இலகு.

அரசியல் சாசனப்படி தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகியவை அரசகரும மொழிகள் என்றுள்ளதால், தமிழ் மட்டுமே தெரிந்த ஒருவர் தமிழில் தனது கடைமைகளைச் செய்ய உரிமை உள்ளது. ஆனால் அதற்கு பல தடைகள் உள்ளன. இப்படியான தடைகளால்தான் தமிழர்கள் சிங்களம், ஆங்கிலம் (ஆங்கிலத்தை வைத்து தனிச் சிங்களப் பகுதிகளில் சமாளிப்பது கடினம் என்பதை அனுபவம் கற்றுத் தந்தது) கற்கவேண்டிய நிலை உள்ளது.

ஆங்கிலம் சர்வதேச மொழியாக இருப்பதால் அதனைக் கற்பதில் தவறில்லை. உண்மையில் ஆங்கிலத்தை இளவயதில் இருந்து சரளமாக எழுதவும், பேசவும் தெரிந்து வைப்பது மிகவும் பிரயோசனமானது. 

ஆனால் சிங்களம் கற்கவேண்டிய தேவை விருப்பத்தின் அடிப்படையில் வருவதில்லை. தமிழில் அல்லது ஆங்கிலத்தில் கருமங்களை ஆற்றமுடியாத நிலையை உருவாக்கி சிங்களத்தை கற்குமாறு மொழி திணிக்கப்படுகின்றது. எனவே, இது ஒரு அரசியல்விடயம்.

தனி மனிதர்கள் தமது சுயவிருப்பில் மொழியைக் கற்பதற்கும், மொழியைத் திணிப்பதற்கும் இடையில்  உள்ள வித்தியாசம் புரியாமல் இங்கு கருத்துக்கள் வைக்கப்படவில்லை என்றே நினைக்கின்றேன்.

  • Replies 152
  • Views 13.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, கிருபன் said:

வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்தவர்கள் அந்த நாட்டு மொழிகளைக் கற்று கருமங்களை ஆற்றுவதையும் பிறந்த நாட்டில் தெரிந்த ஒரே தமிழ் மொழியை வைத்து தமது வேலைகளைச் செய்யமுடியாமல் தவிப்பதற்கும் பலத்த வேறுபாடு உள்ளது.

வெளிநாடுகளில் கூட அத்தியாவசியமான தேவைகளுக்கு மொழிபெயர்ப்பு சேவையை ஜனநாயகப்பண்புள்ள அரசுகள் செய்து கொடுக்கின்றன என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

எனவே, தமிழ் மக்களை இலங்கையர் என்று உணரவைக்கவேண்டுமானால் சிங்களப் பகுதிகளில் தமிழில் கருமங்களை ஆற்ற உதவிகள் செய்யத்தான் வேண்டும். ஆனால் தமிழ்ப்பகுதிகளிலேயே, குறிப்பாக பொலிஸ் நிலையங்களில் தமிழில் முறைப்பாடுகள் செய்வதற்குக்குகூட இடர்பாடுகள் இருக்கின்றன.

உங்கள் பதிலுக்கு நன்றி கிருபன். 

ஒருவேளை இப்படியுமிருக்கலாம். நாங்கள் சிங்கள மக்கள் மத்தியில் சிறுவயதில் இருந்து வாழ்வதனால் யாரும் சிங்கள மொழியை திணிக்காமலே இயல்பாகவே கற்றுக்கொண்டோம். இதானால் அடையாளாத்தை இழக்கின்றேம் அல்லது எங்களை ஆதிக்கம் செய்கின்றார்கள் என்ற எண்ணம் எங்களுக்கு வரவில்லை. இதேபோல் எங்களை சுற்றி வாழும் சிங்களவர்களும் நன்கு தமிழ் பேசக்கூடியவர்களாக இருக்கின்றார்கள். இதனால் தேசியத்தை பற்றி ஒரு புரிந்துணர்வு இல்லாமல் போய்விட்டது. 

44 minutes ago, கிருபன் said:

இப்படியான கேள்விகளை ஒரு சிங்களம் மட்டுமே தெரிந்தவர் கேட்கும்போது என்ன பதில் சொல்லலாம் என்று யோசித்தால் விடை இலகு.

அரசியல் சாசனப்படி தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகியவை அரசகரும மொழிகள் என்றுள்ளதால், தமிழ் மட்டுமே தெரிந்த ஒருவர் தமிழில் தனது கடைமைகளைச் செய்ய உரிமை உள்ளது. ஆனால் அதற்கு பல தடைகள் உள்ளன. இப்படியான தடைகளால்தான் தமிழர்கள் சிங்களம், ஆங்கிலம் (ஆங்கிலத்தை வைத்து தனிச் சிங்களப் பகுதிகளில் சமாளிப்பது கடினம் என்பதை அனுபவம் கற்றுத் தந்தது) கற்கவேண்டிய நிலை உள்ளது.

ஆங்கிலம் சர்வதேச மொழியாக இருப்பதால் அதனைக் கற்பதில் தவறில்லை. உண்மையில் ஆங்கிலத்தை இளவயதில் இருந்து சரளமாக எழுதவும், பேசவும் தெரிந்து வைப்பது மிகவும் பிரயோசனமானது. 

ஆனால் சிங்களம் கற்கவேண்டிய தேவை விருப்பத்தின் அடிப்படையில் வருவதில்லை. தமிழில் அல்லது ஆங்கிலத்தில் கருமங்களை ஆற்றமுடியாத நிலையை உருவாக்கி சிங்களத்தை கற்குமாறு மொழி திணிக்கப்படுகின்றது. எனவே, இது ஒரு அரசியல்விடயம்.

தனி மனிதர்கள் தமது சுயவிருப்பில் மொழியைக் கற்பதற்கும், மொழியைத் திணிப்பதற்கும் இடையில்  உள்ள வித்தியாசம் புரியாமல் இங்கு கருத்துக்கள் வைக்கப்படவில்லை என்றே நினைக்கின்றேன்.

கனடாவில் இரண்டு மொழிகள் உண்டு, அங்கு எந்த பிரசிசினையுமில்லை. இங்கு இலங்கையில் இதற்கு மூல காரணம் ஊத்தை அரசிலைதான். வேறொன்றுமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

நீங்கள் இப்படியொரு கேள்வியை கேட்டதால்தான் நல்லதொரு விளக்கத்தை கபிதான் தந்துள்ளார். அதற்கு உங்களுக்கு நன்றி.

8 hours ago, Kapithan said:

2) சிங்களம் தெரிந்து வைத்திருத்தல் எனக்கு அனுகூலமானதுதான். ஆனால் அதனைக்  கற்பது எனது தெரிவைப்பொறுத்தது. என்னை கற்கும்படி நிர்ப்பந்திக்க முடியாது.

சிங்களவர்களை யாராவது தமிழைக் கற்கும்படி கேட்கவோ நிர்ப்பந்திக்கவோ முடியுமா 😂

தமிழைக் கற்கும்படி உங்களால் சிங்களவரிடம் கூற முடியுமா ☹️

தமிழரிடம் சிங்களத்தைக் கற்கும்படி உங்களால் கூறமுடியும். ஆனால் சிங்களவரிடம் தமிழைக் கற்கும்படி கூறமுடியாதல்லவா 😀 இங்குதான் பிரச்சனை ஆரம்பமாகிறது. 👍

நாங்கள் யாழ்பாணத்து உறவினர்களுடன் தனி சிங்கள பகுதிகளுக்கு இடம் பார்க்க போனபோது சிங்களம் தெரியாமல் கஷ்டபட்ட போது சில சிங்களவர்கள் தமிழில் சொல்லி உதவி செய்தார்கள். இது எப்படி என்று வியந்த போது யாழ்பாண மருத்துவ மனையில் சிங்கள டொக்டர்கள் நேர்ஸ்கள் இருக்கிறார்கள் அவர்களும் தமிழ் கதைப்பார்கள் என்றார்கள். எங்களுக்கு தான் இலங்கையில் உள்ள இன்னொரு மொழியை படிப்பதற்கு மட்டும் அது நிர்ப்பந்தமா அல்லது எனது தெரிவா என்று எல்லாம் ஏராளம் சிந்திக்க வேண்டி இருக்கிறது.

1 hour ago, Robinson cruso said:

இங்குஇன்னொரு மொழியை கற்க வேணுமா இல்லை வேண்டாமா என்பதை யார் தீர்மானிப்பது? அரசியல் கட்சியா இல்லை தனி மனிதனா? அல்லது தேசியம் என்று சொல்லி வேறு மொழியை கட்காமல் இருக்க வேண்டுமா? இதட்கும் விளக்கம் தந்தாள் நல்லது.தான் பிரச்சனை ஆரம்பமாகிறது

நான் இலங்கையில் வாழ்ந்தால் அரசியல்வாதிகள் பேச்சை கேட்காமல் தேசியவாதிகள் வெளிநாடுகளில் வேற்று மொழிகள் கற்பது போல் சிங்களம் படிப்பேன்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kapithan said:

😂

1) 😏(😂)

2) சிங்களப் பகுதிகளில் தமிழர் ஒருவரும் தமிழ் பேசுமாறு கேட்பதில்லை. சிங்களப் பகுதிகளில் அரச அலுவல்களை மேற்கொள்ள முனையும்போது தமிழில், அதாவது எனது சொந்த மொழியில் மேற்கொள்ள எனக்கு உரிமை இருக்க வேண்டும். ஏனென்றால் இலங்கை எனது நாடு. அங்கே நான் சலுகைகளை எதிர்பார்ப்பதில்லை. உரிமைகளை கேட்கிறேன். 

குடியேற்ற நாடுகளில் எனக்கு வழங்கப்படுவது சலுகை. 

மற்றவர்களுக்கு advice மழை பொழிவதற்கு முன்னர் சலுகைக்கும் உரிமைக்கும் இடையே உள்ள வேறுபாட்டைத் தெரிந்துகொள்ளுங்கள். ☹️

இங்கே கனிமொழி தெளிவாக சொல்கிறார் ஒற்றுமைக்கு உலை வைப்பது எது என்று

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, விளங்க நினைப்பவன் said:

நாங்கள் யாழ்பாணத்து உறவினர்களுடன் தனி சிங்கள பகுதிகளுக்கு இடம் பார்க்க போனபோது சிங்களம் தெரியாமல் கஷ்டபட்ட போது சில சிங்களவர்கள் தமிழில் சொல்லி உதவி செய்தார்கள். இது எப்படி என்று வியந்த போது யாழ்பாண மருத்துவ மனையில் சிங்கள டொக்டர்கள் நேர்ஸ்கள் இருக்கிறார்கள் அவர்களும் தமிழ் கதைப்பார்கள் என்றார்கள். எங்களுக்கு தான் இலங்கையில் உள்ள இன்னொரு மொழியை படிப்பதற்கு மட்டும் அது நிர்ப்பந்தமா அல்லது எனது தெரிவா என்று எல்லாம் ஏராளம் சிந்திக்க வேண்டி இருக்கிறது.

நான் இலங்கையில் வாழ்ந்தால் அரசியல்வாதிகள் பேச்சை கேட்காமல் தேசியவாதிகள் வெளிநாடுகளில் வேற்று மொழிகள் கற்பது போல் சிங்களம் படிப்பேன்.

தேவையென்றால் மட்டும்தான் எந்த மொழியும் படிக்கனும், தேவையில்லாவிட்டால் என்னத்துக்கு படிக்கனும் ???

எமது தெரிவை நாம்தான் முடிவு எடுக்கனும், மாற்றான் அல்ல.

இன்னும் காலம் கனிந்தே இருக்கு இலங்கை போய் சந்தோமாக ஒன்றாக இருந்து படிக்கலாம் நீங்கள்.

அட இன்றுதான் தெரியும் தேசிய வாதிகள் மட்டும் வேற்று மொழி படிக்கின்றார்கள்👍, தேசிய எதிர்ப்பு வாதிகள் எல்லாம் தமிழில் மட்டும் கதைத்து வாழ்கின்றார்கள் என்று🤔

  • கருத்துக்கள உறவுகள்

90 களின் இறுதிப்பகுதியில் என்று நினைக்கிறேன். பம்பலப்பிட்டியில் இருந்த பனானா லீf இல் உணவருந்திவிட்டு நானும் எனது பல்கலை நண்பர்களுமாக மொறட்டுவை நோக்கிப் பயணிக்கும் பஸ்ஸில் ஏறிக்கொண்டோம். ஆசனங்கள் ஏதும் வெறுமையாக இருக்காததனால் நின்றுகொண்டே பயணித்தோம். பஸ் ஒருவாறு டிக்மன் ரோட்டினைக் கடந்து முதலாவது தரிப்பிடத்தில் நின்றதும், ஒரு நடுத்தர வயது மதிக்கத்தக்க சிங்களவர் ஏறிக்கொண்டார். தான் ராணுவத்தில் பணியாற்றியதாகவும், தற்போது வேலையில்லாமல் இருப்பதால் தனக்கு உதவுமாறும் கேட்டு ஒரு துண்டு காகிதத்தில் சிங்களத்திலெ எழுதப்பட்ட ஒரு கடிததைக் காட்டி பஸ்ஸில் இருந்தவர்களிடம் பணம் கேட்டுக்கொண்டே வந்தார். சிலர் தம்மிடமிருந்த சில்லறைகளை அவருக்குக் கொடுத்தார்கள். நாம் அவரைக் கண்டுகொள்ளவில்லை. பஸ் இப்போது சவோய் தியட்டரினைத் தாண்டிப் பயணித்துக்கொண்டிருந்தது. 

பஸ்ஸில் பலரிடமும் பணத்தினைப் பெற்றுக்கொண்டு வந்த அவர், இறுதியாக யன்னல் ஓரத்தில் அமர்ந்து, வெளியே பார்த்துக்கொண்டு, காதில் வோக்மனைச் செருகியிருந்த ஒரு இளைஞனிடம் வந்து சிங்களத்தில் பணம் கேட்டார். அந்த இளைஞனுக்கு முதலில் அவர் தன்னிடம் பேசுவது தெரிந்திருக்கவில்லை. மீண்டும், அவரின் கையில் தட்டி, பணம் கேட்டார். அமர்ந்திருந்த இளைஞனுக்குச் சிங்களம் தெரியாது. அவர்கேட்டதற்கு அவனால் பதிலளிக்க முடியவில்லை. உடனடியாக அவனருகில் அமர்ந்துகொண்டு அவன் மீது சிங்களத்தில் வசைபாடத் தொடங்கினார். அந்த இளைஞனுக்கோ என்ன இவர் பேசுகிறார் என்பது புரியவில்லையென்பதை அவனது முகம் காட்டியது. பேசிக்கொண்டிருந்தவர், திடீரென்று அவனைக் கைகளை இறுக்கிப் பிடுத்து தலையில அறையத் தொடங்கினார். பஸ்ஸில் இருந்தவர்களுக்கு இவரது செய்கை ஆத்திரத்தை ஊட்டவே, சிலர் முணுமுணுக்கத் தொடங்கினார்கள். உடனேயே, "இவன் புலி, வன்னியில் இருக்கும் புலிகளுக்கு தொலைபேசியில் தகவல் அனுப்புகிறான் " என்று கத்தத் தொடங்கினார். இந்த நேரத்தில் நாங்கள் தலையிட்டு, அவரை அந்த இளைஞனுடன் இருந்து பிரித்தெடுத்தோம். நாங்கள் நால்வர் தன்னைச் சுற்றிக்கொண்டதும், அந்த இளைஞனைத் தாக்குவதை நிறுத்திய அவர், "எனது நாட்டில் நான்கு புலிகள் என்னைத் தாக்குகிறார்கள், நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கிறீர்களா?" என்று பஸ்ஸில் இருந்தவர்களிடம் கேட்கத் தொடங்கினார். இளைஞன் வெள்ளவத்தையில் இறங்கிவிட, நாமும் அடுத்தடுத்த தரிப்பிடங்களில் இறங்கிக் கொண்டோம். 

இவ்வாறே, பல்கலைக் கழகத்தில் பயிற்சி வகுப்பொன்றிற்கு போக முடியாமையினால், ஆங்கிலத்தில் கடிதம் எழுதிக்கொண்டு போனேன். இதை ஏற்றுக்கொள்ளமுடியாது, சிங்களத்தில் எழுதிக்கொண்டுவா என்று திருப்பியனுப்பினார் பட்டறையில் இருந்த பயிற்றுனர். எனக்குச் சிங்களம் பேசத் தெரிந்தளவிற்கு எழுதத் தெரியாது.  விரிவுரையாளரிடம் சென்று கேட்டதற்கு, நீங்கள் ஆங்கிலத்தில் கடிதம் கொடுக்கலாம், அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று மிகச் சாதாரணமாகச் சொன்னார். ஆகவே மீண்டும் பயிற்றுனரிடம் போனேன். சிங்களத்தில் கடுமையாகத் திட்டினார், எங்களிடம் படித்துக்கொண்டுபோய் புலிகளுக்கு ஆயுதம் செய்துகொடுக்கப்போறியா என்று கேட்டார்.  என்னால் எதுவுமே சொல்லாமால் மெளனமாக இருப்பதைத்தவிர வேறு எதுவும் செய்யமுடியவில்லை. சிங்களம் தெரிந்திருக்கவேண்டும் என்பது எனது தெரிவில்லை, ஆனால் சிங்களவர்கள் அதனைக் கட்டாயமாக்கியிருந்தார்கள். ஆங்கிலமூல பல்கலைக்கழகக் கல்வியில் விரிவுரையாளர்களும், பயிற்றுநர்களும் அவ்வப்போது வேண்டுமென்றே சிங்களத்தில் பேசுவது ஏனென்று தெரியாமல் பல தமிழர்கள் இருந்தார்கள். ஆனால், தமிழ் விரிவுரையாளர்கள் தப்பித் தவறியும் தமிழில் பேசமுடியாது. விரிவுரையானாலும் சரி, மாணவர்களுடன் தனியே பேசுவதானாலும் சரி, ஒன்றில் ஆங்கிலம் அல்லது சிங்களம். இது அவர்களின் தெரிவா என்றால், நிச்சயமாக இல்லை, அது கட்டாயம்.  

இதை ஏன் சொல்கிறேன் என்றால், சிங்களம் படிக்கவேண்டியது ஒரு தெரிவல்ல. அது கட்டாயம். இல்லாவிட்டால் தெற்கில் எமக்கு என்ன நடக்கும் என்று சொல்லத் தெரியாது. ஆனால், சிங்களவர்கள் தமிழ் படிக்கவில்லையென்றால் அவர்களுக்கு ஒரு தீங்கும் இல்லை. அவர்கள் யாழ்ப்பாணத்திலோ, மட்டக்களப்பிலோ தாராளமாக சிங்களத்தில் தமிழருடன் பேசலாம், யாரும் அடிக்கவோ, ஏன் தமிழில் பேசமாட்டாயோ என்று கேட்கப்போவதில்லை. அவர்கள் விரும்பினால் தமிழில் பேசலாம், இல்லாவிட்டாலும் பரவாயில்லை. அது அவர்களின் விருப்பம் அல்லது தெரிவு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 20/8/2020 at 09:54, ரதி said:

ஈழம் கிடைத்தால் எல்லோருக்கும் தான் சந்தோசம் ...ஆனால் வெளிநாட்டில் இருந்து கொண்டு ஈழம் ஈழம் என்று கத்தினால்    மட்டும் ஈழம் கிடைத்து விடாது ...இங்கேயிருந்து கொண்டு தேசியம் என்று கதைப்பவர்கள் எப்படி அங்கேயிருப்பவர்கள் செயற்பட வேண்டும் என்று நினைக்கிறார்கள் ?

புலம்பெயர்ந்த தமிழர்கள்  இலங்கை விடயத்தில் எப்படியிருக்க வேண்டும் என நீங்கள் நினைக்கின்றீர்கள்? அல்லது என்ன செய்ய வேண்டும் ?

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களம் மட்டும் என்கிற சட்டம் வந்தபோது வடகிழக்கை சேர்ந்த கொழும்பில்கற்று, சிங்கள நண்பர்களைக் கொண்ட பல இளைஞர்கள் தங்கள் தொழிலை தூக்கி எறிந்து தம் எதிர்ப்பை வெளியிட்டு தம் சொந்த ஊருக்கு திரும்பினார்கள். காரணம் இன உணர்வு. அது யாரும் சொல்லி தெரிந்து வருவதில்லை. தன்னோடு கூடப்பிறந்து இரத்தத்தோடு கலந்தது. ஒரு தமிழன் தாக்கப்பட்டால் இன்னொரு தமிழனுக்கு ரத்தம்  கொதிக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Robinson cruso said:

நீங்கள் சொன்னதை ஏற்றுக்கொள்ளுகிறேன்.

1) இருந்தாலும் எவ்வளவு காலத்துக்கு தூசு தடட வேண்டுமென்று சொன்னால் கொஞ்சம் விளக்கமாக இருக்கும்.

2) நான் அறிந்த வரைக்கும் 70 வருடங்களாக தூசு தட்டுவதாக அறிகிறேன்.

3) இப்போது போகிற போக்கில் இன்னும் 70 வருடங்களுக்கு தூசு தட்டுவார்கள், அல்லது இந்த அரசு 5 வருடத்துக்குள் முடித்து வைக்கும் என நம்புகிறேன்.

4) இங்குஇன்னொரு மொழியை கற்க வேணுமா இல்லை வேண்டாமா என்பதை யார் தீர்மானிப்பது? அரசியல் கட்சியா இல்லை தனி மனிதனா? அல்லது தேசியம் என்று சொல்லி வேறு மொழியை கட்காமல் இருக்க வேண்டுமா?

5) இதட்கும் விளக்கம் தந்தாள் நல்லது.தான் பிரச்சனை ஆரம்பமாகிறது. 😜

1) எனது அடையாளம் பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கை வரும்வரை தூசு தட்டப்படும் 😀

2) அதில் உங்களுக்கு என்ன பிரச்சனை. 

3) அது தூசு தட்டுபவர்களுக்கும் துசு தட்டவைப்பவர்களுக்குமான பிரச்சனை. இதில் நீங்கள் ஏன் மூக்கை நுழைக்கிறீர்கள்.  

4) அரசாங்கம் தனது துறைகளில் மும்மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்தும்போதி அரசாங்க ஊழியர்கள் அரச சட்டதிட்டங்களுக்கு  அமைவாக நடக்கவேண்டிய தேவை உள்ளது. தனியார்துறையை அரசாங்கம் விரும்பினால் கட்டுப்படுத்தலாம். ஆனால் தனி மனிதனை தாய் மொழி தவிர்ந்த இன்னொரு மொழியை கற்கும்படி வற்புறுத்த முடியாது. 

5) உந்த விளக்கமெல்லாம் ஏன் மோனே உமக்கு ? (தங்கம் புடம்போடப் போட மிளிருமே தவிர கறுக்காது)

அதுசரி வங்காலையான், தேசியத்துக்கும் உங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லையே பிறகேன் அதற்குள் மூக்கை நுளைக்கிறீர்கள். விடுப்புப் பார்க்க வந்தனீங்களோ 😂😂

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Robinson cruso said:
9 hours ago, Robinson cruso said:

ஒப்பந்தம் கையொப்பமிடட கொழும்பு துறைமுகத்தில் இருந்தே இந்தியாவை துரத்தி விடடவனுக்கு இதெல்லாம் ஒன்றுமேயில்லை. இந்தியா என்ன கிழித்தா விடடார்கள்? இவர்களுக்கு தெரியும் என்னதான் செய்தாலும் கச்சத்தீவு ஒரு நாளும் இந்தியா பக்கம் போகாது எண்டு.

ஸ்ரீலங்காவின் சண்டித்தனம்,  நினைப்பு எல்லாம் இந்தியா கச்சத்தீவு தனக்கு அவசியமா என்று நினைக்குமட்டும்தான். அவர்களுக்கு அது வேண்டுமென்று நினைத்தால் அடுத்தநாளே எடுத்துக்கொள்வார்கள். யாரும் கேட்கமுடியாது. இதுகூட உங்களுக்கு தெரியவில்லை!!😂

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

சீமான் படத்தோடு கனிமொழி பேச்சை போட்டு உள்ளீர்கள். கனிமொழி கட்சியினர் தமிழ் துரோகிகள், தமிழர்கள் இல்லை என்றும் இங்கே யாழ்களத்தில் தான் படித்தேன் 😂   இந்தியா பல மொழிகள் கொண்ட நாடு.

கனிமொழியிடம் இந்தியாவில் சொன்னது போல இலங்கை சென்ற தமிழர்களிடம் விமானநிலையத்தில் சிங்களவர்களால் சொல்லபட்டதாக எவரும் சொல்லவில்லை .

4 minutes ago, Eppothum Thamizhan said:

அவர்கள் அப்படி எடுக்க மாடடார்கள் என்று இலங்கை நிச்சயமாக நம்புகிறது.

9 minutes ago, Kapithan said:

1) எனது அடையாளம் பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கை வரும்வரை தூசு தட்டப்படும் 😀

2) அதில் உங்களுக்கு என்ன பிரச்சனை. 

3) அது தூசு தட்டுபவர்களுக்கும் துசு தட்டவைப்பவர்களுக்குமான பிரச்சனை. இதில் நீங்கள் ஏன் மூக்கை நுழைக்கிறீர்கள்.  

4) அரசாங்கம் தனது துறைகளில் மும்மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்தும்போதி அரசாங்க ஊழியர்கள் அரச சட்டதிட்டங்களுக்கு  அமைவாக நடக்கவேண்டிய தேவை உள்ளது. தனியார்துறையை அரசாங்கம் விரும்பினால் கட்டுப்படுத்தலாம். ஆனால் தனி மனிதனை தாய் மொழி தவிர்ந்த இன்னொரு மொழியை கற்கும்படி வற்புறுத்த முடியாது. 

5) உந்த விளக்கமெல்லாம் ஏன் மோனே உமக்கு ? (தங்கம் புடம்போடப் போட மிளிருமே தவிர கறுக்காது)

அதுசரி வங்காலையான், தேசியத்துக்கும் உங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லையே பிறகேன் அதற்குள் மூக்கை நுளைக்கிறீர்கள். விடுப்புப் பார்க்க வந்தனீங்களோ 😂😂

இல்லை. பதிலை எதிர்பார்த்தேன் ஏதோதெல்லாம் எழுதுகிறீர்கள். சரி உங்கள் சந்தோஷத்துக்கு , மாட்றவர்கள் சந்தோசத்திட்கு எழுதுங்கள். எனக்கு ஒன்றும் குறையப்போவதில்லை.

4 hours ago, கிருபன் said:

இப்படியான கேள்விகளை ஒரு சிங்களம் மட்டுமே தெரிந்தவர் கேட்கும்போது என்ன பதில் சொல்லலாம் என்று யோசித்தால் விடை இலகு.

அரசியல் சாசனப்படி தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகியவை அரசகரும மொழிகள் என்றுள்ளதால், தமிழ் மட்டுமே தெரிந்த ஒருவர் தமிழில் தனது கடைமைகளைச் செய்ய உரிமை உள்ளது. ஆனால் அதற்கு பல தடைகள் உள்ளன. இப்படியான தடைகளால்தான் தமிழர்கள் சிங்களம், ஆங்கிலம் (ஆங்கிலத்தை வைத்து தனிச் சிங்களப் பகுதிகளில் சமாளிப்பது கடினம் என்பதை அனுபவம் கற்றுத் தந்தது) கற்கவேண்டிய நிலை உள்ளது.

ஆங்கிலம் சர்வதேச மொழியாக இருப்பதால் அதனைக் கற்பதில் தவறில்லை. உண்மையில் ஆங்கிலத்தை இளவயதில் இருந்து சரளமாக எழுதவும், பேசவும் தெரிந்து வைப்பது மிகவும் பிரயோசனமானது. 

ஆனால் சிங்களம் கற்கவேண்டிய தேவை விருப்பத்தின் அடிப்படையில் வருவதில்லை. தமிழில் அல்லது ஆங்கிலத்தில் கருமங்களை ஆற்றமுடியாத நிலையை உருவாக்கி சிங்களத்தை கற்குமாறு மொழி திணிக்கப்படுகின்றது. எனவே, இது ஒரு அரசியல்விடயம்.

தனி மனிதர்கள் தமது சுயவிருப்பில் மொழியைக் கற்பதற்கும், மொழியைத் திணிப்பதற்கும் இடையில்  உள்ள வித்தியாசம் புரியாமல் இங்கு கருத்துக்கள் வைக்கப்படவில்லை என்றே நினைக்கின்றேன்.

அந்த அர்த்தத்தில் எழுதப்பட வில்லை. இப்போது சிங்கள பாடசாலைகளில் தமிழும், தமிழ் பாடசாலைகளில் சிங்களமும் கட்பிக்கப்படுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, விளங்க நினைப்பவன் said:

சீமான் படத்தோடு கனிமொழி பேச்சை போட்டு உள்ளீர்கள். கனிமொழி கட்சியினர் தமிழ் துரோகிகள், தமிழர்கள் இல்லை என்றும் இங்கே யாழ்களத்தில் தான் படித்தேன் 😂   இந்தியா பல மொழிகள் கொண்ட நாடு.

கனிமொழியிடம் இந்தியாவில் சொன்னது போல இலங்கை சென்ற தமிழர்களிடம் விமானநிலையத்தில் சிங்களவர்களால் சொல்லபட்டதாக எவரும் சொல்லவில்லை .

இலங்கையில் இனப்பிரச்சனையே இல்லை என்று கூறுவீர்களோ 😂😂😂

8 minutes ago, Robinson cruso said:

அந்த அர்த்தத்தில் எழுதப்பட வில்லை. இப்போது சிங்கள பாடசாலைகளில் தமிழும், தமிழ் பாடசாலைகளில் சிங்களமும் கட்பிக்கப்படுகின்றது.

ஆரம்பம் சரியானதுதான். ஆனால் என்னை இலங்கைப்பிரசையாய் நடத்தாமல் இதெல்லாம் வெறும் கூத்து மட்டுமே ☹️

Just now, Kapithan said:

இலங்கையில் இனப்பிரச்சனையே இல்லை என்று கூறுவீர்களோ 😂😂😂

ஆரம்பம் சரியானதுதான். ஆனால் என்னை இலங்கைப்பிரசையாய் நடத்தாமல் இதெல்லாம் வெறும் கூத்து மட்டுமே ☹️

இது இப்போது ஆரம்பிக்கப்படவில்லை. ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் பாடசாலைகளில் ஆரம்பமாகியது என அறிகிறேன் . எல்லா பாடசாலைகளிலும் இல்லை, சில பாடசாலைகளில். இப்போதுதான் சிங்கள , தமிழ் பாடசாலைகளில் முழுமையாக ஆரம்பித்து இருக்கிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியை ஊரில உள்ளவர்கள் பார்த்தால் என்ன நினைப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, சுவைப்பிரியன் said:

இந்த திரியை ஊரில உள்ளவர்கள் பார்த்தால் என்ன நினைப்பார்கள்.

விழுந்து விழுந்து சிரிப்பார்கள் 😂

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விளங்க நினைப்பவன் said:

நாங்கள் யாழ்பாணத்து உறவினர்களுடன் தனி சிங்கள பகுதிகளுக்கு இடம் பார்க்க போனபோது சிங்களம் தெரியாமல் கஷ்டபட்ட போது சில சிங்களவர்கள் தமிழில் சொல்லி உதவி செய்தார்கள். இது எப்படி என்று வியந்த போது யாழ்பாண மருத்துவ மனையில் சிங்கள டொக்டர்கள் நேர்ஸ்கள் இருக்கிறார்கள் அவர்களும் தமிழ் கதைப்பார்கள் என்றார்கள். எங்களுக்கு தான் இலங்கையில் உள்ள இன்னொரு மொழியை படிப்பதற்கு மட்டும் அது நிர்ப்பந்தமா அல்லது எனது தெரிவா என்று எல்லாம் ஏராளம் சிந்திக்க வேண்டி இருக்கிறது.

உங்களின் அதிர்ஷ்டம் நீங்கள் சந்தித்த சில சிங்களவர்களுக்கு தமிழ் தெரிந்திருக்கிறது.. ஆனால் அவர்கள் நீங்கள் தமிழர் என தெரிந்தும் உங்களிடம் “ சிங்களம் தெரியாதா? “ என பெரும்பலான சிங்களவர்கள் கேட்பது போல கேட்காமல் உதவி செய்திருந்தால் வரவேற்கதக்கதே, ஆனால் உங்களிற்கு கிடைத்த அதிர்ஷ்டம் போல எல்லோருக்கும் கிடைத்தது இல்லை.. 

இதே சிங்களமக்கள்  யாழ்ப்பாணம் போனால்” உங்களுக்கு தமிழ் தெரியாதா” எனகேட்காமலே பல தமிழர் சிங்களமொழியில் கதைத்து உதவி செய்வார்கள்.. இதுதான் வித்தியாசம்.

தமிழ் அரசகரும மொழியாக இருந்தும் சிங்கள மொழியை கற்கவேண்டிய நிர்பந்தத்தை உருவாக்கி  சிங்களமொழியை கற்றுகொள்ள வற்புறுத்தப்பட்டோம், ஆனால் தமிழ் மொழியை கற்கவேண்டிய கட்டாயத்தை பெரும்பலான சிங்களவர்கள் உணர்ந்திருக்கமாட்டார்கள். 

இங்கே மொழியை விரும்பிபடிப்பதற்கும், கட்டயாப்படுத்தி நிர்பந்தபடுத்தி படிப்பதற்குமான வித்தியாசத்தை உதாரணங்களுடன் எழுதியுள்ளார்கள்.. உங்களுக்கு விளங்கி இருக்குமென நினைக்கிறேன்..

  • கருத்துக்கள உறவுகள்
On 16/8/2020 at 17:12, தமிழ் சிறி said:

புனர்வாழ்வளிக்கப்பட்ட இளைஞர், யுவதிகளைப் பயன்படுத்தி மீண்டும் பயங்கரவாதத்தை தலைதூக்கச் செய்வதற்கு புலம்பெயர் தரப்பினரால் முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த கமல் குணரட்ன கொஞ்சம் மேல்மாடியில் சரக்கு இருக்கும் ஆள் என்று இந்த அறிக்கை வருமட்டும் நினைத்து இருந்தன் நந்திக்கடலை நோக்கி இவரின் புத்தகம் யாரிடமும் pdf ஆக இருக்குதா? ஆங்கிலத்திலும் சிங்களத்தில் தான் வெளிவந்துள்ளது அமேஷனில்  50 பவுண்ட் என்கிறார்கள் அதுவும் ஒழுங்கா வந்து சேருமா தெரியாது கிண்டில் எடிசன் இல்லை என்கிறார்கள்.

40 minutes ago, பெருமாள் said:

கிண்ட்லில் இனப்படுகொலைகாரனின் புத்தகம் எல்லாம் விற்க மாட்டார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, பெருமாள் said:

இந்த கமல் குணரட்ன கொஞ்சம் மேல்மாடியில் சரக்கு இருக்கும் ஆள் என்று இந்த அறிக்கை வருமட்டும் நினைத்து இருந்தன் நந்திக்கடலை நோக்கி இவரின் புத்தகம் யாரிடமும் pdf ஆக இருக்குதா? ஆங்கிலத்திலும் சிங்களத்தில் தான் வெளிவந்துள்ளது அமேஷனில்  50 பவுண்ட் என்கிறார்கள் அதுவும் ஒழுங்கா வந்து சேருமா தெரியாது கிண்டில் எடிசன் இல்லை என்கிறார்கள்.

கிருபன்... நிச்சயம் தேடிப் பிடித்து, எடுத்துத் தருவார் என நினைக்கின்றேன் பெருமாள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

இங்கே மொழியை விரும்பிபடிப்பதற்கும், கட்டயாப்படுத்தி நிர்பந்தபடுத்தி படிப்பதற்குமான வித்தியாசத்தை உதாரணங்களுடன் எழுதியுள்ளார்கள்.. உங்களுக்கு விளங்கி இருக்குமென நினைக்கிறேன்..

 அதுதான் பெயரிலேயே இருக்கே. விளங்க நினைப்பார் ஆனால் விளங்காது!! ஐயோ!!ஐயோ!!🤣

  • கருத்துக்கள உறவுகள்
On 17/8/2020 at 17:12, tulpen said:

புலிகள் வீழ்ந்ததில்  பெரும் பங்கு வகித்தது பேச்சுவார்ததை காலத்தில் புலிகளின் அரசியல்துறை எடுத்த பல தவறான முடிவுகள் தான். பேச்சுவார்ததை காலத்தில் பல உலக ராஜதந்திரிகளுடன் நெருங்கி பழக சிறந்த வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம்  உலக நாடுகளின் தமிழீழம் தொடர்பான எண்ணக்கருவை நாடி பிடித்து அறியவும் அதன் மூலம் சில நெகிழ்வுத்தன்மையையும் செய்திருக்கலாம். அதன் மூலம் தமிழீழம் என்ற இலக்கு உடனடியாக அடையமுடியமல் பின் தள்ளப்பட்டிருக்கலாம். ஆனால் இலக்கு நோக்கி மெதுவாக முன்னே நகரக் கூடிய சாத்தியக் கூறு இருந்தது.  

தமிழீழ விடுதலைப்புலிகளின் ஈகத்திலும் வீரம் மிகு போராட்டத்திலும் எனக்கு மிகுந்த மரியாதை  உண்டு. ஆனால் அவர்களின் தவறுகளை மறைப்பதன் மூலம் அந்த மரியாதையை காட்ட முனைவது வெறும் ஈகோவாக தான் இருக்கும். அந்த ஈகோ மனப்பான்மை புலிகளின் கொள்கைகளை எடுத்து செல்ல உதவாது. மாறாக எதிர்மறையான விளைவுகளையே தரும்.  

துல்பென் 
இப்போதெல்லாம் ஒரே வரிகளை பல திரிகளில் அப்படியே மீள் பதிவு செய்கிறீர்கள் போல் இருக்கிறது.

2 hours ago, Sasi_varnam said:

துல்பென் 
இப்போதெல்லாம் ஒரே வரிகளை பல திரிகளில் அப்படியே மீள் பதிவு செய்கிறீர்கள் போல் இருக்கிறது.

சசிவர்ணம், அரசியல் கருத்துக்கள் ஒரே விதமாக இருக்கும் போது இவ்வாறு அரசியல் திரிகளில் கருத்துக்கள் ஒரே விதமாக அமைவது இயற்கை. 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Robinson cruso said:

அவர்கள் அப்படி எடுக்க மாடடார்கள் என்று இலங்கை நிச்சயமாக நம்புகிறது.

இல்லை. பதிலை எதிர்பார்த்தேன் ஏதோதெல்லாம் எழுதுகிறீர்கள். சரி உங்கள் சந்தோஷத்துக்கு , மாட்றவர்கள் சந்தோசத்திட்கு எழுதுங்கள். எனக்கு ஒன்றும் குறையப்போவதில்லை.

அப்படியல்ல வங்காலையான்,

உங்கள் கருத்துக்கள் தேசியத்திற்காக மரணித்த ஆயிரமாயிரம் போராளிகள், மக்களை நையாண்டி செய்வதுபோல் உள்ளது.

அதுதான்..... ஒரு விளம்பரம்ம்ம்ம்ம்..😀

Edited by Kapithan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.