Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாயை அடக்காவிடில் ஓட ஓட விரட்டுவோம் – விமலின் கொழுப்பு பேச்சு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Eppothum Thamizhan said:

அவர்களே தங்களை தமிழ் பேசும் தெலுங்கர்கள் என்று சொல்லி மார்தட்டிக்கொண்டிருக்க நீங்கள் என் தேவையில்லாமல் ஒரே கருத்தை எல்லா திரியிலும்  cut & paste பண்ணிக்கொண்டு திரிகிறீர்கள். தமிழகத்தில் தமிழ் தேசியத்தை வளர்க்க சீமான் என்ன கதைத்தால் உங்களுக்கென்ன? அதை விமர்சிக்க உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது என்று நாமும் கேட்கலாமல்லவா??

  • Replies 231
  • Views 18.5k
  • Created
  • Last Reply
10 minutes ago, Eppothum Thamizhan said:

அவர்களே தங்களை தமிழ் பேசும் தெலுங்கர்கள் என்று சொல்லி மார்தட்டிக்கொண்டிருக்க நீங்கள் ஏன் தேவையில்லாமல் ஒரே கருத்தை எல்லா திரியிலும்  cut & paste பண்ணிக்கொண்டு திரிகிறீர்கள். தமிழகத்தில் தமிழ் தேசியத்தை வளர்க்க சீமான் என்ன கதைத்தால் உங்களுக்கென்ன? அதை விமர்சிக்க உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது என்று நாமும் கேட்கலாமல்லவா??

தமிழ் தேசியத்தை பற்றி இங்கு பேசப்படவில்லை. அதை விடுங்கள்.  அடுத்த நாட்டில் பல தலைமுறையாக வாழ்ந்து வரும் ஒரு மக்கள் மீது அத்துமீறி  இனவெறியை பேசி அவர்கள் ஒதுக்கும்  உரிமை உங்களுக்கு இருக்கிறதென்றால் எமது நாட்டில் எம் மீது இனவெறியை பேசும் உரிமை சிங்களவருக்கு இருக்கிறது என்று ஆகிவிடுமல்லவா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, tulpen said:

ரஞ்சித், தமிழக பிரஜை அல்லாத வேறு நாட்டு பிரஜையான நீங்கள், தமிழகத்தில் பல தலைமுறையாக வாழ்ந்து தமிழ் மொழியை பேசி வாழும் தமிழக பிரஜைகள் மீது இவ்வளவு இனதுவேஷம் காட்டுகின்றீர்கள். இது கோட்டபாயவை விட  பல மடங்கு  இனவாதம், இனவெறுப்பு என்று உங்களுக்கு தெரியவில்லையா? பல தலைமுறையாக அவ்கு வாழும் மக்கள் மீது இனவெறி எழுத்தை எழுதும் உரிமையை அந்த மண்ணுடன் தொடர் பற்ற உங்களுக்கு ஊட்டியது யார்? 

உங்களை யாரவது என்னிடம் இவர்  இலங்கை தமிழனா என்று கேட்டால் இல்லையென்றே சொல்வேன்.

இவ்வளவு இனக்கலவரங்களையும் உரிமை மறுப்புகளையும் அடாத்து குடியேற்றங்களையும் இன அழிப்புகளையும் கண்ட மனிதன் இப்படி ஒரு காலமும் எழுத மாட்டான்.

இத்தால் நான் சொல்ல விளைவது என்னவெனில்........

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, tulpen said:

தமிழ் தேசியத்தை பற்றி இங்கு பேசப்படவில்லை. அதை விடுங்கள்.  அடுத்த நாட்டில் பல தலைமுறையாக வாழ்ந்து வரும் ஒரு மக்கள் மீது அத்துமீறி  இனவெறியை பேசி அவர்கள் ஒதுக்கும்  உரிமை உங்களுக்கு இருக்கிறதென்றால் எமது நாட்டில் எம் மீது இனவெறியை பேசும் உரிமை சிங்களவருக்கு இருக்கிறது என்று ஆகிவிடுமல்லவா?

உங்கள் லாஜிக் புரியவில்லையே....

நாமே சிங்களவனால் பாதிக்கப்பட்டுளோம்.... அதுக்கு தீர்வுக்கு வழி இல்லை.

நம்ம வீட்டில, சமையல் இல்லை, வீட்டுக்காரி நொறுக்கு தீனி செய்து திண்டு கொண்டே சீரியல் பார்த்து அழுது கொண்டிருக்கிறா. சாப்பாடு கேட்டால், ரிமோட் வந்து விழுது மண்டையில. 

பக்கத்து வீட்டுக்காரி, புருசனை போட்டு, இந்த அடி, அடிக்கிறாளே... நியாயமா எண்ட கதையாயல்லோ இருக்குது....

4 minutes ago, குமாரசாமி said:

இத்தால் நான் சொல்ல விளைவது என்னவெனில்........

புரிகிறது.... வேண்டாம்...சொல்லவேண்டாம் 😩

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 minutes ago, tulpen said:

தமிழ் தேசியத்தை பற்றி இங்கு பேசப்படவில்லை. அதை விடுங்கள்.  அடுத்த நாட்டில் பல தலைமுறையாக வாழ்ந்து வரும் ஒரு மக்கள் மீது அத்துமீறி  இனவெறியை பேசி அவர்கள் ஒதுக்கும்  உரிமை உங்களுக்கு இருக்கிறதென்றால் எமது நாட்டில் எம் மீது இனவெறியை பேசும் உரிமை சிங்களவருக்கு இருக்கிறது என்று ஆகிவிடுமல்லவா?

நிச்சயமாக......
அவர்கள் இனத்துவேசம் பேசும் போது நாங்கள் கருமம் ஆக மட்டும் என பேசிக்கொண்டு திரிய வேண்டுமா?

  • கருத்துக்கள உறவுகள்

எனது பார்வை

1. இலங்கை இந்தியாவை முற்றாக பகைத்து சீனாவிடம் போனாலும் உடனடியாக இந்தியா படைகளை அனுப்பி வடக்கு-கிழக்கில் ஒரு தமிழர் நாட்டை நிறுவுமா என்பது சந்தேகத்துக்கு இடமானது. ஏன்? மாலைதீவு கிட்டதட்ட இந்தியாவின் கையை நழுவி போயும், இந்தியாவுக்கும் மாலைதீவுக்கும் ஒரு பாதுகாப்பு ஒப்பந்தம் இருந்தும் இந்தியா களத்தில் நேரடியாக இறங்கவில்லை. மாறாக முயன்று ஆட்சி மாற்றத்தையே ஏற்படுத்தியது. ஆகவே இப்படி ஒரு வழியை முயற்சித்து அதுவும் முடியாமல் போனால் பின்னர் இறங்கலாம். ஆனால் அப்படி இறங்குவதும் சுலபமல்ல. 1987 உடன்படிக்கை இந்தியாவை உள்ளே வர வழி செய்தாலும் -நாட்டை பிரிப்போம் என்பது இந்தியா இலங்கை மீது வைத்துள்ள பிரம்மாஸ்திரம். இதை ஒரு தடவைதான் பாவிக்க முடியும். அதன் பின் இலங்கை நுரைச்சோலையில் ஒரு சீன முகாம் அமைய, ரேடார் பூட்ட இடம் கொடுத்தாலும் - படை எடுப்பை தவிர வேறு வழியில் இலங்கையை கட்டுப்படுத்த முடியாது. படை எடுத்தால் - சீன உதவியுடன் நிச்சயம் சிங்கள கெரில்லா படைகள் இந்தியாவுக்கு இன்னொரு வியட்நாமை கொடுக்கும். வெளி உதவி இல்லாதபோதே புலிகளை இந்தியாவால் வெல்ல முடியவில்லை. சீன உதவியுடன் சிறிலங்கா படைகளின் ஆழ் ஊடுருவும் படைகளால் வழி நடத்தபடும் கெரில்லா தாக்குதல்கள் இந்திய ராணுவ பலத்தின் 4/10 பங்கை இலங்கையில் கட்டிப்போடும். அப்புறம் எல்லையில் பாகிஸ்தான், சீனா, மட்டும் அல்ல நேபாளமும், பங்களதேசும், பூட்டானும் கூட வாலாட்டப்பாக்கும்.

2. தமிழர்கள் சீனாவுடன் சேர்வோம் என இந்தியாவை மிரட்டலாமா? தமிழர்களை சீனா ஒரு தனி தரப்பாகவே கருதுவதில்லை. இலங்கைக்கும், சீனாவுக்கும் இடையானது ஒரு தனி உறவு. அடிகடி யூஎஸ்-யூகே சொல்வார்களே special relationship -அப்படி. இந்தியாவின் அழுத்தம் இலங்கைக்கு இருந்தாலும், அதை இலங்கையுடன் சேர்ந்து வெட்டி ஆடி இலங்கையை தம்முடன் வைத்திருப்பதே சீனாவின் கொள்கை. எனவே சீனாவுடன் நாம் சேர்ந்து இலங்கையை வெட்டி ஆட, சீனாவும் தயாரில்லை. இலங்கையும் விடாது, இந்தியாவும் விடாது. சீனாவுக்கு இலங்கையை பகைத்து எம்மை தக்க வைக்க ஒரு நிர்பந்தமும் இல்லை.

3. நாதம்ஸ் சொன்ன மாதிரி - இந்தியாவை புறம்தள்ளி - இலங்கையுடன் சேர்ந்து நாம் சீனாவிடம் போகலாமா? போகலாம் ஆனா இது குடத்தோடு கோவித்து கொண்டு எதையோ கழுவாமல் போவதை போன்ற செயல். நாம் சகல உரிமை, சலுகை, இன அடையாளங்களையும் இழந்து, மாகாண சபையையும் இழந்து, மொழி உரிமையை இழந்து, பேரினவாததின் கீழ் சதா-அடிமைகளா (eternal slaves) வாழ சம்மதம் என்றால் - இதை செய்யலாம்.

4. தனிநாடு இந்தியா பெற்றே தராது, சீனா எம்மை தனிதரப்பாக ஏற்கவே மாட்டாது, இலங்கையுடன் நிபந்தனையின்றி இன்றி வாழ்வது தற்கொலைக்கு ஒப்பானது அப்போ எதுதான் வழி?

5. 13. இதைதான் முன்பு பலர் சொன்னார்கள். அர்ஜூன் போன்றவர்கள் இதே யாழில் எழுதினார்கள். இலங்கையில், ஆயுத பலத்தால் நம்மால் ஒரு நாட்டை நிறுவ முடியாவிடின் ( முடியாது என்பது இப்போ நிறுவப்பட்டு விட்டது) நாம் பெறகூடிய ஆகக் கூடிய தீர்வு 13. அதை பெற்று, பின் இலங்கை ஒரு மனித விழுமியம் மிக்க நாடாக முன்னேறும் போது நாம் சமஸ்டி நோக்கி நகர முடியும்.

ஆனால் இந்த 13 ஐ தக்கவைக்கவே, இப்போ சிங்கி அடிக்க வேண்டி இருக்கிறது. காணி, பொலீஸ் அதிகாரம் இல்லாமலே.

6. இப்போ செய்ய வேண்டியது என்ன? புலம்பெயர், தமிழக (திராவிட கட்சி+சீமான்), இலங்கை கட்சிகள் (3 தமிழ் தேசிய கட்சிகள்) - ஒரே குரலில் 13ஐ முழுமையாக அமல் படுத்த கோரி இந்தியாவை சகல முறைகளிலும் அழுத்த வேண்டும். இது மட்டுமே தமிழர் இப்போதைக்கு செய்ய கூடியது - தொடர்ந்து இலங்கையின் நகர்வுகளை வைத்து காய் நகர்தவேண்டும்.

இவ்வளவுதான் மேட்டர்.

  • கருத்துக்கள உறவுகள்
On 31/8/2020 at 17:22, ஈழப்பிரியன் said:

சிங்கள மொழிபெயர்ப்பாளர்கள் அழைக்கப்படுகிறார்கள்.

அரைகுறை சிங்களமும் ஓகே.

கேள்வி: விடுதலைப் புலிகள் அமைப்பை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
விக்னேஸ்வரன்: நீங்கள் பார்ப்பதை போன்று பயங்கரவாதிகள் என்று யாரையும் கூறுவதில்லை. தமது மக்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளால் அவர்கள் யுத்தத்தில் இறங்கினார்கள். அவர்கள் யுத்தத்தில் இறங்கியதற்கு காரணம் அரசாங்கமே.
கேள்வி: உலகநாடுகள் புலிகளை பயங்கரவாத அமைப்பாக பார்க்கையில், நீங்கள் அவர்களை பயங்கரவாத அமைப்பாக ஏற்கவில்லையா?
விக்னேஸ்வரன்:அரசாங்கம் செய்யும் தவறுகளை மூடி மறைத்து அதனை கேட்பவரை பயங்கரவாதி என்று கூறுகின்றனர். அது எப்படி சரியாகும்?
கேள்வி: ஆனால் அவர்கள் மனிதக்கொலையை செய்தமை, அப்பாவிகளை கொன்றமையை ஏற்க முடியுமா?
விக்னேஸ்வரன்:இவர்கள் (அரசு) வடக்கில் அப்பாவிகளை கொன்றதை சரியென கூற முடியுமா?
கேள்வி: இராணுவத்தினர் புலிகளை தவிர, அப்பாவி மக்களை கொலை செய்தார்களா?
விக்னேஸ்வரன்: 2009 மே 18ஆம் திகதி வரை ஒரு இலட்சத்திற்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அனைவரும் அப்பாவி மக்கள். அவர்கள் முள்ளிவாய்க்காலிற்கு அழைத்து வரப்பட்டு கொல்லப்பட்டனர்.
கேள்வி: அவர்களை அவ்வாறு அழைத்து வந்தது பிரபாகரனா? இராணுவமா? பிரபாகரனே அவர்களை பலிக்கடாவாக பயன்படுத்தியிருக்கலாம்
விக்னேஸ்வரன்:அவருக்கு அப்படி செய்ய வேண்டிய அவசியமில்லையே
கேள்வி: நீங்கள் கூறுவதை பார்த்தால் பிரபாகரன் ஒரு குழந்தை. அவருக்கு ஒன்றும் தெரியாது. மக்களை பாதுகாக்க அங்கு சென்றார் என்றுதான் எங்களிற்கு தோன்றுகிறது.
விக்னேஸ்வரன்:30 வருடமாக அரசுக்கு எதிராக போராடியவரை குழந்தையாக நான் கூறுவதில்லை.
கேள்வி: நீங்கள் முள்ளிவாய்க்காலில் பயங்கரவாதிகளின் மயானத்தில் சத்தியப்பிரமாணம் செய்தீர்கள்
விக்னேஸ்வரன்: அந்த இடத்திற்கு சென்று, அந்த மக்களிற்கு நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டுமென்ற கடமை எமக்குள்ளது.
கேள்வி: நாட்டின் சட்டத்திற்கமைய பயஙகரவாத செயற்பாடுகளிற்கு ஏதேனும் வகையில் ஒத்துழைப்பு வழங்கும் எதனையும் செய்ய முடியாது.
விக்னேஸ்வரன்: எப்படியென்று சொல்லுங்கள் பார்ப்போம். இறந்தவர்கள் பயங்கரவாதிகள் என யார் சொன்னது? இறந்தவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் என சிங்களத்தில் எழுதப்பட்டுள்ளதா?
கேள்வி:நீங்கள் வடக்கில் புத்தர் சிலை வைக்கக்கூடாது என சொல்லியுள்ளீர்களே?
விக்னேஸ்வரன்: பௌத்தர்கள் இல்லாத இடத்தில் அவற்றை வைக்க என்ன காரணம் என்றே கேட்டுள்ளேன்.
கேள்வி: அதனால் உங்களிற்கு எதாவது பிரச்சனைகள் ஏற்படுகிறதா?
விக்னேஸ்வரன்: ஆம். சிங்கள மக்களை அங்கு கொண்டு வர முயற்சிகள் நடக்கின்றன.
கேள்வி :- தமிழ் மொழியை இலங்கையின் முதன் மொழியாக கூறியமைக்கு ஆதாரம் உள்ளதா?
விக்னேஸ்வரன் :- இலங்கை பண்டையகாலம் முதல் தமிழ் மக்களின் தாயகம் என்பதை உறுதிப்படுத்துவதற்கு என்னிடம் சாட்சியங்கள் இருக்கின்றன.
என்றும் சி.வி.விக்னேஸ்வரன் இந்த நேர்காணலில் மேலும் தெரிவித்துள்ளார்.
  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, nunavilan said:

இலங்கை பண்டையகாலம் முதல் தமிழ் மக்களின் தாயகம் என்பதை உறுதிப்படுத்துவதற்கு என்னிடம் சாட்சியங்கள் இருக்கின்றன.

 யாழ் நூலகத்தின் பரிதாப நிலை மனக்கண் முன் வந்து என்னை பயமுறுத்துகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, tulpen said:

ரஞ்சித், தமிழக பிரஜை அல்லாத வேறு நாட்டு பிரஜையான நீங்கள், தமிழகத்தில் பல தலைமுறையாக வாழ்ந்து தமிழ் மொழியை பேசி வாழும் தமிழக பிரஜைகள் மீது இவ்வளவு இனதுவேஷம் காட்டுகின்றீர்கள். இது கோட்டபாயவை விட  பல மடங்கு  இனவாதம், இனவெறுப்பு என்று உங்களுக்கு தெரியவில்லையா? பல தலைமுறையாக அவ்கு வாழும் மக்கள் மீது இனவெறி எழுத்தை எழுதும் உரிமையை அந்த மண்ணுடன் தொடர் பற்ற உங்களுக்கு ஊட்டியது யார்? 

இதுவரை காலமும் நீங்கள் ஓரளவிற்கு விஷயம் தெரிந்தவர் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் தமிழ்த்தேசியத்தின்மீதான உங்களின் காழ்ப்புணர்வு அந்த அறிவை மழுங்கடித்துவிட்டதோவென்று எண்ணத் தோன்றுகிறது.

சரி, எங்கிருந்து ஆரம்பிப்பது? தமிழகத்தில் பல தலைமுறைகளாக வாழ்ந்துவரும் தெலுங்கர்கள், ஆக, நீங்களே அவர்கள் தமிழகத்தின் பூர்வீக மக்கள் இல்லையென்பதை ஒத்துக்கொள்கிறீர்கள்.  சீமான் அவர்களை வெளியேறுங்கள் என்று கேட்கவில்லை. மாறாக அவர்களின் ஆதரவில், தெலுங்கர்களின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் தமிழக அரசியல்ப் பலம் தமிழர்களின் கைக்கு வரவேண்டும் என்று கேட்கிறார், அவ்வளவுதான். ஆனால், அங்கிருக்கும் நிலமையினை, ஈழத்தில் உள்ள நிலைமையுடன் ஒப்பிட்டீர்கள் பாருங்கள், அங்கேதான் நிற்கிறது உங்களின் காழ்ப்புணர்வினால் மழுங்கடிக்கப்பட்ட அறிவு. தமிழகத்தில், தமிழர்களிடம் ஆட்சி வரவேண்டும் என்று கேட்கிறார்கள்.  ஈழத்தில் சிங்களவர்கள் எமது நிலத்தை ஆக்கிரமித்துக்கொண்டு எம்மை அடிமைப்படுத்தியிருக்கிறார்கள். ஆக, இரு இடங்களிலும் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் தமிழர்கள் தான். ஏதோ சீமான் தெலுங்கர்களை ஆந்திராவிலிருந்தே துரத்திவிடப் போராடுவதுபோல பில்டப் கொடுத்துக்கொண்டு, நான் அவரை ஆதரிப்பது சிங்களவர் செய்யும் ஆக்கிரமிப்பிற்கு ஒத்தது என்று நிறுவ முயல்கிறீர்கள். ஒன்றைத் தெரிந்துகொள்ளுங்க்கள், தமிழகத்திலும், ஈழத்திலும் இன்று தெலுங்கர்களாலும், சிங்களவர்களாலும் பாதிக்கப்படுவது தமிழர்களே. இந்தச் சின்ன விஷயமே உங்களின் அறிவார்ந்த சிந்தனையில் பிடிபடாது போனதேன்?

கோத்தா செய்வது எனது தாயகத்தில் சிங்கள பெளத்த ஆக்கிரமிப்பு, அவனுக்கும் எனது தாயகத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இதற்கு ஒத்தது தெலுங்கர்கள் அரசியலிலும் வியாபாரத்திலும் வேலைவாய்ப்பிலும் தமிழகத்தில் செய்துவரும் ஆக்கிரமிப்பு, தெலுங்கர்கள் தமிழகத்தை தமது பூர்வீகமாகக் கோர முடியாது.. நீங்கள் கோத்தாவை ஒப்பிடவேண்டியது என்னுடன் அல்ல, மாறாக வந்தேறிகளாக தமிழகத்தை தம் கைக்குள் வைத்திருக்கும் தெலுங்கர்களோடு.

அடுத்தது, தெலுங்கர்களை எதிர்த்து, சீமானை ஆதரிக்க எனக்கிருக்கும் உரிமை. அதை யாரும் தரவும் தேவையில்லை, நான் எவரிடமிருந்தும் எதிர்பார்க்கவுமில்லை, அதை நீங்களும் கேட்கத் தேவையில்லை. தமிழகத்தில், ஈழத்திலும் வாழ்வது ஒரு இனம்தான், தமிழ்த்தேசியத் தாயின் பிள்ளைகள் நாங்கள். எனக்காக அவன் அழும்போது, நான் அவனுக்காக அழவேண்டும். அவன் எனது இரத்தம். தமிழகத்தில் தமிழன் பாதிக்கப்படும்போது, அது என்னையும் பாதிக்கிறது, ஆகவே நான் அவனுக்காகக் குரல் கொடுப்பேன். அவனும் இதையே எனக்குச் செய்கிறான். நான் இதில் தமிழகம், ஈழம் என்று பிரித்துப் பார்ப்பதில்லை.  தமிழ்த்தேசியத்தை எதிர்க்கும் தமிழ்பேசும் மனிதர்களுக்கு இதுபுரியாது. தமிழ்த்தேசியத்தை எதிர்ப்பதென்று முடிவாகிவிட்டபின் எதைவேண்டுமானாலும், எப்படிவேண்டுமானாலும் தமது வாதத்திற்குப் பலம்சேர்க்க அவர்கள் இழுத்துவருவார்கள். ஆனால், அப்படி இழுத்துவரும்போது அந்த வாதங்கள் அவப்போது பிய்த்து எறியப்படும் என்பதையும் அவர்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும்.

தமிழ்த்தேசியத்தை எதிர்த்து, அதனைப் பலவீனமாக்கி, அவற்றில் தவறுகளைக் கண்டுபிடித்து இன்புருவதில் உங்களின் பொன்னான நேரத்தைச் செலவழிக்கும் நீங்க்கள், ஒருமுறையாவது தேசியத்தை ஆதரித்து, பலப்படுத்த முயற்சித்துப் பாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, ரஞ்சித் said:

தமிழ்த்தேசியத்தை எதிர்த்து, அதனைப் பலவீனமாக்கி, அவற்றில் தவறுகளைக் கண்டுபிடித்து இன்புருவதில் உங்களின் பொன்னான நேரத்தைச் செலவழிக்கும் நீங்க்கள், ஒருமுறையாவது தேசியத்தை ஆதரித்து, பலப்படுத்த முயற்சித்துப் பாருங்கள்.

மிகவும் அருமையான விளக்கம்.
நன்றி ரஞ்சித்.
இது துல்பனுக்கு மட்டுமல்ல தமிழ்தேசியத்தை குழி தோண்டி புதைக்க முற்படும் எல்லோருக்குமான பதிலாகவே பார்க்கிறேன்.

கண் முன்னே தமிழர்களை போட்டு நசுக்குகிறார்கள்.அதைப்பற்றி கதைக்க மாட்டார்கள்.எங்கோ உள்ள தெலுங்கனுக்கு வக்காளத்து வாங்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

எங்கோ உள்ள தெலுங்கனுக்கு வக்காளத்து வாங்கிறார்கள்.

ஏதாவது உறவு இருக்காமலா தன் நிலை மறந்து பேசுகிறார்கள்? கொடி உறவேதும் இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

இதே நிலைபாட்டை தமிழ் தவிர வேறு எந்த மொழியும் தெரியாத 2/5 பங்கு சகதமிழனிடமும் எடுப்பீர்களா சகோ?

யாரை மனதில் வைத்து இக்கேள்வியைக் கேட்டீர்கள் , தமிழகத்தில் வாழும் தெலுங்கு வம்சாவளியினரையா? 

முதலில் ஜூட் அண்ணா என்னிடம் கேட்டது விஷமத்திற்கென்று எனக்குத் தெரியும். நான் மலபார் இல்லை. அதானேலேயே அதுபற்றி எனக்குக் கவலையில்லை என்று எழுதினேன். 

தெலுங்கு வம்சாவளியினர் தம்மை தமிழர்களாக அடையாளப்படுத்துகின்றனரா? தாம் தெலுங்கர்கள் இல்லை, தமிழ்த் தேசியத்தைக் கடைப்பிடிக்கும் தமிழர்கள்தான் என்று முதலில் ஏற்றுக்கொள்ளட்டும். பிறகு தமிழ்த் தேசியத்தினைத் தமிழகத்தில் காக்கப் போராடட்டும், ஏற்றுக்கொள்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Kapithan said:

வேலுப்""பிள்ளை"" என்பதுதான் கேரளாவின் தொடர்பிற்குக் காரணம் என்றால் நானும் கேரள வம்சாவளிதானோ ? . ஏனென்றால் எனது தகப்பனாரின் பெயரும் ....பிள்ளை என்றே வருகிறது. 

யான் பறைஞ்சது சரிஞ்சல்லோ ?

😂😂

தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியை கட்டியது துரையப்பாபிள்ளை. அப்போ அவரும் மலையாளியோ...?

சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம்

அப்ப இவர்??? 😂😂😂😂

Edited by MEERA

  • கருத்துக்கள உறவுகள்
Just now, MEERA said:

தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியை கட்டியது துரையப்பாபிள்ளை. அப்போ அவரும் மலையாளியோ...?

பிள்ளை என்று வருவதால் எனக்கு தூரத்து உறவாயிருப்பார் என நினைக்கிறேன். ஞாணும் என் அம்மை அப்பனைக் கேட்டால் தெரிஞ்சுடும் 😂😂

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, MEERA said:

அந்த கட்டுரையை  வாசித்தீர்களா...😆😆😆சுத்தப் பொய் என்பது  எல்லோருக்கும் தெரியும்.

அந்த கட்டுரை பொய்தான் -ஆனால் யாழ் தமிழரின் தேசவழமையை “மலபாரி வழித்தோன்றல்களின்” சட்டம் என்றும், மட்டகளப்பு தமிழர்களின் உள்ளூர் சட்டத்தை “முக்குவிய சாதி வழக்கம்” என்றும் டச்சுகாரர் எழுதியது வரலாற்று உண்மை. 

இலங்கையில் - வேறு மாவட்ட தமிழரை விட, சிங்களவரை விட, அதிகம் மலையாள, தெலுங்கு கலப்பு கூடிய கூட்டம் யாழ்பாண தமிழர்தான்.

இலங்கை தமிழர் பலருக்கு 2010 வரைக்கு நாயக்க சாதி என்றால் என்ன என்பதே தெரியாது. கலியாண வீட்டுக்கு சீலை, சினிமா, சீரியல், கொலிடே இதுதான் பலருக்கு தெரிந்த தமிழ்நாடு. இந்த பின்புலத்தில், யாரோ ஒரு தனிநபர், அவரின் கட்சி சொல்கிறது என்பதற்காக, சக தமிழனை, தமிழனே இல்லை என்று இவர்கள் கூறினால்- அதே அளவிடையில்  - இவர்களையும் தமிழர் இல்லை என்று கூறலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

அந்த கட்டுரை பொய்தான் -ஆனால் யாழ் தமிழரின் தேசவழமையை “மலபாரி வழித்தோன்றல்களின்” சட்டம் என்றும், மட்டகளப்பு தமிழர்களின் உள்ளூர் சட்டத்தை “முக்குவிய சாதி வழக்கம்” என்றும் டச்சுகாரர் எழுதியது வரலாற்று உண்மை. 

அதான் அந்த டச்சு காரர் எந்த புத்தகத்தில் எழுதியுள்ளார்கள்? அதை நீங்கள்  எங்கு படித்தீர்கள்? பலமுறை கேட்டும் பதில்வருதில்லை கேட்டால் பழைய குழுவாதம் கறல் என்று சொல்லி ஒப்பாரி வைக்கக்கப்படாது   உங்களுக்கு யாழ்ப்பாணத்தவர்கள் மேல் கோபம் என்றால் வேறு வழியில் காட்டுங்கள் அதை விட்டு ............

அந்தமான் தீவில் இருந்து வந்தவர்கள் என்று இன்னுமொன்று வந்து எழுதுவார் ஆங்கிலேயரின் புத்தகத்தில் படித்தன் என்றும் ரீல் விடுவார் நாங்க கேட்கணுமாக்கும் .

  • கருத்துக்கள உறவுகள்

மலையாளிகளே இன்றிருக்கும் யாழ்ப்பாணத் தமிழர் என்றும், அவர்கள் உண்மையான தமிழர்களைக் கிழக்கு மாகாணத்திற்குள்ளும், காடுகளுக்குள்ளும் விரட்டிவிட்டார்கள் என்றும் நீங்கள் எழுதுவது இன்னொரு பிரதேசவாத நடவடிக்கையின் அம்சமாக நான் கொள்ளலாமா?  நீங்கள் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர் என்பதால், இயல்பாகவே யாழ்ப்பாணத்துத் தமிழர்மீதிருக்கும் உங்களின் வெறுப்பு அடிக்கடி உங்களின் எழுத்தில் தெரிவதை அவதானித்ததால் இதைக் கேட்கிறேன். 

ஆனால், இதில் வேதனையென்னவென்றால், நீங்கள் கூறும் அதே மலபார் தமிழர்கள்தான் இன்று தேசியத்தைக் காக்கவேண்டும் என்று கோரிக்கொண்டிருக்கிறார்கள் என்பது. உடனேயே அங்கஜனையும், டக்கிளஸையும், திலீபனையும் உதவிக்கு அழைத்துக்கொண்டு வரவேண்டாம். அவர்கள் வென்றது எப்படியென்று எல்லோருக்கும் தெரியும். 

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, பெருமாள் said:

தேச வழமையில் “மலபாரி வழித்தோன்றல்களின்” சட்டம் என சொல்லப்படுவதற்க்கான ஆதாரங்கள்.

1. ஹேகில் உள்ள ஆவண காப்பகத்தில் ஒரிஜினல் உள்ளது. இது சம்பந்தமான மேலதிக ஆவணங்கள், கொழும்பு மற்றும் பட்டாவியா (ஜகார்த்தா ஆவண காப்பகங்களில் உள்ளது). Primary source

2. 1706 இல் டச்சு காரார் ஒருங்கிணைத்த (codified) தேசவழமையை Thesawalami Regulation No. 18 of 1806.  மூலம் ஆங்கிலேயர்கள் தமது சட்டகோவையில் இட்டார்கள். இதன் பிரதி லண்டன், கொழும்பு காப்பங்களில் உண்டு (படம் பார்க்கவும்) - primary source

3. கடந்த 300 வருடங்களாக இலங்கையில் நடந்த தேடவழமை வழக்குகள், மற்றும் தம்பையா மேலும் பலர் எழுதிய புத்தகம்கள், ஆய்வு கட்டுரைகள் - secondary sources.

4. இதை எல்லாம் தேடி பிடிக்க, படிக்க அலுப்பாக இருந்தால் - இலங்கையில் சட்டம் படித்த ஒருவருக்கு போன் போட்டு கேட்டாலும் போதும்.

large.F6E77812-B38E-4DFC-A2AE-A6C78644D1B3.jpeg.eb34d14838ea8d372db6c0e666617bdd.jpeg

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, ரஞ்சித் said:

மலையாளிகளே இன்றிருக்கும் யாழ்ப்பாணத் தமிழர் என்றும், அவர்கள் உண்மையான தமிழர்களைக் கிழக்கு மாகாணத்திற்குள்ளும், காடுகளுக்குள்ளும் விரட்டிவிட்டார்கள் என்றும் நீங்கள் எழுதுவது இன்னொரு பிரதேசவாத நடவடிக்கையின் அம்சமாக நான் கொள்ளலாமா?  நீங்கள் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர் என்பதால், இயல்பாகவே யாழ்ப்பாணத்துத் தமிழர்மீதிருக்கும் உங்களின் வெறுப்பு அடிக்கடி உங்களின் எழுத்தில் தெரிவதை அவதானித்ததால் இதைக் கேட்கிறேன். 

ஆனால், இதில் வேதனையென்னவென்றால், நீங்கள் கூறும் அதே மலபார் தமிழர்கள்தான் இன்று தேசியத்தைக் காக்கவேண்டும் என்று கோரிக்கொண்டிருக்கிறார்கள் என்பது. உடனேயே அங்கஜனையும், டக்கிளஸையும், திலீபனையும் உதவிக்கு அழைத்துக்கொண்டு வரவேண்டாம். அவர்கள் வென்றது எப்படியென்று எல்லோருக்கும் தெரியும். 

பாஸ்,

இது எனக்கு எழுத பட்டதா? அப்படியாயின்.

1. நான் கிழக்கு மாகாணம் என்று யாருக்கும் எப்போவாவது சொன்னேனா பாஸ்? நீங்களே முடிவு செய்தால் எப்படி?

2. யாழ்பாண தமிழர், எனைய தமிழரை அடித்து விரட்டிய கதை யூட்/கற்ப்ஸ் சொன்னது. நான் சொல்லவில்லை.

1 hour ago, MEERA said:

தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியை கட்டியது துரையப்பாபிள்ளை. அப்போ அவரும் மலையாளியோ...?

சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம்

அப்ப இவர்??? 😂😂😂😂

சாமுவேல் ஜேம்ஸ் - விவிலிய பெயர் - பலஸ்தீன வந்தேறி

பிள்ளை - மலையாள வந்தேறி

செல்வ “நாயகம்” - வடுக வந்தேறி.

இவ்வண்ணம்

யாழ்கள இனத்தூய்மை மேம்பாட்டு பிரிவு

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, goshan_che said:

யாழ்பாண தமிழர், எனைய தமிழரை அடித்து விரட்டிய கதை யூட்/கற்ப்ஸ் சொன்னது. நான் சொல்லவில்லை.

இடையிடையே கருத்துக்கள் நீக்கப்படுவதால் யார் எதைச் சொன்னார் என்று நினைவில் இல்லை. நீங்கள் சொல்லவில்லையென்றால் மன்னிக்கவும். 

Edited by ரஞ்சித்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல காலம் வேற்றுக்கிரகங்கள் பக்கத்திலை இல்லை..😁

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, tulpen said:

தமிழ் தேசியத்தை பற்றி இங்கு பேசப்படவில்லை. அதை விடுங்கள்.  அடுத்த நாட்டில் பல தலைமுறையாக வாழ்ந்து வரும் ஒரு மக்கள் மீது அத்துமீறி  இனவெறியை பேசி அவர்கள் ஒதுக்கும்  உரிமை உங்களுக்கு இருக்கிறதென்றால் எமது நாட்டில் எம் மீது இனவெறியை பேசும் உரிமை சிங்களவருக்கு இருக்கிறது என்று ஆகிவிடுமல்லவா?

அங்கு தெலுங்கு பேசும் தமிழர்களுக்கு மற்றய தமிழர்களைவிட கூடிய உரிமைகளும் சலுகைகளும் கிடைக்கிறது. இலங்கை தமிழனுக்கு அப்படியா? ஏன் முழங்காலுக்கும் மொட்டந்தலைக்கும் முடிச்சுப்போடுகிறீர்கள்? தமிழ்நாட்டில் தமிழ் பேசும் தெலுங்கர்கள் வாழ்வதில் எந்தப்பிரச்சனையும் இல்லை. அவர்கள் தமிழர்களை, தமிழ் தேசியத்தை ஒடுக்க முற்பட்டதாலேயே இவ்வளவு எதிர்வினைகள்.

ஆந்திராவில், தெலுங்கானாவில் எல்லாம் எவ்வளவோ தமிழர்கள் பல சந்ததிகளாக  வாழ்கிறார்கள். அவர்களில் ஒருவர் அங்கு அரசியலில் கோலோச்ச முடியுமா? அல்லது அதை அவர்கள்தான் விடுவார்களா??

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

2. யாழ்பாண தமிழர், எனைய தமிழரை அடித்து விரட்டிய கதை யூட்/கற்ப்ஸ் சொன்னது. நான் சொல்லவில்லை.

கோசான்,

இப்படி ஆதாரம் இல்லாமல் என்மீது குற்றம் சாட்டுவது சரியா?

2 hours ago, ரஞ்சித் said:

இடையிடையே கருத்துக்கள் நீக்கப்படுவதால் யார் எதைச் சொன்னார் என்று நினைவில் இல்லை. நீங்கள் சொல்லவில்லையென்றால் மன்னிக்கவும். 

யார் இப்படி கருத்துகளை நீக்கும் அநியாயத்தை செய்வது?😩

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, கற்பகதரு said:

கோசான்,

இப்படி ஆதாரம் இல்லாமல் என்மீது குற்றம் சாட்டுவது சரியா?

சோனாமுத்தா - போச்சா🤣

இங்கு எனது கருத்துக்காக நான் தாறுமாறாக ஒரு சிலரால் திட்டப்படுபது பற்றி எனக்கு எந்த கவலையும்இல்லை. எனது கருத்துக்களில் நியாயம் உண்டு என்பது என்னை திட்டுபவர்களுக்கு தான் அதிகமாகத்  தெரியும். எனது கருத்துக்கள் அனைத்தும் யாழ்  இணையத்தை வாசிக்கும் வாசகர்களின் சிந்தனையைத்  தூண்டமட்டுமே. என்னை சிங்களவன் என றும் இஸலாமியன் என்றும் கைக்கூலி என றும் திட்டுபவர்களை விட தமிழ்தேசியத்தை அதிகம் நேசிப்பவன் என்பதை யாருக்கும் நிருபிக்க வேண்டிய தேவை எனக்கு இல்லை. 

தமிழகத்தில் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்துவரும் மக்களுக்கு அங்கு எந்த உயர் பதவிக்கும் வருவதற்கு உரிமைஅவர்களது பிறப்புரிமை. அவர்களுக்கு எதிரான வெறுப்பை ஆதரித்து கொண்டு எம் நாட்டில் சிங்களவனின்வெறுப்பு அரசியலை எதிர்ப்பது என்ன நியாயம் என்று எனக்கு புரியவில்லை. 

தாயகத்தில் வாழும் பெரும்பாலான மக்கள் ஜதார்ததமாக சிந்திப்பதை அங்கு சென்ற போது உணர முடிந்தது. தமிழகத்தில் உள்ள தனி மனிதர்களின்  சுய அரசியல் இலாபத்திற்காக  அவர்கள் செய்யும் வெறுப்பு அரசியலுக்குஎம்மை பலியாக்க வேண்டிய மூடர்களாக ஈழத்தமிழர்கள் இல்லை எனபது அங்கு வாழும்  மக்கள்புரிந்திருக்கிறார்கள் என்பது மகிழ்சியான செய்தி. 

தேசியம் என்பது எமது உண்மையான பெருமைகளூடான பாரம்பரியத்தை நிலை நிறுத்துவதும் காலத்தின்மாற்றத்தையும் நவீனத்துவத்தையும்  தகுந்த நேரத்தில் உள்வாங்கி எம்மை புதுப்பித்து உலக மக்களுக்குஇணையாக கெளரவமாக வாழ்வதே ஆகும். அதை திறன்பட செய்யாமல் சக மனிதர்களை வெறுக்கும் அரசியல்ஒரு போதும் தேசிய அரசியல் ஆகாது. அதை ஏற்கனவே  செய்த Nationalsozialismus அரசியல் அளித்தபாடங்களை விளங்கி கொள்ளவேண்டும். 

இங்கு தீவிர தேசியம் பேசும் பலரால்  தொடர்ந்து ஒரே பாணியில் முன்வைக்கப்படும் கருத்துக்களைப் பின்பற்றி  எமது அரசியல் தாயகத்தில்  கொண்டு நடத்தப்படுமானால் அது   தமிழ் தேசியத்தை இன்னும் பலவீனப்படுத்தவேஉதவும். 

இலங்கைத்தீவில்  தமிழர தேசியத்தை நிலைநாட்டுவது என்பதை விட காப்பாறுவதே உடனடித் தேவை. பின்னர் அதனை ஒளிரவைப்பது அடுத்த தலைமுறையின் வேலை. காப்பாற்றுவதற்கான உடனடி ICU என்பதுகோஷான் சொன்னது போல இந்திய இலங்கை ஒப்பந்தத்தை அதாவது 13 ம் திருத்தத்தை நடைமுறைப்படுத்தஅனைத்து தரப்பினரும் அழுத்தம் கொடுப்பதே.

2 hours ago, Eppothum Thamizhan said:

அங்கு தெலுங்கு பேசும் தமிழர்களுக்கு மற்றய தமிழர்களைவிட கூடிய உரிமைகளும் சலுகைகளும் கிடைக்கிறது. இலங்கை தமிழனுக்கு அப்படியா? ஏன் முழங்காலுக்கும் மொட்டந்தலைக்கும் முடிச்சுப்போடுகிறீர்கள்? தமிழ்நாட்டில் தமிழ் பேசும் தெலுங்கர்கள் வாழ்வதில் எந்தப்பிரச்சனையும் இல்லை. அவர்கள் தமிழர்களை, தமிழ் தேசியத்தை ஒடுக்க முற்பட்டதாலேயே இவ்வளவு எதிர்வினைகள்.

ஆந்திராவில், தெலுங்கானாவில் எல்லாம் எவ்வளவோ தமிழர்கள் பல சந்ததிகளாக  வாழ்கிறார்கள். அவர்களில் ஒருவர் அங்கு அரசியலில் கோலோச்ச முடியுமா? அல்லது அதை அவர்கள்தான் விடுவார்களா??

இவ்வாறு நீங்கள் கூறுவதற்கான ஆதாரம் என்ன? அந்த இனவெறிக் கட்சியின்  பிரச்சார காணொளிகளை ஆமாரமாக காட்ட வேண்டாம். 

Edited by tulpen

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.