Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்களம் தெரியாமல் ஏன் ஊடகத்திற்குள் இருக்கின்றீர்கள் என ஊடகவியலாளரிடம் பொலிஸார் விதண்டாவாதம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Just now, satan said:

ஒருதடவை நான் அதை சுட்டிக்காட்டியபோது, யானறியேன் என்று தப்பித்துக்கொண்டதாக நினைத்தார். அப்பவே இவர் ஒரு சந்தர்ப்பவாதி எனபுரிந்து கொண்டேன். 

சொல்லவே வேண்டாம். 

ஜூட் என்கிற பெயரில் இவர் 2009 இற்கு முன்னர் எழுதிய கருத்துக்களையும், 2009 மே மாதத்திற்குப் பின்னர் எழுதிய கருத்துக்களையும் முடிந்தால் படித்துப்பாருங்கள்.

  • Replies 165
  • Views 9.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இப்ப முடிவாய் என்ன சிங்களம் படிக்கிறதா இல்லையா😄

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ரஞ்சித் said:

சிங்களம் தெரிந்து வைத்திருப்பது நல்லதுதானே என்று சொல்பவர்கள் இரு வகையினர்.

முதலாமவர்கள் , இந்தச் சிங்களம் தெரிதலின் சூட்சுமத்தினை உள்நோக்கத்தினை அறியாதவர்கள், ஏமாளிகள்.

இரண்டாமவர்கள், நடப்பது என்னவென்று தெரிந்தே, அதனை ஆதரிக்கும் விலைபோனவர்கள் அல்லது இதன்மூலம் அரசியல் ரீதியிலான லாபம் அடைபவர்கள்.

நான் இரண்டாம் வகை என்று "ரஞ்சித் தியரி" மூலம் இன்று அறிந்து கொண்டேன்!🤣

பேராதனையில் வாழப் போகிறேன் என்று தெரிந்ததும், வவுனியாவில் இருந்த ஒரு சிங்கள ஆசிரியரிடம் பேச, வாசிக்க எழுதப் பழகிக் கொண்டேன் (பேராதனையூடாகச் செல்லும் சில பஸ்களில் சிங்களத்தில் மட்டும் தான் பெயர்பலகை இருக்கும் என யாரோ சொன்னதை நம்பியதால் தான் இந்த முயற்சி!). 

நான் அறிந்த சிங்களம், பாதுகாப்புக் கெடுபிடிகள் நிறைந்த பெரஹராக் காலத்தில் கூட கண்டியின் மத்திய பகுதிக்கு ஒரு விக்கினமும் இல்லாமல் சென்று சுற்றி வர உதவியது. சிங்களம் தெரியாமல் கண்டிப் பொலிஸ் நிலையத்தில் ஒரு நாள் முழுவதும் தடுத்து வைக்கப் பட்ட பல பொறியியல் பீட மாணவர்களை விட எனக்கு நன்மை தான்!

பின்னர் ஆங்கிலமோ தமிழோ தெரியாத மாட்டுக் காரர்கள், ஆட்டுக் காரர்களுடன் பேசி எனது தொழிலை நேர்த்தியாகச் செய்யவும் நான் அறிந்த சிங்களம் உதவியது!

எனவே, சந்தர்ப்பவாதியான எனக்கு சிங்களம் படித்ததால் நன்மை!

சந்தர்ப்பவாதியல்லாத கவரிமான்களுக்கு சிங்களத்தைப் படித்தால் மயிர் உதிர்ந்து விடும் என்பது உண்மை! 

Edited by Justin
typo

  • கருத்துக்கள உறவுகள்+
9 hours ago, ரஞ்சித் said:

சிங்களம் தெரிந்து வைத்திருப்பது நல்லதுதானே என்று சொல்பவர்கள் இரு வகையினர்.

முதலாமவர்கள் , இந்தச் சிங்களம் தெரிதலின் சூட்சுமத்தினை உள்நோக்கத்தினை அறியாதவர்கள், ஏமாளிகள்.

இரண்டாமவர்கள், நடப்பது என்னவென்று தெரிந்தே, அதனை ஆதரிக்கும் விலைபோனவர்கள் அல்லது இதன்மூலம் அரசியல் ரீதியிலான லாபம் அடைபவர்கள்.

முதலில் இந்தச் சிங்கள் தெரிந்தால் நல்லதுதானே என்கிற நிலை ஏன் உருவாகியது? யாரால் உருவாக்கப்பட்டது? எதற்காக உருவாக்கினார்கள்? இதற்கும் 1950 இன் தனிச் சிங்களச் சட்டத்திற்கும் என்ன தொடர்பு? இவை எவற்றுக்கும் உங்களிடம் பதில் இல்லையென்றால் நீங்கள் முதலாமவர்கள், முட்டாள்கள்.

அப்படியில்லை, இவை எல்லாமே ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவை, ஆனால் அதனை நன்கு விளங்கிக்கொண்டே ஆதரிக்கிறோம் என்பவர்கள், இரண்டாமவர்கள். விலைபோனவர்கள், சந்தர்ப்பவாதிகள்.

தமிழர் பெரும்பான்மையினராக வாழும் பிரதேசத்தில் சிங்களம் தெரியவேண்டிய தேவை என்ன? தமிழர்களைப் போரில் தோற்கடித்துவிட்டோம், எமது ஆக்கிரமிப்பிற்குள் வாழும் அடிமைகள் எமது மொழியைக் கற்பதே எமது தேவை என்று எம்மை ஆக்கிரமித்து நிற்கும் சிங்களத்தின் அடையாளங்களான ராணுவமும் காவல்த்துறையும் சொல்கின்றன. இதனால் நமக்குக் கிடைக்கப்போகின்ற நலன்கள் என்ன? ஏன் இது ஒரு வித ஆக்கிரமிப்பு மனப்பான்மை என்று இங்கே குத்திமுறிபவர்களுக்குத் தெரியவில்லை? எமது தாயகத்தில் எமது மொழியைக் கதைக்கும் உரிமையினை மறுக்கும் இந்த ஆக்கிரமிப்பு மனப்பாங்கு இவர்களுக்கு எப்படி ஒரு நல்ல விடயமாகத் தெரிகிறது?

இற்றைக்கு 40 - 50 வருடங்களுக்கு முன்னர் சிலாபம், புத்தளம், நீர்கொழும்பு ஆகிய பகுதிகளில் பிறப்பால் தமிழர்களாகவிருந்து, சிங்கள இனவாதிகளினால் திட்டமிட்டு தமிழ்க் கல்வியும், தமிழ்ப் பாடசாலைகளும், தமிழ்மொழிப் பயன்பாடும் மறுக்கப்பட்ட ஒரு சமூகம் இன்று முழு சிங்களவர்களாக மாறியிருப்பது இந்த சிங்களச் செம்புதூக்கிகளுக்கோ அல்லது மகிந்தவின் கைகளை நக்கிப் பிழைக்கும் சிலரின் அடிவருடிகளுக்கோ நிச்சயமாகத் தெரியாமல் இருக்காது. ஆனால், இதனை அவர்கள் மிகவும் நாசுக்காக, சூட்சுமத்துடன் செய்கிறார்கள். 

தமிழில் சிங்களத்தைப் புகுத்தி, சிறிது சிறிதாக தமிழினத்தின் தனித்தன்மையினை குலைத்து, கலப்பினமாக அவர்களை மாற்றி, இறுதியில் தமிழர் எனும் இனத்தினை முற்றாக தனக்குள் உள்வாங்கும் கைங்கரியத்தைச் சிங்களம் செய்துவருவது இவர்களுக்குத் தெரியும்.. ஆனால், அப்படி நடக்கவில்லை என்பதைக் காட்டவே இவர்கள் இறக்கப்பட்டிருக்கிறார்கள். 

1990 களிலிருந்து  இலிருந்து தமிழ்ப் பெண்களை தமிழர் தாயகத்தில் ஆக்கிரமித்து நிற்கும் ராணுவமும் காவல்த்துறையினரும் மணப்பது பொதுவாக நடந்துவருகிறது. இப்போது தமிழர் தாயகத்தில் இயங்கும் பல்கலைக் கழகங்களில் வேண்டுமென்றே சிங்களத்தால் அனுமதிக்கப்படும் சிங்கள மாணவர்களை காதலித்து மணக்கும் ஒரு போக்கு இளைய தமிழ்ப் பெண்களிடையே பரவி வருகிறது. சில வாரங்களுக்கு முன்னர் அவ்வாறான சிங்கள மாணவனை காதலித்து மணந்த தமிழிச்சி ஒருவரின் பேட்டியினை கேட்டபோது, சிங்களம் இவர்களை எவ்வாறு மூளைச்சலவைசெய்து தமிழினத்திற்கெதிராகப் பாவிக்கிறது என்பது தெளிவாகியது.

இதில் வேடிக்கை என்னவென்றால், "சிங்களம் தெரிந்தால்த்தான் அவன் என்ன பேசுகிறான் என்பது தெரியும்" என்று வேறு பசப்பல்கள். தமிழரின் மொழி தெரிந்தபடியினால்த்தான், தமிழன்பற்றிச் சிங்களவனுக்குக் காட்டிக்கொடுத்து அழித்தீர்க்கள். இப்போது சிங்களம் கற்று யாருடன் சேர்ந்து யாரை அழிக்கப்போகிறீர்கள்? உங்களின் காட்டிக்கொடுப்புக்களுக்கும், துரோகங்களுக்கும் ஒரு அளவேயில்லையா?

ஜேர்மனியிலும் , ஜப்பானிலும் இருக்கும் தமிழர்கள் தமிழா பேசுகிறார்கள் என்று கேட்கும் மூடர்களுக்குப் புரியவில்லை அது எமது நாடு இல்லையென்பதும், நாம் அங்கே தஞ்சம் பிழைக்கப் போனவர்கள் என்பதும், அப்படியிருந்தபோதும்கூட, எமது மொழியினைக் கலாசாரத்தை நாம் பின்பற்ற அவன் ஒருபோதும் தடைவிதிக்கவில்லை. ஆனால், யாழ்ழ்ப்பாணமோ மட்டக்களப்போ இருப்பது ஜேர்மனியிலோ அல்லது ஜப்பானிலோ இல்லை. அது எமது தாயகத்தின் இரு முக்கிய நகரங்கள், அங்கு வசிப்பதற்கு நாம் தமிழைத் தவிர வேறு மொழியொன்றினைக் கற்கவேண்டிய தேவையில்லை. 

இதற்குள் புலம்பெயர் தமிழர்கள் உசுப்பேற்றுகிரார்களாம்.ஏன், நீங்கள் தொப்பியை மாற்றி மாற்றி அணிந்துகொண்டு சிங்களத்துக்குக் காவடி தூக்கி தமிழரை அழிக்கலாம், ஆனால் நாங்கள் எமது சொந்தங்களின் நலன்பற்றி அக்கறைப்படுவது உங்களுக்குக் கஷ்ட்டமாக இருக்கிறது? ஆக, தாயகத்திலுள்ளவர்களுக்குச் சார்பாக வெளியில் இருந்து எவரும் பேசக் கூடாது? எமது மொழியினைப் பேசிப்பேசியே எம்மைக் கருவறுத்த ஒரு சமூகம் புலம்பெயர் தமிழர்மேல் பழியினைப் போட்டுவிட்டு தாங்கள் சிங்களத்துடன் சேர்ந்து தமிழ் பேசியே எம்மை அழித்த கைஙரியத்தினை இங்கே மறைத்துக்கொண்டு உலாவருகிறார்கள் !

சிங்களப் பிரதேசத்தில் வாழப் போவதால் சிங்களம் கற்றுச் செல்பவர்கள் இதற்குள் அடங்கார் என நினைக்கின்றேன். 

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

ஆங்கிலத்தை விட சிங்களம் பழமை வாய்ந்த மொழி பாருங்கோ. 

உண்மையில் ஆங்கில மொழி எங்கு தோற்றம் பெற்றது ?

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களத்திற்கு வாழ்க்கைப்பட்டு போனவர்கள் சிங்களம் படியுங்கள் தமிழுக்கு வாழ்க்கைப்பட்டு வந்தவர்கள் தமிழ் படியுங்கள்….

  • கருத்துக்கள உறவுகள்

வெவ்வேறு மொழி பேசும் நிலங்களை இணைத்து ஒரு நாடாக்குவது பூகோள அடிப்படையிலான தேவை அல்லது தேர்வாக இருக்கலாம். அரசியல் அடிப்படையில் அது ஒரு புரிந்துணர்வு, ஒப்பந்தம் அவ்வளவே. அவ்வாறு அமைந்த/அமைத்த ஒரு நாட்டில் ஒவ்வொரு மொழி, அதன் அடிப்படையிலான பண்பாட்டு அடையாளங்களைக் காத்து நிற்பது அங்குள்ள அரசின் தலையாய கடமை. இவ்விதி இலங்கை, இந்தியா, ஸ்விட்சர்லாந்து எனப் பல நாடுகளுக்கும் பொருந்தும். 

            பொது மொழியென ஒன்று வேண்டுமென்றால், அது அந்தந்த நாட்டைப் பொறுத்துத் தீர்மானிக்கப்பட வேண்டும். உதாரணமாக இலங்கை, இந்தியா போன்ற நாடுகளுக்கு அவற்றின் அடிமை வரலாறு ஒரு  இணைப்பு மொழியான ஆங்கிலத்தைத் தந்துள்ளது. அந்த அடிமை வரலாறுதானே பல்வேறு தேசிய இனங்களின் இணைப்பையும் தந்தது ! அந்த இணைப்பு மொழியைக்கூட ஒரே நிலப்பரப்பிற்குள் வாழும் பாமரர் அனைவரும் அறிய வேண்டிய அவசியமில்லை.           

         ஒரு நிலப்பரப்பில் இருந்து வயிற்றுப் பிழைப்புக்காக இன்னொரு இடம் சென்று கூலி வேலை செய்யும் பாமரன் கூட குறுகிய காலத்தில் அங்குள்ள மொழியைப் பேசக் கற்றுக் கொள்கிறான். இதுதான் உலகெங்கும் நடைமுறை. எனவே வசதிக்காகத்தானே எனும் வாதம் கூட  ஏற்புடையதாக இல்லை. 

          மொழி வெறும் தகவல் பரிமாற்ற ஊடகமல்ல. இந்த நாட்டிலுள்ள ஒரு மொழியை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது கூட்டாட்சிக் கொள்கைக்கு எதிரானது. அது மொழி, இன, பண்பாட்டு அழிப்பிற்கான மறைமுக முயற்சி. ஒற்றுமை உன்னதமானது; ஒருமுகத்தன்மை பாசிசமானது. Unity is noble; Uniformity is fascist.

Edited by சுப.சோமசுந்தரம்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

பேராதனையில் வாழப் போகிறேன் என்று தெரிந்ததும், வவுனியாவில் இருந்த ஒரு சிங்கள ஆசிரியரிடம் பேச, வாசிக்க எழுதப் பழகிக் கொண்டேன் (பேராதனையூடாகச் செல்லும் சில பஸ்களில் சிங்களத்தில் மட்டும் தான் பெயர்பலகை இருக்கும் என யாரோ சொன்னதை நம்பியதால் தான் இந்த முயற்சி!)

ஜஸ்ரின்,

மேலேநான் குவாட் பண்ணியதைத் தான் இந்தத் திரியில் எல்லாரும் சொல்கிறார்கள். யாழ்ப்பாணத்துக்கு வேலைக்கு வந்தால்நீங்கள் செய்தது போல தமிழ் படிச்சல்லோ வந்திருக்க வேணும் சொந்தப்பக்கமே பந்தைப்போடுறியளே

Edited by வாதவூரான்
include my comment

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, satan said:

ஒருதடவை நான் அதை சுட்டிக்காட்டியபோது, யானறியேன் என்று தப்பித்துக்கொண்டதாக நினைத்தார். அப்பவே இவர் ஒரு சந்தர்ப்பவாதி எனபுரிந்து கொண்டேன். 

சொல்லவே வேண்டாம். 

நீங்கள் சந்தர்ப்பங்களை தவறவிட்ட அசந்தர்ப்பவாதி என்ற கவலை இருப்பது நியாயம்தான். 🥲

9 hours ago, ரஞ்சித் said:

ஜூட் என்கிற பெயரில் இவர் 2009 இற்கு முன்னர் எழுதிய கருத்துக்களையும், 2009 மே மாதத்திற்குப் பின்னர் எழுதிய கருத்துக்களையும் முடிந்தால் படித்துப்பாருங்கள்.

2009 மேயில் அப்படியான மாற்றம் நிகழ என்ன காரணமாக இருந்திருக்க கூடும்?🙃 

என்ன நடந்தாலும் நாம் மாறமாட்டோம், எமது தவறுகளையும் திருத்தமாட்டோம், இப்படியே இருந்து நாமும் அழிந்து மற்றவர்களையும் அழித்துவிடுவோம் என்று நீங்கள் பிடிவாதம் பிடிப்பதன் காரணம் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, பெருமாள் said:

உண்மையில் ஆங்கில மொழி எங்கு தோற்றம் பெற்றது ?

பழங்கால ஆங்கிலம் (400 -1100)தொகு

முதன்மைக் கட்டுரை: பழங்கால ஆங்கிலம்

கிபி 5 ம் நூற்றாண்டளவில் பிரிட்டனை மூன்று யேர்மன் குழுக்கள் (ஆங்கில்சு, சாக்சன், யூட்) இன்றைய யேர்மன் / டென்மார்க் நிலப்பரப்பில் இருந்து ஆக்கிரமித்தன. இந்தக் குழுக்கள் தம்மிடையே புரிந்துகொள்ளக்கூடிய ஒத்த மொழிகளைப் பேசின. அப்போது அங்கு பேசப்பட்டு வந்த கெல்டிக் மொழிக் குழுக்கள் வடக்கேயும் மேற்கேயும் தள்ளப்பட்டன. "ஆங்கிலோ இனத்தவர்கள் “ஆங்லோ-லாந்து” எனும் பகுதியில் இருந்தே வந்தனர். இவர்கள் பேசிய மொழி "இங்கிலிசுக்" எனும் யேர்மனிய மொழிக் குடும்பத்து மொழியாகும். இப்பெயர்களே இன்று மருவி இங்கிலாந்து - இங்கிலிசு என்றானது."[3] இக்காலத்திப் பேசப்பட்ட ஆங்கிலம் பழம் ஆங்கிலம் எனப்படுகிறது. ஏழாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சில ஆக்கங்கள் மட்டுமே இப்போது கிடைக்கின்றன.[4] தற்கால ஆங்கிலத்தின் பெரிதும் புழங்கும் 50 விழுக்காடு சொற்களுக்கு பழ ஆங்கில வேர்கள் உண்டு.
 
https://ta.m.wikipedia.org/wiki/ஆங்கில_மொழியின்_வரலாறு

  • கருத்துக்கள உறவுகள்

இதில் எனக்கு நியாய, அநியாயம் யார் பக்கம் என தெரியவில்லை ஆனால் என் அனுபவத்தை சொல்கிறேன்.

நான் ஒரு குறித்த வயதில் இருந்து வடகிழக்குக்கு அப்பால் படித்தவன். அதுவும் நான் கற்ற, வாழ்ந்த, விளையாடிய, பழகிய சூழல் என்னை கிட்டதட்ட ஒரு சிங்களவரை போல் சிங்களம் பேச வைத்தது.

ஆனால் எத்தனை இலவச வாய்ப்புகள் வந்த போதும் ஒரு போதும் சிங்களத்தை முறைப்படி கற்பதில்லை, எழுத வாசிக்க படிப்பதில்லை என்பதில் உறுதியாக இருந்தேன்.

ஏனென்றால் சிங்களம் என்ன நோக்கில் “இதை கற்பதை தவிர வேறு வழி இல்லை” என்று எம்மில் புகுத்த படுகிறது என்பதை நான் தெளிவாக தெரிந்து வைத்திருந்தேன்.

இந்த காரணம் இன்னும் அப்படியேதான் இருக்கிறது. 

தவிரவும் என் வயதொத்தோர் உயிரை கொடுக்கும் போது, தெற்கில் முடிந்தளவு என்னாலால அரசியலை முன்னெடுத்த காலம் அது - ஆகவே இந்த மறுப்பை, என்னாலான ஒரு அடையாள புரட்சி எனவும் எடுத்து கொள்ளலாம். 

ஆனால் - தொடர்ந்தும் இலங்கையில் வாழ்ந்திருந்தால் இந்த வைராக்கியம் நிலைத்திருக்குமா? சொல்ல முடியாது.

அடுத்து நாம் இன்னொன்றையும் கருத வேண்டும்.

தமிழரை விட, இனவாதத்தால் (2009)ம் ஆண்டுக்கு பின் கூட முஸ்லிம்கள் ஒப்பீட்டளவில் குறைவாக பாதிக்கபட்டமைக்கு அவர்களில் பலருக்கு சிங்களம் பேச தெரிந்துருப்பதும் ஒரு காரணம் என நான் நினைக்கிறேன்.

ஆகவே போருக்கு பின்னான நலிவுற்ற நிலையில், இலங்கையில் எவ்வளவு தமிழர்கள் சிங்களத்தை கற்று, எம் நிலையை சாதாரண சிங்கள மக்களிடம் எடுத்து செல்கிறோமோ, அந்தளவுக்கு எமது பக்க நியாயம் பற்றி அவர்கள் அறிய வாய்பாக அமையும் என நான் நினைக்கிறேன்.

தமிழ் பகுதிகளில் அரச கருமங்கள் தமிழில் நடக்க வேண்டும் என்பது எமது நியாயமான கோரிக்கை, இப்போ இலங்கை சட்டமும் அப்படித்தான் கூறுகிறது. ஆனால் அந்த கோரிக்கையின் நியாயத்தை இப்படி தமிழர் மட்டும் வாசிக்கும் உதயனில் எழுதி, யாழில் தமிழர் இடையே விவாதிப்பதிலும் பார்க்க, இதை சிங்கள ஊடக பரப்பில், சிங்களத்தில் விவாதித்தால் அதிக நன்மை கிடைக்க கூடும்.

இனி ஆயுதத்துக்கான காலம் இல்லை, அறிவுக்கான காலம் என்று தனியே வாய்சவாடல் விட்டு மட்டும் பயனில்லை, அவர்கள் மொழியையே எமக்கான ஆயுதமாக்கும் விவேகமும் வேண்டும்.

அதற்காக தமிழை கைவிட வேண்டியதில்லை. எமது மொழிக்கான உரிமையை நிலைநாட்டியபடி, போராடியபடி, அவர்கள் மொழியை கற்று அதன்மூலம் எமது மொழி உரிமையை மேலும் திடப்படுத்தலாம்.

இதை 2009 இன் பின் மாறியுள்ள சூழலுக்கான உத்தியாகவே நான் கருதுகிறேன். 

இரஞ்சித் கூறிய 2 வகையினர் 2009 முன் சரியாக இருந்திருக்கலாம்.

இப்போ?

ஆனால் நான் சிங்களம் படிக்க மறுத்ததை நினைத்து பார்க்க, ஒரு பக்கம் சிறு பிள்ளைதனமான மடவேலை (வீட்டில் ஏனையோர் படித்தார்கள்) போல இருந்தாலும், அந்த சூழலில் அதுதான் சரியான தேர்வு என்றும் தோன்றுகிறது.

பிகு

சிங்களம் எழுத படிக்க தெரியாமைக்கு நான் வருந்துவது - ஆங்கில, தமிழ் இணைய தளங்களில் எம் பக்க நியாயத்தை எடுத்து சொல்வது (சொல்லியது) போல் சிங்கள இணையங்களில் எழுத முடியாமல் இருப்பதை இட்டுத்தான்.

சில பத்து வருடங்களுக்கு முன் இப்படி நடக்கும் என தெரிந்திருந்தால் கட்டாயம் சிங்களம் எழுத படித்திருபேன்.

ஒப்பீட்டு ரீதியில் மக்கள் தொகையில் சிங்களம் தெரிந்த தமிழரின் சதவீத்த்தை விட தமிழ் தெரிந்த சிங்களவரின் சதவீதம் அதிகம் என்பது எனது கணிப்பு.  

  • கருத்துக்கள உறவுகள்
Just now, tulpen said:

ஒப்பீட்டு ரீதியில் மக்கள் தொகையில் சிங்களம் தெரிந்த தமிழரின் சதவீத்த்தை விட தமிழ் தெரிந்த சிங்களவரின் சதவீதம் அதிகம் என்பது எனது கணிப்பு.  

எப்படி கணித்தீர்கள் என்று சொல்ல முடியுமா? 

46 minutes ago, tulpen said:

ஒப்பீட்டு ரீதியில் மக்கள் தொகையில் சிங்களம் தெரிந்த தமிழரின் சதவீத்த்தை விட தமிழ் தெரிந்த சிங்களவரின் சதவீதம் அதிகம் என்பது எனது கணிப்பு.  

தவறான கணிப்பு.

மலையக தமிழ் மக்களில் அனேகமாக எல்லாராலும் சிங்களம் கதைக்க முடியும், ஆனால் அங்குள்ள சிங்கள மக்களால் முடியாது. அதே போன்று கொழும்பு வாழ் தமிழர்களில் பெரும்பாலானோர்க்கு சிங்களம் முடியும், ஆனால் கொழும்பு சிங்களவர்களில் கொச்சிக்கடை, கொட்டாஞ்சேனை, பாமன்கடை போன்ற பகுதிகளில் உள்ள சிங்களவர்களுக்கே ஓரளவு முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, நிழலி said:

மலையகம் போல இல்லாவிடினும் கிழக்கிலும் கணிசமான தமிழர்கள் சிங்களம் கொச்சையாகவேனும் பேசுவார்கள். ஆனால் கிழக்கு வாழ் சிங்களவர்களுக்கு தமிழ் தெரியாது போடா🤣.  

  • கருத்துக்கள உறவுகள்

பலரது கருத்தை பார்க்க இன்னமும் அந்த மக்கள் தங்களுக்கு அடிமையாய் இருக்க வேண்டும்  என்று விரும்புகிறார்கள்

1 hour ago, நிழலி said:

தவறான கணிப்பு.

மலையக தமிழ் மக்களில் அனேகமாக எல்லாராலும் சிங்களம் கதைக்க முடியும், ஆனால் அங்குள்ள சிங்கள மக்களால் முடியாது. அதே போன்று கொழும்பு வாழ் தமிழர்களில் பெரும்பாலானோர்க்கு சிங்களம் முடியும், ஆனால் கொழும்பு சிங்களவர்களில் கொச்சிக்கடை, கொட்டாஞ்சேனை, பாமன்கடை போன்ற பகுதிகளில் உள்ள சிங்களவர்களுக்கே ஓரளவு முடியும்.

கிழக்கு மக்களையும் மலையக மக்களையும் கணக்கிலெடுக்காத்தால் என்து கணிப்பு தவறாக இருக்கலாம். 

அதற்கு முக்கிய காரணம் தமிழர்கள் தான் வாழ்வாதாரம் தேடி சிங்கள பகுதிகளுக்கு சென்றார்கள்.(ஒப்பீட்டளவில்) ஆனால் இன்று நிலைமை வேறு??

Edited by விசுகு
ஒரு வரிகள் சேர்க்க

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

கிழக்கு மக்களையும் மலையக மக்களையும் கணக்கிலெடுக்காத்தால் என்து கணிப்பு தவறாக இருக்கலாம். 

கணிப்பு தவறென்பதை ஒத்துகொள்ளும் மனசு இருக்கே…அதுதான் கடவுள் 👍🏿.

நீங்கள் உங்களை அறியாமலே யாழ் மையவாடிக்குள்…சேய்… மையவாதத்துக்குள் சிக்கி கொண்டீர்கள்🤣.

யாழை விட்டு முதன் முதலில் வெளியேறிய போது எனக்கு தெரிந்த சிங்கள வார்த்தைகள் பள்ளோ, பஹே, நஹே மட்டுமே.  

என்னை சுற்றி இருந்த வயசாளிகள் படித்தவர்கள் நிலையும் கிட்டதட்ட அவ்வளவே.

இப்போ என்ன நிலை என தெரியவில்லை.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

அதற்கு முக்கிய காரணம் தமிழர்கள் தான் வாழ்வாதாரம் தேடி சிங்கள பகுதிகளுக்கு சென்றார்கள்.(ஒப்பீட்டளவில்) ஆனால் இன்று நிலைமை வேறு??

இன்று நிலைமை வேறு??

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, வாதவூரான் said:

ஜஸ்ரின்,

மேலேநான் குவாட் பண்ணியதைத் தான் இந்தத் திரியில் எல்லாரும் சொல்கிறார்கள். யாழ்ப்பாணத்துக்கு வேலைக்கு வந்தால்நீங்கள் செய்தது போல தமிழ் படிச்சல்லோ வந்திருக்க வேணும் சொந்தப்பக்கமே பந்தைப்போடுறியளே

நான் பந்து போட்ட பக்கத்தைக் கண்ட கண்ணுக்கு நான் எந்தக் கருத்துக்குக் குறிப்பிட்டுப் பதில் எழுதியிருக்கிறேன் என்று பார்க்கத் தெரியவில்லையே? இதைத் தான் tunnel vision என்பதோ?😂 

மற்றபடி: இலங்கையில் இருக்கும் சிங்களவர் தமிழையும், தமிழர் சிங்களத்தையும் கற்றிருக்க வேண்டும் என்பது என் அபிப்பிராயம்! உண்மையில் இது பாடத்திட்டத்தில் கட்டாயமாக்கப் பட்டாலும் நல்லதென நினைக்கிறேன். இரண்டே இரண்டு மொழிகள் - இதற்குள் ஒன்றைக் கற்றால் ஒன்று அழிவடைந்து விடுமென்பதெல்லாம் பயப் பூச்சாண்டி காட்டும் பொய் வேலை! 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

இதில் எனக்கு நியாய, அநியாயம் யார் பக்கம் என தெரியவில்லை ஆனால் என் அனுபவத்தை சொல்கிறேன்.

நான் ஒரு குறித்த வயதில் இருந்து வடகிழக்குக்கு அப்பால் படித்தவன். அதுவும் நான் கற்ற, வாழ்ந்த, விளையாடிய, பழகிய சூழல் என்னை கிட்டதட்ட ஒரு சிங்களவரை போல் சிங்களம் பேச வைத்தது.

ஆனால் எத்தனை இலவச வாய்ப்புகள் வந்த போதும் ஒரு போதும் சிங்களத்தை முறைப்படி கற்பதில்லை, எழுத வாசிக்க படிப்பதில்லை என்பதில் உறுதியாக இருந்தேன்.

ஏனென்றால் சிங்களம் என்ன நோக்கில் “இதை கற்பதை தவிர வேறு வழி இல்லை” என்று எம்மில் புகுத்த படுகிறது என்பதை நான் தெளிவாக தெரிந்து வைத்திருந்தேன்.

இந்த காரணம் இன்னும் அப்படியேதான் இருக்கிறது. 

தவிரவும் என் வயதொத்தோர் உயிரை கொடுக்கும் போது, தெற்கில் முடிந்தளவு என்னாலால அரசியலை முன்னெடுத்த காலம் அது - ஆகவே இந்த மறுப்பை, என்னாலான ஒரு அடையாள புரட்சி எனவும் எடுத்து கொள்ளலாம். 

ஆனால் - தொடர்ந்தும் இலங்கையில் வாழ்ந்திருந்தால் இந்த வைராக்கியம் நிலைத்திருக்குமா? சொல்ல முடியாது.

அடுத்து நாம் இன்னொன்றையும் கருத வேண்டும்.

தமிழரை விட, இனவாதத்தால் (2009)ம் ஆண்டுக்கு பின் கூட முஸ்லிம்கள் ஒப்பீட்டளவில் குறைவாக பாதிக்கபட்டமைக்கு அவர்களில் பலருக்கு சிங்களம் பேச தெரிந்துருப்பதும் ஒரு காரணம் என நான் நினைக்கிறேன்.

ஆகவே போருக்கு பின்னான நலிவுற்ற நிலையில், இலங்கையில் எவ்வளவு தமிழர்கள் சிங்களத்தை கற்று, எம் நிலையை சாதாரண சிங்கள மக்களிடம் எடுத்து செல்கிறோமோ, அந்தளவுக்கு எமது பக்க நியாயம் பற்றி அவர்கள் அறிய வாய்பாக அமையும் என நான் நினைக்கிறேன்.

தமிழ் பகுதிகளில் அரச கருமங்கள் தமிழில் நடக்க வேண்டும் என்பது எமது நியாயமான கோரிக்கை, இப்போ இலங்கை சட்டமும் அப்படித்தான் கூறுகிறது. ஆனால் அந்த கோரிக்கையின் நியாயத்தை இப்படி தமிழர் மட்டும் வாசிக்கும் உதயனில் எழுதி, யாழில் தமிழர் இடையே விவாதிப்பதிலும் பார்க்க, இதை சிங்கள ஊடக பரப்பில், சிங்களத்தில் விவாதித்தால் அதிக நன்மை கிடைக்க கூடும்.

இனி ஆயுதத்துக்கான காலம் இல்லை, அறிவுக்கான காலம் என்று தனியே வாய்சவாடல் விட்டு மட்டும் பயனில்லை, அவர்கள் மொழியையே எமக்கான ஆயுதமாக்கும் விவேகமும் வேண்டும்.

அதற்காக தமிழை கைவிட வேண்டியதில்லை. எமது மொழிக்கான உரிமையை நிலைநாட்டியபடி, போராடியபடி, அவர்கள் மொழியை கற்று அதன்மூலம் எமது மொழி உரிமையை மேலும் திடப்படுத்தலாம்.

இதை 2009 இன் பின் மாறியுள்ள சூழலுக்கான உத்தியாகவே நான் கருதுகிறேன். 

இரஞ்சித் கூறிய 2 வகையினர் 2009 முன் சரியாக இருந்திருக்கலாம்.

இப்போ?

ஆனால் நான் சிங்களம் படிக்க மறுத்ததை நினைத்து பார்க்க, ஒரு பக்கம் சிறு பிள்ளைதனமான மடவேலை (வீட்டில் ஏனையோர் படித்தார்கள்) போல இருந்தாலும், அந்த சூழலில் அதுதான் சரியான தேர்வு என்றும் தோன்றுகிறது.

பிகு

சிங்களம் எழுத படிக்க தெரியாமைக்கு நான் வருந்துவது - ஆங்கில, தமிழ் இணைய தளங்களில் எம் பக்க நியாயத்தை எடுத்து சொல்வது (சொல்லியது) போல் சிங்கள இணையங்களில் எழுத முடியாமல் இருப்பதை இட்டுத்தான்.

சில பத்து வருடங்களுக்கு முன் இப்படி நடக்கும் என தெரிந்திருந்தால் கட்டாயம் சிங்களம் எழுத படித்திருபேன்.

ஏன் இவ்வளவு எழுதி மெனக்கெடுவான்? ஷோர்ற் அன்ட் ஸ்வீற்: அமரர் ரவிராஜ் ஏன் தமிழ் அரசியல் வாதிகளிடையே தனித்துவமாக இருந்தார்? அதனாலேயே சிங்களப் புலனாய்வாளர்களால் கொல்லப் பட்டார்? இன்று ஏன் சாணக்கியன் அதே போல சிறப்பானவராக  கருதப்படுகிறார்?

இதற்கு விடை தேடினாலே, இந்தப் பிடிவாதமான மொழி ஒறுப்பு பிற்போக்கானது என்று புரிந்து விடும்! மொழிகளைப் பொறுத்த வரையில் more the merrier என்பதே நிஜம்!

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Justin said:

சிறப்பான இரு உதாரணங்கள்👏🏾.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, tulpen said:

ஒப்பீட்டு ரீதியில் மக்கள் தொகையில் சிங்களம் தெரிந்த தமிழரின் சதவீத்த்தை விட தமிழ் தெரிந்த சிங்களவரின் சதவீதம் அதிகம் என்பது எனது கணிப்பு.  

நான் இலங்கையில் நின்ற காலங்களில் எங்கள் குழுவிற்கு ஏற்பட்ட அனுபவத்தில் இதே முடிவுக்கு தான் வந்தோம்.

5 hours ago, goshan_che said:

தமிழ் பகுதிகளில் அரச கருமங்கள் தமிழில் நடக்க வேண்டும் என்பது எமது நியாயமான கோரிக்கை, இப்போ இலங்கை சட்டமும் அப்படித்தான் கூறுகிறது. ஆனால் அந்த கோரிக்கையின் நியாயத்தை இப்படி தமிழர் மட்டும் வாசிக்கும் உதயனில் எழுதி, யாழில் தமிழர் இடையே விவாதிப்பதிலும் பார்க்க, இதை சிங்கள ஊடக பரப்பில், சிங்களத்தில் விவாதித்தால் அதிக நன்மை கிடைக்க கூடும்.

இனி ஆயுதத்துக்கான காலம் இல்லை, அறிவுக்கான காலம் என்று தனியே வாய்சவாடல் விட்டு மட்டும் பயனில்லை, அவர்கள் மொழியையே எமக்கான ஆயுதமாக்கும் விவேகமும் வேண்டும்.

அதற்காக தமிழை கைவிட வேண்டியதில்லை. எமது மொழிக்கான உரிமையை நிலைநாட்டியபடி, போராடியபடி, அவர்கள் மொழியை கற்று அதன்மூலம் எமது மொழி உரிமையை மேலும் திடப்படுத்தலாம்.

பொன்னான அறிவுரை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
21 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

உங்களுக்கு வரும் அதே இடத்தில் இருந்துதான் எனக்கும் காசு வருகின்றது. 😄

எனக்கு கட்டுக்கட்டாய் வருது. உங்களுக்கு வெறும் சில்லறை தானே...😁

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.