Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

இந்திய இராணுவத்தினரால் படுகொலையானவர்களின் நினைவேந்தல்

adminOctober 21, 2024

 யாழ்.போதனா வைத்தியசாலையினுள் அத்துமீறி உள்நுழைந்த இந்திய இராணுவத்தினரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட 68 பேரின் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்.போதனா வைத்திய சாலையில்  அனுஸ்டிக்கப்பட்டது.

கடந்த 1987 ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21ம், 22ம், திகதிகளில் யாழ். போதனா வைத்தியசாலைக்குள் அத்து மீறி உள் நுழைந்த இந்திய அமைதிப்படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர்.  அத்தாக்குதல் சம்பவத்தில் வைத்தியசாலையில் கடமையில் இருந்த மூன்று மருத்துவர்கள், இரண்டு தாதியர்கள், மேற்பார்வையாளர் உள்ளிட்ட 21 மருத்துவ சேவையாளர்கள் மற்றும், சிகிச்சை பெற்றுவந்த 47 நோயாளர்கள் என 68 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

43-1-800x450.jpg43-2-800x450.jpg43-3-800x450.jpg43-4-800x450.jpg43-5-800x450.jpg43-6-800x450.jpg43-8-800x450.jpg
 
 
 
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழ். போதனா வைத்தியசாலையில் படுகொலை செய்யப்பட்ட 68 பேரின் நினைவேந்தல் அனுஷ்டிப்பு

image

யாழ். போதனா வைத்தியசாலையினுள் அத்துமீறி உள்நுழைந்த இந்திய இராணுவத்தினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட 68 பேரின் நினைவேந்தல் இன்றைய தினம் திங்கட்கிழமை (21) யாழ்.போதனா வைத்தியசாலையில்  அனுஷ்டிக்கப்பட்டது. 

கடந்த 1987ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21, 22ஆம் திகதிகளில் யாழ். போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய அமைதிப்படையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். 

அத்தாக்குதல் சம்பவத்தில் வைத்தியசாலையில் கடமையில் ஈடுபட்டிருந்த மூன்று மருத்துவர்கள், இரண்டு தாதியர்கள், மேற்பார்வையாளர் உட்பட 21 மருத்துவ சேவையாளர்கள் மற்றும் சிகிச்சை பெற்றுவந்த 47 நோயாளர்கள் என 68 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

43__4_.jpg

43__3_.jpg

43__10_.jpg

43__9_.jpg

43__8_.jpg

43__6_.jpg

43__7_.jpg

43__5_.jpg

 

43__2_.jpg

https://www.virakesari.lk/article/196770

  • Thanks 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்திய உயர்ஸ்தானிகராலயப் பிரதிநிதிகளையும் அழைத்திருக்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இணைப்புக்கு நன்றி ஏராளன்.

அமைதிப்படையாக வந்து சர்வதேச சட்டங்களை மீறி ஒரு போதனா வைத்தியசாலைக்குள் இறந்த வைத்தியர்கள் தாதியர்கள் நோயாளிகள் உட்பட பலருக்கும்

ஆழ்ந்த நினைவஞ்சலிகள்.

Edited by ஈழப்பிரியன்
Posted

காந்தி தேசத்தால் கொலை செய்யப்பட்ட குடும்பத்தாருக்கு நினைவஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆழ்ந்த நினைவஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆழ்ந்த நினைவஞ்சலிகள்.

Posted

இந்த போர்க் குற்றங்களில் ஈடுபட்ட எந்த ஒரு இந்திய இராணுவத்தினனோ அல்லது இதை செய்ய ஏவிவிட்டவர்களோ இன்றுவரைக்கும் தண்டிக்கப்படவுமில்லை, இனி தண்டனைக்குள்ளாகப் போவதும் இல்லை.

ஆனால் இந்த படுகொலைகளை நியாயப்படுத்தியும், கண்டும் காணாமல் இருந்த மண்டையன் குழுத் தலைவன் சுரேஸ் பிரேதசந்திரன் போன்றோர், இன்றும் தமிழ் தேசிய போராளிகளாக வலம் வருவதை கண்டு மக்கள் இனியாவது ஏமாறாமல் இருக்க வேண்டும்.

  • Like 5
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
4 hours ago, Kapithan said:

இந்திய உயர்ஸ்தானிகராலயப் பிரதிநிதிகளையும் அழைத்திருக்கலாம். 

உங்களது இதே எண்ணம் எனக்கும் காலையில்  இருந்தது. எழுத நேரம் கிடைக்கவில்லை.

சமீபத்தில் திலீபனின் நினைவுநாள் வந்தது. யாழ்ப்பாணத்தில் இருக்கும் இந்திய (உப)தூதராலயம் கண்டு கொள்ளவேயில்லை. சில தினங்கள் கழித்து வந்த காந்தி நினைவு தினம் பொது மக்களோடு யாழ்ப்பாணத்தில் நினைவு  கூறப்பட்டிருக்கிறது.  

‘ திராவிடம்’ என்ற சொல்லைச் சேர்த்துப் பாடவில்லை என்பதற்காக  தமிழகத்தில் ஆளுனரிடம் சண்டைக்குப் போகிறார்கள். நாங்கள் எங்களுக்குள்ளேயே குத்தி முறிந்து கொண்டிருக்கின்றோம். குறைந்த பட்சம் தூதராலயத்துக்கு  முன் படங்களை வைத்தாவது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருக்கலாம். 

சிறிய நாடு. அதற்கு இரண்டு இந்தியத் தூதராலயம்.

Edited by Kavi arunasalam
எழுத்துப் பிழை திருத்தம்
  • Like 1
  • Thanks 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆழ்ந்த கண்ணீரஞ்சலிகள்  🙏ஒம் சாந்தி 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, ஈழப்பிரியன் said:

இணைப்புக்கு நன்றி ஏராளன்.

அமைதிப்படையாக வந்து சர்வதேச சட்டங்களை மீறி ஒரு போதனா வைத்தியசாலைக்குள் இறந்த வைத்தியர்கள் தாதியர்கள் நோயாளிகள் உட்பட பலருக்கும்

ஆழ்ந்த நினைவஞ்சலிகள்.

கிருபன் அண்ணாவே இந்தப் பாராட்டுக்கு உரித்தானவர், நான் அவர் இணைத்த பின்பே செய்தியை இணைத்தேன் அண்ணை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 minutes ago, Kavi arunasalam said:

நாடு. அதற்கு இரண்டு இந்தியத் தூதராலயம்.

ஒன்று தமிழருக்கு மற்றது 

சிங்களவருக்கு   😀

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆழ்ந்த கண்ணீரஞ்சலிகள்  🙏ஒம் சாந்தி

31 minutes ago, Kavi arunasalam said:

சிறிய நாடு. அதற்கு இரண்டு இந்தியத் தூதராலயம்.

அது இந்திய  துதரகம் அல்ல இந்திய உளவாளிகளின் காரியாலயம் யாழில் இருப்பது .

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்தியப் பயங்கரவாதிகளால் படுகொலைசெய்யப்பட்ட அனைத்து மக்களுக்கும் கண்ணீர் வணக்கம்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, ஏராளன் said:

கிருபன் அண்ணாவே இந்தப் பாராட்டுக்கு உரித்தானவர், நான் அவர் இணைத்த பின்பே செய்தியை இணைத்தேன் அண்ணை.

காசா பணமா அவருக்கும் ஒரு நன்றியை சொன்னால் போச்சு.

@கிருபன்  இணைப்புக்கு நன்றி.

8 hours ago, Kandiah57 said:

ஒன்று தமிழருக்கு மற்றது 

சிங்களவருக்கு   😀

ஒன்று தமிழரைக் குழுப்புவதற்கு

மற்றது சிங்களவருடன் கொண்டாடுவதற்கு.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, Kavi arunasalam said:

உங்களது இதே எண்ணம் எனக்கும் காலையில்  இருந்தது. எழுத நேரம் கிடைக்கவில்லை.

சமீபத்தில் திலீபனின் நினைவுநாள் வந்தது. யாழ்ப்பாணத்தில் இருக்கும் இந்திய (உப)தூதராலயம் கண்டு கொள்ளவேயில்லை. சில தினங்கள் கழித்து வந்த காந்தி நினைவு தினம் பொது மக்களோடு யாழ்ப்பாணத்தில் நினைவு  கூறப்பட்டிருக்கிறது.  

‘ திராவிடம்’ என்ற சொல்லைச் சேர்த்துப் பாடவில்லை என்பதற்காக  தமிழகத்தில் ஆளுனரிடம் சண்டைக்குப் போகிறார்கள். நாங்கள் எங்களுக்குள்ளேயே குத்தி முறிந்து கொண்டிருக்கின்றோம். குறைந்த பட்சம் தூதராலயத்துக்கு  முன் படங்களை வைத்தாவது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருக்கலாம். 

சிறிய நாடு. அதற்கு இரண்டு இந்தியத் தூதராலயம்.

மலையகத்திலும் ஒன்று உள்ளது…

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, நிழலி said:

இந்த போர்க் குற்றங்களில் ஈடுபட்ட எந்த ஒரு இந்திய இராணுவத்தினனோ அல்லது இதை செய்ய ஏவிவிட்டவர்களோ இன்றுவரைக்கும் தண்டிக்கப்படவுமில்லை, இனி தண்டனைக்குள்ளாகப் போவதும் இல்லை.

ஆனால் இந்த படுகொலைகளை நியாயப்படுத்தியும், கண்டும் காணாமல் இருந்த மண்டையன் குழுத் தலைவன் சுரேஸ் பிரேதசந்திரன் போன்றோர், இன்றும் தமிழ் தேசிய போராளிகளாக வலம் வருவதை கண்டு மக்கள் இனியாவது ஏமாறாமல் இருக்க வேண்டும்.

உங்களுக்கு தெரிந்த விடயம் புலிகளுக்கு தெரியவில்லை

IMG-2807.png

 

 

Posted
15 minutes ago, MEERA said:

உங்களுக்கு தெரிந்த விடயம் புலிகளுக்கு தெரியவில்லை

IMG-2807.png

 

 

புலிகள் வரவேற்றதால், தலைவர் வரவேற்றதால் மட்டும் அவர் புனிதராகி விடமாட்டார்.

ஏற்கனவே யாழில் எழுதியது தான். தலைவர் மண்டையன் குழு தலைவனுக்கு அருகில் நின்ற  கொடுமையை கூட பார்த்தனாங்கள் என்று.

  • Like 1
Posted

யாழ் ஆஸ்பத்திரி படுகொலைகள்

1987ம் ஆண்டு தீபாவளியை யாழ்ப்பாண மக்கள் மறக்கமாட்டார்கள், மறக்கவும் முடியாது. Operation Pawan (Pawan என்றால் ஹிந்தியில் காற்று) என்ற இராணுவ நடவடிக்கை, அமைதி காக்க வந்த இந்திய படைகளால் ஓக்டோபர் 9ம் திகதி ஆரம்பிக்கப்படுகிறது. 

சில மாதங்களிற்கு முன்னர் புது டில்லியில், “If you defy us, We can finish you before I put out this smoke.” என்று தனது சுருட்டை புகைத்தபடி, தலைவர் பிரபாகரனை மிரட்டிய இந்தியாவின் உயர்ஸ்தானிகர் டிக்ஸிட்டின் எண்ணத்தை பிரதிபலிப்பதாக, ஒரு காற்றை போல் துரிதமாக யாழ்ப்பாணத்தை கைப்பற்றும் குறிக்கோளுடன் Operation Pawan முன்னெடுக்கப்படுகிறது.

48 மணித்தியாலங்களுக்குள் யாழ்ப்பாணத்தை கைப்பற்றும் திட்டத்துடன் முன்னெடுக்கப்பட்ட Operation Pawan நடவடிக்கை புலிகளின் பலத்த எதிர்ப்பை முகம்கொள்கிறது. பல்கலைகழகம், கோட்டை, கோண்டாவில் என்று பல முனைகளில் பலமான இழப்பை இந்திய இராணுவம் சந்திக்கிறது. 

பலாலி, நாவற்குழி, யாழ் கோட்டை முனைகளில் இந்திய இராணுவம் உலங்குவானூர்திகளின் சூட்டாதரவுடன் முன்னேற முயற்சிக்கிறார்கள், கடும் சண்டையில் யாழ் மண் அதிர்கிறது. பல்கலைகழக வளாகத்தில் உலங்குவானூர்திகளில் வந்திறங்கிய சிறப்பு பரா அதிரடிப்படைகளால் புலிகளின் தலைமையை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட படை நடவடிக்கையை புலிகள் தீரத்துடன் முறியடிக்கிறார்கள்.

ஓக்டோபர் 21, 1987 தீபாவளி நாள். அன்று காலை கோண்டாவில் பகுதியில் நடந்த சண்டையில் இரண்டு இந்திய தாங்கிகள் அழிக்கப்பட, புலிகள் தரப்பில் லெப்.கேணல் சந்தோஷம் வித்தாகிறார். கோட்டையில் இருந்து முன்னேறிய இந்தியப் படை சாந்தி தியேட்டரை அண்மித்த பகுதிகளில் நிலைகொள்கிறது. 

அன்று காலையிலிருந்து ஆஸ்பத்திரி பகுதியை நோக்கி ஷெல் வீச்சில் இந்திய இராணுவம் ஈடுபடுகிறது. ஒரு ஷெல் 8ம் இலக்க வார்ட்டில் விழுந்து 7 நோயாளர்கள் பலியாகினர். பிற்பகல் நான்கு மணியளவில் இந்திய இராணுவம் ஆஸ்பத்திரியின் முன் வாயிலூடாக கண்டபடி சுட்டுக்கொண்டு உள் நுழைகிறது. 

8ம் இலக்க வார்ட்டிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு Radiology அறையில் அடைக்கலம் புகுந்திருந்த நோயாளிகளும் ஊழியர்களும் இந்திய இராணுவத்தின் கொலை தாண்டவத்திற்கு முதற் பலியாகிறார்கள்.

அசுரனை அழித்த திருநாளில், இந்திய இராணுவ அசுரர்களின் கோர தாண்டவம் யாழ்ப்பாணத்தில் அரங்கேறுகிறது. தண்ணி குடிக்க எழும்பினவன், காயத்தால் முனகினவன் என்று சத்தம் வந்த பக்கம் எல்லாம் போட்டு தள்ளுகிறது அமைதி காக்க வந்த இந்தியப் படை. ஒரு அறையில் இருமல் சத்தம் கேட்க, இந்திய ஆமிகாரன் கிரனேட்டை கிளிப்பை கழற்றிவிட்டு இருமிய நோயாளி பக்கம் வீச, பக்கத்தில் படுத்திருந்த ஆம்புலன்ஸ் சாரதி உட்பட சிலர் பலியாகிறார்கள். 

இதேவேளை யாழ்ப்பாணத்தின் புறநகர் பகுதிகள் ஷெல் சத்தத்தால் அதிர்கின்றன. தீபாவளி பண்டிகைக்கு இந்தியன் ஆமி வெடி கொளுத்தி கொண்டாடுறாங்கள் என்று அவலத்திலும் சனம் நக்கலடித்தது. இலங்கை இராணுவத்தின் ஒபரேஷன் லிபரேஷன் காலத்தில் வெட்டிய பங்கர்கள் சமாதானம் வந்திட்டுது என்று நினைத்து சனம் மூடிவிட, ஊரில் இருந்த தேவாலயங்கள், கோயில்கள், பாடசாலைகள், மேல்மாடி வீடுகள் என்பன ஷெல் வீச்சிலிருந்து காக்கும் அரண்களாகின்றன. 

விண் கூவிக்கொண்டு பறக்கும் ஷெல்கள் எங்கேயிருந்து வருகின்றன எங்கே விழுகின்றன என்று புரியாமல் யாழ்ப்பாணம் கதிகலங்குகிறது.  ஷெல் குத்தும் சத்தத்தை வைத்து எத்தனை ஷெல்கள் லோட் பண்ணுறாங்கள் என்று எண்ணுவது, பிறகு விழுந்து வெடிக்கும் சத்தத்தை எண்ணி அந்த ரவுண்ட் முடிந்து விட்டது என்று நிம்மதியடைவது, கர்த்தரையும் முருகனையும் துணைக்கழைப்பது, கந்தசஷ்டியும் செபமும் பெலக்க சொல்வது, என்று தீபாவளி இரவை யாழ்ப்பாணம் உயிரைக் கையில் பிடித்தபடி கழிக்கிறது. 

யாழ் ஆஸ்பத்திரியில் பிணங்களுக்கு அடியில் படுத்தும், பிணம் போல் நடித்தும் உயிர் பிழைக்கிறார்கள் நோயாளிகளும் மருத்துவர்களும் ஊழியர்களும். அடுத்த நாள் காலை 8.30 மணியளவில் காயக்காரரை காப்பாற்றும் உன்னத நோக்கோடு" We surrender, we are innocent doctors and nurses" என்று ஆங்கிலத்தில் கத்தியபடி கைகளை உயர்த்திக் கொண்டு மூன்று தாதிமார்களுடன் வெளியில் வந்த பிரபல மருத்துவர் சிவபாதசுந்தரம், இந்திய இராணுவத்தின் துப்பாக்கிக்கு இரையாகிறார். 

ஒக்டோபர் 22ம் திகதி முற்பகல் வேளை இந்திய இராணுவத்தின் வெறியாட்டம் ஒரு இந்திய இராணுவ உயரதிகாரியின் வரவுடன் முடிவிற்கு வர, கையில் ஸ்டெதஸ்கோப்பை பிடித்தபடி மருத்துவர் கணேஷரட்னத்தின் உயிரற்ற உடலோடு 70 பேரின் உடல்கள் மீட்கப்படுகின்றன. 

ஈழமுரசும் முரசொலியும் குண்டுவைத்து தகர்க்கப்பட்டு, உதயன் முடக்கப்பட்ட சூழ்நிலையில், பல உடலங்கள் உறவினர்களிற்கு கையளிக்கப்படாமல் மரண விசாரணையும் நடாத்தப்படாமல் எரியூட்டப்படுகின்றன. 

புலிகளிற்கும் இந்திய படைகளிற்கும் இடையில் நடந்த மோதலில் சிக்குண்டு பொதுமக்கள் இறந்ததாக இந்திய அமைதி படையின் தளபதி திபீந்தர் சிங் அறிக்கை விட்டார். இதைப்போன்ற படுகொலைகளுக்கு பின்னர் இந்திய அமைதி காக்கும் படையான IPKFக்கு, சனம் Innocent People Killing Force என்று பெயரிட்டார்கள். இதுவும் Crime against Humanity தான். 

இலங்கை மற்றும் இந்தியப் படைகளல் இதைப் போன்ற பல படுகொலைகளிற்கு உள்ளாகியும், அன்றிலிருந்து இன்றுவரை கேட்க நாதியற்ற இனமாகவே நாங்கள் பயணிக்கிறோம்.

ஜெனிவாவை, ஏன் தமிழகத்தையே, எட்டாத இந்த ஆஸ்பத்திரி படுகொலையை நாங்கள் மட்டும் நினைவு கூற, இன்று வரை நீதிக்காக நியாயம் காத்திருக்கிறது.  

அந்த நினைவு நாள், இந்தப படுகொலை நாள் என்று வருஷம் முழுக்க விளக்கு கொளுத்தவும் அஞ்சலி செலுத்தவும் எங்களுக்கு ஏதாவது ஒன்று இருக்கும். விளக்கு கொளுத்தி கொளுத்தியே அழுது ஒப்பாரி வைத்துக் புலம்பிக் கொண்டிருக்கும் எங்கள் இனத்திற்கு நலமான எதிர்காலம் தான் துலங்குவது எப்போது ?

- Jude Prakash 

  • Like 1
  • Thanks 2
  • Sad 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

காந்தி தேசத்தால் கொலை செய்யப்பட்ட குடும்பத்தாருக்கு நினைவஞ்சலிகள்

11 hours ago, நிழலி said:

இந்த போர்க் குற்றங்களில் ஈடுபட்ட எந்த ஒரு இந்திய இராணுவத்தினனோ அல்லது இதை செய்ய ஏவிவிட்டவர்களோ இன்றுவரைக்கும் தண்டிக்கப்படவுமில்லை, இனி தண்டனைக்குள்ளாகப் போவதும் இல்லை.

ஆனால் இந்த படுகொலைகளை நியாயப்படுத்தியும், கண்டும் காணாமல் இருந்த மண்டையன் குழுத் தலைவன் சுரேஸ் பிரேதசந்திரன் போன்றோர், இன்றும் தமிழ் தேசிய போராளிகளாக வலம் வருவதை கண்டு மக்கள் இனியாவது ஏமாறாமல் இருக்க வேண்டும்.

இனபடுகொலை செய்த ஜெ.வி.பி யினர்,சிறிலங்கா இராணுவத்துடனே நாம் கை கோர்த்து பயனிக்க தாயார் ...பிறகு ஏன் எம்மவரை ஒதுக்க வேணும்...

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்திய படையால் கொல்லப்பட்ட அனைத்து மக்களுக்கும் அஞ்சலிகள், பொதுவாக இந்திய இராணுவ காலத்திற்கு முன்னர், யாழ் பாணியர்கள் பெருமளவில் சிங்கள இராணுவத்தினால் ( குறிப்பிட்ட யாழ் பிரதேசங்களில் மட்டும் பெருமளவான படுகொலைகள் நடாத்தப்பட மற்ற பகுதிகளுக்கு சிங்கள இராணுவம் நுழைய முடியாத நிலை காணப்பட்டதனால்) பாதிப்பிற்குள்ளாகமல் இருந்த நிலையே காணப்பட்ட்டது, ஆனால் கிழக்கு மாகாண தமிழ் மக்கள் சிங்கள இராணுவம் சிங்கள் ஊர்காவல் படை, இஸ்லாமிய ஊர்காவல் படை (ஜிகாத்) இனரால் மோசமாக பாதிக்கப்பட்ட நிலை காணப்பட்டிருந்தது, அந்த கால கட்டத்தில் கிழக்கு மாகாண நபர்கள் கூறுவதனடிப்படையில் இந்திய இராணுவ கால கட்டமே அவர்களின் பொற்காலம் என கூறுவார்கள்.

தொடர்ச்சியாக பல அழிவுகளை சந்தித்த கிழக்கு மாகாணத்தமிழ் மக்களுக்கு இந்திய இராணுவம் தனது ஆதரவினை வழங்கியிருந்தாக கூறினார்கள், சம்பந்தப்பட்ட மற்ற தரப்புக்களை இந்திய இராணுவம் அடக்கி வைத்ததாக கூறுவார்கள், 

சரத் பொன்ஸ்சேகாவிற்கே அவரால் பாதிக்கப்பட்ட மக்கள் வாக்களித்துள்ளார்கள், தமிழ் மக்களை அழித்த அழிக்கின்ற சிங்கள இனவாத அரசுடனேயே  இணைந்து பயணிக்க தமிழ் மக்கள் தயாராக உள்ளார்கள் கடந்த கால கசப்புணர்வுகளை மறந்து,  இந்தியா கொள்கை வகுப்பினால் ஏற்பட்ட பாதிப்பினால் நிகழ்ந்த துன்பியல் நிகழ்வுகளை கடந்து தமிழ் மக்கள் இந்தியாவுடன் இணைந்து பயணிப்பதற்கு இந்தியா தமிழ் மக்க்களிற்கு வட கிழக்கு இணைந்த காணி, நிதி, காவல் அதிகாரங்கள் கொண்ட ஒரு பாதுகாப்பான சூழ்நிலையினை உருவாக்கினால் அது அப்பிராந்தியத்திலுள்ள அனைத்து மக்களுக்கும் மட்டுமல்ல ஒட்டு மொத்த இலங்கைக்கும் ஒரு நன்மையினை விளைவிக்கும்.

இது இந்து சமுத்திர பிராந்தியத்தில் போர் பதற்றநிலையினை தணிக்கும் நடவடிக்கையாக அமையும்.

அதனால் இந்த இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் உள்ள தவறுகள் களையப்பட்டு ஒரு புதிய சிறந்த ஒப்பந்தம் உருவாக்கப்பட வேண்டும், இலங்கை அரசினை கையாழ தற்போதய நிலையில் இந்தியாவால் மட்டுமே முடியும் ஆனால் அதே வேளை பிராந்திய வல்லரசான சீனாவினையும் தமிழ் மக்கள் அனுசரித்து நடப்பதுடன் மேற்கின் ஆதரவையும் பெற முயற்சிக்க வேண்டும்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதை மறந்து இந்தியா தமிழர்களுக்கு தீர்வைப் பெற்றுத்தரும் என்று இன்னமும் நம்பும் ஏமாளித்தமிழர்களை என்னவென்று சொல்வது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, MEERA said:

உங்களுக்கு தெரிந்த விடயம் புலிகளுக்கு தெரியவில்லை

அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலுக்கு அப்புறம் உலகின் அனைத்து அரச அடக்குமுறைக்கு எதிரான  போராட்ட இயக்கங்களிற்கும் பயங்கரவாத இயக்கங்கள் என்றும் அவை அழிக்கப்படவேண்டியவை என்றும் முத்திரை குத்தி அமெரிக்கா வாள் தூக்கியதால் உலகின் அரச பயங்கரவாதத்துக்கு எதிராக போர் புரிந்த அனைத்து இயக்கங்களும் பேரழிவின் விளிம்புக்கு அப்போது வந்தன.

போராட்ட சக்திகளுக்கெதிரான உலகின் அக்கால போக்கை சமாளிக்க உருவாக்கப்பட்டதே தேசிய கூட்டமைப்பு.  அதில் புலிகளாலும் மக்களாலும் வெறுக்கப்பட்ட / ஒதுக்கப்பட்ட முன்னாள் ஆயுத அரசியல் குழுக்கள் இயக்கங்கள் இருந்தன.

அவர்கள் எவரையும் மனதார எமது போராட்ட சக்திகள் என்று மக்களோ புலிகளோ ஏற்றுக்கொண்டதில்லை, அப்படி ஏற்றுக்கொண்டிருந்தால் புலிகள் அரசு பேச்சு வார்த்தையில் சர்வதேச மட்டத்திலிருந்து உள்நாடுவரை அவர்களும் அடக்கப்பட்டிருப்பார்கள்.

ஒருதடவை புலிகள் தேசிய கூட்டமைப்பு சந்திப்பு கிளிநொச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தபோது கஜேந்திரன் தலைவர் முன்னாடியே பிரேமச்சந்திரனின் பிரசன்னத்தை விமர்சித்திருந்தார் , அதற்கு அனைவரையும் அணைத்துபோவது காலத்தின் கட்டாயம் என்ற பாணியில் தலைவர் அவரை அமைதி படுத்தியிருந்தார்.

ஆம் அது உலகத்துக்கு ஒப்புக்கு காண்பிக்கப்பட்ட ஒரு ஒருங்கிணைப்பு, ஒரு காலபகுதியில் தமிழர்களுக்கும் புலிகளுக்கும் எதிராக நின்றவர்களை தலைவர் மறந்திருப்பாரென்று நாம் எண்ணிக்கொண்டால் அது ஒரு தவறான வரலாற்று தொகுப்பு.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.