Jump to content

திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?  

51 members have voted

You do not have permission to vote in this poll, or see the poll results. Please sign in or register to vote in this poll.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, goshan_che said:

அப்படியாயின் சிறிதரன் பாராளுமன்ற பதவியை துறக்க, அடுத்து கூடிய வாக்கு எடுத்த சுமன் அந்த இடத்தை நிரப்பலாம்.

இது நல்ல தெரிவு.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
23 minutes ago, goshan_che said:

அப்படியாயின் சிறிதரன் பாராளுமன்ற பதவியை துறக்க, அடுத்து கூடிய வாக்கு எடுத்த சுமன் அந்த இடத்தை நிரப்பலாம்.

உங்களுக்கு நக்கல் நையாண்டி கூட்டிப் போய்ச்சுது?🤣 அந்தாளே இப்ப எதிர்கட்சி தலைவர் கனவில் இருக்கும் 

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, விசுகு said:

உங்களுக்கு நக்கல் நையாண்டி கூட்டிப் போய்ச்சுது?🤣 அந்தாளே இப்ப எதிர்கட்சி தலைவர் கனவில் இருக்கும் 

ஆமா ..சம்பந்து அய்யாவின் வீடும் இன்னமும் கொடுக்கவில்லை...கூட்டிக் கழித்தால் சரி..

  • Haha 1
Posted

ஒரு படித்த சமூகத்தில் யாப்பை மாத்தக்கூடிய ஒரே ஒரு ஆள் சுமந்திரன் என்றால் பாருங்கோவன்.

சுமந்திரன் ஒரு கவரிமான். மக்களால் தெரிவு செய்யப்படாமல் பாராளுமன்றத்தில் காலடி வைக்க மாட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 minutes ago, nunavilan said:

ஒரு படித்த சமூகத்தில் யாப்பை மாத்தக்கூடிய ஒரே ஒரு ஆள் சுமந்திரன் என்றால் பாருங்கோவன்.

சுமந்திரன் ஒரு கவரிமான். மக்களால் தெரிவு செய்யப்படாமல் பாராளுமன்றத்தில் காலடி வைக்க மாட்டார்.

சரியா சொன்னீங்கள் போங்கோ! 

கொப்பேகடுவ வழக்கு புகழ் கஜேந்தி அம்மான் என்ற புத்திசீவி இருக்கிறார் எல்லோ!😂

Posted
8 minutes ago, வாலி said:

சரியா சொன்னீங்கள் போங்கோ! 

கொப்பேகடுவ வழக்கு புகழ் கஜேந்தி அம்மான் என்ற புத்திசீவி இருக்கிறார் எல்லோ!😂

அவர்  வழக்குகளுக்கு செல்வதில்லை என்று கேள்வி.

Posted

தேசிய பட்டியல் தொடர்பில் சுமந்திரன் அணி விசேட அறிவிப்பு

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, கிருபன் said:

சுமந்திரன் இல்லாமல் எப்படி யாப்பை தமிழர்களுக்கு தீர்வு தரத்தக்கதாக மாத்திறதாம்?

அர்ச்சுனாவை நம்பி🙈 அரசியலமைப்பை மாத்தமுடியுமோ?

உண்மையில் அரசியல் சாசன மாற்ற விவகாரங்களில் (Constitutional Reform Matters) கட்சிக்கு கேந்திர (Strategic) மற்றும் நுட்ப (Technical) வழிமுறைகல் தொடர்பாக ஆலோசனைகள் வழங்க ஒரு நிபுணர் குழுமம் தேவை (Commitee of Constitutional Experts). இந்த குழுமத்தில் சுமந்த்ரனுடன் அரசியல் சாசன விவகாரங்களில் தற்கால நடைமுறைகளை (Contemporary thinking and approaches) சட்டரீதியாகவும் ஆராய்ச்சிரீதியாகவும் அணுகும் நிபுணர்கள் பங்குபெறவேண்டும். எங்களுது பல்கலைக்கழகத்தில்  இருந்து இந்திய மற்றும் சிங்கப்பூர், தென்னாபிரிக்கா போன்ற நாடுகளில் வாழும் தமிழர் மற்றும் தமிழர் அல்லாதோர் (External Advisors) இதில் பங்குபெறலாம். வழமையாக இது தான் நடைமுறையில் சர்வேதேச ரீதியாக பின்பற்றப்படுகின்றன வளமை. ஏனென்றால் அரசிய சாசனம் திருத்தப்படுத்தல் அல்லது மீள்வரைத்தல் என்பது உள்ளக சட்டம் மட்டும் சம்பந்தமானது அல்ல.அது பரந்து பட்ட விவகாரங்களை உள்வாங்கி பின்னர் சட்ட ரீதியாக பரணமிக்கின்ற ஒன்று. இவாறான பரந்துபட்ட அறிவு, அணுகுமுறைகள் பற்றிய தெளிவு தனி ஒருவரிடம் இருக்கும் என்று தமிழர் எதிர்பார்ப்பது சரியல்ல. 

துர்பார்க்கியமாக தமிழர் தனி ஒருவரை நம்பி (One man show) அல்லது தனி ஒரு தூதர் (One man saviour syndrome) தங்களை மீட்பார் என்று பண்பியல் ரீதியாக தங்களை வளர்த்து வைத்திருக்கிறார்கள். பலருடன் கலந்து ஆலோசித்து, கருத்துக்களை உள்வாங்கி தங்கள் கர்வம் (ego) சுயநலத்தை (self interest) பின்தள்ளி ஒரு குழுவாக வெற்றிகளை (collective success) அடையும் மனப்பான்மை இன்னும் வேண்டிய அளவு வரவில்லை. இந்த காரணத்தால் தகுதி உள்ளவர்கள், நிபுணத்துவம் உள்ளவர்கள், ஆற்றல் மிக்கவர்கள் தள்ளி நிக்கின்ற நிலைமை.  எவ்வளவு புலம் பெயர்த்து மற்றைய சமூகளின் மத்தியில் வாழ்ந்தாலும் அவர்கள் இந்த விவகாரங்களை நல்ல படியாக கையாளும் போது  நாங்கள் அந்த படிப்பினைகளை உள்வாங்குவதில்லை. மாறாக எங்களுடைய வரலாற்றில் மூழ்கி கிடப்பதை தவிர. ஆனால் காலம் கடந்துவிடவில்லை. மாறாக ஒரு அறிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. மாற்றம் வேண்டும் என்று மக்கள் விரும்பியிருக்கிறார்கள். இதனை செவிமடுகின்ற ஒரு  அரசியல் கட்சியாக தமிழர் தரப்பு தாங்களாகவே முன்வந்து ஒரு நிபுணர் குழுமத்தை உருவாக்க அழைப்பு விடுக்கலாம். அதில் சுமந்திரனை அவரின் சட்ட திறமைகளை உள்வாங்க இணைக்கலாம். எவ்வாறு முன்னாள் பிரித்தானிய தொழிற்கட்சி தன்னை புதிய தொழில்கட்சியாக (New Labor) மாற்றியமைத்து ஆட்சியை கைப்பற்றியதோ அதுபோல மக்களின் தீர்ப்பை உள்வாங்கி தங்களை மாற்றும் பண்பு தேவை. தலைமுறைகள் மாறும்போது (Generational change)  அவர்களது அபிலாசைகள் மாறுகின்றபோது (aspirational changes) அவற்றை உள்வாங்கி புதிய பாதையை வகுப்பது தான் சாமர்த்தியமான அணுகுமுறை. அதை விட்டுவிட்டு தீர்ப்பளித்த மக்கள் மோடர்கள் என்று அடம்பிடித்தால் பின்னடைவுகள் நிரந்தரமாக்குவதுடன் வரலாறு மீண்டும் எங்களை சிக்கலுக்கு உள்ளாக்கும் 

இதை நான் பார்வையாளனாக இருந்து எழுதவில்லை. மாறாக தமிழ் அரசியல், தேச கட்டுமானம், மாகாணசபை மற்றும்  புனர்வாழ்வு பணிகளில் பலவருடங்கள் ஈடுபட்டு அதில் இருந்து ஒதுக்கியவன் என்ற வகையில் எழுதுகிற கருத்து. 

  • Like 9
  • Thanks 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 minutes ago, saravanar said:

துர்பார்க்கியமாக தமிழர் தனி ஒருவரை நம்பி (One man show) அல்லது தனி ஒரு தூதர் (One man saviour syndrome) தங்களை மீட்பார் என்று பண்பியல் ரீதியாக தங்களை வளர்த்து வைத்திருக்கிறார்கள். பலருடன் கலந்து ஆலோசித்து, கருத்துக்களை உள்வாங்கி தங்கள் கர்வம் (ego) சுயநலத்தை (self interest) பின்தள்ளி ஒரு குழுவாக வெற்றிகளை (collective success) அடையும் மனப்பான்மை இன்னும் வேண்டிய அளவு வரவில்லை.

தாய் வழி சமுதாய மக்களுக்கே உரிய பண்பு இது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அய்யாமாரே..முதலில் அனுர அரசாங்கம் அரசியலமைப்பை மாற்றுமா என்பதே முதல் கேள்வி...இரண்டாவது...அப்படி மாற்ற வெளிக்கிட்டலும் பெரும்பான்மை சமூகம் இடம் கொடுக்குமா...மூன்றாவதுபவுத்த பீடங்கள் அனுமதி அளிக்குமா... இந்தக் கேள்விகளுக்கு விடை கண்டபின்...சுமந்திரனை உள்ளே கொண்டுவர யோசிக்கலாம்...இதனை விட..தான் செய்வதுதான் சரி..எனக்குத்தான் எல்லாம் தெரியும் என்று திரியும் ஒருவரை நம்பி ..மீளவும் பொறுப்பை கொடுத்தால் சுமந்திரன் சன்னதம் ஆடமாட்டார் எனபது என்ன நிட்சயம் .. இப்ப்வே வீடு ஒரு தூணில்தான் நிற்கிறது...இதுக்கிள்ளைபோய் பொம்பிளையை காணவில்லை மாப்பிள்ளையை ரெடி பண்ணுகிறியள்... அனுர பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர் என்பதை நினைவில் கொள்க ..கட்சி செயலாளர் ரிஸ்வின் சில்வா ..வடக்கு கிழக்குப் பிரிப்பின் முக்கிய சூத்திரதாரி என்பதயும் கருக்கொள்க....இன்னும் இருக்கு ..பொறுமை புது மருமகளின் நடவடிகையை ..3 மாதம் பொறுத்து இருந்து பார்ப்போம்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இல்லையென வாக்களித்து உள்ளேன், பலரும் சுட்டிக்காட்டியப்படி சுமந்திரனை விடடால் மூத்த குடி தமிழர் தரப்பில் அரசியல் சாசன சட்ட வல்லுநர்கள் யாருமே இல்லையா? . கடந்த கால அனுபவங்களில் இருந்து சுமந்திரன் அவர்கள் தலைமைத்துவத்துக்கு உகந்தவர் அல்ல. தேவையெனில் பாராளுமன்றத்துக்கு வெளியே அரசியல் சாசன சட்டம் சம்பந்தமாக கட்சிக்கு அறிவுரை கூறும் குழுவில் வைத்து இருக்கலாம்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

1. திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?

வினாவில் திருத்தம் வேண்டும். செல்ல வேண்டுமா அல்லது செல்லக்கூடாதா என கேட்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 minutes ago, zuma said:

இல்லையென வாக்களித்து உள்ளேன், பலரும் சுட்டிக்காட்டியப்படி சுமந்திரனை விடடால் மூத்த குடி தமிழர் தரப்பில் அரசியல் சாசன சட்ட வல்லுநர்கள் யாருமே இல்லையா? . கடந்த கால அனுபவங்களில் இருந்து சுமந்திரன் அவர்கள் தலைமைத்துவத்துக்கு உகந்தவர் அல்ல. தேவையெனில் பாராளுமன்றத்துக்கு வெளியே அரசியல் சாசன சட்டம் சம்பந்தமாக கட்சிக்கு அறிவுரை கூறும் குழுவில் வைத்து இருக்கலாம்.

இந்தக் கூற்றுத்தான் உண்மை...நானும் இல்லை என வாக்களிக்கின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கட்டாயம் அவர் தான் தேசியப்பட்டியல் மூலம் செல்வார்
அவருடைய கட்சி தான் இந்த முடிவை எடுக்கும்.
ஆனாலும் அந்தக் கட்சிக்காரர்கள் அல்லது முடிவை எடுத்தவர்கள் யார் என்று மட்டும் கேட்கக்கூடாது
அப்படிக் கேட்டால் சுமிக்கு கேட்ட கோபம் வரும்

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
52 minutes ago, நியாயம் said:

வினாவில் திருத்தம் வேண்டும். செல்ல வேண்டுமா அல்லது செல்லக்கூடாதா என கேட்கலாம்.

சரியான திருத்தம்
இந்த திருத்தத்தின் படி எனது வாக்கு -  சுமந்திரன் பாராளுமன்றம் செல்ல வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அவர் போகமாட்டேன் என்று அறிக்கை விட்டு நடிப்பார் கொஞ்ச நேரத்தின் பின் மத்தியகுழு உத்தரவுக்கு அமைய போவேன் என்பார் அவர் போகணும் அப்பத்தான் சுத்து மாத்து பற்றி அங்குள்ளவர்களுக்கு உண்மை முகம் புரியும்  டக்கிலஸ் ஓட ஓட அடிவாங்கியதை போல் இவரும் வாங்கி கட்டுவார் காரணம் சிங்கள எம்பிமாருக்கே பாதுகாவலர் இல்லை இவருக்கு அனுரா கொடுப்பாரா ?

அனுராவின் உண்மை முகம் வரும் கார்த்திகை மாதம் 27ல் தெரிந்து விடும் .

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, nunavilan said:

அவர்  வழக்குகளுக்கு செல்வதில்லை என்று கேள்வி.

திருத்தம். 

அவரிடம் வழக்குகள் வருவதில்லை🤣.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சட்ட நிபுணர் இவ்வளவு காலமும் எதை சாதித்தார்? அவரது நிபுணத்துவதால் வரைந்த சட்ட வரைபையே நிறைவேற்றுவிக்க முடியாதவர், ரணிலை காப்பாற்ற போய் எதிர்க்கட்சி பதவியை இழந்ததுதான் சாதனை. கால நீட்டிப்பு கொடுத்து இழுபட வழிசமைத்தது, கட்சியை  பிரித்தது தவிர வேறெதை செய்தார் மக்களுக்கு? கடைசி  தமிழ் அரசியல் கைதிகளையாவது விடுதலை செய்வித்தாரா? அவரை அவரே சட்ட நிபுணர் என்று சொல்லி புளகாங்கிதம் அடைய வேண்டியதுதான். அனுரா தான் எடுத்த முடிவை தனது குழுவுடன் ஆலோசித்து செய்வார், இதற்குள் சுமந்திரனை புகுத்தி உள்ளதையும் கெடுத்து விடாமல் இருப்பதே நல்லது. அவரின் தோழர்களுக்கு மாறி மாறி தோள் கொடுத்து ஒன்றுமே செய்ய முடியவில்லை, விரும்பவுமில்லை. அனுராவோ, சுமந்திரனை தூரவே வைக்க விரும்புகிறார். ஒரு அரசியலை தூர நோக்கோடு நடத்தி செல்ல திறமையில்லாதவர், அனுராவோட போய் தன் இருப்பை தக்கவே  உழைப்பார் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, satan said:

அனுரா தான் எடுத்த முடிவை தனது குழுவுடன் ஆலோசித்து செய்வார்

வச்சு என்ற சொல் விடு பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
2 hours ago, alvayan said:

அய்யாமாரே..முதலில் அனுர அரசாங்கம் அரசியலமைப்பை மாற்றுமா என்பதே முதல் கேள்வி...இரண்டாவது...அப்படி மாற்ற வெளிக்கிட்டலும் பெரும்பான்மை சமூகம் இடம் கொடுக்குமா...மூன்றாவதுபவுத்த பீடங்கள் அனுமதி அளிக்குமா... இந்தக் கேள்விகளுக்கு விடை கண்டபின்...சுமந்திரனை உள்ளே கொண்டுவர யோசிக்கலாம்...இதனை விட..தான் செய்வதுதான் சரி..எனக்குத்தான் எல்லாம் தெரியும் என்று திரியும் ஒருவரை நம்பி ..மீளவும் பொறுப்பை கொடுத்தால் சுமந்திரன் சன்னதம் ஆடமாட்டார் எனபது என்ன நிட்சயம் .. இப்ப்வே வீடு ஒரு தூணில்தான் நிற்கிறது...இதுக்கிள்ளைபோய் பொம்பிளையை காணவில்லை மாப்பிள்ளையை ரெடி பண்ணுகிறியள்... அனுர பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர் என்பதை நினைவில் கொள்க ..கட்சி செயலாளர் ரிஸ்வின் சில்வா ..வடக்கு கிழக்குப் பிரிப்பின் முக்கிய சூத்திரதாரி என்பதயும் கருக்கொள்க....இன்னும் இருக்கு ..பொறுமை புது மருமகளின் நடவடிகையை ..3 மாதம் பொறுத்து இருந்து பார்ப்போம்

ஐயனுக்கும் "டுமீல்" கொஸ்ரிக்கும் சுடலை ஞானம் பிறக்குதோ,..😏

44 minutes ago, satan said:

சட்ட நிபுணர் இவ்வளவு காலமும் எதை சாதித்தார்? அவரது நிபுணத்துவதால் வரைந்த சட்ட வரைபையே நிறைவேற்றுவிக்க முடியாதவர், ரணிலை காப்பாற்ற போய் எதிர்க்கட்சி பதவியை இழந்ததுதான் சாதனை. கால நீட்டிப்பு கொடுத்து இழுபட வழிசமைத்தது, கட்சியை  பிரித்தது தவிர வேறெதை செய்தார் மக்களுக்கு? கடைசி  தமிழ் அரசியல் கைதிகளையாவது விடுதலை செய்வித்தாரா? அவரை அவரே சட்ட நிபுணர் என்று சொல்லி புளகாங்கிதம் அடைய வேண்டியதுதான். அனுரா தான் எடுத்த முடிவை தனது குழுவுடன் ஆலோசித்து செய்வார், இதற்குள் சுமந்திரனை புகுத்தி உள்ளதையும் கெடுத்து விடாமல் இருப்பதே நல்லது. அவரின் தோழர்களுக்கு மாறி மாறி தோள் கொடுத்து ஒன்றுமே செய்ய முடியவில்லை, விரும்பவுமில்லை. அனுராவோ, சுமந்திரனை தூரவே வைக்க விரும்புகிறார். ஒரு அரசியலை தூர நோக்கோடு நடத்தி செல்ல திறமையில்லாதவர், அனுராவோட போய் தன் இருப்பை தக்கவே  உழைப்பார் 

பீத்தல் கோவணமும் போச்சே என்று கவலையோ,...😏

1 hour ago, பெருமாள் said:

அவர் போகமாட்டேன் என்று அறிக்கை விட்டு நடிப்பார் கொஞ்ச நேரத்தின் பின் மத்தியகுழு உத்தரவுக்கு அமைய போவேன் என்பார் அவர் போகணும் அப்பத்தான் சுத்து மாத்து பற்றி அங்குள்ளவர்களுக்கு உண்மை முகம் புரியும்  டக்கிலஸ் ஓட ஓட அடிவாங்கியதை போல் இவரும் வாங்கி கட்டுவார் காரணம் சிங்கள எம்பிமாருக்கே பாதுகாவலர் இல்லை இவருக்கு அனுரா கொடுப்பாரா ?

அனுராவின் உண்மை முகம் வரும் கார்த்திகை மாதம் 27ல் தெரிந்து விடும் .

அனுரவின் உண்மை முகம் ஒரு  பக்கம் இருக்கட்டும். யாழ்ப்பாணீசின் உண்மை முகம் என்ன? புலம்பெயர் ஸ் ஸுக்கு வச்சாங்களே ஆப்பு. அதை எடுக்க வழி பாருங்கோ,....

😏

Edited by Kapithan
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, goshan_che said:

வச்சு என்ற சொல் விடு பட்டுள்ளது.

இது எனது கருத்தல்ல, என மறுத்துரைக்கிறேன்.

51 minutes ago, Kapithan said:

பீத்தல் கோவணமும் போச்சே என்று கவலையோ

பொது இடத்தில நாகரிகம் முக்கியம்! பதில் சொல்ல முடியாவிடில் கடந்து செல்லுங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Kapithan said:

ஐயனுக்கும் "டுமீல்" கொஸ்ரிக்கும் சுடலை ஞானம் பிறக்குதோ,..😏

பீத்தல் கோவணமும் போச்சே என்று கவலையோ,...😏

அனுரவின் உண்மை முகம் ஒரு  பக்கம் இருக்கட்டும். யாழ்ப்பாணீசின் உண்மை முகம் என்ன? புலம்பெயர் ஸ் ஸுக்கு வச்சாங்களே ஆப்பு. அதை எடுக்க வழி பாருங்கோ,....

😏

என்ன பொலம்பல் ஜாஸ்தியா இருக்கு. ரிலாஸ் லா!! 
என்சாய் தி எலக்சன் அவுட்டு கம்மு. 

  • Like 1
  • Thanks 1
  • Haha 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
42 minutes ago, satan said:

பொது இடத்தில நாகரிகம் முக்கியம்! பதில் சொல்ல முடியாவிடில் கடந்து செல்லுங்கள். 

அம்மணமாக நிற்கிற பீலிங்கு,..🤣

Guest
This topic is now closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.