Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

BBC தமிழோசை ஆனந்தி சூரியபிரகாசம் அவர்கள் காலமானார்கள் என்ற துயரத் தகவல் கிடைத்துள்ளது.

மரணம் நேற்றிரவு சம்பவித்தது.

திருமதி ஆனந்தி சூரியபிரகாசம் அவர்கள் 21 பெப் 2025 வெள்ளிக்கிழமை அமைதியான முறையில் மீளாத்துயில் கொண்டார்.

ஆனந்தி அக்கா என்று அன்புடன் அழைக்கப்படும் திருமதி சூரியபிரகாசம் தமிழ் ஒளிபரப்பில் ஒரு முன்னோடியாக இருந்தார்.

#பிபிசிதமிழ் சேவையில் இணைந்த முதல் தமிழ்ப் பெண்மணியாக தடைகளைத் தாண்டி பிபிசி தமிழோசியின் இயக்குநராக உயர்ந்தார்.

அவர் டிடிஏ யுகேவின் அறங்காவலராகவும் பணியாற்றினார்.

விடுதலைப் புலிகளின் தலைவருமான வேலுப்பிள்ளை பிரபாகரனை பிபிசியின் சார்பில் முதன் முதலாக சந்தித்து நேர்காணல் செய்ய மூத்த ஊடகவியலாளர் ஆனந்தி சூரியப்பிரகாசம் அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஊடகத்துறையில் குறிப்பாக வானொலித்துறையில் அவர் ஆற்றிய பணி மகத்தானது.

அவரது மறைவுக்கு ஈழநாடு பத்திரிகை தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்ளுகின்றது.

476377659_1023122846510130_8398509347229

480550179_1023122823176799_4289010582979

480698102_1023122893176792_8231891896539

480454976_1023122819843466_6323311725018

May be an image of 1 person and smiling


  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் பிடித்த ஊடகவியலாளர்.

அக்காவுக்கு கண்ணீர் அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

நீங்கள் செய்தவைக்கு எல்லாம் நன்றி அக்கா.

உங்களுக்கு பின் பிபிசி ரோவின் கைக்குள் போய்விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

‘தமிழோசை ஆனந்தி' என தமிழ் உலகம் அறிந்திருக்கும் பி.பி.சி தமிழோசை ஆனந்தி சூரியப்பிரகாசம் அவர்கள் 21/02/2025 அன்று லண்டனில் காலமானார் என அறிவிக்கப்பட்டுள்ளது…

எனக்கு தெரியவே ஒரு தசாப்தமாக ஒலித்த குரல் ஓய்ந்தது.. எனது பதின்மகாலங்களின் புலிகள் இருந்த காலங்களில் மாலைப்பொழுதுகளில் பெரும்பாலான நாட்கள் பிபிசியின் செய்திகேட்பதிலேயே கழிந்திருக்கும்.. அதில் ஆனந்தி அக்காவின் குரல் மறக்கமுடியாதது..

தாயகத்தில் எமது அவலங்களை தமிழ்பேசும் சொந்தங்கள் வாழும் தமிழகம் சிங்கப்பூர் மலேசியா என்று உலகம் முழுவதும் கொண்டு சென்று சேர்த்ததில் அவரும் பெரும் பங்காற்றியவர்..

யாழ்ப்பாணம் சாவகச்சேரியைச் சேர்ந்தவரான ஆனந்தி சூர்யப்பிரகாசம் அவர்கள்.., அவரின் இளமைக்கால்ங்களில் இலங்கை வானொலியில் சனா அவர்களின் தயாரிப்பில் உருவான பல நாடகங்களில் நடித்துப்புகழ்பெற்றார் என்று சொல்லப்படுகிறது..

சமகாலத்தில் அறிவிப்பாளராகவும் திகழ்ந்தாராம்..

பின்னர் 1970 காலகட்டத்தில் இங்கிலாந்தை வந்தடைந்து பி.பி.சி தமிழோசையின் பகுதிநேர அறிவிப்பாளராக பணியாற்றிவந்திருக்கிறார்...

பின்னர், நிரந்தர அறிவிப்பாளராகிப் பொறுப்புகள் ஏற்றுச் செயற்பட்டவர், மூன்று தசாப்தங்களாக பி.பி.சி தமிழோசையில் பணியாற்றி ஓய்வு பெற்றார்…

உடல் நலக்குறைவுக்குள்ளாகியிருந்த நிலையில் அவரது மரணம் நிகழ்ந்துள்ளது...

ஆழ்ந்த துயரஞ்சலிகள்..

large.IMG_2596.jpeg

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள் ...

பி.பி.சி தமிழ் என்றால் ஆனந்தி அக்கா என்ற நிலை இருந்தது ஒரு காலத்தில்

  • கருத்துக்கள உறவுகள்+

ஆழ்ந்த அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, putthan said:

ஆழ்ந்த அனுதாபங்கள் ...

பி.பி.சி தமிழ் என்றால் ஆனந்தி அக்கா என்ற நிலை இருந்தது ஒரு காலத்தில்

பின்னாளில் ஆனந்தி அக்கா தாசியஸ் போன்றவர்களை வெளியேற்றி விட்டுத்தான் Propaganda ஊதுகுழலாக மாறி தமிழ் ஓசை தன் தரத்தை தாழ்த்திக்கொண்டதோடு ..... இப்போது இருக்கிறதா இல்லையா எனும் நிலைக்கும் வந்துள்ளது.

ஆழ்ந்த அனுதாபங்கள் !

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சலிகள் 💐

  • கருத்துக்கள உறவுகள்

அக்காவுக்கு கண்ணீர் அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அஞ்சலிகள்.

இன்றும் பிபிசி தமிழோசை என்றால் இவரின் குரல் தான் ஞாபகத்திற்கு வரும்.

இவர் தமிழுக்கும் தமிழீழத்திற்கும் ஆற்றிய சேவைகள் எண்ணிலடங்காதவை.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அக்காவுக்கு கண்ணீர் அஞ்சலிகள்.

தற்போதுள்ள bbc தமிழில் ஒரு கேள்வி குறி அற்ற செய்தியையாராவது கண்டு இருந்தால் அவர்களுக்கு பத்து நன்றி தொடர்நது செய்கிறேன் .

  • கருத்துக்கள உறவுகள்

ஆனந்தி அக்காவுக்கு அஞ்சலிகள்..

ஒரு சில கூட்டங்களிலும், நிகழ்வுகளிலும் ஆனந்தி அக்காவின் அழகான தமிழை நேரடியாகக் கேட்கும் வாய்ப்பு கிட்டியது.

பிபிசி ஆனந்தி அக்கா காலமானார்.

பிப்ரவரி 22, 2025

1vshq5waXsBvteyjB4DbJZ6Y62jOky1-4

பிபிசி ஆனந்தி அக்கா நேற்று இரவு காலமானார்.(பிரபாகரன் ஒரு அதிசயப் பிறவி’! -என்றவர்- பிபிசி ஆனந்தி )

திருமதி ஆனந்தி சூரியபிரகாசம் நேற்று அமைதியான முறையில் காலமானார்

. "ஆனந்தி  அக்கா" என்று அன்புடன் அழைக்கப்படும் திருமதி சூரியபிரகாசம், தமிழ் ஒளிபரப்பில் ஒரு முன்னோடி நபராக இருந்தார், பிபிசி தமிழ் சேவையில் இணைந்த முதல் தமிழ்ப் பெண்மணியாக தடைகளைத் தாண்டி பிபிசி தமிழோசியின் இயக்குநராக உயர்ந்தார். அவர் டிடிஏ யுகேவின் அறங்காவலராகவும் பணியாற்றினார்.

==== 

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை, பிபிசியின் சார்பில் முதன் முதலாக சந்தித்து நேர்காணல் செய்ய மூத்த ஊடகவியலாளர் ஆனந்தி சூரியப்பிரகாசத்துடனான நேர்காணல் ஒன்றை இந்திய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.

லண்டனிலிருந்து கொழும்பு சென்றதுமே இலங்கை அரசின் கெடுபிடி ஆரம்பித்து விட்டது. எனது பயணத்திட்டம் என்ன, பயணத்தின் நோக்கம் என்ன என்பது பற்றி எல்லாம் துருவித்துருவி விசாரிக்க ஆரம்பித்தார்கள். என்னைத் தொடர்ந்து கண்காணிக்கவும் செய்தார்கள். அப்போது கிட்டதட்ட வவுனியாவுக்கு முன் வரை மட்டுமே இலங்கை படைகளின் ஆதிக்கம் இருக்கும். அதுவரை சென்றேன். அதன் பிறகு புலிகளின் ஆதிக்கப்பகுதி. அதற்குள் வருவதற்குள் பல்வேறு தடைகள். அதையெல்லாம் மீறி புலிகள் ஆதிக்கப்பகுதிக்கு வந்தேன். பிறகு யாழ்ப்பாணம் சென்றேன். அங்குதான் அப்போது பிரபாகரன் இருந்தார்.

யாழ்ப்பானத்தில் அப்போது ஞானம் என்ற ஒரே ஒரு உணவு விடுதிதான் இருந்தது. அங்கே அறை எடுத்தேன். குளித்து முடித்து, புலிகளுக்க தகவல் சொல்லலாம் என்பது எனது திட்டம். நான் குளித்து வருவதற்கும், கதவு தட்டப்படுவதற்கும் சரியாக இருந்தது.

திறந்தால், சுப. தமிழ்ச்செல்வன் உட்பட சில புலிகள் நிற்கிறார்கள். என்னைக்குறித்து விசாரிக்கிறார்கள். நான் ஆச்சரிப்பட்டுப் போனேன். நான் வந்த தகவல் அதற்குள் அவர்களுக்கு சென்றுவிட்டது.

இதிலிருந்து ஒரு விடயத்தை என்னால் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிந்தது. ஈழ மக்கள், புலிகளின் மீது நம்பிக்கை கொண்டிருந்தனர். புதிதாக ஒருவர் வந்தால், புலிகளுக்கு தகவல் தெரிவித்து விடுவார்கள்.

பிரபாகரனுடனான சந்திப்பு எப்படி இருந்தது?

பிரபாகரனை அவரது வீட்டில் வைத்து சந்திக்கச் சென்றேன். வாசலுக்கே வந்து அன்போடு வரவேற்றார். பலரும் நினைப்போது போல அவர் எப்போதுமே சீரியஸ் ஆன பேர்வழியாக இருப்பதில்லை. சகஜமாக பழகுவார். சில முறை நான் ஜோக் அடித்த போது கூட ரசித்து சிரித்தார். தானே எனக்கு நண்டு, இறால் என கடல் உணவுகளை சமைத்துக்கொடுத்தார். மிக அன்பான மனுசர் அவர்.

தனக்கு எதிராக வைக்கப்படும் கேள்விகளை அவர் எப்படி எதிர்கொண்டார்?

விமர்சனங்களை அவர் வரவேற்றார். சந்திரிகா- புலிகள் குறுகிய கால சமாதானப் பேச்சுக் காலத்திலும் வன்னிக்குச் சென்று பிரபாகரனை சந்தித்தேன். அவரிடம் சில கேள்விகள் கேட்கணும் என்றுதான் நானும் போனேன். ஆனால், அங்கு அவர் கட்டி வைத்திருந்த “செஞ்சோலை குழந்தைகள் இல்ல”த்தைப் பார்த்த பிறகு எனக்குள்ளேயே என்னையுமறியாத ஒரு மாற்றம் ஏற்பட்டது.

தாய் தந்தையரை உறவுகளை இழந்த குழந்தைகளுக்காக எத்தனை அக்கறையுடன் அந்த இல்லதைப் பிரபாகரன் அமைத்திருந்தார்! நெஞ்சு முழுக்க ஈரம் உள்ள மனுசனால் மட்டுமே அப்படி அமைக்க முடியும்!

அந்த செஞ்சோலை இல்லத்தை கண்டபோதே, என் மனதில் இருந்த கசடுகள் எல்லாம் கழுவப்பட்டு புதிதாக பிறந்த உணர்வு ஏற்பட்டது. வன்னியிலிருந்து திரும்பியதும், பி.பி.சியில் செஞ்சோலை பற்றிய நிகழ்ச்சி தயாரித்து “என் தெய்வம் வாழும் திருக்கோயில் நின்றேன்’ என்றுதான் தலைப்பிட்டேன்.

11mxpGI5o3BqRjBcu15FUArLmLMEC4K8X

பிரபாகரன் ஒரு அதிசயப் பிறவி. என்ன வசீகரமென்றே எனக்கு விளங்கவில்லை. நேரில் சந்தித்தபோது இவரா இத்தனை பெரிய போராளி அமைப்பின் தலைவர்.. குழந்தை முகமாக இருக்கிறாரே என்றுதான் தோன்றும்.

அவரை சந்தித்தபோது, “உங்கள் போராட்டத்தில் எத்தனை மக்களுக்கு, குழந்தைகளுக்கு கஷ்டம்” என்றுகூட கேட்க நினைத்தேன். ஆனால் அவரைப் பார்க்கும் போது அந்த கேள்வியே எழவில்லை.

சரி, புலிகளின் ஆதிக்கத்தில் ஈழம் இருந்தபோது சர்வாதிகாரம் நிலவியதாக ஒரு விமர்சனம் உண்டு!

உண்மை அதுவல்ல. போராளிகளுக்கும் மக்களுக்கும் இடையேயான ஆழமான அன்பு, உறவு இருந்தது. மக்கள் தலைமை மீது கொண்டிருக்கும் நம்பிக்கையும் மிக உறுதியானது. அங்குள்ளவர்களிடம் பேசியபோது ஒரு தகவல் கிடைத்தது.

எப்போதாவது உணர்ச்சி வசப்பட்டு போராளிகள் பொதுமக்களை அடித்தால் கூட “தலைவர் உங்களை இப்படி அடிக்கச் சொல்லித் தந்தவரோ?’ என்றுதான் கேட்பார்கள். அந்தளவுக்கு தலைமை மீது மக்களுக்கு நம்பிக்கை உண்டு.

அது மட்டுமல்ல.. போராளியாக இருப்பவர் தனது ஆயுதங்களைத் தவறாகப் பயன்படுத்தினால் உடனடியாக அமைப்பிலிருந்து நீக்கப்படுவார். அதோடு, அவர் தமிழீழ சிவில் நிர்வாக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவார். சிவில் சட்டங்களின் படி அவருக்குத் தண்டனை வழங்கப்படும்.

பிரபாகரனுக்கு எம்.ஜி.ஆர்., இந்திரா ஆகியோரிடம் மிகுந்த மரியாதை உண்டு என்று சொல்லப்படுவது உண்டு!

ஆமாம்.. எம்.ஜி.ஆர். மீது மிகுந்த பற்று வைத்திருந்தவர் பிரபாகரன். ஈழ மக்கள் அனைவருமே அப்படித்தான். எம்.ஜி.ஆர். இறந்தபோது, ஈழமக்கள் ஒவ்வொருவர் வீட்டிலும் கறுப்புக்கொடி ஏற்றப்பட்டது. அதே போல இந்திராகாந்தி மறைந்த போதும் ஈழமக்கள் மிகுந்த துயர் அடைந்தார்கள்.

உங்களது ஈழப்பயணங்களின் போது வியக்க வைத்தது எது?

பல விடயங்களைச் சொல்லலாம். முக்கியமாக நான் ஈழ மக்களிடம் கேட்க விரும்பியது, சந்திரிகாவின் ஐந்தாண்டு கால தொடர் போர் மற்றும் கடுமையான பொருளாதாரத் தடையிலிருந்து எப்படி 5 லட்சம் மக்களை புலிகள் காப்பாற்றினார்கள் என்பதைத்தான்.

1p8GYe8svQrVrK2A-LzH0j4ZpAzHn1joI

அதற்கு அம்மக்கள் கொடுத்த விடை நெகிழ்வூட்டியது. “ இப்படிப்பட்ட சூழலை தலைவர் பிரபாகரன் முன்னதாகவே அனுமானித்தார். தனக்கு அடுத்தபடியாக இருந்த இயக்க தலைவர்களை அழைத்தார். அப்போது அவர் முதலில் பேசியது மக்களுக்கான உணவு மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு பற்றித்தான். அதன்படி எங்கள் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் விவசாயம் செய்யத் தகுதியுள்ள நிலங்களையெல்லாம் கவனத்துடன் கணக்கெடுத்தோம். பணப்பயிர்களைத் தடை செய்தோம். விதை நெல்கள் சேமித்தோம். இயற்கை விவசாயத்துக்கு பழகினோம். மேலும், எமது ஐந்து லட்சம் மக்களுக்கும் தேவையான வைட்டமின், புரதச் சத்து தேவைகளுக்கேற்றபடி பிற காய்கறி வகை களையும் விவசாயம் செய்ய வைத்தோம். இப்ப டித்தான் சந்திரிகாவின் கொடுமை யான பொருளாதாரத் தடையினை வெற்றி கண்டோம்” என்றனர்.

புலிகளை ஏதோ வன்முறையாளர் என்றே உருவகம் கொடுத்திருக்கும் பெரும்பாலான ஊடகங்களுக்கு இது தெரியாது. புலிகள், விவசாயம், அமைப்பு நிர்வாகம், கலை- பண்பாடு, நீர்வள மேலாண்மை என்று பல்வேறு துறைகளில் திட்டமிட்டு அரசாகவே இயங்கினர் என்பதே உண்மை.

https://www.battinatham.com/2025/02/blog-post_696.html

  • கருத்துக்கள உறவுகள்

ஆனந்தி அவர்களின் ஆத்மா சாந்திபெற இறைவனை வேண்டுகின்றேன்.🙏

  • கருத்துக்கள உறவுகள்

ஆனந்தி சூரியப்பிரகாசம் அம்மையாருக்கு அஞ்சலிகள், ஓம் சாந்தி.

  • கருத்துக்கள உறவுகள்
On 23/2/2025 at 07:38, Maruthankerny said:

பின்னாளில் ஆனந்தி அக்கா தாசியஸ் போன்றவர்களை வெளியேற்றி விட்டுத்தான் Propaganda ஊதுகுழலாக மாறி தமிழ் ஓசை தன் தரத்தை தாழ்த்திக்கொண்டதோடு ..... இப்போது இருக்கிறதா இல்லையா எனும் நிலைக்கும் வந்துள்ளது.

ஆழ்ந்த அனுதாபங்கள் !

அதன் பின்பு இந்தியாவின் செல்வாக்கு உள்ளே சென்று விட்டது ....

கனடாவில் காளிஸ்தான் போராளிகளை தடை செய்ய கடுமையாக உழைப்பது போல ...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
17 minutes ago, putthan said:

அதன் பின்பு இந்தியாவின் செல்வாக்கு உள்ளே சென்று விட்டது ....

அன்றுதான் தொடங்கியது எம் பின்னடைவுகள்.☹️

  • கருத்துக்கள உறவுகள்

நீங்காத நினைவுகள்!

சென்று வாருங்கள் ஆனந்தி அக்கா

  • கருத்துக்கள உறவுகள்

ஆனந்தி அக்காவின் 30 வினாடி குரல் பதிவு.

👉 https://www.facebook.com/reel/2109429902907756 👈

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

BBC ஆனந்தி அக்கா 🙏

480662773_10236713498522690_7535737994303036433_n.jpg

“ஈழத்தமிழச்சி என்று நான் துணிந்து சொல்வேன்”

ஆனந்தி அக்கா ஒரு சமயம் இந்தக் கருத்தை வெளிப்படுத்தியபோது,

சிங்கள அரசோடு ஒத்தோடு வாழும் தமிழ் அரசியல்வாதி கிண்டலடித்தார் 

இப்படி,

“அவர் அதை லண்டனில் இருந்து தானே சொல்கிறார்”

என்று.

ஆனால் நாம் எங்கு வாழ்ந்தாலும், ஊடகத் துறையில் இயங்கினாலும் நம் இன, மொழி உணர்வோடு இயங்க வேண்டும் என்பதற்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் ஆனந்தி அக்கா.

தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரனை இருமுறை பேட்டி காணும் பேறு பெற்றவர்.

அதனால் தான் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக அவர் ஈழத்தை விட்டுப் பிரிந்திருந்த போதும் கடல் கடந்து தமிழக, ஈழ உறவுகளுக்கு “ஆனந்தி அக்கா” என்ற அடையாளத்தோடே  லண்டன் பிபிசி தமிழோசை காலத்தில் வாழ்ந்தவர், அதன் பின்னர் கூட அந்த அடையாளப் பெயரோடே இயங்கியவர்.

1970 களில் பகுதி லண்டன் பிபிசியின் பகுதி நேர தயாரிப்பாளராக பணி புரியத் தொடங்கிய ஆனந்தி 80 களில் முழு நேரத் தயாரிப்பாளரானார். இவரது பல தொடர்கள், முக்கிய நபர்களுடனான பேட்டிகள் போன்றவை தமிழோசை நேயர்களிடையே பிரபலம்

இலங்கை யாழ் குடாநாட்டின் சாவகச்சேரியைச் சேர்ந்த ஆனந்தி, தன் பணியில் மிகவும் ஊக்குவித்த முன்னாள் தமிழ்ப் பிரிவுத் தலைவர் சங்கரை மிக நன்றியோடு நினைவு கூறுகிறார். என்று லண்டன் பிபிசி மே 2005 இல் அவருக்குப் பிரியாவிடை கொடுத்தது.

480716445_10236713498682694_9207516089093406421_n.jpg

இலங்கை வானொலிப் பாரம்பரியத்தோடு தன் ஊடக வாழ்வைத் தொடங்கியவர். இலங்கை வானொலி ஊடகத்தில் புகழ்பூத்த ஊடகர் சானாவின் வானொலி நாடகங்களில் நடித்தவர்.

தம்பி! அந்த பிபிசியைத் திருப்பி விடு" 

அப்பாசொல்லுறார். 

மேசையில் படித்துக் கொண்டிருந்த என்னை உசுப்பிவிடப் பக்கத்தில் வெள்ளைவிரிப்பில் உடல் போர்த்தியிருந்த வானொலியின் காதைத் திருகி சிற்றலை வரிசையில் பிபிசியைப் பிடிக்கிறேன். தாயகத்தில் இருந்த காலம் வரை இது எங்கள் வீட்டின் அறிவிக்கப்படாத கடமைகளில் ஒன்று. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தையும் ஆகாசவாணியையும் அரசியல் தத்தெடுத்துக் கொள்ள லண்டன் பிபிசியும், பிலிப்பைன்ஸ் வெரித்தாஸ் வானொலியும்தான் எங்களுக்கு அப்போது வானொலிக்காந்திகள். 

பெரும்பாலான வீடுகளின் திண்ணையில் றேடியோவை இருத்தி வைத்துச் சுற்றும் சூழக் காதைத் தீட்டிக் கொண்டிருக்கும் ஊர்ப்பெருசுகள் லண்டன் தமிழோசையின் முக்கிய தலைப்புச் செய்திகளில் இருந்து அடுத்த அரைமணி நேரம் புகையிலை உணர்த்தலில் இருந்து, வெங்காயநடுகை வரை எல்லா கிராமிய சமாச்சாரங்களையும் ஓரமாகப் போட்டு விட்டு வானொலியின் சொல்லை வேதம் கற்கும் மாணவன் போன்ற சிரத்தையோடு காது கொடுத்துக் கேட்டுக் கொண்டிருப்பார்கள். தமிழோசை ஒலிபரப்பு முடிந்ததும் செய்தியின்பின்னணியில் தோரணையில் ஆளாளுக்கு அரசியலை அலச ஆரம்பிப்பார்கள். இது எங்களூரின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்ததொன்று.

சுந்தா சுந்தரலிங்கம் அங்கிள், சங்கரண்ணா, விமல் அண்ணா வரிசையில் ஆனந்தி அக்காவும் இப்போது  ஊடகப் பரப்பில் வரலாறாகிப் போய் விட்டார்.

ஆனந்தி அக்காவின் ஊடக வரலாற்றை ஒரு சமயம் ஒலி ஆவணப்படுத்த அழைத்தேன்.

அச்சமயம் அவரின் கணவர் உடல் நலம் குன்றியிருந்ததால் அவரைப் பராமரிக்கும் பணியில் இருந்தவரைத் தொந்தரவு செய்ய மனம் வரவில்லை. ஆனால் இவர் போன்ற ஆளுமைகள் தம் ஊடக வரலாற்றை ஆவணப்படுத்தியிருக்கலாம் என இப்போது தோன்றுகின்றது.

ஆனந்தி அக்காவுக்கு அகவணக்கம் 🙏

கானா பிரபா

23.02.2025

480741204_10236713510682994_635366876721540818_n.jpg

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.