Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் தேசியத்தலைவர் வே.பிரபாகரனின் தந்தை இன்று காலை மரணம்

Featured Replies

********வீர வணக்கம்**********

aniCandle.gif

தலைவர் அவர்களின் தந்தையாருக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்!

Edited by suryaa

  • Replies 78
  • Views 11.9k
  • Created
  • Last Reply

தேசியத்தலைவரின் தந்தையாரின் மறைவிற்கு கண்ணீர் அஞ்சலிகள், அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றேன்.

உன்னதமான தலைவரை எமக்கு தந்தை எம் எல்லாருக்கும் தந்தை. சிங்களவனின் துன்புறுத்தலில் இருந்து விடுதலை பெற்ற உங்களின் இறுதி நிகழ்வுக்கு வரமுடியாத ஒரு மகனாக தூரத்தில் இருந்தே அஞ்சலி செலுத்திக்கொள்கிறேன்...

இதயத்தை வாட்டி வதைக்கும் துயரம்! வைகோ

தமிழ் ஈழ தேசிய இனத்தின் தன்னிகர் அற்ற தலைவராம் மேதகு பிரபாகரன் அவர்களின் தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் உயிர் நீத்தார் என்ற செய்தி, துன்பப் பேரிடியாக, மனதை வாட்டி வதைக்கிறது. வல்வெட்டித்துறையில் பிறந்து, தமிழ்ப்பண்பாட்டின் இலக்கணமாக வாழ்ந்த அப்பெருமகனார், அரசு அலுவலராகப் பணி ஆற்றிய நாள்களில், நேர்மையின் சிகரமாகத் திகழ்ந்தார்.

தமிழ் உலகம் போற்றும் மாவீரர் திலகத்தின் புகழுக்கு உரிய தந்தையான வேலுப்பிள்ளையும், அவரது துணைவியார் அன்னை பார்வதி அம்மையாரும், ஒருவருக்காக ஒருவர் என்று மனமொத்து வாழ்ந்த இலட்சியத் தம்பதியர் ஆவர். தமிழகத்தில் அவர்கள் தங்கி இருந்த நாள்களில், பலமுறை சந்தித்து இருக்கிறேன். என் இல்லத்துக்கு, எங்கள் குடும்ப விழாக்களுக்கப் பலமுறை வந்து வாழ்த்திச் சிறப்பித்தனர். எனது மூத்த மகளின் ஆண் பிள்ளைக்கு, என் வீட்டுக்கு வந்து, ‘பிரபாகரன்’ என்று பெயர் சூட்டினார்கள். எனது பெற்றோரைப் போலக் கருதி, அவர்கள் மீது அளவற்ற அன்பும், மதிப்பும், பாசமும் கொண்டு இருந்தேன்.

இலங்கைத் தீவில் இலட்சக்கணக்கான தமிழ் மக்களைக் கொன்று குவித்த கொலைபாதக சிங்கள ராஜபக்சே அரசு, பல்லாயிரக்கணக்கான தமிழர்களை, வதைமுகாம்களில், விசாரணை என்ற பெயரில் சித்திரவதை செய்து, கொடுமைப்படுத்துகிறது. பிரபாகரனின் பெற்றோர், போராளிகள் அல்ல. வயது முதிர்ந்த இவர்களை, அதிலும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு ஒரு கையும் காலும் சரிவர இயங்காத நிலையில் உடல் நலிவுற்று உள்ள பார்வதி அம்மையாரையும், விசாரணை முகாமில் அடைத்துச் சிங்கள இராணுவம் துன்புறுத்துகிறது. பல்லாயிரக்கணக்கான தமிழர்களைப் படுகொலை செய்து, மனித உரிமைகளைக் குழிதோண்டிப் புதைக்கின்ற கொலைகாரச் சிங்கள அரசு, இனியும் உலக நாடுகளை ஏமாற்ற முடியாது. பிரபாகரனின் பெற்றோரை, பயங்கரவாதத் தடுப்பு முகாமில், வெளி உலகத்தார் எவ்விதத் தொடர்புகளும் கொள்ள முடியாத நிலையில் அடைத்து வைத்து இருந்தது ஏன்?

கனடாவில் வசிக்கும் அவர்களது புதல்வி, தாம் வசிக்கும் கனடா நாட்டுக்கு அவர்களை அனுப்பி வைக்க வேண்டும் என சிங்கள அரசைக் கேட்டு, எவ்வளவோ முயற்சித்தும், ஏன் சிங்கள அரசு அந்தக் கோரிக்கையை ஏற்கவில்லை? தங்கள் தாயக மண்ணில் தமிழர்கள், சிங்கள இராணுவத்தால் கோரமாகக் கொல்லப்பட்ட கொடுமையால், உள்ளம் சுக்கல்சுக்கலாக உடைந்த துயரத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள வேலுப்பிள்ளை அவர்களையும், பார்வதி அம்மையாரையும், விசாரணை முகாம்களில் துன்புறுத்தி, அவமானப்படுத்தி உள்ளனர். நினைப்பதற்கே நம் நெஞ்சு கொதிக்கிறது.

ஈவு, இரக்கம், மனிதாபிமானம் எதுவுமே இல்லாத மிருகத்தனமான அரக்க வெறியோடு சிங்கள அரசு, தமிழர்களை வதைப்பதற்குச் சாட்சியம்தான் வேலுப்பிள்ளையின் மரணம் ஆகும். உலகத்தை ஏமாற்றுவதற்காக சிங்கள இராணுவ பிரிகேடியர் உதய நாணயக்கார, இயற்கை மரணம் என்று கூறி உள்ளான். அவர் உடல்நலம் குன்றிய நிலையில், அவருக்கு என்ன சிகிச்சை அளித்தார்கள்? ஏன் அவர்களை முகாம்களில் இருந்து விடுவிக்கவில்லை? கவிஞர் புதுவை இரத்தினதுரை உள்ளிட்ட எண்ணற்றோர், விசாரணை முகாம்களில் சித்திரவதைக்கு ஆளாகினர். எத்தனையோ பேர் சாகடிக்கப்பட்டனர் என்ற உண்மை இன்றைக்கு மறைக்கப்பட்டாலும், அக்கொடுமைகள் ஒருநாள் வெளிச்சத்துக்கு வரத்தான் செய்யும்.

தமிழ் ஈழத்தில் நம் சொந்தச் சகோதர சகோதரிகளுக்கு, சிங்களரால் இழைக்கப்பட்ட கொடுமையும், படுகொலையும், பேரழிவும், பிஞ்சுக்குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட நம் தொப்புள் கொடி உறவுகள் கொல்லப்பட்டு மடிந்ததை எண்ணி, அழுது துடிக்கும் நமக்கு, உத்தமர் வேலுப்பிள்ளை அவர்களின் மரணச் செய்தியைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இந்த நேரத்தில், நாம் வணங்குவதற்கு உரிய அன்னை பார்வதி அம்மையாரின் மனவேதனையைக் கற்பனை செய்வதற்கே உள்ளம் நடுங்குகிறது.

நாம் ஒருவருக்கு ஒருவர், ஆறுதல் கூறவா முடியும்? தேறுதல் சொல்லவா முடியும்? தமிழ் இனத்தின், ஈழத்தமிழ்க் குலத்தின் தியாக வரலாற்றுத் தலைவனின் அன்புத்தந்தை வேலுப்பிள்ளை அவர்கள், போற்றுதலுக்கு உரிய மாமனிதராகவே தமிழர் நெஞ்சங்களில் என்றும் வாழ்வார்!

‘தாயகம்’

வைகோ

சென்னை - 8 பொதுச் செயலாளர்,

07.01.2010 மறுமலர்ச்சி தி.மு.க

  • கருத்துக்கள உறவுகள்

தந்தை...

எமக்கெல்லாம் தந்தை நீர்

தம்பியை தந்ததால்....

புலி

எமெக்கெல்லாம் முதற்புலி

புலியை பெற்றதனால்....

எரிமலை

எதிரிகளுக்கெல்லாம் எரிமலை நீர்

எம்மோடு நின்றதால்....

வஞ்சனை

உலகத்தின் ஓரவஞ்சனை

வயது முதிர்ந்தும் கொன்றதால்...

அஞ்சலை

நீர் எவர்க்கும்அஞ்சலை

அது வெளிப்படை உமைக்கொன்றதால் ....

தந்தை நீ

எமக்கெல்லாம் தந்தை நீ

என் உடலும் இங்கு துடிப்பதால்....

அஞ்சலி

வீரஅஞ்சலி

அது மட்டுமே செய்யமுடியும் இந்த மகனால்...

அமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலிகள்...

காலன் உங்களை பிரித்தாலும் காலம் உங்களை மறக்காது.

Edited by Sooravali

candleh.gifvellupillai.gifcandleh.gif

தலைவரின் தந்தைக்கு எமது கண்ணீர் வணக்கங்கள்

நிகரில்லா ஒப்பற்ற தலைவனைத் தந்த தந்தைக்கு என் கண்ணீர் ததும்பும் அஞ்சலிகள்

  • கருத்துக்கள உறவுகள்

எந்தக் குற்றங்களும் செய்யாமல் இறுதிக்காலத்தில் எதுவித வெளியுலகத் தொடர்புமற்று ஒரு கைதியாக மரணித்த தேசியத் தலைவரின் தந்தைக்கு கண்ணீர் அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

தலைவரை தந்த பெரியவருக்கு கண்ணீர் அஞ்சலி........

குடும்பத்தாரின் சோகத்தில் பங்கு கொள்கிறேன்.

தந்தையாருக்கு என் கண்ணீர் அஞ்சலிகள்.

பேய்கள் ஆட்சி செய்யும் நாட்டில் வேறு எதை நாம் எதிர்பார்க்கமுடியும்.

ஐயா உங்களுக்கு என் கண்ணீர் அஞ்சலிகள் .. உங்கள் மரணம் கூட எங்கள் வேட்கையை தீவிரப்படுத்தும்.. நிச்சயம் தமிழீழம் வெல்வோம்..

WCC412Trc.jpg

எமக்கே எமக்காக நல்லதொரு தலைவனைப் பெற்று தந்த தந்தைக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள்...!

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள் அய்யா

நன்றி ... நன்றி ... பெரியவரே ...

எமது குலமோங்கவும் இலங்கவும், எங்கள் கோட்பாடுகளுக்கிணங்க ...

மீண்டும் எங்களிடையே வந்து, வழி காட்டுவீர்கள் என்ற நம்பிக்கையில் ...

வாருங்கள், போய் புதிய பலத்துடன் திரும்பி வாருங்கள்...

எங்களது வணக்கங்கள்.

Edited by ஜெகுமார்

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் பிள்ளைகளை பெற்றனர்...................

நீர் பெற்ற பிள்ளையாலேயே நாமும் தமிழ் பிள்ளைகளானோம். எமக்கும் நீரே தந்தை.

வலிகளோடு வாழ பழகிவிட்டோம். என்றாலும் மீளாத வலிகளாக எமை தொடர்கின்றன.............. துயரங்கள்!

கடவுளிடம் எனக்கு நம்பிக்கையில்லை. எல்லோரும் நம்புவதுபோல் அப்படி ஒன்றிருந்தால்............. இது கடவுளின் அழைப்பாகவே இருக்கும்!

இல்லாதுபோனால் அன்பு இங்கு வாழும் வரை நீங்களும் உங்கள் பிள்ளையின் பெயரால் வாழ்வீரே!

தமிழீழ விடுதலைக்காக வாழ்நாள் முழுதும் உழைத்த தலைவனை ஈன்ற தந்தைக்கு கண்ணீர் அஞ்சலிகள்.

தங்கத்தலைவனை தந்த தந்தைக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

இனத்தின் தலை நிமிர்வுக்கு மகவைத் தந்த பெரியோனுக்கு கண்ணீர் வணக்கங்கள்.

தங்கத்தலைவனை தந்த தந்தைக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்

post-4164-12628824613209_thumb.jpgஜயாவிற்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்

Edited by செவ்வந்தி

  • கருத்துக்கள உறவுகள்

எங்களது தேசியத்தலைவனின் தந்தையிற்கு கண்ணீர் அஞ்சலிகள்!!!

தேர்தல் வெற்றிக்காக படுகொலை செய்யப்பட்ட அய்யாவிற்கு கண்ணீர் அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண்ணீர் வணக்கங்கள்!

முதிய வயதில் கணவனையும் இழந்து இராணுவத்தின் பிடியில் இருக்கும் தலைவரின் தாயாரின் நிலமை தான் கவலையளிக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள்...அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.