Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெரும் பகுதி வன்னி மக்கள்,பிரபாகரன் மீது வருத்தத்தில் இருக்கிறார்கள்- ஆவணப்பட இயக்குனர்.

Featured Replies

உச்சகட்ட நெருக்கடிகள் குறைந்திருக்கும் இந்த நேரத்தில் தன் சொந்த ஊரான இலங்கைக்குச் சென்று வந்திருக்கிறார் ஆவணப்பட இயக்குநர் சோமீதரன். ‘எரியும் நினைவுகள்’, ‘முல்லைத்தீவு’ போன்ற தன் படங்களின் மூலம் ஈழ மக்களின் கண்ணீரை உலக அரங்கில் காட்சிப்படுத்தியவர்.

நெருக்கடியான நிலையில் இவரின் செயல் பாட்டைக் கண்காணித்து வந்த இலங்கை அரசாங்கம் இவரை நாட்டிற்குள் அனுமதிக்குமா என்ற சந்தேகம் இருந்தது. அதை மீறிச் சென்ற சோமீதரன் அனுபவம் எப்படி இருந்தது? அவரிடம் பேசினோம்.

‘‘வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, யாழ்ப்பாணம் என்று நிறைய இடங்களுக்குப் போனேன். கிழக்கு மாகாணம் முழுக்க என்னால் எந்தவித அச்சமும் இன்றி புகுந்து வர முடிந்தது. இதோடு மகிந்தாவின் சொந்த மாவட்டமான அமாந்த் தோட்டை,மாத்தரை,களீ போன்ற சிங்களப்பகுதிகளையும் முழுமையாக சுற்றிப் பார்த்தேன்.நான் பிறந்ததிலிருந்து போக முடியாமல் இருந்த பகுதிக்குக்கூட இந்த முறை பயணத்தில் போக முடிந்தது. கெடுபிடிகள் இல்லாமல் சுற்றவும் முடிந்தது.

தமிழ் மக்களைப் பொருத்த அளவில் மிகுந்த சோர்வுக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.இப்போது அவர்களால் அரசியல் பேச முடியவில்லை. அடுத்த வேளை சாப்பாட்டிற்கு கஷ்டப்படும் அவர்களால் எதையும் வெளிப்படையாகப் பேச தயக்கம் இருக்கிறது. அது நியாயமும் கூட.

நிறைய தமிழ் மக்கள் புலிகள் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள். வன்னிப் பகுதியில் பெரும் பகுதி பிரபாகரன் மீது வருத்தத்தில் இருக்கிறார்கள்.ஒரு சிலர் பிரபாகரன் இறந்ததை உண்மை என்றும் பெரும் பகுதி வன்னி மக்கள் பிரபாகரன் சாகவில்லை என்றும் இப்போதும் நம்புகிறார்கள்.

ஒரு ஈழப் போராளியை நான் சந்தித்தேன். அவரிடம், திரும்ப ஆயுதப் போராட்டம் சாத்தியமா? என்றேன். அதற்கு அவர், ‘‘நாங்கள் இப்போது நோஞ்சான்களாக இருக்கிறோம்.எங்கள் உடலுக்கு முதலில் சக்தி தேவைப்படுகிறது,அதுவே கிடைக்காத போது ஆயுதம் ஏந்துவது நடக்கின்ற காரியமா? எங்களுக்கு கிளிநொச்சி வீழ்ந் தபோதே தெரியும், நாங்கள் தோல்வியை சந்தித்து, அழிவைக் காண நேரிடும் என்று. இனி ஆயுதப் போராட்டம் தழைக்கலாம். இல்லாமலும் போகலாம்.அதற்கு பதில் சொல்ல இன்னும் ஐந்து பத்து ஆண்டுகள் பிடிக்கும்’’ என்றார். இவரது மனநிலைதான் பெரும்பாலான தமிழ் மக்களின் இன்றைய மனநிலையாக உள்ளது.

பெரும்பாலான தமிழ் மக்கள் விவசாயிகள். அல்லது மீனவர்கள். இப்போது நிலம் முழுக்க ராணுவத்தின் பிடியில் இருக்கிறது. மீன் பிடித்து பிழைப்பு நடத்துவது கூட ஆகாத காரியமாக இருக்கிறது. அவர்களுக்கு இப்போது ஒரு தொழில் தேவை. பிழைக்க சாப்பாடு தேவை. சிலர் வாய்விட்டு ஒரு ரொட்டித்துண்டு வாங்கித்தர முடியுமா என்று கேட்கும் பரிதாப நிலையில் இருக்கிறார்கள்’’ என்று சொல்லும் சோமீதரனிடம் ‘‘சீனாவின் மீள் பணிகள், அபிவிருத்தி பணிகள் எப்படி இருக்கிறது?’’ என்றோம்.

‘‘இலங்கையில் பெரும் பகுதிகளில் சைனாவின் அபிவிருத்தி திட்டம் தான் வேகமாக நடந்து வருகிறது.பார்க்கும் இடம் எல்லாம் சைனாவின் கொடிகள் பறக்கின்றன. பிரபாகரன் இறந்து கிடந்ததாக தொலைக்காட்சியில் காட்டப்பட்ட நந்திக்கடல் முழுக்க சைனாவிடம் ஒப்படைத்து விட்டது இலங்கை அரசாங்கம்.மீன் உற்பத்தியை பெ ருக்கும் ஆய்வை இங்குதான் சீனா செய்து கொண்டிருக்கிறது.உயர் பாதுகாப்பு வளையம் இடப்பட்ட பகுதியாக அது உள்ளது.

முன்பெல்லாம் 500மீட்டருக்கு ஒரு இடத்தில் ராணுவ முகாம்கள் இருந்தன.இப்போது அவை 5கிலோ மீட்டருக்கு ஒன்றாக மாற்றம் அடைந்திருக்கின்றது. ஏற்கெனவே ராணுவ முகாமாக இருந்த இடங்கள் முழுக்க இப்போது புத்தர் கோயில்களாக மாற்றம் பெற்றுள்ளன. தமிழர் பகுதி முழுக்க முழுவீச்சில் சிங்களர் குடியேற்றம் நடைபெறுகிறது’’ என்று சொல்லும் சோமீதரனுக்கு இந்தியாவின் அபிவிருத்தியை விட சைனாவின் அபிவிருத்தி திட்டம்தான் மலைப்பை ஏற்படுத்தியதாம்.

‘‘சாதாரண மக்கள் எங்கேயும் நடமாடலாம். முள்வேளியில் இருந்து வெளியேற விரும்புகின்றவர்கள் வெளியேறலாம். ஆனால், மஹிந்தாவுக்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேச முடியாது. இதுதான் இப்போதைய இலங்கையின் நிலையாக இருக்கிறது.பிரதான எதிர்க்கட்சியான ரணில் கூட வாயை திறந்து பேச முடியாது. எல்லாம் பாதுகாப்பு மட்டத்திற்குள் கொண்டு வரப்பட்டுவிட்டன.ஒரு மனிதனை பற்றிய அத்தனை விவரங்களையும் ஆவணப்படுத்தி விட்டது மஹிந்தா அரசு’’ என்கிறார்.

மனித உரிமை மீறல்,ஜனநாயகப் படுகொலை என்று எவ்வளவுதான் குரலை உயர்த்தினாலும் மஹிந்தா ராஜபக்ஷேவின் மணிக்கட்டிற்குள் இருக்கிறது இன்றைய இலங்கை?!.

நன்றி குமுதம்

படங்களைப் பார்வையிட......

http://www.thedipaar.com/news/news.php?id=19125

Edited by easyjobs

துரோகி இப்படி பச்சை பொய் சொல்கிறான் உண்மையில் வன்னி மக்கள் எப்போது காட்டில் இருக்கும் 10 ஆயிரம் போராளிகளும் வெளிநாட்டில் இருக்கும் 10 லட்சம் மக்களும் இனைந்து போராட்டத்தை ஆரப்பிப்பார்கள் என்று ஆவலோடு காவல்

இலங்கையும் ஒரு சனநாயக நாடு. இந்தியாவும் கூட.

அண்மையில் "தி எகோநோமிஸ்ட்" என்ற சஞ்சிகையை தடை செய்து, ஆனால் இந்த ரிபோட்டரை விட்டுள்ளது ?.

உலகம் சனநாயக பண்புகளை விரும்புவது போலக்காட்டினாலும் தமக்கு "என்ன இலாபம்" என்றே பார்ப்பார்கள்.

சிங்களம் இதை நன்றாகவே பயன்படுத்துகின்றது. ஆனால் ஒரு அளவுக்கு மேல் சென்றால் இதே சனநாயகத்தை எவரும் பாவிக்க தயங்க மாட்டார்கள், சிங்களத்துக்கு எதிராக.

ஆகவே யாரும் எதையும் எழுதும் போது நாம் தான் எல்லாவற்றையும் வாசித்து ஒரு முடிவுக்கு வர வேண்டும், ( வாசிப்பதால் மனிதன் பூரணமடைகிறான்).

  • கருத்துக்கள உறவுகள்

மேலே எழுதப்பட்டதை தவறாக புரிந்து கொள்கிறீர்கள் என்று நினைக்கின்றேன்

வன்னியிலிருந்து

எனக்கும் ஒருவர் சொன்னார்

பிரபாகரன் மேல் கோபமாக இருக்கின்றோம்

ஏனெனில் வைத்திருந்த எதையுமே ஏன் கடைசிவரை பாவிக்காமல் விட்டார் என்று.....???

ஏனெனில் வைத்திருந்த எதையுமே ஏன் கடைசிவரை பாவிக்காமல் விட்டார் என்று.....???

எதை வைத்திருந்தார்..?

இனப்பண்பே கரைந்துபோய்விட்டது.. இனி சாண் போனா என்ன எண்டு முZAHம் போனா என்ன இருந்திருக்ககூடும்..

புலிகள் வேறு (ஈழத் )தமிழ் மக்கள் வேறு அல்ல. புலிகள் மீதான கோபம் என்பது தம் சொந்த பிள்ளைகள் மீது தாய்மாருக்கு வரும் கோபம் போன்றது. எம் உணர்வாலும், உதிரத்தாலும் கட்டப்பட்ட இயக்கமான புலிகள் மீதான கோபம் அவர்கள் இல்லாமல் இன்று போய்விட்டார்களே என்ற கவலையாலும் படுதோல்வி அடைந்து விட்டோம் என்ற உணர்வாலும் வருவது.

சிங்கள பெருந்தேசியமும் இந்திய வல்லாதிக்கமும் எம் இருப்பை கேள்வி கேட்டுக் கொண்டிருக்கும் ஒவ்வொரு வினாடியும் புலிகளின் இருப்புக்கான தேவையும் அவாவும் எம்மிடம் இருந்து கொண்டே இருக்கும்.

நிழலி நீங்கள் சொல்வது மிகச் சரியானது,

புலிகள் உருவானதற்கான காரணக்கள் இன்று வலுப் பெற்று வருகின்றன.சிறிலங்கா முழுமையான ஒரு இராணுவ ஆட்ச்சியாக மாற்றம் பெற்றுள்ளது.அத்தோடு அது சீனாவின் மிகப் பெரும் நண்பனாக வளர்ந்து வருகிறது.இந்தியா மேற்குலகம் என்பன சிறிலங்காவின் ராஜதந்திரத்தால் ஏமாற்றப் பட்டுள்ளன.சிறிலங்கா அணு உலைகளை அமைப்பது இந்தியாவிடம் இருந்து தன்னைப் பாதுகாக்க.இதனை இன்னும் கூட இந்திய கொள்கைவகுப்பாளர் புரிந்து கொள்ளவில்லை எனில் இந்தியாவின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் சிறிலங்காவில் இருந்தே உருவாகும்.

புலிகள் ஒரு சில தனி நபர்களின் வாக்குறுதிகளை நம்பி ஏமாற்றப்படுள்ளதாகவே நான் நம்புகிறேன்.கேபி யை மையமாக வைத்தே இது நடைபெற்றதாக நான் நம்புகிறேன்.உண்மை ஓர் நாள் வெளிப்படத் தானே வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையும் ஒரு சனநாயக நாடு. இந்தியாவும் கூட.

அண்மையில் "தி எகோநோமிஸ்ட்" என்ற சஞ்சிகையை தடை செய்து, ஆனால் இந்த ரிபோட்டரை விட்டுள்ளது ?.

உலகம் சனநாயக பண்புகளை விரும்புவது போலக்காட்டினாலும் தமக்கு "என்ன இலாபம்" என்றே பார்ப்பார்கள்.

சிங்களம் இதை நன்றாகவே பயன்படுத்துகின்றது. ஆனால் ஒரு அளவுக்கு மேல் சென்றால் இதே சனநாயகத்தை எவரும் பாவிக்க தயங்க மாட்டார்கள், சிங்களத்துக்கு எதிராக.

ஆகவே யாரும் எதையும் எழுதும் போது நாம் தான் எல்லாவற்றையும் வாசித்து ஒரு முடிவுக்கு வர வேண்டும், ( வாசிப்பதால் மனிதன் பூரணமடைகிறான்).

சோமிதரன் இலங்கையை சேர்ந்தவர் அவர் பத்திரிகையாளாரய் நாட்டுக்குப் போய் இருக்க மாட்டார் தான் பிறந்த மண் பார்ப்பதற்காய் போய் இருப்பார்

  • கருத்துக்கள உறவுகள்

தலைவரிடம் இறுதியாகப் பாவிப்பதற்கென்று எதுவுமே இருக்கவில்லை.வெற்றுக் கப்பல்களை அனுப்பியபடியே சிங்களவனுக்குச் செய்தியுமனுப்பிய கே.பீ போன்ற மனிதர்களை நம்பிக்கை மட்டுமே அவரிடம் மிச்சமாக இருந்திருக்கும். இறுதியாக விமானப்படை தலமை கட்டிடம், கட்டுநாயக்கா விமானத்தளம் மீது நடந்த தற்கொலை விமானத் தாக்குதல் கூட இறுதியாக இருந்த ஆயுதம் தான்.

வன்னி மக்களுக்கு இருக்கும் கோபமும் விரக்தியும் தோல்வியின் வெறுப்புத்தான், அதுமட்டுமல்லாமல் சிங்களவனை தமது வீடுவரை கொண்டுவந்து நிறுத்திவிட்டார்களே என்கிற ஆதங்கமும், இயலாமையும்தான்.

நம்பிக்கைகள் வீணடிக்கப்பட்டு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும்போது கோபம் வருவது இயல்பே, யாரின்மேலாவது பழியைப் போட்டு, நியாயம் கற்பிக்க முயல்வதும் மனித இயல்புதான்.அதற்கும் மேலாக அவர்கள் தமது குடும்பங்கள் முதல் அனைத்தையும் இழந்தவர்கள், அவர்களின் கோபம் நியாயமானது, ஆனால் அவர்கள் புலிகள் அழியவேண்டுமென்று ஒருபோதுமே விரும்பியிருக்க மாட்டார்கள் என்பதுதான் உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்

யாழப்பாணத்தில் சனம் எந்திரன் பாக்க வரிசையில் நிக்குதுகள்.வன்னியில ஒரு தேத்தணனிக்கு சனம் அலையுதுகள்.நாங்கள்(புலம்)அரசியல் கதைத்து பொழுது போகிறோம்.யாழில் உள்ள கல்வி சமூகத்தை வன்னிக்கு சென்று நிலைமையை பாக்க சொல்லுற நிலமையில் அந்த மக்கள் தனிமைப்படுத்த பட்டு இருக்கிறார்கள்.அப்ப அவர்களுக்கு எல்லோர் மீதும் கோவம் வருவது இயல்புதானே.

இந்தக் கட்டுரை புலிகள் மீது எல்லப் பழியையும் போட எழுதப்பட்ட இன்னுமொரு கட்டுரை,அவ்வளவு தான், இது எமது விடுதலை வேற்கையை அழிக்க முடக்கிவிடப்படும் இன்னுமொரு கட்டுரை

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் வேறு (ஈழத் )தமிழ் மக்கள் வேறு அல்ல. புலிகள் மீதான கோபம் என்பது தம் சொந்த பிள்ளைகள் மீது தாய்மாருக்கு வரும் கோபம் போன்றது. எம் உணர்வாலும், உதிரத்தாலும் கட்டப்பட்ட இயக்கமான புலிகள் மீதான கோபம் அவர்கள் இல்லாமல் இன்று போய்விட்டார்களே என்ற கவலையாலும் படுதோல்வி அடைந்து விட்டோம் என்ற உணர்வாலும் வருவது.

சிங்கள பெருந்தேசியமும் இந்திய வல்லாதிக்கமும் எம் இருப்பை கேள்வி கேட்டுக் கொண்டிருக்கும் ஒவ்வொரு வினாடியும் புலிகளின் இருப்புக்கான தேவையும் அவாவும் எம்மிடம் இருந்து கொண்டே இருக்கும்.

நிழலி நீங்கள் சொல்வது மிகச் சரியானது,

புலிகள் உருவானதற்கான காரணக்கள் இன்று வலுப் பெற்று வருகின்றன.சிறிலங்கா முழுமையான ஒரு இராணுவ ஆட்ச்சியாக மாற்றம் பெற்றுள்ளது.அத்தோடு அது சீனாவின் மிகப் பெரும் நண்பனாக வளர்ந்து வருகிறது.இந்தியா மேற்குலகம் என்பன சிறிலங்காவின் ராஜதந்திரத்தால் ஏமாற்றப் பட்டுள்ளன.சிறிலங்கா அணு உலைகளை அமைப்பது இந்தியாவிடம் இருந்து தன்னைப் பாதுகாக்க.இதனை இன்னும் கூட இந்திய கொள்கைவகுப்பாளர் புரிந்து கொள்ளவில்லை எனில் இந்தியாவின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் சிறிலங்காவில் இருந்தே உருவாகும்.

புலிகள் ஒரு சில தனி நபர்களின் வாக்குறுதிகளை நம்பி ஏமாற்றப்படுள்ளதாகவே நான் நம்புகிறேன்.கேபி யை மையமாக வைத்தே இது நடைபெற்றதாக நான் நம்புகிறேன்.உண்மை ஓர் நாள் வெளிப்படத் தானே வேண்டும்.

நீங்கள் சொல்வது மிகச் சரியானது,

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் இருந்தபோதும் வன்னி மக்கள் படாத பாடு படுகிறார்கள் என்று சிங்களமும் ஒட்டுக்குழுக்களும் பிரச்சாரம் செய்தார்கள். புலிகள் அழிந்தபிறகும் ஏன் அழிந்தாய் என்று திட்டுகிறார்கள். :unsure:

புரட்சிகர தேசியன் பாணியில் டிஸ்கி.. :)

http://video.google.com/videoplay?docid=-1140534360741361289#

வன்னி மக்களை பொறுத்தவரை தமிழ் மற்றும் சிங்கள பெருந்தேசியத்துக்கிடையிலான மோதலுக்குள் அகப்பட்டு அனைத்தையும் இழந்து நிற்கின்றார்கள். அவர்களின் வெறுப்பு அதிருப்தி எல்லாம் தங்கள் அறியாமை மேல்தான். விசுவமடு வரை இடம்பெயருமட்டும் தமிழ்த்தேசியத்தின் கோரமுகம் குறித்து அவர்கள் அறிந்திருக்கவில்லை.

புலிகள் தலமையின் இறுதியான ஆயுதம் வன்னிமக்கள்தான். மக்கள் தான் ஆயுதமாக பாவிக்கப்பட்டனர். ஒட்டுமொத்தமாக மக்கள் அழிந்துபோக சர்வதேசம் ஒருபோதும் விடாது என தமிழ்த்தேசியம் சிந்தித்தது. மேற்குலக ஜனநாயகத்தின் மீது இது குறித்து நம்பிக்கை கொண்டிருந்தது.

வன்னி மக்கள் ஆயுதமாக பாவிக்கப்பட்டதன் பின்னணியில் பல காரணங்கள் இருக்கின்றன. புலிகளே தற்கொலைத்தாக்குதல்கள் அரசியல் படுகொலைகளின் தலமை வழிகாட்டிகள் என்ற அடிப்படையுடன் குத்தப்பட்ட பயங்கரவாத முத்திரையை உடைத்தெறியவேண்டிய அவசியம் இருந்தது. அவ்வாறு உடைத்தெறியும் போதே சர்வதேசத் தடையை விலக்கவும் சர்வதேச அங்கீகாரத்தை பெறவும் முடியும். இதற்காகவே மகிந்தர் வருவதற்கு ஏதுவாக நடந்துகொண்டார்கள். மக்கள் கொலைக்களம் நோக்கி நகர்த்தப்பட்டார்கள். இது ஒரு பயங்கரவாதம் எனும் சின்னக் கோட்டுக்கு பக்கத்தில் பெரிய கோட்டை போடும் காரியமே.

போராட்டத்தின் பெரும் சுமையை சுமந்த வன்னிப் பெருநிலமும் மக்களும் இறுதியில் அதனாலேயே வஞ்சிக்கப்பட்டார்கள். தமிழ்த்தேசியத்தின் சிந்தனைமுறைக்கேற்ப மக்கள் கொலைக்களம் நோக்கி நிர்பந்திக்கப்பட்டார்கள். கொலைகளும் அவலங்களும் புகைப்படமாகவும் ஒளிப்படமாகவும் எடுக்கப்பட்டு புலம்பெயர் நாடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அதை நாங்கள் படுகொலைகளை நிறுத்து என பிரசுரித்து பிரச்சாரம் செய்துகொண்டிந்தோம்.

வன்னிமக்களிடம் இருப்பது வருத்தம் இல்லை மாறாக வார்த்தையாயல் வர்ணிக்கமுடியாத உணர்வு. இயல்புநிலை முற்றாக அழிக்கப்பட்டு ஒரு இளைய தலைமுறையே அழிந்து தம் விரல்களால் தம் கண்ணைக் குத்திக்கொண்டதன் வலி. தமிழ்த்தேசியத்தை புரிந்துகொள்ள முடியாத வக்கற்ற நிலை.

சிங்களப் பெரும் தேசியமும் தமிழர்களை கொல்லும் தமிழ்த்தேசியமம் கொல்லும். புரட்சி என்பது சமுதாயத்தின் அடிமட்டத்தில் இருந்து வரவேண்டும் என்பார்கள் எம்மைப்பொறுத்தவரை தேசியம் மையவாதக்கோவணத்துள் இருந்து புறப்பட்டு சமுதாயத்தின் அடிமட்டம்வரை கோலோச்சியது. நேரெதிரான அமைப்பு. அது தனது குணத்தை காட்டவே செய்தது. ஒன்றுக்கு முப்பத்திரண்டு இயக்கமும் இவ்வாறு ஒரு இடத்தில் இருந்து புறப்பட்டு ஒன்றை ஒன்று தின்று பிரளயம் பண்ணியபோதோ அல்லது மதவாரியான பிரிவினைகள் வந்து தமிழன் இரண்டாக பிளந்து பிரிந்து சிதைந்தபோதோ அல்லது பிரதேசவாதம் மீண்டும் தலைதூக்கியபோதோ கேள்விக்குட்படாத தமிழ்த்தேசியத்தின் தான்தோன்றித்தனத்துக்கு இறுதியில் பலியானது வன்னி வறியமக்களே. இன்றய வருத்தம் வேதனை என்பது தேசியம் குறித்த அறியாமையே. கேள்விக்குள்ளாக்கப்படவேண்டியது தமிழ்த்தேசியம் அதன் சிந்தனை முறையும். இதே பாணியிலான தேசிய எழுச்சியும் அதற்கு வழிநடத்துனராக என்னுமொரு பிரபாகரனுக்குமான தோற்றப்பாட்டின் அவசியம் வன்னிக்குள்ளோ அல்லது கிழக்கு தமிழீழத்திலோ இல்லை. புதிய பாதைகள் காலப்போக்கில் உருவாகும்.

தலைவரிடம் இறுதியாகப் பாவிப்பதற்கென்று எதுவுமே இருக்கவில்லை.வெற்றுக் கப்பல்களை அனுப்பியபடியே சிங்களவனுக்குச் செய்தியுமனுப்பிய கே.பீ போன்ற மனிதர்களை நம்பிக்கை மட்டுமே அவரிடம் மிச்சமாக இருந்திருக்கும். இறுதியாக விமானப்படை தலமை கட்டிடம், கட்டுநாயக்கா விமானத்தளம் மீது நடந்த தற்கொலை விமானத் தாக்குதல் கூட இறுதியாக இருந்த ஆயுதம் தான்.

வன்னி மக்களுக்கு இருக்கும் கோபமும் விரக்தியும் தோல்வியின் வெறுப்புத்தான், அதுமட்டுமல்லாமல் சிங்களவனை தமது வீடுவரை கொண்டுவந்து நிறுத்திவிட்டார்களே என்கிற ஆதங்கமும், இயலாமையும்தான்.

நம்பிக்கைகள் வீணடிக்கப்பட்டு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும்போது கோபம் வருவது இயல்பே, யாரின்மேலாவது பழியைப் போட்டு, நியாயம் கற்பிக்க முயல்வதும் மனித இயல்புதான்.அதற்கும் மேலாக அவர்கள் தமது குடும்பங்கள் முதல் அனைத்தையும் இழந்தவர்கள், அவர்களின் கோபம் நியாயமானது, ஆனால் அவர்கள் புலிகள் அழியவேண்டுமென்று ஒருபோதுமே விரும்பியிருக்க மாட்டார்கள் என்பதுதான் உண்மை.

ரகுநாதன் இங்கு வன்னி மக்கள் புலிகளை குறை கூறீனமென்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை, இது வழக்கம் போல புலிகல் மீதும் அவர்களை வளர்த்த வன்னி மக்கள் மீதும் பழி போடவே எழுத்தப்பட்டது, நான் பார்த்த்வரை , ஏன் முகாமில் இருந்த போது கூட தாம் அனைத்தையும் இழந்த போது தலைவருக்கு ஒன்றும் நடக்கக் கூடாது என்று யோசித்தவர்களே அதிகம், இது தான் உண்மை, இவ்வகையான கட்டுரைகள் உள் நோக்கம் கொண்டவை இவற்றை வாசித்து விட்டு அப்படியே விடுவது தான் புத்திசாலித்தனம்

புலிகள் இருந்தபோதும் வன்னி மக்கள் படாத பாடு படுகிறார்கள் என்று சிங்களமும் ஒட்டுக்குழுக்களும் பிரச்சாரம் செய்தார்கள். புலிகள் அழிந்தபிறகும் ஏன் அழிந்தாய் என்று திட்டுகிறார்கள். :unsure:

புரட்சிகர தேசியன் பாணியில் டிஸ்கி.. :)

http://video.google.com/videoplay?docid=-1140534360741361289#

மாடு உயிருடன் இருந்தால் பால் தரும்,சாணி உரம் தரும், வயல் உழுவும்

இறந்தால் இறைச்சி, தோலை வைத்து எத்தனையோ பொருட்கள் செய்யலாம்

அதே போல்தான் இவர்களும் புலியைப் பாவிக்கீனம் :D:D:D:D:D

  • கருத்துக்கள உறவுகள்

சோமிதரன் இலங்கையை சேர்ந்தவர் அவர் பத்திரிகையாளாரய் நாட்டுக்குப் போய் இருக்க மாட்டார் தான் பிறந்த மண் பார்ப்பதற்காய் போய் இருப்பார்

அவர் கொழும்பு சிங்களவர் போல தெரிகிறது

:unsure::)

புரட்சிகர தேசியன் பாணியில் டிஸ்கி..:D

டிஸ்கி பாணி அதாவது பின் குறிப்பு... யாழ் களத்தில் பின்பற்றுவது மிக்க மகிழ்ச்சி....

:D :D :D

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

. கேள்விக்குள்ளாக்கப்படவேண்டியது தமிழ்த்தேசியம் அதன் சிந்தனை முறையும். இதே பாணியிலான தேசிய எழுச்சியும் அதற்கு வழிநடத்துனராக என்னுமொரு பிரபாகரனுக்குமான தோற்றப்பாட்டின் அவசியம் வன்னிக்குள்ளோ அல்லது கிழக்கு தமிழீழத்திலோ இல்லை. புதிய பாதைகள் காலப்போக்கில் உருவாகும்.

உங்களுக்கு தெரிந்த அந்த புதியபாதைக்கு ஒரு பிளளையார் சுழியை போட்டு நீங்கள் புலத்திலிருந்து ஆரம்பிக்கலாமே? :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு தெரிந்த அந்த புதியபாதைக்கு ஒரு பிளளையார் சுழியை போட்டு நீங்கள் புலத்திலிருந்து ஆரம்பிக்கலாமே? :rolleyes:

தாயக மக்கள் தங்கள் புதிய பாதைக்கு பிள்ளையார் சுழிபோட்டுவிட்டார்கள். புலத்தில் இருப்பவர்கள் தங்களுக்குள் குடுமிபிடி சண்டையில் உள்ளதால் தாயகத்தில் என்ன நடக்கின்றது என்று தெரியாமல் உள்ளார்கள்.

நான் சொல்ல நினைத்தது.நீங்கள் சொல்லி விட்டீர்கள்.இது தான் முற்றிலும் உண்மை. :rolleyes:

உங்களுக்கு தெரிந்த அந்த புதியபாதைக்கு ஒரு பிளளையார் சுழியை போட்டு நீங்கள் புலத்திலிருந்து ஆரம்பிக்கலாமே?

புத்தன்

புதிய பாதைகள் காலப்போக்கில் உருவாகும் என்பது தாயகத்தில் உள்ள மக்களை மையமாகவைத்தே அன்றி புலத்தை நான் குறிப்பிடவில்லை. தாயகத்தில் தமது சொந்த நிலங்களில் இருக்கும் மக்கள் குறிப்பாக சொந்த நிலத்தில் தமது பொருளாதராத்தை கொண்டிருக்கும் மக்களிடம் இருந்தே புதிய பாதையும் விடுதலைக்கான முயற்சியும் துளிர்விடமுடியும். அதற்கு புலத்தில் உள்ளவர்கள் ஆதரவாக நிற்கமுடியும். இதுவே சாதகமான பாதை. இங்கே நடப்பதோ தலைகீழானது. தாயக மக்கள் ஓரு பாதையில் பயணிக்க முடியாதளவுக்கு பொருளாதாரத்தில் வீழ்ச்சியுடனும் அனைத்தையும் இழந்த நிலையில் நிற்கின்றார்கள். அவர்கள் பொருளாதாரம் கல்வி பாதுகாப்பு போன்றவற்றிற்கு புலத்தில் உள்ளவர்கள் உதவிசெய்து அவர்களுக்கு புத்துயிர் அழிக்கவேண்டும். அதன்பிறகு அவர்கள் விடுதலைநோக்கி பயணிக்கும் பாதைக்கு புலத்தில் உள்ளவர்கள் ஆதரவளிக்கவேண்டும். இவ்வாறான காரியங்கள் எல்லாம் சிங்கள அரசினூடாகத்தான் தற்போதய காலகட்டத்தில் சாத்தியப்படும். (தேசியப்பாணியில் இதற்கும் துரோகம் என்றுதான் பெயர்)

எவன் ஒருவனுக்கு எவ்வளவு தேவை இருக்கின்றதோ அதற்கேற்பவே தேவை உள்ளவனின் முயற்சி இருக்கும். தேவையே இங்கு பிரதானமானது. தாயகத்தில் சொந்தநிலத்தில் தமது பொருளாதராத்தையும் வாழ்வாதாரத்தையும் கொண்டிருக்கும் மக்களே தேசியத்தின் பால் முதன்மை பற்றுக்கொண்டவர்களாக இருக்கமுடியும். ஏனெனில் அது தேவை சார்ந்தது. புலத்தின் உள்ளவனுக்கான தாயக நிலம் சார்ந்த பொருளாதார வாழ்வாதார தேவை என்ன? அதன் பெறுமதி என்ன? நாம் இங்கிருந்து தேசியம் தேசியம் என்று உணர்ச்சி பொங்க கத்துவதுக்குரிய காரணம் உணர்வு சார்ந்தது அன்றி தேவை சார்ந்தது அல்ல. தாயகத்தில் ஒருவன் தனது வாழ்வாதரத்துக்காக தனது நிலத்தில் விவசாயம் செய்வதோ அல்லது கடற்தொழில்செய்வதோ இதர தொழில்கள் செய்வதோ தேவைகள் சார்ந்து மத பிரதேசவாத வேற்றுமைகளை கடந்து இனத்தின் அனைத்துத் தரப்பினரிடமும் உறவுகளை வளர்த்துக்கொள்வதோ தான் பெறுமதியான தேசியம். உண்மையான தேசிய உணர்வும் இந்த அடிப்படைக்குள்ளாகத்தான் தோற்றம் பெற முடியும். தாயகத்தில் வாழ்வாதராத்தை தக்கவைப்பதற்கான போராட்டம் தான் எல்லாவற்றுக்கும் அடிப்டை. இந்த அடிப்படையை விருத்தி செய்ய எம்மால் எவ்வளவு தூரம் உதவமுடியுமோ அதுதான் எமக்கான பணி.

தாயக மக்கள் தமக்குள் பொருளாதார வாழ்வாதரா தேவைகள் சார்ந்து பிரதேச மற்றும் மதவேற்றுமைகளை கடந்து ஒன்றுபடவேண்டும். தேவைகள் நிமிர்த்தமான இந்த உறவுதான் எம்மிடம் இருக்கும் மத பிரதேசவாரியான வேற்றுமைகளை களையும். சிதைவுபட்ட தமிழினம் ஒன்றுபட ஏதுவான காலமாகவே இந்த காலத்தை நாம் அணுகவேண்டும். இதுவரையான தமிழ்த்தேசியம் படுதோல்வியடைந்துள்ளது. இதற்கான காரணம் இந்த தேசியம் ஒரு மேட்டுக்குடி மேலாண்மைவாத மையவாத அடிப்படையை கொண்டிருந்தது. இதனால் இஸ்லாமியத்தமிழர்கள் பிளவுபட்டார்கள். பிரதேசவாதமாக பிளவுபட்டார்கள். வர்க்கரீதியாக பிளவுபட்டார்கள். போராட்டம் படிப்படியாக மக்களிடம் இருந்து விலத்தி பயங்கரவாதமாக முடிந்துபோனது. இந்த தோல்வி இந்த அனுபவத்தில் இருந்து மாற்றம் எமக்கு அவசியமாகின்றது. இதே பதையை மீள தேர்ந்தெடுக்கமுடியாது.

புலத்தில் நடக்கும் தற்போதைய முயற்சிகள் அனைத்தும் மாற்றம் பெறாத பழைய பாணிதான். என்னும் சொல்லப்போனால் பழைய பாணியை விட சற்று மோசமான பாணிதான். ஏனெனில் நிலத்தில் போராட்டம் நடந்த காலத்தில் சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களும் போராட்டத்தில் இணைந்திருந்தனர். ஆனால் தலமையும் சிந்தனை முறையும் மையவாதம் சார்ந்து குறுகிஇருந்தது. புலத்தில் நாடுகடந்த அரசு போன்றவை வர்க்கரீதியில் பொருளாதாரம் கல்வி பாதுகாப்பு அனைத்திலும் மேம்பட்ட நிலையில் உள்ளவர்களை கொண்ட கட்டமைப்பாக இருக்கின்றது. இவ்வாறான கட்டமைப்புகள் தேர்வுகள் தேர்ந்தெடுக்கும் நபர்கள் எல்லோருக்கும் தாயகத்தில் உள்ளவர்களுக்கும் பொருளாதராரீதியில் பிணைப்பு இருக்கின்றது. ஆனால் வெளிநாட்டு தொடர்புகள் உதவிகள் இன்றி தமது பொருளாதர தேவைகளை தாமே சொந்த நிலத்ததில் பூர்த்திசெய்யும் மக்களுக்கும் இந்த கட்டமைப்புகளுக்குமான அடிப்படை உறவு என்ன? வர்க்க ரீதியான ஏற்றதாள்வு எவ்வளவு? வர்க்க ரீதியில் இது இரண்டு பிரிவுகளாகின்றது. இந்தப் பிரிவுதான் தேசியவாதத்தை மீள சிதைக்கின்றது.

தாயகத்தில் புலிகள் இருந்த காலத்தில் புலத்தில் உள்ளவர்கள் புலிகளை பிரதானமாக்கி அவர்களது போராட்டத்திற்கு உதவிசெய்தார்கள். இப்போது தாயகத்தில் உள்ள மக்களை பிரதானமாக்கி அவர்களுக்கு உதவி செய்யவேண்டும். ஏனெனில் போராட்டம் என்பது தற்போது தமது சொந்த நிலத்தில் வாழ்வை தக்கவைப்பதாக மாற்றம் கண்டிருக்கின்றது. எமது மக்களையும் அவர்கள் வாழ்வையும் சிங்களத்திற்குள்ளாக எமது தாயகத்தில் தக்கவைப்பதுதான் தற்போதைய போராட்டம். ஆனால் புலிகள் முடிந்தபின் அதன் பாத்திர்தை நாடுகடந்த அரசு என்று இங்கே எடுத்துக்கொள்வது உடன்படக்கூடிய ஒன்றல்ல. தவிர எமக்குள் இருக்கும் முரண்பாடுகள் அடயாளப்போட்டிகளை் பிரதேசவாத ஆழுமைகளை கடந்து ஒரு நிறுவனத்தை கொண்டு நடத்துவது யதார்த்தத்துக்கு ஒத்துவராது.

சுகன் சொன்ன பல விடயங்களில் என்னால் ஒத்துப் போக முடியும்.சில விடயங்களை நாங்கள் இன்னும் ஆளமாகப் பார்க்க வேண்டும்.தாயகத்தில் மக்கள் பலம் பெற வேண்டும் என்பதிலும் போராட்டப் பாதையை அவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என்பதிலும் அதற்க்கு புலம் பெயர்ந்தவர்கள் உதவ வேண்டும் என்பதிலும் இருவேறு கருதுக்கள் இல்லை.ஆனால் இதனை எவ்வாறு செய்வது என்பதில் தான் கருத்து வேற்றுமைகள் இருகின்றன.இதனை எவ்வாறு செய்வது என்பதை ஆளமாகப்பார்க்க வேண்டும்.சிங்களத் தேசியவாதம் தமிழரின் இன்றைய நிலையை தமக்குச் சாதகமாகப்பாவித்து தன்னைப் ப்லப்படுத்திக் கொள்ள நாம் அனுமதிக்கப் போகிறோமா அல்லது அதன் திட்டங்களுக்கு இரையாகாமல் நாம் மக்களைப் பலப்படுத்தப்போகிறோம என்பதைப் பாவ்ர்க்க வேண்டும்.சிறிலங்கா அரசுடன் சேர்ந்து இயஙினால் நிச்சயமாக நாம் அதன் நிகழ்ச்சி நிரலுக்குள் தான் செல்ல வேண்டும்.கூட்டமைப்பு இன்று இந்தியாவை நம்பி அர்சியல் மலடர்களாகிய நிலமையும் கேபி சிங்கள அரசின் திட்டங்களின் அடியாளாக மாறிய நிலமையும் எமக்கு முன்னால் இருக்கின்றன.இன்று பல சுயாதீனமான நிறுவங்கள் சமயம்,பழைய பாடசாலை மன்றங்கள் ஊர் முன்னேற்ற்ச் சங்கம் என்று இருகின்றன,தனி நபர்களாகவும் பலர் இயங்குகின்றனர்.இவற்றின் மூலமே நாங்கள் மக்களைப் பலப்படுத்த முடியும்.

நாடு கடந்த அரசு என்பது புலத்தில் செய்யக் கூடிய வேலைகளைச் செய்ய முடியும்.எல்லாவற்றிற்க்கும் எல்லோருக்கும் செய்ய வேண்டிய வேலையும் பணியும் கடமையும் இருக்கிறது.இதைச் செய் அதைச் செய்யாதே என்று சொல்லிக் கொண்டிருப்பதை விட ,செயற்படுவதே முக்கியமானது. நாடு கடந்த அரசு இருப்பதால் ஒருவரால் களத்தில் உள்ள மக்களுக்கு உதவி செய்ய முடியாது இருப்பதில்லை.உண்மையில் ஒருவராலையே இரண்டு விடயத்திற்க்கும் வேலை செய்ய முடியும்.என்னால் முடிந்ததௌ மற்றவராலும் முடியும்.பகிரங்கமாக வேலை செய்பவர்களுKஉப் பின்னால் இருந்து எம் எலோராலும் வேலை செய்ய முடியும்.யாழ்மையவாதத் தலமை என்று நீங்கள் சொல்வதற்கான ஆதாரங்களை உங்களால் முன் வைக்க முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

வன்னிமக்களிடம் இருப்பது வருத்தம் இல்லை மாறாக வார்த்தையாயல் வர்ணிக்கமுடியாத உணர்வு. இயல்புநிலை முற்றாக அழிக்கப்பட்டு ஒரு இளைய தலைமுறையே அழிந்து தம் விரல்களால் தம் கண்ணைக் குத்திக்கொண்டதன் வலி. தமிழ்த்தேசியத்தை புரிந்துகொள்ள முடியாத வக்கற்ற நிலை.

சிங்களப் பெரும் தேசியமும் தமிழர்களை கொல்லும் தமிழ்த்தேசியமம் கொல்லும். புரட்சி என்பது சமுதாயத்தின் அடிமட்டத்தில் இருந்து வரவேண்டும் என்பார்கள் எம்மைப்பொறுத்தவரை தேசியம் மையவாதக்கோவணத்துள் இருந்து புறப்பட்டு சமுதாயத்தின் அடிமட்டம்வரை கோலோச்சியது. நேரெதிரான அமைப்பு. அது தனது குணத்தை காட்டவே செய்தது. ஒன்றுக்கு முப்பத்திரண்டு இயக்கமும் இவ்வாறு ஒரு இடத்தில் இருந்து புறப்பட்டு ஒன்றை ஒன்று தின்று பிரளயம் பண்ணியபோதோ அல்லது மதவாரியான பிரிவினைகள் வந்து தமிழன் இரண்டாக பிளந்து பிரிந்து சிதைந்தபோதோ அல்லது பிரதேசவாதம் மீண்டும் தலைதூக்கியபோதோ கேள்விக்குட்படாத தமிழ்த்தேசியத்தின் தான்தோன்றித்தனத்துக்கு இறுதியில் பலியானது வன்னி வறியமக்களே. இன்றய வருத்தம் வேதனை என்பது தேசியம் குறித்த அறியாமையே. கேள்விக்குள்ளாக்கப்படவேண்டியது தமிழ்த்தேசியம் அதன் சிந்தனை முறையும். இதே பாணியிலான தேசிய எழுச்சியும் அதற்கு வழிநடத்துனராக என்னுமொரு பிரபாகரனுக்குமான தோற்றப்பாட்டின் அவசியம் வன்னிக்குள்ளோ அல்லது கிழக்கு தமிழீழத்திலோ இல்லை. புதிய பாதைகள் காலப்போக்கில் உருவாகும்.

தாயக மக்கள் தங்கள் புதிய பாதைக்கு பிள்ளையார் சுழிபோட்டுவிட்டார்கள். புலத்தில் இருப்பவர்கள் தங்களுக்குள் குடுமிபிடி சண்டையில் உள்ளதால் தாயகத்தில் என்ன நடக்கின்றது என்று தெரியாமல் உள்ளார்கள்.

மே 19 இன் பின் புலம் பெயர்ந்தவர்களின் செயற்பாடுகளில் பெரிதும் மாற்றம் வரும் என எதிர்பார்த்தேன். இக்கட்டான நேரத்தில் எங்களை வழி நடத்த வேண்டிய தலைமைகள் தங்களுக்குள் அடிபட்டுக் கொண்டார்கள். தமிழ் பணியார ஊடகங்களின் தொல்லை ஒருபக்கம். மக்களும் சலித்துப் போய் தொலைகாட்சி பெட்டியின் முன் உட்கார்ந்து கொண்டார்கள். நாங்கள் இன்னும் கனவுலகில் சஞ்சரிக்காமல் தாயக மக்களை பொருளாதாரத்திலும் கல்வியிலும் கட்டி எழுப்ப வேண்டும். இதனை சிங்களத்திநூடாக செய்யத்தேவையில்லை. எங்களுக்கு தெரிந்தவர்கள், உறவினர்கலூடாகவே செய்யலாம். வசதியுள்ளவர்கள் அங்கு முதலீடு செய்வதன் மூலம் தொழில் வாய்ப்புகளை பெருக்கலாம். நான் அறிய சிங்களவர்களும், முஸ்லிம்களும் தமிழர் நிலங்களை அடி மாட்டு விலைக்கு வாங்கி போடுகிறார்கள். எங்கள் போராட்டம் சிதைக்கப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாகப் போகிறது. எங்கள் தலையாய கடமையை காலம் தாழ்த்தாது செய்வோம். தாயக மக்கள் அரசியல் பாதையை தெரிவு செய்யட்டும்.

'கோவணத்தோடு நிற்பவனிடம் வேட்டிக்கு பட்டு குஞ்சம் வை' என்பதாகவே புலம் பெயர்ந்த எங்களின் செயற்பாடுகள் உள்ளன.

Edited by thappili

புலம் பெயர்ந்தவர்களின் மத்தியில் இன்றுநடக்கும் நிகழ்வுகள் ஏதோ எதேச்சையாக நடப்பவையல்ல.மே 18 ம்மாதிரி ஒரு நிகழ்வு நடக்கலாம் என பலர் எதிர்பார்ததுதான்.அப்படி ஒன்றுநடந்தால் அடுத்தபடி நிலைப்பாடு என்ன என்று அவர்கள் தீர்மானித்தே வைத்திருந்தார்கள்போல் தான் இன்றைய நிகழ்வுகள் இருக்கின்றன.

என்னை பொறுத்தமட்டில் இவர்களை நான் ஒரு பொருட்டாகவே பார்க்கவில்லை.(பெரும்பான்மையோர் என்னை மாதிரித்தான்).புலிகள் இருக்கும் போது பல அமைப்புகளிலும் பொறுப்புகளில் இருந்தவர்கள் தமக்கு இருக்கும் ஊடக, பண பலத்தை வைத்து தமது இருப்பை நிலை நாட்ட எடுக்கப்படும் நடவடிக்கைகளே இவைகள் அத்தனையும்.

நாட்டில் இருக்கும் மக்களை பற்றி இவர்கள் எள்ளளவும் கரிசனை கொண்டதாக தெரியவில்லை.ஏனெனில் இவர்களில் பலர் தனிப்பட்ட அவர்கள் வாழ்க்கையில் ஒருவித சமூக அக்கறையில்லாதவர்களும் புலிகளின் பெயரை தமது சொந்தநலனுக்குமே பாவித்தவர்கள்.தளத்தில் புலிகளே இல்லாமல் போய்விட்ட நிலையில் இவர்கள் இங்கு ஒன்றையும் இனி சாதிக்கமுடியாது.

நாட்டில் இப்போது 80 களில் இருந்த மாதிரி மீண்டும் நாட்டைவிட்டு வெளிநாடு எங்காவது போனால் காணும் என்ற நிலைதான் பெரும்பாலான இளைஞர்களுக்கு.(மனைவி தான் முடிந்தளவு பலருடன் கதைத்து பார்ததாகவும் பெரும்பாலானோர் ஏதோ ஒரு ஏஜென்சிக்கு பணம் கட்டிவிட்டு காத்திருப்பதாகவே சொன்னார்களாம்)முகாமில் இருந்து இடம் பெயர்ந்தவர்கள் அன்றாடம் உணவுக்கு கூட வழியில்லாமல் இருப்பதாகவும் இடம் பெயர்ந்துவந்தவர்களை அங்கிருப்பவர்களே மதிக்காத ஒரு நிலையே காணப்படுகின்றதாம்.இதற்குள் தேசியக்கூட்டமைப்பு அரசியல் தீர்வு எதுவென காலம் காலமாக கூட்டணிகேட்டது போல் கேட்டு காலத்தைகழித்தால் காணுமென்றிருக்கின்றது.

அப்ப தீர்வுதானென்ன?யாருக்கு பிடிக்குதோ பிடிக்கவில்லையோ அரசாங்கம் இப்போதுசெய்வது எவற்றையும் எம்மால் நிறுத்தமுடியாது.அங்கிருப்பவர்கள் ஒத்துபோகத்தான் வேணும்.நாங்கள் முடிந்தளவிற்கு அவர்களுக்கு பொருளாதார ரீதியில் உதவியும் எமது இருப்பை அங்கு நிலை நாட்டுவதற்கு நாங்களும் ஏதும் முதலீடுகளை செய்யலாம். குறிப்பாக தனியார் ஆரம்ப கல்விநிலையங்கள் தொடங்கி ஒரு வளமான சந்ததி அங்கு உருவாக உதவிசெய்யலாம்.அடுத்த 10 வருடத்திற்கு எமது அடுத்த சந்ததி நாட்டில் ஒரு ஸ்திரமான நிலைக்கு வர எம்மலான உதவிகளை மட்டும் செய்தால் காணும் என நம்புகின்றேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.