Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் களத்தின் டாப் - 10 கருத்தாளர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் கரும்பு நான் மட்டும் தானா உங்கள் எழுத்துகளை வாசித்துக் கருத்துக் கூறுகினனான்...மற்றவர்கள் கூறுவதில்லையா?...இதை வாசிப்பவர்கள் நினைப்பார்கள் நான் உங்களை பிடித்த கருத்தாளார் என எழுதின படியால் ஏதோ எழுத வேண்டும் என்பதற்காக எழுதியுள்ளீர்கள் போல கிடக்குது <_<

வாதவூரான் என்னுடைய எழுத்தில் அவ்வளவு கோபம் வெளிப்படுகிறதா?

ஏன் அப்பிடி சொல்லுறீங்கள்?நான் எழுதியவர்களில் கனபேர் ஆஸ்ரேலியாவிலயிருந்து வந்திட்டினமோ?ஆனால் நான் லண்டன் தான் அண்ணா.

பையன் நினைச்சிருப்பான் நீங்கள் ஜம்மு பேபியின் மறு அவதாரம் என :)

  • Replies 99
  • Views 12.5k
  • Created
  • Last Reply

எனக்கும் யாழ் களத்தில் பலரது கருத்துக்கள் பிடிக்கும். தொடர்ந்து யாழ் களம் வருவதற்கு கருத்தாளர்களே உந்துதலாக இருக்கிறார்கள்.

சட்டென்று பத்துப்பேரைக் கூறுவதால் மற்றையவர்களைப் பிடிக்காது என்பதல்ல, பின்வருவோர் உடனடியாய் ஞாபகத்திற்கு வந்த் பெயர்கள் (வரிசைப் படுத்தவில்லை)

கிருபன், சுகன், பூனைக்குட்டி, சினேகிதி, கலைஞன், நிழலி, ரதி, இசைக்கலைஞன், சாணக்கியன், தமிழிச்சி இப்போதைக்கு உடனே நினைவில் வந்தவர்கள்.

இசைக்கலைஞனோடு நேரடியாக விவாதங்களில் ஈடுபட்ட ஞாபகம் இல்லை, ஆனால் அவரது நகைச்சுவை உணர்வு பல இடங்களில் மிகவும் இரசிக்கும் படி இருக்கும். எனது ஞாபகம் சரி எனின் முன்னர் இசைக்கலைஞனின் கையொப்பத்தில் பின்வரும் வாசகம் இருந்தது: “டைகரோட எயிமு டமில் ஈழம் ஸ்டேட்டு”. பலருடன் இதைப் பகிர்ந்து சிரித்துள்ளேன்.

கிருபன் -- கருத்துக்களில் எப்போதும் ஒரு நிதானம், அதாவது கருத்துக் கூறுவதற்கு முன்னர், கூறப்பட்ட விடயத்தைக் கிரகித்துக்கொண்ட நிதானம் இருக்கும். என்னைப் பொறுத்தவரை பேசுவதற்கு முன்னர் கேட்பது அவசியம். கிருபனிற்கு இப்பக்குவம் நிறைய உள்ளது. மற்றும் வாசிப்பனுபவம் நிறையவே தென்படுகிறது.

சுகன்: சிந்தனைத் தெளிவும் வாசைன அனுபவமும் கிருபனை ஒத்த நிதானமும் கருத்துக்களில் ஒரு உண்மையும் இருப்பது சிறப்பு.

நிழலி மற்றும் கலைஞன்: நான் பார்த்தவரை தம்மை அறிந்தவர்களாக இவர்கள் வெளிப்படுகிறார்கள். எனக்கு இது பிடிக்கும், எனக்கு இது பிடிக்கும் என்று கூறுவதில் எனக்குச் சங்கடம் ஏதுமில்லை என்ற சிந்தனை உடையோர். மற்றும் ஒரு பிரச்சினை ஏற்படுகையில் துவண்டு விடாது அதை எதிர்கொள்ளும் தைரியம் உள்ளவர்களாக பிரச்சினையை கிரமமாக எதிர்கொள்பவர்களாக இவர்களது கருத்து வெளிப்படுகின்றது. மற்றும் இவர்களது இரசிப்புத் தன்மை மற்றையவர்களில் தொற்றிக் கொள்ளும் அளவிற்கு இவர்கள் பெரும் இரசிகர்கள்.

பூனைக்குட்டி மற்றும் சினேகிதி: எனக்கு உளவியல் மற்றும் தத்துவார்த்த விசாரணைகளக் பிடிக்கும். இவர்களிற்கும் இம்முனை பிடித்த முனையாய் எனது பார்வையில் தென்படுகிறது. இருவரோடும் விவாதங்களில் ஈடுபட்டமை நினைவில் உண்டு. இவர்களோடு விவாதிக்கையில் எமக்குள் சிந்தனை அதிகம் தேவைப்படுவது மகிழ்ச்சியான அனுபவம்.

சுhணக்கியன்: சாணக்கியனோடு விவாதிப்பது எனது பார்வையில்; அரசியல் மற்றும் கொள்கை நிலைகளிற்கு அப்பால் சுவாரசியமானது. சொல்கின்ற கருத்தை உள்வாங்கி விவாதிக்கும் பக்குவம் சுhணக்கியனிற்கும் உள்ளது, மற்றும் தனது கருத்துநிலை ஒரு விவாதத்தில் தற்காலிகமாகவேனும் வெல்லத் தவறுகிறது என்கையில் அவ்விவதாத்தைப் பொறுத்தவரை ஏனும் தனது கருத்துநிலையைத் தன்னால் அடித்துக்கூறமுடியவில்லை என்பதை ஏற்றுக் கொள்ளும் பக்குவமும் வித்தகத்தனமும் சாணக்கியனிடம் உள்ளது.

ரதி: ரதி இயல்பாக நட்பான சுபாவம் உடையவராய்த் தெரிகிறார். கொஞ்சம் இன்னசென்ஸ், கொஞ்சம் பயம், கொஞ்சம் கோபம், கொஞ்சம் வெளிப்படை மொத்தத்தில் எனது பார்வையில் ரதி ஒரு girl next door போன்றுவர்.

தமிழச்சி: தாயகம் தொடர்பான கனேடிய தமிழர் செயற்பாடுகளில் எனக்கும் பலவருட நேரடி பட்டனுபவம் உள்ளது. தமிழச்சியின் கருத்துக்களை வாசிக்கையில் இத்தகைய அனுபவம் அவரிற்கும் (அதுகும் ஓரே காலகட்டத்தில்) இம்முனையில இருப்பதோடு பல விடயங்களில் இம்முனை தொடர்பில் நான் பெற்றுக் கொண்ட அதே பட்டறிவு அல்லது முடிவுகைளையே தமிழச்சியும் பெற்றுள்ளதாய்த் தோன்றுகின்றது. மேலும் உளவியல் தத்துவம் என்ற முனைகளிலும் தமிழச்சிக்கும் நாட்டமுள்ளமையும் அவரது கருத்துக்களில் வெளிப்படுகிறது.

மேற்படி பத்துப் பேரில் எவரையும் நேரடியாக எனக்குத் தெரியாது. இது இந்த அவதாரங்கள் பற்றிய எனது அவதாரத்தின் எண்ணம் மட்டுமே.

ஏன் கரும்பு நான் மட்டும் தானா உங்கள் எழுத்துகளை வாசித்துக் கருத்துக் கூறுகினனான்...மற்றவர்கள் கூறுவதில்லையா?...இதை வாசிப்பவர்கள் நினைப்பார்கள் நான் உங்களை பிடித்த கருத்தாளார் என எழுதின படியால் ஏதோ எழுத வேண்டும் என்பதற்காக எழுதியுள்ளீர்கள் போல கிடக்குது <_<

இல்லை. நீங்கள் என்னை பிடித்துள்ளது என்பதற்காக நான் உங்களை பிடித்துள்ளது என்று எழுதவேணும் என்று இல்லை. உங்களுக்கு நினைவுள்ளதோ தெரியாது.. நான் இணைத்தபாடல்கள் நெடுக்காலபோவான் எழுதி நான் பாடியது, மற்றது எனது மருமகனிற்கு செய்த பிறந்தநாள் பாடல் இவற்றின் ஒலிப்பதிவு தரத்தில் உள்ள குறைபாடுகளை நீங்கள் சுட்டிக்காட்டியதால் நான் மீண்டும் அவற்றை முடியுமான அளவு மட்டுபடுத்தப்பட்ட வசதிகளுடன் சற்று உயர்வான தரத்திற்கு மீளவும் மாற்றமுடிந்தது. அதன்பின்னர் அவற்றை கேட்டபோது முன்பைவிட நன்றாக காணப்பட்டது. இவ்வாறே நான் எழுதிக்கொண்டுள்ள நூல்... இதற்கு இப்போதைக்கு என்னால் வாசிக்ககூடியவர்களுக்கு நூலில் உள்ள விடயங்கள் பற்றி ஏற்படக்கூடிய பல்வேறு வினாக்களிற்கு விடை அளிக்க முடியாதாயினும்... காரணம் முதலில் நூலை முழுவதுமாக பூர்த்தி செய்யவேண்டும்... இந்த காரணத்தினால் உண்மையில் இங்கு பின்னூட்டங்களை பெரிதாக நான் எதிர்பார்க்கவில்லையெனினும் நீங்கள் ஆர்வத்துடன் அவற்றை வாசிப்பது, வாசித்துவிட்டு பின்னூட்டம்போடுவது இவை எல்லாம்கூட எனக்கு பிடித்த சககருத்தாளர் என்கின்ற வரிசையில் நீங்கள் இருக்கின்றீர்கள் என்று எழுத காரணமாக அமைந்தது.

Edited by கரும்பு

  • கருத்துக்கள உறவுகள்

இசைக்கலைஞனோடு நேரடியாக விவாதங்களில் ஈடுபட்ட ஞாபகம் இல்லை, ஆனால் அவரது நகைச்சுவை உணர்வு பல இடங்களில் மிகவும் இரசிக்கும் படி இருக்கும். எனது ஞாபகம் சரி எனின் முன்னர் இசைக்கலைஞனின் கையொப்பத்தில் பின்வரும் வாசகம் இருந்தது: “டைகரோட எயிமு டமில் ஈழம் ஸ்டேட்டு”. பலருடன் இதைப் பகிர்ந்து சிரித்துள்ளேன்.

நானே மறந்துவிட்டேன்..! <_< ஞாபகப்படுத்தியமைக்கு நன்றிகள் இன்னுமொருவன்..! :)

நீங்கள் சொல்வது அனைத்துமே மிகவும் சரி இன்னுமொருவன். நீங்கள் சிந்திக்கும் அதே கோணத்தில்தான் நானும் சிந்திக்கிறேன் என்பதை உங்கள் கட்டுரைகள் மூலம் அறிந்து கொண்டேன். என்னால் அவற்றை எழுத்தில் கொண்டுவருவது இப்போது கொஞ்சம் சிரமமாக இருக்கிறது. அதனால்தான் நான் எதனையும் இங்கு அதிகம் எழுதுவதில்லை. உளவியலில் நாட்டம் மட்டுமல்ல, எனது படிப்பும் அதுதான். எழுதுவதுற்கு நிறைய இருக்கிறது. காலம் வரும்போது நிச்சயமாக அவற்றை எல்லாம் எழுதுவேன்.

நிழலி மற்றும் கலைஞன்: நான் பார்த்தவரை தம்மை அறிந்தவர்களாக இவர்கள் வெளிப்படுகிறார்கள். எனக்கு இது பிடிக்கும், எனக்கு இது பிடிக்கும் என்று கூறுவதில் எனக்குச் சங்கடம் ஏதுமில்லை என்ற சிந்தனை உடையோர். மற்றும் ஒரு பிரச்சினை ஏற்படுகையில் துவண்டு விடாது அதை எதிர்கொள்ளும் தைரியம் உள்ளவர்களாக பிரச்சினையை கிரமமாக எதிர்கொள்பவர்களாக இவர்களது கருத்து வெளிப்படுகின்றது. மற்றும் இவர்களது இரசிப்புத் தன்மை மற்றையவர்களில் தொற்றிக் கொள்ளும் அளவிற்கு இவர்கள் பெரும் இரசிகர்கள்.

நன்றி இன்னுமொருவன்

இங்கு அநேகமாக அனைவரும் என் பெயரையும் போட்டு இருப்பது சந்தோசமாக இருக்கு. ஒரு விதத்தில் யாழில் எழுதுவதற்கும் ஊக்கமாகவும் இருக்கு இது

அதோட இன்னொரு உண்மையும் இருக்கு... இதே போல பிடிக்காத முதல் 10 பேரை...இல்லை இல்லை முதல் 3 பேரை வரிசைப் படுத்த சொன்னாலும், அதிலும் என் பெயரை பலர் போடுவினம் என்பதும் தெரியும் <_<

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு பத்துப்பேரை சொல்வதென்பது முடியாது காரணம் நான் பழகிய சிலரை சொன்னால் அது முகஸ்துதி பாடுவது போலாகிவிடும் அதை விடுத்து ஒருசிலரை மிகவும் பிடிக்கும் அதில் இன்னுமொருவன் அண்ணா,சுகன் அண்ணா,நெடுக்ஸ் அண்ணா,குட்டி அண்ணா மற்றும் எல்லாரையும் பிடிக்கும் ஆனால் வரிசைப்படுத்தவில்லை. நான் ஒற்றை மரம் எனும் தலைப்பில் ஒரு கவிதை மாதிரி எழுதமுயன்றேன் அதுக்கு காரணம் சுகன்,இன்னுமொருவன் அண்ணா அவர்களின் எழுத்துக்களின் தாக்கம் தான். வித்தியாசமாக என்னை எழுததூண்டியவர்கள் அவர்களே. நான் இன்னுமின்னும் கத்துக்குட்டி தான் ஆனால் அவர்களின் எழுத்துக்கள் மட்டும் ஆழ்மனத்தில் எதையோ எனக்குள் சொல்லிக்கொண்டிருக்கும். அடுத்து நெடுக்ஸ் அண்ணா பாவம் மனுசன் பந்தி பந்தியா எழுத எனக்கு ஆச்சரியம் தான் வரும் எப்படியப்பா இந்த மனுசனாலை முடியுது? ஆதாரபூர்வமான கருத்துக்கள் நெடுக்கிடம் எனக்கு பிடிக்கும். நெடுக்ஸ் அண்ணாவுடன் கோபமாகவும் ஒருசில கருத்துக்கள் பகிர்ந்திருக்கிறேன் ஆனால் நெடுக்ஸ் அண்ணாவிடம் பிடிக்காதது அசைலம் அடிச்சிட்டு வந்து என்று தொடங்கினவுடனை மட்டும் கடுப்பு வருது. <_<

அடுத்து குட்டி அண்ணா. இவரோடை கருத்துக்களில் நிறைய அனுபவம் தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கலைஞன் மற்றும் இன்னுமொருவன்...இனி மேல் யாழில் ரதியைப் பிடிக்க முடியாது <_< ...

ஜீவா குட்டியைப் பிடிக்கும் என எழுதினாலும்,நெடுக்ஸ்சைப் பிடிக்கும் என எழுதினாலும் இரண்டும் ஒன்று தான் :) ...இருவரும் ஒரு ஆள் என நிருபீக்காமல் நான் யாழை விட்டு போக போவதில்லை :) .

நன்றி இன்னுமொருவன்

இங்கு அநேகமாக அனைவரும் என் பெயரையும் போட்டு இருப்பது சந்தோசமாக இருக்கு. ஒரு விதத்தில் யாழில் எழுதுவதற்கும் ஊக்கமாகவும் இருக்கு இது

அதோட இன்னொரு உண்மையும் இருக்கு... இதே போல பிடிக்காத முதல் 10 பேரை...இல்லை இல்லை முதல் 3 பேரை வரிசைப் படுத்த சொன்னாலும், அதிலும் என் பெயரை பலர் போடுவினம் என்பதும் தெரியும் :lol:

நீங்கள் வேற நிழலி அப்படி வரிசைப்படுத்தினால் நான் தான் முதலாவதாக இருப்பேன்..2)அர்ஜீன் 3)நெல்லையன் 4)கரும்பு

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி வாதவூரான்

ச்சா கடைசியில சப்பண்டு போய்ட்டது :D:) :)

எங்களுக்கு விருப்பமான கருத்தாளர்கள் யாழின் டாப்10 கருத்தாளர்கள் மற்றவர்களுக்கும் பிடிக்கும் என்று சொல்வதற்கு இல்லை. என்றாலும்.. டாப்10 என்று போடும்போது அதிலும் சில சுவாரசியங்கள் உள்ளன. இதனால் நானும் ஓர் பட்டியலை போட்டால் எப்படி இருக்கும் என்று யோசித்து பார்த்தன். சிலர் டாப் 10 ஐ போடுவதற்கு நாங்கள் பயப்படுறமோ என்கின்ற மாதிரியும் சொல்லுறீனம். இதனால இது ஓர் முயற்சிதான். எனக்கு இன்றைக்கு பிடித்த டாப்10 :D

அர்ஜுன் - துணிவாக தனது கருத்தை கூறுவதால்

பையன் - ரெண்டுபேரும் கீரிக்கட்டு ஸ்கோர் பார்த்து சுவாரசியமான தகவல்களை பரிமாறிக்கொள்ளுவோம்.

ரதி - எனது எழுத்துக்களை, படைப்புக்களை அக்கறையாக வாசித்து கருத்து கூறுவதால்.

சுஜி - ஓர் பெண் கருத்தாளர் என்பதால்.. :) மற்றும்.. ஆரம்பத்தில குரங்கு, விலங்குகள் பற்றி எழுதிய விடயங்கள்.. மற்றும் பகிர்ந்துகொள்கிற பாட்டுக்கள்.

நெடுக்கு - கருத்துமுரண்பாடுகளில் வட, தென் முனைவுகளில இருந்தாலும்.. ஒற்றுமையான பல விடயங்கள் உள்ளதால.

புத்தன் - நீண்டகால கருத்துக்கள உறவு. வேறு அவதாரங்கள் பற்றி தெரியாது. ஆனால்.. இந்த அவதாரத்தில் புத்தனுடனான கருத்தாடல் சுவாரசியமாய் இருக்கும்.

குமாரசாமி - எழுதும் எல்லாம் பிடிக்கும் என்று சொல்லிறதுக்கு இல்லை. ஆனால் அவற்றில் பிடிக்கும் பல விசயங்களும் உள்ளது. குறிப்பாக பகிடிகள்.

நிழலி - எழுதும் எல்லாம் பிடிக்கும் என்று சொல்லிறதுக்கு இல்லை. ஆனால் அவற்றில் பிடிக்கும் பல விசயங்களும் உள்ளது. குறிப்பாக பகிடிகள். அண்மையில நிழலி எழுதின ஏதோ ஓர் பகிடியை வாசிச்சு சிரிச்சன், தற்சமயம் நினைவில் இல்லை.

ஆர்.ராஜா - இசை ஆர்வம், ஆங்கிலப்பாடல்கள்

கிருபன் - கிருபன் எழுதும் ஓரிரு கருத்துக்களில் சில பிடிக்கும், பல பிடிக்கும் :)

10 பேரின் பட்டியல் வந்துள்ளது.

முரளி,

என்னையும் நினைவு கூர்ந்தமைக்கு மிக்க நன்றி.

எமது அன்புக்கு இனிய உறவு புரட்சிகரதமிழ்த்தேசியன் பாணியில் டிஸ்கி.

நன்றி ராஜா அண்ணை, இன்னுமொருவன், கிருபன் மற்றும் நமது கருத்துக்கள் பிடிக்கும் என்று கூறிய, கூறாவிட்டாலும் விரும்பி வாசிக்கின்ற உறவுகள் அனைவருக்கும். ரதி கூறியதுபோல் யாழில் உங்களுக்கு பிடிக்காத டாப்10 யார் என்று கருத்தாளர்களிடம் கேட்டு ஓர் திரி தொடங்கினால் அதில் முதல் மூன்றினுள் நான் நிச்சயம் இடம்பெறுவேன். :D

  • கருத்துக்கள உறவுகள்

டிஸ்கி பாணியை பின்பற்றும் தோழர் ராஜா மற்றும் இந்த எளியவனை பாராட்டிய தோழர் வாதவூரான் ஆகியோருக்கு நன்றிகள் :D

ஜீவாவுக்கும், மற்றும் எனது பெயரைக் குறிப்பிட்ட கள உறவுகளுக்கும் நன்றி.

...

ஜீவா குட்டியைப் பிடிக்கும் என எழுதினாலும்,நெடுக்ஸ்சைப் பிடிக்கும் என எழுதினாலும் இரண்டும் ஒன்று தான் :) ...இருவரும் ஒரு ஆள் என நிருபீக்காமல் நான் யாழை விட்டு போக போவதில்லை :) .

....

வீணாக வார்த்தைகளை சிதற விடவேண்டாம். உங்கள் யோசனைககள் தவறானது என்று உணர்ந்து கொள்ளுவீர்கள் ரதி! திரும்பவும் இங்கு குறிப்பிடுகிறேன் குட்டி என்ற பெயரைத் தவிர வேறு பெயரில் நான் எழுதுவதில்லை!!! :D

  • கருத்துக்கள உறவுகள்

அமைதி குட்டி இதுக்கெல்லாம் கோபப்படலாமா

அப்பாடா கடைசியாக யாழிலயுமா? நான் உண்மையிலேயே யாழில் இணைய காரணமானது யாழில் கருத்தாடும் உறவுகளின் ஆக்கங்களால் கவரப்பட்டு தான்.நானும் எத்தனையோ ஆக்கங்கள் எழுத வேணும் என்று நினைப்பேன் ஆனால் நேரமும் மனநிலையும் சரிப்பட்டு வருவதில்லை.எல்லாரும் எழுதுகினம் எண்டு போட்டு நானும் எழுதிறன் குறை நினைக்ககூடாது சொல்லிப்போட்டன்.எனக்கு எல்லோருடைய கருத்துக்களும் ஓரளவு பிடித்தாலும் நிலாமதி அக்காவின் அனுபவ கதைகளும் இளங்கவி அண்ணா(அக்கா)வின் கவிதைகளும் நெடுக்ஸ் இன் விளக்கங்களும் தமிழ்சிறி அண்ணா, குமாரசாமி தாத்தாவின் நகைச்சுவையும் இளையபிள்ளை (அக்காவோ அண்ணாவோ தாத்தாவோ )யின் மருத்துவ குறிப்புகளும் பையனின் (26)மட்டயடியும் ராஜா அண்ணா புரட்சி அண்ணா ஆகியோரின் சுகமான கீதங்களும் ரதி அக்காவின் கோபமும் சுஜி அக்காவின் ஆர்வமும் (தமிழ் ) முனிவரின் லொள்ளும் நிழலி அண்ணாவின் ஜொள்ளும் ஜம்மு பேபியின் பஞ்சும், அப்பா களைச்சுப்போனன்......தயவு செய்து மிச்சத்தை ஆராவது முடியுங்கோவன்!!!!!!!!!!

வாதவூரான்,

என்னையும் நினைவில் நிறுத்தியமைக்கு நன்றிகள். :)

Edited by r.raja

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் -- கருத்துக்களில் எப்போதும் ஒரு நிதானம், அதாவது கருத்துக் கூறுவதற்கு முன்னர், கூறப்பட்ட விடயத்தைக் கிரகித்துக்கொண்ட நிதானம் இருக்கும். என்னைப் பொறுத்தவரை பேசுவதற்கு முன்னர் கேட்பது அவசியம். கிருபனிற்கு இப்பக்குவம் நிறைய உள்ளது. மற்றும் வாசிப்பனுபவம் நிறையவே தென்படுகிறது.

எனக்கு நிதானம் இருக்கின்றதா? :lol:

கருத்துக்களை வாசிக்காமல் பதில் வைப்பதில்லை என்பது உண்மைதான். எனினும் சிலவற்றை மூளை வடிகட்டிவிடும்!

  • கருத்துக்கள உறவுகள்

3)புத்தன் யாழில் இவர் எழுதும் கதைகளை அடிப்பதற்கு ஆளே இல்லை.

கதைப்பகுதியில் உள்ள கிறுக்கல் என்று சொல்லுங்கோ...உண்மையான எழுத்தாளர்கள் பார்த்தால் என்னை செருப்பால அடிப்பார்கள்....நன்றிகள்

(ஒரு மாதிரி சுழிச்சிட்டட்டா... நிலைமையை..! நான் தான் புத்தனுக்கே பாடம் எடுத்த சுழியன்..! (இதையும் நம்பிடுவாங்களோ... நம்பினால் நம்பட்டும்.. நஸ்ரமா.. இல்லைத் தானே..! )

ஒறிஜினல் புத்தனை தானே சொல்லுறீயள் :lol:

என்னைப்பொறுத்தவரை

இங்கு எனது நேரத்தை செலவிடுவதற்கு காரணம் எமது மக்களுக்கு உதவுவதும்

அவர்களுக்கு இடையூறு செய்வோரை இனம் காட்டுவதும்தான்.

அந்த வகையில் இங்கு இரு பகுதியினர் உள்ளனர்

ஜில்

புத்தன்

இதில் அடங்கோதோர் பற்றி நேரம் கிடைக்கும் போது எழுதுகின்றேன்

நன்றிகள் விசுகு

எங்களுக்கு விருப்பமான கருத்தாளர்கள் யாழின் டாப்10 கருத்தாளர்கள் மற்றவர்களுக்கும் பிடிக்கும் என்று சொல்வதற்கு இல்லை. என்றாலும்.. டாப்10 என்று போடும்போது அதிலும் சில சுவாரசியங்கள் உள்ளன. இதனால் நானும் ஓர் பட்டியலை போட்டால் எப்படி இருக்கும் என்று யோசித்து பார்த்தன். சிலர் டாப் 10 ஐ போடுவதற்கு நாங்கள் பயப்படுறமோ என்கின்ற மாதிரியும் சொல்லுறீனம். இதனால இது ஓர் முயற்சிதான். எனக்கு இன்றைக்கு பிடித்த டாப்10 :lol:

.

புத்தன் - நீண்டகால கருத்துக்கள உறவு. வேறு அவதாரங்கள் பற்றி தெரியாது. ஆனால்.. இந்த அவதாரத்தில் புத்தனுடனான கருத்தாடல் சுவாரசியமாய் இருக்கும்.

இன்றைய டாப் டென் நாளைய லாஸ்ட் டேன் ஆகவும் மாறும் ...அதுதான் வாழ்க்கை....

இன்றைய போராளிகள் சிலர் நாளைய துரோகிகள் ஆனது போல்

நன்றிகள் கறும்ஸ்

உங்களுடன் உங்கள் பட்டியலில் உள்ளவர்கள் எல்லோரையும் பிடிக்கும்

அப்ப என்னையும் பிடிக்கும் என்று அவர் பட்டியல்ஊடாக சொல்லுறீயள் ...நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

ஜம்மு பேபியின் பஞ்சும், அப்பா களைச்சுப்போனன்......தயவு செய்து மிச்சத்தை ஆராவது முடியுங்கோவன்!!!!!!!!!!

கண்ணா தொடங்குவது முக்கியமில்லை தொடங்கினதை. முடிக்கவேண்டும் ...அ[ப்ப நானும் வரட்டா

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை ஆஸ்ரேலியாவோ :lol:

அப்ப நான் வரட்டா

சீ சீ......... அண்ணை கனடா போல கிடக்குது.....சிட்னிகாரர் ஒருத்தரின் பெயரையும் காணவில்லை :lol:

  • கருத்துக்கள உறவுகள்

எப்பிடி எல்லாரையும் குழப்பீட்டம் அல்லே அங்கை தான் நிற்கிறான் இந்த வாதவூரான் .என்ன ரொம்ப என்னை நானே புகழுறனோ?.சரி சரி கனபேர் உங்கை குழம்பிறது தெரியுது .நான் மிச்சத்தையும் தொடருவம் .கரும்பு (மச்சான் ,மாப்பு,முரளி,கலைஞன் )வின் குரல் வளமும் ஆங்கிலப்புலமையும் (மற்ற ஆங்கில புலமையுடைய ஆக்கள் குழம்பகூடாது நான் யாழ் களத்தில் பார்த்ததை மட்டும் பார்த்து சொல்லுறன்), சகாரா அக்காவின் கந்தக புகையும், புத்து மாமாவின் அறிவுரையும்(ஆனா எனக்கு ஜில்லை பிடிக்காது ) சின்னப்பு தாத்தாவின் கள்ளுகொட்டிலும் தூயா அக்காவின் சமையல் குறிப்புகளும் குருவிகளின் வாதத்திறமையும்,சாத்திரி அண்ணாவின் உரையாடல் நாடகமும்,விசுகு அண்ணாவின் முயற்சியும்,குட்டியின் கருவாடும் ,இப்பிடி சொல்லிக்கொண்டே போகலாம்.கடைசியாக எனக்கு தமிழில் தட்டச்சு செய்ய உதவிய ஈழமகள் அக்கா (இவவை இப்ப களப்பக்கம் காண முடியவில்லை )இவர்கள் பிரதானமாக யாழ் களம் எண்டவுடனை ஞாபகத்துக்கு வாறவை.மற்றும்படி மற்றாக்களையும் பிடிக்கும்.ஆறாவது தவறியிருந்தால் குறை நினைக்கபடாது சொல்லிப்போட்டன்.

Edited by வாதவூரான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சீ சீ......... அண்ணை கனடா போல கிடக்குது.....சிட்னிகாரர் ஒருத்தரின் பெயரையும் காணவில்லை :)

அப்ப அவன் இப்ப கனடாவிலை செற்றிலாகிட்டானே ஆஃஆ

  • 5 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இவ்விணைப்பில் ஓர் கருத்தாளனாக என்னையும் தேர்ந்தமைக்கு நன்றி.நான் யாரையும் வரிசைப்படுத்த விரும்பவில்லை.

  • 9 years later...
  • கருத்துக்கள உறவுகள்
On 10/9/2010 at 6:55 AM, தமிழ் சிறி said:

ஆரும் பலூன் ஊதினாலும் சுத்தி நின்று பார்க்கின்றது எமது குணம்.

இந்தப் பரவணிக்குணம் மாறாது😂🤣

எதையோ தேட இந்தத் திரி தட்டுப்பட்டுது.😆

இந்தத் திரியை தொடங்கின சுஜியும் இல்லை. திரியில் சொல்லப்பட்ட பலரும் இப்போது யாழில் இல்லை!

 

 

On 10/3/2010 at 5:21 PM, சுஜி said:

நீங்களும் உங்களுக்கு பிடித்த 10 கருத்தாளர்களை வரிசைபடுத்துங்கள்

இப்போது இந்தத் திரிக்கு எப்படி கருத்து வைக்கலாம்?😬

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

இந்தப் பரவணிக்குணம் மாறாது😂🤣

எதையோ தேட இந்தத் திரி தட்டுப்பட்டுது.😆

இந்தத் திரியை தொடங்கின சுஜியும் இல்லை. திரியில் சொல்லப்பட்ட பலரும் இப்போது யாழில் இல்லை!

 

 

இப்போது இந்தத் திரிக்கு எப்படி கருத்து வைக்கலாம்?😬

யாழ் களத்தின் ரொப் ரென் கடுப்பாளர்கள் ?😀

  • 11 months later...
  • கருத்துக்கள உறவுகள்

 

On 27/12/2019 at 18:38, கிருபன் said:

எதையோ தேட இந்தத் திரி தட்டுப்பட்டுது.😆

இந்தத் திரியை தொடங்கின சுஜியும் இல்லை. திரியில் சொல்லப்பட்ட பலரும் இப்போது யாழில் இல்லை!

2013 ற்கு முதல் நானுமில்லை. அப்போது நான் ஒரு யாழ்கள வாசகன்.

 download.jpeg?w=179&h=281&crop=1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.