Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எந்த பானம் பருக மிகவும் பிடிக்கும்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் விரும்பிக் குடிக்கும் பானம் எது?...தேநீரா,கோப்பியா,பாலா,குளிர்பானமா அல்லது மதுவா?...காலையில் எழும்பியவுடன் எனக்கு கோப்பி குடிக்கா விட்டால் அதுவும் ஊர் கோப்பி குடிக்கா விட்டால் எனக்கு பொழுது விடியாது[விரத நாட்களில் காலையில் நான் கோப்பி குடிக்காமல் இருப்பதற்காகவாவது கடவுள் எனக்கு வரம் தர வேண்டும்.] பின்னேரங்களில் பெரிதாக தேநீர் குடிப்பதில்லை கடுமையான குளிர் என்டால் மாத்திரம் வெறும் தேநீர்[பிளேன்]குடிப்பதுண்டு ஆனால் இரவு படுக்கு முன் பச்சை தேநீர் குடிப்பேன்கீரின்]அது குடித்தால் சாப்பாடு கெதியாக சமிபாடு அடைந்த மாதிரி இருக்கும்.

வெயில் காலம் என்டால் குளிர்பானம் குடிப்பேன்...எனக்கு பிடித்தது லெமனேட்[தேசிக்காயும் உடம்புக்கு நல்லதாமே!] முந்தி எனக்கு கோக் குடிக்க பிடிக்கும் ஆனால் அது குடித்தவுடன் உடம்பு திடிரென வைக்க தொடங்கியவுடன் நிற்பாட்டி விட்டேன்...வேற குளிர்பானம் பெரிதாய் குடிப்பதில்லை...நீங்கள் காலையில் என்ன குடிப்பீர்கள்?...அது குடித்தால் உங்களுக்கு புத்துணர்ச்சியாய் இருக்குமா?மகிழ்ச்சியுடனும்,சுறுசுறுப்பாக நீங்கள் செயற்பட அப் பானம் உதவுமா?...சில பேர் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பார்கள் அதுவும் உடம்புக்கு நல்லது என சொல்வார்கள் அது உண்மையா?

  • Replies 62
  • Views 6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

organic-tea.jpg

எனக்கு விடிய எழும்பியவுடன் ஒரு கப் தேநீர் குடிக்காவிட்டால்..... அடுத்த வேலையை ஆரம்பிக்க முடியாது போல் இருக்கும்.

அதுகும்..... சீனி போடாமல், பால் விடாமல் கடும் சாயமாக இருக்க வேண்டும். வேலை இடத்தில் கோப்பி இருந்தாலும்..... எப்பவாவது ஒரு எண்ணம் வந்தால்... தான் கோப்பி குடிப்பேன். ஆனால் அது எனக்கு புத்துணர்ச்சியை தருவதில்லையாதலால், வீட்டிலிருந்தே சுடு தண்ணிப் போத்தலில் தேநீர் கொண்டு போவேன். அந்த தேநீரை அடிக்கடி சில மிடறு குடிக்கும் போது...... அப்படியொரு புத்துணர்ச்சி ஏற்படும். :lol:

பகலில் அடிக்கடி தண்ணீர் குடித்து கொண்டிருப்பேன். கோடை காலத்தில் ஐஸ் ரீ, பழ ரசம் ஏதாவது நல்ல குளிர்ச்சியாக குடிப்பேன். நித்திரை வராத மாதிரி இருந்தால்..... கப் பாலில் தேன் விட்டு குடிப்பேன். பின்னேரம் ஆறு மணிக்குப் பிறகு தேநீர், Fபன்ரா, கோலா, கோப்பி போன்றவை குடித்தால்... அன்று சிவராத்திரி தான். :) வாரத்தில் ஒரே.... ஒரு, முறை மட்டும் பியர் குடிப்பேன்.

.

  • கருத்துக்கள உறவுகள்

மிகச்சிறந்த இயற்கை பானம் சுத்தமான தண்ணீர்.......எந் நேரமும் எவ்வேளையிலும் பருகலாம். காலயில் வெறும் வயிற்றில் குடிப்பது கழிவுகளை அகற்ற உதவும்.

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

பால் கலக்காத தேநீர்தான் என்னுடைய தெரிவும். காலை மாலை என இருவேளைகள் குடிப்பேன். இங்குள்ள கோப்பி வகைகள் (Tim Hortons) பெரிதாகப் பிடிக்காது. ஆனாலும் சிலவேளைகளில் வேலையை விட்டு வரும்போது வாங்குவேன், சும்மா உற்சாகத்துக்காக... :huh: வேலையிடத்திலும் பின்னேரப் பொழுதில் ஒரு கோப்பி குடிப்பதுண்டு. :lol:

மற்றும்படி, உற்சாகபானம் (பியர் மட்டும்) கோடைகாலத்தில் பாவிப்பேன் என்று சொல்ல விருப்பம்தான்..! :) ஆனாலும் மற்ற ஆக்களையும் சமாளிச்சுப் போகவேண்டி இருக்குதே..! :huh: அதனால் சில ஆண்டுகளா தியாகம் பண்ணினபடி இருக்கிறன்..! :D ஆக்கள் விடுமுறையில் போனால் வேற கதை..! :blink:

Edited by இசைக்கலைஞன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பியர் குடித்தால் வயிறு வைக்குமாமே உண்மையா :lol:

நிறைய தண்ணீர் குடிப்பேன். காலையில் எழுந்ததும், 1 லீட்டர் குளிர் தண்ணீர் குடிப்பேன். அதன் பின் நல்ல பால் போட்ட தேநீர். முழுநாளும் தண்ணீர் வேண்டும். பழரசம் நன்றாக குடிப்பேன்.

வார விடுமுறையில் இரு நாள் நல்ல குளிரான பியர் குடிப்பேன்.

முன்பு புகைக்கும் பொழுது ஒரு நாளைக்கு ஏழு, எட்டு கோப்பைகள் கோப்பி / தேநீர் வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

பியர் குடித்தால் வயிறு வைக்குமாமே உண்மையா :lol:

பியர் மட்டுமில்லை..! எங்கடை சோறும் ஒரு ஆபத்தான சாமான்..! :):D

Edited by இசைக்கலைஞன்

பியர் குடித்தால் வயிறு வைக்குமாமே உண்மையா :rolleyes:

பியர் குடித்தால் வயிறு வைக்காது .பியர் அடித்தால் வயிறு வைக்கும்.

காலையில் பால், இப்போது சில காலமாக மாலையில் பால்தேனீர். இதரவேளைகளில் நீர்.

கோப்பி, தேனீர் விருந்தினர் இல்லங்களில் பருகுவது.

விடிய தேத்தண்ணி குடிக்காவிட்டால் உயிரே போய் விடும் எனக்கு... மனிசி தேத்தண்ணி போட கொஞ்சம் தாமதமானாலும் வீட்டில் பெரிய பூகம்பமே உருவாக்கி விடுவேன். நாளொன்றுக்கு ஒரே ஒரு தடவை தான் குடிப்பேன்

வார இறுதி நாட்களில் இரவில் ஏதாவது ஒரு விஸ்கி அல்லது ரெட் வைன் குடிக்காவிட்டால் அது வார இறுதி நாட்கள் போலவே இருக்காது

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

பியர் குடித்தால் வயிறு வைக்குமாமே உண்மையா :rolleyes:

இதென்ன கேள்வி. உங்கள் வயிற்றைத் தடவிப் பார்த்தால் தெரிந்துவிடும்தானே :wub:

  • கருத்துக்கள உறவுகள்

காலையில் எழுந்தவுடன் சுடுதண்ணீர் பின்னர் சீனி போட்ட வெறும் தேனீர்(plain tea). வேலையில் கோப்பி ஒரு குவளை.மதியத்துக்கு பின் தேனீரோ,கோப்பியோ (coffee)குடிப்பது இல்லை.கோக்(coke) போன்றவை பிஸ்ஸா சாப்பிட்டால் மட்டும்.மற்றும் படி சாப்பாட்டுக்கு பின் சுடுதண்ணீர் குடிப்பேன்.நண்பர்கள் சேர்ந்தால் பியர்/வைன் குடிப்பதுண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

காலையில் பாலை எடுத்து பொங்க காய்ச்சி அதி்ல் மூன்று கரண்டி கோப்பி, மூன்று கரண்டி சீனி போட்டு கலக்கி குடித்தால் தான் சுறுசுறுப்ப வரும்.

இடைப்பட்ட நேரத்தில் சாயா . மத்தியாணம் சாப்பிட்டதும் ஒரு கிளாஸ் தண்ணீர். மாலையில் பியர். இரவு படுக்கைக்கு முன் பச்சை தேனீர் .

சனி ஞாயிறு கொஞ்சமாய் விஸ்கி.

ஒரு மனிதன் ஒருநாளுக்கு எட்டு லீற்றர் தண்ணீர் குடித்தால் ஒரு வியாதியும் வர மாட்டாது என சொல்லுகிறார்கள் - இதன் மூலம் தண்ணீரே நல்லம்.

(சீனி அதற்கு எதிர்மாறு)

00-18 : பெற்றோர் தருவது

18-35 : விரும்பியது

35-... : வைத்தியர் சொல்லுவது

என்னுடைய பழக்கங்கள் அடிக்கடி மாறும். படிக்கும் காலத்தில் நாள் முழுவதும் கோப்பி, கோலா போன்றவைகளிலேயே காலம் தள்ளியுள்ளேன். இப்போது உடல்நலத்தைப் பேணும் விருப்பமுள்ளதால் ஆரோக்கியமான பானங்களையே அதிகம் பருகுவதுண்டு. காலையில் ஒரு கிளாஸ் ஆரஞ்சு பானம் அல்லது சோயாப் பால் குடிப்பேன். உடம்பைக் குறைக்கு முயற்சித்துக் கொண்டிருப்பதால் வேலையிடத்தில் பச்சைத் தேநீர் அடிக்கடி குடிப்பேன். பின்னேரங்களில் எதுவும் குடிப்பதில்லை. எப்போதாவது இருந்துவிட்டு, கோக் அல்லது ஐஸ் கப்பசினோ குடிப்பேன். வேலையிடத்தில் அல்லது வகுப்பு நேரங்களில் உடம்பு அலுப்பாக இருந்தால் கோப்பி போன்றவை குடிப்பேன். எனக்கு விருப்பமான பானம் என்றால் அது ஐஸ் கப்பசினோதான். நாள் முழுவதுமே குடித்துக் கொண்டிருக்கலாம். ஆனால், அது குடித்தால் உடம்பு வைத்துவிடும் என்பதால் அதற்கு இப்போதைக்குத் தடா.

நான் இப்போது வேலை பார்க்குமிடத்தில், எங்கள் பகுதியிலுள்ளவர்களின் பிறந்தநாளைக் கொண்டாடும் பழக்கம் உண்டு. கேக் வெட்டும் நேரத்தில் அநேகமாக வைனும் இருக்கும். அதனால் ஒவ்வொரு மாதமும் எனக்கு அந்தப் பாக்கியம் கிடைத்துள்ளது. மீதம் இருப்பதை வைத்து வைத்து காலத்தை ஓட்டுவோம். இப்போது கிறிஸ்மஸ் சீசன் தொடங்கிவிட்டதால், இனிக் கேட்கவே முடியாது. அதோடு, மேலும் இருவரின் பிறந்தநாளும் வருகிறது. சொல்லி வேலையில்லை. :wub::lol::lol:

இதைப் பார்த்துவிட்டு, நிறையப்பேர் எங்கள் கொம்பனிக்கு வரத்துடிப்பார்கள் என்று தெரியும். இப்போது ஐரிப் பகுதியில் வேலைக்கு ஒருவரைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள் (உண்மையாகவே) . :rolleyes::wub:

இதைப் பார்த்துவிட்டு, நிறையப்பேர் எங்கள் கொம்பனிக்கு வரத்துடிப்பார்கள் என்று தெரியும். இப்போது ஐரிப் பகுதியில் வேலைக்கு ஒருவரைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள் (உண்மையாகவே) . :rolleyes::wub:

உத எழும் போதே என் பெயர் தானே முதலில் நினைவுக்கு வந்தது?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எந்த பானம் பருக மிகவும் பிடிக்கும்?

ஊரிலை பக்கத்து புவனேஸ் அக்கா வீட்டு கிணத்து தண்ணி.

இஞ்சை வந்து பைப் தண்ணி.

உள்ளதை சொன்னால் நம்பவே போறியள் :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கு அநேகமானவர்கள் காலையில் தேநீர் தான் குடிப்பார்கள் போல இருக்கிறது...வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால் வயிற்றுக்குள் ஒன்றும் செய்யாதா?

இதென்ன கேள்வி. உங்கள் வயிற்றைத் தடவிப் பார்த்தால் தெரிந்துவிடும்தானே :wub:

நான் பியர் குடிப்பதில்லை விஸ்கியும்,வொட்காவும் மட்டும் தான்.

ஊரிலை பக்கத்து புவனேஸ் அக்கா வீட்டு கிணத்து தண்ணி.

இஞ்சை வந்து பைப் தண்ணி.

உள்ளதை சொன்னால் நம்பவே போறியள் :wub:

ஏன் அண்ணா உங்கட வீட்டு கிணற்று தண்ணீரை குடிப்பதில்லையா :rolleyes:

காலையில் பாலை எடுத்து பொங்க காய்ச்சி அதி்ல் மூன்று கரண்டி கோப்பி, மூன்று கரண்டி சீனி போட்டு கலக்கி குடித்தால் தான் சுறுசுறுப்ப வரும்.

இடைப்பட்ட நேரத்தில் சாயா . மத்தியாணம் சாப்பிட்டதும் ஒரு கிளாஸ் தண்ணீர். மாலையில் பியர். இரவு படுக்கைக்கு முன் பச்சை தேனீர் .

சனி ஞாயிறு கொஞ்சமாய் விஸ்கி.

கறுப்பி மதுபானம் பாவிப்பீங்களா நம்ம முடியவில்லை :lol:

  • கருத்துக்கள உறவுகள்

காலை எழும்பியவுடன் பச்சைத்தண்ணி.பின்பு ஒரு சூடான கோப்பி.ஒரு மனி இடைவெளியில் இன்னொரு கோப்பி.லீவு நாள் என்றால் மாலையில் பியர் அல்லது சிவப்பு வைன்.அதோட செவ்வாயில் தேன் குடிப்பது என்றால் ரொம்ப பிடிக்கும். :rolleyes:

காலை எழும்பியவுடன் பச்சைத்தண்ணி.பின்பு ஒரு சூடான கோப்பி.ஒரு மனி இடைவெளியில் இன்னொரு கோப்பி.லீவு நாள் என்றால் மாலையில் பியர் அல்லது சிவப்பு வைன்.அதோட செவ்வாயில் தேன் குடிப்பது என்றால் ரொம்ப பிடிக்கும். :lol:

ஒரு செவ்வாயிலா அல்லது பல செவ்வாயிலா? :lol:

Edited by thappili

  • கருத்துக்கள உறவுகள்

காலையில் தேநீர் பருகுவேன்.

சுக்குக்கோப்பி(வேர்க்கம்பு சேர்த்த ஊர்க்கோப்பி) குடிக்க அதிகம் விருப்பம்.

பனிக்குளிரை உள்வாங்கிக் கொண்டு ஆவிபறக்க ஊர்கோப்பியை உறிஞ்சுவதே ஒரு தனிச்சுகம் ஆனா என்னால் இந்தச்சுகத்தை அனுபவிக்க முடியாது. கோப்பி வகையறாக்கள் எனக்கு ஒற்றைத்தலைவலியை உருவாக்குவன. அதனால் கட்டாய தவிர்ப்பு. நண்பர்களுடன் ரிம்கொட்டனுக்குப் போனால் என்னை நன்கு அறிந்த நண்பர்கள் ஏர்ல் கிரே ரீ யை எனக்காக வாங்குவார்கள்.

குளிர்பானங்களில் காஸ் இல்லாதவை

எனக்கு மிகப்பிடித்தமான குளிர்பானம் குறிப்பாக ஸ்ரோபெரியும் வாழைப்பழமும் இணைந்த buble tea ஆகும்.

சீனி போடாத வெறும் தேனீர். வேலை சம்பந்தமான மன அழுத்தம் நிறைய இருப்பத்தினால் ஒரு நாளைக்கு 10 - 12 கப் இறங்கும். ஏறத்தாள மணித்தியாளத்திற்கு ஒரு தடவை கொதிக்க கொதிக்க நாக்கில் பட குடிக்கும் போது மன அழுத்தம் குறைவது போன்ற பீலிங்.

நெஞ்செரிவுப் பிரச்சனை இருப்பதால் பால் தேனீர், பால் கோப்பி குடித்தால், துன்பமோ துன்பம்.

கோடைகாலத்தில் பிடித்த பானம் தாய்லாந்தில் இருந்து வரும் டின்களில் அடைத்த இளநீர். வளுக்கள்களை நறுக்கிப் போட்டிருப்பார்கள். குளிர வைத்துக் குடிக்க அமிர்தம்.

காலை எழும்பியவுடன் பச்சைத்தண்ணி.பின்பு ஒரு சூடான கோப்பி.ஒரு மனி இடைவெளியில் இன்னொரு கோப்பி.லீவு நாள் என்றால் மாலையில் பியர் அல்லது சிவப்பு வைன்.அதோட செவ்வாயில் தேன் குடிப்பது என்றால் ரொம்ப பிடிக்கும். :lol:

செவ் வாயில் (சிவந்த வாயில்- வெத்திலை போட்டு சிவந்த வாயா அல்லது லிப்ஸ்டிக் போட்டு சிவந்த வாயா?) :lol:

-----

ஒரு நாளைக்கு 15 கோப்பைகள் (கோப்பி,தேநீர், காப்பசீனோ) குடித்து அதன் விளைவால் தற்போது caffeine free தேநீர் மட்டும் எப்ப எல்லாம் குடிக்க வேண்டும் போல் உள்ளதோ அந்த நிமிடமே (தேயிலை சாயம் அளவாக இருக்கவேணும், கொழுப்பு நீக்கப் பட்ட பால், சீனி பாவிப்பதில்லை) குடிக்கப் பிடிக்கும், யாரும் போட்டுத் தருவார்கள் என்று எதிர் பார்ப்பது பிடிப்பதில்லை (எனக்குப் பிடிப்பது போல் எல்லாருக்கும் போடத் தெரியாது) அதனால் நானே போட்டு குடித்துவிடுவேன்.

வேலையில் களைப்பு அதிகமானால் மட்டும் வீடு வந்ததும் கண்ணில எது முதலில் படுதோ அதில் ஒரே ஒரு கிளாஸ் எடுப்பேன். (வேலை நாட்களில் அதை விட அதிகம் எடுப்பதில்லை) வார விடுமுறை நாட்களில் mood-ஐப் பொறுத்து எல்லாம் ஒன்றாகக் கலந்து ஒரு ஸ்பெஷல் மிக்ஸ்! :lol::)

முன்பெல்லாம் கோடை காலங்களில் நெல்லி ரசம் ஐஸ் போட்டு குடிக்க பிடிக்கும், குளிர்பானகள் 'அக்கமாலா கப்பசி' பிடிப்பதில்லை lucozade தவிர :D இந்த முறை கோடை விடுமுறைக்கு தென் ஐரோப்பிய நாடு ஒன்றுக்கு போய் இருந்தபோது வெப்பம் 42 பாகைக்கு அதிகமான காரணத்தால் குளிர் பானங்கள் அதிகம் குடிக்கவேண்டும் போல் இருந்தது. 'அக்கமாலா கப்பசி' அதிகம் இருந்ததால் அதைத் தவிர்த்து ஐஸ் தேநீர் முதல் முதலில் குடித்திருந்தேன். அதன் சுவை பிடித்திருந்தது. மற்றப்படி தண்ணீர் தான் குடிப்பது வழக்கம்.

Edited by குட்டி

காலையில் ஒரு சுடு டீ கட்டாயமாக நெடுகிலும் இருந்து வந்தது.கடந்த 2 வருடங்களாக அது இல்லாமல் சில வேளைகளில் பச்சைதண்ணீருடன் காலை பானம் முடிந்துவிடும்.பின்னர் மதிய உணவு (வேலையால் வந்து 5 மணிக்கு) அதன்பின் ஒரு கிறீன் டீ.பின்னர் இரவு சிலவேளை ஒரு சொட்.

வார இறுதி வெள்ளி,சனி அனேகம் எப்படியும் ஒரு குடிப்பாட்டி அமைந்துவிடும்.பாதாள உலகுக்கு போய்வருகின்றேன் எனச் சொல்லிவிட்டுத்தான் போவேன்.

நான் குடியை மிகவும் ரசித்து அனுபவிப்பவன்,(புரோமோட் பண்ணக்கூடாது ஆனால் உண்மையை எழுதுகின்றேன்).ஒரு பானம் என்று எனக்கில்லை அன்று என்ன குடிக்கவேணும் போலிருந்ததோ அதைக்குடிப்பேன்.குடிக்கும் போது பெரிதாக ரேஸ்ட் எடுக்கமாட்டேன்.நேற்றுக்கூட நண்பனின் மகனின் பிறந்தநாளுக்கு போய் "கப்டன் மோகன்"ரம் எடுத்தேன்.சம்மரில் பாக்கில் பாட்டியென்றால் பியர்.மற்றப்படி கொட் ட்ரிங்ஸ்தான்.புகைப்பதில்லை.

இயக்கத்தில் இருந்த காலத்தில் என்னென்று விட்டுவிட்டு இருந்தேன் என்று இப்பவும் நம்மமுடியாமல் இருக்கும்.டெல்கியில் பல வேற்றினத்தவருடன் உணவு உண்ணும் போது குடிப்பதில்லை என மறுத்துவிட்டேன்.சிலவேளை வாயில் வைத்தால் விடமுடியாமல் போய்விடும் என்ற பயம் காரணமாகவும் இருக்கலாம்.

சுஜாதா ஒருமுறை எழுதியிருந்தார் தன்னுடன் படித்த பல எஞினியர்கள் ஒரு குறிப்பிட்ட நிலைக்கு மேல் உயராமல் வாழ்வை தொலைத்துவிட்டர்களென்று.

காரணம் -குடி என்று.அது நூற்றுக்கு நூறு உண்மை. நானும் கண்கூடாக கண்ட உண்மை அது.

  • கருத்துக்கள உறவுகள்

காலையில் தோய்ந்துவிட்டு சாமி கும்பிட்டு தீர்த்தமாக தண்ணீர் வெறும் வயிற்றில் குடிப்பேன், பின் பால் கோப்பி, 10 மணியளவில் கோலாவோ/ ஒரேஞ்சினாவோ குடிப்பது. இப்ப அதற்குத் தடா. தண்ணீர் அப்பப்ப குடிப்பேன். இடைநேரங்களில் பிரெஞ்ச் பார்களில் சிறிய கோப்பி விரும்பிக் குடிப்பது. இரவுகளில் வாகனம் ஓடும் போதும் இது மட்டும் குடிப்பேன். கூட வேலை செய்யும் போது வெறும் தேநீர் நல்ல சாயமாக சீனி குறைத்து அல்லது இல்லாமல் குடிப்பது. இரவில் படுக்கப் போகுமுன் ஒரு கிளாஸ் பால் ! முன்பு நிறைய குளிர் பாணங்கள் குடித்தது. சில மாதங்களாய் எல்லாம் தடா! :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.