Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பயணம் .....................

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பயணம் .....................

பத்து வருடங்களிற்கு பின்னர் மீண்டும் இந்தியாவிற்கான எனது பயணம். கடைசியாக 2001 ம் ஆண்டு நேபளம் சென்று அங்கிருந்து தரைவழியாக இந்தியா போயிருந்தேன்.ஆனால் இந்தமுறை எனது பயணம் எனக்கே வித்தியாசமானதாகவிருந்தது. காரணம் இந்தத் தடைவை எனது சொந்தப் பெயரில் சொந்தக் கடவுச்சீட்டில் பிரெஞ்சுப் பிரசையாக செல்வது மட்டுமல்லாது விடுமுறை எடுத்து மனைவியுடன் அவளது குடும்பம் மற்றும் என்னுடைய நண்பர்களை மட்டுமே சந்திப்பதற்காக செல்லும் பயணம்.இந்தப் பத்து வருடத்தில் என்னவோ எல்லாம் நடந்து முடிந்து விட்டது. எனது இந்திய நண்பர்கள் அனைவருமே நான் போராட்டத்தில் இணைந்ததன் பின்னர் அறிமுகமானர்கள் மட்டுமல்லாது ஈழப் போராட்டத்தின் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை எம்முடன் கைகோர்த்து நடந்தவர்கள எமக்காகவே வாழ்ந்தவர்கள்;. அவர்கள் அனைவரும் முள்ளிவாயக்கால் முடிவின் பின்னர் மனச்சோர்வும் விரக்தியும் அடைந்து போயிருந்தார்கள் எனவே அவர்களனைவரையும் மீண்டும் சந்தித்து கதைத்து இனி தமிழனால் ஆயுதப் போர் சாத்தியமாகாது அடுத்தது பொருளாதாரப்போர்தான் தமிழனை காப்பாற்றும் என்பதால் இதுவரை ஆயுதப் போரிற்கு உதவியவர்கள் அனைவரும் இனிவருங்காலங்களில் பொருளாதாரப் போரிற்கு உதவ வேண்டும் எனக் கேட்டு அடுத்தகட்டமாக அவர்களது ஆற்றல் அறிவு பொருளாதரவளம் என்பவற்றை மீண்டும் எமது மக்களின் பொருளாதார முன்னேற்றத்தற்கு உதவ வழிவகை செய்வதே எனது நோக்கமாக இருந்தது

எயார் பிரான்ஸ் விமானத்தில் நான் வசிக்கும் நகரத்திலிருந்து பாரிஸ் சென்று அங்கிருந்து அடுத்த விமானத்தில் நேராக மும்பை செல்லவேண்டும் அதன்படி பாரிசில் மும்பைக்கான விமானத்தில் ஏறியதும் பிரெஞ்சுக்கார விமானப்பாணிப்பெண்ணின் என்னைப்பார்த்து நமஸ்த்தே என்றாள் நான் சிரித்தபடி பிரெஞ்சில் ( bonjour )என்றதும் சிரித்தபடி அவளும் பதிலுக்கு bonjour சொன்னாள்.விமானத்தில் உள்ளே முதல்வகுப்பு பகுதியை கடத்து போகும்பொழுது நோட்டம்விட்டேன். பத்து பதினைந்து வருடங்களிற்கு முன்னர் வெள்ளையர்களால் மட்டுமே நிரம்பியிருக்கும் முதல் வகுப்பு பகுதி இந்தியர்களால் நிரம்பியிருந்து ஒருசில வெள்ளைகளை மட்டுமே காணக்கூடியதாக இருந்தது. இந்தியா பொருளாதாரத்தில் முன்னேறிவருகிறது என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும் என மனதில் நினைத்தபடி நடந்துகொண்டிருந்தபொழுது எனக்குத்தெரிந்த நம்மவரும் ஒருத்தர் அங்கு அமர்ந்திருந்தார்.

அவரும் ஒரு குட்டித் தொழிலதிபர்தான். என்னைக்கண்டதும் கையசைத்து ஆ....எப்பிடி சுகம் எங்கை இந்தியாவுக்கோ?? எண்டொரு கேணைத்தனமான கேள்வியையும் கேட்டார். இல்லை இடையிலை டுபாயை கடக்கேக்குள்ளை குதிக்கலாமெண்டிருக்கிறன் என்றேன். அசடுவழிந்தவராய் உனக்கு எப்பவும் நக்கல் சரி சீற்நம்பர் என்ன என்றார். எப்பவும் போலை கடைசி வாங்குதான் சரி இடத்தை தேடிப்பிடிச்சிட்டு ஆறுதலாய் வாறன் என்படி முன்னேறினேன்;.அதற்கு மேலும் அங்கு நின்றால் எனக்கு பின்னால் நிற்பவர்கள் என்னை ஏறிமிதித்தபடி போய்விடுவார்கள். எனது இருக்கையை தேடிப்பிடித்து கைப்பையை மேலே வைத்துவிட்டு அமர்ந்ததும் பக்கத்தில் இருந்த கொஞ்சம் நடுத்தர வயதான பிரெஞ்சு காரசோடியை பார்த்து சிறிய புன்னகையுடன் மரியாதை வணக்கம் ஒன்றை வைத்தேன். பதில் வணக்கம் சொன்வர்கள் உடைனேயே நீங்கள் இந்தியரா எந்த பகுதி எந்தமொழி என்று விசாரணையை ஆரம்பிக்கத் தொடங்கி விட்டார்கள்

இப்படியான கேள்விகள் நீண்டதூர விமான 'இரயில் பயணங்களில் நேரத்தினை போக்கடிப்பதற்காக ஒருவரையொருவர் அறிமுகப்படுத்தி கேட்பது ஒன்றும் புதிதானதல்ல ஆனால் எனக்கு இந்தக் கேள்வி முதல் தடைவையாக மனதில் எரிச்லை தந்தது. ஏனெனில் முன்பெல்லாம் இப்படியான கேள்விகளை யாராவது கேட்டால் அவர்களிற்கு நான் இந்தியர் அல்ல இலங்கைத் தீவில் வடபகுதியை சேர்ந்த தமிழர் எனத் தொடங்கி எமது போராட்டம் பற்றியதொரு சிறு விளக்கத்தையும் கொடுத்து நாங்கள் போராடிக்கொண்டிருக்கிறோம். வென்றுகொண்டிருக்கின்றோம் விரைவில் வெற்றி பெற்று சுதந்திர நாடு அமைத்துவிடுவோம் என நம்பிக்கையுடன் சொல்லி முடிப்பேன் அதுவரை கேட்டுக்கொண்டிருந்தவர்களும் உங்களிற்கு சுதந்திர நாடு கிடைக்க வாழ்த்துக்கள் என வாழ்த்திப் போவார்கள். ஆனால் இந்தமுறை கேள்வி கேட்டவரிற்கு என்ன பதில் சொல்வது என்று யோசித்தபொழுதுதான் எரிச்சல் வந்தது ஆனாலும் வேண்டா வெறுப்பாய் பிரெஞ்சுக்காரன் என்றேன். நான் கொடுத்த பதில் அவன் காதிற்குள் நுளையமுன்னரேயே ஓ நல்லது அப்படியானால் உனது வேர் என்ன? இந்தியாவா? என்றான்.மீண்டும் எரிச்சல்..... நான் மரம் இல்லை வேர் வைப்பதற்கு.. மனிதன் இந்தா பாக்கிறியா என்று எழும்பி என் பின்பக்கத்தை காட்டி பதில் கொடுக்கலாமா என யோசித்தாலும்.அறிந்துகொள்ள ஆவலில்தானே கேட்கிறான் அதுவும் பத்து மணிநேரம் பக்கத்தில் கூடவே வரப்போகிறவன் எதுக்கு பகைத்தக்கொள்வான் என நினைத்து எனது வேர்கள் இலங்கைத்தீவில் இருக்கிறது என்றேன்.

அவரும் ஓகோ சிறிலங்காவா? நான் பலதடைவை பயணம் செய்திருக்கிறேன் அழகான நாடு ஆனால் நான் அங்கு நான் சென்ற காலங்களில் உள்நாட்டு போர் நடந்துகொண்டிருந்தது அதனதல் சிறீலங்கவின் எல்லா பகுதிகளிற்கும் போக முடிந்திருக்கவில்லை ஆனால் தற்சமயம் உள்நாட்டு போரிற்கான தீவிரவாதக்குழு அழிக்கப்பட்டு யுத்தம் முடிவிற்கு வந்துள்ளதாமே இனிவரும் காலங்களில் அனைத்து பகுதிகளிற்கும் போகலாமென நினைக்கிறேன். அங்கு தீவிரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தது தமூழ்(தமிழ்) என்கிற தரப்பு அவர்கள் வட கிழக்கு பகுதியை சேர்ந்தவர்கள். மற்றையவர்கள் சிங்களே(சிங்களவர்) நான் இவர்களுடன் தான் அதிகம் பழகியிருந்தேன் மிகவும் நல்லவர்கள் அன்பானவர்கள். கண்டி நுவரெலியா அழகான இடங்கள் நீ சிங்களேயா என்றார்... இல்லை நான் தமூழ் வடபகுதியை சேர்ந்தவன். இதுவரை நீங்கள் சொன்ன தீவிரவாத குழுவின் பலஆண்டுகால செயற்பாட்டாளன் என்றுவிட்டு எனக்கு முன்னால் இருந்த திரைத்தொடுகை தொலைக்காட்சியை தட்டத்தொடங்கினேன்.

என்னை ஆச்சரியமாக தலையை திருப்பிப் பார்த்தவாறு நீங்கள் தமிழ் புலியில் உறுப்பிராக இருந்தவரா என்றபடி அவசரமாக அவன் தனது கைப்பையை திறந்து ஒரு அடையாள அட்டையை எடுத்தபடி நான் வடக்கின் குரல்( la voix du nord )என்கிற பத்திரிகையில் ஆசிரியராகவிருக்கிறேன் . அடையாள அட்டையை காட்டியபின்னர் உங்கள் அமைப்பினை பற்றி கொஞ்சம் விரிவாக சொல்லமுடியுமா ஏனெனில் நான் அறிந்தவற்றைவிட நீங்கள் சொல்வது உங்கள் பக்கத்து உண்மைத்தன்மையாக இருக்குமல்லவா என்றான். அவனிற்கு பதிலாக நானும் நீயென்ன பெரிய புடலங்காய் பத்திரிகையாளன் நானும்தான் பத்திரிகையாளன் என மனதில் நினைத்தபடி எனது எல்லைகளற்ற பத்திரிகையார் அமைப்பின் பதிவு அடையாள அட்டையை தூக்கி காட்டி நானும்தான் என்றேன். உடைனேயே மகிழ்ச்சியடைந்தவனாய் எனது கைகளை தானாகவே பிடித்து குலுக்கியபடி இந்தப் பயணம் எதிர்பாராத இரட்டிப்பு இன்ப அதிர்ச்சியாக மகிழ்ச்சியை தருகிறது போராடிக்கொண்டிருந்தவர்கள் தரப்பில் எவரையும் எனக்கு சந்திக்க சந்தர்ப்பம் கிடைத்திருக்கவில்லை பாரிசில் நிறைய தமிழர்கள் இருப்பதாக அறிந்திருக்கிறேன் யுத்தத்தின்போது பல்லாயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்ட செய்திகளும் கிடைத்திருந்தது . உங்களிற்கு அதுபற்றி அதிகம் தெரிந்திருக்கலாம் எங்கே சொல்லுங்கள் என்றான் .அதுவரை அவனது பேச்சினை எரிச்சலாகவும் அவனை ஏளனமாகவும் பார்த்த எனக்குள்ளும் ஒரு மாற்றம் வந்தது அதுவரை அவன் என்னை நீங்கள் என்று மரியாதையாய் அழைத்த பொழுதுகளிலெல்லாம் நான் ஒருமையில் அவனை நீயென்றே பேசிக்கொண்டிருந்த தால்.நான் அவனைப்பார்த்து இதுவரை நான் பேசியதில் உங்களிற்கு ஏதாவது சங்கடமேற்பட்டிருந்தால் மன்னிக்கவும் என்றபடி எமது போராட்டம் பற்றியதொரு நீண்ட விளக்கத்தினை ஆரம்பித்தேன்

முன்பெல்லாம் பயணங்களின் பொழுது எமது போராட்டம் பற்றி பதினைந்தே நிமிடத்தில் கொடுத்த விளக்கத்தினை தற்சமயம் இவரிற்கு ஒண்டரை மணித்தியாலத்திற்கு மேலாக கொடுத்தபின்னர் நாங்கள் தோற்றுவிட்டோம் உரிமைக்காக போராட தொடங்கியவர்கள் இன்று உணவிற்காக போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுளோம் அதில் எமது தவறுகளும் உண்டு சர்வதேசத்தின் தவறுகளும் உண்டு எங்களிடம் எண்ணெய் வளம் இருந்திருந்தால் இன்று நேட்டோ படைகள் எமது நிலத்தை பாதுகாத்திருக்கும். என்று முடித்தேன்;. அதுவரை எனது விளக்கத்தினை கேட்டவர் ஒரு பெரு மூச்சுடன் தனது இருக்கையை சரித்து அமர்ந்தவராய் உங்கள் பக்கத்திலும் நியாயம் இருக்கிறது அது சரியாக எம்மிடம் எடுத்துவரப்படவில்லை அதே நேரம் உங்கள் அமைப்பு தற்கொலைத்தாக்குதல்கள் இராணுவ இலக்குகள் மீது நடத்தாமல் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசு பிரதிநிதிகளை தற்கொலை தாக்குதல் மூலம் கொலைகள் செய்ததும் அதன்போதும் பொதுமக்கள் கொல்லப்பட்டதையும் பெரும் குற்றமாகத்தான் நாங்கள் பாரக்கிறோம் என்றார்... அதைதான் நானும் சொன்னேன் எமது பக்கத்திலும் தவறுகள் இருக்கின்றது. ஆனால் பொதுமக்களை இலங்கையரசும்தானே கொன்றது அது தவறில்லையா என்றேன்.அதுமட்டுமல்ல பிரெஞ்சு புரட்சின் போது லியோன் நகரத்தில் மட்டும் அரசு சார்ந்தவர்களின் நாற்பதாயிரம் பேரின் தலைகள் புரட்சியாளர்களால் வெட்டப்படவில்லையா ? அது கொலைகள் இல்லையா என்றேன்..

அவர் அமைதியாக உங்கள் நாட்டில் நடந்தது மக்கள் புரட்சியா?? இல்லைத்தானே ஏனெனில் நானும் ஒரு பத்திரிகையாளன் உங்கள் தேசத்தில் தமிழ் எத்தனை சதவிகிதம் அங்கு எத்தனை சதவிகிதம்பேர் போராடினார்கள்என்கிற அண்ணளவான விபரங்களின் தகவல்கள் எனக்கு ஓரளவு தெரியும் என்றார்.அதற்கான பதில் என்டம் இருக்கவில்லை ஏனெனில் எனக்கே தெரியும் எமது சனத்தொகையில் குறைந்தது வட கிழக்கு 35 இலட்ச்சத்தில் வெறும் பத்து சத வீதத்தினர்கூட போராட்டத்தில் ஈடுபட்டிருக்கவில்லை. வன்னியில் கொத்துக்கொத்தாக கொலைகள் நடந்துகொண்டிருக்கும் போதே யாழில் புதுவருட கொண்டாட்டமும் நல்லுரில் திருவிழாவும் கொண்டாடியவர்கள் நாங்கள். என்னிடம் பதில் இல்லை எனவே அவரிடம் எனக்கு நித்திரை வருகிறது இரவு வணக்கங்கள் என சொல்லிவிட்டு எனது இருக்கையை பின்பக்கமாக சரித்தபடி படுத்துக்கொண்டேன்....

பயணம் தொடரும்...................................

DSCF0103.jpg

  • Replies 283
  • Views 41k
  • Created
  • Last Reply

உண்மை குத்தும் சாத்திரியார்.

வேற்று இனத்தவர்களுக்கு எந்தவித பரப்புரையும் இன்றி குண்டுச் சட்டிக்குள் குதிரை ஒட்டியிருக்கிறோம். :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உண்மை குத்தும் சாத்திரியார்.

வேற்று இனத்தவர்களுக்கு எந்தவித பரப்புரையும் இன்றி குண்டுச் சட்டிக்குள் குதிரை ஒட்டியிருக்கிறோம். :(

உண்மைதான் வெளிநாட்டிற்கொன்று பரப்புரைக்காக பெரும் தொகை பணம் கொடுத்து அனுப்பப்பட்ட எமது மக்கள் பிரதி நிதிகள் எனப்பட்டவர்கள் கஜேந்திரன் (இரண்டும்தான்) பத்மினி போன்றோர் சொந்தக்காரர் வீடுகளில் புட்டு சாப்பிட்டு படுத்தெழும்பி விட்டு இன்று சிறிலங்காவில் போய் சுகமாக வாழ்கிறார்கள்; இன்றும் அவர்களிற்கு கொடுப்பனவு இலங்கையரசு கொடுக்கிறது அதற்கு பொறுப்பாக இருந்தவர்களும் அவசரகால நிதி சேகரித்துவிட்டு இன்று அல்லாடி திரியும் நிலைமை :(

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

bonjour..... தொடருங்கள் உங்கள் பயணத்தை

பிரதி நிதிகள் எனப்பட்டவர்கள் கஜேந்திரன் (இரண்டும்தான்) பத்மினி போன்றோர் சொந்தக்காரர் வீடுகளில் புட்டு சாப்பிட்டு படுத்தெழும்பி விட்டு

அவர்களால் வேற்றுஇனத்தவர்களுக்கு பரப்புரை செய்ய முடியுமென நாம் நினைத்தது தப்பு.....தெரிவு செய்ததும் தப்பு...

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியில் கொத்துக்கொத்தாக கொலைகள் நடந்துகொண்டிருக்கும் போதே யாழில் புதுவருட கொண்டாட்டமும் நல்லுரில் திருவிழாவும் கொண்டாடியவர்கள் நாங்கள். என்னிடம் பதில் இல்லை

தொடர்ந்து எழுதுங்கள் சாத்திரி. எங்களை நாங்களே சுய பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்வது நன்மையே பயக்கும்!!!

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த பகுதி எப்பொழுது வரும் என்ற ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் காத்திருக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

முன்னரெல்லாம் யாராவது போராட்டத்தைப் பற்றி கேட்டால் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு பேசினோம்.

இப்போ கூனிக்குறுகி நிற்க வேண்டிக்கிடக்கு.

யோவ் ஆட்டோ ரைவர் தொடரட்டும் இந்திய கூத்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி மேலும் தொடர்க.

நன்றாக இருக்கின்றது...தொடரவும் அத்துடன் இந்தியாவில் நிற்கும் போது எடுத்த "அந்த" படத்தினையும் இணைக்கவும் :D

தொடருங்கள். வாசிக்க ஆவலாயுள்ளோம்.

நன்றாக இருக்கின்றது...தொடரவும் அத்துடன் இந்தியாவில் நிற்கும் போது எடுத்த "அந்த" படத்தினையும் இணைக்கவும் :D

எந்த??

சஸ்பென்ஸ் கூடாது.

சாத்திரியார் ஆட்டேவில உட்காந்திருக்கிற விதத்தப் பார்த்தா ஒரு முடிவு முடிவோடதான்

பயணம் தொட(க்)ங்கியிருக்கிறார் :D

நன்றாக இருக்கின்றது...தொடரவும் அத்துடன் இந்தியாவில் நிற்கும் போது எடுத்த "அந்த" படத்தினையும் இணைக்கவும் :D

அவர் குடும்பத்தோடையெல்லோ போனவர் அதுக்கு சான்ஸ் இல்லை :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கதைக்கு வரவேற்பளித்த புத்தன் புங்கையூரான் கந்தப்பு ஈழப்பிரியன்.நிலாமதி நிழலி ஏஸ் மற்றும் காரணிகன் ஆகியோரிற்கு நன்றிகள்.இந்த இந்தியப் பயணத்தில் நான் பல நண்பர்களையும் சந்தித்திருந்தாலும் எமக்கு ஒரு தேசம் தேவை என்பதற்காக தங்கள் வாழ்வு முழுவதையுமே அர்ப்பணித்த மூன்று முக்கியமான நண்பர்களை பற்றி இந்தப் பதிவில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அதே நேரம் நிழலி கேட்ட அந்தப் படமும் இணைக்கிறேன். :)

... நல்ல பயணக்கட்டுரை, தொடருங்கள்!!! ... ஆனால் ...

அடுத்தது பொருளாதாரப்போர்தான் தமிழனை காப்பாற்றும் என்பதால் இதுவரை ஆயுதப் போரிற்கு உதவியவர்கள் அனைவரும் இனிவருங்காலங்களில் பொருளாதாரப் போரிற்கு உதவ வேண்டும் எனக் கேட்டு அடுத்தகட்டமாக அவர்களது ஆற்றல் அறிவு பொருளாதரவளம் என்பவற்றை மீண்டும் எமது மக்களின் பொருளாதார முன்னேற்றத்தற்கு உதவ வழிவகை செய்வதே எனது நோக்கமாக இருந்தது

... இன்று எம்மை ஏமாற்ற சிங்களம் எடுத்த அதே "மகிந்தவின் சிந்தனையுடன்" உங்கள் பயணம் போயுள்ளது .... நம்மில் சிலர் இந்த ஏமாற்றுக்கு எமாறுகிறார்களோ? இல்லை இந்த ஏமாற்றுக்களுக்கு உடந்தையாகிறார்களோ? ... என்பது புரியாத புதிராக உள்ளது!!!!!!!

... நம் மக்கள் பொருளாதாரத்தில் கட்டி எழுப்பப்பட வேண்டும் என்பதில் இரண்டாம் கருத்துக்கு இடமில்லை, ஆனால் அங்கு பொருளாதாரத்தை கட்டி எழுப்புவதற்கான சூழல் காணப்படுகிறதா??? நாம் கொண்டு போய் கொட்டுவது, நாளை அழிக்கப்பட மாட்டாது என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது???? ....... ???? பல கேள்விகள் ... விடையில்லாமல் ....

... பொருளாதாரத்தை கட்டி எழுப்புவோம், முதலில் அம்மக்கள் வாழ்வதற்கான உரிமையை சர்வதேச அங்கீகாரத்துடன் பெற்ற பின் இல்லை சிங்களமே எம் வாழ்வதற்கான உரிமையை தந்த பின் ....

... "83" இனவழிப்பு கலவரங்களை அடுத்து, லண்டனில் இருந்து வெளிவரும் "த எக்கனோமிக்ஸ்" எனும் பிரபல பத்திரிகை தன் முதல் பக்க செய்தியாக, இக்கலவரத்தின் பின்னணி குறித்து ஆராய்ந்து எழுதியது ... அப்போது நான் படித்த பாடசாலை அதிபருக்கு அதன் பிரதி ஒன்று கிடைத்து, எமக்கு அதனை .... தமிழர்களின் பொருளாதாரம் இலங்கையில் முன்னணிக்கு வந்ததனால் தான்(பெரும்பாலானவற்றை எம் வசம் வைத்திருந்தார்கள்), அதனை கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் இந்த கலவரம் ... என எழுதியிருந்தார்கள்!!!

Edited by Nellaiyan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

... நல்ல பயணக்கட்டுரை, தொடருங்கள்!!! ... ஆனால் ...

... இன்று எம்மை ஏமாற்ற சிங்களம் எடுத்த அதே "மகிந்தவின் சிந்தனையுடன்" உங்கள் பயணம் போயுள்ளது .... நம்மில் சிலர் இந்த ஏமாற்றுக்கு எமாறுகிறார்களோ? இல்லை இந்த ஏமாற்றுக்களுக்கு உடந்தையாகிறார்களோ? ... என்பது புரியாத புதிராக உள்ளது!!!!!!!

... நம் மக்கள் பொருளாதாரத்தில் கட்டி எழுப்பப்பட வேண்டும் என்பதில் இரண்டாம் கருத்துக்கு இடமில்லை, ஆனால் அங்கு பொருளாதாரத்தை கட்டி எழுப்புவதற்கான சூழல் காணப்படுகிறதா??? நாம் கொண்டு போய் கொட்டுவது, நாளை அழிக்கப்பட மாட்டாது என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது???? ....... ???? பல கேள்விகள் ... விடையில்லாமல் ....

... பொருளாதாரத்தை கட்டி எழுப்புவோம், முதலில் அம்மக்கள் வாழ்வதற்கான உரிமையை சர்வதேச அங்கீகாரத்துடன் பெற்ற பின் இல்லை சிங்களமே எம் வாழ்வதற்கான உரிமையை தந்த பின் ....

... "83" இனவழிப்பு கலவரங்களை அடுத்து, லண்டனில் இருந்து வெளிவரும் "த எக்கனோமிக்ஸ்" எனும் பிரபல பத்திரிகை தன் முதல் பக்க செய்தியாக, இக்கலவரத்தின் பின்னணி குறித்து ஆராய்ந்து எழுதியது ... அப்போது நான் படித்த பாடசாலை அதிபருக்கு அதன் பிரதி ஒன்று கிடைத்து, எமக்கு அதனை .... தமிழர்களின் பொருளாதாரம் இலங்கையில் முன்னணிக்கு வந்ததனால் தான்(பெரும்பாலானவற்றை எம் வசம் வைத்திருந்தார்கள்), அதனை கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் இந்த கலவரம் ... என எழுதியிருந்தார்கள்!!!

நெல்லையன் நான் எழுதத் தொடங்கிய தமிழர் பொருளாதாரம் என்பதற்கும் மகிந்த சிந்தனைக்கும் என்ன தொடர்பு என்பது உங்களிற்குதான் வெளிச்சம்.தமிழர் பொருளாதாரம் தமிழர் வங்கி என்பது பத்தாண்டுகளிற்கு முன்னால் ஏற்படுத்தப் பட்டதொரு திட்டம்.அது நடைமுறைப்படுத்தப்படவில்லை அவ்வளவுதான் .அது தனியாக ஈழத்தமிழர்களை மட்டும் மையப்படுத்தித் தொடங்கப்பட்டதல்ல உலகெங்கும் வாழும் தமிழர்களை ஒருங்கிணைப்பதற்காக தொடங்கப் பட்டது அதற்கு புத்துயிர் கொடுக்கலாமென்பதே எமது நோக்கம் ஆனால் ஆனால் த எக்கனாமிக்சில் 83ம் ஆண்டு வெளியான கட்டுரை போன்றுதான் இன்றைய உலகம் இருக்குமென்று நீங்கள் நம்பினால் சரி நான் எனது திட்டத்தினை கைவிடுகிறேன் அதற்கான இன்னொரு திட்டத்தினை முன்வையுங்கள் நான் அதனுடன் இணைகிறேன்.நீங்களே முன் நின்று நடத்துங்கள்.நன்றி வணக்கம் :)

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள்.வாசிக்க ஆவலாக உள்ளேன்.

நெல்லையன் நான் எழுதத் தொடங்கிய தமிழர் பொருளாதாரம் என்பதற்கும் மகிந்த சிந்தனைக்கும் என்ன தொடர்பு

... விடிய விடிய ராமர் கதை, விடிந்தாப்பிறகு ...??? ... சாத்திரியார் மகிந்த சிந்தனையும் அதைத்தான் சொல்கிறது, ... அங்கு "தமிழர்களுக்கு" பொருளாதாரப்பிரட்சனை ஒழிய வேறொன்றும் இல்லை என்கிறது ... :o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

... விடிய விடிய ராமர் கதை, விடிந்தாப்பிறகு ...??? ... சாத்திரியார் மகிந்த சிந்தனையும் அதைத்தான் சொல்கிறது, ... அங்கு "தமிழர்களுக்கு" பொருளாதாரப்பிரட்சனை ஒழிய வேறொன்றும் இல்லை என்கிறது ... :o

விடிந்தால் பிறகு இங்கிலாந்திற்கும் சீதைக்கும் என்ன முறை இதுதான் இன்றைய உலகின் பிரச்சனை ஏனெனில் கிறெக்கத்தற்:கு அடுத்தபடியாக பொருளாதாரத்தில் பின்னடைவை நோக்கும் நாடு இங்கிலாந்து :)

Edited by sathiri

பயணக்கட்டுரை யார் எழுதினாலும் வாசிக்க இனிமை.அது மணியனாகட்டும் சாத்திரியாகட்டும்.

நாம் போகாத இடங்கள் பார்த்தமாதிரியும் இருக்கும், சில இடங்கள் போகச்சொல்லியும் இருக்கும்.

எழுதுங்கள் சந்தோசமாக வாசிப்போம்.

பிரெஞ்சுக்காரன் சொன்னா சரிதான், அமெரிக்கன் விண்ணன் என்பது தான் ஞாபகம் வருகின்றது.

நாங்கள் சொன்னால் யார் கேட்பார்கள்.யூ.என்.ஓ அறிக்கை சொன்னால் சரி.

வெள்ளைக்காரன் வெள்ளைக்காரன் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்டோ சாரதி சாத்திரி தொடருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியின் பயணக்கட்டுரைத் தொடர் நன்றாகத்தான் ஆரம்பித்துள்ளது. அடுத்த பகுதிகளைப் படிக்க ஆவலாக உள்ளது!

போராட்டத்திற்குத் தேவையான காரணங்கள் இருக்கும்வரை மக்கள் தொடர்ந்து ஏதோவகையில் தமது உரிமைகளுக்காகப் போராடிக்கொண்டிருப்பார்கள் என்பதைத்தான் மானிட வரலாறு சொல்லுகின்றது. தமிழர்கள் மட்டும் விதிவிலக்காக சமரசம் கொண்டு இருக்கவேண்டியதில்லை. பொருளாதாராத்தில் தமிழர்கள் முன்னேறினாலும், பொருளாதாரத்தின் நகர்வினைக் துரிதப்படுத்தும்/கட்டுப்படுத்தும் அரசியல் தீர்மானங்களை எடுக்கமுடியாமல் தமிழர்கள் இருந்தால் எமது அபிலாசைகளை நாம் அடையமுடியாது!

தொடக்கம் நன்றாக உள்ளது சாத்திரி அண்ண, அடுத்த பகுதியைத் தொடருங்கள்...

ஆனால் உந்த ஆட்டோக்குத்தான் ஏன் இரண்டு பக்கமும் கதவு போட்டு வைத்திருக்கிறியள் என்று விளங்க இல்லை... :rolleyes::unsure: அது சரி... ஆட்டோ ஓடுறது நீங்களோ இல்லை நடிகர் ஷாமோ? சும்மா பகிடிக்கு... :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

தொடக்கம் நன்றாக உள்ளது சாத்திரி அண்ண, அடுத்த பகுதியைத் தொடருங்கள்...

ஆனால் உந்த ஆட்டோக்குத்தான் ஏன் இரண்டு பக்கமும் கதவு போட்டு வைத்திருக்கிறியள் என்று விளங்க இல்லை... :rolleyes::unsure: அது சரி... ஆட்டோ ஓடுறது நீங்களோ இல்லை நடிகர் ஷாமோ? சும்மா பகிடிக்கு... :lol::D

கேட்கிறேன் என கோவிக்க வேண்டாம் குட்டி உங்களுக்கு கண் வடிவாய் தெரியுதா :D :D :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியாரின் கதையின் ஆரம்பமே.... நன்றாக உள்ளது. மிகுதியையும் தொய்வில்லாமல் தொடருங்கள். :)

சாத்திரியாருக்கு 60 வயதுக்கு மேல் இருக்கும் என்று நினைத்திருந்தேன் :lol: . ஆட்டோ படத்தை பார்த்த பின் தான்.... விளங்கிச்சுது...... :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொடக்கம் நன்றாக உள்ளது சாத்திரி அண்ண, அடுத்த பகுதியைத் தொடருங்கள்...

ஆனால் உந்த ஆட்டோக்குத்தான் ஏன் இரண்டு பக்கமும் கதவு போட்டு வைத்திருக்கிறியள் என்று விளங்க இல்லை... :rolleyes::unsure: அது சரி... ஆட்டோ ஓடுறது நீங்களோ இல்லை நடிகர் ஷாமோ? சும்மா பகிடிக்கு... :lol::D

இந்தியாவின் அளவுக்கதிகமான தூசி காரணமாக இப்பொழுது இப்படி சில ஆட்டோக்களிற்கு கதவு போடுகிறார்கள்

இந்தியாவின் அளவுக்கதிகமான தூசி காரணமாக இப்பொழுது இப்படி சில ஆட்டோக்களிற்கு கதவு போடுகிறார்கள்

அதுக்காக போட்டால் பறவாய் இல்லை. ஆனால் கதவைப் பார்க்க வீட்டுக் கதவைவிட பலமாக இருக்கும் போல?

ஆனால் தொடர் நல்லா இருக்கு. தொடர்ந்து எழுதுங்கள் அப்படியே அங்கையும் போனீர்களோ? :D :D

Edited by வினித்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.