Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என்னை மன்னித்துவிடு அண்ணா.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டில் லீவுவில் நிற்பதால் காலை எழுந்து கணணியில் செய்திகளை மேய்ந்துகொண்டும் அரட்டையில் வந்தவர்களுடன் அரட்டையடித்தபடியும் இருந்தேன் கைத்தொலைபேசி உதறியது எடுத்துப்பார்த்தேன் எனது தம்பியின் பெயர் காட்டியது.ஒரு கணத்தில் எனக்குப் புரிந்து விட்டது ஏதோ வில்லங்கமான செய்திதான். தொலைபேசியை எடுத்தேன்.

அண்ணை..குருவண்ணா செத்திட்டார்.நான் கொஸ்பிற்றல்லைதான் நிக்கிறன்.பொடியை அவையின்ரை வீட்டை கொண்டு போயிட்டு போனடிக்கிறன்.அம்மாக்கு இப்ப சொல்லவேண்டாம்.நான் நேரிலை போய் சொல்லுறன். தொலைபேசி துண்டித்தது.மனைவியும் மகளும் வெளியே போயிருந்தனர்.வீட்டிலும் எவரும் இல்லை

அவசரமாக எனது மூத்த அண்ணணிற்கு கனடாவிற்கு தொலைபேசியடித்து செய்தியை தெரிவித்துவிட்டு நான் சில நிமிடங்கள் கணணியையே உற்றுப்பார்த்தபடி அமர்ந்திருந்தேன். கணணித்திரையில் ஒரு உருவம் அசைந்தது உற்றுஉப்பார்த்தேன் அது நான் தான் அது என்னைப்பார்த்து சே நீயெல்லாம் ஒரு மனுசனா என்று எனது முகத்தில் காறி உமிழ்ந்துவிட்டு மறைந்து போய்விட்டது.

நான் அழுவதாக எனக்கு தெரியவில்லை ஆனாலும் சில கண்ணீர்த்துளிகள் வழிந்தது. என் மனச்சாட்சி துப்பிய எச்சிலையும் எனது கண்ணீரையும் துடைத்துக்கொண்டேன்.

குருவண்ணன் எனக்கு நேரே மூத்தவன் இரண்டு வயது வித்தியாசம்.சின்ன வயதில் எல்லோரையும் போல எங்களிற்கும் மகிழ்ச்சியான நாட்கள்தான்.சிறு சிறு சண்டைகள் சீண்டல்.என்று மகிழ்ச்சியாக கடந்த நாட்கள்அவை. சின்ன வயதில் ஒருநாள் நான் எனக்குப் பிடித்த பல்லிமுட்டை இனிப்புக்களை வாங்கி ஒரு கடதாசியில் சுத்தியபடி ஒவ்வொன்றாய் இரசித்து சாப்பிட்டபடி வந்துகொண்டிருந்தேன். வழியில் மதவில் இருந்த ஊர்இளைஞர்களில் ஒருவன் என் கையிலிருந்த இனிப்பு சிலதை பறித்து சாப்பிட்டான்.நான் அவனுடன் சண்டைக்கு போகவே எனக்கு கன்னத்தில் அடித்து துரத்திவிட்டான். நான் அழுதபடி வீட்டிற்கு போய்க்கொண்டிருக்க எதிரில் வந்த குருவண்ணன் நான் அழுததற்கான காரணத்தை அறிந்தவன் என்னை கூட்டிக்கொண்டு போய் அடித்தவனிற்கு முன்னால் நிறுத்திவிட்டு .இப்ப அடியடா பாப்பம் எண்டான்.எனக்கு அடித்தவன் மிரண்டுபோய் ஓட வெளிக்கிட அவனை துரத்திப்பிடித்து என்ரை தம்பியிலையா கைவைக்கிறாயெண்டு நிலத்தில் போட்டு உருட்டியெடுத்தவன்.பின்னர் என்னைப்பார்த்து ஆரிட்டையும் அடிவாங்கிக்கொண்டு வெக்கமில்லாமல் அழுதுகொண்டுவராதை எண்டு பேசி அனுப்பிவிட்டான்.

நாட்கள் கடந்தது நாங்களும் வளர்ந்தோம்.ஈழத்துமண்ணில் பல்லாயிரம் குடும்பங்களை கூறுபோட்ட விடுதலைக்கான போர் என்று பல இளைஞர்கள் ஆயுதம் ஏந்தினார்கள். ஒரு குடும்பத்திலிருந்த அண்ணன் தம்பிகள் பல இயக்கங்களுடன் இணைந்தார்கள்.அதே போலத்தான் என்னுடைய அண்ணனும் தன்னுடைய நண்பர்களுடன் இணைந்து ஜெகன்(அராலி)தலைமையில் t e l e ரெலி என்கிற அமைப்பை உருவாக்கினார்கள்.அதனை உருவாக்கிய குறுகிய காலத்திலேயே யாழ்குடாவெங்கும் பரபரப்பாக பேசப்பட்டார்கள். நான் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களோடு திரியத்தொடங்கியதை கேள்விப்பட்டதும் என்னிடம் வந்தவன் . டேய்உனக்கு உதுகள் தேவையில்லை ஆரும் அடிச்சாலே திருப்பியடிக்கத்தெரியாதனி துவக்கு தூக்கிறவேலையெல்லாம் உனக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டு போய்விட்டான்.

மாதங்கள் உருண்டோடிவிட்டிருந்தது ரெலி இயக்கத்திலிருந்த அனைவருமே எனக்கு நன்கு பழக்கமானவர்கள்தான். ஜெகன் எனக்குமட்டுமல்ல திலீபனோடும் நல்ல நண்பன்.காரைநகர் நேவி வட்டுக்கோட்டை அராலி தோட்டக்காரருக்கு தொல்லை குடுக்கிறான் அவங்களுக்கு சக்கை வைக்கவேணும் அதாலை கொஞ்சம் சக்கை(வெடிமருந்து)தரச்சொல்லி எங்களிடம் கேட்டிருந்தான்.நானும் திலீபனும் கிட்டுவிடம் சொல்லிவிட்டு சக்கையை கொடுத்திருந்தோம்.

ஒருநாள் மாலை இவர்கள் இரண்டு இடங்களில் கண்ணிகளை புதைத்திருந்தனர். ஒரு இடத்தில் எனது அண்ணன் ஒரு குழுவாகவும் மற்றைய இடத்தில் ஜெகன் ஒரு குழுவுடன் சங்கரத்தை வயல்வெளியில் இருந்த ஒரு மதகு ஒன்றின் கிழே கண்ணிகளை புதைத்து விட்டு வயறை உருமறைப்பு செய்துகொண்டிருந்த நேரம் அந்த மதகிற்கு அருகில் தோட்டம் வைத்திருந்தவர் கண்ணி வயர்களை மண்வெட்டியால் கொத்தியிருக்கிறார்.அதனை கண்ட ஜெகன் அவரை பிடித்து அடிபோட்டு கலைத்து விட்டிருக்கிறான்.அவர் ஒரு புலிகள் இயக்க ஆதரவாளர் அதனால் அவர் நேரே நவாலியிலிருந்த புலிகளின் முகாமில் போய் விடயத்தை சொல்லியிருக்கிறார்.

அந்த முகாம் பொறுப்பாளராக இருந்த தவக்களையம்மான் அடிவாங்கியவரையும் கூட்டிக்கொண்டு ஜெகனிடம் போனவர். ஜெகனுடன் வாய்த்தர்க்கம் தொடங்கியது ஜெகன் தவக்களையம்மானிற்கு கிட்டே நெருங்குகிறார். ஜெகன் கறுப்பு பட்டி பெற்ற சிறந்த கராத்தே வீரர் என்பது அனைவரிற்கும் தெரிந்த விடயம்.எனவே ஜெகன் கிட்டே வந்தால் தன்னை அடித்து துப்பாக்கியை பறித்துவிடுவான் என்கிற பயத்தில் தவக்களையம்மான் கைத்துப்பாக்கியை உருவி ஜெகனை நோக்கி சுடவே ஜெகன் அந்தவிடத்திலேயே உயிரை விடுகிறார்.

நானும் திலீபனும் நவாலிப் பகுதியிலேயே நின்றிருந்தபடியால் சத்தம் கேட்டு அந்தப் பகுதியில் இருந்த விவசாயிகளிடம் விபரமறிந்து அங்கு போவதற்கிடையில்.ஜெகனின் உடலை அவருடன் கூட நின்றவர்களும் ஊார்மக்களுமாக சேர்ந்து அவரது வீட்டிற்கு கொண்டுபோய்விட்டார்கள்.

இங்குதான் எங்கள் விதி விழையாடியது. நான் அங்கிருந்து போனதன் பின்னர் விபரமறிந்து வந்திருந்த அண்ணனிடம் எங்களைத்தெரிந்த ஊர்வாசியொருத்தர் ஜெகனை சுட்டவர்கள் குழுவில் நானும் இருந்ததாக சொல்லிவிட்டார். ஜெகனை சுட்டுக்கொன்ற தவக்களையம்மானிற்கு விசாரணை நடந்து இயக்கத்தை விட்டு அவர் விலக்கப் பட்டார். ஆனாலும் ஜெகனின் உயிர் போனது போனதுதானே.ஜெகனை சுட்டவர்களை நான்உட்பட சுட்டுக்கொல்லாமல் விடமாட்டேன் என்று வெறிகொண்டு திரிந்தான் அண்ணன்.மானிப்பாய் இரவிக்கை சந்தைக்கு முன்னால் உள்ள ஒழுங்கையில் புலிகளின் தொழிற்சலை முகாம் ஒன்று இருந்தது.அங்குதான் நான் பெரும்பாலும் இருப்பேன்.எனவே என்னைத்தேடி ஏ கே யுடன் வந்தவன் உள்ளே விடச்சொல்லி முகாம் வாசலில் காவலில் இருந்தவனுடன் தகராறு செய்து வானத்தை நோக்கி சுட்டிருக்கிறான்.நல்லவேளையாக அங்கு அவனின் பள்ளிக்காலத்து நண்பன் பாரத்(கப்ரன்)இருந்தபடியால் பிரச்சனை பெரிதாகவில்லை அவன் சமாதானப்படுத்தி அனுப்பிவிட்டிருந்தான்.

நானும் அன்று அங்கிருக்கவில்லை.விடயம் தலைமை முகாம் கிட்டுவிற்கு போனது ..உடனடியாக அண்ணனை கைது செய்யச்சொல்லி அதே நேரம் ரெலி அமைப்பை தடைசெய்து ஆயுதங்களை களையுமாறும் கிட்டு உத்தரவிட்டிருந்தார் .செய்தி எனக்கும் கிடைத்தது கிட்டுவிற்கு அவன் எனது அண்ணன் என்று தெரியாதுஆனால் எனது அண்ணன் என்பதற்காக இயக்க விதிகளை மீறி நான் எனது செல்வாக்கை பிரயோகிக்க விரும்பியிருக்கவில்லை. செய்தி அறிந்த பாரத் நெரடியாக கிட்டுவிடம் போய் சகல விபரங்களையும் சொல்லி ஆட்களை அனுப்பவேண்டாம் பெரிய பிரச்சனையாகும் எனவே தானே நேரடியாக போய் அண்ணனை அழைத்து வருவதாக சொல்லி அனுமதி பெற்றுக்கொண்டு சுதுமலையில் அண்ணணன் தங்கியிருந்த மாமியின் தோட்டத்திற்கு போய் அவனுடன் கதைத்து கிட்டுவிடம் அழைத்துப்போயிருந்தான்.கிட்டுவும் மிகுதி இருக்கும் ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு வெளிநாடு எங்காவது போய்விடச்சொல்லி அனுப்பிவிட்டான்.

அன்று எங்களிற்குள் விழுந்த விரிசல்தான்.

விதியின் விழையாட்டு இருபத்தைந்து ஆண்டுகள்.கதைக்கவேயில்லை இத்தனைக்கும் நாங்கள் செய்த தவறு மண்ணை நேசித்ததுதான்.

வெளிநாடு செல்வதற்காக கொழும்பு சென்றவன் கைதாகி இரண்டு வருடங்கள் பூசாவில் கழித்து விட்டு சவூதி சென்றிருந்தான்.85 ன் இறுதியில் கடைசியாக சந்தித்திருப்பேன் என நினைக்கிறேன் பின்னர் ஒருநாள்.94 ம் ஆண்டு கொட்டாஞ்சேனை யில் ஒரு உணவு விடுதியில் நானும் இன்னொரு பெண்ணும் உணவருந்திக்கொண்டிருந்தவேளை தற்செயலாக சந்தித்தோன்.கதைக்கவில்லை. முறைத்துப்பார்த்துவிட்டு போய்விட்டான்.அதுதான் என்னுடைய கடைசி சந்திப்பு. அதன்பின்னர் திருமணமாகி கொக்குவிலில் இருக்கிறானாம் பிள்ளை பிறந்திட்டுதாம் செய்திகள் மட்டும்தான். என்னுடைய செய்திகளும் அவனிற்கு கிடைத்திருக்கும். 2009 ம் ஆண்டு அம்மா என்னிடம் பிரான்ஸ் வந்திருந்தபொழுது ஒரு சட்டையை எடுத்துத் தந்து இந்த இது உன்ரை பெட்டைக்கு கொண்ணன் வாங்கித்தந்தவன் எண்டார். பொய் சொல்லாதேங்கோ அவன் வாங்கித்தந்திருக்கமாட்டான் ..அம்மா அழுதார் ஏனடா இப்பிடி இருக்கிறிங்கள். அம்மா திரும்ப போகும்போது மனைவியிடம் சொல்லியிருந்தேன் அண்ணனின்ரை பிள்ளையளிற்கு உடுப்பு வாங்கி குடுத்துவிடு.

போனமாதம் தம்பின் தொலைபேசி .அண்ணை குருவண்ணைக்கு கான்சராம். ஆள் ஆஸ்பத்திரியிலை.போன கிழைமை தம்பி போனடித்தான்.அண்ணை உன்னோடை கதைக்கவேணுமாம்.

நம்பர் தாறன் எனது பதில் வேண்டாம்.இரண்டு நாளிற்கு முதல் தங்கையின் அழைப்பு .அண்ணைக்கு ஏலாது கைகால் இழுத்திட்டுது பேச்சு கஸ்ரப்படுறார். உன்னை கேட்டவர் ஒருக்கால் கதை. கொஞ்சம் குளம்பிப்போயிருந்தேன். கதைப்பமா விடுவமா.என்னுடைய தன்மானம் தடுத்தது.அனாலும் நித்திரை வரவில்லை நேரத்தை பார்த்தேன் இப்ப விடிஞ்சிருக்கும்.போனடித்தேன் தம்பி பேனை எடுத்தான் .கொஞ்ச நேரத்திலை ஆஸ்பத்திக்கு போடுவன் ஒரு இரண்டு மணித்தியாலம் கழிச்சு போனடியுங்கோ.

மணிக்கூட்டை பார்தபடி இருந்தேன் இரண்டு மணித்தியாலம்..... போனடிச்சன். தம்பி போனை அண்ணனது காதில் வைத்திருந்தான்.அண்ணை ..நான்தான் அண்ணை..என்ன மன்னிச்சிடு அண்ணை. பதில் எதுவும் இல்லை முனகல் சத்தம் மட்டும் கேட்டது . அவராலை ஏலாது பிறகு அடிக்கிறன் தம்பியின் குரல் . சில மணி நேரத்தின் தம்பியின் தொலைபேசி இலக்கம் எனது தொலைபேசியில் விழுந்தது கைத்தொலைபேசி உதறியது எடுத்துப்பார்த்தேன் எனது தம்பியின் பெயர் காட்டியது.ஒரு கணத்தில் எனக்குப் புரிந்து விட்டது ஏதோ வில்லங்கமான செய்திதான். தொலைபேசியை எடுத்தேன்.

Edited by sathiri

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னடா இந்த நேரத்திலையும் சாத்திரி கதை எழுதிறானே எண்டு யோசிப்பியள். என்ரை மனசிலை உள்ளதை சொல்ல நினைச்சன் இல்லாட்டி என்ரை மனசு ஆறாது அவ்வளவுதான்.

மனது கனக்கின்றது சாத்திரி. கண்ணீர் விட்டே வளர்த்தோம் சர்வேசா :( :( .................. :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குடும்பத்தையே கூறு போட்ட விடுதலைப்போராட்டங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னடா இந்த நேரத்திலையும் சாத்திரி கதை எழுதிறானே எண்டு யோசிப்பியள். என்ரை மனசிலை உள்ளதை சொல்ல நினைச்சன் இல்லாட்டி என்ரை மனசு ஆறாது அவ்வளவுதான்.

மன ஆறுதல் தான் முக்கியம்.அது எழுத்துவடிவிலும் இருக்கலாம்.மனதை தேற்றிக்கொள்ளுங்கள்.

சாத்திரி உங்கள் உணர்வுகளை என்றுமே நான் மதிக்கிறேன். உங்கள் அண்ணா நிச்சயம் உங்களை மன்னித்து இருப்பார்.இவர்களை போன்றவர்களுக்காவது எங்கள் இனத்துக்கு நிச்சயம் விடிவு வேண்டும்.

வாசிக்க கவலையா கிடக்கு. என்ன சொல்ரன்று தெரியல்ல. எல்லாத்தையும் காலம் ஆத்தோணும்.

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் துயரானது. மனது கனக்கிறது. கண்ணீர் விடையாகிறது. :(

பிரிவு ஏற்படும் போது உணர்வுகளை மனதில் அடக்கி வைத்திருப்பதை விட உங்கள் எழுத்திகளின் மூலம் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளவதில் எள்ளளவேனும் உங்களுக்கு ஆறுதல் கிடைக்கும். கடைசி நேரத்தில் உங்கள் அண்ணனால் சரியாகக் உங்களோடு கதைக்க முடியாமல் போனாலும் நீங்கள் கூறியது உங்கள் அண்ணனுக்கு நிச்சயம் கேட்டு இருக்கும், மனதைத் தேற்றிக் கொள்ளுங்கள்.

.

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி

அண்ணன் மனைவி பிள்ளைகளை ஒரு குறையுமில்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள் .

இதுவே நீங்கள் அண்ணனுக்கு செய்யும் உதவி.

நாம் நின்ற பூமியில் எமக்கும் எம் நிழலுக்கும் கூட விரிசல்கள்

சாபப் படுக்கையில் பவப் போர்வைக்குள் புண்ணியங்கள்

அழுத விழிகளுடன் உறங்கிடக்கின்றது

நிசப்தங்களில் மெளனங்களாக அலறுகின்றது

விடுதலைப்போரட்டம்.

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணன் கதைக்க விரும்பியபோதே மன்னித்துவிட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்
:( என்ன சொல்வது என்றே தெரியவில்லை.உணர்வுகளை கொட்டி விடுங்கள்.அண்ணா உங்களை மன்னிக்காவிட்டால் பேசவே முயற்சித்து இருக்க மாட்டார்.

காலம் தான் பல ரணங்களை ஆற்றுகின்றது.நினைத்தது என்னவோ ஆனால் எப்படியெல்லாம் சிதைவுண்டு போனது எமது உறவுகள்.

பரத் என்ற பெயர் பார்த்தவுடன் தான் ஞாபகம் வருகின்றது.எனது மனைவியின் தம்பி புளோட்டில் இருந்து தப்பி ஓடி மீண்டும் யாழ் கம்பஸ் தொடர்ந்த நேரம் பரத் தான் வந்து முகாமுக்கு அழைத்ததாகவும் "விட்டு ஓடி வந்த நான் வந்து கையெழுத்து இட்டால் இப்போதும் இருப்பதுபோலாகிவிடும்" எனவே முடியாது என்றுவிட்டார்.அடுத்த நாள் வருவதாக போய்விட்டார்.அதற்கிடையில் தாயார் போய் அன்ரன் வீட்டில் சொல்ல அவர்கள் அன்ரனை தொடர்பு கொண்டு விடயத்தை சொல்ல விடயம் அத்துடன் முடிந்துவிட்டது,மனைவியின் வீடு குளப்பிட்டி சந்தியில் சாத்திரிக்கு தெரிந்திருக்கலாம்.அது ஒரு சின்ன எக்ஸ் புளொட் முகாம்.போல.

  • கருத்துக்கள உறவுகள்

மனதில் உள்ளதை மனம்விட்டு எழுதியுள்ளீர்கள், இந்த மனக் கஷ்டமும் கடந்து போகும் கவலைப்பட வேண்டாம்

இப்படி பல சகோதரகள் வேறு வேறு இயக்கதில் இருந்து பிரச்சனைப்பட்டு இருக்கிறார்கள் ஆனால் இறந்து விட்டார் என்ற முடிவு தான் மனதுக்கு கஷ்டமாகவும் ...

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியார், அண்ணை ஆஸ்பத்திரியில் இருக்கும் போது... நீங்கள் தொலைபேசியில் கதைத்ததாவது அவருக்கு ஆறுதலாக இருந்திருக்கும்.

அப்படி கதைத்துமிருக்காவிட்டால்... உங்களை அந்த துன்பம் வாழ்நாள் முழுக்க குற்ற உணர்வுடன் வைத்திருந்திருக்கும்.

ஈழப்பிரியன் கூறியது போல்... குருவண்ணாவின் பிள்ளைகளை குறை வைக்காமல் கவனியுங்கள். அதுவே... அண்ணைக்கு ஆத்மசாந்தியை அளிக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

I'm sorry saaths Anna sundhalku thookamai varaila

  • கருத்துக்கள உறவுகள்

என்னத்தை எழுதுவது என்று தெரியவில்லை...மனது கன‌க்கின்றது

யாவும் கற்பனை என்று எழுதுவீங்கள் என நினைத்தேன். சகோதர பாசம் பொல்லாதது. அண்ணாவின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

மனது கனக்கிறது சாத்திரி அண்ணா.காலம் எல்லாவற்றையும் ஆற்றும்

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் சிக்கலான விடயம்..! பல வீடுகளில இப்பிடித்தான் இருக்கும்போல.. :(

சாத்திரி அண்ணா, நீங்கள் அவருடன் பேச முற்பட்டதே அவருக்கு இறுதிநேர ஆறுதலாகவிருக்கும்.

எல்லாம் காலம் செய்த கோலம்.

நீங்களும் மெடிக்கல் லீவு என்று சொன்னீர்கள். உங்கள் உடல் நலத்தையும் இந்த நேரத்தில் கவனிக்கவும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பின்னாட்களில் ஜெகனை மாவீரர் பட்டியலில் இணைத்து - தவறுதலாக ஏற்பட்ட வெடிவிபத்தில் வீரச்சாவு என இயக்கம் அறிவித்திருந்தது. போன உயிர் போனதுதானே..

சாத்திரி.. நிறையக் கதைகளின் சொந்தக்காரர் நீங்கள். 2..3 வரும் இயக்கத்தில் இருந்தவர்கள் தங்கட கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டு பெரும் பெரும் எழுத்தாளர்களாக கோலோச்சும் போது உங்களுக்குள் அத்தனை கதைகளும் அமைதியாகக் கிடக்கின்றன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.