Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒன்று-ஒன்பது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அம்மாவுடன் கோவிலுக்கு போவது என்றால் எனக்கு சின்ன வயசில் விருப்பமில்ல,அவர் மூன்றுதரம் கோவிலில் உள்வீதி வலம் வருவார் அவருடன் நானும் வலம் வரவேண்டும் பிறகு வெளிவீதி  மூன்று தரம் சுற்ற வேண்டும்.அந்த வயசில்  கோவில்கள் மிகவும் பிரமாண்டமாக தெரிந்தன,இதை எப்படி மூன்றுதரம் சுற்றுவது கால் நோகும் என்ற பயம் வேறு,"அம்மா எனக்கு  மூன்று தரம் சுற்ற ஏலாது கால் நோகும் ஒரு தடவை மற்றும் சுற்றுகிறேன்" என அழாக்குறையாக கேட்பேன்." தம்பி ஒருதரம் சுற்றினால் பலன் கிடையாது கடவுளின் அருள் கிடைக்க வேணும் என்றால் மூன்றுதரம் சுற்ற வேண்டும், அத்துடன் கோவிலுக்கு போகும் பொழுது நடந்து போனால் இன்னும்   அதிக வரம் கிடைக்கும்"என சொல்லுவார்.

சின்ன வயசு தாய் சொல்லை தட்டாதே என்பது நன்றாகவே மனதில் பதிந்து விட்டது.அவரின்  விருப்பப்படி செய்து கொண்டிருந்தேன். மூன்றுதரம் கோவிலில் உள்வீதி வலம் வருவார் அவருடன் நானும் வலம் வரவேண்டும் பிறகு வெளிவீதி  மூன்று தரம் சுற்ற வேண்டும்.அந்த வயசில்  கோவில்கள் மிகவும் பிரமாண்டமாக தெரிந்தன,இதை எப்படி மூன்றுதரம் சுற்றுவது கால் நோகும் என்ற பயம் வேறு,"அம்மா எனக்கு  மூன்று தரம் சுற்ற ஏலாது கால் நோகும் ஒரு தடவை மற்றும் சுற்றுகிறேன்" என அழாக்குறையாக கேட்பேன்.

சைக்கிள் ஒடும் பருவம் வந்தவுடன் தனியாக கோவிலுக்கு போகும் சந்தர்ப்பம் கிடைத்தது .நான் நினைத்தபடி வலம் வரக்கூடியதாக இருந்தது .உள்வீதி ஒருதரம் வெளி வீதி ஒரு தரம் சுற்றுவேன் அம்மா கேட்டால் மூன்று தரம் இரண்டு வீதியையும் சுற்றினதாக பொய் சொல்வேன்..

மீசை அரும்பத் தொடங்க ஆசைகளும் வரத்தொடங்கின.சைக்கிளில் வீதி வலம் செல்லத்தொடங்கினேன். கோவிலுக்கு செல்வதாக சொல்லி போட்டு வேறு பல இடங்களுக்கு சென்று வந்தேன்.

பக்கத்துவீட்டு அன்ரியின் மகன் க.பொ.த உயர்தரத்தில் 2ஏ 2பி சித்தியடைந்து மருத்துவத்துறைக்கு தெரிவானார். அவர் ஒரு சைவப்பழம்.ஒவ்வோரு வெள்ளிக்கிழக்களில்   கோவில் தரிசனம் முடிந்தவுடன் உள்வீதியையும் வெளி வீதியையும் மூன்று தரம் சுற்றி  வருவார்.பரிட்சை காலங்களில் அதிக தடவை கோவிலுக்கு சென்றார்.

அவரின் அம்மாவும் ஒரு சைவப்பழம்தான் இருந்தும் ஊரில் உள்ள அந்தோணியார் கோவிலுக்கு அதிகம் செல்வார். ஒன்பது செவ்வாய்கிழமை தொடர்ந்து சென்றால் நினைத்த காரியம் நடக்கும் என யாரோ அவருக்கு சொல்லியிருக்கினம்,மகனுக்கு பரீட்சை முடிந்தவுடன் அவர் ஒன்பது தடவை சென்றுவந்தார் .அவாவின் விருப்பப்படியே மகனுக்கு மருத்துவத்துறையில் இடம் கிடைத்தது.அந்த பாடசாலை மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் முதலே தெரியும் அவாவின் மகனுக்கு நிச்சம் மருத்துவதுறையில் அனுமதி கிடைக்கும் என்று எனேனில் அவர் படிப்பில் மிகவும் கெட்டிக்காரன்.

இரண்டு வருடங்களின் பின்பு நான் முதல்தடவை பரீட்சை எடுக்கும் பொழுது"தம்பி கோவிலுக்கு போய் தேங்காய் உடைத்துவிட்டு மூன்று தரம் உள்வீதி வெளிவீதி சுற்றி ,நல்லாய் கும்பிட்டு போட்டு வா" என அம்மா சொல்ல அதையும் செய்தேன்.ஒன்பது வெள்ளிக்கிழமை தொடர்ந்து வருவேன் எனக்கு தெரிந்த கேள்விகளை வினாத்தாளில் தந்திடு என ஆண்டவனிட ம் மன்றாடிவிட்டு வந்தேன்.

பரீட்சையில் எனக்கு தெரிந்த கேள்விகள் வரவில்லை .வீட்டை வந்தவுடன் அம்மா "தம்பி சோதனை எப்படி ?நல்லாய் செய்தனியோ?மெடிசின் கிடைக்குமோ?"

"ஒம் நான் நல்லாய் செய்தனான் ரிசல்ட் வந்தவுடன் பார்போம்"என பதிலளித்துவிட்டு பெடியங்களுடன் ஊர் சுற்ற தொடங்கினேன்.

ரிசல்ட் வரும் வரை ஒரே கும்மாளம்தான்.கோயில் திருவிழாக்கள் என்றால் நாங்கள் எல்லோரும் அங்குதான் முழு நேரமும் நிற்போம். டியுசனில் படித்த பெண்கள் வருவார்கள்,அவர்களுடன் கதைக்க வேணும் போல இருக்கும் ஆனால் பயம் ,பார்த்து சிரிப்போம் என பார்த்து சிரித்தாலும் அவையள் ஒரு முறைப்பு முறைப்பினம் கற்புக்கரசிகள் பரம்பரைகள் என்ற நினைப்பில்,இருந்தாலும் சுதா ஒரு நாள் என்னை பார்த்து சிரித்தாள் .அவள் என்ன அர்த்தத்தில் சிரித்தாளோ தெரியவில்லை இன்றுவரை ,நான் நினைத்தேன் "அதுதான்"(காதல்) என்று. மச்சான் அந்த காய்  சுதா என்னை பார்த்து சிரிச்சவடா என்றேன் உடனே பெடியன்கள் "காய் உன்னை லவ் பண்ணுகிறா  விளையாட்டை காட்டு " என உசுப்பேத்தினார்கள்(உற்சாகப்படுத்தினார்கள்...கி...கி) அதன் பின்பு பெடியங்களும் சுதா என்று சொல்லி என்னை பகிடி பண்ணுவார்கள் எனக்கும் உள்மனதில் ஒரு கிளுகிளுப்பாய்யிருக்கும்.

"தம்பி தேவி அக்காவுக்கு கலியாணம் சரி வந்திட்டாம்,அவவுக்கு செவ்வாய் குற்றம் இருந்தது தொடர்ந்து ஒன்பது  கிழமை எங்கன்ட அந்தோனியார் கோவிலுக்கு போய் வந்தவ சரியா ஒன்பதாவது கிழமை மாப்பிள்ளை வீட்டார் கலியாணத்திற்கு சம்மதம் தெரிவிச்சு இருக்கினம்"மானிப்பாய் அந்தோனியார்  மிகவும் சக்தி வாய்ந்தவர் என அம்மா சர்டிபிகேட் கொடுத்தார்.அந்தோனியாருக்கும் செவ்வாய்கிழமைக்கும் என்ன தொடர்பு என்று இன்று வரை எனக்கு விளங்கவில்லை இனியும் விளங்கப்போவதில்லை.

"அவன் நல்லாதான் படிச்சவன் ஆனால் பாஸ் பண்ண முடியாமல் போய்விட்டது அவனுக்கு அட்டமத்தில் சனியன் அதுதான் அவனை பாஸ் பண்ணவிடவில்லை,அடுத்த வருஷம் வேறு ஸ்தானத்திற்கு போறான்  அப்ப அவன் பாஸ் பண்ணிபோடுவான்" என அம்மா  அப்பருக்கு சொன்னது எனக்கு மனதில் ஒரு துணிவை தந்தது.

தெல்லிப்பளை அம்மன் கோவிலுக்கும் தொடர்ந்து ஒன்பது செவ்வாய்கிழமை சென்று வந்தால் நினைத்த காரியம் நடக்கும் என இன்னுமொரு கருத்து பரவதொடங்கியிருந்தது.அதையும் செய்யத்தொடங்கினேன்.படிப்பதில் கவனத்தை செலுத்துவதை விடுத்து 3 தரம் சுற்றுதல்,ஒன்பது தரம் போய்வருதல் என்ற கருத்தாதிக்கத்து க்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கினேன்...

கிறிஸ்தவ ,சைவ  மக்களின் கருத்தாதிக்க மையங்களின் கருத்துக்களுகு ஏற்ப நடக்கத் தொடன்கினேன்.அந்த காலகட்டத்தில் இந்திய கல்லூரிகளுக்கு பணத்தை கட்டினால் அனுமதி கிடைக்கும் என்ற நிலமை ,அநேகர் சென்று படிக்கத் தொடங்கினார்கள்,நானும் சென்றேன்.இந்தியாவுக்கு போகவேணும் என்றுதான்  துர்க்கை அம்மனுக்கு போய்வந்தனான் என்றேன் உடனே நண்பர்களும் நம்பினார்கள் சிலர் போகத் தொடங்கினார்கள்.

புலம் பெயர்ந்தவுடன் இப்படியான சுற்றல்கள்,ஒன்பது தடவை போய்வருதல் என்பன இருக்காது என எண்ணினேன் ஆனால் இங்கும் அது இருந்தது.எல்லோரும்  செய்யும் பொழுது நான் ஏன் விடுவான் என்று போட்டு நானும் செய்யத்தொடங்கினேன்.

"பிரஜாவுரிமை கிடைக்க வேணும் என்றால் ஓவ்வொரு நாளும்108 தரம் ராமஜெயம் எழுதும் உடனே கிடைத்துவிடும்" என்றார் ஒருவர்.தமிழன் என்றால் கேஸ் போட்ட எல்லோருக்கும் பிரஜாவுரிமை கிடைக்கும்

என்பது எழுதாத சட்டமாக இருந்தது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று.

இன்னோருத்தர் சொன்னார் மல்கோவா சர்ச்சுக்கு போனால் வேளை கிடைக்கும் என அதையும் செய்தேன் .

புலத்தில் ஒரளவுநடுத்தர வர்க்கத்தின் ஆசையை பூர்த்தி யாக்ககூடிய அரச கட்டமைப்புக்கள் இருந்தாலும் எல்லாவற்றிலும்  அதியுச்ச  வசதிகள்(Top of the range)பெற வேண்டும் என்ற ஆசையில் எல்லாவற்றையும் தொடர்ந்து செய்கிறேன்...

பிரபல இலக்கிய முதிர்ச்சி பெற்ற எழுத்தாளராக வரவேண்டும் என்ற ஆசையை நிவர்த்தி செய்ய எங்க என்ன செய்யலாம் என்று யோசித்துகொண்டிருக்கிறேன்.....

(யாவும் சுத்தகற்பனை ...ஒருத்தரையும் கிண்டல் பண்ணவில்லை என்பதை தாழ்மையுடன் தெரிவிக்கிறேன்)

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்

இது நம் சமூகத்தில் இருக்கும் ஒரு முக்கியமான பிரச்சனை அல்லது சம்பிரதாயம்

எவ்வளவு நல்லாகப் படித்தாலும் சிலர் கடைசி நேரத்தில் பரீட்சையில் கோட்டை விட்டுவிடுகின்றார்கள்.

சிலருக்குப் பரீட்சை நேரத்தில் எதாவது தடங்கல் ஏற்பட்டு பரீட்சையில் தோற்றமுடியாமற் போய்விடுகின்றது.

எனது வீட்டில் எங்கள் அக்கா நன்றாகப் படிப்பார்.பரீட்சைவரை வகுப்பில் அவர்தான் முதலாவது. எல்லோரும் அவருக்கு மருத்துவம் படிக்க இடம் கிடைக்கும் என்று பேசிக் கொண்டார்கள்.

முடிவு நாலு பாடத்திலும் சாதாரண சித்தியைக் கூட எடுக்க முடியவில்லை.(எங்கள் அம்மா ஒன்பதுமுறை அந்தோனியார் கோவிலுக்குச் செல்லவில்லை)

எனது மகள் உயர்தரம் படித்து நல்ல பெறு பேறுகளை எடுத்தும் நாம் வாழும் நாட்டில் ஒருசில புள்ளிகள் குறைந்ததால் மருத்துவத்திற்கு இடம் கிடைக்கவில்லை.

பிரித்தானியாவிலும் இடம் கிடைக்கவில்லை.எதேச்சையாக உறவினர் ஒருவர் கூறிய தகவலின் படி கிழக்கு ஐரோப்பிய நாடொன்றில் மருத்துவம் படிக்க இடம் கிடைத்திருக்கின்றது.

(எனது மனைவி ஒன்பது செவ்வாயும் அந்தோனியார் கோவிலுக்குச் சென்று வந்தார்.)

இப்போதும் அந்தோனியார் கோவிலுக்குச் சென்று வருகின்றார். காரணம் மகள் இரண்டு வருடங்களின் பின்னராவது எங்களுடன் சேர்ந்திருந்து படிக்க வேண்டுமாம்.

செவ்வாய்க்கும் அந்தோனியாருக்கும் என்ன சம்பந்தம் என அவரிடம் கேட்டுப் பின்னர் எழுதுகின்றேன்.

புத்தன் உங்கள் கிறுக்கல்கள் எப்போதுமே தனித்துவமானது.

  • கருத்துக்கள உறவுகள்

புத்தனுக்கு ஒரு பச்சை

Edited by வாத்தியார்

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன் நன்றி பகிர்வுக்கு, அது என்ர பச்சை வாத்தியார் இன்னும் போடல

கதை நன்றாக இருக்கிறது. கனபேர் கடமையைச் செய்யாமல் கடவுளை மாத்திரம் வணங்கினால் பலன் வரும் என நினைக்கிறார்கள்.

அது என்ர பச்சை வாத்தியார் இன்னும் போடல

வாத்தியார் பச்சத்தண்ணியில பலகாரம் சுட்டிருக்கிறார். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

புத்தனின் கிறுக்கல்களைக் கணநாளாய்க் காணவில்லை...மகிழ்ச்சி மீண்டும் கண்டதில்..அதுவும் நல்ல ஒரு பதிவுடன்..இப்படித்தான் எமது மக்கள் சாமியும்,கோயிலும் நல்லது செய்து நாடுபிடித்துத்தருவார்கள் என்று முட்டாள்தனமான பிற்போக்குத்தனங்களில் ஊறிப்போய்க்கிடக்கும் வரை ஆயிரம் பெரியார் வந்தும் வேலை இல்லை..

மிகவும் நன்றாக எழுதியிருக்கின்றீர்கள் புத்தன் வாழ்துக்கள் புத்தன் :) :) :) .

  • கருத்துக்கள உறவுகள்

நவக்கிரகத்தை கட்டாயம் 9 தடவை சுத்த வேண்டும் அதே மாதிரி இங்கு லண்டனில் 9 அல்லது 7 தடவை தொடர்ந்து அம்மனுக்கு பால் வார்த்தால் நினைத்த காரியம் நடக்கும் ஆனால் இடையில் போக முடியாமல் விட்டால் நினைத்த காரியம் தடை தான்...பாராட்டுக்கள் புத்தன்

  • கருத்துக்கள உறவுகள்

<p>

கதை நன்றாக இருக்கிறது. கனபேர் கடமையைச் செய்யாமல் கடவுளை மாத்திரம் வணங்கினால் பலன் வரும் என நினைக்கிறார்கள்.

வாத்தியார் பச்சத்தண்ணியில பலகாரம் சுட்டிருக்கிறார். :lol:

வைத்துக்கொண்டு வஞ்சகம் செய்வேனா? நம்மளாலை பச்சை என்று எழுத்தான் முடியும்.கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் அறுபது நாட்கள் 180 பச்சைகள் வீணாகி விட்டன :lol: .

  • கருத்துக்கள உறவுகள்

துர்க்கை அம்மனுக்கு 9 செவ்வாய் போனால் நினைத்தது நடக்கும் என்றார்கள்.போனேன். நினைத்தது கைகூடவில்லை.அன்றோடு விட்டது தான்.எல்லாம் முயற்சி செய்ய தானாக இன்று வரை கிடைத்துக்கொண்டு இருக்கிறது.நன்றி புத்தனின் கதைக்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புத்தன், வெள்ளோட்டமாக இருக்கிறது கதை. பழைய நினைவுகளை கிளறி விட்டீர்கள்.

ரஞ்சிதா கோவிலுக்கு போறாள் என்று தெரிந்தவுடன் விடிய ஐஞ்சு மணிக்கு எழும்பி, அந்த குளிர் தண்ணிலையும் குளிச்சு, நந்தியாவட்டை பூ பிடுங்கி கொண்டு அம்மன் கோவிலுக்கு போன ஞாபகம் வருது.

பிறகு ரஞ்சிதா, கோவில் ஐய்யாவிட மகனுக்கு தூது விடுறாள் என்று தெரிந்து எனது சின்ன இதயம் நொறுங்கிய நாளும் ஞாபகம் வருது.

உங்கட இலக்கிய முயற்சி தொடரட்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிட்னியில் இருந்தும் தமிழ்மணம் மாறாத புத்தனே வாழ்க.

  • கருத்துக்கள உறவுகள்

நானும் ஆஞ்சநேயரின் வாலில் சந்தனப் பொட்டு வைத்து & பொன்னாலை விஷ்னுவை 108 தரம் சுத்தினான், எனது மன எண்ண அலைகளினாலோ அல்லது முயற்ச்சியாலோ அல்லது கடவுளின் அருளாலோ நான் நினைத்த பல நடத்திருக்கு, காரணம் யாம் அறியோம் பராபரமே

பிறகு ரஞ்சிதா, கோவில் ஐய்யாவிட மகனுக்கு தூது விடுறாள் என்று தெரிந்து எனது சின்ன இதயம் நொறுங்கிய நாளும் ஞாபகம் வருது.

உங்கட இலக்கிய முயற்சி தொடரட்டும்.

அது சரி வரலையோ அல்லது ஐயர் கைவிட்டுவிட்டாரோ தெரியா ரஞ்சிதா இப்ப நித்தியம் நித்தியானந்த சுவமிகளின் தரிசணத்தில்

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதோர் படைப்பு, புத்தன்!

விரைவில் 'செங்கை ஆழியான்' வரிசையில் இடம் பிடித்து விடுவீர்கள்!!! வாழ்த்துக்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

புனித அந்தோனியார் ஆண்டவனுக்கு மிவும் நெருக்கமானவர்.ஆண்டவனால் மிகவும்

நேசிக்கப்பட்ட இறைதூதர்.

குழந்தை யேசுவை தூக்கி வளர்த்தவர்.

அவர் வாழும் காலத்தில் பல அற்புதங்களை நிகழ்த்தினார்.

அதனால் அவருக்குப் பற்கோடி அற்புதர் என்றும் ஒரு பெயர் உண்டு.

தொடர்ந்து வரும் ஒன்பது செவ்வாய் தினங்கள் தன்னை வந்து வழிபடுபவர்கள் தன் ம்கிமையை

உணர்ந்து கொள்வார்கள் என்று ஒருமுறை அருளியிருக்கின்றார்.

அவருடைய நாக்கு இன்றும் ரோமில் பாதுகாக்கப்படுகின்றது.

அவரை வழிபடும் போது கூட இதையே செபமாக கிறிஸ்த்தவர்கள் பாடுகின்றார்கள்.

இது தான் செவ்வாய்க்கிழமைக்கும் அந்தோனியாருக்கும் உள்ள தொடர்பு என என் மனைவி கூறினார்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையின் தரிசனம்.ஒரு பச்சை உங்களுக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

<p>

வைத்துக்கொண்டு வஞ்சகம் செய்வேனா? நம்மளாலை பச்சை என்று எழுத்தான் முடியும்.கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் அறுபது நாட்கள் 180 பச்சைகள் வீணாகி விட்டன :lol: .

1 :icon_mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சூப்பர் புத்தன் அண்ணா. ஒரு பச்சை..

பட்டை அடிச்சிட்டு கோயில் கோயிலா சுத்தினது தான் ஞாபகம் வருது.

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன் பிரபல இலக்கிய முதிர்ச்சி பெற்ற எழுத்தாளராக வந்துவிட்டீர்கள். தங்கள் சுற்றலுக்கு கைமேல் பலன் கிடைத்துவிட்டது!

இந்த சுற்றல் விடயத்தை முட்டாள்தனமாகப் பார்ப்பதைவிட எமது பண்பாட்டின் ஒரு அங்கமாகப் பார்த்தால், பிழையென்றாலும் கடைப்பிடிப்பதில் பிரச்சினையில்லை (இஸ்லாமிய சகோதரிகள் தலையை மூடி பர்தா அணிவதை நியாயப்படுத்துவதும் சரியாகத்தான் தெரிகின்றது!)

  • கருத்துக்கள உறவுகள்

நவக்கிரகத்தை கட்டாயம் 9 தடவை சுத்த வேண்டும் அதே மாதிரி இங்கு லண்டனில் 9 அல்லது 7 தடவை தொடர்ந்து அம்மனுக்கு பால் வார்த்தால் நினைத்த காரியம் நடக்கும் ஆனால் இடையில் போக முடியாமல் விட்டால் நினைத்த காரியம் தடை தான்...பாராட்டுக்கள் புத்தன்

லண்டன் அம்மனை ஒரு மூன்று முறை சுற்றினாலே போதும்...............

இப்ப ஒரே அம்மனை தொடர்ந்து சுற்ற போர் (bore ) அடிக்குது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

<p>

செவ்வாய்க்கும் அந்தோனியாருக்கும் என்ன சம்பந்தம் என அவரிடம் கேட்டுப் பின்னர் எழுதுகின்றேன்.

புத்தன் உங்கள் கிறுக்கல்கள் எப்போதுமே தனித்துவமானது.

நன்றிகள் வாத்தியார்...அந்தோனியாரின் நாக்கில் அவ்வளவு விசயம் இருக்குதோ??புத்தருக்கு பல்லு...அந்தோனியாருக்கு நாக்கு...

<p>

புத்தன் நன்றி பகிர்வுக்கு, அது என்ர பச்சை வாத்தியார் இன்னும் போடல

நன்றிகள் உடையார்<p>

கதை நன்றாக இருக்கிறது. கனபேர் கடமையைச் செய்யாமல் கடவுளை மாத்திரம் வணங்கினால் பலன் வரும் என நினைக்கிறார்கள்.

நன்றிகள் தப்பிலி<p>

புத்தனின் கிறுக்கல்களைக் கணநாளாய்க் காணவில்லை...மகிழ்ச்சி மீண்டும் கண்டதில்..அதுவும் நல்ல ஒரு பதிவுடன்..இப்படித்தான் எமது மக்கள் சாமியும்,கோயிலும் நல்லது செய்து நாடுபிடித்துத்தருவார்கள்  என்று முட்டாள்தனமான பிற்போக்குத்தனங்களில் ஊறிப்போய்க்கிடக்கும் வரை ஆயிரம் பெரியார் வந்தும் வேலை இல்லை..

நன்றிகள் சுபேஸ் யாழைவிட்டால் வேற எங்க போறது

Edited by putthan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நன்றாக எழுதியிருக்கின்றீர்கள் புத்தன் வாழ்துக்கள் புத்தன்

நன்றிகள் கோமகன்

நவக்கிரகத்தை கட்டாயம் 9 தடவை சுத்த வேண்டும் அதே மாதிரி இங்கு லண்டனில் 9 அல்லது 7 தடவை தொடர்ந்து அம்மனுக்கு பால் வார்த்தால் நினைத்த காரியம் நடக்கும் ஆனால் இடையில் போக முடியாமல் விட்டால் நினைத்த காரியம் தடை தான்...பாராட்டுக்கள் புத்தன்

நன்றிகள் ரதி

துர்க்கை அம்மனுக்கு 9 செவ்வாய் போனால் நினைத்தது நடக்கும் என்றார்கள்.போனேன். நினைத்தது கைகூடவில்லை.அன்றோடு விட்டது தான்.எல்லாம் முயற்சி செய்ய தானாக இன்று வரை கிடைத்துக்கொண்டு இருக்கிறது.நன்றி புத்தனின் கதைக்கு.

நன்றிகள் நுனாவிலான்

<p>

புத்தன், வெள்ளோட்டமாக இருக்கிறது கதை. பழைய நினைவுகளை கிளறி விட்டீர்கள்.
நன்றிகள் குழவி

சிட்னியில் இருந்தும் தமிழ்மணம் மாறாத புத்தனே வாழ்க.

நன்றிகள் கு.சா

<p>

நல்லதோர் படைப்பு, புத்தன்விரைவில் 'செங்கை ஆழியான்' வரிசையில் இடம் பிடித்து விடுவீர்கள்!!! வாழ்த்துக்கள்!
நன்றிகள் புங்கையூரான்...ஆசை தோசை அப்பளம் வடை
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

<p>

சூப்பர் புத்தன் அண்ணா. ஒரு பச்சை..பட்டை அடிச்சிட்டு கோயில் கோயிலா சுத்தினது தான் ஞாபகம் வருது.
நன்றிகள் ஜீவா எந்த பட்டை?

புத்தன் பிரபல இலக்கிய முதிர்ச்சி பெற்ற எழுத்தாளராக வந்துவிட்டீர்கள்.

நம்ப முடியவில்லை.....நன்றிகள் கிருபன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

லண்டன் அம்மனை ஒரு மூன்று முறை சுற்றினாலே போதும்...............

இப்ப ஒரே அம்மனை தொடர்ந்து சுற்ற போர் (bore ) அடிக்குது

அப்ப சிவனை சுத்துறது

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன், வெள்ளோட்டமாக இருக்கிறது கதை. பழைய நினைவுகளை கிளறி விட்டீர்கள்.

ரஞ்சிதா கோவிலுக்கு போறாள் என்று தெரிந்தவுடன் விடிய ஐஞ்சு மணிக்கு எழும்பி, அந்த குளிர் தண்ணிலையும் குளிச்சு, நந்தியாவட்டை பூ பிடுங்கி கொண்டு அம்மன் கோவிலுக்கு போன ஞாபகம் வருது.

பிறகு ரஞ்சிதா, கோவில் ஐய்யாவிட மகனுக்கு தூது விடுறாள் என்று தெரிந்து எனது சின்ன இதயம் நொறுங்கிய நாளும் ஞாபகம் வருது.

உங்கட இலக்கிய முயற்சி தொடரட்டும்.

ஆர் நித்தியானந்தாவின்ட ரஞ்சிதாவா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.