Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்க ஊர் காட்வெயர் எஞ்சினியர்...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
யாழ்ப்பாணத்துக்கு கணணி பரவலாக அறிமுகமான நேரத்தில் எத்தினை பேர் ஊரில் இருந்தீர்களோ தெரியாது..அப்படி இருந்திருந்தால் அந்த நேரம் புதிது புதிதாக முளைத்த பல கணணி திருத்தும் கடைகளையும் பார்த்திருப்பீர்கள்..அந்த நேரம் கணணி யாழ்ப்பாணத்துக்கு புதிது என்பதால் பிள்ளைகளுக்கு கணணி வாங்கிகொடுத்த பெற்றொர் பலருக்கு அதைப்பற்றி பெரிதாக விளக்கம் ஏதும் தெரியாது..அப்படியான பெற்றொர்கள் கணணி பிழைத்துவிட்டது என்று இந்த திருத்துபவர்களிடம் போனால் அவர்கள் செய்யும் சுத்துமாத்துக்கள் பல..(எல்லாரும் அல்ல)..இந்த நிலமை புலம்பெயர்ந்த பின்னும் பல தமிழ் வீடுகளில் கணணி பற்றிய பெரிய அறிமுகம் இல்லாத பெற்றோரை பல கண்ணணி திருத்துபவர்கள் ஏய்ப்பது நடக்கிறது..இப்படிப்பட்ட ஊர் காட்வெயர் எஞ்சினியர்களை வைத்து ஒரு பதிவு..இப்படி உங்களுக்கும் ஏதாவது நினைவுகள் அனுபவங்கள் இருந்தால் பதியவும்..
 
 
 
 
 
அண்ணணிண் சிங்கிள் பாத்ரூம் சைஸ் காட்வெயர் திருத்தும் கடை...
 
இரண்டு மேசை..இதுக்குள்ளைதான் நீட்டவும் முடியாமல்..மடக்கவும் முடியாமல் அண்ணை பழைய கொம்பியூட்டருகளோட(அதுக்குள்ளை ஒண்டும் கிடவாது..வெறும் கோதுகள்..நான் ஒரு பெரிய வேலைக்காறன் எண்டு காட்ட பம்மாத்துக்கு வைச்சிருக்கிற பழைய இரும்புக்கடை அயிற்றங்கள்...)சண்டை பிடிச்சுக்கொண்டு இருப்பார்...
 
ஆராவது கொம்பியூட்டர் திருத்த வந்தால் அண்ணை வாங்கோ...இருங்கோ...(இருக்கிறதுக்கு அங்கை இடமுமில்ல கதிரையுமில்ல...கொம்பியூட்டர் கண்டுபிடிக்கப்பட்ட ஆரம்பகாலத்தில வந்த கொம்பியூட்டர் ஒண்டை கவிட்டு வைச்சிட்டு அதிலதான் இருங்கோ எண்டு வாறவையிட்ட சொல்லுறவர்..வாறவை அதைப்பாத்த உடனையே இருக்கிற எண்ணத்தை கைவிட்டிட்டு நேர கொம்பியூட்டரில இருக்கிற பிரச்சினையை சொல்ல வெளிக்கிட்டுவிடுவினம்..அண்ணனின் விருப்பமும் அதுவே...சும்மா இருந்து அந்த நாலுக்கு நாலு கடைக்குள்ளை இடத்தை நிரப்புறதைவிட பக்கெண்டு அலுவலைச்சொன்னால் எவ்வளவுதேறும் எண்டு ஒரு மனக்கணக்கு போடலாம் எண்டுறதை விட அங்கிருக்கிற சாமானுகள் எல்லாம் டம்மி எண்டதை ஆரும் பாத்திடக்குடாது எண்டதுதான் அண்ணைக்கு முக்கியம்...
 
அண்ணை உங்கை ரவுனுக்க இருக்கிற மூண்டு கொம்பியூட்டர் திருத்துற கடைக்காரரிட்டையும் குடுத்துகேட்டுப்பாருங்கோ..அவங்களுக்கு அரைவாசிச் சாமானுகளின்ர பேரே தெரியாது..இந்த விசித்திரத்திலை வாடகை கட்டி கடை எடுத்து வச்சிருக்கிறாங்கள்...அதில ஒருத்தன் சீதனக்காசிலை போட்ட கடை..மானங்கெட்டவங்கள்..இஞ்சை கொண்டாங்கோ..என்னட்டை வந்திட்டியள் எல்லோ..இனி உங்கடை கொம்பியூட்டர் புதுக்கொம்பியூட்டாராய்தான் வரும்..என்ரவேலை கிளீன் வேலை அண்ணை..உவங்களை மாதிரி சொறியிறேல்ல நான்...ஊரான் எல்லே...கண்ணத்தைப் பொத்தி அடிச்சமாதிரி காசெல்லாம் கேக்கமாட்டன்..என்னடை ரேட் நியாய ரேட்தான் எப்பவும்...
 
வந்தவர் அண்ணன்ர கதையிலை மயங்கி சுடச்சுட வீட்டுக்குப்போய் கொம்பியூட்டர் குலுங்கிப்போகும் எண்டு பொடியையும் பின்னுக்கு ஏத்தி அவன்ரை மடியிலை அலுங்காமல் குலுங்காமல் புதுமணப்பொம்பிளை மாதிரி கொம்பியூட்டரை கொண்டு வந்து இறக்குவார்...
 
நம்பிக்கெடப்போகும் அந்த வெங்காயமும் கொம்பியூட்டரை கொண்டுவந்தவுடன இவர் இருக்கிற ஸ்கூட்றைவர் எல்லாத்தையும் போட்டுபாத்து அதிலை எது பொருந்துதோ அதாலை மளமளவெண்டு கவறைக் கழட்டுவார்..உள்ளுக்கை வடிவாய் உத்துப்பாத்திட்டு வெளியாலை தள்ளிக்கொண்டு நிக்கிற ஏதாலும் ரண்டு வயறை குத்துமதிப்பாய் இழுத்துக் கழட்டுறது..பிறகு தலையை சொறிஞ்சுகொண்டு முகட்டு வளையைப்பார்த்து யோசிக்கிறது...அண்ண்ண்ண்ண்ணை....எண்டு இழுத்துப்போட்டு...உள்ளை கனக்க வேலை கிடக்கண்ணை திருத்த...இதுக்குள்ளை இப்ப கையை வைச்சால் மினக்கெடும் அண்ணை..பங்க பாருங்கோ எத்தினை கொம்பியூட்டர் கழட்டினபடி கிடக்கெண்டு...உள்ள இருக்கிற மூடின கோதுவளைக்காட்டுவார்...
 
வந்தவரும் அண்ணை ரொம்ப பிஸிபோல பாவம் அந்தாள்..முன்னம் கொடுத்தவங்களும் அந்தாலை ஆக்கினைப்படுத்துவங்கள்தனை எண்டு கழிவிரக்கப்பட...ஒரு ரெண்டு நாளையாலை வாங்கோ..எல்லாம் அந்தமாதிரி கிளீனாய் முடிச்சு வைக்கிறன்...ஒருக்கா உங்கடை மொபைல் நம்பரை தந்திட்டு போங்கோ...நான் எதுக்கும் இன்னுமொருக்கா வடிவாய் செக் பண்ணீட்டு என்ன பிரச்சினை எவ்வளவு சிலவு வரும் எண்டு கோல் பண்ணி சொல்லுறன் எண்டு எங்கடை காட்வெயார் என்ஞினியரும் பீலாவிடுவார்...
 
வந்தவர் போனவுடன் எங்கடை எஞ்சினியர் கடைக்குள்ள இருக்கிற சுத்தியல்,ஸ்பெனர்,குறடு எண்டு அகப்படுற எல்லாத்தையும் பாவிச்சு அங்கினை இங்கினை கொம்பியூட்டரில ஒரு தட்டு ரண்டு சுறண்டல் சுறண்டுவார்..ஏதாவது வயர் கியர் ஆடுப்பட்டிருந்தால் இல்லாட்டி கறல்கிறல் ஏதேனும் கொட்டுப்பட்டால் ஒன் பண்ண குருட்டுவாக்கிலை கொம்பியூட்டர் வேலை செய்யும்..அப்பிடியும் வேலை செய்யாட்டி சயிற்றாபிடிச்சுக்கொண்டு கவறிலை ரெண்டு அடி அடிப்பார்..முந்தி பொருளாதார தடையுக்கை ரீவி பாக்க யூஸ் பண்ணிண வாட்டர்பம் இன்ஞின்மாதிரி திடீரெண்டு கொம்பியூட்டர் வேலை செய்யும்...
 
அப்ப இவர் உடனை போனைபோட்டு அண்ணை எல்லாம் ரெடி வந்து சாமானை பிக் அப் பண்ணிக்கொண்டுபோங்கோ எண்டுவார்...கொம்பியூட்டரைக்குடுத்தது உடனை அண்ணை என்னமாதிரி பீஸ் எல்லாம்..எவளவு வரும் எண்டு இழுக்க..இவர் உடனை அண்ணை காசென்ன காசு மனிசர்தான் முக்கியம்..அதுகும் நீங்கள் எங்கடை ஊர்க்காரர்..உங்களிட்டை கேப்பனே..நான் கூலிகீலி ஒண்டும் வைக்கேல்லை அண்ணை..சாமானுவள்தான் கொஞ்சம் மாத்தவேண்டி வந்திட்டு...இஞ்சை யாழ்ப்பாணத்திலை ஒறிஜினல் சாமனுவள் எடுக்கிறதே கஸ்ரம்..எல்லாம் சைனிஸ் டூப்ளிக்கேற்றுவள்தான் விக்கிறாங்கள்..ஆனால் நான் உங்களுக்கு கொம்பனியாலை இறக்கின திறம் சாமானுவளாய்தான் போட்டிருக்கிறன் எண்டிட்டு...நாலைஞ்சு இங்கிலிஸ் எழுத்துக்களை குத்துமதிப்பாய் கோத்து  Pso,MGT,MMS எண்டு நாலைஞ்சு பேரை மாத்தின பாட்ஸ்களின் பேரெண்டுவர்..இப்ப கொன்டுபோய் போட்டுபாருங்க சும்மா தண்ணிமாதிரி உங்கட கொம்பியூட்டர் வேலை செய்யும் எண்டவும்..இதுவும் நம்பி கேட்ட காசை குடுத்திட்டு வீட்டுக்கு எடுத்திட்டுபோகும்..
 
இந்த குறளிவித்தைக்கெல்லாம் மசியாத கொம்பியூட்டரை இவர் திருத்தேலாது எண்டு சொல்லமாட்டர்..கவுரவம் என்ன ஆகிறது..அதுக்குதான் இன்னொரு கதை வைச்சிருக்கிறார்..அண்ணை இதுக்குள்ளை நிறைய சாமானுவள் மாத்தவேணும்..புரொசெசர் இத்துப்போச்சு...மதர்போட் உக்கிப்போச்சு..றம் செத்துப்போச்சு...உவ்வளவும் மாத்திறதை விட நீங்கள் ஒரு புதுக்கொம்பியூட்டர் வாங்கலாம் எண்டவும் வந்த அப்பாவி அதை நம்பி கொண்டந்த கொம்பியூட்டரை இனி ஆர் திருப்பி கொண்டு போறதெண்டு இவரிட்டையே விட்டிட்டு இவர் சொல்லுற கடையிலை புதுக்கொம்பியூட்டர் வாங்கும்..அந்தக்கடையிலை கிடைக்கிற கொமிசனையும் வாங்கிகொண்டு வந்த வெங்காயம் விட்டிட்டுபோன கொம்பியூட்டரை ஆரேனும் இன்னும் நல்லாய் திருத்துற ஆக்களிட்டை குடுத்து திருத்துவிச்சு இன்னொரு வெங்காயத்தின்ர தலையிலை கட்டிவிடுவார் எங்கடை என்சினியர்... ஆனால் அவற்றை இந்தளவு வண்டவாளங்களுக்கு நடுவிலும் கடைக்கை ரைகட்டிக்கொண்டு நிக்க ஒரு நாளும் மறக்க மாட்டார்...இப்பிடிதான் எங்கடை காட்வெயர் எஞ்சினியர் மார் பலற்ற பிழைப்பு யாழ்ப்பாணத்திலை அந்த நேரம் ஓடிச்சு.. :lol:
 
உங்களுக்கும் இப்பிடி ஆரேனையும் தெரியுமெண்டால் எடுத்துவிடுங்கோ...

Edited by சுபேஸ்

மிக அருமை சுபேஸ் 

  • கருத்துக்கள உறவுகள்

. நல்ல  நகைச் சுவை பதிவு.  . பாராட்டுக்கள்.

ஏமாற்றுவர்கள் பலர் இருக்கின்றார்கள், அவர்கள் வாழ்க்கையும் ஒரு ஏமாற்று வாழ்க்கையாகவே இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்
ஆனால் அவற்றை இந்தளவு வண்டவாளங்களுக்கு நடுவிலும் கடைக்கை ரைகட்டிக்கொண்டு நிக்க ஒரு நாளும் மறக்க மாட்டார்

:lol:  :lol:

 

 

நகைச்சுவை கதை அருமை.

  • கருத்துக்கள உறவுகள்

சுபேஸ் கதை அந்தமாதிரி. நல்லாய் என்ஜோய் பண்ணி வாசிச்சன். நானும் ஊரில ஹாட்வெயர் எஞ்சினியரிங்கில ஒரு டிப்ளோமா முடிச்சனான் :D  ஊரில ரெண்டு மூண்டு பேருக்கு கணணி அலுவல் நான்தான் பாத்தது. ஆனால் இலவச சேவை. தின்னக் குடிக்க மட்டும் ஏதாவது தருவீனம். ஊரில கண்ணாடியால பெட்டி அடிச்சு அதுக்குள்ளே சின்னனா ஒரு காப்பத் போட்டுத்தானே கொம்பியூட்டர வைக்கிறது. எங்கட வீட்டில மட்டும் என்ட புண்ணியத்தில கவர் களிட்டின படிதான் எப்பவுமே இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான நகைச்சுவைக் கதை!

 

தொடர்ந்து எழுதுங்கள், சுபேஸ்!

  • கருத்துக்கள உறவுகள்

அருமை சுபேஸ் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
மிக அருமை சுபேஸ் 

 

நன்றி அன்பு அண்ணா..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

. நல்ல  நகைச் சுவை பதிவு.  . பாராட்டுக்கள்.

 

நன்றி நிலா அக்கா..

ஏமாற்றுவர்கள் பலர் இருக்கின்றார்கள், அவர்கள் வாழ்க்கையும் ஒரு ஏமாற்று வாழ்க்கையாகவே இருக்கும்

 

நன்றி அண்ணா வாசிப்பிற்கும் கருத்துப்பகிர்விற்கும்.....

:lol:  :lol:

 

 

நகைச்சுவை கதை அருமை.

 

நன்றி நுணா அண்ணா வாசிப்பிற்கும் கருத்துப்பகிர்விற்கும்.....

  • கருத்துக்கள உறவுகள்

சுபேஸ்.. கதை நல்லாயிருக்கு.. :D

 

உள்ளூர் உரையாடலில் அமைந்ததால் வாசிக்க நல்லா இருந்தது.. :rolleyes:

 

அதுசரி.. உங்கட கணினிக்கு என்ன நடந்தது கடைசியில? :D

இந்த நிலமை புலம்பெயர்ந்த பின்னும் பல தமிழ் வீடுகளில் கணணி பற்றிய பெரிய அறிமுகம் இல்லாத பெற்றோரை பல கண்ணணி திருத்துபவர்கள் ஏய்ப்பது நடக்கிறது..இப்படிப்பட்ட ஊர் காட்வெயர் எஞ்சினியர்களை வைத்து ஒரு பதிவு..இப்படி உங்களுக்கும் ஏதாவது நினைவுகள் அனுபவங்கள் இருந்தால் பதியவும்..

 

இதெல்லாம் நடக்குமெண்டு நினைக்கிறீரே சுபேஸ் ?? காதும் காதும்வைச்ச மாதிரி நடக்கிற விசையங்களை வந்து பதியுங்கோ எண்டு கேட்டால் என்னமாதிரி ??  எனக்கு தெரிஞ்சு ஒரு மம்மி சொன்னா ,  தன்ரை மோளுக்கு தான் கொம்பியூட்டர் ஏன் வாங்கி குடுத்தது  எண்டால் பேஸ்புக்கிலை படிக்கலாம் எண்டு  :lol:  :lol: .  இத்தனைக்கும் அந்த மம்மி ஒரு பட்டதாரி .  இப்பிடியான படிச்ச கோமாளியள் இருக்கும்வரையும் கொம்பியூட்டர் இன்ஜினியர்மாரும் இருக்கத்தான் செய்வினம் . கலகலப்பான ஆக்கத்திற்கு எனது மனங்கனிந்த பாராட்டுக்கள் :) :) .

Edited by கோமகன்

ஆகா உப்பிடியெல்லாம் நடந்ததா??? ஏமாறுபவன் இருக்கும் வரையும் ஏமாத்துபவன் இருக்கவே செய்வான்.

கதை பகிடியா எழுதியது நல்லாருக்கு. :lol:

நகைச்சுவை உணர்வுடன் நன்றாக எழுதியுள்ளீர்கள் சுபேஸ். வாழ்த்துக்கள்.....!

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கணினி திருத்தி வந்ததோ அல்லது வேறை புதுசா வாங்கினீர்களா எண்டு சொல்லவே இல்லையே சுபேஸ் :D

  • கருத்துக்கள உறவுகள்

அந்த நேரம் நான் அங்கு இல்லை.ஆனால் உங்கடை எழுத்தை வைச்சு என்ன நடந்திருக்குமென கற்பனை பண்ணிப்பாக்க விளங்குது.

  • கருத்துக்கள உறவுகள்
நான் ஊரில் இருக்கும் போது கணணியை பாட‌சாலையில் தான் பார்த்திருக்கிறேன் :lol:
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுபேஸ் கதை அந்தமாதிரி. நல்லாய் என்ஜோய் பண்ணி வாசிச்சன். நானும் ஊரில ஹாட்வெயர் எஞ்சினியரிங்கில ஒரு டிப்ளோமா முடிச்சனான் :D  ஊரில ரெண்டு மூண்டு பேருக்கு கணணி அலுவல் நான்தான் பாத்தது. ஆனால் இலவச சேவை. தின்னக் குடிக்க மட்டும் ஏதாவது தருவீனம். ஊரில கண்ணாடியால பெட்டி அடிச்சு அதுக்குள்ளே சின்னனா ஒரு காப்பத் போட்டுத்தானே கொம்பியூட்டர வைக்கிறது. எங்கட வீட்டில மட்டும் என்ட புண்ணியத்தில கவர் களிட்டின படிதான் எப்பவுமே இருக்கும்.

 

நன்றி தும்பளையான்...ம்ம்...தின்னக்குடிக்க ஏதாவது தந்திட்டு என்னமோ பெரிய அமெரிக்கன் டொலரில சம்பளம் குடுத்தமாதிரி அவைன்ர பாவனையும் கதையளும்... :lol: வாங்கினபுதிசில எல்லாரும் இப்பிடித்தான் கொம்பியூட்டரை பூசை செய்யுறது.. :D

அருமையான நகைச்சுவைக் கதை!

 

தொடர்ந்து எழுதுங்கள், சுபேஸ்!

 

நன்றி புங்கை அண்ணா..

அருமை சுபேஸ் 

 

நன்றி உடையார் அண்ணா வாசிப்பிற்கும் கருத்து பகிர்விற்கும்

  • கருத்துக்கள உறவுகள்

எவனைய்யா தெரிந்த வேலை செய்கிறான் :D என கவுண்டமணி ஒரு படத்தில் சொல்வது சுபேசின் கதைக்கு நன்றாகவே பொருந்துகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

அது அப்போ பண்ணது .. இப்போ கொஞ்சம் வளர்ந்த மாறி பண்ணுவான். இங்கிட்டு சுவிட்சி ரவுட்டரில் பால்ட் என்றால் பிளாஸ் மெம்மரி  பூட்டுது .. அது பூட்டுது எனறு கொஞ்சம் நமக்கெ டகால்டி..  நல்லா வேலை செய்யற புது கொம்புயூட்டரை கொண்டு  போய் ரிப்பேர்  என்று கொடுத்து பாருங்கோ.. 1/2 மணி நேரம் கழித்து வரசொல்லுவான் வந்தா அது பூட்டுது இது பூட்டுது என்று நமக்ககே படம் காட்டுவான்.. நல்ல வேலைசெய்யுது என்று எவனும் திருப்பி கொடுப்பது கிடையாது.அவன் என்ன அரிசந்திரன் வீட்டுக்கு எதிர் வீடா என்ன..? இது பாரவா யில்லை மிசின்... உடம்பு..? ரமணா படம்  கொஸ்பிட்டல் சீன் நினைவுக்கு வந்து தொலைக்கிறது

டிஸ்கி:

என்னடா இப்படி பண்ணிட்டு திரியுறீங்க என்று நம்மட காட்டு வெர் நண்பரை கேட்டேன்.. இது எல்லாம் பிஸினஸ் மேன்  பிஸினஸ் என்றான்.. மொள்ளமாறி தனம் முடிச்செருக்கிதனம் பண்ணுவதற்கும் இங்கிளீஸ்காரன் நல்ல வார்த்தை கண்டு பிடித்து போட்டான். :icon_idea: :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

கொம்பியூட்டரைத் திருத்தக் கடைக்குப் போவதைவிட புதிதாக வாங்குவது மிகவும் இலகு என்று பலருக்குத் தெரியாது. அப்படியானவர்கள் இருக்கும்வரை இப்படியான ஹார்ட்வெயர் எஞ்சினியர்மாருக்கு பிழைப்பு ஓடும்தானே.

 

முதன் முதலில் அதிக விலை கொடுத்து கொம்பியூட்டரை வாங்கி ஒரு வருட warranty முடிந்த பின்னர் ஒருநாள் அது வேலை செய்யாமல் நின்றுவிட்டது. அன்று துணிவாகக் கழற்றி memory  மாற்றியதில் இருந்து இன்றுவரை சகல மென்பொருள், வன்பொருள் பிரச்சினைகள் எல்லாவற்றையும் கூகிள் ஆண்டவிரின் கிருபையினால் நானாகவே சரிபார்த்து வருகின்றேன். அதனால் பலருக்கு இலவச சேவையும் செய்யும் பொழுதுபோக்கும் உண்டு..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுபேஸ்.. கதை நல்லாயிருக்கு.. :D

 

உள்ளூர் உரையாடலில் அமைந்ததால் வாசிக்க நல்லா இருந்தது.. :rolleyes:

 

அதுசரி.. உங்கட கணினிக்கு என்ன நடந்தது கடைசியில? :D

 

நன்றி இசை அண்ணா வாசிப்பிற்கும் கருத்துபகிர்விற்கும்..என்னோட கணணியை அப்ப எனது ஒன்றுவிட்ட தம்பிக்கு கொடுத்துவிட்டார் நான் வெளிநாடு வந்தபின்பு. :D

இந்த நிலமை புலம்பெயர்ந்த பின்னும் பல தமிழ் வீடுகளில் கணணி பற்றிய பெரிய அறிமுகம் இல்லாத பெற்றோரை பல கண்ணணி திருத்துபவர்கள் ஏய்ப்பது நடக்கிறது..இப்படிப்பட்ட ஊர் காட்வெயர் எஞ்சினியர்களை வைத்து ஒரு பதிவு..இப்படி உங்களுக்கும் ஏதாவது நினைவுகள் அனுபவங்கள் இருந்தால் பதியவும்..

 

இதெல்லாம் நடக்குமெண்டு நினைக்கிறீரே சுபேஸ் ?? காதும் காதும்வைச்ச மாதிரி நடக்கிற விசையங்களை வந்து பதியுங்கோ எண்டு கேட்டால் என்னமாதிரி ??  எனக்கு தெரிஞ்சு ஒரு மம்மி சொன்னா ,  தன்ரை மோளுக்கு தான் கொம்பியூட்டர் ஏன் வாங்கி குடுத்தது  எண்டால் பேஸ்புக்கிலை படிக்கலாம் எண்டு  :lol:  :lol: .  இத்தனைக்கும் அந்த மம்மி ஒரு பட்டதாரி .  இப்பிடியான படிச்ச கோமாளியள் இருக்கும்வரையும் கொம்பியூட்டர் இன்ஜினியர்மாரும் இருக்கத்தான் செய்வினம் . கலகலப்பான ஆக்கத்திற்கு எனது மனங்கனிந்த பாராட்டுக்கள் :) :) .

 

நன்றி கோமகன் அண்ணா வாசிப்பிற்கும் கருத்துபகிர்விற்கும்..யாருமே தங்கள் அனுபவ்ங்களை எழுதாதை பார்க்கும்போது எல்லாருக்கும் பயம்போலதான் கிடக்கு..நீங்கள் சொல்வது உண்மைதான்போல இருக்கு கோ அண்ணா...

ஆகா உப்பிடியெல்லாம் நடந்ததா??? ஏமாறுபவன் இருக்கும் வரையும் ஏமாத்துபவன் இருக்கவே செய்வான்.

 

நன்றி அலை அக்கா வாசிப்பிற்கும் கருத்துபகிர்விற்கும்..

கதை பகிடியா எழுதியது நல்லாருக்கு. :lol:

 

நன்றி தப்பிலி அண்ணா வாசிப்பிற்கும் கருத்துபகிர்விற்கும்.. :D

நகைச்சுவை உணர்வுடன் நன்றாக எழுதியுள்ளீர்கள் சுபேஸ். வாழ்த்துக்கள்.....!

 

நன்றி அக்கா வாசிப்பிற்கும் கருத்துபகிர்விற்கும்..

உங்கள் கணினி திருத்தி வந்ததோ அல்லது வேறை புதுசா வாங்கினீர்களா எண்டு சொல்லவே இல்லையே சுபேஸ் :D

 

நன்றி அக்கா வாசிப்பிற்கும் கருத்துபகிர்விற்கும்..என்ர கணணி வாங்கினதுக்கு ஒருக்காலும் பழுதாகேல்ல சுமோ அக்கா.. :D

  • கருத்துக்கள உறவுகள்

ஊருக்கு முதல் முதல் ரி வி வந்த காலங்களிலையும் இப்பிடித்தான் ஆளாளிற்கு  பழைய ரிவியளை  வைத்து கொண்டு  ஆக்கள்  கடை திறந்தவை  அந்த நேரம் நாங்களும் அன்ரனா பூட்டுறம் எண்டு  பந்தா வேறை காட்டினாங்கள்.  உங்களிற்கு கணணி எங்களிற்கு ரிவி அந்த காலங்கள் நினைவில் வந்து போனது

  • கருத்துக்கள உறவுகள்
ஊருக்கு முதல் முதல் ரி வி வந்த காலங்களிலையும் இப்பிடித்தான் ஆளாளிற்கு  பழைய ரிவியளை  வைத்து கொண்டு  ஆக்கள்  கடை திறந்தவை  அந்த நேரம் நாங்களும் அன்ரனா பூட்டுறம் எண்டு  பந்தா வேறை காட்டினாங்கள்.  உங்களிற்கு கணணி எங்களிற்கு ரிவி அந்த காலங்கள் நினைவில் வந்து போனது

 

அப்ப ரிவி வந்த புதுசுல அந்த உஸ்உஸ் என்ட சத்தமும்  புள்ளி புள்ளியும் இல்லாட்டால் அது ரிவி யே இல்லை.மற்றது அன்ரனா பூட்டுறது என்டது கிட்டத்தட்ட ஒரு சின்ன தேர் திருவிழா மாதிரி.எத்தினை கொனைஷ்சன் ஆகியிருக்கும் :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.