Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வெனிசூலா ஜனாதிபதி மரணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 Venezuelan President Hugo Chavez has died, Vice President Nicolas Maduro said Tuesday.

In a national broadcast, Maduro said Chavez died Tuesday at 4:25 p.m.

Maduro teared up as he announced the news.

 

http://www.cnn.com/2013/03/05/world/americas/venezuela-chavez-main/index.html?hpt=hp_t1

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு பிடித்த உலகத் தலைவர்களில் ஒருவர். கவலையாக இருக்கிறது :(

  • கருத்துக்கள உறவுகள்

காஸ்ரோவுக்கு அடுத்ததா  அமெரிக்கனை வெளிப்படையாக எதிர்த்த ஒரு வீரன் 

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள் எனக்கு மிகவும் பிடித்த ஒரு உலகத்தலைவர்..... மக்களின் அபிமானத்தை பெற்றவர்

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீ லங்காவின் ஜனாதிபதி மகிந்தவின் உற்ற நண்பன்

இவரின் இழப்பு மகிந்தவிற்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கலாம்.


ஆழ்ந்த இரங்கல்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீ லங்காவின் ஜனாதிபதி மகிந்தவின் உற்ற நண்பன்

இவரின் இழப்பு மகிந்தவிற்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கலாம்.

ஆழ்ந்த இரங்கல்கள்

 

மகிந்தவுக்கு எதிரான பிரேரணையைக் கண்டு மனம் கலங்கியிருப்பாரோ? :D

ஒரு திறமையான தலைவர். தென் அமெரிக்க  நாட்டுத்தலைவர்களுக்கு ஒரு முன் உதாரணம். இவரது இழப்பு அந்த நாட்டின் வளர்சிக்கு விழுந்த அடி.

 

ஆழ்ந்த இரங்கல்கள்.

Edited by பகலவன்

ஆழ்ந்த இரங்கல்கள். ஒரு நல்ல தலைவன்.

நாட்டின் எதிர்காலம் அமெரிக்காவின் கைகளில் வீழலாம்.

 

அதேவேளை இந்த நாடு இதுவரை கியூபாவின் நட்புநாடாக இருந்தது. அது சிங்கள தேசத்திற்கு ஆதரவாக இருந்தது. தென் அமெரிக்காவில் சிங்களம் தனது அரசியல் செல்வாக்கை வளர்த்து வந்த வேளையில் இவரின் இழப்பு அவர்களுக்கும் பாரிய இழப்பே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவருக்கு ஏன் நாம் அஞ்சலி,அனுதாபங்கள் தெரிவிக்க வேண்டும்?

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு ஏன் நாம் அஞ்சலி,அனுதாபங்கள் தெரிவிக்க வேண்டும்?

 

அதுதான் எனக்கும் விளங்கேல்ல.. :unsure: ஆனால் பாசக்காரப் புள்ளைங்க.. :D

 

ஈரோஸ் சுயாதீனமாக இயங்கி இருந்தால் இவர்களின் நட்பும் நமக்குக் கிடைத்திருக்கும்.
 
பாலகுமார் பிலிப்பைன்ஸ் இடதுசாரிகளுடன் நட்பை வளர்க்க முயற்சித்தவர்.
 
***************************************
 
இன்னும் கொஞ்ச நாளில் சாவேஸ் கான்சருக்கு சி.ஐ.ஏ. தான் ஏதோ சூழ்ச்சி செய்தது என்ட மாதிரியான கதையும் வரும்.
  • கருத்துக்கள உறவுகள்

752642147ndex.jpeg

வெனிசுலா ஜனாதிபதி ஹுகோ சாவேஸ் காலமானார்

புற்றுநோயால் அவதியுற்ற வெனிசுலா ஜனாதிபதி ஹுகோ சாவேஸ் இன்று (06) அதிகாலையில் காலமானார். 

தென்அமெரிக்க நாடான வெனிசுலா நாட்டின் ஜனாதிபதியாக கடந்த ஆண்டு ஒக்டோபரில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் தேர்வு செய்யப்பட்டார் சவேஸ் (58). 

புற்றுநோய் தாக்கியதன் காரணமாக கடந்த 2011-ம் ஆண்டு ஜுன் மாதம் முதல் இதுவரை 4 முறை கியூபா சென்று சிகிச்சை பெற்றுவந்தார். 

கடந்த ஆண்டு டிசம்பரில் கடைசியாக சிகிச்சைக்காக கியூபா சென்று பின்னர் நாடு திரும்பியநிலையில் கடந்த இரு நாட்களாக சாவேசிற்கு மூச்சுதிணறல் ஏற்பட்டது. 

வெனிசுலாவில் உள்ள ஈர்னஸ்டோ கிராமத்தில் உள்ள தனது வீட்டில் தொடர் சிகிச்சை பெற்று வந்த போதிலும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை காலமானார். சவேஸ் காலமானதை துணை ஜனாதிபதி நிக்கோலஸ் மௌர்டோவும் அந்நாட்டு தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு தெரிவித்தார். 

கடந்த 14ஆண்டுகளாக வெனிசுலா நாட்டை ஆண்டு வந்த சாவேஸ் மறைவிற்கு தென்அமெரிக்க நாட்டு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

புரட்சியாளரான சவேஸ் கடந்த 1971-ம் ஆண்டு இராணுவ வீரராக வாழ்க்கையை துவக்கினார். ஐக்கிய சோஷியலிஸ்ட் கட்சியின் தலைவராக இருந்தார். 

பின்னர் தனது திறமையால் வெனிசுலா ஜனாதிபதியாக கடந்த 1999-ம் ஆண்டு பொறுப்பேற்றார். சாகும் வரை ஜனாதிபதியாகவே சாவேஸ் இருந்தார். சாவேஸின் மறைவு அந்நாட்டு மக்களுக்கு பேரிழப்பாக அமைந்துவிட்டது. 

இவருக்கு ஏன் நாம் அஞ்சலி,அனுதாபங்கள் தெரிவிக்க வேண்டும்?

 

ஒரு எண்ணெய் வளம் மிக்க நாட்டில், ஒரு வறிய குடும்பத்தில் இருந்து தலைவராக வந்து பெரும்பான்மை மக்களின் ஆதரவுடன் தலைவராக வந்து அந்த மக்களின் நலத்திற்காக பாடுபட்டவர்.

அமெரிக்கா உட்பட்ட மேற்குலக நாடுகளின் அழுத்தங்களையும் தாண்டி இதனை செய்தவர். மொத்தத்தில் தனக்கென ஒரு கொளகையுடன் அரசியல் செய்தவர்.

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு ஏன் நாம் அஞ்சலி,அனுதாபங்கள் தெரிவிக்க வேண்டும்?

 

இதை, இதைத் தான் எதிர்பார்த்தேன்... எனக்கும் ஒன்றுமே புரியவில்லை!

 

இங்கே ஒருத்தர் அறிவில்லாமல் (extremely sorry, Mr. Mani for my word) ஈழத்தமிழருக்காக தீக்குளித்துள்ளார்...அதற்கு அனுதாபிகளை இங்கே காணோம்! :wub:

 

எங்கோ ஈழத்திற்கு சமபந்தேமே இல்லாத ஒருவரின் இயற்கை மரணத்திற்கு முண்டுகொடுப்பு எதற்கு? ஒருவேளை அவர் நாட்டின் அதிபராக இருந்தவர் என்ற உயரிய அந்தஸ்தா? :huh:

 

மனிதமும், பணத்திற்கும், செல்வாக்கிற்கும் ஏற்ற தாளம் போடுவது உண்மையே!

 

Edited by ராஜவன்னியன்

சாவோஸ் திறமையான அதிகாரி. சில "சோ", தோல்வி மனபாண்மை, எந்த பக்கம் என்று சேர முடியாத கொள்கைகளால் குழம்பிவர். இவரின் இரண்டாவது தேர்தலை புஸ் குழப்ப முயன்றிருக்க வேண்டும் என்று நினக்கிறேன். இதனால் ஐ.நா. கூட்டத்திற்கு வந்து புஸ்சை devil என்று அழைத்தவர். இதனால் முழு அமெரிக்காவுடனும் சில விரிசல்களை சந்திக்க நேர்ந்தது. சர்வாதிகாரியானாலும் மகிந்தா போன்றவர் அல்ல. உண்மையான கம்யூனிஸ்ட் இல்லை. உண்மையான சோசலிசவாதி அல்ல. நாட்டை அழிக்கவில்லை. முன்னேற்றினார்.

 

இவர் ஒரு கொள்கை இல்லாதவர் என்றுதான் கணக்கு போடவேண்டும். உ+ம்: மகிந்தா நாட்டை கொள்ளை அடிப்பவர், சிறுபான்மைகளை துன்புறுத்துபவர், மகிந்த சிந்தனை மாதிரி ஏமாற்றுக்கொள்களை வைத்து மக்களை ஏய்ப்பவர். சவோஸ் இந்த சேட்டைகள் இல்லாதவர். ஆனால் வெறுமனே தான் சோசலிச வாதி என்று காட்டிக்கொள்ள மேற்கு நாடுகளை எதிர்த்தார்.  

 

தொடர்பு இல்லாமல் சர்வதேச ரவுடிகளுடன் சிநேகிதம் வைத்திருந்திருந்தவர். மகிந்தா, கடாபி, அகமடிதின்யாகு, காஸ்ரோ போன்றவர்களின் உறவுக்கும், இவர் வெனிசியூலாவில்  தாழ்த்தபட்ட மக்களுக்குமிடையில் காட்டிய உறவை கொள்கைகள் ஒன்றால் சமநிலைப்படுத்த முடியாது. 

 

வெலிசியூலாவின் பிரதான எண்ணை ஏற்றுமதி நாடு அமெரிக்கா. இங்கே சிற்கோ என்று ஒரு காஸ்டேசன் தொடர் இருக்கிறது. அது சாவாசின் அரசாங்கத்தினுடையது. அதிலிருந்து அமெரிக்க ஏழைகளுக்கு Home Heating Oil இனாமாக கொடுப்பார். இந்த இனாம் கொடுப்பை விளம்பரப் படுத்த கென்னடி குடும்பத்தவர் ஒருவர் தான் TV யில் வருவார்.   அந்த கென்னடி நபர் சொல்வது "யார் செய்தாலும் அது  ஒரு மிக கருணையான செயல். அந்த எண்ணை கிடைக்காவிட்டால் பல வயது முதிந்தோர்கள் குளிர்வீட்டில் படுத்துறங்குவதை விட அவர்களுக்கு வேறு வழி இல்லை" என்கிறார். எல்லாம் சரியாக இருந்தாலும் இன்னமும் பெருந்தொகையான வெனிசியூலா மக்களுக்கு  பல தேவைகள் உண்டு. உண்மையில் அவர்களுக்கு உதவ விரும்புபவர் அமெரிக்காவிடம் எண்ணைக்கு நல்ல விலையை பெற்று அவர்களுக்கு உதவலாம். 

 

அமெரிக்க மக்களின் மனங்களை கவர்ந்து தனது எண்ணை வியாபாரத்தை தக்க வைத்துகொள்ள வேண்டும் என்பது வாஸ்த்தவம்தான். ஆனால் அதற்காக அகமதியினாத்துக்கு உதவுவது போல நடந்து புஸ்சை Devil என்று ஐ.நா கூட்டத்தில் பேசவேண்டிய தேவை இல்லை. (புஸ் யார் என்று எல்லோருக்கும் தெரியும் தானே :D . பிறகேன் சொல்லிக்காட்டுவான்)

Edited by மல்லையூரான்

லத்தின் அமெரிக்கா நாடுகளில் எண்ணெய் வளம் கொண்ட நாடு வெனின்சுலா
.அமெரிக்காவிற்கு பக்கத்தில் உள்ள அமெரிக்க எதிரி நாடு  வெனின்சுலா .

இதன்
அதிபராக கடந்த பதினான்கு ஆண்டுகளாக , Hugo Chavez  இருந்து வந்தார் , அவர்
கடந்த ஆண்டு மீண்டும் அதிபராக  தேர்ந்து எடுக்கப்பட்ட நாளிலேயே , நான்
எனது நாட்களை எண்ணிக்கொண்டு இருக்கிறேன் . அமெரிக்காவை விட புற்று நோய்
என்னை நாளும் வேகமாக கொன்று விட நினைக்கிறது. நான் புற்று  நோயுடனும்
போராடுகிறேன் என்றார்.

அவருக்கு வயது ஐம்பத்தி எட்டு.

இப்போதைக்கு இரண்டு மணி நேரம் முன்னர் துணை சானதிபதி Nicolas Maduro  , ஹுகோ சவாஸ் இன் மரணத்தை உறுதி செய்து அறிவித்தார் .

சவாஸ் இறந்தாலும் அவரது கட்சியும் ஆட்சியும் மிக கட்டுகோப்பாகவே உள்ளது.

அந்த
நாட்டு சட்டப்படி , நாடாளுமன்ற தலைவர் (head of Congress, Diosdado
Cabello) டிஷ்டடோ கபெல்லா இப்போதைக்கான ஜனாதிபதியாக பொறுப்பு வகிப்பார்.

பின்னர் துணை ஜனாதிபதி பதவி ஏற்பார்.


 


Venezuela's vice president announced that President Hugo Chavez died
on Tuesday, ending 14 years of rule by the firebrand socialist but
leaving his party firmly in control of the nation.


 



Vice President Nicolas Maduro said that Chavez died “after battling a tough illness for nearly two years.”

http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13139:venezuela-president-died&catid=12:politics&Itemid=105

 

வெனிசுலா அதிபர் ஹியூகோ சாவேஸ் மறைவு!

கடந்த ஓராண்டுக்கும் மேலாக புற்றுநோயுடன் போராடிய வெனிசுலா அதிபர் ஹியூகோ சாவேஸ் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 58.

** மக்களின் நண்பன்... அமெரிக்காவின் எதிரி! **


வெனிசுலா அதிபராக நான்காவது முறையும் வென்று காட்டிய சாவேஸ், ''இந்தத்
தருணமே... இப்போதே! நாளை அல்ல... நாளை என்பது மிகத்தாமதம்!'' என்ற
சொற்களின் மூலமாக தன் மக்களைக் கட்டிப்போட்டவர்.

கியூபாவின் ஃபிடெல் காஸ்ட்ரோ அமெரிக்காவுக்கு எப்படி சிம்மசொப்பனமோ... அப்படித்தான் வெனி சுலாவின் ஹியூகோ சாவேஸும்.


''உலகில் எரிவாயு மற்றும் பெட்ரோலிய உற்பத்தியில் வெனிசுலா, பலம்
பொருந்திய நாடு களில் ஒன்று. உலகில் எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு
பெட்ரோலிய வளம் வெனிசுலாவில் இருக்கிறது. அவர்களுக்கு நம்முடைய எரிவாயுவும்
எண்ணெய் வளமும் வேண்டும். ஏற்கெனவே, 100 ஆண்டுகளாக அதை அனுபவித்து
விட்டனர். அவர்களிடம் இருந்து இப்போது நாம் மீட்டெடுத்து இருக்கிறோம். இனி,
இது இந்த நாட்டில் உள்ள மக்களுக்கும் இந்தக் கண்டத்தில் உள்ள ஏழை
நாடுகளுக்கும் உதவுமே தவிர, அவர்களுக்குக் கிடைக்காது. வெனிசுலா,
வடஅமெரிக்காவின் காலனி ஆதிக்கத்துக்கு மீண்டும் ஒருமுறை ஆட்படாது. நிச்சயம்
ஆட்படாது'' என்று, பகிரங்கமாக சாவேஸ் அறிவித்ததுதான் கோபம்.


சாவேஸ் பதவிக்கு வந்தபோது அமெரிக்கா அவரை அன்போடு வரவேற்றது. வெள்ளை
மாளிகையில் விருந்து வைத்தது. உலக வங்கி, உலக வர்த்தக அமைப்புகளுடன்
பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்து கொடுத்தது. ஆனால், அனைத்து நிலைகளிலும்
தன் நாடு, தன் மக்கள் என்றே சாவேஸ் பேசியது அவர்களுக்குப் பிடிக்கவில்லை.
2002, ஏப்ரல் 11-ம் நாள் வெனிசுலாவின் 'பாதுகாப்புப் போர்’ திட்டமிட்டு
உருவாக்கப்பட்டது. எண்ணெய் வளத்தைக் கையகப்படுத்த முயன்றவர்களை, தனது
ராணுவத்தைக் கொண்டு சாவேஸ் முறியடித்தார். அப்போதுதான், வெனிசுலா உலகின்
கண்ணில் தெரிய ஆரம்பித்தது. ஹியூகோ சாவேஸ் என்ற பெயரும் உச்சரிக்கப்பட்டது.


சாவேஸுக்கு 58 வயது. 14 ஆண்டுகளாக வெனிசுலா அதிபராக இருந்தார். இதற்கு
முன், அந்த நாட்டு ராணுவத்தில் லெப்டினென்ட் கர்னலாக இருந்தார். பிறகு,
ஐந்தாவது குடியரசு இயக்கத்தில் அங்கம் வகித்தார். அதுவே பின்னர் ஐக்கிய
சோஷலிஸ்ட் கட்சியாக பெயர் மாறியது.

1992-ம் ஆண்டு ஆட்சிக்
கவிழ்ப்பு நடவடிக்கையில் இறங்கியதற்காகக் கைது செய்யப்பட்டு இரண்டு
ஆண்டுகள் சிறையில் இருந்தார். அப்போது சாவேஸுக்கு பெரிய உத்வேகம் அளித்தவர்
சல்வேடார் நாட்டு கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த
ஸ்காஃபிக் ஹாண்டல்.

''சாவேஸ்! உன்னிடத்தில் ஒரு போராளி குறைகிறான்
என்றால், நான் இங்கு இருக்கிறேன். எனக்கு ஒரு துப்பாக்கியைக் கொடு'' என்று
உத்வேகம் கொடுத் தவர். அடுத்து, கியூபாவின் ஃபிடெல் காஸ்ட்ரோ... முழு
தன்னம்பிக்கையை விதைத்தார். இரண்டும் சேர்ந்து 1998-ல் வெனிசுலாவின்
ஆட்சியைப் பிடிக்க சாவேஸுக்கு அடித்தளம் அமைத்தது.

அதிகாரத்துக்கு
வந்த பிறகு, வெறும் வாய் வீரராக இல்லாமல், வெனிசுலாவின் மண்ணையும் மக்களை
யும் கவனிக்க ஆரம்பித்தார் சாவேஸ். தென் அமெரிக்கக் கண்டத்தில் எண்ணெய்வளம்
மிக்க நாடாக வெனிசுலா இருந்தாலும், அதனுடைய வளம் சுரண்டலுக்கு உள்ளாகி
இருந்தது. முதலில் அதை முழுமையாக அரசுக்கான சொத்தாக மாற்றினார் சாவேஸ்.
எண்ணெய் வளத்தை விற்று முழுமையாக மக்களுக்குப் பயன்படுத்தினார்.
பெருநிறுவனங்கள் பலவற்றை நாட்டுடமை ஆக்கினார். வறுமை ஒழிப்பு ஒன்றையே தனது
இலக்காகக் கொண்டார். கல்லாமை இல்லாத நாடு என்று பெருமையாக அறிவிக்கும்
தைரியம் அவருக்கு இருந்தது.

வெறும் எண்ணெய் வளத்தை மட்டும் நம்பி
இருக்காமல், பல்வேறு துறைகளையும் வளர்க்கத் திட்டமிட்டார். அவர் ஆட்சி
நடந்த முதல் பத்தாண்டு காலத்தில் (1998-2008) விவசாயப் பொருட்களின்
உற்பத்தி சுமார் 50 சதவிகிதம் உயர்ந்தது. விவசாயம் செய்யாமல் எந்த
விளைநிலமும் இருக்கக் கூடாது என்ற நிலைமையை உருவாக்கினார். அடுத்த
(2013-2019) ஆறு ஆண்டு காலத்துக்கு சாவேஸ் தனது இலக்காக வைத்திருந்தது
விவசாயம்தான். அவரது லட்சியம் நிறைவேறினால், 300 சதவிகித வளர்ச்சி
இருக்கும் என்கிறார்கள்.

ஓர் ஆண்டு காலமாக அவர் கேன்சர் நோயால்
பாதிக்கப்பட்டார். கியூபாவில்தான் அவருக்கு சிகிச்சை தரப்பட்டது.
மருத்துவமனையில் இருந்தபடி வெனிசுலாவில் உள்ள தனது அமைச்சரவை சகாக்களுக்கு
வீடியோ கான்ஃபெரன்ஸில் பேசிய நேரத்திலும் சோஷலிசம், பொருளாதாரம் ஆகிய
இரண்டு வார்த்தைகளைத்தான் அதிகம் பயன்படுத்தினார்.

''சோஷலிசப்
பாதையில் இருந்து மாற மாட்டோம். அதேசமயம், பொருளாதாரப் புரட்சியை
வெனிசுலாவில் உருவாக்குவோம். தொழில் வளர்ச் சிக்கு கூடுதல்நிதி ஒதுக்க
வேண்டும். நாட்டின் தேவையைப் பூர்த்தி செய்யத் தேவையான புதிய தொழில்களை
தொடங்க வேண்டும். அரசியல் புரட்சியை நடத்தி விட்டோம். பொருளாதாரப் புரட்சி
செய்யாமல் அரசியல் புரட்சி மட்டும் செய்வதால் என்ன பலன்?'' என்று கேட்ட
சாவேஸ், ''அந்தப் பொருளாதாரப் புரட்சியை கிராமப்புறத்தில் இருந்து தொடங்க
வேண்டும்'' என்று தனது அமைச்சரவைக்கு உத்தரவு பிறப்பித்தார்.


பொதுவாக சோஷலிசம், கம்யூனிஸம், மார்க்சியம் என்ற வார்த்தைகளுக்குள் சிக்கி
வறட்டுத்தனமாக வெளிப்படுவதை விட, யதார்த்தமான சிந்தனைகளை விதைப்பதாக
சாவேஸின் பாணி இருப்பதால், வெனிசுலா மக்களைத் தொடர்ந்து கவர்ந்து வருகிறது.
''சோஷலிசம் என்பது நம் முன்னோர்களின் திட்டத்தை அப்படியே நகல் எடுப்பது
அல்ல. கொள்கைகளை அப்படியே நகல் எடுத்ததுதான் 20-ம் நூற்றாண்டில் நாம் செய்த
மிகப்பெரிய தவறு. தனித்தன்மையோடு, இப்போதுள்ள வேறுபாடு களோடு ஒவ்வோர்
இனத்தில் இருந்தும் உருவாகும் மக்கள் சக்தியில் இருந்தும் நாம் அந்தந்தப்
பகுதி சார்ந்த, மண் சார்ந்த சோஷலிச சமுதாயத்தை உருவாக்க வேண்டும்'' என்றார்
சாவேஸ்.

இது, வெனிசுலாவுக்கு மட்டும் அல்ல... இந்தியாவுக்கும் சேர்த்து எல்லா நாடுகளுக்கும் பொருந்தும் சமூக சூத்திரம்!



(அக்டோபர் 17, 2012 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் ப.திருமாவேலன் எழுதிய கட்டுரையில் இருந்து.)

அமைச்சர் விமல் வெனிசூலா விஜயம்
புதன்கிழமை, 06 மார்ச் 2013 15:12  0 COMMENTS

 

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் வீடமைப்பு மற்றும் நிர்மாணத் துறை அமைச்சருமான விமல் வீரவன்ச வெனிசூலாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

 

மறைந்த ஜனாபதிபதி ஹுகோ சாவேஷின் இறுதி கிரியையில் பங்குகொள்வதற்காகவே; அமைச்சர் விமல் இன்று புதன்கிழமை மாலை  வெனிசூலாவிற்கு விஜயம் செய்யவுள்ளார்.


வெனிசூலா ஜனாபதிபதி ஹுகோ சாவேஷ் தனது 58ஆவது வயதில் நேற்று செவ்வாய்க்கிழமை காலமானார்.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/60123-2013-03-06-09-43-54.html

 

 

482680_570199356331652_863498553_n.jpg

சாவேசின் 14 வருட கால சாதனைகள்
***************************************************************************

1. சாவேசின் ஆட்சிக் காலத்தில், மனிதவள அபிவிருத்தி விரைவாக உயர்ந்தது.
வேலையில்லாப் பிரச்சினை, வறுமை, குழந்தைகள் இறப்பு விகிதம் அரைவாசியாக
குறைந்தது. (Human Development Reports, http://hdr.undp.org/en/reports/global/hdr2011/download/)
2. வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் மக்களுக்கு உதவுவதற்காக உணவுப்
பங்கீட்டுத் திட்டம் கொண்டு வரப்பட்டது. சாவேஸ் பதவிக்கு வந்த காலத்தில்,
15% மக்கள் போஷாக்கின்மையால் கஷ்டப் பட்டனர். ஐ.நா. வின் FAO அறிக்கையின்
படி, இன்று வெனிசுவேலாவில் பசியால் வாடுவோர் யாரும் இல்லை. இலட்சக்
கணக்கான வெனிசுவேலா ஏழைகள் வாழ்வில் முதல் தடவையாக மருத்துவ வசதி
கிடைத்தது. தொலைதூர கிராமங்களில் கூட, மருத்துவர்கள் நியமிக்கப் பட்டனர்.
(FAO Report, http://www.fao.org/alc/file/media/pubs/2012/panorama.pdf)

3. எழுத்தறிவின்மை முற்றாக ஒழிக்கப் பட்டது. லத்தீன் அமெரிக்க நாடுகளில்,
கியூபாவுக்கு அடுத்தபடியாக வெனிசுவேலாவில் தான் எழுதப், படிக்க தெரிந்த
பிரஜைகளின் எண்ணிக்கை அதிகம். உயர்கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை
இரண்டு மடங்காகியுள்ளது. இந்த தகவல்களை கொடுத்தது UNESCO.
4. சாவேஸ்
பதவிக்கு வருவதற்கு முன்னர், பெரும்பான்மையான மக்கள் தேர்தலில் ஓட்டுப்
போடுவதில்லை. வாக்குரிமையுள்ள மொத்த சனத்தொகையில், ஐந்தில் ஒருவர்
வாக்காளராக பதிவு செய்யப் படவில்லை. (http://lapupilainsomne.wordpress.com/2012/10/09/chavez-los-mentirosos-y-el-infierno-del-dante/)
சனத்தொகையில் ஒரு சிறிய பிரிவினர் தான் அரசியல் கொள்கைகளை
தீர்மானித்தார்கள். சாவேஸ் ஜனாதிபதியானதும் செய்த முதல் வேலை, ஒவ்வொரு
ஊரிலும் "பொலிவாரியன் குழுக்களை" அமைத்தார். அந்தக் குழுக்களின் முக்கியமான
வேலை, தேர்தலில் ஓட்டுப் போடுவதன் முக்கியத்துவத்தை மக்களுக்கு எடுத்துச்
சொல்வது. அது தான் சாவேசின் "பொலிவாரிய புரட்சி". (http://www.emol.com/documentos/archivos/2011/10/28/20111028141231.pdf)
சாவேஸ் ஒரு சர்வாதிகாரி என்று அவதூறு செய்பவர்களின் நாட்களில், குறைந்தது
90% வாக்காளர்கள் தேர்தலில் ஓட்டுப் போடுகின்றார்களா? இந்தியாவில் எத்தனை
இலட்சம் பேர், பணத்துக்காகவும், இலவசங்களுக்காவும் தங்களது ஓட்டுக்களை
விற்றுக் கொண்டிருக்கிறார்கள்? அவை எல்லாம் ஜனநாயக தேர்தல்களா? 1998 ல்,
சாவேஸ் பதவிக்கு வருவதற்கு முன்னர், 60% மக்கள் ஜனநாயக தேர்தல்களில்
நம்பிக்கை வைத்திருந்தனர். 2011 ல் அது 77% மாக உயர்ந்தது.

5.
சாவேசின் காலத்தில், ஒரு மூன்றாமுலக வறிய நாடான வெனிசுவேலா, பொருளாதார
சுதந்திரம் அடைந்தது. IMF உடனான தொடர்புகள் துண்டிக்கப் பட்டன. நாட்டின்
பிரதானமான நிறுவனங்கள் தேசியமயமாக்கப் பட்டன. கூட்டுறவுக் கழகங்கள்
உருவாக்கப்பட்டன. முதலாளிகளுக்கு சுதந்திரம் இருந்தது. ஆனால், சில விதிகள்
மட்டும் மாற்றப் பட்டன. மிகப்பெரிய இலாபம் சம்பாதிக்கும் முதலாளிகள், அரசு
விதிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும். அரச தலையீடு
அதிகரித்தால், நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்து விடும் என்று உளறிக்
கொண்டிருக்கும் பொருளாதார நிபுணர்கள் கவனிக்கவும். 1980 ம் ஆண்டில்
இருந்து, வெனிசுவேலா பொருளாதாரம் இறங்குமுகமாக வீழ்ந்து கொண்டிருந்தது.
சாவேஸ் பதவியேற்ற பின்னர், அந்த வீழ்ச்சி தடுத்து நிறுத்தப் பட்டது. 2004
ம் ஆண்டில் இருந்து, வெனிசுவேலா பொருளாதாரம் 6,2 வீதத்தால் வளர்ந்தது. (http://www.eclac.cl/publicaciones/xml/4/48594/BalancePreliminarDocI2012.pdf)
வெளிநாட்டுக் கடன்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஆனால்,
இன்றைக்கும் வெனிசுவேலா பொருளாதாரம் பெருமளவு எண்ணை ஏற்றுமதியில்
தங்கியிருப்பது மட்டுமே ஒரு குறைபாடாகும்.
6. அமெரிக்க நாடுகளின்
கூட்டமைப்பு (OAS), அமெரிக்காவின் மேலாதிக்கத்தின் கீழ் லத்தீன் அமெரிக்க
நாடுகளை கொண்டு வருவதற்காக உருவாக்கப் பட்டது. சாவேஸ் வந்த பின்னர்,
அமெரிக்காவுடனான உறவில் மாற்றம் ஏற்பட்டது. அமெரிக்கா மென்மேலும் பலவீனப்
பட்டது. 2011 ம் ஆண்டு, அந்த அமைப்புக்கு போட்டியாக, "லத்தீன்- அமெரிக்க,
கரீபியன் நாடுகளின் கூட்டமைப்பு" (CELAC) உருவானது.

7. தங்களை
இடதுசாரிகளாக காட்டிக் கொள்ள பயந்த வேட்பாளர்கள் வாழ்ந்த காலத்தில், 1998
ம் ஆண்டு தேர்தல் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. சாவேஸ் சோஷலிசம் பேசி
பெரும்பான்மை வாக்காளர்களை கவர்ந்த பின்னர், லத்தீன் அமெரிக்க கண்டத்தில்
இடதுசாரி அலை வீசியது. பிரேசில் நாட்டில் லூலா ட சில்வா, பொலிவியா நாட்டில்
ஏவோ மொராலேஸ், உருகுவாயில் தபாரே வாஸ்கெஸ், ஈகுவடோரில் ராபேல் கொரெயா,
பராகுவேயில் பெர்னாண்டோ லூகோ.... இவ்வாறு பல நாடுகளில் இடதுசாரி
ஜனாதிபதிகள் மக்களால் தெரிவு செய்யப் பட்டனர்.

8. 1989 ம்
ஆண்டுக்குப் பின்னர், சோஷலிசம் என்று சொல்வதே கெட்ட வார்த்தையாக இருந்த
காலம் ஒன்றிருந்தது. காலமிருந்தது. சோஷலிசம் இன்றைய உலகிற்கு ஒத்துவராத
பழைய பஞ்சாங்கம் என்று குப்பைத் தொட்டிக்குள் தூக்கிப் போட்டார்கள்.
சாவேசின் "பொலிவாரிய புரட்சிக்குப்" பின்னர் தான், சோஷலிசம் மீண்டும்
லத்தீன் அமெரிக்க நாடுகளில் பிரபலமானது. இது ஒரு இமாலய சாதனை.

 

பாரதி எல்லாம் எம் இனத்தில் பிறந்து பெரும் பாவம் ,அதை வாசிக்காமல் விளங்காமல் அழிந்து போகுது இந்த ****************

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு ஏன் நாம் அஞ்சலி,அனுதாபங்கள் தெரிவிக்க வேண்டும்?

உண்மைதான். இவர் அமெரிக்காவுக்கு எதிரானவர் மட்டுமல்ல, சிறிலங்கா உற்பட பல ஜனநாயக விரோத நாடுகளின் நண்பரும் கூட. இவரது சாவைப்பற்றி நாம் எதற்காக கவலைப்பட வேண்டும் ? கடாபி. சதாம் போன்றே இவரும் பார்க்கப்பட வேண்டும்.

அஞ்சலி அனுதாபங்கள் தெரிவிக்கச்சொல்லி யார் அழுதார்?

 

புலிகள் தலைவருக்கே அஞ்சலி செலுத்த வக்கில்லை. முப்பது வருடமாக போராடி மடிந்த மாவீரர்களுக்கு ஒற்றுமையாக அஞ்சலி செலுத்த முடியவில்லை. இந்த நிலையில் என்னுமொருநாட்டு அரச தலைவருக்கு அஞ்சலி செலுத்தவே முதலில் தகுதி இருக்கின்றதா?

 

எந்த ஒரு அரச தலைவர் இறந்தாலும் உடனே அவரையும் இலங்கை அரசையும் தொடர்புபடுத்தவேண்டியது. இதுவரை உலகின் எந்த ஒரு நாடும் தமிழர் போராட்டத்தை அங்கீகரித்ததில்லை. தமிழர் பிரச்சனையை அடிப்படையாகக்கொண்டு இலங்கை அரசின் நட்புறவை முறித்தில்லை. இன் நிலையில் உலகின் அனைத்து நாட்டு அரச தலைவர்களும் உங்களுக்கு எதிரானவர்களே !

 

ஒப்பீட்டளவில் இலங்கையில் தமிழர்களின் அழிவில் சீனாவை விட இந்தியாவின் பங்களிப்பு அதிகம். அதற்கு அடுத்தபடியாக புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் மேற்குநாடுகளின் பொருளாதார ஆயுத உதவிகள் அதிகம். போரை ஆதரித்தல் பங்களித்தல் என்றதில் வெனிசூலா கியுபா போன்ற நாடுகள் கடசி இடத்திலேயே இருக்கின்றது. எந்த நாடுகள் இலங்கை அரசுடன் கூட நின்று தமிழர்களை அழித்ததோ அந்த நாடுகளில் இருந்துகொண்டு புளிச்சல் ஏவறை கருத்துக்கள்.

 

உலகின் எந்த நாடும் அங்கீகரிக்க முடியாதளவு சமூகச் சிதைவை கொண்டுள்ளனர் தமிழர்கள். தற்கொலைத் தாக்குதல் உட்பட்ட பயங்கரவாதத்தின் முன்னோடிகள் என்று உலகத்தின் அவிழ்க்க முடியாத சிக்கலில் போராட்டத்தை உட்படுத்திய தமிழர்கள். கடந்த காலங்களிலும் எந்த ஒரு நாடும் அங்கீகரித்ததில்லை இனியும் மகிந்த கோத்தா போன்ற சிங்கள அரச தலமைகளை அப்புறப்படுத்தி அல்லது நிர்ப்பந்தங்களுக்க உட்படுத்தி  ஓரளவு ஜனநாயகத் தன்மையுள்ள தலமைகளை ஏற்படுத்தி இலங்கையுடன் தொடர்ந்து நட்புறவை பேணுவது ஒன்றே உலகின் ஏனைய நாடுகளுக்கு உள்ள ஒரே தெரிவு. அந்த வகையில் நீங்கள் அஞ்சலி செலுத்தக்கூட உலகில் எந்தத் தலைவரும் இல்லை.

ஹுகோ சாவேஸின் தமிழீழ தொடர்பான நிலைப்பாட்டினை வன்மையாக கண்டிக்க கூடிய அதே தருணத்தில், லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து இங்கு வந்திருந்த தோழர். ரான் ரட்னர் அவர்களை (தமிழீழ ஆதரவாளர்) ஒன்றரை வருடங்களுக்கு முன் சந்தித்த பொழுது, அவர் சொல்லிய விடயம் உங்களிடம் பகிர்கிறேன்.

 

“ லத்தீன் அமெரிக்க நாடுகளில் இலங்கையானது அமெரிக்க எதிர்ப்பு நாடாக  பதிவு செய்யப்பட்டு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது, மற்றும் இந்திய அரசின் இலங்கை ஆதரவு நிலையை இந்தியாவானது அணி சேரா நாடுகள் என்கிற போர்வையில் அங்கே மேற்கொண்டது. மேலும் தமிழீழப் பிரச்சனை தொடர்பாக முற்போக்கு கட்சிகளான வெகுசன பிற்போக்கு இந்திய மார்க்சிய கட்சியின் வெனிசூலாவின் தொடர்புகள், ’இந்து’ ராம் போன்றோரின் பிரச்சாரங்கள் தமிழீழப் பிரச்சனை தொடர்பான நேரடி கள ஆவணங்கள் அங்கே மக்களுக்கும், பிற செயல்பாட்டாளர்களுக்கும் தெரியப்படுத்தப்படாமல் இருட்டடிக்கப்பட்டதாகவே இருந்தது. இதைப் பற்றிய கட்டுரைகளை , செய்திகளை அவர்களது மொழியில் கொண்டு வர முயற்சிக்கிறேன்” என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் து. ராஜா அவர்களும் இது தொடர்பான கண்டிப்பான விமர்சனத்தினையும் லத்தீன் அமெரிக்க மற்றும் ரசிய கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் சில மாதங்களுக்கு முன்பு வைத்ததை தொடர்ந்து அவர்கள் இதைப்பற்றி மேலதிக விவரங்களை அறிய ஆரம்பித்தார்கள். இந்தியாவில் கூட  ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் தோழர்கள். கலை, கார்த்திக், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் பிரபு, பாரி, ரூபஸ் போன்றோரின் 2008முதலான பிரச்சாரப்பணிகள், மதிமுகவின் சாஞ்சிப் போராட்டம், பாலச்சந்திரனின் கொலை தொடர்பான ஊடகங்களின் கட்டுரைகள், ஹெட்லைன்ஸ் டுடேவின் செய்தி விவாதங்கள் என மெல்ல மெல்ல இந்தியாவின் மையப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. இது போலவே லத்தீன் அமெரிக்கா நாடுகளிலும் விவாதங்கள் மேற்கொள்ளப்பட ஆரம்பித்தன.


இந்திய-தமிழகத்தின் முற்போக்கு இயக்கங்கள் தமிழீழப் படுகொலையில், போரில் அமெரிக்காவின், மேற்குலகின் பங்கு தொடர்பான பிரச்சாரங்கள், அம்பலப்படுத்தும் போராட்டங்கள் நிகழாத காரணத்தினாலும், இடதுசாரி அறிவுசீவிகள் இன்றும் வரை அமெரிக்காவின் இலங்கை தொடர்பான பதிவுகளை இந்திய அளவில் முன்வைக்காத காரனத்தினாலும் நமக்கு ஏற்பட்ட பின்னடைவுகள் என்பது சர்வதேச இடதுசாரி சிந்தனையாளர்கள்

 

இந்தப்போராட்டத்தினைப் பற்றிய போதிய கவனம் செலுத்தாமல் போன ஆபத்து நமக்கு நிகழ்ந்தது. இதன் தொடர்ச்சியிலேயே இடதுசாரி ஆதரவு நாடுகளின் இலங்கை ஆதரவு நிலைப்பாட்டினை காணமுடிகிறது. இந்திய- இலங்கை  செகுசன தேர்தல் இடதுசாரிகள் ( இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தவிர்த்து) தமிழீழவிடுதலை தொடர்பான  நிலைப்பாடு இலங்கை அரசு சார்பானது. பார்ப்பனிய தாக்கம் அதிகம் நிறைந்த இந்திய சிவில் சமூகமும் இதே நிலைப்பாட்டினை இன்றும் தொடர்கிறது. இந்திய தீவிர இடதுசாரிகளில் தமிழீழம் தொடர்பான செயல்பாடற்ற தன்மை, அறிக்கை சார்ந்த ஆதரவு போன்றவை சர்வதேச அளவில் மாற்று அரசியல் முன்வைக்கும் வர்க்கத்திடம் விவாதங்களை ஏற்படுத்தாமல் சென்றது. இதனை முழுமையாக ஆராய்ந்தே நமது நிலை குறித்தான முடிவுகளை அறிய முடிகிறது.

இன்றும் கூட சர்வதேச விவாதம் நடக்கும் காலத்தில் தீவிர இட்துசாரிகள் அமெரிக்காவின் தமிழீழ எதிர்ப்பு அரசியலை அம்பலப்படுத்தாமல் அமைதி காப்பதையும் நாம் காண்கிறோம்.

 

போர்க்குணத்துடன் பல்வேறு சமூக அவலங்களை எதிர்க்கும் தோழர்கள் சர்வதேச ஏகாதிபாத்திய பாணியில் அமெரிக்க தமிழர்களின் உரிமைகளை வேட்டையாடும் சர்வதேச நகர்வுகளை இதுவரை அவர்கள் எதிர்க்காமல் (அடையாளமாக் வேணும்) குறைக் குற்றம் காணும்   நக்கீரத்தன்மையானதாகவே இருப்பது நமக்கு பெரும் பின்னடைவே. ஏகாதிபத்தியம் வாசல்வரையில் வந்து நின்ற போதிலும் ஆயுட்காலம் முழுவதும் ஏகாதிபத்திய எதிர்ப்பு பேசிய தோழர்கள் அமைதி காப்பது தமிழர்களுக்கும், பிராந்தியத்திற்கும், வரலாற்றிற்கும் நல்லதன்று.

சாவேஸின் அமெரிக்க எதிர்ப்பும், லத்தின் அமெரிக்க நாடுகளின் ஏகாதிபத்திய விடுதலையின் நிறமும் இனைந்தே நமக்கு கிடைக்கிறது. லத்தின் அமெரிக்க நாடுகளில் அதீத வறுமையில் உலன்ற லட்சக்கணக்கான மக்களுக்கு அவர்  நீதி பெற்றுத் தந்த ரட்சகரே. பெரும் வணிகங்களின் சுரண்டல்களை ஒழித்தவர். நாட்டின் சொத்துக்களை மக்களுக்கு வினியோகம் செய்தவர். கல்வி, மருத்துவத்தினை பரவலாக்கியவர். 2000 ஆண்டுகளின் ஆரம்பத்தில் அவரது அமெரிக்க எதிர்ப்பு பேச்சுக்களை, முழக்கங்களை, நகர்வுகளை, அரசு முடிவுகளை கண்டு வியந்திருக்கிறேன். பிடலுக்கு பின் அமெரிக்காவின் விரலை வெட்டியவர். அமெரிக்கா திணித்த புரட்டல் எதிர்புரட்சிகளை சன நாயக ரீதியில் சந்தித்து வெற்றி பெற்றவர். ஒருவகையில் தமிழ்ச் சமூகம் நுழைந்திருக்கும் ஏகாதிபத்திய கூண்டில் இருந்து விடுதலை பெருவதற்கான வழிகாட்டியாகவும் அவரது செயல்பாடுகள் நமக்கு என்றென்றும் இருக்கும்.

இவரைப் பற்றி விரிவான கட்டுரைகள் எழுதுமளவு பல்வேறு நகர்வுகளை லத்தீன் அமெரிக்காவில் செய்து காட்டியவர். பொலிவியன் மக்கட் தலைவர் அதிபர் ஈவா மொரேல்ஸ் மற்றும் எல் சால்வடார் போன்ற நாடுகளின் இட்து சாரி தலைவர்களை ஊக்குவித்த தோழர் அவர். க்யூபாவின் தேசிய சுமையை குறைக்க  மானிய விலையில் பெட்ரோலியத்தினை வழங்கியவர் என நிறைய நாம் பேச, விவாதிக்க வேண்டும். அமெரிக்காவின் பிடிக்குள் நகர்ந்து கொண்டிருக்க்க் கூடிய தமிழர் கடல் பகுதியை சார்ந்த நாம் இவர்களது பாடங்களின் ஊடாக அரசியல் வரலாற்று நகர்வுகளை அறிவது அவசியம். கற்றுக்கொள்வோம்.

சாவேஸ் நீ எம் எதிரியின் சார்பாக நின்ற போதிலும் உமது மக்களுக்குக்காகவும் லத்தின் மக்களின் விடுதலைக்காகவும் போராடி மடிந்த வீரன். ஒரு நாள் உனது வழிவந்தவர்கள் தமிழீழக் கொடியை உயர்த்திப் பிடிப்பார்கள் என்பது நிச்சயம். இலங்கைக் கொடி தாழும் என்பதும் நிச்சயம். உனது அசராத மக்கட்பணிக்கு தலை வணங்குகிறேன்.  நீ ஒரு சேரியிலிருந்து உமது மக்களை மீட்டு சொர்க்கத்தினை உருவாக்கினாய். உனக்கு எனது வீரவணக்கம்.

 

- முகநூல்

அமெரிக்காவுடன் மல்லுக்கட்டியதால் ஈரானிடம் எண்ணையை வாங்க முடியவில்லை. வேறுயாரிமாவது வாங்கலாம்  என்றால் அதற்கு சபுகஸ்கந்தைக்கு பில்லியன் டொலர் பணம் செலவளிக்க வேண்டும். அது ஆண்டுகளுக்கு முன்னர் ஈரான் தனது எண்ணையை மட்டும் சுத்திகரிக்க கட்டிக்கொடுத்தது மாதிரியே இன்னமும் இருக்கு. கதிர்காமரின் கூரை ஏறிக்கோழி பிடிக்காத ரராஜதந்திரத்தால் அரைவட்டிக் கடனுக்கு இலவச ஆயுதம் மட்டும்தான் வாங்க முடிந்தது. இதனால் வங்குரோத்து நாட்டுக்கு அதை புதுப்பித்து கட்டிக்கொடுக்க யாரும் முன் வரவில்லை.  எண்ணை வேண்டுவதாயின் கடனுக்கு சீனாவிடம் போய்க்கேள் என்று முகத்தில் அடித்து போல IMF சொல்லிவிட்டது.  சீனாவிடம் கடனுக்கு சுத்திகரித்த எண்ணை கேட்டுப்பார்த்தும் அதுவும் கிடைக்கவில்லை.  

 

உலகம் முழுக்க நண்பர்கள் உள்ள சிங்களம் வாய் முழுக்க பல்லாக காட்டி எல்லோர் காலில் விழுந்தும் ஒன்றும் நடக்கவில்லை.

 

சாவோஸ் மட்டும் ஒரு காய் அமெரிக்காவுடன் மிண்டினால் இலவச ஓயில் கொடுப்பவர்.  சாவோஸ் கியூபாவுக்கு இலவச எண்ணை கொடுத்து அங்கிருந்து அதற்கு கைமாறாக மருத்துவ உதவியாளர்களை தனது நாட்டுக்கு அழைக்கிறவர்.

 

இந்த நேரம் தான் சாவோஸ் கியூபாவை விட்டு  மெல்லிய சுகம் அடைந்து தனது நாடுக்கு போய் மிகுதியை மாற்ற என்று ஆசைப்பட்டு வீடு திரும்பினார்.

 

இங்கேதான் மகிந்தர் எப்படிக் சாவோசை கொலை செய்தவர் என்ற கதை ஆரம்பமாகிறது. ஓடி வெளித்தது அவரின் மனதில் ஒரு திட்டம். "அமெரிக்கா தலைமையில் 47 நாடுகள் இலங்கைக்கு எதிராக பிரேரணை கொண்டுவந்து நிறைவேற்றப்போகிறார்கள். அப்போ நாம் அமெரிக்காவை முன் நின்று எதிர்ப்பவர்கள் இல்லையா? நிச்சயமாக நானும் சாவிசிடம் இருந்த்து பிறீ எண்ணை வாங்கி விடுவேன்" என்று களித்தார். உடனே போட்டார் ஒரு கோல் வெனிசியூலாவுக்கு

 
சாவோசிடம் பேசினார். "இலங்கையின் மிகப்பெரிய வைத்தியர். எத்தனையோ பேரை ஒரு கணத்தில் சுகமாக்கியவர். கீயூபா டாக்டர்கள் கிட்டவும் வரமுடியாது. அவரின் பெயர். ....." என்று சொல்லிக்கோண்டிருக்கும் போது மனிசன் பதில் சொல்லமல் போனை தலைமாட்டில் வைத்துவிட்டுப் படுத்துவிட்டதாம். அன்றைக்கு பிறகு படுக்கையை விட்டு எழும்பாமல் கிடந்த கிடப்பிலேயே போய்ச்சேர்ந்துவிட்டது.
 
cartoon-2(30).jpg

Edited by மல்லையூரான்

Mourning Venezuelans march alongside Chavez's coffin

 

  • கருத்துக்கள உறவுகள்

1039149078hugo-chavez-dead.jpg

சாவேஸ் இறுதிக் கிரியையில் பங்கேற்க விமல், நியோமல் வெனிசுவெலா பயணம்

வெனிசுவெலாவின் புரட்சித் தலைவர் ஹூகோ சாவேஸின் இறுதிக் கிரியைகளில் பங்கேற்கவென இலங்கையில் இருந்து பிரதிநிதிகள் வெனிசுவெலா சென்றுள்ளனர்.

கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த சாவேஸ் பல தடவைகள் சத்திர சிகிச்சை செய்து கொண்டார். 

வெனிசுவெலாவில் தொடர்ந்து 14 ஆண்டுகள் ஆட்சியிலிருந்த சாவேஸ் மரணமான செய்தியை அடுத்து தலைநகர் கரகாசில் இருக்கும் மருத்துவமனைக்கு முன்னால் ஒன்றுகூடிய அவரது ஆதரவாளர்கள் கண்ணீர் மல்க “நாம் சாவேஸுடன் இருக்கிறோம்” என கோஷமெழுப்பினர். 

தம்மை புரட்சியாளராக அடையாளப் படுத்திக்கொண்ட சாவெஸ் உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் சர்ச்சைக்குரிய ஒருவராக இருந்து வந்தார். 

அமெரிக்காவை கடுமையாக சாடிவந்த அவர் லத்தீன் அமெரிக்காவில் இடதுசாரி கொள்கைக்கு ஒரு முன்மாதிரியாக இருந்து வந்தார். 

சாவேஸின் மரணத்தையடுத்து துணை ஜனாதிபதி நிகொலஸ் மடுரோ தற்காலிக ஜனாதிபதியாக தேர்தல் வரை செயற்படுவார் என்றும் இன்னும் 30 தினங்களுக்குள் தேர்தல் நடத்தப்படும் என்று வெளியுறவு அமைச்சர் எலியஸ் ஜவா குறிப்பிட்டார். 

இந்த நிலையில் சாவேஸின் இறுதிக் கிரியைகளில் பங்கேற்க இலங்கை அரசு சார்பில் பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா மற்றும் வீடமைப்பு பொதுவசதிகள் அமைச்சர் விமல் வீரவன்ச ஆகியோர் வெனிசுவெலா சென்றுள்ளனர். 

புரட்சித் தலைவரான இடதுசாரி கொள்கையுடைய சாவேஸ் 2009 லிபியாவில் வைத்து இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.