Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தோற்றவன் நான்

Featured Replies

தோற்றவன் நான்
 (ஒருபேப்பருக்காக கோமகன் )

 

28apr09_tired_eyes.jpg

 

சோகங்கள் ஆயிரம் மனதில் இருந்தாலும்
சோம்பியே இருக்க விடவில்லை
புலத்து வாழ்க்கை.........
எல்லோரையும் போல
விசைப்பலகையில் தேசியம் பேச
எனக்கு தெரியவில்லை.
தோற்றுப் போனோம் என்ற வரியில்
நானும் பங்காளிதானே........

உண்மை இதை மறந்து
விசைப்பலகையை உடைப்பதில்
யாருக்கு என்னபயன் ????????

ஆனாலும்,
புலத்தில் உண்மையை
மறைத்தால் தான் கதாநாயக வேடம்....
நன்றாகத்தான் கட்டுகின்றார்கள்
புலத்தில் ஒருசிலர்
கதாநாயக வேடங்களை.........

வந்தாச்சு வந்தாச்சு
கோடைகாலமும் வந்தாச்சு
இடத்துக்கு இடம்
உல்லாசப் பயணமும் வந்தாச்சு
பண்ணை வீடுகளில்
பார்பர்கியூ பார்ட்டியும் வந்தாச்சு
வாட்டிய இறைச்சில் என்
தேசியமும் அரைபடும் .........

தோற்ற வருடங்கள் நான்கு
வலியுடன் கழிந்தாலும்
மாறவில்லை மாறவில்லை
எங்கள் மக்களும்மாறவில்லை........
இரத்தக்கறை படிந்த
மண்ணும் மாறவில்லை

சிங்கத்தின் சிறைகளில் வாடும்
போரை ஆண்டவ
ர்களும் வரவில்லை

எஞ்சிய மக்களின்
வாழ்வும் மாறவில்லை
வீறாப்புத் தேசியங்களும்
இன்னமும் மாறவில்லை.......

இவைகளை உணர்ந்தோ என்னவோ
முள்ளி வாய்க்காலும்
மௌனமாகவே நகருகின்றது
என்மனதைப் போலவே !!!!!!!!!!!

 

கோமகன்
18/05/2013

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

 

சிங்கத்தின் சிறைகளில் வாடும்

போரை ஆண்டவரும் வரவில்லை

எஞ்சிய மக்களின்

வாழ்வும் மாறவில்லை

வீறாப்புத் தேசியங்களும்

இன்னமும் மாறவில்லை.......

கோமகன்

18/05/2013

 

இது மட்டும் விளங்கவில்லை அல்லது விடுபட்டு விட்ட வரிகளா

கவிதைக்கு நன்றிகள்

களத்தில் மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை பல உண்மைகளைச் சொல்லி நிற்கிறது கோமகன். மீள்வருகைக்கு நன்றி.

 

புலம்பெயர் வேசதாரிகளின் அரிதாரங்கள் கவிதையாக.............பார்த்து வலி கொள்ளும் நிலையில் சில பாவப்பட்ட நெஞ்சங்கள்.

"மௌனம் சம்மதமே" என்று இன்னொரு பாடலின் வரிகளை கேட்ட ஞாபகம்.

 

முள்ளிவாய்க்காலில் நடந்தவற்றைய் பார்த்து கவலைப்பட்டுவிட்டு நடந்தது நடந்துவிட்டது  என்றது என்று சம்மதமாகவோ அல்லது சமாதானமாகவோ போக முடியுமா? நமது ஆற்றலுக்கு எட்டியதை....

 

மீள்வருகைக்கு நன்றி கோமகன்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

தோற்ற வருடங்கள் நான்கு

 

ஈழத்தமிழர்கள் இன்று வரை யாரிடமும் வெல்லவில்லை.எல்லாளன் கூட தோற்{றார்}(கடிக்கப்பட்டார்).

 

  • கருத்துக்கள உறவுகள்

கோமகன் கவிதைக்கு நன்றி,

 

ஈழப்போர் சரியான செல்லும்வழியே சென்றது, எந்தவிடத்தில் அது முடிவுறவேண்டுமோ அங்கேயே ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டன. நாம் இன்னமும் தோற்றுவிடவில்லை, தோற்றதுபோலொரு மாயை ஏற்படுத்தப்பட்டது அன்றேல் நாமே ஏற்படுத்திக்கொண்டோம். கடந்தகாலம் எம்போராட்டத்துக்குத் தேவையான ஆயுதங்களை அடயாளம் கண்டோம், இப்போதின்னுமொரு போருக்குத் தேவையான எதிரியை அடையாளம் காண்வேண்டியுள்ளது. போரை எந்தக் களத்தில் எப்படிப் ஆரம்பிக்கவேண்டுமென்பதை எதிரியே தீர்மானிக்கிறான். அதற்கிடையில் நாம் எமது எதிரிகளை இனம்காணவேண்டும். எமக்கு எதிரி ஒருவன் மட்டுமல்ல.  தமிழீழம் நோக்கிய போராட்டம் சரியான திசைவழியேதான் செல்கின்றது, ஆம் இப்போது அது தனக்கானவனை அடையாளம் காண்கிறது, நீ தகுதியானவனா என உனையே கேட்கிறது, பதில்சொல்லத் தயாராகு.

  • கருத்துக்கள உறவுகள்

வேண்டும் தேசியம் .......... வேண்டாம் வீறாப்பு தேசியம்........ மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி கோமகன்

 

தோற்றவன் நான்
 (ஒருபேப்பருக்காக கோமகன் )

 

 

 

உண்மை இதை மறந்து

விசைப்பலகையை உடைப்பதில்

யாருக்கு என்னபயன் ????????

ஆனாலும்,

புலத்தில் உண்மையை

மறைத்தால் தான் கதாநாயக வேடம்....

நன்றாகத்தான் கட்டுகின்றார்கள்

புலத்தில் ஒருசிலர்

கதாநாயக வேடங்களை.........

 

ம்ம்ம். உங்கள் மறைமுக தாக்குதல். நல்லது. இங்கு யாரும் வேடங்கள் போடவில்லை.உண்மைகளையும் மறைக்கவில்லை. மக்களை முட்டாள்கள் என்று நினைக்கிறீர்கள் போலும். பூனை கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருண்டுவிட்டது என்று நினைக்குமாம். அதுபோல்தான் வீட்டுக்குள் இருந்துகொண்டு விசைப்பலகையில் தாங்கள் எழுதுவதும்.உண்மையை எழுதுகிறோம் என்று உங்களைபோன்றவர்கள் எழுதாத பொய்களா?

 

யதார்த்தங்களை அப்படியே அச்சொட்டாய் சொல்லும் கவிதை.என்ன....கன வரிகள் நிலைக்கண்ணாடியாய் இருக்கின்றன...!

அருமையான கவிதை ...

காலத்தின் பிரதிவிம்பம்

  • தொடங்கியவர்

இது மட்டும் விளங்கவில்லை அல்லது விடுபட்டு விட்ட வரிகளா

கவிதைக்கு நன்றிகள்

களத்தில் மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி

 

உங்களைக் கண்டதில் நானும் மகிழ்வடைகின்றேன் வாத்தியார் . உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றிகள் . மேலும் நான் சரியாகவே குறிப்பிட்டிருக்கின்றேன் . எனது உவமானமான " போரை ஆண்டவர் அல்லது ஆண்டவர்கள் "  என்பது , தமிழர்கள் தரப்பில் இதுவரைகாலமும் தமிழீழத் தேசிய விடுதலைப் போரை  ஆழுகைக்குட்படுத்திய பிரதிநிதிகளான விடுதலைப்புலிகளையும் , சிங்கத்தின் சிறை என்பது சிங்களத்தின் சிறைக்கொட்டில்களையும் குறிக்கும் .

 

  • தொடங்கியவர்

கவிதை பல உண்மைகளைச் சொல்லி நிற்கிறது கோமகன். மீள்வருகைக்கு நன்றி.

 

உண்மைகள் என்றுமே வலிமிகுந்தவை . உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றிகள் சுமே .

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை நன்றாக இருக்கின்றது கோமகன் ! வாழ்த்துக்கள் !!

  • கருத்துக்கள உறவுகள்

உடல் நலம் தேறி ஒரு பேப்பர் மூலம் யாழுக்கு திரும்ப வந்திருக்கும் கோமகனை வருக,வருகவென வரவேற்கிறேன்

  • தொடங்கியவர்

புலம்பெயர் வேசதாரிகளின் அரிதாரங்கள் கவிதையாக.............பார்த்து வலி கொள்ளும் நிலையில் சில பாவப்பட்ட நெஞ்சங்கள்.

 

வேசதாரிகள் புலத்தில் மட்டும்இல்லாது தாயகத்திலும் சமகால  சூழல்களைக் கனகச்சிதமாகப் பயன்படுத்தி வலம்வருவது கண்கூடு . அவர்களது அரிதாரமுகங்களும் தோலுரிக்கப்படல்வேண்டும் . உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்கநன்றிகள் நேற்கொழுவன் .

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் கண்டதில் மகிழ்ச்சி கோமகன்..! :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மீண்டும் ஒரு கவிதை மூலம் காண்பதில் மகிழ்ச்சி கோமகன் அண்ணா..

 

இது இப்போதைக்கு தீரப்போற விடையம் அல்ல, மீண்டும் மீண்டும் வேதாளங்கள் முருங்கை மரமேறும் .. <_<

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் கோ

இதெல்லாம் தேவையற்றது

இரண்டு வரியில் உங்கள்  உண்மை அரசியலைச்சொல்லுங்கள்

அந்த தெம்பு

தெளிவு வராதவரை..................... :(  :(  :(

 

எவரையும் கைநீட்டி பலன் இல்லை.

 

30  வருடங்களுக்கு   மேலாக நாட்டுக்காக தம்மை தம் வாழ்வைத்தந்தவர் அனைவரையும் வேசதாரிகள் என்ற பதத்தினுள் அடக்கும் இது போன்ற சமகால அறிக்கைகளை முற்றாக வெறுக்கின்றேன்.  நிராகரிக்கின்றேன். :(

Edited by விசுகு

ம்ம்ம். உங்கள் மறைமுக தாக்குதல். நல்லது. இங்கு யாரும் வேடங்கள் போடவில்லை.உண்மைகளையும் மறைக்கவில்லை. மக்களை முட்டாள்கள் என்று நினைக்கிறீர்கள் போலும். பூனை கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருண்டுவிட்டது என்று நினைக்குமாம். அதுபோல்தான் வீட்டுக்குள் இருந்துகொண்டு விசைப்பலகையில் தாங்கள் எழுதுவதும்.உண்மையை எழுதுகிறோம் என்று உங்களைபோன்றவர்கள் எழுதாத பொய்களா?

வண்டுவை மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி .................உண்மைகள் உரை[றை]க்கப்படவேண்டும்..

உண்மைதான் கோமகன் ஒவ்வொரு துரோகியும் உண்மையான போராளி /தேசிய செயல்பாட்டாளனை  ஒழுங்கா தன் பணியை செய்யவிடாமல் தொடர் காட்டிக் கொடுப்பாள் வந்ததே இந்த அவல வாழ்வு நமக்கு. இந்த 30 வருடத்தில் அந்த உண்மையான போராளிகளை போராடவிடாமல் பண்ணியது யார்? விடை:அதிகம் இந்த துரோகிகளே .அல்பிரட் முதல் இந்த வரதராஜ பெருமாள், மாணிக்கதாசன், டக்லஸ் என்று இந்த போராட்டத்தை  கெடுத்து மக்கள் அழிவில் போராட்ட அழிவில் வாழ்ந்தவர்கள் இந்த துரோகிகள். போராளிகளும் எவ்வளவு துரோகிகளை தான் களை எடுப்பது ? அழிக்க அழிக்க  வளரும் நச்சு செடிகளாய் அவர்கள் வளர்ந்தார்கள் எதிரியால் வளர்க்கப் பட்டார்கள். போராளிகள் இப்போ இல்லை அதற்க்காக இந்த காட்டிக் கொடுப்பாளர்கள் இன்னுமா வாழனும் ?இன்னுமா வளரனும்? இப்போ புதிதாக நச்சு செடியாய் முன்னர் தப்பிய சிறி டெலோக்கள்  வேறு தங்கள் கைவரிசைய இந்தியா ,தாயகம்,,புலம்பெயர் தேசம் என்று தொடக்கி விட்டார்கள். மாகாணசபைக்கு எந்த அதிகாரமும் வேண்டாம் என்று பெரும் கயவன் தீவகத்தில் அதிகாரம்  காட்டுபவன் இன்னும் சொந்த இனத்தையே காடிக் கொடுத்து வயிறு வளர்க்கும் டக்லஸ் கூறுகிறார் . யோசியிங்கள் நண்பர் கோ இந்த காட்டிக் கொடுக்கும், இனத்தை விற்கும் கூறு கேட்டவர்கள் இல்லை என்றால் நாம் எப்பொழுதோ உரிமை பெற்றிருப்போமா இல்லையா என்று....கவிதைக்கு வாழ்த்துக்கள் நீங்க இந்த துரோகிகள் பற்றியும் உங்கள் கையால் கவிதை எழுத வேண்டும் என்று எதிர்பார்க்கும்  ஒரு அப்பாவித் தமிழன் 

Edited by Ramanan005

  • கருத்துக்கள உறவுகள்

இது இன்னொரு வடிவம்.. தோற்றவர்கள் என்ற மனநிலையை விதைப்பதன் மூலம் எதிரிக்கு அடி பணிந்து போ என்று சொல்லுதல்..! போராடப் போகாதததுகள் போராட்டத்திற்கு உதவாததுகள் கூட இன்று.. தோற்றேன் என்று புலம்புவது ஏனோ..??! நீங்கள் தான் என்றுமே போராடவில்லையே. அப்புறமென்ன தோற்க இருக்குது..! ஐயோ நம்ம சனம் போடுற கூத்து இருக்கே சொல்லில மாளாது..! எல்லாம் முடிஞ்ச பின்னர்..  தானும் தானும் என்று கொஞ்சம். :D:lol:


எமது மக்களில் அநேகர் பார்வையாளர்களாக நின்றிட்டு அல்லது ஒட்டி நின்று சீன் போட்டிட்டு.. ஓடி வந்து பச்சைப் பொய் சொல்லி அசைலம் அடிச்ச ஆக்கள். அந்த உண்மையை எத்தினை பேர் மனந்திறந்து சொல்லத் தயார். முதலில அதைச் சொல்லுங்கையா. தோற்றது என்ற நிலையை உண்மையாக எதிரியோடு நின்று சமர் செய்தவன் கூட நினைக்கல்ல. எதிரி என்ன நிறம் என்று அறியாததுகள் தோற்றது என்று புலம்புறது தான் வேடிக்கையாக உள்ளது.!

 

புலிகள் தோற்கனும் என்றது.. எதிரிகளை விட ஒட்டுக்குழுக்களுக்கே முக்கியமாக தேவைப்பட்டது. ஏனெனில் தங்களின் காட்டிக்கொடுப்பு அராஜகத்திற்கு நியாயம் தேட..! அதன் பரினாம வளர்ச்சிகளே இத்தகையை படைப்புக்கள்..! இப்படி எத்தினையோ வந்திட்டுது.. 1987 இல் இருந்து..! :icon_idea::)

Edited by nedukkalapoovan

தமிழரின் வதையை தமக்கு இலாபமாக்கி பதவியை மட்டுமே இலக்காகக் கொண்டு செயற்படுவோர் தமது பதவி நாற்காலிகளுக்காய் தனது இனத்தை விற்றுப் பிழைப்பு நடத்தும் ஏமாற்றுப் பேர்வழிகள், கலாசாரச் சீரழிவை திட்டமிட்டு ஏற்படுத்துவோர், ஊழல் புரிவோர், பொதுச் சொத்தை கொள்ளையிடுவோர் இவர்களை விடவா??????????????????????


மக்களால் பிடுங்கி எறியப்பட்ட ஈழத்துரோகிகள்.
 
2127KarunaAmman_J.jpg
eprlf_varatharajperumal.jpg
Douglas-Devananda.jpg

http://naamakal.blogspot.ch/2011/03/blog-post_106.html

  • கருத்துக்கள உறவுகள்

இதுகள் வெளிப்படையாக அறியப்பட்டதுகள். இதுகளை  விட அதிகமாக புலம்பெயர் நாடுகளிலும் பதுங்கி இருக்குதுகள்..! அதுகளை இட்டும் அவதானமாக இருக்க வேண்டி உள்ளது. :icon_idea::rolleyes:

இன்றைய தமிழர்களின் தேவை ஒற்றுமை. பாதிக்கபட்டவர்களுக்கு உதவுவது. அதன் முக்கியத்தை பற்றி மற்றவர்கள் மீது குற்றம் சொல்லாமல் எழுதி இருக்கலாம். இது தனிப்பட்ட கோபத்தை கவிதையில் வடித்து உள்ளது போல் தெரிகிறது . 

 
புலம்பெயர் வாழ்வில் சிலது அவசிமானது. அதிலொன்று விடுமுறையும். அதுவும் இல்லாவிட்டால் depressed ஆகி மருத்துவச் செலவுக்கு கொடுக்க நேரிடும். 
 
உங்கள் நோக்கம் நல்லதாக இருக்கலாம். இருந்தால் மன்னிக்கவும் 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல கவிதை கோமகன்;

தோற்ற வருடங்கள் நாலு...,

இதை பலர் பலவாறாக விளங்கம் கொள்ளலாம்..ஆனாலும் அதைவிட அதில் ஒரு செய்தி இருக்கத்தான் செய்கிறது. ஒன்றில் மரதன் ஓட்டத்தில் முச்சு வாங்கி வாங்கி ஓடியவன் ஓடுபதையிலேயே மூச்சை விட்ட விட்ட நேரம் என்று சொல்லலாம், அன்றி ஓடவே மாட்டேன் என்ற இனத்தில் இருந்து வந்த ஒருவன் வைத்த ஒரு சில அடிகள்  எனவும் சொல்லலாம்.

எந்த வகையில் பார்த்தாலும்,  ஒன்றில் போட்டி முடியவில்லை அல்லது தொடங்கவே இல்லை. முடிவுகளை இன்றும், எல்லை/தூரம்  இதோ அதோ எதிர்வு கூறுபவர்கள் மூச்சு வாங்கி ஓடியபோது வெற்றிக்கொடி கா(க)ட்டியவர்கள் என்றால் மற்றையவர்கள் ஓடியதே பிழை என்பவர்கள்.துரதிஷ்டவசமாக, இந்த இரண்டு பகுதிகளாலும் யாருக்கும் பிரயோசனம் இல்லை.,.

 

இன்றுவரைக்கும் உள்ள தொன்மையான மொழி, இன்னும் நிலைத்திருக்கிறது என்று சொன்னால் எதோ என்று இருக்கத்தான் செய்கிறது. அதேபோல எங்கும் பரந்து இருந்தும் எங்கும் தனித்திருக்க முடியாமல் இருக்கிறது என்பதுவும் ஒரு செய்திதான். நானும் நீனும் தமிழ் என்னும் பெரிய விருட்சத்தினை அண்ணார்ந்து பார்க்கும் சிறிய அணில்கள் என்று யோசித்தால் எதை இழந்தோம் எதை இழப்பதற்க்காக சேமித்து வைத்திருந்தோம் என்கிற கவலை வராது.

வாழ்த்துக்கள்.

 

 

 

  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.