Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிவேதா உதயாராஜனின் சிறுகதைகள் மீதானதொரு பார்வை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நிவேதா உதயாராஜனின் சிறுகதைகள் மீதானதொரு பார்வை

முல்லைஅமுதன்

niveetha5.jpg

நிவேதா உதயாராஜன்

சிறுகதைக்கான வரைவிலக்கணம் எதையும் கணித்தபடி தற்போதைய சிறுகதைகள் வாசிக்கக் கிடைக்கவில்லை.முன்னரெல்லாம் அகிலன்,கல்கி தொடங்கிசாண்டில்யன்,கோவி மணிசேகரன் என விரிந்து அசோகமித்திரன்,மௌனி எனப் பரந்து தளம் விரிந்தே செல்கிறது.இன்று பலர் சிறுகதைக்குள் வந்துவிட்டனர்.கல்வி,கணினியியல் வசதி என வாய்ப்புக்கள் கைக்குள் வர வடிவங்களிலும் மாற்றம் ஏற்பட்டுவிட்டது. இலங்கையிலும் அப்படியே. சிறுகதைகளின் முன்னோடிகளின் தொடர்ச்சியாக பலர் வந்துவிட்டனர். அன்று தொடங்கி இன்று வரை பலரும் தம்மை சிறுகதைகளின் மூலம் அடையாளப்படுத்தி நிற்கின்றனர். சிறுகதைகள் தனியாகவும், நூலாகவும் பரிசில்களைப் பெற்றுவிடுகின்ற அளவுக்கு வளர்ந்து வருகின்றன என்றே சொல்லலாம். இன மோதல்களில் சிதறுண்ட மக்கள் பல நாடுகளில் வாழும் நிலையில் வாழ்வின் சோகம்,யுத்த நோவுகள்,குடும்ப சிதைவுகள்,ஒன்றினைவுகள் எல்லாம் இன்னும் கைகளுக்குள் வராத சூழலில் பலர் எழுத்தை தம் வடிகாலாக்கினர். பழையவர்களுடன் புதியவர்களும் இணைந்துகொண்டனர். இதற்கு புலம்பெயர் சூழலில் வானொலிகளின், தொலைக்காட்சிகளின், அச்சு ஊடகங்களின் வருகை பலரையும் உள்வாங்கும் களமாகவும் ஆகிவிட்ட நிலையில் சிறுகதைகள் எழுதும் பலரையும் உருவாக்கிவிட்டிருந்தது. இலகுவாக வாசிக்கும் சூழலும், இங்குள்ள கல்வி,நண்பர்களின் தொடர்பு கதை வடித்தல் அவர்களை ஓரளவு ஆசுவாசப்படுத்தவும் செய்வதை மறுக்கமுடியாது.

புதிய சிந்தனைகளை வரவேற்கும் சிறுசஞ்சிகைகளின் வருகையும் நம்பிக்கை ஊட்டுவனவாகவே அமைந்தன.கூடவே, முகநூலின்,இனையத் தளங்களின் வருகையும் பலரின் எழுத்தை சுவைக்கும் வாய்ப்பும் நமக்குக் கிடைத்தன. படிமுறை வளர்ச்சி,பிற இலக்கியங்களை வாசிக்கும் பன்முக ஆற்றலும் அவர்களுக்குள் மாற்றங்களையும் ஏற்படுத்தியது. புலம்பெயர் சூழலில் ஆண் படைப்பாளர்களுக்கு ஈடாக பெண் எழுத்தாளர்களும் தொடர்ச்சியாகவே எழுதி வருகின்றமையும்,சிலரின் கதைகள் நூலாகவும் வெளி வந்து தம்மை அடையாளப்படுத்தி சிறுகதை வரலாற்றில் பதிவு செய்து நிற்கின்றனர்.

வருடாந்தம் புலம்பெயர் நாடுகளில் பெண்கள் அமைப்பினரால் நடாத்தப்படும் பெண்கள் சந்திப்பும் பல பெண் படைப்பாளர்களை அடையாளப்படுத்தி நிற்கின்றது.

எனக்குத் தெரிந்தவரை சுமதிரூபன்,சந்தரவதனா,சந்திரா ரவீந்திரன்,பவானி ஆழ்வாப்பிள்ளை போன்றோரின் நூல்கள் வெளிவந்தும் உள்ளன.இன்னும் வந்தும் இருக்கலாம்.வரவும் உள்ளதாக தகவலும் உண்டு. பரவலாக பல பெண் எழுத்தாளர்களின் கதைகள் வாசிக்கக் கிடைத்தாலும் நூலாக வருகையில் ஒடுமொத்த விமர்சனக்களை வைக்கவும் உதவும். லண்டனிலிருந்து ஆய்வாளராகவும், தமிழாசிரியராகவும்,செய்தி வாசிப்பாளராகவும்,சிறுகதை எழுதுபவராகவும் நம்மிடையே கவனிப்புக்குள்ளாகிறார். இணையங்களில் எழுதிவரும் இவரின் தமிழரின் வரலாறு சார்ந்த ஆய்வு நூலை வெளியிடவுமுள்ளார்.அண்மையில் அவரின் சிறுகதைகள் சிலதை வாசிக்கக் கிடைத்தது.

'நீங்கள் கடிச்சிட்டுத் தாங்கோ ‘என்கிற கதை புலம்பெயர் நாடுகளில் நடைபெறும் கதை தான்.தனியாக வாழும் ஒருவனுக்கு அவனது தாய் பெண் பார்த்து அனுப்புகிறாள்.அப் பெண் ஏஜண்ட் ஊடாக வருகையில் இத்தாலியில் தாண்ட கப்பலுடன் மூழ்கிப்போகிறாள்.பின் அனுப்பப்படும் பெண் முன்னால் வந்து நின்று ஆயிரம் கற்பனைகளை அவனுள் ஏற்படுத்த அதுவும் நனவாகிவிடுகிறது.அவள் இன்னொருவனுடன் சொல்லாமேயே சென்றுவிடுகிறான்.செல்வன் என்கிற பாத்திரம் மூலம் கதை சொல்லப்படுகிறது.அவனின் தாய்,தங்கை,எழிலி என்கிற பாத்திரங்களூடாக கதை நகர்த்தபட்டிருக்கிறது. செல்வனின் எதிர்பார்ப்பு,குடும்பத்தாருக்காக தன்னை அர்ப்பணித்து வாழ்கிற சராசரி மனிதனின் மன உணர்வுகளை அழகாக சொல்லியிருக்கிறார். ஆரவாரமில்லாத கதை நகர்வு.கதையாக சொல்லாமல் ஒரு வாழ்வியல் அனுபவத்தைச் சொல்கிற இவரின் கதை சொல்லும் பாங்கு விரும்பத்தக்கது. தமிழர்களிடையே காணப்படும், சாதகம், கிரகங்கள், பெண்பார்க்கும் படலங்கள் இன்னும் வாழ்வியல் மாற்றங்களிடையேயும் மறைந்துவிடவில்லை என்பதை இவரின் கதை சொல்லிச் செல்கிறது.

'பெண்' என்கிற கதை முகநூல் நண்பரை நம்பி மோசம் போகும் மது என்கிற பெண்ணின் சோகம் சொல்லப்படுகிறது.விரும்பித் திருமணம் செய்யும் கபிலன்,மதுவுக்கு குழந்தையும் கிடைக்கிறது.வீட்டில் குழந்தை,வீட்டுவேலை,கணவன் குடும்பம் என்றிருந்தவளுக்கு கணினி வாய்ப்புக்கிடைக்க அதன் முலம் முகநூலில் அரட்டை அடிக்கும் பழக்கத்தில் அறிமுகமாகும் கரனின் நட்பு அவளின் வாழ்வை திசை திருப்பிவிடுகிறது.பின் கரனிடமிருந்து கிடைத்த ஏமாற்றம் கபிலனை,அவன் மூலம் கிடைத்த மகிழ்ச்சி,குழந்தை மனதில் வந்து போக அவனிடம் வந்து சேர்கிறதான கதை நமது அன்றாட வாழ்வில் வந்து போகிற பாத்திரங்கள் தான்.கதை லாவகமாக நகர்த்தப்பட்டிருக்கிறது.அதிக வர்ணனைகள் அற்ற கதை சொல்லும் பாங்கு சில சமயம் சுவாரஸ்யம் குன்றிவிடவும் வாய்ப்புண்டு. பாத்திரங்கள் இன்னும் ஆழமாக உருவாக்கப்பட்டிருகலாமோ என நினைக்கத் தோன்றுகிறது. ஒவ்வொரு கதைகளிலும் புலம்பெயர் வாழ்வின் கதைகள்,சோகங்கள்,நோவுகள் சொல்லப்படுகின்றன.அனுபவம் என்பது இருவகை..தன் அனுபவம்.இன்னொன்று பிறரது ஞாபகம்.கதாசிரியருக்கும் இவ்வனுபவம் நிறையவே இருக்கிறதாக கதை மூலம் உணரப்படுகிறது. ஏஜண்டு மூலம் அனுப்படுகின்ற ஒவ்வொரு ஆணும், பெண்ணும் படுகின்ற அவலங்கள் யாவரும் அனுபவித்தே வந்துள்ளனர்.இன்னும் அவுஸ்திரேலியா,இத்தாலியக் கடலுள் மூழ்கி போகிற உயிர்கள்தான் எத்தனை...அவன் அல்லது அவள் வருவதை எதிர்பார்த்து வலிக்கின்ற மனதுகள் தான் எத்தனை?எத்தனை??

'நினைவு சுடும்' கதை கூட அவலத்தின் இன்னொரு கதைதான். காந்தன் சுசிலா எனும் இர்ண்டு பாத்திரங்களூடாக இன்றைய சமகால அவலத்தைச் சொல்லுகிறார்.ஏஜன்ட் மூலம் மனைவியையும் குழந்தையையும் ஏஜன்ட் முளம் எடுக்கப்போய் இன்னொருவரின் மனைவியாக வருகின்ற பெண் படும் காயங்கள் அழகாகச் சொல்லப்படுகிற கதைYஎ நினைவு சுடும்.ரஸ்யாவிலிருந்து களவாக எல்லையைக் கடக்கின்ற போது சூழல் பிரிக்கபடுகின்ற போது உறவுகளும் பிரிந்து போக காலம் முழுதும் வலியுடன் வாழ்கிற கொடுமை சொல்லப்படுகிறது.இப்படி எத்தனை மனிதர்கள் எல்லையைக் கடக்கின்றனர்.எத்தனை பேர் குடும்பங்களுடன் இணைகிறார்கள்.குடும்ப உறவுச் சிக்கல் எப்படு மாறுபாடடைகிறது.சமூகம் ஏற்றுக்கொள்கிறதோ இல்லையோ காலம் நமக்கு சொல்லிவைக்கிற பாடம் அனேகம். கதை நேரடியாகவே சொல்கிறது.ஆலாபனைகள் அதிகம் இல்லை. பாத்திரங்களின் உரையாடல்கள் இன்னும் ஆழமாகப் பேசப்பபட்டிருக்கலாம். ஆபத்தானது என்று தெரிந்தே நிகழ்வுகள் எல்லாம் நடந்து கொண்டிருப்பது யதார்த்தமானது.இது தான் விதி என்கிறது அனைவர்க்கும் பொருந்தும்.தமிழர்க்கே மட்டும் உரித்தானது அல்ல. இப்போது தான் சிறுகதைகளில் கை வைத்திருக்கிறார் என்று தெரிகிறது.ஆனாலும் சொல்ல வந்ததை சொல்கிறார். உலகில் அவலங்களின் கதை தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. முகநூல் நண்பனாகி அவனை மனதுள் விருப்பத்திற்குரியவனாக்கி அவனின் அண்மை தேவைப்பட,அவளுக்கு பல்கலைக்கழகம் சுதந்திர உணர்வுகள் சிறகசைக்க,கை கொடுக்க, ஒரு சந்திப்பின் போது அவனின் சுயரூபம் தெரியவர அவனின் நட்பைத் துண்டிக்க எண்ணியவளுக்கு சிரமங்கள் ஏற்பட இறுதியில் காவல் நிலையம் புறப்படுவதாக'எத்தனை மரங்கள் தாவும்' கதை சொல்கிறது. பெண்ணுக்கு மாத்திரமல்ல,ஆணுக்கும் ஏற்படுகின்ற ஏமாற்றம் பற்றியும் கதைகள் சொல்லுகின்றன. குறைவாவே எழுதும் நிவேதா தொடர்ச்சியான எழுத்து பயிற்சியைக் கொடுக்கலாம். இன்னும் வீச்சான கதைகளை எதிர்காலத்தில் எதிர்பார்த்து இலக்கிய உலகம் காத்திருக்கிறது. சிறுகதைகள் அனைத்தும் தொகுத்து நூலாக வருகையில் புதிய பரிமானத்தைப் பெறலாம். வாழ்த்துக்களுடன்,

mullaiamuthan@gmail.com

http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=1952:2014-02-05-02-42-05&catid=2:2011-02-25-12-52-49&Itemid=19

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள், சுமே! :lol:

 

இணைப்புக்கு நன்றிகள், கிருபன்!

  • கருத்துக்கள உறவுகள்

இனி யாழுக்கு நாவூறு படாது,வாழ்த்துக்கள் சுமோ

  • கருத்துக்கள உறவுகள்

இது எப்ப எடுத்த படம். கலியாண வீட்டுக்கு முதல் நாள் போல. இன்னும் இதனை வைச்சா... ஊரில படம் காட்டிக்கிட்டிருக்கீங்க. ம்ம். :lol::D


சுமே அக்காக்கு கதை எழுத பச்சைக்கொடி ஒன்னு காட்டப்பட்டிருக்கே. :)

 

அதுசரி.. யார் இந்த முல்லைஅமுதன்..???! அவரைப் பற்றியும் சொல்லி எல்லோ இதைச் சொல்லனும். :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

கொலை வெறி என்றால் அது இதுதான்.. :huh: ஏன் கிருபன் இந்தமாதிரி?? :D

  • கருத்துக்கள உறவுகள்

உற்றநேரத்தில், சுமேரியரின் ஆக்கத்துக்கு உத்வேகம் அளிக்கும் ஒரு அங்கீகாரம். அவரின் வேதனை வடிக்கும் படைப்பானாலும் இலக்கிய உலகில் இடம்பிடிக்கலாம்.

பிறக்கும் குழந்தை சிரிப்போடு பிறப்பதில்லை தாயையும் வருத்தி அழுதுகொண்டே பிறக்கிறது. பிறந்தபின் அதுவே குடும்பத்தை ஆனந்தத்தில் ஆழ்த்துகிறது. :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொலை வெறி என்றால் அது இதுதான்.. :huh: ஏன் கிருபன் இந்தமாதிரி?? :D

சம்மதம் வாங்கிய பின்னர்தான் பதிவைப்போட்டேன் :) படமும் பதிவில் இருந்தது. அதையும் ஏன் விடுவான் என்று வெட்டி ஒட்டிவிட்டேன். :D)

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு எழுத்துக்கு கிடைக்க வேண்டிய நியாயமான விமர்சனம் முல்லையமுதனின் விமர்சனம். முல்லையமுதன் அடித்தேன் கவிழ்த்தேன் என அடித்து வீழ்த்தும் எழுத்தாளரில்லை மிகவும் அமைதியான ஆனால் அனைவரையும் எழுத்தில் வளர்ச்சியடைய தன்னால் அன பங்களிப்பை நல்கிவரும் எழுத்தாளர். நிவேதாக்கா மோதிரக்கையால் குட்டு வாங்கியிருக்கிறீங்கள். இனி எந்த விமர்சனங்களுக்குள்ளும் தொலைந்து போகாமல் உங்களது எழுத்தின் வளர்ச்சியில்  செல்லுங்கள். தொடர்ந்து எழுதுங்கள் இன்னும் ஆளமான படைப்புகளை உங்களால் தர முடியும்.


இது எப்ப எடுத்த படம். கலியாண வீட்டுக்கு முதல் நாள் போல. இன்னும் இதனை வைச்சா... ஊரில படம் காட்டிக்கிட்டிருக்கீங்க. ம்ம். :lol::D

 

அக்காள் இன்னும் மனசால் குழந்தை. இதே முகம் தான் இப்பவும். தம்பியும் படங்களை நல்லாத்தான் கவனிக்கிறீங்கள்.

வாழ்த்துக்கள் சுமே ,

எழுத்தாளனுக்கு அங்கீகாரம் மிக முக்கியம் .

விமர்சனத்தை நல்லதோ கெட்டதோ ஏற்றுக்கொண்டு தொடர்ந்து எழுதுங்கள் .

வாழ்த்துக்கள் நண்பி!!!  உங்கள் ஆக்கங்களை வாசிக்க மிக ஆவல்!! 

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் நிவேதா உதயன். முல்லை அமுதனின் விமர்சனம் உங்களுக்கு ஒரு உந்து சக்தி உங்கள் ஆக்கங் களை      மெருகூட்டி  வெளியிட வாழ்த்துக்கள்

பதிவிட்ட  கிருபனுக்கு நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சுமே என்று அழைக்கப்படும் நிவேதா உதயாராயன். குறுகிய காலத்திற்குள்தான் நூல் வெளியீடு பற்றி கருத்துக் கேட்டதாக ஞாபகம் அதற்குள் வடிவம் பெற்று விட்டது என்பது உங்களுக்கு உள்ள எழுத்தின் மீதான காதலையும் உற்சாகத்தையும் வெளிப்படுத்தி நிற்கிறது... தொடர்ந்தும் பற்பல நூல்களை வெளியிட்டு மேன்மையடைய வாழ்த்துக்கள்.

வாழ்த்துக்கள் சுமே..

Edited by யாழ்கவி

வாழ்த்துக்கள் சுமேரியர் .

  • கருத்துக்கள உறவுகள்
சுமோ சொல்லி முல்லை அமுதன் இந்தக் கட்டுரை எழுதினரா? அல்லது முல்லை அமுதன் தானாகவே சுமோவின் ஆக்கங்களை படித்து விட்டு தனது கருத்தை சொல்ல வேண்டும் என்பதற்காக எழுதினாரா :unsure:
 
கொஞ்சக் காலத்திற்கு முன்பு கிருபன் 'புலம் பெயர் பெண் எழுத்தளார்கள்' என்ட கட்டுரையை யாழில் இணைத்திருந்தார்.அந்தக் கட்டுரை எழுதியவர் நவஜோதி என்பவர்.அவரிடம் தன்னை அறிமுகப்படுத்திய சுமோ தன்னையும் அந்த லிஸ்டில் சேர்க்குமாறும்,தானும் ஒரு எழுத்தாளார் என்று சொன்னதாகவும் கேள்விப்பட்டேன் :)
 
சுமோ ஒரு சிறந்த எழுத்தளார் அவரின் எழுத்தை விமர்சிக்கும் தகுதி எனக்கு கொஞ்சம் கூட இல்லை.எனக்கு விளங்காதது என்ன என்டால் இவ்வளவு திறமை இருப்பவர்கள் எதற்கு மற்றவர்களிடம் பாராட்டையும்,புகழையும் கேட்டு வாங்குகிறார்கள்?
 
எது எப்படி இருந்தாலும் சுமோ மெம் மேலும் சிறந்த எழுத்தாளாராக வர வாழ்த்துக்கள் :icon_idea:
  • கருத்துக்கள உறவுகள்

முல்லை அமுதன் அவர்களிடம் எனது நான்கு கதைகளை மட்டும் கொடுத்து எனக்கு இக்கதைகள் பற்றிய உண்மையான விமர்சனம் தேவை என்று கேட்டிருந்தேன். அவர் எனது மெயிலுக்கு ஒரு வாரத்தில் இதுபற்றி எழுதியிருந்தார். எனது கதைகளைத் தொகுத்து புத்தகமாக வெளியிடும்போது இதை நானே யாழில் போடலாம் என்று இருந்தேன். அவர் என்னைக் கேட்க்காமலேயே என் முகப்புத்தகப் படத்துடன் இதை தனது தளத்தில் வெளியிட்டிருக்கிறார் என்பது கிருபன் நேற்று எனக்கு அனுப்பிய போதுதான் தெரிந்தது. ஒரு நிமிடம் என்னைக் கேட்காது அதை ஏன் பதிவிட்டார் என்னும் கோபம் எழுந்தாலும் போட்டது போட்டதுதானே என்று இங்கும் போட கிருபனுக்குச் சம்மதித்தேன். 

 

ரதி, நவயோதி சுமேரியர் பற்றிய ஒரு நேர்காணலை அவர் வேலை செய்யும் வானொலியில் ஒரு வருடங்களுக்கு முன்னர் ஒழுங்கு செய்திருந்தார். அந்த நிகழ்ச்சி மிகவும் சிறப்பாகப் போனது. அதன் பின்னரும் தொடர்ந்து செய்யக் கேட்டபோது நான் மறுத்துவிட்டேன். அவர்தான் என்னிடம் எனது கதை ஒன்றைக் கேட்டது. என்னைப்பற்றி உங்களுக்கு வடிவாகத் தெரியாது. என் சொந்த விடயத்துக்காக நான் எப்போதும் யாரிடமும் பிச்சை கேட்டுப் பழக்கமில்லை. நீங்கள் அவரின் விடயத்தை என்ன நோக்கத்தில் இதில் எழுதியிருந்தாலும் சரி, அல்லது நீங்களே நவயோதியாக இருந்தாலும் சரி. எனக்குக் கவலை இல்லை. எனக்கு முன்னால் நானாகக் கேட்டது என்று கூறுவாரா நவயோதி என்று கேளுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்திய அனைத்து உறவுகளுக்கும் இதை இங்கு பதிந்த கிருபனுக்கும் நன்றி.

வாழ்த்துகள்!!

வாழ்த்துகள்

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் சுமே அக்காவுக்கு வாழ்த்துக்கள்!

வாழ்த்துக்கள் சுமோ அக்கா.......!

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சோழியன், கரன்,யால்வாலி , தமிழினி வருகைக்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள். உங்கள் ஆக்கங்களை வாசிக்க  ஆவல்

  • கருத்துக்கள உறவுகள்

,,,,நான் இன்று தான் இந்த தலைப்பை படித்தேன் ....வாழ்த்துக்கள் சுமேரியர்....தொடரட்டும் உங்கள் எழுத்துப்பணி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் உங்கடை எழுத்திலை நம்பிக்கை வைக்கவேணும் அதை விட்டிட்டு இப்பிடியெல்லம் பொகக்கூடாது .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.