Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனிற்ரா மரியாம்பிள்ளை (காவலூர் கண்மணி) அவர்களின் இரு நூல்கள் அறிமுகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கருத்துக்களத்தில் கனடாவில் இருந்து காவலூர் கண்மணியாக உலாவந்த திருமதி ஜெனிற்ரா மரியாம்பிள்ளை அவர்களின் இரு நூல்கள் இன்று தாயகத்தில் அறிமுகப்படுத்தப்படுகின்றன..

"வெள்ளைப்புறா ஒன்று" என்ற சிறுகதைத்தொகுதியும்

"மலர்கள் பேசுமா" என்ற கவிதைத் தொகுப்புமாக இரு நூல்கள் அறிமுகமாகின்றன.

அவருடைய இந்நூல்கள் பற்றிய மேலதிக விபரங்கள் தற்சமயம் கிடைக்கப்பெறவில்லை.. இருப்பினும் "கலாநிதி" இ. பாலசுந்தரம் அவர்கள் வழங்கிய அணிந்துரையும் , எங்கள் கருத்துக்கள நண்பர் காவலூர் கண்மணி(ஜெனிற்ரா மரியாம்பிள்ளை) எழுதிய ஜன்னல் வழியையும் அவருடைய நூலின் வடிவத்தையும் இங்கு இணைக்கிறேன்.

என் ஜன்னல் வழி…..

என் ஜன்னலுக்கு கம்பிகளில்லை ஆனால் கனவுகள் நிறைய உண்டு. ஓடும் ரயிலை விட்டு வேகமாக ஓடிச்செல்லும் மரங்களைப்போல என் கனவுப் பிரதேசங்கள் பின்னோக்கி ஓடுகின்றன நினைவலைகள் மோதும் என் மனவானில் அதிர்வலைகளாய் என் ஞாபகத்திரையில் நங்கூரமிட்டுக்கிடந்த சில நிஜங்களும் பல நிழல்களும் கற்பனைச் சிறகு விரித்து காகித வானில் பறக்கத் தொடங்கிய பொழுதுகள் அற்புதமானவை. அது என் வாழ்வில் ஓர் இனிய அனுபவம். மழலையாய் மடி தவழ்ந்த என்னை தளிர்நடை நடக்கவைத்த கனடிய வானலைகள், அன்பான ஒலிபரப்பாளர்கள், பண்பான நேயர்கள், என் எழுத்துக்களைப் பாராட்டி ஊக்கமளித்த “யாழ்” இணைய நண்பர்கள் விடலைப்பருவத்தில் வாசிக்கும் பழக்கத்தை சுவாசிக்க வைத்த என் அன்புத் தந்தை, பண்பாகப் பரிவாக வளர்த்த என் அன்பு அன்னை, வாழ்க்கைப் பாதையில் என்னை வளமாக வாழவைத்த என் அன்புக் கணவன், ஊக்கமும் ஆக்கமும் ஊட்டிய அன்புச் சகோதரா சகோதரிகள், அவர்களது குடும்பங்கள், என்னை மிளிர வைத்த என் பிள்ளைகள், எனக்குத் தமிழமுதூட்டிய ஆசிரியர்கள், என் வளர்ச்சிக்கு உதவிய உறவுகள் நட்புகள், என் ஆக்கங்களை நூல் வடிவில் உருவாக்க உதவிய அத்தனை அன்பு உள்ளங்களுக்கும், என் நூலுக்கு அணிந்துரை வழங்கிச் சிறப்பித்த பேராசிரியர் கலாநிதி இ . பாலசுந்தரம் அவர்கட்கும், வாழ்த்தரை வழங்கிச் சிறப்பித்த என் அன்புச் சகோதரன் குயின்ரஸ் துரைசிங்கம் அவர்களுக்கும் நெஞ்சார நன்றிகள். அத்தனைக்கும் சிகரமாய் நித்தமும் எனைக்காக்கும் இறைவன் எனக்கு அளித்துவரும் அனைத்து நன்மைகளுக்கும் கரங்கூப்பி வணங்குகிறேன்.

என்றென்றும் அன்புடன்
ஜெனிற்ரா மரியாம்பிள்ளை

wf5i.jpg

1x4x.jpg

மலர்கள் பேசுமா!
அணிந்துரை
பேராசிரியர் இ. பாலசுந்தரம்
தமிழ்த்துறைத் தலைவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கனடா வளாகம்.

உலகப்பந்தின் பல்வேறு நாடுகளிலும் தமிழர் புலம்பெயர்ந்து வாழ்கின்றனர். தமிழர் வாழும் ஒவ்வொரு நாட்டிலும் ஆக்க இலக்கிய கர்த்தாக்கள் தம் ஆக்க இலக்கியத்துறையில் வளர்ந்து கொண்டிருக்கிறார்கள். கனடாவின் இயந்திரமயமான வாழ்க்கையிலும் ஆக்க பூர்வமான புகலிட இலக்கியப்படைப்புகள் வெளிவந்தவண்ணமுள்ளன. கனடாத் தமிழ் கவிஞர்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் கவிதைகள் எழுதத் தொடங்கிவிட்டனர். அத்தோடு தமிழ் கவிதைகள், சிறுகதைகள் என்பனவற்றை ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்து வெளியிடும் முயற்சிகளும் இடம்பெற்று வருகின்றன.
இலக்கியங்கள் மானுடத்திற்கு ஆக்கரீதியான சிந்தனைகளையும், உணர்ச்சிகளையும் ஊட்டி அவை ஏதோ ஒரு வகையில் அவர்களுக்கு பயன்பாடுடையனவாகவே அமைகின்றன. கலையும், கவிதையும் மானுடத்தை நல்வழிப்படுத்தும் ஆற்றல் மிக்கச் சாதனங்கள், கவிஞன் தன் வாழ்க்கை அனுபவங்கள் தனது விருப்பு, வெறுப்புகள், இலட்சியங்கள் என்பனவற்றை ஓசை நயத்துடனும், பொருட்சுவையுடனும் பாடி மானுட உணர்வுகபளைத் தட்டி எழுப்பும் வகையில் கவிதைகளைப்படைக்கும்போது அக்கவிதைகள் மக்கள் மனதில் பதிவாகின்றன. அவை, மக்களைச் சிந்திக்கத் தூண்டுகின்றன. இவ்வகையில் ஜெனிற்ரா மரியாம்பிள்ளையின் “மலர்கள் பேசுமா” என்ற கவிதைத் தொகுப்பினை நோக்கும்போது தனிமனித உணர்வுகளையும் வாழ்வியலையும் சமுதாயப்பிரச்சனைகளையும் தொட்டுப்பார்த்து மானுடத்தைச் சிந்திக்க வைக்கும் வளமிக்க சொல்லாட்சிகளுடன் அமைந்த கவிதைத் தொகுதியாக இது இலக்கிய உலகில் உலாவருகிறது.
ஜெனிற்ரா கனடாவிற்கு வந்ததன் பின்னர் எழுதிய கவிதைகள் இப்போது “மலர்கள் பேசுமா” என்ற பெயரில் புகலிட இலக்கியத் தொகுதியாக வெளிவருகின்றது இவரது கவிதைகளைப் படிக்கும்போது இவரது உணர்வுகளும் ஆதங்கங்களும் சமூகப்பார்வைகளும் வெளிப்பட்டு நிற்பதோடு – தாயகப்பற்று – மொழிப்பற்று – இவற்றுக்கு மேலாக சமய ஈடுபாடு என்பனவும் இணைந்து காணப்படுகின்றன. ஜெனிற்ரா அவர்கள் கனடாவில் என்னிடம் இளங்கலைமானி படிப்பைத் தொடங்கி – தவிர்க்க முடியாத காரணத்தால் தன் படிப்பை இடை நடுவே நிறுத்திக் கொண்டார். இவர் தமிழ் மொழி மீது தணியாத தாகம் கொண்டவர். அதன் வெளிப்பாடே இக்கவிதைத் தொகுப்பு என்றும் கூறலாம்.
இக்கவிதைத் தொகுப்பிலே 30 தலைப்புகளில் கவிதைகள் தரப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் – காவலூர்கனவுகள் – அழகுக்காட்சிகள் – உயிர்த் தியாகங்கள் – சாதியக்கொடுமைகள் – யேசு குமாரனின் அருட்பெருமை –சிவராத்திரி மகிமை – வாழ்விலேற்படும் இழப்பின் துயரங்கள் – காதல் – திருமணம் என்பவற்றிலேற்படும் விரக்திகள் – தாய்ப்பாசம் – தந்தையின் அருமை – நன்றியுணர்வு – வாழ்வின் அவலங்கள் – அன்னையர் தினம் – உலக இளைஞர் தினம் – தமிழ் மொழி மீதான அதீத பற்று – கனடா வாழ்க்கை – சிகரெட்டின் கொடுமை எனப்பல்வேறு விடயங்கள் பற்றிய அவரது அவதானிப்பும் அனுபவங்களும் கவிதைகளாக விரிந்துள்ளன. இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் பொருளடிப்படையில் வகுத்துத் தரப்படாவிட்டாலும் கவிதைத் தலைப்புகள் வாசகருக்கு எளிதில் கவிதைப் பொருள்நிலை உணர்த்துவதாக அமைகின்றன.
இத்தொகுப்பின் முதலிலுள்ள – “காவலூர் கனவுகள் கண்களில் – அதன் கலைந்திட்ட நினைவுகள் நெஞ்சினில்” என்ற கவிதையில் வரும் பாடல்வரிகள் நம் எல்லோரையும் ஈழத்துக் காவலூருக்கே அழைத்துச் செல்கின்றன. காவலூரின் சுகமான சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் ஆசையை நிரந்தரமாய் நெஞ்சில் தாங்கி இக்கட்டிடக் காட்டிற்குள் எனக் கனடாவாழ் காவலூர் காவலூர் மக்களுக்கு கூறுவதாக அமையும் செய்தி அனைத்து இலங்கைத் தமிழினத்திற்கும் ஏற்புடையதாகும். இவ்வரிகள் ஜெனிற்ராவின் தயாக உணர்வின் ஆழத்தைத் தொட்டு நிற்கின்றன. அச்சமென்பதில்லை (11) என்ற கவிதை அவர் யேசுபிரானிடம் கொண்ட அதீத பக்தியை புலப்படுத்துகின்றது.
ஆயுள்கைதி (15) என்ற கவிதை புகைப்பிடிப்போர் அனைவரும் சுவைத்துப் படித்துத் தம்மைத் திருத்திக்கொள்ள வைக்கும் ஆற்றல் கொண்டது. சிகரெட்டின் கொடுமைபற்றி இவ்வாறு சுவைபட எழுதிய கவிதையை நான் எங்கும் படித்ததில்லை. இவரது கவிதைத் தொகுப்பில் உருவகக்கவிதைகள் பல இடம்பெற்றுள்ளமையை வாசகர் படித்துச் சுவைக்கும்போது இத்தொகுப்பின் சிறப்பை உளர்ந்து கொள்வர். ‘அகரம் என்னும் சிகரம்” என்ற கவிதை அத்தொகுப்பின் உலருவகக்கதைகளில் தலைசிறந்து காணப்படுவது மட்டுமின்றி தமிழ்மொழி மீதான ஜெனிற்ராவின் தீராக்காதலையும் அதன் உரிமைக்குக் குரல் கொடுக்கும் பக்குவத்தையும் உணரக்கூடியதாக உள்ளது என்பதைப் பினவரும் வரிகள் உணர்த்துகின்றன.
“என் அன்னை பூமியது அவல நிலையொழிந்து செங்கம்பளம் விரித்து எனைச் சேர்க்கும் நாள்வரைக்கும் நான் அள்ளி முடிக்கும் அளகம் பாரமென்றாள்”
புலம்பெயர்ந்து வாழும் எம்மவர் தாயகத்தில் மேற்கொள்ளும் மணமகள் தேடும் படலத்தை மிகச்சுருக்கமாக தந்திருக்கும் பாணி பாராட்டத்தக்கது. நிலையாமைத் தத்துவம் கேட்பதற்கு வெறுப்பைத் தருவதாயினும் –“ மலர்கள் பேசுமா” – (25) என்ற இவரது கவிதையைப் படிக்கும்போது வாழ்க்கை நிலையாமையின் உண்மை புரியும்! உலக இளைஞர் தினம் பற்றிய இவரது நீண்ட கவிதை இளைஞர்கள் படித்துச்சுவைக்கவேண்டிய ஒன்றாகும்.
தாயகத்தை – உறவுகளை – தமிழ்மொழியை – பண்பாட்டை விட்டகன்று நாட்டில் பல்லினப் பண்பாட்டுச் சூழலில் வாழும் எம்மினத்தில் ஒரு சாரார் தாயக உணர்வோடும் , மொழிப்பற்றோடும் ஆக்க இலக்கியங்களைப் படைக்கும்போது அவர்களைப்பாராட்டி வாழ்த்த வேண்டும் என்ற உணர்வு ஏற்படுகிறது. இவ்வாழ்த்து செனிற்ரா மரியாம்பிள்ளைக்கும் உரியதாகிறது. எழுத்தாற்றல் மிளிரும் இக்கவிஞர் மேலும் தொடர்ந்து பல ஆக்கங்களை புகலிடத்தளத்திற்கு வழங்க வேண்டும் என்பதே எமது விருப்பமாகும்.

இ . பாலசுந்தரம் – ரொறன்ரோ – 10.03.2014

Edited by வல்வை சகாறா

  • Replies 54
  • Views 6.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

காவலூர் கண்மணி அக்காவுக்கு நல்வாழ்த்துக்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

கண்மணியக்காவுக்கு எனது நல்வாழ்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கண்மணியக்காவுக்கு நல்வாழ்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

காவலூர் கண்மணியை வாழ்த்துவதில், இரு மடங்கு மகிழ்ச்சி எனக்கு!

வாழ்த்துக்கள்!

  • தொடங்கியவர்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

congratulations

  • கருத்துக்கள உறவுகள்

கண்மணி அக்காவை வாழ்த்த‌ அக்காவின் எழுத்துக்களின் பிரியமான வாசகனாக‌ இரட்டிப்பு மகிழ்ச்சி...யாழுடனான என் ஆரம்பகாலங்கள் கண்மணி அக்காவின் கவிதைகளின் வாசகனாக அமைந்தவை.... மனம் நிறைந்த வாழ்த்துக்கள் அக்கா... புத்தகங்களைப்பெறுவதற்கான வழியை சொல்லுங்கள்...

Edited by சுபேஸ்

பாராட்டுகள்!

சந்தோசமாக இருக்கின்றது.... வாழ்த்துக்கள் கண்மணி அக்கா.

இதனை பகிர்ந்த சகாறாவுக்கும் நன்றி!

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சகோதரி...!

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் கண்மணி அக்கா.

இதனை பகிர்ந்த சகாறாவுக்கும் நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

காவலூர் பெற்றெடுத்த கண்மணி அக்காவுக்கு வாழ்த்துக்கள்...மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது...அதே போல சுமோவும் தனது நூலினை விரைவில் வெளியீட வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

காவலூர் கண்மணி அக்காவுக்கு நல்வாழ்த்துக்கள்..!

யாழ்கள உறவு ஒருவரின், நூல்கள்.... அச்சில் வருவது, எமக்கும் பெருமையே....
இதனை எம்முடன், பகிர்ந்து கொண்ட வல்வை சகாறாவிற்கும் நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

காவலூர் கண்மணி அக்காவுக்கு நல்வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

காவலூர் கண்மணிக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள். வேலை  நிமித்தம் அதிகம் யாழில்காணப்படவில்லை என்றாலும் .வெற்றிகரமாக உங்கள் கவிதைப்பிரசுரம்  அமையட்டும்.  பகிர்வுக்கு நன்றி.

Edited by நிலாமதி

வாழ்த்துக்கள் .எமது எழுத்தாளர்களை எப்போதும் ஊக்கிவிக்கவேண்டும் .

காவலூர் கண்மணிக்கு நல்வாழ்த்துக்கள்!!

  • கருத்துக்கள உறவுகள்

நல்வாழ்த்துக்கள்!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எமது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். கனடாவில் பெரிய மண்டபம் எடுத்து புத்தக வெளியீடு என பொருட்செலவு செய்யாது எளிமையாக வன்னியில் வாழும் சிறார்கள் மத்தியில் இந் நூல்களை வெளியிட்டது அறிந்து மீண்டும் எமது வாழ்த்துக்களும் நன்றிகளும் உரித்தாகுக. உங்கள பயணம் இனிதே அமைய இறைவனை வேண்டுகிறோம்

காவலூர் கண்மணி அக்காவுக்கு நல்வாழ்த்துக்கள்

  • 2 weeks later...

வாழ்த்துக்கள் அக்கா!!!!

Edited by தமிழினி

  • கருத்துக்கள உறவுகள்

என் நீண்ட நாள் கனவு மெய்பட்ட இனிய பொழுதில் என்னை வாழ்த்திய இசைக்கலைஞன், யாயினி, சாந்தி, புங்கையூரன், புலிகேசி, சுபேஸ், சோழியன், நிழலி, சுவி, விசுகு, ரதி, தமிழ்சிறி, நந்தன், நிலாமதி, அர்யுன், அலைமகள், புத்தன், கரன், தமிழினி மற்றும் அனைத்து யாழ்கள உறவுகளுக்கும் விசேடமாக இந்த நிகழ்வை இங்கு பதிந்த சகாறாவிற்கும் என் மனமார்ந்த நன்றிகள். எனது நூல் அறிமுக விழா மல்லாவி மத்திய கல்லுரி மகளிர் விடுதி பிரதான மண்டபத்தில் இடம் பெற்றது. மல்லாவி துணுக்காய் பிரதேச சபை பகுதிகளில் கடமை புரியும் அதிபர்கள், வைத்திய அதிகாரி, பிரதேச செயலர், ஆசிரியர்கள், நல்லாயன் கன்னியர்கள், விடுதி மாணவிகள், மற்றும் பலரும் கலந்து சிறப்பித்தனர். புலம் பெயர் மண்ணிலிருந்து தமது பிரதேசத்தில் இந் நூல் அறிமுக விழா நடைபெற்றதையிட்டு அனைவரும் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக கூறினர். இந் நிகழ்வு மிகுந்த மனநிறைவுடன் நடந்தேறியது. என்னை ஊக்குவித்த வாழ்த்திய அனைத்து; உறவுகளுக்கும் நன்றிகள். இத்துடன் இணைத்திருக்கும் சில நிழற்படங்கள் நூல் அறிமுக விழாவில் எடுக்கப்பட்டவை.

நன்றி!!!

1_zpsea01a453.jpg

2_zps749ed384.jpg

3_zpsce04a3a3.jpg

4_zpscb5cb068.jpg4_zpscb5cb068.jpg5_zps4c74b80b.jpg6_zpsde5a3b1b.jpg7_zpsd8defd98.jpg8_zps81392014.jpg9_zps497c1704.jpg10_zps1700594c.jpg11_zps701008e6.jpg12_zps7c722d15.jpg

Edited by Kavallur Kanmani

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நூல் அறிமுகம் பற்றிய மேலதிக விப்ரங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் காவலூர் கண்மணி. நான் உங்கள் நூல் பற்றிய தகவல்களை இணைக்கும்போது எவ்விடத்தில் அதனை வெளியீடு செய்கிறீர்கள் என்று துல்லியமாக அறிந்திருக்கவில்லை ஆதலால் முழுமையான வெளியீட்டுத் தகவலை இணைக்கமுடியாதிருந்தது. இருப்பினும் இப்போது உங்களுடைய நூல் வெளியீட்டின் காட்சித் தொகுப்பினையும் இணைத்துள்ளீர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறது. :)

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு மிக்க நன்றி..யாழ் கழ உறவுகள் என்ற வகையில் ஒவ்வொருவரத்தரது முன்னேற்றதிலும் என்னால் முடிந்தளவுக்கு வாழ்த்துவதிலயாவது ஒத்துளைச்சு நிக்கிறனான்.

எனக்கும் உங்கள் புத்தகங்கள் வேணுமே என்ன செய்யலாம்..எப்போ கனடாவில் வெளியீடு செய்து வைப்பீர்கள்.உங்கள் தொடர்புகள் கிடைக்கப் பெற்றால் கண்டிப்பாக  நூலைப் பெறும் ஆவலில் இருக்கிறன்  கண்மணியக்கா.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.