Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிறுமி உட்பட மூன்று பெண்கள் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு! கிளிநொச்சியில் சம்பவம்

Featured Replies

கிளிநொச்சி கிருஷ்ணபுரம் பகுதியில் உள்ள குளம் ஒன்றில் குளிக்கச் சென்ற மூன்று பெண்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இச்சம்பவம் இன்று சனிக்கிழமை நண்பகல் 3 மணியளவில் கிருஷ்ணபுரம் பகுதியில் உள்ள கந்தன்குளத்தில் இடம்பெற்றது. கிருஷ்ணபுரத்தைச் சேர்ந்த ச.தாட்சாயினி (வயது 17), இவரது சகோதரியான ச.நவதாரணி (வயது 11), விநாயகபுரத்தைச் சேர்ந்த எஸ்.நிசாந்தினி (வயது 19) ஆகியோரே குளத்தில் உள்ள சகதியில் சிக்கி உயிரிழந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டது. இவர்களது சடலங்கள் மீட்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வரட்சி காரணமாக இப்பகுதி வீடுகளிலுள்ள கிணற்று நீர் வற்றியதாலேயே இவர்கள் குளத்தில் குளிக்கச்சென்று உயிரிழந்த பரிதாபம் நிகழ்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
 
 
 

கிளிநொச்சி கிருஷ்ணபுரம் குளத்தில் குளிக்கச் சென்ற மூன்று பாடசாலை மாணவிகளான சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் இன்று சனிக்கிழமை நண்பகல் 3.40 மணியளவில் கிருஷ்ணபுரம் பகுதியில் உள்ள கந்தன்குளத்தில் இடம்பெற்றுள்ளது.
 

die_1.png

கிருஷ்ணபுரத்தைச் சேர்ந்த ச.தாட்சாயினி (வயது 17), இவரது சகோதரியான ச.நவதாரணி (வயது 11), விநாயகபுரத்தைச் சேர்ந்த எஸ்.நிசாந்தினி (வயது 17) ஆகியோரே குளித்துக்கொண்டிருந்த வேளை குளத்தில் உள்ள சகதியில் சிக்கி உயிரிழநதுள்ளனர் என தெரியவருகின்றது. இவர்களது சடலங்கள் மீட்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
 

die_2.png

குளத்தினில் மூழ்கியவர்களை மீட்க உதவி கோரி காவல்துறைக்கு தகவல் வழங்கப்பட்டு சுமார் இரு மணி நேரத்தின் பின்னரே அவர்கள் அங்கு வந்து சேர்ந்ததாக தெரியவருகின்றது.
 

die_3.png

வன்னியினில் நீடித்து வரும் வரட்சி காரணமாக இப்பகுதி வீடுகளிலுள்ள கிணற்று நீர் வற்றியதாலேயே இவர்கள் குளத்தில் குளிக்கச்சென்ற வேளையிலேயே மரணமாகியுள்ளனர்.
 

die_4.png

நேற்று முன்தினம் மன்னாரிலும் இவ்வாறு இரு சிறு குழந்தைகள் குளத்தினில் மூழ்கி உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

  • கருத்துக்கள உறவுகள்

மரணமும், உயிர் வேதனையும்.... தமிழனை துரத்திக் கொண்டே... வருகின்றது.
 

  • கருத்துக்கள உறவுகள்

அந்த சிறுமிகளுகக்கு அஞ்சலிகளும் அவர்கள் குடும்பத்துக்கு அனுதாபங்களும்.

  • கருத்துக்கள உறவுகள்

போர்,சுனாமி போன்றன தமிழ் மக்களை காவு கொண்டது பத்தாது என்று வரட்சியும் தமிழ்ரை காவு கொள்ளத் தொடங்கிட்டுது.நம் முன்னோர் அந்தளவிற்கு பாவம் செய்திருக்கினம்

  • கருத்துக்கள உறவுகள்

அந்த சிறுமிகளுகக்கு அஞ்சலிகளும் அவர்கள் குடும்பத்துக்கு அனுதாபங்களும்.

எல்லா பக்கமும் கடலால் சூழப்பட்ட ஒரு தீவில் நீச்சல் பாடசாலையில் ஒரு கட்டாய பாடமாக இல்லாதது ஏன்?

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா பக்கமும் கடலால் சூழப்பட்ட ஒரு தீவில் நீச்சல் பாடசாலையில் ஒரு கட்டாய பாடமாக இல்லாதது ஏன்?

நிச்சயமாக நீச்சல் அனைத்து மாணவர்களுக்கும் பயிற்றப்படவேண்டும்!

 

மாணவிகளின் மரணங்கள், தவிர்த்திருக்கப்படக் கூடியவை!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த சிறுமிகளின் பெற்றோருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

 

ஒரே நேரத்தில் மூன்று பேரும் சகதியில் சிக்கி மரணம்.......... மர்மமாகவே இருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சிறுமிகளின் பெற்றோருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

 

ஒரே நேரத்தில் மூன்று பேரும் சகதியில் சிக்கி மரணம்.......... மர்மமாகவே இருக்கின்றது.

எனக்கும் முதலில் அப்படித்தான் தோன்றியது ...........
ஆனால் முதலில் சிறுமி அகபட்டு இருந்தால் ...... மற்ற இருவரும் காப்பாற்ற முனைதிருப்பார்கள். அப்படி இது நடந்திருக்கும்.
அல்லி  தாமரை இருக்கும் குளம் என்றால் காலை வைக்காது விடுவதே நல்லம். கீழே இருக்கும் சேற்றின் ஆழம் காலை விடும் மட்டும் தெரியாது. காலை குத்தி மேல் எழும்பவும் முடியாது.
 
இப்படி அநியாமாக ....... இத்தனை  கொடிய போரில் தப்பி இப்படி இறந்துவிட்டார்கள். 
  • கருத்துக்கள உறவுகள்

போர்,சுனாமி போன்றன தமிழ் மக்களை காவு கொண்டது பத்தாது என்று வரட்சியும் தமிழ்ரை காவு கொள்ளத் தொடங்கிட்டுது.நம் முன்னோர் அந்தளவிற்கு பாவம் செய்திருக்கினம்

 

இவற்றில்  சில கேள்விகள் உண்டு

 

அண்மையில் ஒருவர் மேடையில் பேசினார்

தீவுப்பகுதி  மக்கள்

பெரும்  போரிலோ

இயற்கை அழிவுகளிலோ (சுனாமியிலோ)

மாட்டிக்கொண்டது கிடையாது

இது அவர்களது முன்னோர்கள் செய்த புண்ணியம் என்று...

 

 

இப்படியான பேச்சுக்கள்

நம்பிக்கைகள்மீது எனக்கு உடன்பாடில்லை..

மரத்தால் விழுந்த மக்களை

நாமும் ஏறி  மிதிக்கணுமா???

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சியில் குடிக்க நீர் இல்லாத அளவிற்கு வரட்சியாம்.குளிப்பதற்காக தாமரைப் பூக்கள் உள்ள சேறு குளத்தில் கால் வைத்தவர்களே மூழ்கி மரணமாகி உள்ளனர்

இவற்றில் சில கேள்விகள் உண்டு

அண்மையில் ஒருவர் மேடையில் பேசினார்

தீவுப்பகுதி மக்கள்

பெரும் போரிலோ

இயற்கை அழிவுகளிலோ (சுனாமியிலோ)

மாட்டிக்கொண்டது கிடையாது

இது அவர்களது முன்னோர்கள் செய்த புண்ணியம் என்று...

இப்படியான பேச்சுக்கள்

நம்பிக்கைகள்மீது எனக்கு உடன்பாடில்லை..

மரத்தால் விழுந்த மக்களை

நாமும் ஏறி மிதிக்கணுமா???

ஆம் அண்ணா அவர்கள் செய்த பாவம் தான்... ஏன் கிளிநொச்சி,முல்லைத்தீவு,அம்பாறை மக்களே திரும்ப,திரும்ப பாதிக்கப்படுகின்றார்கள்?...சிங்கள மக்களோ அல்லது யாழ்,மட்டு,திருகோணமலை மக்களோ பெரும்பாலும் பாதிப்படையவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

2 மணி நேரம் தாமதித்து ஒரு மீட்புப் பணி செய்யும் நிலை.

 

இதே மேற்குநாடுகளில் என்றால்.. உடனடியாக மீட்புப்படை உலங்குவானூர்திகள்.. படகுகள் மூலம் மீட்பு நடத்தப்பட்டிருக்கும்.

 

எமது மண்ணை நாமே ஆளும் நிலை இன்மையால் தான் இப்படியான மலிவான கவனக் குறைவான மரணங்கள் நிகழ்கின்றன.

 

எமது மண்ணில் எமது மக்களை பாதுகாப்பாக நடந்து கொள்ள எச்சரிக்கை விடவோ.. தடுக்கவோ யாரும் இல்லை. அவர்களுக்கு ஒரு ஆபத்து என்றால் அக்கறையோடு செயற்படும் வளங்கள் மனித வலு இல்லை. இதனால் தாம் எம் மக்கள் இப்படியான மற்றும் தற்கொலைகள் மூலமான சாவுகளுக்கு இலக்காகி வருகின்றனர்.

 

எதிரிகளுக்கு வால்பிடிக்க உள்ள கூட்டம் அளவிற்கு கூட.. எமது மக்கள் மீது தன்னார்வம் கொண்டு செயற்பட ஆக்களில்லை..! அதுதான் இந்த அவலங்களுக்குக் காரணமே அன்றி.. பாவம் பணியாரம் என்று எதுவும் இல்லை..! இன்னும் மேற்குலகில் வசிக்கும் எம்மவர்கள் கூட முழு மூடத்தனங்களோடு.. வாழ்கின்றமை தான் எம்மினத்தின் சாபக்கேடு.  :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான...... குளங்களுக்கு அருகில், 
இனியாவது.....
"சேறு உள்ள குளம், உள்ளே... கால் வைப்பது உயிருக்கு ஆபத்தானது."
என்ற எச்சரிக்கை பலகை ஒன்றை, அங்குள்ள சமூக ஆர்வலர்கள்,  நாட்டி வைக்க முன் வரவேண்டும்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

உரிய நேரத்தில் உதவி கிடைக்காதும் அந்த மக்கள் செய்த பாவம் தான்.தமிழனாய்ப் பிறந்த பாவம்

இப்படியான...... குளங்களுக்கு அருகில், 

இனியாவது.....

"சேறு உள்ள குளம், உள்ளே... கால் வைப்பது உயிருக்கு ஆபத்தானது."

என்ற எச்சரிக்கை பலகை ஒன்றை, அங்குள்ள சமூக ஆர்வலர்கள்,நாட்டி வைக்க முன் வரவேண்டும்.

தமிழ்சிறி சேறு,தாமரைக்குளம் எனத் தெரிஞ்சு தான் காலை வைச்சிருப்பினம்.தண்ணீ இல்லா விட்டால் என்ன செய்கிறது

வன்னியிலையும் யாழ்ப்பாணத்திலையும் மழை இல்லை... ஆனால் தெற்கிலை, அடை மழை...  

 

ஒரு வேளை இதுவும் திட்டமிட இன அழிப்பின் ஒரு அங்கமோ என்னவோ...   

 

 weather modification technology இல்  சீனர்களின் கையே உயர்ந்து இருக்கிறது...   சீனாவின் ஒலிம்பிக் ஆரம்ப நாள் போட்டிகளின் போது கருக்கொண்ட  மழையை  திசை மாற்றியது பற்றி மேற்கு உலக ஊடகங்கள் வாய் பிளந்து எழுதி கொண்டன...

 

அதே சமயம் சீன நிறுவனங்களே வடக்கில் வீதி புனரமைப்பு முதல் பல வேலைதிட்டங்களை செயற்படுத்துகின்றன...   மழை அவர்களின் வேலையை பாதிக்கமல் இருக்க எடுக்கும் நடவடிக்கையாக கூட இருக்கலாம்... 

 

இப்ப நான் சொல்ல வந்ததை சொல்லி விடுகிறேன்...   வன்னியில் இருக்கும் எனது உறவினர் பலரிடம் இருந்து கேட்டது...  மழை மேகம் கருக்கட்டும் போது எல்லாம் ஒரு வெள்ளை நிற விமானம் பறப்பதாகவும் அதோடு மேகங்களும் விலகி வேறு திசையில் போய் விடுவதாகவும் சொல்கிறார்கள்.. 

 

இது நடப்பதுக்கு சாத்தியம் இல்லை எண்டு சொல்பவர்களுக்கு  ஒரு  கட்டுரையையும் இணைத்து விடுகிறேன்... 

 

How China Stopped the Rain for the Beijing Olympics

http://bkcreative.hubpages.com/hub/China-Stopped-the-Rain-for-the-Beijing-Olympics

 

 

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.

தல சொல்ற விடயம் science fiction போலிருந்தாலும் அதில் விடயமிருக்கலாம்.

வேண்டுமென்றே வரட்சியாக்கி, தமிழரை நகரங்களுக்கு இடம்பெயர்த்து, பின் கைவிடப்பட்ட காணிகளை குடியேற்ற பயன் படுத்தலாம்.

ஆனால் மொன்சூன் போன்ற பாரிய காலநிலையை ஒர் வெள்ளை பிளேனை கொண்டு மாற்றுவதும் சாத்தியமாக தெரியவில்லை.

இது வெறும் எல் நீனோ பாதிப்பாகவும் இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.

தல சொல்ற விடயம் science fiction போலிருந்தாலும் அதில் விடயமிருக்கலாம்.

வேண்டுமென்றே வரட்சியாக்கி, தமிழரை நகரங்களுக்கு இடம்பெயர்த்து, பின் கைவிடப்பட்ட காணிகளை குடியேற்ற பயன் படுத்தலாம்.

ஆனால் மொன்சூன் போன்ற பாரிய காலநிலையை ஒர் வெள்ளை பிளேனை கொண்டு மாற்றுவதும் சாத்தியமாக தெரியவில்லை.

இது வெறும் எல் நீனோ பாதிப்பாகவும் இருக்கலாம்.

மழையை வரவழைக்க கட்டார் குவைத் போன்ற நாடுகள் ஒரு மொய்சரைசறை பயன்படுத்துவதாகவும்.
அதனால் பூமியின் இயற்கை சமநிலை குழம்பி இருப்பதாகவும். global warming காரர்கள் ஒரு குற்றசாட்டை வைத்திருக்கிறார்கள்.
 
குறித்த இடத்தில் மழை பெய்யாது தடுக்கலாம் என்றுதான் நான் நினைக்கிறேன்.
பெரிய storm வருபோது வேண்டுமானால் முடியாது போகலாம்.

ஆழ்ந்த இரங்கல்கள்.

தல சொல்ற விடயம் science fiction போலிருந்தாலும் அதில் விடயமிருக்கலாம்.

வேண்டுமென்றே வரட்சியாக்கி, தமிழரை நகரங்களுக்கு இடம்பெயர்த்து, பின் கைவிடப்பட்ட காணிகளை குடியேற்ற பயன் படுத்தலாம்.

ஆனால் மொன்சூன் போன்ற பாரிய காலநிலையை ஒர் வெள்ளை பிளேனை கொண்டு மாற்றுவதும் சாத்தியமாக தெரியவில்லை.

இது வெறும் எல் நீனோ பாதிப்பாகவும் இருக்கலாம்.

 

மழையை முற்றாக பெய்யாது இலகுவாக  கலைந்து போக வைக்கலாம் எண்று நானும் நினைக்கவில்லை...   ஆனால்  பெய்ய இருக்கும் மழையை திசை மாற்றி வேறு இடத்தில்  பெய்ய வைக்க முடியும் எண்றே நினைக்கிறேன்... !!!   

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா பக்கமும் கடலால் சூழப்பட்ட ஒரு தீவில் நீச்சல் பாடசாலையில் ஒரு கட்டாய பாடமாக இல்லாதது ஏன்?

இளம்தளிர்களை இழந்து துயருள்வாடும் உறவுகளோடு ஆழ்ந்த இரங்கலைப் பகிர்ந்து கொள்கின்றேன். 
 
இளைய தலைமுறையினரின் இழப்பு என்பது ஈடுசெய்யமுடியாதது. கிளிநொச்சிப் பகுதியிலே உள்ள சிறியகுளங்களாகக் கருதப்படும் குளங்கள் தூர்வாப்படுவதோ பராமரிப்புச் செய்வதோ இல்லாத குளங்களாகும். அத்தோடு அவை அல்லிகளால் நிறைந்திருக்கும். குளிப்பதற்குப் பாதுகாப்பனதும் அல்ல. இதுபோன்ற குளங்களை இனங்கண்டு பராமரிப்புக்கு உட்படுத்துதல், பாதுகாப்பாகக் குளிப்பதற்கான பகுதியை உருவாக்கிவிடுதல், எச்சரிக்கை அறிவிப்புக்களை வைத்தல் போன்றவற்றை கரைச்சி பிரதேசசபை, கிளிநொச்சி நகரசபை, கிருஸ்ணபுர கிராம அபிவிருத்திச் சங்கம் போன்ற நிர்வாகங்கள் விழிப்புணர்வுச் செயற்பாடுகளைச் செய்து இனிமேலும் இதுபோன்ற துயரங்கள் நிகழாதவாறு தடுக்க முன்வரவேண்டும்.அதேவேளை பசி கரணியமாகத் தாமரைக்கிழங்கு எடுக்கச் சென்று இதுபோன்ற  துயர்மரணங்கள் நிகழ்ந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.  
 
பாடசாலைகளில் நீச்சலைக் கற்பிக்கும் செயற்பாடுகளை உருவாக்குதல் வேண்டும். இதனூடாகவும் இதுபோன்ற துர்மரணங்களைத் தவிர்க்கலாம். இதுதொடர்பாக வடமாகாண கல்வி மற்றும் விளைiயாட்டுத்துறையினர் ஒருங்கிணந்து செயற்படுவது பயனுடையதாக இருக்கும். 
  • கருத்துக்கள உறவுகள்

article-0-0CA0EB73000005DC-441_634x369.j

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

மக்களினதும் அரச அதிகாரிகளினதும் அசட்டையால் வந்த வினை.
மக்களின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்யமுடியாத கையாலாகத்தனமான

அரச அதிகாரிகள் தங்கள் பிள்ளைகளுக்கு இப்படி ஒரு நிகழ்வு வந்தாலும் திருந்துவார்களோ தெரியவில்லை.

ஆழ்ந்த இரங்கல்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

தாங்கமுடியா இழப்புக்கள் இவை .ஆழ்ந்த அனுதாபங்கள் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.