Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்துக்குத் திரும்பிச் செல்லவிடாமல் உங்களைத் தடுக்கும் விடயங்கள் எவை?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சில நாட்களாக என் மனதில் உறுத்தலாகவே உள்ளது. ஒரு நாடு மொழி, காலச்சாரம் என்று போராடி விட்டு, அதை எதையுமே காப்பாற்றாத முடியாத நாட்டில் பணத்தையும், சுகவாழ்க்கையையும் மையப்படுத்தி வாழ்கின்ற வாக்கை சரியா என்று. என்னுமொரு 10 வருட காலப்பகுதிக்குள் திரும்பிச் சென்று வாழவே விரும்புகின்றேன். இது நடக்குமா என்றால்... நடக்க வேண்டும் என்பதே அவா. ஆனால் எம்முள் பலருக்கு அது விருப்பமில்லாமல் இருக்கலாம். ஆனாலும் வெளிநாட்டு வாழ்க்கை என்று வந்த பலரில் அவதானித்த ஒரு விடயம். ஏதோ அங்குள்ள வாழ்க்கையை விடக் கூடச் சம்பாதிக்கின்றார்கள். ஆனால் செய்கின்ற வேலை என்பது....அடுத்த தலைமுறை ஏதோ படித்து வேலை பார்க்கும் நிலைக்கு வந்தாலும் அது எச் சமயத்திலும் மொழி, இனம் பற்றிக் கவலைப்படவே போவதில்லை. நாங்கள் காட்டிய குடும்ப, சகோதர பாசம் என்பது அந்தளவு அவர்களுக்கு இருக்கவே போவதில்லை... அப்போ என்ன மண்ணுக்குப் போராடி அவர்கள் உயிர் துறந்தார்கள்... ஆனால் இந்த வாதங்கள் ஒரு புறம் இருக்க, மறுபக்கம் தாயகத்தில் சென்று வாழ்வதற்கு எமக்கு என்ன தேவை.. இதே போன்றதொரு பொருளாதாரச் சூழல் உருவாகினால் சென்று வாழ முடியுமா? அங்கே பன்னாட்டு நிறுவனங்களின் வரவினால் நாம் திரும்பிச் சென்று வசிக்க முடியுமா?

சமீபத்தில் பிலிப்பைன்சுக்கு குறித்தளவு பணத்தைக் கொடுத்து, எம்மக்களைக் குடியேற்றுவது பற்றி அவுஸ்ரேலியா சிந்திக்கின்றது எனும்போது அப்பணத்தை வைத்து தொழில்வாய்ப்புக்களை எம் மண்ணில் ஏற்படுத்தினால், பேசாமல் அங்கே வளமான எதிர்காலம் கிடைக்கும்.. அப்படிவாய்ப்புக்களைத் திருப்புதல் பற்றிச் சிந்திக்கலாம்..

உண்மையில் இந்த வெளிநாட்டு வாழ்க்கை என்பது வெறும் பகட்டுவாழ்க்கை. கோப்பை அடித்துக் கொண்டு வெளியில் பிஎம்டபியு, பென்ஸ் என்றோ, வாழ்ந்து சாவதை விட ஊரில் உருப்படியான வாழ்க்கை எம்மால் வாழ முடியாதா? அஇங்கே நிலப் பறிப்புpனைத் தடுக்க வக்கிலாமல் இங்கே 5 வருடங்களாக ஒரு கல்லினைக் கூடச் சிறிலங்கா அரசு மீது எறியாத போராட்டத்தை நடத்துவதாகப் பாசாங்கு செய்வதில் என்ன பலன்?

10 வருடங்களில் தாயகம் சென்று வாழுதல் பற்றிச் சிந்திப்பதும் முயற்சிப்பதையும் இன்றே ஆராம்பிக்கலாம் என நினைக்கின்றேன். அப்படிப் போகவிடாமல் உங்களத் தடுக்கும் காரணிகள், தீர்வுகள் பற்றி ஆராய்வோம்... மற்று;படி விருப்பமில்லாதவரகள் போலியாகத் தேசியம் பற்றிப் பேசிக் கொண்டு பொழுது போக்கிக் கொள்ளலாம்...

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் என்னதான் குளிர், வேலைப்பளு, நேரமின்மை என்று இருந்தாலும் இங்கே வாழ முடிகிறது. காரணம் நாங்கள் நியாயமாக நடந்துகொண்டால் நியாயமான சுதந்திரத்தை அனுபவிக்கலாம். அது தாய்நாட்டில் கிடைக்குமாக இருந்தால் பிரச்சினையில்லை. இங்கே வந்தவர்கள் திரும்பிப் போக பின்னிற்பதற்கு இது ஒரு காரணம். மேலும் பிள்ளைகள் வளர்ந்துவிட்டால், எமது தாயகம் அவர்களுக்கு ஒரு வேற்று நாடு. சிலர் விதிவிலக்காக இருக்கலாம்.

புலம்பெயர்ந்தவர்களைப் பொறுத்தவரையில், தாயகத்திற்குச் சென்று இன்னும் மரியாதையுடன் வாழ விருப்பம் இருக்கும். என்னத்தைச் சொன்னாலும் புலம்பெயர் தேசங்களில் நாங்கள் வேற்று நாட்டு வாசிகள் என்கிற எண்ணம் விட்டுப்போகாது.

  • கருத்துக்கள உறவுகள்

தூயவன் உங்களுக்கு அந்தக்கால மலேசிய,சிங்கப்பூர் பென்சனியர்களைப் பற்றித் தெரியாது போல இருக்கின்றது.அவர்கள் நாட்டில் எந்தப்பிரச்சனையும் இல்லாத காலத்தில் அங்கே சென்று அதுவும் உழைப்பிற்காகச் சென்று வாழ்ந்தவர்கள். அவர்களில் எத்தனைபேர் நாடு திரும்பியிருந்தார்கள் என்பது யாருக்கும் தெரியாது.

ஆனால் இந்தக்காலச் சூழ் நிலையில் அங்கு வாழம் மக்களுக்கே பல நெருக்கடிகள் இருக்கும் நிலையில் புலம்பெயர்ந்தவர்கள் எவ்வாறு நாடு திரும்ப முடியும்.

ராணுவ நெருக்கடி
ஒட்டுக்குழுக்களின் அட்டகாசம்
வெள்ளை வான் கடத்தல்
சிங்களப் புலனாய்வாளர்களின் தொல்லை
இப்படி இருக்கும் சூழ் நிலை எல்லாம் வெறும் சப்பைக் காரணங்கள் என்று கூறுகின்றீர்களா?
 
நாங்கள் ஊர் செல்வோம் ஆனால் அங்கு வாழ மாட்டோம். விடுமுறை, உறவினர்களின் கொண்டாட்டங்கள், கோயில்த்திருவிழாக்கள் , ஊர்ச்சங்கங்களின் கூட்டங்களில் பிரதம விருந்தினர்கள் என்ற வகையில் அங்கு என்று திரும்பி வருவோம். மற்றும்படி மேற்குலகின் வாழ்க்கையை ரசித்தவர்கள் யாரும் ஊரில் சென்று வாழத் தயங்குவார்கள். கட்டாயமாகப் பிடித்து அனுப்பினால் வேறு வழியில்லாமல் அங்கு வாழ்க்கையைத் தொடரத்தானே வேண்டும். :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ராணுவ நெருக்கடி, ஒட்டுக்குழுக்கள் என்பவர்களின் பாதிப்புக்கள் இல்லாவிடின் போய் வாழ முடியுமா? அப்படி எல்லோரும் பாதிக்கப்பட்டா ஓடிவந்தார்கள். வெளியாட்களுக்கு அப்படிச் சொல்வது பொருத்தமாக இருக்கலாம். ஆனால் நமக்குள் அது பொய் என்று தெரியும் தானே. இங்கே ஒருபோதும் தமிழீழ விடுதலைப் போராட்டம் பற்றி நான் கதைக்கவில்லை. அந்தத் தியாகத்தைப் பற்றிக் கதைக்கப் போவதில்லை. ஆனால் ஒன்றுமே இல்லாமல் வாழ்கின்ற வாழ்க்கையை விட, இருப்பதைக் காப்பாற்ற என்ன செய்யலாம் என்பது தொடர்பாகவே என் கேள்வி...

இப்படியே எங்களின் மண்ணைச் சிங்கள ஆக்கிரமிப்புக்கு அனுமதிக்கப் போகின்றோமா? hங்கள் புலம் பெயரப் பெயர அந்த மண்ணை அவன் முழுமையாக ஆக்கிரமிப்பான். இன்று கூட வடக்குக் கிழக்கின் பெரும்பகுதியை முதியவர்களே காப்பாற்றி வைத்திருக்கின்றனர். அவர்களும் மறைந்து போனால், அதைக் காப்பாற்ற எவருமே இல்லை. அப்படி மண்ணைக் காப்பாற்றத் தயாராக நாங்கள் ஏன் அதன் விடுதலை பற்றிக் கதைக்க வேண்டும். சும்மா ஏமாற்று வேலை தானே அது?10 வருடம் என்பது என் கணக்கு.. அதற்கு மேலாகவும் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் போவதற்கும், அங்கு வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்துவதும் எம் கையில் உள்ளது. முதலில் பொருளாதார, வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்தும் விடயங்களை அங்கு கொண்டு செல்வதில் இருந்து பல விடயங்களில் கவனம் செலுத்துதல் பற்றி ஆரம்பநிலைகளிலாவது சிந்திக்கத் தயாராக வேண்டும். உண்மையில் இதே போன்றதொரு பொருளாதார வசதி. தொழிற்சாலைகள், நிறுவனங்கள் கிடைக்கும்போது நாளைக்கு அடுத்த தலைமுறையும் அங்கே வசிக்கத் தயாராகும்...

இசைக்கலைஞன் சொன்ன நியாயமான சுதந்திரம் என்றால் என்ன விடயம்?

  • கருத்துக்கள உறவுகள்

ராணுவ நெருக்கடி, ஒட்டுக்குழுக்கள் என்பவர்களின் பாதிப்புக்கள் இல்லாவிடின் போய் வாழ முடியுமா? அப்படி எல்லோரும் பாதிக்கப்பட்டா ஓடிவந்தார்கள். வெளியாட்களுக்கு அப்படிச் சொல்வது பொருத்தமாக இருக்கலாம். ஆனால் நமக்குள் அது பொய் என்று தெரியும் தானே. இங்கே ஒருபோதும் தமிழீழ விடுதலைப் போராட்டம் பற்றி நான் கதைக்கவில்லை. அந்தத் தியாகத்தைப் பற்றிக் கதைக்கப் போவதில்லை. ஆனால் ஒன்றுமே இல்லாமல் வாழ்கின்ற வாழ்க்கையை விட, இருப்பதைக் காப்பாற்ற என்ன செய்யலாம் என்பது தொடர்பாகவே என் கேள்வி...

இப்படியே எங்களின் மண்ணைச் சிங்கள ஆக்கிரமிப்புக்கு அனுமதிக்கப் போகின்றோமா? hங்கள் புலம் பெயரப் பெயர அந்த மண்ணை அவன் முழுமையாக ஆக்கிரமிப்பான். இன்று கூட வடக்குக் கிழக்கின் பெரும்பகுதியை முதியவர்களே காப்பாற்றி வைத்திருக்கின்றனர். அவர்களும் மறைந்து போனால், அதைக் காப்பாற்ற எவருமே இல்லை. அப்படி மண்ணைக் காப்பாற்றத் தயாராக நாங்கள் ஏன் அதன் விடுதலை பற்றிக் கதைக்க வேண்டும். சும்மா ஏமாற்று வேலை தானே அது?

 

புலம்பெயர்ந்த ஒவ்வொரு தமிழனின் மீழ் திரும்பும் நிலைமை  இன்றைய நிலையில் நாட்டு நிலைமையிலேயே தங்கியுள்ளது.

பத்து வருடத்தின் பின்னர் எப்படி இருக்கும் என்பதை இப்போதே அறுதியாகக் கூறமுடியாது. வாழும்  சூழல் அங்கு காணப்பட்டால் ஏன் அங்கு சென்று வாழ முடியாது. ஆனால் வாழும் சூழல் என்பதற்கான அர்த்தம் என்ன என்பதையும் விளங்கிக்கொள்ளவேண்டும்.

எல்லோரும் நாட்டு நிலைமையைக் காட்டித்தான் வந்தோம்

வந்தவர்களில் அவர்களுக்குப் பிரச்சனை இல்லை இவர்களுக்குப் பிரச்சனை இல்லை என்பது ஏற்க முடியாது.

இலங்கையின் தமிழ்ப்பிரதேசங்களில் தமிழர்கள் வாழ்வதற்கான சுமுகமான நிலை இன்று இல்லை என்பதே  எல்லோருடைய கருத்தும்.

அப்படியான சூழ் நிலையில் யாரும் அங்கு சென்று தொடர்ச்சியான வாழ்க்கையை மேற்கொள்ள முயற்சிக்க மாட்டார்கள்.

தலைமறைவாக விடுமுறைக்குச் சென்று திரும்புபவர்கள் தப்பினோம் பிழைத்தோம் என்றே திரும்ப வந்து சேருகின்றனர்.

மண்ணைக் காப்பாற்றத்தான் போராட்டமே ஆரம்பமானது.

அதன் விடுதலையே மக்களின் விடுதலை.சொந்த மண்ணிலே குடியிருக்கும் மக்களை விரட்டியடித்துவிட்டு அங்கே ஆக்கிரமிப்புச் செய்ய சிங்களவர்களுக்கு ராணுவம் உதவி செய்யும் நிலையில் விடுதலைபற்றிக் கதைக்காமல் மண்ணைக் காப்பாற்றும் எனக்குத் தெரியாது.

அடிமைப்பட்டு சொந்த மண்ணிலே அகதிகளாக இருக்க முடியாதபடியாலேயே விடுதலைப் போராட்டமே ஆரம்பமானது.

நீங்கள் யோசிக்கும் முறையும் ஒரு நாள் போராட்டமாக வெடிக்கலாம் தூயவன்.

இருப்பதைக் காப்பாற்றுவதற்கு புலத்தில் மட்டுமல்ல ஊரிலும் போராட வேண்டும். இப்போதுதான் மாவை அண்ணன் அறைகூவல் விடுத்துள்ளார். மக்களின் புரட்சியே மண்ணைக்காப்பாற்றும்  என அவர் விடுத்த அறைகூவல் எத்தனைபேரை நித்திரையால் எழுப்பியுள்ளது எனக் காலம் தான் பதில் கூறவேண்டும்.

 

 

என்னைப் பொறுத்தவரைக்கும் அங்கு ஒரு நியாயமான தீர்வு வந்து இராணுவப் பிரசன்னம் அறவே அற்றுப் போனாலும் நான் அங்கு போய் நிரந்தரமாக வாழப் போவதில்லை. கனடா கழுத்தைப் பிடிச்சு வெளியே தள்ளினாலும், அபிவிருத்தி அடைந்த, வசதியுள்ள இன்னொரு நாட்டிற்கு புலம்பெயரவே விரும்புவேன்.

 

இதன் முக்கிய காரணம், இங்குள்ள வசதி வாய்ப்புகளும், திறமைக்கேற்ற வேலையும் ஊதியமும் அது கொடுக்கும் மதிப்பும். நான் போரினைக் காரணம் காட்டி புலம்பெயர்ந்து கனடாவுக்கு வந்தவன் அல்ல. டுபாயில் 5 வருடங்கள் இருந்து,  பின் அங்கிருந்து Skill migration மூலம் கனடாவ் வந்தவன் என்பதால் போரின் காரணமாக கனடா வரவில்லை. வருவதற்கான அடிப்படைக் காரணமாக இருந்தது மேற்கத்திய வாழ்க்கை முறையில் இருந்த ஆசையும், மூன்றாம் தரப் பிரஜையாக இனவாத அரசின் கீழ் வாழ விருப்பம் இல்லாமையும் தான்.

 

எனக்கு பிடித்தமான வாழ்க்கை முறையையும், கல்வி வசதிகளையும், வேலை வாய்ப்புகளையும், இதர விடயங்களையும் பெறுவதற்கு கனடிய சட்டங்களும் அரசியலமைப்பும் குறுக்கே நிற்காமையினால், ஒரு நல்ல பிரஜையாக நான் இங்கு தான் தொடர்ந்து இருப்பேன். நாளைக்கு கனடிய அரசியலில் பெரும் மாற்றம் வந்து குடியேற்ற வாசிகளை நாலாம் தரப் பிரஜைகளாக நடாத்த தொடங்கினால் என் அடுத்த தலைமுறை (என் பிள்ளைகள்) தம் வேர்களை தேடிப் போகத் தொடங்கும் என்று எண்ணுகின்றேன்.

 

  • கருத்துக்கள உறவுகள்

I don't want to be Gin downed............. sorry Gun downed!

 

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இப்போதைக்கு ஊரில் போய் இருக்கின்ற ஜடியா இல்லை.ஊரில் இல்லாத சுதந்திர‌மும்,வசதியும் இங்கே எனக்கு கிடைக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
போராளிகள் மேல் (புலிகள் மட்டுமில்லை உலகில் தன்னலம் அற்று போராடும்) உயரிய மரியாதை என்றும் இருப்பதற்கு ஒரே காரணம்.
போராளியாக வாழ்தல் என்பதே ஒரு பெருத்த போராடம்தான்.
 
எல்லோருக்கும் நன்மை பயக்க கூடிய ஒன்றை உலகில் எந்த மக்கள் கூட்டமும் செய்ய முன்வந்ததில்லை. தனக்கு எது லாபம் ...........குறைந்த நட்டத்தில் எப்படி  கூடிய சுகம் பெறுவது என்றுதான் சிந்தித்து வாழும்.
அடக்குமுறை மூலம்தான் உலகில் முக்கிய விடயங்கள் நிறைவேற்ற முடிந்துள்ளது.
 
இப்போது மேலை நாடுகளில் கூட திரை மறைவில் முதளித்துவ அராஜகம்தான் நடக்கிறது. ஜெனநாயக வர்ணம் நன்றாக அடித்திருக்கிறார்கள். அவர்கள் மீடியாவின் பலத்தை பாவித்து மக்களை ஏய்க்கிறார்கள்.
 
அங்கு சிங்களவர்களுக்கு அடிமை என்றால் ............ இங்கு முதளிகளுக்கு அடிமை. ஆனால் நாகரிக அடிமைகள்.
எங்களுக்கு யாரும் காலை 7 மணிக்கு வேலையில் நிற்கவேண்டும் என்று தடியால் அடிப்பதில்லை. சுக போகங்களுக்கு அடிமையாக்கி அதை வைத்து அடிப்பார்கள். 
 
புலம்பெயர் மக்கள் எல்லோரும் ஒன்றாக நாடு திரும்பினால் ................. ஈழத்தின் போராட்டம் வேறு வடிவில் உருபெறும். நாம் எல்லோரும் மிகவும் சுகமாகவும் சுதந்திரமாகவும் எம்மது மொழியில் பேசி எமது ஊரில் வேலை செய்து வாழலாம். 
எல்லோரும் ................. இதுதான் உலகில் முடியாதது.
 
இப்போ ஈழத்தில் பெண்கள் மீதான பாலியல் கொடுமை எம்மவரால்தான் அதிகம் அரங்கேற்ற படுகிறது. நல்லூர் திருவிழாவில் பாலியல் எண்ணத்தோடு ஒரு ஆணால் உரசுபடாமல் வீடுவந்த பெண்களை விரல் விட்டு எண்ணலாம். தூய்மை பற்றி போலி வேஷம் இருப்பதால் அதை யாரும் பேச துணிகிறார்கள் இல்லை. உங்களுக்கு  நெருக்கமான தோழிகள் இருந்தால் அவர்கள் மட்டும் வாய்திறக்கிரார்கள். இப்படி சிறு துளிகளகத்தான் நாட்டில் ஓடும் பெரு வெள்ளத்தின் செய்தியை சேகரிக்க  முடிகிறது.
இங்கு சுதந்திரமாக இருந்த பெண்கள் அப்படி ஒரு வல்லுறவிற்கு எளிதாக மாற மாட்டார்கள்.
  • கருத்துக்கள உறவுகள்

நேர்மையாகவும், நியாயமாகவும், பிறரை ஏய்த்துப் பிழைக்காமலும் வாழவேண்டும் என்று விரும்பினால் தாயகத்திற்குத் திரும்பப்போய் அன்றாடம் காய்ச்சியாக வாழலாம். சுதந்திரமாகவும், திறமைக்கு ஏற்ற தொழிலுடனும் வாழவேண்டுமென்றால் மேற்கு நாடுகளில் இருந்து போவது சரிவராது.

அடுத்தவரைச் சுத்தி ஆடம்பரமாகச் சுகவாழ்வு வாழ்பவர்களுக்கு எந்த நாடும் தகுதியான நாடே!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மருதங்கேணி ஈழத்தில் பெண்களுக்கு நடக்கின்ற பாலியல் தொல்லை பற்றிக் கதைக்கின்ற அதே வேளை. புலத்தில் பெண்களை மயக்கி அழைத்துச் செல்கின்ற விதங்களையம் அறிவீரா? கனடாவில் கலை நிகழ்ச்சிகள் உற்பட்ட அனைத்து நிகழ்வுகளிலும் பாதிக்கு மேற்பட்ட பெண்கள்( ஆண்கள் சொல்லவே வேண்டாம்) குடிக்கின்றார்கள்.. குடிக்க வைக்கப்படுகின்றார்கள். தமிழ் பெண்களைத் தான் சொல்கின்றேன். அங்கே பெண்களை உரசுவது பாலியல் குற்றம் என்றால், இங்கே புலத்தில் கட்டியணைத்து சகஜமாக முத்தமிடலாம். எந்த நிகழ்வுக்கும், எந்தப் பெண்களையும் வரவேற்பாக... சொல்லப் போனால் புலத்தில் இவற்றைக் கண்டு கொள்ளாத நாங்கள், ஊரில் சிறு துரும்பு நகர்ந்தாலும் ஒப்பாரி வைப்போம்( அங்கு நடப்பதை நியாயம் செய்யவில்லை. ஒப்பீடு மட்டுமே) ஏன் என்றால் சுத்தமான, கலாச்சாரம் மிக்க மணப் பெண் தேவையாச்சே! எனக்குத் தெரிந்த ஒரு குடும்பம் இங்கு. குடும்பமே இருந்து தண்ணியடிப்பார்கள். ஒரு பையன், ஒரு பெண்... அனைவருக்கும் தந்தையே ஊத்திக் கொடுப்பார். பொது இடங்களிலும் அவர்கள் குடிப்பார்கள்... மகள் 3 காதல்.. 4வது காதல் ஆகும்போது பிடித்து வீட்டாரே திருமணம் செய்து வைத்தனர்.. பொறுக்க இயலாமல்... இது தான் இங்கு நிலைமை. சும்மா கலாச்சாரம், கத்தரிக்காய் இங்கே காப்பாற்றுவதாக வேண்டாம்....

இத்தலைப்பில் நான் சொல்லவிழைந்து உங்களின் தலைமுறைக்குப் பிற்பாடு, அடுத்த தலைமுறை இப்படி எல்லாம் நடந்து கொள்ள நீங்கள் அனுமதிக்கின்றீர்களா?

எனக்கு ஈழத்துக்கு செல்லவிடாமல் தடுக்கும் காரணிகள் பல. முதலில் சாவுக்குப் பயம். கூடிய வசதிவாய்ப்பில் இருந்து குறைந்ததுக்கு போகும் மனம் இல்லை. சுயநலம். இலகுவானதில் நாட்டம். இரண்டாம் மூன்றாம் தரப் பிரஜையாக இருப்பதில் சங்கடம் இல்லை. இப்படி பல காரணங்கள் இருக்கின்றது.

 

கனடா நாடு வரலாற்றில் பல போர்களை கண்டு பல்லாயிரம் மக்கள் அதில் பலியாகி படிப்படியாக போரைக் கடந்து வாழும் சூழ்நிலைக்கு வந்துவிட்டது. இவ்வாறன ஒரு சூழ்நிலைக்கு எமது தாயகத்தை கொண்டுவரும் முயற்சியில் நான் பங்களிப்பதையோ அம் முயற்சியில் உயிர் விடுவதையோ விரும்பவில்லை. எங்கு போரைக் கடந்து மேம்பாட்டுடன் வாழும் இடங்கள் இருக்கின்றதோ அங்கு வாழ்வது சிறந்த தெரிவாக உள்ளது. ஒருவேளை இந் நிலையை தாயகத்தில் எஞ்சியிருப்பவர்கள் தோற்றுவித்தால் அங்கு மீண்டும் போக வாய்பிருக்கின்றது.

 

எல்லாவற்றுக்கும் மேலாக எது சுதந்திரம் என்ற தீர்மானம். வெளிநாட்டு வாழக்கையே ஒரு சுதந்திரம் என்ற எண்ணப்பாடு எல்லாவற்றையும் மேவிவிட்டது. அவனவனுக்கு இது இதுதான் சுதந்திரம் என்ற முடிவு இருக்கின்றது.

 

வெளிநாட்டில் வாழ பத்து காரணங்கள். தாயகத்தில் வாழ முடியாது என்பதற்கு ராணுவம் ஒட்டுக்குழு அது இது என்று பத்துக் காரணங்கள். இக் காரணங்களை சுதந்தித்துக்குப் மாற்றாக உணர்ந்து பழகியாகிவிட்டது.

 

 

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக ஊர் மக்களுக்கு தேவையான இயன்ற சேவை ஆற்றவே பிரியப்படுகிறேன். கொழும்பு வாழ்க்கைக்கும்.. புலம்பெயர் வாழ்க்கைக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. சுதந்திரம்.. சுதந்திர உலாவல்.. மற்றும் சுதந்திரக் கருத்துப்பரிமாற்றம்.. சுதந்திரமான தனித்துவ அடையாளத்தை இனங்காட்டல்.. என்பன அங்கு வாழ்ந்த காலத்தில் வெகுவாக மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. அந்தக் குறை புலம்பெயர் நாடுகளில் இல்லை என்றாலும்.. சமூக வன்முறைகள்.. வன்முறைக் குழுக்கள்.. போதைப்பொருள் பாவனை.. சமூகப் பிறழ்வுகள்.. சார்ந்த. பிரச்சனைகள்.. புலம்பெயர் நாடுகளில் இன்னும் அதிகம். எங்கும் அது உள்ளது.  ஊரில்..இராணுவ.. பொலிஸ் அச்சுறுத்தல்.. சுற்றிவளைப்பு.. இருந்தது. இவற்றை தவிர.. மற்ற தனிநபர் வீட்டு.. சுகபோக.. வாழ்க்கை.. அனைத்தும் அங்கும் இருந்ததால்.. பெரிய வித்தியாசம் தெரியவில்லை. அங்கு படிக்கும் போதே தொண்டு நிறுவனம் ஒன்றில் நல்ல ஊதியத்திற்கு வேலை செய்ததால்.. ஊதியம் பற்றிய பிரச்சனை இருக்கவில்லை. இப்போது அந்த நிலைமைகளில் மாற்றம் உள்ளது. எதிர்காலத்தில் அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டால் அதிலும் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.

 

 ஊருக்கு மட்டுமல்ல.. எங்கெல்லாம் மக்கள் வறுமையாலும்.. நோயாலும்.. அரசியல் நெருக்கடிகளாலும் அவதிப்படினமோ அங்கு சேவையாற்ற வேண்டும் என்பது எனது சிறுவயது ஆர்வம். ஊரில் இருந்த போதும் செய்திருக்கிறோம்.. கொழும்பில் வாழ்ந்த போதும்.. கூட சிங்கள மாணவர்களோடு இணைந்து.. லொறிகளில் வன்னி நோக்கி.. பொருட்கள் சேகரித்து அனுப்பி இருக்கிறோம். அதற்காக எல்லா சிங்களவர்களும் நல்லவர்கள்.. வல்லவர்கள்.. என்று கூற முடியாது. வன்னிக்கு பொருட்கள் அனுப்பியதை புலிக்கு அனுப்புகிறார்கள் என்று போட்டுக்கொடுத்த சிங்களவர்களைக் காட்டிலும் முஸ்லீம்களே அதிகம். அதுவும் எங்களோடு கூட இருந்து சாப்பிட்டு.. படிச்ச.. முஸ்லீம்கள் என்பது இன்னும் வேதனைக்குரியது. அந்த நிலைமைகள் இல்லாமல் இருந்தால் நல்ல புரிந்துணர்வுள்ள நிலைமை..  உருவானால் நல்லது. சிங்களவர்கள் தமிழர்களின் நில.. அரசியல்..  சமூக உரிமையை அங்கீகரிக்கும் மனப்பக்குவத்தை அடைவது போல.. முஸ்லீம்களும்.. தங்கள் வளங்களை தமிழ் மக்களோடு பகிர்ந்து வாழும்.. சகஜ வாழ்க்கைக்கு சகோதரத்துவ வாழ்க்கைக்கு தம்மை தயார் செய்தல் வேண்டும். அப்படி எல்லாம் நடந்தால்... இன்னும் நல்லது..! சிங்கள இராணுவ.. பொலிஸ்.. அரசியல்.. ஒட்டுக்குழு அச்சுறுத்தல்கள்.. முற்றாக தமிழர்கள் மீதிருந்து நீக்கப்படுதல் அவசியம். அதேபோல்.. தமிழ் மக்கள் சமூக வன்முறைகளை நோக்கி இளையோரை அனுமதிப்பதையும் நிறுத்தி.. ஆரோக்கியமான உரிமைகள் பெற்ற சமூகமாக வாழ செயற்பட்டால்.. இன்னும் அவர்களை நோக்கி படித்த இளைய சமூகம்.. நெருங்கிவர ஆரோக்கியமாக இருக்கும். :icon_idea:

இருப்பதை கொண்டு திருப்தி பட்டால அவன் சராசரி மனிதன் இல்லை ,அடுத்த படியை நோக்கி நகருவதே அவன் ஒரே எண்ணம் .

 

ஒரு மனிதனின் வாழ்க்கை என்பது பெரும்பாலும் பொருளாதாரத்தை அடிப்படையாக வைத்து கட்டி எழுப்பபட்டது .மேற்கத்தைய நாடுகளில் கோப்பை கழுவி வாழும் வாழ்க்கை நாட்டில் இருக்கும் பெரிய உத்தியோகதவ்ர்களை விட வசதியானது  என்னும் போது எவனும் நாட்டிற்கு போகப்போவதில்லை .

 

அரசியல் பிரச்சனை ,ராணுவ பிரசன்னம் எல்லாம் இரண்டாம் பச்சம் .எந்த வித அரசியல் பிரச்சனை இல்லாத நாடுகளில் இருந்தும்  கூட மேற்கத்தைய நாடுகளுக்கு போய் வாழ்கையை செட்டில் பண்ணுவதுதான் அவனவன் கனவு .

 

விதி விலக்குகளும் இருக்கின்றார்கள் .எனது ஆறு நண்பர்கள் அங்கு போய் செட்டில் பண்ணிவிட்டார்கள் .மிக சந்தோசமாக வேறு இருக்கின்றார்கள் .பழகி போன இடத்தை விட்டுபோவது ஒன்றும் இலகல்ல அதுதான் உண்மை .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனடா மாற்றான் தேசம் என்ற மனநிலை எனக்கில்லை...!
அது தாழ்வு மனப்பாங்கு என்பது எனது கருத்து

 

 

தாயகத்துக்கு மீளும் எண்ணம் முன்னா் இருந்தது ஆனால் விடுமுறையில் கூட அங்கு சென்று விடக் கூடாது என்ற உறுதி இப்போது இருக்கிறது..!  காரணம் என்று குறிப்பிட்டு எதையும் கூற முடியாது. ஆனால் எமக்கு சொந்தமான நிலத்தை நாம் விற்றுவிட்டு வெளியோறிய பின் அதற்க்கு உாிமை கொண்டாட முடியாது. எப்படி கனடா மாற்றான் தேசம் என்ற மனநிலை எனக்குள் இல்லை ஆனால் சிறிலங்காவில் அந்த மனநிலையை சந்தா்ப்பம் கண்டிப்பாக ஏற்படுத்தும். அவ்வாறாக சந்தா்ப்பத்தில் நான் இங்கிருப்பதை விரும்புகின்றேன். 

ஆனாலும் தாயக மக்களின் பொருளாதார, கல்வி மற்றும் மருத்துவ முன்னேற்றத்தை ஊக்கிவிக்க விரும்புகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

மருதங்கேணி ஈழத்தில் பெண்களுக்கு நடக்கின்ற பாலியல் தொல்லை பற்றிக் கதைக்கின்ற அதே வேளை. புலத்தில் பெண்களை மயக்கி அழைத்துச் செல்கின்ற விதங்களையம் அறிவீரா? கனடாவில் கலை நிகழ்ச்சிகள் உற்பட்ட அனைத்து நிகழ்வுகளிலும் பாதிக்கு மேற்பட்ட பெண்கள்( ஆண்கள் சொல்லவே வேண்டாம்) குடிக்கின்றார்கள்.. குடிக்க வைக்கப்படுகின்றார்கள். தமிழ் பெண்களைத் தான் சொல்கின்றேன். அங்கே பெண்களை உரசுவது பாலியல் குற்றம் என்றால், இங்கே புலத்தில் கட்டியணைத்து சகஜமாக முத்தமிடலாம். எந்த நிகழ்வுக்கும், எந்தப் பெண்களையும் வரவேற்பாக... சொல்லப் போனால் புலத்தில் இவற்றைக் கண்டு கொள்ளாத நாங்கள், ஊரில் சிறு துரும்பு நகர்ந்தாலும் ஒப்பாரி வைப்போம்( அங்கு நடப்பதை நியாயம் செய்யவில்லை. ஒப்பீடு மட்டுமே) ஏன் என்றால் சுத்தமான, கலாச்சாரம் மிக்க மணப் பெண் தேவையாச்சே! எனக்குத் தெரிந்த ஒரு குடும்பம் இங்கு. குடும்பமே இருந்து தண்ணியடிப்பார்கள். ஒரு பையன், ஒரு பெண்... அனைவருக்கும் தந்தையே ஊத்திக் கொடுப்பார். பொது இடங்களிலும் அவர்கள் குடிப்பார்கள்... மகள் 3 காதல்.. 4வது காதல் ஆகும்போது பிடித்து வீட்டாரே திருமணம் செய்து வைத்தனர்.. பொறுக்க இயலாமல்... இது தான் இங்கு நிலைமை. சும்மா கலாச்சாரம், கத்தரிக்காய் இங்கே காப்பாற்றுவதாக வேண்டாம்....

இத்தலைப்பில் நான் சொல்லவிழைந்து உங்களின் தலைமுறைக்குப் பிற்பாடு, அடுத்த தலைமுறை இப்படி எல்லாம் நடந்து கொள்ள நீங்கள் அனுமதிக்கின்றீர்களா?

நான் கூற வந்த விடயம் வேறு நீங்கள் பேசும் விடயம் வேறானது.
நீங்கள் கலாச்சாரம் பற்றி பேசுகிறீர்கள் ............... நன் அதற்குள் போகவே இல்லை.
அடிப்படை பெண் சுதந்திரம் .... பற்றிதான் நான் பேசினேன். இங்கே குடிப்பது ...படுப்பது எல்லாம் அவர்கள் விரும்பிதான் செய்கிறார்கள்.
வல்லுறவு என்பது வேறு ...... அதை எந்த பெண்ணாலும் சகிக்க முடியாது. 
தனக்கு பிடித்தமான ஒருவருடன் காதலாகி கசங்கி பிசுங்கி போகும் கனவு எல்லா பெண்களுக்கும் பொதுவானதுதான். அதற்காக கண்டவர்களுடனும் போக முடியுமா?
பறவை .............. மிருகங்களில் கூட கவர்சியான ஆணைதான் பெண்கள் தெரிவு செய்கின்றன.
மனிதரில் பெண்கள் எப்படி இருப்பார்கள்?
 
பொதுவாக நான் சொல்லவந்தது தனிமனித சுதந்திரம் என்பது மிகவும் நலிவாக இருக்கிறது. அதை எல்லோரும் விரும்ப மாட்டார்கள் என்றுதான். 
(நான் கூறிய விடையத்தை ஒரு சிறு உதாரணமாக கொண்டேன் அவளவுதான்)
 
என்னை பொருத்தவரை ............... பென்ஷன் எடுக்கும் மட்டும் எல்லா பிளானும் போட்டாச்சு. அதன் படிதான் எல்லாம் நடந்து கொண்டு இருக்கிறது. திடிரென அங்கு போவது என்றால் ...? திரும்பவும் அகதி ஆகத்தான் போக முடியும். 
  • கருத்துக்கள உறவுகள்

கோப்பை அடிப்பவன் பிஎம்டபிள்யு பென்ஸ் ஓடக்கூடாது என்ற சிந்தனையே தவறு. ஊரில் ஒருத்தரும் கோப்பை அடிக்கவில்லையா? எல்லாம் தடிப்புதான்.

  • கருத்துக்கள உறவுகள்

விமானநிலையத்தில் இறங்கியவுடன் ஒரு சிங்கள /தமிழ் அரச அதிகாரி எங்கே வந்திருக்கிறாய் என்று கேட்கும் பொழுது ஈழத்திற்கு வந்திருக்கிறேன் எண்டு நான் சொன்னவுடன் ஆத்திரப்படாமல் ,நல்லது சந்தோசமாக சென்று வா என அனுப்பும் மனப்பான்மை எப்பொழுது வருகின்றதோ அப்பொழுது நான் செல்வேன் .....அதாவது அப்படி ஒரு நிலை வரப்போவதுமில்லை நான் போகப்போவதுமில்லை :D

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்திலின்றும் புலம்பெயர்ந்து நாம் இப்போது வாழுமிடன் வரும்போது எம்முடன் எதையுமே எடுத்துவந்ததில்லை. எமது சொந்தங்களில் எவரையேனும் துணைக்குக்கூட்டிவந்ததில்லை.

 

எதுவுமில்லாதுவந்து, இப்போ எதேதோ சம்பாதித்துவிட்டோம். நான் அகதுமுகாமில் வாழ்க்கை நடத்தப்போகும்போது கையில் போடுவதற்கு மாற்றுத்துணியும் இல்லை.

 

அகதிமுகாமைவிட்டு வாடகை வீட்டுக்குப் போகும்போது ஒரு சிற்ரூர்தி கொள்ளுமளவுக்குப் பொருட்கள். அகதிமுகாமின் பணிப்பாளர் சொன்னார் "எனக்கு இன்னமும் நினைவிருக்கு நீ வரும்போது எதுவுமில்லாது வந்தாய், இப்போ நிறையச் பொருட்களைச் சேமித்துக்கொண்டு போகிறாய்" என அப்போதுதான் எனக்கும் அது உறைத்தது.

 

ஆக எங்களுக்கு எந்தவிதத்திலும் அறிமுகமில்லாத ஒரு நாட்டுக்கு வந்து எம்மை குறுப்பிட்ட காலங்களுக்குள்ளேயே நிலை நிறுத்திக்கொள்ளமுடியுமாகவிருந்தால் எனது சொந்த ஊரில் இதுவரை தேடிய செல்வ்த்தை அங்குபோய் சிக்கனமாகச் செலவுசெய்து வாழ்கை நடத்த என்ன தயக்கம்.

 

சிலர் நினைக்கலாம் பிள்ளைகளுக்கு சரிவராது என வராட்டில் இருக்கட்டும் நாம் தனியே போய் இருப்போம் அவர்களுக்கான பிடித்த உலகை அங்கு ஏற்பாடுசெய்வோம்.

  • கருத்துக்கள உறவுகள்

தூயவன் ஊரில் சென்று வாழவேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு இருந்தாலும் அவர் சொன்ன இன்னும் பத்து ஆண்டுகளுள் என்பது முரண்படுகிறது. இன்னும் பத்து ஆண்டுகளுள் உங்கள் பொருளாதார வளத்தைக் கட்டி எழுப்புவதர்க்கா ???? அன்றி என்ன காரணம் என்று நீங்கள் குறிப்பிடவில்லை. பத்து ஆண்டுகளில் எத்தனையோ நடக்கலாம். நாம் உயிருடன் கூட இல்லாமல் இருக்கலாம். எம் மனநிலை இன்னும் வெளிநாட்டு மோகத்துக்கு அடிமையாகலாம். போவதானால் எம் உடலிலும் மனதிலும் தெம்பு இருக்கும் பொது அங்கு போவது எம்மை எதற்கும் ஈடுகொடுக்க வைக்குமே தவிர எழாத காலத்தில் அங்கு செல்வது கோயில் குளம் பார்த்துக்கொண்டு இருக்கவா. உண்மையில் எனக்குப் பெண் என்பதால் அங்கு சென்று வாசிப்பதில் பயம் இருக்கிறது. மற்றப்படி இங்கும் நாம் அடிமை வாழ்வை வசதியுடன் வாழ்கிறோம் என்பதுதான் உண்மை. இங்கு எழுதியவர்களில் பலர் வசதிவாய்ப்புக்களை அனுபவித்துக்கொண்டு இங்கு இருப்பதையே விரும்புவது நன்றாகத் தெரிகின்றது. உண்மையில் நாம் தேசம் பற்றிக் கதைப்பதற்கு எந்தத் தகுதியும் அற்றவர்கள்.

 

என் ஆசை ஒட்டுமொத்தமாக எல்லாத் தமிழர்களையும் ஈழத்துக்குப் பிடித்து அனுப்பிவிட வேண்டும். அப்போது நிட்சயமாய் எமக்கான ஒரு விடிவு ஏற்படலாம், எம் நாடும் மக்களும் கூட முன்னேறலாம்.

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்  தூயவன்

 

இந்தக்கேள்வி  என்பது

மனித வாழ்வு

உணர்வுகள்

குடும்பம்

பந்தபாசம்

எதிர்காலம்

வயோதிப காலம்

இறுதி  மூச்சு......  என பல பிரிவுகளை ஒன்றுடன் ஒன்று கலந்து எடுக்கப்படவேண்டிய  முடிவு

 

இதற்கு எவரும் தற்பொழுது எதிர்வு கூறமுடியாது என்பதால் தான் 10 வருடங்களைத்தந்துள்ளீர்கள் என நினைக்கின்றேன்

 

இந்த  பத்து வருடங்கள் கூட ஒவ்வொருவருக்கு மாறுபடலாம்

 

நான் வீட்டில்  இது பற்றிக்கதைப்பதால்

எனது ஆசை என்ன என்று எனது வீட்டில் கேட்டாலே சொல்வார்கள்

ஊரில் இருக்கணும் என்பது தான் அப்பாவின் ஆசை என.

அதே நேரம் எங்களை விட்டு விட்டு இவரால் இருக்கமுடியாது என்றும் சொல்வார்கள்

 

அதேபோல்

எனது தாயகம் சார்ந்து

எனக்கொரு கனவு உண்டு

கற்பனை உண்டு

அது இன்று அங்கு இல்லை.......

அது வருவது அருகிவருவதாகவே தெரிகிறது

 

அந்த எனது உலகம் அங்கு வந்தால்

நிச்சயம் செல்வேன்

தங்குவேன்

அங்கேயே   சாவேன்

அது வராவிட்டால்

சுற்றுலா பயணி போல போவதும் வருவதுமாக இருக்கலாம்....

(அதற்கு முதல் எனது அரசியல் பிடிகளில் பெரும் மாற்றங்களை நான் அமுல்படுத்தியாகணும்)

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விடயம் பற்றி நான் பலதடவைகள் எழுதி விட்டேன். நிச்சயமாக இலங்கைக்கு/ஊருக்குப் போய் சீவிக்க விரும்புகிறேன். நான் எனது கணக்கியல் கல்வியில், CPA பாதி முடித்து விட்டேன். மீதி முடிந்து  MRA  மூலம் CIMA அந்தஸ்து பெறுமட்டும் போகமாட்டேன். அடுத்த ஐந்து வருடங்களில் இது சாத்தியம். எனது மனைவியின் கல்வியும் இந்தக்காலத்திலே முடிந்தது விடும் எனவே போவது பற்றி இன்னமும் தீவிரமாக சிந்திக்க முடியும். நான் CIMA பெற்றுவிட்டு போக விரும்புவதன் நோக்கம், இலங்கையில் CIMA பிரபலமாக இருப்பதால் வேலை எடுப்பது இலகு எனவே பொருளாதார ரீதியில் பிரச்சனைகள் வராது.

புலம் எமக்கு ஒரு போதும் வீடாகாது. அத்துடன் வெள்ளைக்காரர் ஒரு போதும் அவர்களுக்கு சமமாக எம்மை நினைக்க மாட்டார்கள். நன்கு படித்த சிறந்த குணமுள்ள வெள்ளைகளின் ரத்தத்தில் கூட இது ஊறி இருக்கிறது. மற்றது படிப்புக்கு உத்தியோகத்துக்கு ஏற்ற மரியாதை இலங்கையில் அதிகம். எனது நண்பன் ஒருவன் அவனது நிறுவனத்தில் எப்படி பவ்வியமாக நடத்தப்பட்டான் என்பதை நேரடியாகப் பார்த்தேன். எனது வயதுக்கும் அனுபவத்தும் என்னை ஒத்தவர்களை விட சிறந்த நிலையிலேயே இருக்கிறேன். அப்படி இருந்தும் திருப்தி இல்லை. குடும்ப வாழ்க்கையும் பாதிக்கப் படுகிறது.

அத்துடன் நீண்ட கால இனத்தின் இருப்புக்கும் நிலங்களின் இருப்புக்கும் நிரந்தரமாக நிலத்தில் இருக்க வேண்டும். புலம் பெயரும் போது இனப்பரம்பலையும் மக்கள் தொகையையும் பாதிக்கிறது.

எம்மவர்கள் போக பின்னிற்கும் முக்கிய காரணம் பொருளாதாரமும் வேலை வாய்ப்பும். போரினால் புலம்பெயர்ந்த பெரும் பகுதியானவர்கள் எந்த வகையான கல்வி நடவடிக்கைகளிலும் தம்மை ஈடுபடுத்திக்கொள்ளாமல் பணம் ஈட்டக் கூடிய, உடல் உழைப்பு சார்ந்த தொழில் மற்றும் சுய தொழில்களில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டு விட்டார்கள். இவ்வாரானவர்கள் ஊருக்குப் போனால் சொந்தத் தொழில் செய்வதைத் தவிர வேறு வேளைகளில் ஈடுபட முடியாது. அத்துடன் வெளிநாட்டுக் காரர் என்ற அந்தஸ்தையும் இழக்க எம்மவர்கள் பலர் தயாராக இல்லை. அத்துடன் வீடு வளைவுகள் போன்ற வசதிகளையும் நினைக்கிறார்கள்.

நான் ஊருக்குப் போகும் போது பின்வரும் விடயங்கள் முக்கியமானவை எனக் கருதுகிறேன்

1) இலங்கையில் தொழில் வாய்ப்பு. எனக்கு குறைந்த பட்சம் AUD 2000 இலங்கையில் சீவிப்பதற்குத் தேவைப்படும். இந்தத் தொகை ஒரு தொழில் மூலமோ ஒரு தொழில் மற்றும் முதலீடுகள் மூலமோ மாதாமாதம் பெறப்பட வேண்டும். (சில தனியார் நிறுவனங்கள் அள்ளி அள்ளி கொடுக்கிறார்கள் - செனோக்கில் வேலை செய்யும் எனது நண்பன் Audi A6 தான் ஓடுகிறான்.) எனது இலக்கு MAS Holdings, Cargils, Maharaja, Vertusa, John Keels, Amber Holdings, AMW, Senok, CIC, Abans, Brown & Co, Singer போன்ற ஏதாவது ஒரு பெரிய நிறுவனம் அல்லது பெரிய வங்கி, காப்புறுதி நிறுவனம் etc. இதற்கு சில தெரிந்தவர்கள், செல்வாக்குள்ளவர்களின் உதவிகள் தேவைப்படலாம். எனக்கு சிங்களம் ஓரளவு தெரியும் என்பதால் சமாளிக்க முடியும்.

2) எமக்கு கொழும்பிலும் யாழிலும் வீடுகள் மற்றும் வாகனம் இருக்கிறது எனவே தங்குமிட போக்குவரத்து வசதிகள் பிரச்சனையில்லை. பெரிய நிறுவனங்களில் வேலை செய்ய விரும்புபவர்கள் அனேகமாக கொழும்பிலே கொழும்பு புறநகர்ப் பகுதிகளிலே ஒரு வீடு வைத்திருப்பது மிகவும் உதவியானது. கொழும்பிலே வெள்ளவத்தையில் ஒரு மூண்டு அறை அடுக்கு மாடி வீடு 12 மில்லியனில் இருந்து வாங்கலாம். காசு எரிய இருந்தால் கொள்ளுப்பிட்டியில் வாங்கவும். எக்காலத்திலும் விலை குறையாது அத்துடன் அங்கு இருபவர்களில் அநேகர் வெள்ளைகள் மற்றும் expats. Emperor மற்றும் Crescat சிறந்தவை. புதிதாகவும் பல வந்திருக்கு. 3 BR, Beach View - Penth house 60 மில்லியனுக்கு மேலே வரும். காரும் இருப்பது இலகுவானது. இலங்கையில் கார்கள் விலை கூட. 1.5 - 2.5 மில்லியனில் ஓரளவு நல்ல கார் வாங்கலாம்.

3) பிள்ளைகள் இருந்தால் அவர்களின் கல்வி - இளம் பிள்ளைகள் சர்வதேசப் பாடசாலைகளுக்குப் போக முடியும். இலங்கையின் குறிப்பாக யாழின் கல்வித்தரம் அதிகமாக இருப்பதாலும் பத்து வயதிற்கு மேற்ற்பட்ட வயதை உடையவர்கள் போகும் போது  மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.

போன பின்னர்

1) போன பின்னர் கனடா திறம் அவுஸ் திறம் என்று நினைக்கவே கூடாது. நீங்கள் போயிருப்பது ஒரு மூன்றாம் உலக வறிய நாட்டிற்கு.
2) அங்கு சீவிக்கும் போது  இலங்கையர்கள் போலவே செலவழிக்கவும், வாழவும் பழக வேண்டும். நீங்கள் போயிருப்பது ஒரு மாத ஹோலிடேயில் அல்ல.
3) ரூபாயில் உழைப்பதால் ரூபாயிலேயே செலவழிக்கவும் கணக்குப் பார்க்கவும் வேண்டும்.
4) நீங்கள் எந்த நாட்டில் எத்தனை வருடம் குப்பை கொட்டியிருந்தாலும் அது அங்கிருப்பவர்களுக்கு, குறிப்பாக பெரிய நிறுவனங்களில் உயர்பதவிகள் இருப்பவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. உங்களை மாதிரி பலரை கண்டிருப்பார்கள்.
5) இலங்கை தொழிலாளர் சம்பந்தமான சட்ட திட்டங்கள் வித்தியாசமானவை.
6) அங்கிருப்பவர்களுக்கு நீங்கள் எவ்விதத்திலும் படம் காட்டத் தேவையில்லை. இரண்டு மாதங்களில் பழகி விடுவார்கள். நீங்களும் பழகி விடுவீர்கள்.
7) பிடிக்காவிட்டால் திரும்பி வரக்கூடிய வழிமுறைகளையும் (Exit Strategy)  புலத்தில் வைத்து விட்டே செல்ல வேண்டும்.

ஆகவே மீண்டும் கேள்விக்கு வருவோம் என்னைத் தடுக்கும் விடயங்கள் எவை?

1) எனது எனது மனைவியினது மேற் படிப்பு.
2) உரிய வருவாயில் உரிய நிறுவனத்தில். உரிய வேலை தற்போதைய கல்வித் தகமைகளுடன் பெற முடியாமை.

இந்த இரண்டை விட வேறு விடயங்களை என்னால் தற்போது யோசிக்க முடியவில்லை. காசிருந்தால் இலங்கையில் அவுஸை விட சிறந்த வாழ்கைத் தரத்துடன் சீவிக்கலாம்.

Remember it is not perfect, but it is home.


 

  • கருத்துக்கள உறவுகள்

என்னை பொருத்தவரை எல்லாவற்றிக்கும் எமது மனமே காரணம் என்பேன். எதுவுமே எங்களை தடுக்கும் காரணி கிடையாது.  

  • கருத்துக்கள உறவுகள்

இது பொருளாதாரம் ,பாதுகாப்பு, கௌரவம் என பல விடையங்களை உள்ளடக்கியயது.அதுக்கப்பால் உண்மையில் தாங்கள் விரும்பிய வாழ்க்கை எங்கு கிடைக்கிறது என்பதையும் பொறுத்து இருக்குது.விரும்பிய வாழ்க்கை என்று பாக்கும் போது பலருக்கு சுய விருப்பம் என்டு ஏதும் இருக்கிற மாதிரி தொியவில்லை.எதைச் செய்தால் மற்றவன் மதிப்பான் என்பதில் தான் தேவையும் விருப்பம்.கனடா அவுஸ் பிரித்தானியா போன்ற நாடுகளில் தாங்கள் படித்த படிப்புக்கு ஏற்ற வேலை செய்து வாழபவர்களின் நிலமை வேறு.மற்ற நாடுகளில் பலர் 25 வயதில் இருந்து 50 வயது வரைக்கும் வாழ்க்கைக்கு தயார் படுத்திக் கொண்டு இருக்கிறார்களே ஒளிய இன்னும் வாழத் தொடங்க வில்லை.அதாவது ஏதோ சவுதிக்கோ சிங்கப்பூருக்கோ வேலைக்கு என்று போன மாதிரி.
அதோட இங்கை முக்காவாசிப்போ் உடல் உளைப்புத்தான் (நான் உட்பட)அதுவும் வந்த புதிதில் பாசை தொியாமல் கிடைத் வேலையில் இடம் பிடித்து வீட வேண்டும் என்று அளவுக்கதிகமாக முறியிறது.அது வயதுக்கு மீறிய உடல் பாதிப்பை ஏற்படுத்தி விடும்.எனது நன்பன் ஒருவருக்கு அவர் இப்போ செய்யும் வேலையை நிறுத்தா விட்டால் நிரந்தர முடமாக வேண்டி வரும் என மருத்துவர் சொல்லி விட்டார்.வயது 42 .விட்டால் வேறு வேலை கிடைப்பது கேள்விக்குறி.பென்சனுக்கு இன்னும் 23 வருடங்கள் இருக்கு.அவரின் மனைவி இன்னும் தனிய வெளியில் போய் அலுவல் பாக்க மாட்டார்.இப்படியானவர்களின் தொிவு எப்படி இருக்கும் என்று நீங்களே யோசித்துப்பாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னை பொருத்தவரை எல்லாவற்றிக்கும் எமது மனமே காரணம் என்பேன். எதுவுமே எங்களை தடுக்கும் காரணி கிடையாது.  

இல்லையண்ணா நாங்கள் உண்மையிலேயே அகதிகள் ...........
உயிரோடு இன்னொரு முறை விளையாடும் எண்ணம் இல்லை. அதுக்கு உரிய வயதும் இபோ இல்லை .......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.