Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தோல்வியை ஏற்று அலரி மாளிகையை விட்டுச் சென்றார் மஹிந்த ராஜபக்ஷ!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எது எப்படியாயினும், எமது சொந்தங்களை 2009 இல் அழித்த மகிந்த என்னும் அரக்கன் அகற்றப்பட்டதில் மகிழ்ச்சியே. என்னைப் பொறுத்தவரை இந்தத் தேர்தலில் நடந்த ஒரே நல்ல விடயம் அது மட்டும்தான். மற்றும்படி எதுவுமே மாறிவிடும் என்று நான் சிறிதளவேனும் நம்பவில்லை.

அதோட நிலப்பறிப்பு, ஆட்கடத்தல், புணர் வாழ்வு பெற்ற போராளிகளின் நிம்மதியான வாழ்வு, வாழ்க்கைச் செலவு போன்றவையும் எதிர்பாப்பு.அத்துடன் கொஞ்சம் மூச்சு விடலாம் என்ற நப்பாசை.மற்றும் படி நியாயமான அரசியல் தீர்வு யாரும் தரப்போதில்லை என்று எல்லாருக்கும் தொியும்.

  • Replies 77
  • Views 6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருடைய கதையைப் பார்த்தால் ஏதோ மகிந்தா மட்டும் தமிழரை அழித்தது போலவும்,மைத்திரியோ,மற்றவர்களோ ஒன்றும் தெரியாத அப்பாவிகள் என்பது போல அல்லவா இருக்குது :o

ஏற்கனவே

நீங்களும் வசாங்க பேசலாம் -7 இல்

இந்தநிலைக்கு இவர்கள் வருவார்கள்

வரவேண்டிவரும் என எழுதியிருந்தேன்

வந்துவிட்டார்கள்

இது தொடரும்

இனி  அங்கு ஏதும் அநியாயம் நடந்தால்

அதையும் மூடிமறைப்பார்கள்... :(

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்கள் தமது வாக்குகளை அரசியல் பிரச்சனையை முதன்மைப்படுத்தாது வாழ்க்கைப் பிரச்சனையை முதன்மைப்படுத்தியே வாக்களித்துள்ளனர். இதை TNA சரியாக பயன்படுத்தியது. புலி ஆதாவாளர்களும் எதிர்பாளர்களும் புரிந்து கொள்ளவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

மைத்திரியின் வெற்றி அச்சமூட்டுகின்ற வெற்றி

மைத்திரி, சிங்கள மக்கள் அதிகமாக வாழும் பிரதேசங்களில் வெற்றி பெறவில்லை.

ஆனால் சிங்கள மக்கள் பெருவாரியாக வாழும் அனைத்து இடங்களிலும் வென்றது மகிந்த தான்

பொருளாதார ரீதியில் பிச்சை எடுக்கும் நிலை வரினும் தமிழர்களை வென்றவருக்கே தம் ஆதரவு என்று சிங்கள மக்கள் மீண்டும் காட்டியுள்ளனர்

யாழ்தேவி போன்ற எந்த வசதி வந்தாலும் நாம் சிங்கள மேலாதிக்கவாதியை வரவேற்கப்போவதில்லை என்று தமிழ் மக்களும், எத்தனை அமைச்சர்கள் இருந்தாலும் இனமானம் முக்கியம் என்று முஸ்லிம் மக்களும் நிரூபித்துள்ளனர்.

இனத்துவ ரீதியாக முற்றாக பிளவு பட்டு இருக்கும் சமூகங்களை ஒரே நூலில் கோர்த்தெடுக்கும் வல்லமை மைத்திரிக்கும் இல்லை அவரை இயக்கும் மேற்குலகுக்கும் இல்லை

ஒரே நாடு - பிளவு பட்ட சமூகங்களால் ஒரு நாட்டை ஒருக்காலும் முன்னேற்ற முடியாது

இனி வரும் காலம், மகிந்தவின் காலத்தினை விட கொடியதாக இலங்கைக்கு இருக்கப் போகின்றது

நன்றி நிழலி அண்ணா(FB)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் மக்கள் தமது வாக்குகளை அரசியல் பிரச்சனையை முதன்மைப்படுத்தாது வாழ்க்கைப் பிரச்சனையை முதன்மைப்படுத்தியே வாக்களித்துள்ளனர். இதை TNA சரியாக பயன்படுத்தியது. புலி ஆதாவாளர்களும் எதிர்பாளர்களும் புரிந்து கொள்ளவில்லை.

இதுதான் எனது கருத்தும்

  • கருத்துக்கள உறவுகள்

இனி மைத்திரி என்ன செய்யப் போகிறார் என்பதைப் பார்க்கலாம். நீங்கள் சொன்னமாதிரி சம்பந்தருடன் செய்துகொள்ள்ப்பட்ட எழுதப்படாத  ஒப்பந்தங்களை வெளியே கொண்டுவந்து ஏதாவது செய்வாரா அல்லது மற்றைய சிங்கள தலைவர்கள் போல சிங்களவர்கள் மரம் மற்றையவர்கள் கொடி என்று சொல்லப்போகிறாறா அல்லது வட்டமேசைக்கு வாருங்கள் சதுர மேசைக்கு வாருங்கள் பாராளுமன்றத் தெரிவுக் குழுவிற்கு வாருங்கள் என்று சம்பந்தரை தள்ளாத வயதிலும் அலைக்கழிக்கிறாரா என்று பார்க்கலாம்.

இனி என்ன சுதந்திர கட்சியையும் ஐக்கிய தேசிய கட்சியையும் போட்டி போட்டு யார் ஆட்சியை பிடிப்பது என்னதிலேயே கவனம் போகும்.

எல்லோருடைய கதையைப் பார்த்தால் ஏதோ மகிந்தா மட்டும் தமிழரை அழித்தது போலவும்,மைத்திரியோ,மற்றவர்களோ ஒன்றும் தெரியாத அப்பாவிகள் என்பது போல அல்லவா இருக்குது :o

மைத்திரி வெல்லவேண்டும் என்று யாழில் எழுதியவர்கள் ஆகட்டும் தமிழ் தேசிய கூட்டைமப்பு ஆகட்டும் என்ன எழுதினார்கள் சொன்னார்கள் என்று ஒருக்கா வாசித்து பாருங்கோ .

மைத்திரி வந்தால் தமிழ் ஈழம் தருவார் என்றோ அல்லது மைத்திரியோ மற்றவர்களோ ஏதும் அறியாத அப்பாவிகள் என்றா எழுதினோம் .

இலங்கை மகிந்தா அண்ட் கோ வினால் முடியாட்சி நடத்தப்படுகின்றது ,அதைவிட அரசியல் சாசனத்தையே மாற்றி மூன்றாவது தடவையும் ஜனாதிபதியாக நினைக்கின்றார் .இம்முறை மகிந்தா தேர்தலில் வென்றிருந்தால் அடுத்த ஏழு வருடங்களுக்கு எவராலும் அசைக்கமுடியதவராகிவிடுவார் .அந்த நிலை ஏற்படுவதை முதலில் தடுக்கவேண்டும் .

அதற்காக ஏற்படுத்தப்பட்டதுதான் இந்த எதிரணி .அதில் ஜனாதிபதியாக எவர் போட்டியிட்டிருந்தாலும் அவரை ஆதரித்துதான் எழுதியிருப்போம் .

முன்னர் இதே விடயத்தை பல பதிவுகளில் எழுதி களைத்தும் விட்டோம் .இது தமிழர்களின் தீர்விற்காகன  தேர்தல் அல்ல இலங்கையின் விடிவிற்கான தேர்தல் .

இனி எமது அரசியல்வாதிகளின் கையில் தான் எமக்கான தீர்வு பற்றிய விடயம் தங்கியிருக்கு .

மகிந்தா வந்தால் எமக்கான  தீர்வு மிக விரைவில் என்றும்  பனையால் விழுந்தவனை மாடு ஏறி உழக்க உலகம் ஓடிவரும் என்று கனவு கண்டவர்களுக்கும் எமது மக்கள் கொடுத்த பலத்த அடி . 

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர்களது சாணக்கியத்திற்கு முன்னால் தமிழர்கள் வெறும் பூச்சியம் என்பதை இந்த தேர்தல் மீண்டும் நிரூபித்து உள்ளது.மகிந்தா இவ்வளது காலம் அடிச்சதே காணும் என்று வாழ்க்கையில் செட்டிலாயிடுவார்.பத்து தலைமுறைக்கு இருந்து சாப்பிட சேர்த்து வைத்த சொத்து காணும். ஒரு போர்க் குற்றமும் இல்லை,விசாரனையும் இல்லை.மொத்தத்தில் இந்த தேர்தலில் அவர் தோத்ததால் அவருக்கு லாபமே தவிர நட்டம் இல்லை.

மைத்திரி வந்ததால் தமிழருக்கு என்ன லாபம்?...ஜனாதிபதி ஆட்சியை ஒழிக்கப் போகிறாரா?,விலைவாசியை குறைக்கப் போகிறாரா?,கைது செய்யப்பட்டு ஜெயிலும்,நலன்புரி நிலையங்களில் இருக்கும் தமிழரை விடுதலை செய்யத் தான் போறாரா?...இன்னும் சொல்லப் போனால் மகிந்தா எப்படி ஆட்சி புரிந்தாரோ அதன் படி தான் இவரும் ஆட்சி செய்வார்[குறிப்பாக சொல்லப் போனால் தமிழர் விடயத்தில்].

தமிழ் மக்கள் ஓட்டுப் போடாமல் நிராகரித்திருந்தால் திரும்பவும் மகிந்தா தான் வந்திருப்பார்.முழு இலங்கையையும் அவர் அழிவு பாதைக்கு கொண்டு சென்று இருக்கக் கூடும்,கிளர்ச்சிகள்,புரட்சிகள்,கலகங்கள் அவருக்கு எதிராக ஏற்பட்டு இருக்கும்.அவருக்கு ஒரு சிறிய தண்டனையாவது கொடுத்திருக்கலாம்.அதன் மூலம் தமிழருக்கு எதாவது வழி நிட்சயம் பிறந்திருக்கும். இது ஒன்றுமே இல்லாமல் மகிந்தாவை இந்த தமிழ் மக்கள் தப்ப விட்டுட்டார்கள் என்பது என் கருத்து.இனி மேல் போர்க் குற்றம்,இனப் படுகொலை என்று சொல்லி ஒரு சிங்களவரையும் சர்வதேசத்திற்கு முன் நிறுத்த முடியாது.

Edited by ரதி

இப்படி நினைக்க உங்களுக்கு கேவலமா இல்லையா? நாடு அழிவு பாதையில் சென்று கிளர்ச்சிகள் கலகங்கள் ஏற்பட்டால் பாதிக்கப்போவது தமிழரே.  அப்படி பாதிக்கப்படும் ஒரு தமிழ் குடும்பத்திற்கு உங்கள் தேம்ஸ் நதிக்கரை இடத்தை வழங்கிவிட்டு நீங்கள் உங்கள் குடும்பத்துடன் மகிந்த ஆட்சியின் கீழ் சென்று வாழ தயாரா?? 
 
மைத்திரி வந்தால் தமிழருக்கு தங்க தட்டில் தீர்வு தருவார் என்று இங்கு எவரும் கூறவில்லை. மகிந்தவின் குடும்ப ஆட்சி மூலம் நாடு பாதாளத்தை நோக்கி செல்வதை தடுப்பதே மைத்திரியை ஆதரித்தவர்களின் முக்கிய நோக்கம் . இது கூட்டமைப்புக்கும் சம்பந்தருக்கும் கிடைத்த வெற்றியே. இங்கு பலர் மக்கள் தேர்த்தலை புறக்கணிப்பார்கள் என்றார்கள் பிறகு கள்ள வாக்குகள் தான் தமிழர் பிரதேசத்தில் விழுந்திருக்கும் என்றார்கள். இப்ப பல்டி அடித்து வேறு காரணங்களை முன்வைக்கிறார்கள். இவர்கள் என்றுமே உண்மையை ஏற்கப்போவது இல்லை. 
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் வேற, முகப்புத்தகத்தில ஒருத்தர் இலங்கையில இராணுவ ஆட்சி வர வேணுமாம், இன்னொருத்தர் இரத்த ஆறு ஓட வேணுமாம். ஒருத்தர் இருப்பது அவுசில் மற்றவர் கனடாவில். என்ன கருமம் பிடிச்ச சுயநலவாதி சனம்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் வேற, முகப்புத்தகத்தில ஒருத்தர் இலங்கையில இராணுவ ஆட்சி வர வேணுமாம், இன்னொருத்தர் இரத்த ஆறு ஓட வேணுமாம். ஒருத்தர் இருப்பது அவுசில் மற்றவர் கனடாவில். என்ன கருமம் பிடிச்ச சுயநலவாதி சனம்...

விடுங்க.. அவர்களுக்கும் என்டர்டெயின்மென்ட் வேண்டும்தானே.. பழகிப்போன பொழுதுபோக்கு இதுதான். அவுஸிலும் கனடாவிலும் இருந்து சொல்லி இலங்கையில் (இனி) நடக்கவா போகுது?

  • கருத்துக்கள உறவுகள்

2009 மே க்குப் பின்னிருந்து தமிழ் மக்கள் மகிந்த ஆட்சியை எதிர்த்தே வந்திருக்கிறார்கள். ஒவ்வொரு தேர்தல்களிலும் அதுவெளிப்பட்டுள்ளது. சம்பந்தனுக்காக அல்லது சம்பந்தனின் பேச்சை கேட்டு எல்லாம் தமிழ் மக்கள் மகிந்தவின் ஆட்சியை எதிர்க்கவில்லை. அவரின் ஆட்சி ஏற்படுத்திய  ரணங்களால் எழுந்த எதிர்ப்பே அது. அது 2010.. 2015 தேர்தல்களிலும் வெளிப்பட்டுள்ளது. தேர்தலை புறக்கணிக்கச் சொல்லி எவரும் காத்திரமாக பிரச்சாரங்களை செய்யவில்லை. அவரவர் தங்களின் சொந்த நிலைப்பாடுகளை அறிவித்துவிட்டு தேர்தலில் வாக்களிப்பதில் இருந்து ஒதுங்கிக் கொண்டார்கள். அது அவர்களின் சொந்த..ஜனநாயக முடிவு. இறுதியில்.. சம்பந்தனும் வாக்களிக்கவில்லை. சுகவீனத்தை சாட்டி விட்டார்கள். ஆனால் மைத்திரி வென்றதும்.. அவருக்கு வாழ்த்துச் சொல்ல நேரமிருந்திருக்குது.

தமிழ் மக்கள் தங்கள் வாக்குகளை ஒட்டுக்குழு ஓணாய்களும்.. இராணுவமும் துஷ்பிரயோகம் செய்யலாம் என்ற வகையில் தாம் வாக்களிப்பில் கலந்து கொண்டிருக்கிறார்கள். மேலும்.. சிறீலங்கா தேர்தல் திணைக்களமே தேர்தல் தினத்தன்று வேலை மிணக்கட்டு தேர்தலில் பங்குபற்றி வாக்களிக்க ஒலி பெருக்கிகள் மூலம்.. அறிவித்துள்ளது. இது சாதாரண ஒரு நடைமுறை அல்ல. மக்களை வாக்களிக்க மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கை. இதன் கீழ் தான் மக்கள் தங்கள் வாக்கு பலத்தை மகிந்தவுக்கு எதிராக மீண்டும் பதிவு செய்திருக்கிறாகளே தவிர.. இதெல்லாம் சம்பந்தன்.. ஹக்கீமின் வாய்சவடால்களுக்கு வீழ்ந்த வாக்கு.. அவர்களின் சாணக்கியத்துக்கு மக்கள் போட்ட வாக்கு என்பது அல்ல.

தமிழ் மக்கள் மைத்திரியிடம் இருந்து பெரிசாக எதையும் எதிர்பார்க்கவில்லை. மகிந்தவை தண்டிக்கனும் என்பதே அவர்களின் பிரதான நோக்கம். தமிழ் மக்களுக்கு தெரியும் மைத்திரி.. மகிந்த அரசியல் ரீதியில் வேறுவேறல்ல என்று. ஆனால் மகிந்த ஒரு இனப்படுகொலையை நேரடியாக ஆற்றிவிட்டு ஆட்சி அதிகாரத்திலும் இருந்து கொண்டு தொடர்ந்து தமிழ் மக்களை வதைத்ததை தமிழ் மக்கள் தொடர்ந்து ஏற்றுக் கொண்டிருக்க விரும்பவில்லை என்பதை அவர்கள் ஒவ்வொரு தேர்தல்களிலும் பிரதிபலித்து.. ஒற்றுமை வேண்டி தேசிய தலைவர் இனங்காட்டிய கூட்டமைப்புக்கு வாக்களித்து வருகின்றனர் என்பதே யதார்த்தம். அதில் சம்பந்தன் ஒட்டி இருந்து கூதல் காய்கிறார் அவ்வளவே. அதுதான்.. அந்தளவு தான் அவரின் சாணக்கியம். :icon_idea::)

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி நினைக்க உங்களுக்கு கேவலமா இல்லையா? நாடு அழிவு பாதையில் சென்று கிளர்ச்சிகள் கலகங்கள் ஏற்பட்டால் பாதிக்கப்போவது தமிழரே.  அப்படி பாதிக்கப்படும் ஒரு தமிழ் குடும்பத்திற்கு உங்கள் தேம்ஸ் நதிக்கரை இடத்தை வழங்கிவிட்டு நீங்கள் உங்கள் குடும்பத்துடன் மகிந்த ஆட்சியின் கீழ் சென்று வாழ தயாரா?? 
 
மைத்திரி வந்தால் தமிழருக்கு தங்க தட்டில் தீர்வு தருவார் என்று இங்கு எவரும் கூறவில்லை. மகிந்தவின் குடும்ப ஆட்சி மூலம் நாடு பாதாளத்தை நோக்கி செல்வதை தடுப்பதே மைத்திரியை ஆதரித்தவர்களின் முக்கிய நோக்கம் . இது கூட்டமைப்புக்கும் சம்பந்தருக்கும் கிடைத்த வெற்றியே. இங்கு பலர் மக்கள் தேர்த்தலை புறக்கணிப்பார்கள் என்றார்கள் பிறகு கள்ள வாக்குகள் தான் தமிழர் பிரதேசத்தில் விழுந்திருக்கும் என்றார்கள். இப்ப பல்டி அடித்து வேறு காரணங்களை முன்வைக்கிறார்கள். இவர்கள் என்றுமே உண்மையை ஏற்கப்போவது இல்லை. 

நல்ல பதில் தெனாலி. அருமை.

வெளிநாட்டில் வாழ்ந்து கொண்டு இப்படி கருத்தெழுதுபவர்களை, அவர்களது பிரசாவுரிமையை இரத்து செய்து இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டும். எட்டு வருடங்கள் இன்னும் மகிந்தவின் ஆட்சியில் வாழவிட வேண்டும். அவைகளயும் இந்த கலகம் / கிளர்ச்சியில் பங்கெடுக்க விட வேண்டும். அப்பொழுது தெரியும் வேதனை

  • கருத்துக்கள உறவுகள்

மைத்திரி  வெற்றி, மகிந்தா தாேல்விக்கு காரணம் யாா்? உலகறிந்த உண்மை. அதை நாங்கள் சிலா் ஏற்கத்தயங்குகிறாேம். மனச்சாட்சியுடன் நடந்தால் மகிந்தாவின் இன்றைய நிலையை எதிா்காலத்தில் தவிா்க்கலாம். வெறும் கறிவேப்பிலையாக தூக்கி வீசப்படும் தமிழா்கள்தான் மைத்திரி என்ற வாசனையை பரவ வைத்தது. தாேற்றவன் வென்றவனுக்கு ஒருபாடத்தைசாெல்லிவிட்டுப்பாேகிறான். இவா்கள் இனி ஒன்றாேடாென்று இழுபட்டு திரும்பவும் வேதாளத்தை முருங்கை மரமேற்றலாம். மகிந்தவுக்கு மக்கள் தண்டனை காெடுத்துவிட்டாா்கள். தெய்வத்தின் தண்டனையை எதிா்காெள்ள வேண்டும். மைத்திரி ஒன்றும் தானாக பிரிந்து வரவில்லை அடிபட்ட நாகங்கள் ஒன்றுசோ்ந்து அவரைப் பிரித்தெடுத்தபடியால் ரணிலுக்கும் பிரதமா் யாேகம். எத்தனை உயரக்காெம்பில ஏறி சாகஸம் ஆடினாலும் காசுவாங்க கீழ இறங்கித்தானே வாங்கவேணும்.

2009 மே க்குப் பின்னிருந்து தமிழ் மக்கள் மகிந்த ஆட்சியை எதிர்த்தே வந்திருக்கிறார்கள். ஒவ்வொரு தேர்தல்களிலும் அதுவெளிப்பட்டுள்ளது. சம்பந்தனுக்காக அல்லது சம்பந்தனின் பேச்சை கேட்டு எல்லாம் தமிழ் மக்கள் மகிந்தவின் ஆட்சியை எதிர்க்கவில்லை. அவரின் ஆட்சி ஏற்படுத்திய  ரணங்களால் எழுந்த எதிர்ப்பே அது. அது 2010.. 2015 தேர்தல்களிலும் வெளிப்பட்டுள்ளது. தேர்தலை புறக்கணிக்கச் சொல்லி எவரும் காத்திரமாக பிரச்சாரங்களை செய்யவில்லை. அவரவர் தங்களின் சொந்த நிலைப்பாடுகளை அறிவித்துவிட்டு தேர்தலில் வாக்களிப்பதில் இருந்து ஒதுங்கிக் கொண்டார்கள். அது அவர்களின் சொந்த..ஜனநாயக முடிவு. இறுதியில்.. சம்பந்தனும் வாக்களிக்கவில்லை. சுகவீனத்தை சாட்டி விட்டார்கள். ஆனால் மைத்திரி வென்றதும்.. அவருக்கு வாழ்த்துச் சொல்ல நேரமிருந்திருக்குது.

தமிழ் மக்கள் தங்கள் வாக்குகளை ஒட்டுக்குழு ஓணாய்களும்.. இராணுவமும் துஷ்பிரயோகம் செய்யலாம் என்ற வகையில் தாம் வாக்களிப்பில் கலந்து கொண்டிருக்கிறார்கள். மேலும்.. சிறீலங்கா தேர்தல் திணைக்களமே தேர்தல் தினத்தன்று வேலை மிணக்கட்டு தேர்தலில் பங்குபற்றி வாக்களிக்க ஒலி பெருக்கிகள் மூலம்.. அறிவித்துள்ளது. இது சாதாரண ஒரு நடைமுறை அல்ல. மக்களை வாக்களிக்க மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கை. இதன் கீழ் தான் மக்கள் தங்கள் வாக்கு பலத்தை மகிந்தவுக்கு எதிராக மீண்டும் பதிவு செய்திருக்கிறாகளே தவிர.. இதெல்லாம் சம்பந்தன்.. ஹக்கீமின் வாய்சவடால்களுக்கு வீழ்ந்த வாக்கு.. அவர்களின் சாணக்கியத்துக்கு மக்கள் போட்ட வாக்கு என்பது அல்ல.

தமிழ் மக்கள் மைத்திரியிடம் இருந்து பெரிசாக எதையும் எதிர்பார்க்கவில்லை. மகிந்தவை தண்டிக்கனும் என்பதே அவர்களின் பிரதான நோக்கம். தமிழ் மக்களுக்கு தெரியும் மைத்திரி.. மகிந்த அரசியல் ரீதியில் வேறுவேறல்ல என்று. ஆனால் மகிந்த ஒரு இனப்படுகொலையை நேரடியாக ஆற்றிவிட்டு ஆட்சி அதிகாரத்திலும் இருந்து கொண்டு தொடர்ந்து தமிழ் மக்களை வதைத்ததை தமிழ் மக்கள் தொடர்ந்து ஏற்றுக் கொண்டிருக்க விரும்பவில்லை என்பதை அவர்கள் ஒவ்வொரு தேர்தல்களிலும் பிரதிபலித்து.. ஒற்றுமை வேண்டி தேசிய தலைவர் இனங்காட்டிய கூட்டமைப்புக்கு வாக்களித்து வருகின்றனர் என்பதே யதார்த்தம். அதில் சம்பந்தன் ஒட்டி இருந்து கூதல் காய்கிறார் அவ்வளவே. அதுதான்.. அந்தளவு தான் அவரின் சாணக்கியம். :icon_idea::)

இந்த கருத்து ஊர் நிலைமையோடு ஒத்துபோகுது.

இருந்தாலும் டங்கி மாமாவும் இப்பிடித்தான் சொல்லுறார். சனத்துக்கு மகிந்த மீதுயுள்ள எதிர்ப்புத்தானாம் கூட்டமைப்புக்கு ஆதரவில்லையாம்.

உண்மை என்னவோ இரண்டுக்கும் நடுவில்தான் இருக்கும் போல கிடக்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
அன்று தொடக்கம் சிங்களத்தேர்தல்களின் வெற்றியில் பூரிப்படைவது ஈழத்தமிழர்களின் வழக்கம். இறுதியில் அனைத்து நப்பாசைகளும் தவிடுபொடியாகுவது தான் மிச்சம்.
 
இவரை விட அவர் நல்லவர்.
அவரை விட இவர் நல்லவர்.
இதுதான் ஈழத்தமிழர் வரலாற்றில் நடை பெற்றுக்கொண்டிருக்கின்றது.
 
மைத்திரியின் வெற்றியை ஏன் ஒருசில தமிழர்கள் கொண்டாடுகின்றார்கள் என்று தெரியவில்லை?
 
மைத்திரியின் கூட்டணியில்தான் ஈழத்தமிழர்களை போகத்திற்குபோகம் அழித்தவர்கள் ஒன்று சேர்ந்திருக்கின்றார்கள்.....இவர்களிடமிருந்து ஈழத்தமிழர்களுக்கு விடிவு???
 
காலமும் சூழ்நிலைகளும் மகிந்தவிற்கு கை கொடுத்ததே தவிர...மற்றும்படி......
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

10372270_506013442874044_720819620212724

இந்த நோட்டு செல்லுமா செல்லாதா??  :D  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

மைத்திரி வெல்லவேண்டும் என்று யாழில் எழுதியவர்கள் ஆகட்டும் தமிழ் தேசிய கூட்டைமப்பு ஆகட்டும் என்ன எழுதினார்கள் சொன்னார்கள் என்று ஒருக்கா வாசித்து பாருங்கோ .

மைத்திரி வந்தால் தமிழ் ஈழம் தருவார் என்றோ அல்லது மைத்திரியோ மற்றவர்களோ ஏதும் அறியாத அப்பாவிகள் என்றா எழுதினோம் .

இலங்கை மகிந்தா அண்ட் கோ வினால் முடியாட்சி நடத்தப்படுகின்றது ,அதைவிட அரசியல் சாசனத்தையே மாற்றி மூன்றாவது தடவையும் ஜனாதிபதியாக நினைக்கின்றார் .இம்முறை மகிந்தா தேர்தலில் வென்றிருந்தால் அடுத்த ஏழு வருடங்களுக்கு எவராலும் அசைக்கமுடியதவராகிவிடுவார் .அந்த நிலை ஏற்படுவதை முதலில் தடுக்கவேண்டும் .

அதற்காக ஏற்படுத்தப்பட்டதுதான் இந்த எதிரணி .அதில் ஜனாதிபதியாக எவர் போட்டியிட்டிருந்தாலும் அவரை ஆதரித்துதான் எழுதியிருப்போம் .

முன்னர் இதே விடயத்தை பல பதிவுகளில் எழுதி களைத்தும் விட்டோம் .இது தமிழர்களின் தீர்விற்காகன  தேர்தல் அல்ல இலங்கையின் விடிவிற்கான தேர்தல் .

இனி எமது அரசியல்வாதிகளின் கையில் தான் எமக்கான தீர்வு பற்றிய விடயம் தங்கியிருக்கு .

மகிந்தா வந்தால் எமக்கான  தீர்வு மிக விரைவில் என்றும்  பனையால் விழுந்தவனை மாடு ஏறி உழக்க உலகம் ஓடிவரும் என்று கனவு கண்டவர்களுக்கும் எமது மக்கள் கொடுத்த பலத்த அடி . 

உலக அரசியல் மேடையில் அரேங்கேறும் நாடகத்தை யார் எழுதி இயக்குகிறார்கள்?
என்பதை புரியாது மக்கள் தம்மை தாமே அடித்திருக்கிறார்கள்.
இன்னும் ஒரு 5 வருடம் பொறுத்திருந்தால் ........... இயக்குனர்கள் காட்சியை மாற்றி இருப்பார்கள்.
 
இப்போ தமிழ் மக்கள் ஆசியுடன் இன்னொரு இனவாத அரசு மேடை ஏறுகிறது.
இராணுவ கெடுபிடி குறையும் ...
விலைவாசி குறையும் ...
இதை முன்பிருந்தே நான் எழுதி வருகிறேன்.
 
மக்களில் குறை கூற முடியாது மகிந்த மீது உள்ள வெறுப்பை 
தேர்தலில் காட்டி இருக்கிறார்கள்.
அரசியல் தலைவர்கள் விலை போய்விட்டார்கள்.
தமிழர்களுக்கு இப்படியொரு அரிய சந்தர்ப்பம் இனி வரபோவதே இல்லை. 
 
சும்மா வாள் வைத்திருந்த சாதம் உசையினை ...
மத்திய கிழக்கு அரசனாக அரியணையில் ஆயுத இராணுவ பலத்துடன் ஏற்றியது அமெரிக்காதான் 
அதே ஆயுத பவனியுடன் சாதமின் தலையை எடுத்ததும் அமெரிக்காதான். 
குர்திஷ் இன மக்களை அமெரிக்காவிடம் இருந்து ஆயுதம் வாங்கியே சாதம் அடித்தார்.
இன்று குர்திஷ் போராளிகளுக்கு அமெரிக்கா ஆயுதம் கொடுகிறது.
 
மகிந்த அன் கோவிற்கு (துட்கைமுனுவிட்கு) எதிராக சிங்கள் மக்களும் 
அரசியல் எதிரணியும் ஒன்று கூடிய தருணம் இது ......
ஜெனநாயக நாடகம் மேடையில் அரங்கேறினால் ..........
நாடகம் மட்டுமே பார்க்க முடியும்.
எந்த காட்சிகளையும் யாராலும் மாற்ற முடியாது. 
 
(இது அர்ஜுனுக்கு ஆனா பதில் இல்லை இதற்கு ஒரு பதிலை (குதர்கத்தை) அவரிடம் இருந்து நான் எதிர் பார்க்கவும் இல்லை. இப்படி நினைக்கும் அல்லது இப்படி ஒரு சிந்தனை  ஏன் தவறானது என்பதை சுட்டி காட்டவே எழுதினேன். நல்லதை ஏற்றுகொள்வதில் தவறில்லை........ நல்லது போல் ஒன்றை ஏற்பது  ஏமாறுவது  என்பதாகும்) 
  • கருத்துக்கள உறவுகள்

இப்படி நினைக்க உங்களுக்கு கேவலமா இல்லையா? நாடு அழிவு பாதையில் சென்று கிளர்ச்சிகள் கலகங்கள் ஏற்பட்டால் பாதிக்கப்போவது தமிழரே.அப்படி பாதிக்கப்படும் ஒரு தமிழ் குடும்பத்திற்கு உங்கள் தேம்ஸ் நதிக்கரை இடத்தை வழங்கிவிட்டு நீங்கள் உங்கள் குடும்பத்துடன் மகிந்த ஆட்சியின் கீழ் சென்று வாழ தயாரா??

மைத்திரி வந்தால் தமிழருக்கு தங்க தட்டில் தீர்வு தருவார் என்று இங்கு எவரும் கூறவில்லை. மகிந்தவின் குடும்ப ஆட்சி மூலம் நாடு பாதாளத்தை நோக்கி செல்வதை தடுப்பதே மைத்திரியை ஆதரித்தவர்களின் முக்கிய நோக்கம் . இது கூட்டமைப்புக்கும் சம்பந்தருக்கும் கிடைத்த வெற்றியே. இங்கு பலர் மக்கள் தேர்த்தலை புறக்கணிப்பார்கள் என்றார்கள் பிறகு கள்ள வாக்குகள் தான் தமிழர் பிரதேசத்தில் விழுந்திருக்கும் என்றார்கள். இப்ப பல்டி அடித்து வேறு காரணங்களை முன்வைக்கிறார்கள். இவர்கள் என்றுமே உண்மையை ஏற்கப்போவது இல்லை.

தெனாலி,மற்றும் மைத்திரியை ஆதரிக்கும் அனைவருக்கும் முடிந்தால் இதற்கு நேர்மையக பதில் சொல்லுங்கள்.

இந்த தேர்தலில் மைத்திரியை கொண்டு வந்ததன் மூலம் தமிழர்களுக்கு கிடைக்கப் போறது என்ன?

மகிந்தாவோட இருந்து வந்த மைத்திரி விலையேற்றத்தை உண்மையிலேயே குறைப்பார் என நம்புகிறீர்களா?{குறைத்தால் எனக்கும் மகிழ்ச்சி தான்.)

விலையேற்றம் தான் மகிந்தாவை அகற்றி மைத்திரியைக் கொண்டு வரக் காரணம் என்டால்,அந்த விலையேற்றம் சிங்கள மக்களை பாதிக்கவில்லையா?

ஏன் மைத்திரியால் சிங்கள பகுதிகளில் வாக்குகளை அள்ள முடியவில்லை? பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் மகிந்தாவை வெல்ல முடியவில்லை?

குடும்ப ஆட்சியை தடுப்பது தான் மைத்திரி போன்றவர்களது நோக்கம் என்டால் அந்த குடும்ப ஆட்சி பாதிக்கப் போவது சிங்களவரையும் சேர்த்து தானே!.அப்படி இருக்கும் போது ஏன் பெரும்பான்மை சிங்களவர் மகிந்தாவுக்கு வோட்டு போட்டார்கள்?

மகிந்தாவை வீட்டுக்கு அனுப்பியது மூலம் தமிழர்கள் அவருக்கு தண்டனை கொடுத்திருக்கிறார்கள் என நினைக்கிறீர்களா?

ஆம்,என்டால் இந்த தண்டனை போதுமா?

நான் தமிழ்ர்கள் தங்களுக்குத் தெரியாமலே மகிந்தாவை தப்ப விட்டுட்டார்கள் என்றே நினைக்கிறேன்.

இனி மேல் மகிந்தா மேல் போர் குற்ற விசாரனை முன்னெடுக்க முடியுமா?

மகிந்தா மீது சர்வதேசம் விசாரனையை முன்னெடுக்க மைத்திரி அரசு விடுமா?

மகிந்தா மட்டும் தான் குற்றவாளியா?...சரத்தும்,மைத்தியும் நிரபராதியா?

மைத்திரி,சந்திரிக்கா,ரனில் கூட்டனி மூலம் தமிழர்களுக்கு ஏதாவது நிரந்தர தீர்வு வரும் என எதிர்பார்க்கிறீர்களா?

நீங்கள் குறுகிய கால லாப அடிப்படையில் அதாவது விலையேற்றத்தை குறைப்பார் போன்ற அடிப்படை விசயத்தை வைத்திரி மைத்திரி வந்தது ந்ல்லது என சொல்கிறீர்கள்.நான் நீண்ட கால அடிப்படையில் மகிந்தா ஆட்சியில் இருந்தால் தமிழருக்கு ஒரு நிரந்தர தீர்வு வரும் என்ட அடிப்படையில் என் கருத்தை வைத்தேன்.

தமிழர்களோடு ஒப்பிடுகையில் சிங்களவர்கள் எவ்வளவோ புத்திசாலிகள்.அவர்கள் தாங்கள் பிச்சை எடுக்கும் நிலைக்கு வந்தாலும் கூட மகிந்தாவை ஆட்சியை விட்டு துரத்த வேண்டும் என்டு நினைக்கவில்லை.அவர்கள் நீண்ட கால அரசியல் நலன்களையே கருத்தில் எடுக்கிறார்கள்.

இதற்கு தும்பளையான்,சபேசன் போன்றோரின் பதிலையும் எதிர்பார்க்கிறேன்.நன்றி

:(  ரதி

நீங்கள் நிறைய கேள்விகளை கேட்டுவிட்டீர்கள். இன்றைய காலகட்டத்தில் எல்லோர் மனதிலும் எழும் கேள்விகள்தான் இவை.

இலங்கை அரசியல் களம் தற்போது மேற்குலக மற்றும் இந்திய கரங்களுக்குள் மெதுவாக வரத்தொடங்கியுள்ளது. மகிந்த இருந்திருந்தால் இவை நடைபெற்றிரா. இதில் உள்ளடங்கியுள்ள நன்மை தீமை, சாதக பாதகங்களை ஆய்வாளர்கள் தான் தெளிந்து கூறவேண்டும்.

மேலோட்டமாக பார்க்கும் இடத்து, மகிந்தவின் இழப்பு சிங்கள பேரினவாத அரசாட்சிக்கு கிடைத்த இழப்பாகும். இதுவே வாக்களிக்கப்பட்ட விதமும் தெட்டத்தெளிவாக தெரிவிக்கின்றது. குடும்ப ஆட்சி, ஊழல், அதிகார துஸ்பிரையோகம் போன்றன பெரிய தாக்கம் செலுத்தும் காரணிகள் அல்ல. வன்மம் மிகுந்த சிங்கள மக்கள் இவற்றின் வேதனையை தாங்கிக்கொள்வர்.

மகிந்த இம்முறை தேர்தலில் வென்றிருந்தால், அடுத்த எட்டு வருடங்களுக்கு மேற்குலகும் சரி, இந்தியாவும் சரி வெளியே தள்ளி நிற்க வேண்டியதுதான். போட் சிற்றி என்ற பெயரில், 500 ஏக்கர் விஸ்தீரணமுள்ள கடற் பிராந்தியம் முழுவதும் கட்டி முடிக்க பட்டிருக்கும். அதில் உள்ளடங்கியுள்ள சீன அணு நீர்மூழ்கி தளம், சீன பாதுகாப்பு தளம் என்பன இந்தியா மட்டுமல்ல, இந்து சமுத்திர பிராந்தியத்தில் ஒரு நித்திய போர்முனையை திறந்திருக்கும். மகிந்தவின் வெளியேற்றத்தினூடு அது நிறைவிற்கு வந்துள்ளது.

இவை போன்ற இன்னோரன்ன, கண்களுக்கு புலப்படாத ஒப்பந்தங்கள், இலங்கையின் வலிவை அதிகப்படுத்தியிருக்கலாம். இன்று இவை அனைத்தும் மட்டுப்படுத்த பட்டிருக்கின்றன. சிங்கள மக்களுக்கு இவை பாதகமே.

இன்னொரு கோணத்தில் பார்பதானால், மகிந்தவின் காலத்தில் இலங்கை ஜனநாயக கோட்பாடுகளை கடந்து, ஒருவகை இராணுவ தன்மையுடனான இயங்குதன்மை பெற்றிருந்தது. சகல சிவில் அதிகார மையங்களிலும் இராணுவ வாசம் வீச ஆரம்பித்திருந்தது. அடிப்படையில் இராணுவ சிந்தனை தமிழர்களுக்கு நிரந்தர பாதகமே. உதாரணமாக வட மாகாண சபையின் சகல அதிகார வீச்செல்லைகளும் இராணுவ கரங்களால் வளைக்கப்பட்டிருக்கின்றன.

இதைப்பற்றி நிறைய எழுத வேண்டும். எமது மக்களின் புரிதல் மேலோட்டமாக இன்றி அடிப்படையில் இருந்து கட்டியெழுப்ப பட வேண்டியது முக்கியம்.

இன்று மகிந்த போய் மைத்திரி வந்ததால் நமக்கு கிடைக்கும் உடனடி நன்மை என்ன? உடனடியாக எதுவும் இல்லை. ஆனால் இந்த தேர்தலை புறக்கணித்திருந்தால், என்றும் மீளமுடியா வண்ணம் சிறுகச் சிறுக அழிக்கப்பட்டிருப்போம். இந்த தேர்தலை ஏற்றுக் கொண்டதால் நாம் இலங்கை அரசாட்சியையோ, அல்லது சிங்கள பேரினவாதத்துக்கு அடங்கி போவதாகவோ அர்த்தப்படுத்துதல் தவறானதாகும். இன்று சுதந்திரம் என்ற வெளி மாயத் தோற்றமாகவேனும் உருவாக்கப்பட்டுள்ளது. எமது முயற்சிகள் அதை சரியான முறையில் பயன்பெற தக்கதாக பாவிப்பதே.

போர்க்குற்ற விசாரணைகளை மகிந்த இருக்கும் வரை முன்னெடுக்க முடியாது. மைத்திரி என்ன தான் முடியாது என்று கூறினாலும் இதில் புலம்பெயர் சகோதரர்களின் முழுமூச்சான முயற்சியும், மேற்குலகின் ஆதரவும் எமக்கு தேவை. தாயகத்தில் இருப்பவர்கள் அவர்களின் அரசியலை செய்யட்டும். வாழ்வாதாரங்கள், சமூக பொருண்மிய விடுதலை, மனிதவுரிமை போன்றவை சீராகவும், அதே நேரம் திடமாகவும் முன்னெடுக்கப்பட வேண்டும். இவை வடகிழக்கில் செயற்படும் அரசியல் கட்சிகளின் தலையாய கடமை.

எனவே அரசியல் முடிவுகள் எடுக்கும் போதும் சரி, அரசியல் நிகழ்வுகள் நடந்தேறும் போதும் சரி வெட்டொன்று துண்டு ரெண்டு என்ற நிலைப்பாடு எப்போதும் சரிப்பட்டுவராது. இது மிக சாதுரியமாக, எமது இலக்கினை தவற விடாது சென்றடைய வழிகோலும் நடைமுறைகளை செயலாக்கம் செய்வதாக அமைய வேண்டும்.

நாம் எதிர்நோக்கும் சிக்கல்கள் ஒரு நேர்மையான, கண்ணியமான எதிராளிகளிடமிருந்து வரவில்லை. எமது தெரிவுகளும் அவற்றை வெல்லக்கூடியவையாக இருக்க வேண்டும். பொதுவாகவே அமெரிக்கா இதற்கு ஒரு நல்ல உதாரணம். அவர்களின் கொள்கைகள் வெட்டொன்று துண்டுரெண்டாக இருப்பதில்லை. Globally ஒரு பொது நோக்காக இருந்தாலும் locally வெவ்வேறாக இருக்கும். அவை பல விடயங்களை அணுக வசதியாக இருப்பதை காணலாம்.

தீர்க்கமான  பதில்கள்

நன்றி  ஐயா

நேரத்துக்கும் கருத்துக்கும்..

தொடர்ந்திருங்கள்...........

  • கருத்துக்கள உறவுகள்

ஈழதிருமகன் நல்ல அலசல், பார்வை, தொடர்ந்து எழுதுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்திருமகன் நன்றி உங்கள் பொறுமையான,பொறுப்பான பதிலுக்கு.உங்களிடம் ஒரு கேள்வி தற்போதைய மைத்திரி அரசு அமெரிக்க,மேற்கு சார்பு நிலை எடுத்திருக்கிறது. இது இலங்கைக்கு,ஈழத்திற்கு நல்லதா?..இது நீண்ட கால நோக்கில் பார்க்கும் போது தமிழருக்கு நன்மை பயக்கும் என எதிர் பார்க்கிறீர்களா?

ஏன் என்டால் என்னைப் பொறுத்த வரை அமெரிக்கா இலங்கையில் கால் பதிக்கப் பார்க்கும்.எனக்குத் தெரிந்த வரை அவர்கள் கால் பதித்த எந்த நாடும் உருப்பட்ட சரித்திரம் இல்லை.அமெரிக்கா வந்து திருகோணம்லையில் இருந்து விட்டால் கடைசி வரைக்கும் அதை விட்டுப் போகப் போவதுமில்லை.எமக்கு ஒரு தீர்வு கிடைக்கப் போறதுமில்லை.இது எல்லாம் என்னுடைய கருத்துக்கள் சரியாகவோ,பிழையாகவோ இருக்கலாம்.இது தொடர்பான உங்கள் கருத்து என்ன?...நன்றி

நேற்று மைத்திரியின் வெற்றிக்காக வக்காலத்து வாங்கியவர்கள் எல்லாம் இந்தக் கேள்விக்கு பதில் சொல்லாமல் அமைதியாக இருக்கின்றார்கள்

Edited by ரதி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இணைப்பிற்கு நன்றி நீலப்பறவை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.