Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வில்லிசை "சின்னமணி" இயற்கை எய்தினார்.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தின் கலைப் பெருமையாக கொண்டாடப்பட்ட வில்லுப்பாட்டுக் கலைஞர் நா.கணபதிப்பிள்ளை (வில்லிசை "சின்னமணி") இயற்கை எய்தினார்.

 

roy094btj_zpsetovvlx4.jpg

 

சின்னமணி என அழைக்கப்படும் க. நா. கணபதிப்பிள்ளை (பிறப்பு: மார்ச் 301936யாழ்ப்பாணத்தில் புகழ்பெற்ற ஒரு வில்லிசைக் கலைஞர். நடனம், நாடகம், வில்லிசை போன்ற மூன்று கலைகளிலும் சிறந்து விளங்கினார்.உடுக்கு வாசிப்பதிலும் திறமை பெற்றவர்.

சின்னமணி பருத்தித்துறை மாதனை என்ற ஊரில் நாகலிங்கம், ராசம்மா ஆகியோருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தவர். தனது ஆரம்பக்கல்வியை மாதனை மெதடிஸ்த மிசன் பாடசாலையிலும் உயர்தரக் கல்வியை ஏழாலை உயர்தரப் பாடசாலையிலும் கற்றுக் கொண்டார். 9 வயதிலேயே குறவன் குறத்தி என்ற நாடகத்தில் நடித்து பாராட்டுப் பெற்றார். யாழ் கலாசேத்திராவில் வி.கே.செல்லையாவிடம் கலை நுணுக்கங்களைக் கற்றுக் கொண்ட சின்னமணி, அவரின் வழிகாட்டலுடன் 1949 ஆம் ஆண்டு கொழும்பு றோயல் கல்லூரியில் இடம்பெற்ற கப்பற்பாட்டு நாடகத்தில் நடித்தார். 1951 ஆம் ஆண்டு முதல் கலையுலகில் நுழைந்த சின்னமணி பல மூத்த பெரும் கலைஞர்களோடு இணைந்து நடித்தார். வீரமைந்தன், சரியா தப்பா, தில்பு சுல்தான் ஆகிய சமூக நாடகங்களிலும், காத்தவராயன், அரிச்சந்திரா, ஸ்ரீவள்ளி, சத்தியவான் சாவித்திரி போன்ற சரித்திர நாடங்களிலும் நடித்துப் புகழ் பெற்றார். ஒல்லியான உடலமைப்பைக் கொண்ட இவர் சிறுவயது தொடக்கம் எல்லோராலும் சின்னமணி என்றே அழைக்கப்பட்டார். துப்பதாகே துக்க என்ற சிங்களத் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. யாழ்ப்பாணத்தில் கோவில் திருவிழாக்களிலும், பொதுக் கலை நிகழ்வுகளிலும் இடம்பெறும் சின்னமணி குழுவினரின் வில்லிசை நிகழ்ச்சிகளைக் காண பெரும் திரளாக மக்கள் கூடுவர்.

1954 ஆம் ஆண்டு இரத்மலானை, கொத்தலாவை போன்ற இடங்களிலுள்ள தமிழ்ப் பாடசாலைகளில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார். 1957 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் கூட்டுறவுப் பண்ணைப் பால் சபையில் கணக்காளராகவும் கடமையாற்றியுள்ளார். 1960 ஆம் ஆண்டு ஆசிரியையான அன்னமுத்து என்பவரைத் திருமணம் புரிந்த சின்னமணிக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர். 

http://ta.wikipedia.org/wiki

 

அற்புதக் கலைஞனுக்கு கண்ணீர் அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

காலத்தால் அழியாத அற்புதக்கலைஞர். 

ஆழ்ந்த இரங்கல்கள்..! 

  • கருத்துக்கள உறவுகள்

காலத்தால் அழியாத அற்புதக்கலைஞர். 

ஆழ்ந்த இரங்கல்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

அழ்ந்த அனுதாபங்கள் !

ஆழ்ந்த இரங்கல்கள்!!

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்..!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆழ்ந்த இரங்கல்கள், கண் முன்னே நிற்கிறார் தலை சிறந்த கலைஞர் - சந்தனப்பொட்டுடன்  வெள்ளை வேஷ்டி நஷனல் தான் உடுப்பு சின்ன உருவம்  பார்க்க அம்சமாக இருப்பார்.

முன் வரிசையில் புழுதிமண்ணில் நித்திரை தூங்கி தூங்கி அனுபவித்தது நெஞ்சில் முட்டுகிறது.

ஒவ்வொரு முறையும் வில்லுக்கு அடி போட முதல் முன்னங்கை நஷனலை இழுத்து முழங்கையடியில் சுருக்கி விடுவார்.இவரது சமகாலப் போட்டியாளர் "திருப்பூங்குடி ஆறுமுகம்"(புங்கைநகர்)

 

மாதனை: விஷ்வகர்மா பரம்பரையினர் என்று அறியப் பட்டவர்கள்

 

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள்

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் குரலில்.. இவரின் சில வில்லிசைகளை கேட்ட ஞாபகம்.

 

ஆழ்ந்த இரங்கல்கள். :(

வாழும் வரைக்கும் மங்காப் புகழுடன் வாழ்ந்து பெருவாழ்வு எய்திய கலைஞர் 'சின்னமணி' அவர்களுக்கு அஞ்சலி.

கண்ணீர் அஞ்சலிகள்

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணாருக்கு எங்களது கண்ணீர் அஞ்சலிகள்...!

 

சில நாட்கள் கொழும்பில் அவருடன் லாட்சில் தங்கியிருந்துள்ளேன்.  அருமையான கலைஞர். அவரது "வள்ளி திருமணம்" கேட்க கேட்க அலுக்காது. அவரது நையாண்டிக்கும், நகைச்சுவைக்கும் பெண்ரசிகைகள் கிறங்கிப் போய் இருப்பினம்..!

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்

ஆழ்ந்த இரங்கல்கள்!!

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

கண்ணீர் அஞ்சலிகள்

கண்ணீர் அஞ்சலிகள் 

  • கருத்துக்கள உறவுகள்

அன்னாரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞர் சின்னமணியைப் பற்றிய ஒரு சிறிய பகிர்வு!

 

புங்குடுதீவு கண்ணகியம்மன் கோவில் இரவுத் திருவிழா நேரம்!

 

கண்ணகியைப் பற்றி... சின்னமணி ஐயாவின் வில்லுப்பாட்டு போய்கொண்டிருக்கிறது!

 

நாங்கள் 'சகடைக்குக்' மேலே குந்தியிருந்து வில்லுப்பாட்டுக் கேட்கும் சிறுவர்களாக இருந்த காலம்!

 

கோவலன் கள்வன் என்று கேள்விப்பட்ட கண்ணகி ஓடினாள் என்று சின்னமணி ஐயா கூற....பக்கத்திலிருந்தவர் எங்கே ஓடினாள் என்று கேட்க, வீதியில் தலைமுடியை விரித்தபடி ஓடினாள்!

 

என்ன வீதியில் ஓடினாள்?

 

மதுரைத் தெருக்களெல்லாம் ஓடினாள்!

 

அரண்மனை வீதிகளின் ஓடினாள்!

 

வயல் வெளிகளில் ஓடினாள்!

 

காடு கரம்பையெல்லாம் ஓடினாள்!

 

அப்போதும் பக்கத்தில் இருந்தவர் விடவில்லை!

 

வேறு எங்கெல்லாம் ஓடினாள்?

 

அப்போது சின்ன மணி ஐயா...... மதுரையை எரித்து... இங்கே.. வந்து அமரும் வரை... ஓடிக்கொண்டே இருந்தாள் என்று போட்டாரே ஒரு போடு!

 

கரகோஷம் வானைப் பிழந்தது!

 

அந்த மகா கலைஞனுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்! 

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்

சின்னமணி ஐயா அவர்கள் ஒப்பற்ற கலைஞன் மட்டுமல்ல, யாவரையும் சமனாக மதிக்கத் தெரிந்த பண்பாளர். 

கலையுலகைப் பொறுத்தவரையில் அவர் நாடகம் மூலமாகவே அறிமுகமானார். ஒருமுறை அவர் இயம தர்மராஜனாக சத்தியவான் சாவித்திரி எனும் கூத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது, முன்னால் இருந்து பார்த்துக் கொண்டிருந்த மூதாட்டி ஒருவர் அவரது கர்ஜனயைக் கேட்டு மாரடைப்பால் இறந்ததாக கூறுவார்கள்.

 

ஆரம்பத்தில் வில்லிசையை ஈழத்தின் வட பகுதியில் அறிமுகப்படுத்தியவர் திருப்பூங்குடி ஆறுமுகம் மாஸ்டர் அவர்கள். (திருப்பூங்குடி என்றால் புங்குடுதீவு ஆகும்.) அப்போது அவருக்கு பக்கப்பாட்டுடன் கூடிய நகைச்சுவையாளராக இருந்தவர் சின்னமணி அவர்கள்.

 

80களில் நாம் இளைஞராக சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்தில் வருடா வருடம் சங்காபிசேகம் செய்வது வழமை. தவிலுக்கு சுந்தரமூர்த்தி செற் (அவர்தான் நாம் சொல்லும் சினிமா பாடல்களை ஊதித் தள்ளுவார். கானமூர்த்தி பிறகு..) மற்றும் சில நிகழ்வுகளும் இரவு இடம்பெறும்.

அப்போது வடபகுதியில் ஸ்ரீதேவி வில்லிசைக் குழு என்று ஒரு குழு தோன்றி இளம் பெண்களிடையே பிரபலமாகிக் கொண்டிருந்தது. வில்லிசைப்பவர் ஒரு அந்தணர், இளைஞர்... வில்லிசையின்போது குடுமியை அவிழ்த்து, அந்நாளைய கமலஹாசன் ஸ்ரைலில் தலை வாரி இருப்பார். பெண்கள் பக்கம் பார்த்துத்தான் கதை சொல்லுவார். பாடும்போது பரத நாட்டியம் ஆடுவதுபோல இடைக்கிடை முகத்தை வல இடமாக அசைப்பார்... அதற்கு பெண்கள் பக்கத்தில் இருந்து கரகோசமும், எமது பக்கத்தில் இருந்து கூச்சலும் கிளம்புவது வழமை!  :o

 

80 ஆம் ஆண்டு என்றுதான் நினைக்கிறேன். எமது சங்காபிஷேக உற்சவத்துக்கு சின்னமணி அவர்களின் வில்லைசையை கொண்டு வந்தோம். முதலிலேயே மற்ற வில்லிசையாளரைப்பற்றியும் கூறி இருந்தோம்.. அவர் சிரித்துவிட்டு கூறினார் 'பலர் எனது வில்லிசையை பதிவு செய்து சிறிது மாற்றி செய்கிறார்கள். சிலர் நான் இடையில் இருமினால்.. அதைக் கூட இருமிக் காட்டுகிறார்கள்'.

அன்றைய வில்லிசைக்கு சின்னமணி அவர்களின் பக்கப்பாட்டுடன் கூடிய நகைச்சுவையாளராக வந்தவர், பலம்பெயர்ந்து வந்து ஜேர்மன் தமிழ் கலைஞர்களுள் புகழ்பெற்று விளங்கிய 'லூஸ்மாஸ்ரர்' புகழ் அமரர் ஐசக் இன்பராசா அவர்கள். பாட்டாலும் கதையாலும் சின்னமணி அவர்கள் கட்டிப்போட, நகைச்சுவையால் இன்பராசா அவர்கள் அசத்த... அந்த நிகழ்வு மறக்க முடியாததொரு நிகழ்வு.

இருபத்து வயது இளைஞர்கள் ஏதோ சொல்லுறாங்கள் என்று அலட்சியப்படுத்தாமல், தனது தனித்தன்மையை அங்கே நிலைநாட்டிய அந்த கலைஞனின் சிறப்பு என்னால் மறக்க முடியாததொன்று.

சில வருடங்களுக்கு முன் சுவிசுக்கு வந்து அங்குள்ளவர்களுடன் இணைந்து சில நிகழ்வுகள் செய்தார். அதில் 'வள்ளி திருமணம்' என்றொரு நிகழ்வு எனக்கு வீடியோ கசற்றாக கிடைத்து.. அதை யாழ் இணையத்திலும் இணைத்திருந்தேன்.

 

கசற் பார்க்க பார்க்க என்று எங்கோ போவிட்டுது... :(

 

யாழ்லயும் அந்த வீடியோவை காணவில்லை.

(மோகன் அண்ணா.. அந்த வீடியோ பைல் இருந்தால் இணைச்சுவிடுங்கோ!!  :o )

  • கருத்துக்கள உறவுகள்

வில்லிசையை.... தனக்கே உரிய பாணியில், பலரையும் விரும்பி ரசிக்க வைத்த.....
அமரர் சின்ன மணி ஐயாவுக்கு, ஆழ்ந்த இரங்கல்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.