Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புங்குடுதீவில் மாணவி கடத்தப்பட்டு சடலமாக மீட்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
எதை எழுதுவதென்றே தெரியவில்லை ...........
அஞ்சரனின் சகோதரி என்று இப்போதான் தெரிகிறது.
 
  • Replies 169
  • Views 17k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்..! 

  • கருத்துக்கள உறவுகள்

எதை எழுதுவதென்றே தெரியவில்லை ...........
அஞ்சரனின் சகோதரி என்று இப்போதான் தெரிகிறது.

இங்கு  களத்தில் அஞ்சரன் என்ற பெயரில் எழுதும் உறவு

தனது மகனின் பெயரிலேயே எழுதுகின்றார்

எனவே அவரது மகனின்  ஒன்றுவிட்ட சகோதரியே (அதாவது பெரியம்மாவின் மகளே)

இறந்தவராவார்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி விசுகு உங்கள் தகவலுக்கு. யாழ்கள அஞ்சரனுக்கு என்ன முறை என சற்று குழம்பியே இருந்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த  இரங்கல்கள்..

உன்னைக்காக்கமுடியாத என்னை மன்னித்துவிடு தாயே...

இவரது பாடசாலைக்கான பாதுகாப்பை அண்மையில் தான் செய்து முடித்திருந்தோம்...

ஆள் நடமாட்டமற்ற பாதைகளால் இவர்   போன்றவர்கள் பயணிப்பது எமது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டிருந்தபோதும்..

என்ன செய்வது நாலு பேர் தான் எல்லாவற்றையும் செய்ய

தெரிந்தே பலிகொடுத்துள்ளோம் எனும்போது கோபம் கோபமாய்  வந்து துளைக்குது யாரை நோவது ?

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்!!!!அஞ்சரனுடைய குடும்பத்தின் துயரத்தில் எனது குடும்பமும் பங்கு கொள்கிறது.புத்தம் புதிய மலரை கசக்கி எறிந்த கயவர்களுக்கு கடும் தண்டனை கொடுக்கப்படல் வேண்டும்.2009 மே இற்குப் பிறகு இப்படியான சமூகச் சீர் கேடுகள் தமிழர் தாயகம் எங்கும் பரவலாக நடை பெறுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.., உங்களது துயரங்களில் நாமும் பங்கு கொள்கின்றோம்...!

தகவல்களை விளக்கமாக அளிக்கும் விசுகுவுக்கும் நன்றிகள்...!

  • கருத்துக்கள உறவுகள்

தனிப்பட்ட ஒருவரின் அற்பமான இச்சைக்காக அநியாயமாக ஒரு உயிர் பறிக்கப்பட்டுள்ளது.

எத்தனை கனவுகளுடன் அந்தப்பிள்ளை தனது எதிர்காலத்தை எண்ணி வாழ்ந்திருக்கும்

என நினைக்கும் போது நெஞ்சம் விம்முகின்றது.

கண்ணிரஞ்சலிகள்

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்!!!!அஞ்சரனுடைய குடும்பத்தின் துயரத்தில் எனது குடும்பமும் பங்கு கொள்கிறது.புத்தம் புதிய மலரை கசக்கி எறிந்த கயவர்களுக்கு கடும் தண்டனை கொடுக்கப்படல் வேண்டும்.2009 மே இற்குப் பிறகு இப்படியான சமூகச் சீர் கேடுகள் தமிழர் தாயகம் எங்கும் பரவலாக நடை பெறுகின்றது.

இந்தக்கயவர்களின் குடும்பங்கள் புலத்தில் இருந்தால் இதன் வலி அவர்களுக்க உணர்த்தப்படணும்..

இவர்களது குடும்பங்கள் பகிரங்கப்படுத்தப்படணும்

பிரான்சிலிருந்தால் எனக்கு அறியத்தாருங்கள்....

கண்ணீர் அஞ்சலிகள்!

DOC150515_15052015084513_Page_1.jpg

யோககுமார் (அஞ்சரனின் தந்தை) அருட்செல்வி (பிரான்ஸ்) தம்பதியினரின் பெறாமகள் ஆவார்.. யோகா (பிரான்ஸ்) சித்தப்பா என அஞ்சரனின் தொலைபேசி இலக்கம் மரண அறிவித்தலில் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
சின்னசிறு சிறுமிக்கு இப்படி செய்த இந்த ஊத்தை நாய்களை, இங்கு மத்தியகிழக்கில் கொடுப்பதுபோல் கடும் தண்டனை கொடுக்கப்பட வேண்டும். எந்தளவு துடிதுடித்து இந்தக் குழந்தை தன் உயிரை விட்டிருக்கும். நினக்கவே என் ரத்தம் கொதிக்கறது.
 
பெற்றோர்கள் இனிமேழும் இம்மாதிரியான சம்பவங்கள் நடக்க விடக்கூடாது
 
அழந்த அனுதபங்கள் மகளே
  • கருத்துக்கள உறவுகள்

அந்நிய ஆக்கிரமிப்பிலிருக்கும் ஒரு சமூகத்தில் சீர்கேடுகளையும், கயவர்களையும் அந்த ஆக்கிரமிப்புச் சக்தியே வளர்த்துவிடுவதாலும், கண்டும் காணாமல் இருப்பதாலும், பாதிக்கப்பட்ட அந்த சமூகம் மேலும் மேலும் பாதிப்பிற்கு உள்ளாக வேண்டியிருக்கிறது.

நண்பர் அஞ்சரனுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழந்த இரங்கல்கள்!

அந்தப் பெண்பிள்ளையின் ஆத்மா சாந்தியடையட்டும் !

  • கருத்துக்கள உறவுகள்

விசர்பிடித்த நாய்களுக்கு நீதிமன்றத்தில் வழக்காடி சிறைத்தண்டனை பெற்றுக் கொடுப்பது வீண் செலவு.. நேர விரயம்.

அன்புச்சகோதரியின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன்

இவரின் இழப்பு ஒவ்வொரு தமிழனின் வீட்டில் நடந்த இழப்பாக கருதப்படுகின்ற போதும், ஒரு சில எளியதமிழனே இதை செய்திருப்பது மிகக்கேவலமான விடயம்

மக்கள் இடம்பெயர்ந்து காடுபத்திபோயிருக்கும் அழகியதீவகப்பகுதிகளில் இவ்வன்செயல்கள் தொடர்ச்சியாக இடம்பெறுகின்றன

இந்நேரத்தில் உறவுகளிடம் ஒரு அன்பான, நியாயமான கோரிக்கையை வைக்கலாம் என நினைக்கின்றேன்

"ஈழத்தில் உள்ள உங்கள் வீடு வளவுகளை துப்பரவு செய்து பராமரிப்பதன் மூலமோ அல்லது முடியாதவிடத்து அதை அங்குள்ளவர்களுக்கு நியாயமான விலையில் வித்துவிடுவது இவ்வாறான பாழடைந்த பிரதேசங்களை குறைக்க உதவியாக இருக்கும்."

அன்பு உறவு அஞ்சரனுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன்

Edited by Surveyor

கள உறவு அஞ்சரனுக்கும், இப்பெண் பிள்ளையின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். இத்துயரத்தைத் தாங்கும் மன வலிமையை இறைவன் உங்களுக்கு அளிக்கட்டும். 

இவர்களது குடும்பங்கள் பகிரங்கப்படுத்தப்படணும்

பிரான்சிலிருந்தால் எனக்கு அறியத்தாருங்கள்....

விசுகு நீங்களா தன்நிலை மறந்தது. 
 
ஒரு அல்லது சில கயவர்களின் மூர்க்க வெறிக்குப் பலியான இச்சிறுமியின்பால் அனுதாபமும் கொலையாளிகளின் மீது கோபம் கொள்வதும் நியாயமானது. அதற்காக அந்த கொலையாளிகளின் குடும்பத்தினரை அவமானப்படுத்த முயற்சிப்பது நியாயமா? சில வேளைகளில் அந்தக் குடும்பம் இந்தக் கயவனின் செய்கையால் கூனிக் குறுகி அயலவர்களை நிமிர்ந்து கூட பார்க்கமுடியாமல் முடங்கி இருக்கலாம். அவர்களைப் பகிரங்கப்படுத்துவது தவறு.
 
ஆனால் குற்றவாளி தண்டிக்கப்பட்டே ஆகணும். அவனுக்கு கிடைக்கும் தண்டனை மற்றவர்களுக்கும் ஒரு பாடமாக இருக்க வேண்டும்.
 
கடைசியாக, நாம் இதற்கு என்ன செய்யப் போகின்றோம்? அஞ்சலியுடன் நின்று விடப்போகின்றோமா?
 
இவ்வாறான பாலியல் பலாத்கார கொலைகள், வாள்வெட்டுக் கலாச்சாரம், போதைவஸ்துகள் போன்றவை இன்று எமது தாயகத்தில் மலிந்து விட்டன. இவை கருவறுக்கப்பட வேண்டும். 
 
எப்படி? தெரியாது
யாரால்? அதுவும் தெரியாது ஆனால் இந்தப் புல்லுருவிகள் அகற்றப்படவே வேண்டும். புலம்பெயர்ந்த நாங்கள் ஏதாவது செய்யலாமா? இத்திரியை வாசிப்பவர்கள் ஏதாவது கருத்துக்கள்/திட்டங்கள் இருந்தால் ஆரோக்கியமாக எழுதலாமே?
 
இக்கொலையானது எமது தாயகத்தில் கடைசியாக இருக்க வேண்டும். இங்கு இரு விடயங்கள் முக்கியமானவை.
 
முதலாவது - புலிகள் இப்போது தாயகத்தில் இல்லை. அதனால் புலிகள் இருந்திருந்தால் இப்படி நடக்காது என்பது அவசியமற்ற கருத்து. புலிகள் இல்லாத தற்போதைய சூழலில் நாம் என்ன செய்யலாம் என்பதே முக்கியம்.
 
இரண்டாவது - இக்கொலையில் மறைமுகமாக இலங்கை அரசின் கரங்களும் உள்ளது. இவ்வாறான கலாச்சாரத்தை எம்முள் புகுத்தியது முதல் குற்றவாளிகளை கண்டும் காணாமலும் விடுதல் அல்லது குற்றவாளிகளை கண்டு பிடிப்பதில் அக்கறையின்மை வரை அரசாங்கத்தின் மீது பதியப்படும் குற்றங்கள்.
 
நிச்சயமாக எம்மாலும் இதற்கு ஏதாவது செய்யமுடியும். நண்பர்களே இங்கு அஞ்சலி செலுத்துபவர்கள் முதல் இச்செய்தியை அறிந்து மனம்குமுறும் ஒவ்வொரு மனிதன் சார்பிலும் கெஞ்சிக் கேட்கின்றேன். ஏதாவது செய்யணும். உதாரணமாக டெல்லியில் நடைபெற்ற பலாத்காரம்+கொலை சமூக வலைத்தளங்களினூடாக எவ்வளவு தாக்கத்தை இந்தியாவில் ஏற்படுத்தியிருந்தது. ஏன் குற்றவாளிகளிற்கு அதிகபட்ச தண்டனையும் கிடைத்தது.
 
வெறுமனே அஞ்சலிகள் மட்டுமா இல்லை இத்திரியை உங்கள் கருத்துக்களால் ஆரோக்கியமாக கொழுந்து விட்டெரிய செய்வீர்களா? இக் கொழுந்து இதுபோன்ற தீயவர்களை எரிக்க உதவும்.
 
பிகு: இது எனது மனக்குமுறல். ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றுகின்றது. ஆனால் என்னவென்பது தெரியவில்லை. உங்களில் யாருக்காவது தோன்றலாம் - எழுதுங்கள்
  • கருத்துக்கள உறவுகள்

aazhntha anuthapankal. sorry tamil font not working

உங்கள் ஆதங்கம் புரிகிறது

எனக்கு இன்று வந்து கொண்டிருக்கும் தொலைபேசிகள் கேட்ட கேள்வியைத்தான் இங்கு பதிந்திருந்தேன்

அவர்களது குடும்பத்தைவிட்டு இந்த கயவர்கள் அப்புறப்படுத்தப்படணும்

அந்தக்கயவர்களுக்கு இவர்கள் மூலம் எந்தவித உதவியும் கிடைக்காமல் செய்யணும்...

ஒன்றை மட்டும் சொல்லமுடியும்

இனி இந்தக்கயவர்களுக்கு எனது ஊரில் வாழ்வில்லை

வேறு ஊர்களுக்கு வராது பார்த்துக்கொள்ளுங்கள்.....

காட்டு மிராண்டிக்கூட்டம் ஒரு சிறு பிள்ளையை இப்படி கொடுமைப்படுத்தி கொலை செய்திருக்கிறார்களே, சொந்த இனத்தையே கொடுமை பண்ண துணிச்சிட்டுதுகள். இதுகளை எல்லாம் அணு அணுவா சித்திரைவதை பண்ணி கொல்லனும்....

கள உறவு அஞ்சரனுக்கும், இப் பிள்ளையின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

Edited by செவ்வந்தி

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நிலை தொடர்வதற்கு ஆக்கிரமிப்பாளன் மட்டும் காரணமல்ல.

உண்மையான சமூக நல்நோக்கம் கொண்ட அரசியல் தலைமைத்துவமின்மையும் ஒரு காரணம்.

அத்தோடு சமூக ஆர்வலர்கள் செயற்திறன் அற்ற நிலையில் இருப்பதும் இன்னொரு காரணம்.

சிறீலங்கா காவல்துறையை நம்பி இருந்தால்.. இப்படியான குற்றங்களை தடுத்து நிறுத்த முடியாது.

வடக்குக் கிழக்கு மாகாண சபைகளின் கீழ் காவல்துறை அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டு மாகாண காவல்துறை சர்வதே நிபுணத்துவ உதவியுடன் அமைக்கப்பட வேண்டும். மேலும் தனியார் பாதுகாப்புக்கு துறையினர் கொண்டு ஊர்கள்.. கிராமங்கள் கண்காணிக்கப்படுவதும்.. குற்றவாளிகளை.. சந்தேக நபர்களை உடனடியாக கைது செய்யவும் நீதி முன் நிறுத்தவும் செய்ய வேண்டும்.

அல்லது தற்காலிக முயற்சியாக..........

வெளிநாடுகளில் உள்ளது போல்.. சந்தேகிக்கப்படும்... ஆட்கள் உலாவும் மக்கள் நடமாட்டம் குறைந்த இடங்களில் வாகன ரோந்து அணிகளை அனுப்பி.. சந்தேகத்துக்கு இடமானவர்களை தடுத்து நிறுத்தி சோதிக்கும் அதிகாரத்துடன் கூடிய.. உள்ளூர் மக்களைக் கொண்ட தொண்டர் பொலிஸ் துணைப்படை ஒன்றை மாகாண சபை நிறுவிக் கொள்வது நல்லது. அதில் முன்னாள் போராளிகளையும் உள்வாங்கி மதிப்புக்குரிய ஊதியத்துடன் அவர்களை பணிக்கு அமர்த்துவதோடு... சமூகம் தேசம் பற்றி உண்மையான அக்கறையையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

யாழ் பல்கலைக்கழக சமூக பீடங்கள்.. சும்மா வெட்டிக்கு இருப்பதிலும்.. சமூக ஆய்வுகளை மேற்கொண்டு.. மாகாண அரசுக்கும்.. காவல்துறைக்கும்.. தனியார் பாதுகாப்பு துறையினருக்கும்... சிவில் அமைப்புக்களுக்கும்.. சமூக நிலை குறித்தும்.. எதிர்கால திட்டங்கள் குறித்தும் பிரேரிக்க கிரமமாகச் செயற்பட வேண்டும்.

தொண்டு அடிப்படையில் உள்ளூர் மக்களைக் கொண்ட பாதுகாப்பு விழிப்புக்குழுக்களை அமைத்து.. மக்கள் நடமாட்டம் அற்ற பகுதிகளில் மொபைல் ரோந்து அணிகளை உருவாக்கி.. மாணவிகள்.. இளம் பெண்கள்.. சிறுவர்கள்.. சிறுமிகள்.. மீதான கவனிப்பையும் பாதுகாப்பையும் கூட்ட வேண்டும். அவர்களுக்கு காவல்துறையோடு.. தனியார் பாதுகாப்பு.. மாகாண தொண்டர் பாதுகாப்பு காவல்துறையோடு.. நேரடித் தொடர்புக்கும் வழி சமைக்க வேண்டும்.

ஆபத்தான இடங்களினூடு பயணிக்கும் பள்ளி மாணவர்களுக்கு பாதுகாப்பான பயண ஒழுங்குகளை செய்யவும்.. அபாய எச்சரிக்கை சாதனங்களை வழங்கவும் பள்ளி நிர்வாகங்கள் கட்டாயப்படுத்தப்படுவதோடு அதற்கான நிதி உதவிகளையும் பெற்றுக் கொடுக்க வேண்டும். பாதுகாப்பு கமராக்கள் அடங்கிய ரோந்து வாகனங்களை பாடசாலை நேரங்களில் அபாய வீதிகளில் பயன்படுத்தி சந்தேகத்துக்கிடமான நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுதலும் முன்கூட்டிய எச்சரிக்கைகளும் நடவடிக்கைகளும் எடுக்கப்படுதல் அவசியம்.

பாழடைந்த கட்டங்கள்.. பாவனைக்குட்படாத பயணப் பாதைகள் தொடர்பில் மக்களை எச்சரிக்கும் எச்சரிக்கை குறியீடுகள்.. வைக்கப்பட்டு.. மக்கள் அவ்விடங்களை பாவிக்க தடுப்பதோடு.. அவ்வாறான.. கட்டிடங்கள் தொடர்பில் மாகாண அமைச்சு.. ஒரு முழுமையான விசாரணை மேற்கொண்டு.. அவ்வளங்களை மக்கள் பாவிக்க பகிர்ந்து அளிக்க வேண்டும்.

மேலும்.. போதைப்பொருள் கடத்தல்.. சட்டவிரோத மதுபாவனை.. விபச்சாரம் போன்றவை கடத்தப்படுதல்.. விற்கப்படுதல்.. பாவிக்கப்படுதகல்.. குறித்து.. அனைத்து வழிமுறைகளும் ஆராய்ந்து தடுக்க நடவடிக்கைகள்.. இதய சுத்தியோடு மேற்கொள்ளப்படுவதோடு.. இவை சம்பந்தப்பட்ட.. நீதித்துறை.. காவல்துறை.. சமூகப் பாதுகாப்பில்..  சிங்கள இராணுவப் பிரிவுகளின் தடையீட்டை முற்றாக தவிர்க்க அழுத்தங்கள் சர்வதேச ரீதியில் சிறீலங்கா அரசுக்கு கொடுக்கப்பட செய்ய வேண்டும்.

இராணுவம் சிவில்.. ஜனநாயகச் சூழலை தமிழ் மக்கள் ருசிப்பதை தடுக்கிறது என்பதை இனங்காட்டும்... சரியான பிரச்சாரங்கள் சர்வதேச மட்டத்தில் எடுக்கப்படுவதோடு.. வடக்குக் கிழக்கிற்கு விஜயம் செய்யும் தூதுவர்களுக்கு சரியான ஆதாரங்களோடு இவை அறிக்கைகளாகக் கையளிக்கப்பட்டு.. சர்வதேச அழுத்தப் பொறிமுறை ஒன்றுக்குள் சிங்கள இராணுவத்தையும் அரசையும் கொண்டு வருவதன் மூலம் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்படும் சமூக அநியாயங்களை தமிழ் மக்களே தடுத்து நிறுத்தும் நிலையை தோற்றுவிக்கலாம்.

வாள்.. கத்தி.. மற்றும் கனரக ஆயுதங்களின் பாவனைக்கு தனியார்... பொலிஸ் அனுமதி பெறப்பட வேண்டும். அவை இன்றி வைத்திருக்கப்படும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உலோக மீள் சுழற்சிக்கு அனுப்பப்படுதல் அவசியம்.

இதையெல்லாம்... உண்மையில் சமூக அக்கறை இனப்பற்றிருந்தால்.. இன்றில் இருந்தே சாத்தியமாக்கலாம். புலிகளும் தேவையில்லை.. மைத்திரியின்.. நல்லாட்சியும் தேவையில்லை. :icon_idea::rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

கள உறவு அஞ்சரனுக்கும், இப் பிள்ளையின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

கள உறவு அஞ்சரனுக்கும், இப் பிள்ளையின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். 

பச்சை மட்டையால வெழுக்கனும் யாழ் சந்தில முட்டி இருத்தி கழுத்துல விபரம் எழுதி தொங்கவிடனும். இதுகளை உடன சுட கூடாது அவமானபட்டு கூனிக்குறுகி சாகனும். மற்றவர்களுக்கும் ஒருபாடமா அமையனும் அமைக்கனும்!

  • கருத்துக்கள உறவுகள்

வெறுமனே அஞ்சலிகள் மட்டுமா இல்லை இத்திரியை உங்கள் கருத்துக்களால் ஆரோக்கியமாக கொழுந்து விட்டெரிய செய்வீர்களா? இக் கொழுந்து இதுபோன்ற தீயவர்களை எரிக்க உதவும்.
 
பிகு: இது எனது மனக்குமுறல். ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றுகின்றது. ஆனால் என்னவென்பது தெரியவில்லை. உங்களில் யாருக்காவது தோன்றலாம் - எழுதுங்கள்

ஜீவன் சிவா உங்கள் மனக்குமுறல் மட்டுமல்ல பல லட்சக்கணக்கான தமிழர்களின் மனக்குமுறலும்  தான் இங்கே அடங்கியிருக்கின்றது.

இன்று சிங்கள அரசு நல்ல பிள்ளை என்ற முகமூடியில் ஒளிந்திருப்பதால் இந்தப் பிள்ளையின் கொடுமைக்கு உடந்தையாக  இருப்பவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்துவதாகக் கூறி நல்ல பெயரைத் தக்க வைத்துக் கொள்ளும்.

ஆனால் நாளை இவர்களுடைய முகமூடி மாறும் போது நடைபெறப்போகும்  இப்படியான செயல்களை அவர்கள் மூடி மறைத்து விடுவார்கள். ஆகவே அதிகாரம் எங்கள் கைக்குள் வரும் வரை இப்படியான செயல்களை யாராலும் கட்டுப்படுத்தவோ முற்றாகவோ  ஒழிக்கவோ முடியாது.

எமது மக்களை எமது பூமியை நாங்கள் ஆளும்போதும் கூட இப்படியான நிகழ்வுகள் நடைபெறலாம். ஏனென்றால் ஈனச்செயல்களைச் செய்பவர்கள் எல்லா தேசங்களிலும் இருக்கின்றார்கள்.ஆனால் இப்படியான நிகழ்வுகளைத் தடுப்பதற்கான முன்னேற்பாடுகளை  ஏற்கனவே செய்யும் போது அதன் வீரியத்தைக் குறைக்கலாம்.

இந்த முன்னேற்பாடுகள் சிறுவர்கள் முதல் முதியோர் வரை இணைக்கப்பட்டுச் செயற்படுத்தப்பட வேண்டும். கிராமம் கிராமமாக முன்னெடுக்கப்படல் வேண்டும். சகல மக்கள்  மட்டத்திலும் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான புடிந்துணர்வு அதிகரிக்கப்படல் வேண்டும்.

இந்தக் கோரச்செயல் நினைத்த  நேரத்தில் நடந்திருக்க முடியாது. ஏற்கனவே நல்ல முறையில் திட்டமிட்டு இந்தப்பிள்ளையின் போக்குவரதுப்பாதை மற்றும் நேரம் ஆகியவை  நன்கு அவதானிக்கப்பட்டு செய்யப்பட்டிருக்கின்றது.

ஏற்கனவே பணத்திற்காகக் கொலை கொள்ளை போன்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இந்தக் கைது கூட ஒரு நாடகமாக இருக்கலாம். சிலவேளைகளில் உண்மையாவும் இருக்கலாம். இது பிரச்சனை அல்ல.

ஆனால் இப்படிக் கொலை செய்யும் அளவிற்கு உடந்தையாக இருப்பவர்களைக் கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டாமா? வேறு ஊரில் இருந்து அதுவும் ஒரு தீவுப்பகுதிக்கு இவர்கள் உள்நுழைந்தது அந்த ஊரில் இருக்கும் மக்களுக்குத் தெரிந்திருந்தாலும் அவர்களைப் பற்றி முறைப்பாடு செய்வதற்கு அந்த ஊரில் ஒரு காவல்த்துறை அலுவலகம் கூட இல்லையே. ஆனால் ராணுவ முகாம் மட்டும் கட்டாயம் அங்கு இருக்கும் என நினைக்கின்றேன்.

அரச இயந்திரம் மக்களின் அன்றாட வாழ்வாதாரத்தை உறுதி செய்வதில்  அக்கறை செய்ய வேண்டுமா இல்லை பயங்கரவாத முக மூடியில் நாட்டைத் தன்பிடியில் வைத்திருப்பதற்காக ராணுவத்தையும்

அந்த ராணுவத்திற்கு காட்டிக் கொடுப்பதற்காக சில ஜென்மங்களையும் ஊக்கிவிப்பதா என்ற கேள்வி இப்போது எல்லோரிடமும் எழுகின்றது.

இப்போது கூட வட மாகாண  அரசிடம் பொலிஸ் அதிகாரம் இல்லாத நிலையில் அவர்களால்  கூட இப்படியான கொலையாளிகளுக்கான தண்டனையை சுயமாக நிறைவேற்ற முடியாத கையறுந்த நிலையில் இருக்கின்றார்கள்.

மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தல்  

கிராமம் தோறும் மக்களைக் கண்காணிப்பில் ஈடுபடுத்துதல்

பெற்றோர்கள் பிள்ளைகளிடம் அன்னியமாக இருக்காமல்

நாளாந்தம் அவர்களுடைய நிலமைகளை அவதானித்தல்

பிள்ளைகள் தங்கள் மீது  சந்தேகமான முறையில் யாராவது நடந்து கொள்ளும் போது அதை உடனே பெற்றோருக்கு அறியத்தருதல்

அரசியல் நோக்கற்ற அதிகபட்சமான தண்டனை

போன்றவற்றால் இப்படியான கோரச்செயலகளைக் கட்டுப்படுத்தலாம்.   

  • கருத்துக்கள உறவுகள்

வெப்ப வலய நாடுகளில் இத்தகைய குற்றங்கள் நடப்பது அதிகம் என்றே நினைக்கிறேன். அமெரிக்க கண்டத்திலும் இதனைக் காணலாம். மெக்சிகோ, கொலம்பியா போன்ற நாடுகளில் காணப்படும் வன்முறை அளவு கனடாவில் காணப்படுவதில்லை.

இவ்வளவு ஏன்.. ஐக்கிய அமெரிக்காவின் மேற்கில் (சற்று வெப்பமான காலநிைலயைக் கொண்டது) காணப்பட்ட வன்முறை குளிரான பகுதிகளில் காணப்படவில்லை இந்த மேற்குப் பகுதியை wild west என்று அழைத்தார்கள். இதன் காரணமாகவே நெவாடா, அரிசோனா போன்ற மாநிலங்களில் இன்றும் மரணதண்டனை முறை உள்ளது.

ஆகையால் இதற்கு நோர்வேயில் உள்ள தீர்வு சரிவராது. அப்படியென்றால் முழத்திற்கு முழம் காவல்துறை நிற்கவேண்டும்.

முன்பு சமூகம் சார்ந்த ஒரு பாதுகாப்பு இருந்தது. போருக்குப்பின் அது இல்லாமல் போய்விட்டது. இதை மீளக் கட்டியெழுப்பினால் மட்டுமே இத்தகைய குற்றங்களைக் குறைக்க முடியும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.