Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2016 ஆம் ஆண்டுக்குள் தீர்வை பெற்றுத்தருவோம் - இரா.சம்பந்தன்

Featured Replies

sammanthan_2.jpg

தமிழ்­பேசும் மக்கள் வட­க்கு, கி­ழக்கில் இம்­முறை நல்­ல­தொரு வெற்­றியை ஈட்­டித்­த­ரு­வார்­க­ளே­யானால் 2016ஆம் ஆண்டு தமிழ் மக்­க­ளுக்­கான தீர்வை நிச்­சயம் பெற்­றுத்­த­ருவோம் என்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் திரு­கோ­ண­மலை மாவட்ட முதன்மை வேட்­பா­ள­ரு­மா­கிய இரா.சம்­பந்தன் தெரிவித்தார்.

நடை­பெ­ற­வுள்ள தேர்தல் செயல்­முறை தொடர்பில் கட்­சியின் மாவட்ட கிளைக் காரி­யா­ல­யத்தில் நேற்­றைய தினம் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் வேட்­பா­ளர்கள் மற்றும் ஆத­ர­வா­ளர்கள் மத்­தியில் விளக்­க­ம­ளித்து உரை­யாற்றும் போதே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தனது அர­சியல் பய­ணத்தை முடிக்க விரும்­பு­கி­றது. கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம் போன்­ற­வர்கள் தமது அர­சியல் பய­ணத்தை இப்­பொ­ழுது தான் ஆரம்­பித்­துள்­ளோ­மென்று கூறு­கி­றார்கள். எம்மைப் பொறுத்­த­வரை எமது அர­சியல் பய­ணத்தை தொடர்ந்தும் நீடிக்க முடி­யாது. எமது அர­சியல் பய­ணத்தை முடிக்க விரும்­பு­கிறோம்.

தொடர்ந்தம் நீட்­டிக்­கொண்­டு­போக நாம் விரும்­ப­வில்லை. வடக்கு கிழக்­கி­லுள்ள தமிழ் மக்கள் நடை­பெ­ற­வுள்ள தேர்­தலில் உயர்ந்த வெற்­றி­யொன்றை கூட்டமைப்புக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும். அவ்­வாறு தரு­வார்­க­ளானால் 2016ஆம் ஆண்­டுக்குள் எமது மக்­களின் பிரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்­வொன்றை கண்டே தீருவோம். அதற்கு மக்கள் ஆத­ரவு எமக்கு வேண்டும்.

நடை­பெ­ற­வுள்ள தேர்தல் மிக முக்­கி­ய­மா­ன­தாகும். இந்த தேர்தல் மூலம் ஏற்­படும் விளை­வுகள் எதிர்­கா­லத்தில் ஒரு தாக்­கத்தை ஏற்­ப­டுத்தும். இதனை எமது அர­சியல் பய­ணத்தில் முக்­கி­ய­மான மைல் கல்­லாக கரு­த­வேண்டும். யுத்தம் முடிந்த பின்னர் நடை­பெற்ற தேர்­தல்­களில் கிழக்கு மாகா­ண­சபை தேர்­தலும் வட மாகாண சபை தேர்­தலும் மிக முக்­கி­யத்­துவம் வாய்ந்­த­வை­யாகும். எமது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தை இந்த மாதம் இறுதி வாரத்தில் வெளி­யி­ட­வுள்ளோம். அதில் எமது அர­சியல் இலக்கு உட­னடித் தேவைகள் தமிழ் மக்­களின் நிலைப்­பா­டுகள் அபி­லா­ஷைகள் தொடர்பில் தெளி­வாக கூறுவோம்.

எங்­களைப் பொறுத்­த­வரை நாம் ஒரு திற­மான வெற்­றியைப் பெற­வேண்டும். எமது இலக்கு 20 ஆச­னங்­க­ளாகும். கொழும்பில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்புபோட்டியிடாமைக்கு என்ன காரணம்?

எங்கள் கவனம் முழு­வதும் வட­கி­ழக்கை நோக்­கி­யதாகும். வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் பூரண இறைமை பெற்று போதிய சுயாட்சி அதி­கா­ரத்தை பெற்று தாமே தம்மை ஆளும் அதி­கா­ரத்தை உண்­டாக்கும் வகையில் இந்த தேர்தல் பயன்படுத்தவேண்டும். வடக்கு­கி­ழக்­குக்கு வெளியே நாம் அதிக மக்­களைக் கொண்­ட­வர்­க­ளாக காட்­டினால் வட­கி­ழக்கில் நாம் எடுக்க வேண்­டிய உறு­தி­யான நிலை பல­வீனம் அடைந்து விடும். அக்­கா­ர­ணத்தின் நிமித்­தமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேல் மாகா­ணத்தில் போட்­டி­யி­ட­வில்லை. போட்­டி­யிட்­டி­ருந்தால் இன்­னு­மொரு தேசி­யப்­பட்­டி­யலை நாம் பெற்றுக் கொள்ள வாய்ப்பு ஏற்­பட்­டி­ருக்கும். வடக்கு ­கி­ழக்கு மக்கள் அடைய வேண்­டிய உரிமை பல­வீனம் அடைந்­து­வி­டக்­கூ­டாது என்­ப­த­னா­லேயே நாம் போட்­டி­யி­ட­வில்லை.

வடக்­குக்கும் கிழக்­குக்கும் திரு­கோ­ண­மலை ஒரு பால­மாக அமைய வேண்டும். வடக்கில் எது­வித பாதிப்பும் ஏற்பட முடி­யாது. இது தமிழ் மக்கள் பெரும்­பான்­மை­யாக வாழும் பிர­தே­ச­மாகும். அது போன்­றதே மட்­டக்­க­ளப்பு மாவட்டம். மட்­டக்­க­ளப்பில் 75 வீத­மான மக்கள் தமிழ் மக்கள் என்­பதை யாம­றிவோம். இந்த இரண்டு தமிழ்ப்­பி­ர­தே­சத்­துக்கு இடையில் பால­மாக அமை­வது திரு­கோ­ண­மலை. இப்­பாலம் பல­மாக இருக்க வேண்டும். இது பல­மாக அமைய தெற்கும் வடக்கும் உத­வி­யாக இருக்க வேண்டும். இப்­பா­லத்தை பல­மாக வைத்­தி­ருப்­பதில் தமிழ் மக்­க­ளு­டைய பங்­க­ளிப்பு அதி­க­மாகும். திரு­கோ­ண­மலை மக்கள் 80 வீதம் வாக்­க­ளிப்­பார்­க­ளாக இருந்தால், நாம் இரண்டு ஆச­னங்­களை இம்­மா­வட்­டத்தில் பெற­மு­டியும். தமிழ் மக்­களே இதில் ஆர்வம் கொண்­ட­வர்­க­ளாக இருக்க வேண்டும்.

திரு­கோ­ண­ம­லையில் பல தமிழ்க் கட்­சிகள் போட்­டி­யி­டு­கின்­றன. ஈ.பி.டி.பி கட்சி, தமிழர் விடு­தலைக் கூட்­டணி மற்றும் கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­ப­லத்தின் தமிழ்க் காங்­கிரஸ் என்பவற்றைக் குறிப்பிடலாம்.அகில இலங்கை தமிழ் காங்­கி­ரஸின் கொள்­கையும் அவர்­களின் செயற்­பா­டு­களும் அர­சாங்­கத்­துடன் இணைந்து செயற்­ப­டு­வதாகும், அதில் அமைச்சர் பதவி ஏற்­பது, ஒற்­றை­யாட்சி முறை­யொன்றை ஏற்றுக் கொள்­வது என்பன உள்ளன. இதுதான் அவர்­களின் கொள்கை செயற்­பாடு. அந்த அடிப்­ப­டையில் தான் ஜி.ஜி பொன்­னம்­பலம் செயற்­பட்டார்.

செல்வா–பண்டா, செல்வா –டட்லி ஒப்­பந்­தங்­களை எதிர்த்தார். எமது இனத்தை மண்ணை பாது­காப்­ப­தற்­காக இந்த ஒப்­பந்­தங்கள் தந்தை செல்­வாவால் மேற்­கொள்­ளப்­பட்­டன. தந்தை செல்­வாவின் முக்­கி­ய­மான நோக்கம் வட­கி­ழக்கில் வாழும் தமிழ் மக்­களின் அடை­யா­ளங்கள் மாற்­றி­ய­மைக்­கப்­ப­டக்­கூ­டாது என்­பதாகும். அதற்காகவே அந்த ஒப்­பந்­தங்கள் மேற்­கொள்­ளப்­பட்­டன. இதை அகில இலங்கை தமிழ்க் காங்­கிரஸ் எதிர்த்­தது. சமஷ்டி கேட்ட போது ஜி.ஜி.பொன்­னம்­பலம் எதிர்த்தார். இன்று அவ­ரு­டைய சின்­னத்தில் கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம் போட்­டி­யி­டு­கிறார்.

சைக்கிள் சின்­னத்தில் இரண்டு தேசம் ஒரு நாடு என்று கூறும் தமிழ் மக்கள் தேசிய முன்­னணி இப்­பொ­ழுது போட்­டி­யி­டு­கி­றார்கள். தமிழ்க் காங்­கிரஸ் சின்­னத்தில் கஜேந்­திர குமார் பொன்­னம்­பலம் தான் இப்­பொ­ழுது அர­சியல் பய­ணத்தை ஆரம்­பித்­துள்ளேன் என்று கூறுகிறார். எங்களைப் பொறுத்தவரை நாம் எமது அரசியல் பயணத்தை முடிக்கின்றோம். எனது கணிப்பின்படி 2016ஆம் ஆண்டு முடியும் முன் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய நியாயமான அரசியல் தீர்வை ஏற்படுத்தி எமது மக்கள் போதிய சுயாட்சியைப் பெற்று வடகிழக்கு பிராந்தியத்தில் தங்கள் ஆட்சியை நடத்த கூடிய நிலைமையை ஏற்பட வேண்டும். ஏற்படுத்துவோமெனக் கூறுகின்றோம் என்றார். இந்த நிகழ்வில் கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி,வேட்பாளர் க.துரைரட்ண சிங்கம் ஆகியோரும் உரையாற்றினர்.

http://www.virakesari.lk/articles/2015/07/17/2016-ஆம்-ஆண்டுக்குள்-தீர்வை-பெற்றுத்தருவோம்

  • Replies 51
  • Views 3.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

1977 ஆம் ஆண்டு ,அடுத்த தேர்தல் தமிழீழத்தில் தான் என்று  உங்கன்ட கட்சிகாரார்களும் ,நீங்களும்சொன்னதை நான் மறக்கவில்லை...........என்ன அடுத்த வருடம் மன்மத வருடமே?

  • கருத்துக்கள உறவுகள்

இவர் ஆயுள் கால சிங்கள பாராளுமன்ற எம்பியாக இருக்க பிரச்சனை ஒன்று இருக்கத்தானே வேண்டும். அப்ப தான் இப்படிச் சொல்லிச் சொல்லி தமிழ் மக்களை சிங்களவனையும் முஸ்லீமையும் கொண்டு வதை வதைச்சு வாக்கு வாங்கலாம்.

இவருக்கு ஒரு துணிவு தேர்தலில் வென்றிட்டா தான் என்னவும் பண்ணலாம்.. யார் கேட்கிறது என்று. எனி மக்கள் கேட்க வேண்டும்.. தேர்தல் வாக்குறுதிகளை குறித்த காலத்துக்குள் நிறைவேற்றாட்டி.. எல்லோரும் கூண்டோடு மக்கள் வாக்குகளால் தந்த பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் இன்றேல் மக்கள் நீதிமன்றம் சென்றாவது இவர்களை தண்டிக்க சட்டம் வேண்டும். அப்படி ஒரு சட்டம் இருந்திருந்தால்.. அமிர்தலிங்கம் போன்றதுகளை சுட வேண்டியே வந்திராது. :innocent::grin:

அன்றைய மன்னராட்சில் மன்னன் மக்களை ஆண்டான். இன்றைய அமெரிக்க சன நாய் அகத்தில் மக்களை முட்டாள்களாக்கி சிலர் மன்னர்களாகி சர்வாதிக்காரம் செய்கின்றனர். வாக்குப் போட்ட மக்கள் 5... 5 வருசத்துக்கு அங்கலாய்க்க வேண்டி உள்ளது. இன்றைய அமெரிக்க சன நாய் அகம்.. உலக மக்களுக்கு போதுமான உரிமையை வழங்கவில்லை. மக்கள் போடும் ஒவ்வொரு வாக்கிற்கும்.. ஒரு பெறுமதி வேண்டும். மக்கள் ஆணையை பெறும் ஒருவர் அதனை நிறைவேற்றவில்லை என்றால் மக்கள் அவரை நிராகரிக்கவும்.. உடனடியாக பதவியில் இருந்து நீக்கவும் உரிமை வேண்டும். இன்றேல் சன நாய்கமும் சர்வாதிகாரமும் ஒன்று தான். :grin:

சம்பந்தன் அப்ப அப்ப இப்படி சொல்லுவார் பாருங்கோ ....கூத்தாடி தானே எப்படியும் புரளலாம் ... .

தமிழ்பேசும் மக்கள் வடக்கு, கிழக்கில் இம்முறை நல்லதொரு வெற்றியை ஈட்டித்தருவார்களேயானால் 2016ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கான தீர்வை நிச்சயம் பெற்றுத்தருவோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமாகிய இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

நடைபெறவுள்ள தேர்தல் செயல்முறை தொடர்பில் கட்சியின் மாவட்ட கிளைக் காரியாலயத்தில் நேற்று வியாழக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் விளக்கமளித்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது அரசியல் பயணத்தை முடிக்க விரும்புகிறது. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றவர்கள் தமது அரசியல் பயணத்தை இப்பொழுது தான் ஆரம்பித்துள்ளோமென்று கூறுகிறார்கள். எம்மைப் பொறுத்தவரை எமது அரசியல் பயணத்தை தொடர்ந்தும் நீடிக்க முடியாது. எமது அரசியல் பயணத்தை முடிக்க விரும்புகிறோம். தொடர்ந்தம் நீட்டிக்கொண்டுபோக நாம் விரும்பவில்லை.

வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் நடைபெறவுள்ள தேர்தலில் உயர்ந்த வெற்றியொன்றை கூட்டமைப்புக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும். அவ்வாறு தருவார்களானால் 2016ம் ஆண்டுக்குள் எமது மக்களின் பிரச்சினைக்கான அரசியல் தீர்வொன்றை கண்டே தீருவோம். அதற்கு மக்கள் ஆதரவு எமக்கு வேண்டும்.

நடைபெறவுள்ள தேர்தல் மிக முக்கியமானதாகும். இந்த தேர்தல் மூலம் ஏற்படும் விளைவுகள் எதிர்காலத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். இதனை எமது அரசியல் பயணத்தில் முக்கியமான மைல் கல்லாக கருதவேண்டும். யுத்தம் முடிந்த பின்னர் நடைபெற்ற தேர்தல்களில் கிழக்கு மாகாணசபை தேர்தலும் வட மாகாண சபை தேர்தலும் மிக முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.

எமது தேர்தல் விஞ்ஞாபனத்தை இந்த மாதம் இறுதி வாரத்தில் வெளியிடவுள்ளோம். அதில் எமது அரசியல் இலக்கு உடனடித் தேவைகள் தமிழ் மக்களின் நிலைப்பாடுகள் அபிலாஷைகள் தொடர்பில் தெளிவாக கூறுவோம்.

எங்களைப் பொறுத்தவரை நாம் ஒரு திறமான வெற்றியைப் பெறவேண்டும். எமது இலக்கு 20 ஆசனங்களாகும்.

கொழும்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடாமைக்கு என்ன காரணம்?

எங்கள் கவனம் முழுவதும் வடகிழக்கை நோக்கியதாகும். வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் பூரண இறைமை பெற்று போதிய சுயாட்சி அதிகாரத்தை பெற்று தாமே தம்மை ஆளும் அதிகாரத்தை உண்டாக்கும் வகையில் இந்த தேர்தல் பயன்படுத்தவேண்டும்.

வடக்குகிழக்குக்கு வெளியே நாம் அதிக மக்களைக் கொண்டவர்களாக காட்டினால் வடகிழக்கில் நாம் எடுக்க வேண்டிய உறுதியான நிலை பலவீனம் அடைந்து விடும். அக்காரணத்தின் நிமித்தமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேல் மாகாணத்தில் போட்டியிடவில்லை.

போட்டியிட்டிருந்தால் இன்னுமொரு தேசியப்பட்டியலை நாம் பெற்றுக் கொள்ள வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். வடக்கு கிழக்கு மக்கள் அடைய வேண்டிய உரிமை பலவீனம் அடைந்துவிடக்கூடாது என்பதனாலேயே நாம் போட்டியிடவில்லை.

வடக்குக்கும் கிழக்குக்கும் திருகோணமலை ஒரு பாலமாக அமைய வேண்டும். வடக்கில் எதுவித பாதிப்பும் ஏற்பட முடியாது. இது தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசமாகும். அது போன்றதே மட்டக்களப்பு மாவட்டம். மட்டக்களப்பில் 75 வீதமான மக்கள் தமிழ் மக்கள் என்பதை யாமறிவோம்.

இந்த இரண்டு தமிழ்ப் பிரதேசத்துக்கு இடையில் பாலமாக அமைவது திருகோணமலை. இப்பாலம் பலமாக இருக்க வேண்டும். இது பலமாக அமைய தெற்கும் வடக்கும் உதவியாக இருக்க வேண்டும். இப்பாலத்தை பலமாக வைத்திருப்பதில் தமிழ் மக்களுடைய பங்களிப்பு அதிகமாகும்.

திருகோணமலை மக்கள் 80 வீதம் வாக்களிப்பார்களாக இருந்தால், நாம் இரண்டு ஆசனங்களை இம்மாவட்டத்தில் பெறமுடியும். தமிழ் மக்களே இதில் ஆர்வம் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.

திருகோணமலையில் பல தமிழ்க் கட்சிகள் போட்டியிடுகின்றன. ஈ.பி.டி.பி கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தமிழ்க் காங்கிரஸ் என்பவற்றைக் குறிப்பிடலாம்.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் கொள்கையும் அவர்களின் செயற்பாடுகளும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதாகும், அதில் அமைச்சர் பதவி ஏற்பது, ஒற்றையாட்சி முறையொன்றை ஏற்றுக் கொள்வது என்பன உள்ளன. இதுதான் அவர்களின் கொள்கை செயற்பாடு. அந்த அடிப்படையில் தான் ஜி.ஜி பொன்னம்பலம் செயற்பட்டார்.

செல்வா–பண்டா, செல்வா –டட்லி ஒப்பந்தங்களை எதிர்த்தார். எமது இனத்தை மண்ணை பாதுகாப்பதற்காக இந்த ஒப்பந்தங்கள் தந்தை செல்வாவால் மேற்கொள்ளப்பட்டன. தந்தை செல்வாவின் முக்கியமான நோக்கம் வடகிழக்கில் வாழும் தமிழ் மக்களின் அடையாளங்கள் மாற்றியமைக்கப்படக்கூடாது என்பதாகும். அதற்காகவே அந்த ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இதை அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் எதிர்த்தது. சமஷ்டி கேட்ட போது ஜி.ஜி.பொன்னம்பலம் எதிர்த்தார். இன்று அவருடைய சின்னத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போட்டியிடுகிறார். சைக்கிள் சின்னத்தில் இரண்டு தேசம் ஒரு நாடு என்று கூறும் தமிழ் மக்கள் தேசிய முன்னணி இப்பொழுது போட்டியிடுகிறார்கள்.

தமிழ்க் காங்கிரஸ் சின்னத்தில் கஜேந்திர குமார் பொன்னம்பலம் தான் இப்பொழுது அரசியல் பயணத்தை ஆரம்பித்துள்ளேன் என்று கூறுகிறார். எங்களைப் பொறுத்தவரை நாம் எமது அரசியல் பயணத்தை முடிக்கின்றோம்.

எனது கணிப்பின்படி 2016ம் ஆண்டு முடியும் முன் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய நியாயமான அரசியல் தீர்வை ஏற்படுத்தி எமது மக்கள் போதிய சுயாட்சியைப் பெற்று வடகிழக்கு பிராந்தியத்தில் தங்கள் ஆட்சியை நடத்த கூடிய நிலைமையை ஏற்பட வேண்டும். ஏற்படுத்துவோமெனக் கூறுகின்றோம் என்றார்.

இந்த நிகழ்வில் கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி, வேட்பாளர் க.துரைரட்ணசிங்கம் ஆகியோரும் உரையாற்றினர்.

http://www.tamilwin.com/show-RUmtyHSaSVnq7H.html

 

ஐ சாம் தாத்தாவின் குசும்புக்கு அளவிலை .....

வோட்டு பொறுக்கி அரசியல் ......

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன் ஐயாவுக்கு ஒருவிடையத்தைத் தெளிவாக உணர்கின்றார், அதாவது தமிழர்வாழும் வடக்குக் கிழக்குப்பகுதியில் பெரும்பான்மையான பாராளுமன்ற ஆசனங்களைக் கைப்பற்றப்போவதில்லை என்பதை. ஆகவேதான் இனப்பிரச்சனைத் தீர்வுக்கான காலநிர்ணயத்தை அடுத்தவருட முடிவிற்குள் என தீர்ப்போம் எனக்கூறுகிறார். அதாவது தமிழ்மக்கள் இருபது பாராளுமன்றத் தொகுதிகளிலும் எங்களை வெற்றிபெறவைக்கவில்லை இல்லையெண்டால் பிரச்சனையைத்தீர்த்திருப்போம் எனக்கூறுவார், பின்பு அடுத்த பாராளுமன்றத்தேர்தலில் அடுத்தவருடத்துக்குள்.......... புள்ளடிக்கடவுள் இருக்குமட்டும் எங்களுக்குத்திருவிழாதான் சுமந்திரா.

சிங்களம்மீதான போர்க்குற்றக்குற்றச்சாட்டு அதற்குச் சமாந்தரமான இன அழிப்பு இனச்சுத்திகரிப்பு இவைகளுக்கான விசாரணையின் பின்னரான பிரிந்துபோதல் ஆகியவற்றுக்கான நியமங்களுக்கு ஈடாக ஒப்புக்குச் சப்பாணியான ஒரு தீர்வை தமிழ்மக்கள் தலையில் கட்டுவது இவைபோன்ற சர்வதேசத்தினதும் தமிழர்விரோததேசமாம் இந்தியாவினதும் நிகழ்ச்சிநிரலுக்கேற்றாற்போல் கூட்டமைப்புத் தாளம்போடுகின்றது.

சிலவேளை அடுத்தவருடத்தில் எதுவுமேஇல்லாத தீர்வினை கூட்டமைப்புப் பெற்றுத்தருமாகில் தமிழர்மீதான சிங்களத்தின் போர்க்குற்றம் அதனுடன் தொடர்புபட்ட இனவழிப்பு ஆகியவற்றின் உண்மைத்தன்மையைத் தாரைவார்த்தே அத்தீர்வு அமையும்.

 

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் அன்றாட பிரச்னை  இராணுவ பிரசன்னத்தை குறைத்தல் போன தேர்தல் முழக்கம். இப்ப  குறைந்த காலத்திலேயே தீர்வா? எப்படி சாத்தியம் யாரோ ரெடி மேட்  ஆக வைத்திருக்கிறார்களா? 1977 இல் இருந்து இதே கோஷம் தான். நாமும் இந்த படித்த மேதாவிகள் எங்களுக்கு ஏதாவது பெற்றுத் தருவார்கள் என்று காத்திருக்கின்றோம். ஒன்றை மட்டும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள் தமிழரின் ஒற்றுமைக்காகவும், தலைவரின் உருவாக்கம் என்பதனால்தான்  கூட்டமைப்புக்கு வாக்கு, உங்களின் வாக்குறுதிகளுக்கு அல்ல!!!

முடிந்தால் முதலில் ராணுவ பிரசன்னத்தை குறைக்க பாருங்கள் .

நம்பிக்கைதான் வாழ்க்கை .

குழப்புகின்ற கோஸ்டிகள் இல்லாததால் சாத்தியம் ஆகத்தான் சந்தர்ப்பம் அதிகம் .

  • கருத்துக்கள உறவுகள்

நம்பிக்கைதான் வாழ்க்கை .

குழப்புகின்ற கோஸ்டிகள் இல்லாததால் சாத்தியம் ஆகத்தான் சந்தர்ப்பம் அதிகம் .

சாத்தியமானால் நல்லம்......ஆனால் ஜனநாயக முறைப்படி குழப்புகிற கோஸ்டிகள் மற்றப்பக்கம் உண்டுதானே ......

  • கருத்துக்கள உறவுகள்

பல்வேறு கட்சிகளாகப் பிரிந்து நிற்கும் தமிழர்களையே ஒன்றிணைத்துக் கொண்டு செல்லமுடியாதவர்  2016ம் ஆண்டுக்குள் தமிழ்மக்களின் பிரச்சினைக்கான அரசியல் தீர்வொன்றை கண்டே தீருவாராம். வேறுபட்ட கருத்தாளர்களையும் ஒன்றிணைத்து அணைத்துச்  செல்லும் யாழ்களத்துக்குள்ள தகுதியைக்கூட எட்டமுடியாத சம்பந்தர் அவர்கள், வாக்குப் பிச்சை கேட்பதற்கு வேசம்போடுவதை இன்றைய தமிழ்மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்பது சந்தேகமே. சிங்களத்தை நம்பி வாக்குறுதி கொடுத்துப் பின்னர் அதனை நிறைவேற்ற முடியாது சமாளித்துவரும் படலம் 67 ஆண்டுகளாகத் தொடர்வதை அனைத்துத் தமிழ்மக்களும் அறிவர். சம்பந்தர்குழு தங்களது உண்மையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வாக்குக்கேட்டுத் தோற்றாலும் அது அவர்களுக்குப் பெருமைதரும்.  

 

 

  • கருத்துக்கள உறவுகள்

2016ம் ஆண்டுக்குள் தீர்வை பெற்றுத்தருவோம்!- இரா. சம்பந்தன் உறுதி!

 

 

உந்த அரசியல் விளையாட்டுக்கு நாங்க வரல..

உண்மையான நேர்மையான வாக்குறுதி என்றால்

அப்படிச்செய்யமுடியாது போனால் என்ன செய்வோம் என்றும் இருக்கணும்...

 

சொன்னபடி 2016க்குள் தமிழ்மக்களுக்கு தீர்வை செய்தாலும் சரி

செய்தாது போனால் கொடுத்த உறுதிமொழிப்படி நடந்தாலும் சரி

சம்பந்தர் ஐயாவை நான் தலைவராக ஏற்றுக்கொண்டு நடப்பேன்.

இது எனது உறுதிமொழி.

 

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர்கள் ஒருபோதும்  தீர்வினை தர மாட்டார்கள். தாம்லபூத் தட்டில் தீர்வினை வைத்து சம்பந்தன் ஜயாக்கு வழங்கப்போவதும் இல்லை. இருப்பதை பறிப்பதே அவர்களின் நோக்கமாகும்!!! எமக்கான உரிமையை மீண்டும் அடித்துதான் பெறவேண்டும்!! தேர்கால வாக்குறுதிகள் இவை!!!!

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பின் தோல்விக்குச் சம்பந்தரின் இந்த உரையே போதுமானது.
இன்றைய கூட்டமைப்பினால் ஈழத் தமிழ் மக்களுக்கு எந்த விடிவும் வரப்போவதில்லை. அவர்கள் தங்கள் பாராள மன்றப் பிரதிநிதுத்துவத்தை உறுதி செய்ய அள்ளி விடும் வாக்குறுதிகளை மக்கள் நம்புவது மக்களின் துரதிர்ஷ்டம்.

ஒரு வேளை வெற்றிபெற்று 2016 க்குள் தீர்வைப் பெற்றுத் தராவிட்டால் கூட்டமைப்பிலிருந்து சம்பந்தர் ஒய்வு பெறச் சம்மதமா ?

  • கருத்துக்கள உறவுகள்

அதுதான் சொல்லுறம்ல தீர்வைப் பெற்றுத் தருவம்னு! :innocent:பிறகென்ன வழவழன்னு பேச்சு?:grin: 

ஒன்றில் நடந்தது நடந்துவிட்டது இனி ஆக வேண்டியதை  பார்ப்போம் என்று இருக்கவேண்டும் அல்லது எங்கே பிழை நடந்தது என்று சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து பார்க்கவேண்டும் .

இரண்டும் இல்லாமல் இடையில் நின்று உள்ளதையும் குழப்பகூடாது .இந்த தேர்தலில் மக்கள் யாரை தேர்ந்து எடுக்கின்றாகளோ அவர்கள் யாரகாக இருந்தாலும் அவர்களை முன்னிறுத்தி அரசியல் செய்வதுதான் ஏதாவது பலனை தமிழர்களுக்கு தரும் .

அதற்கு இங்கு பலர் தயாராக இல்லை .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இரண்டும் இல்லாமல் இடையில் நின்று உள்ளதையும் குழப்பகூடாது

 

ஆர் சொல்லுறதெண்டு ஒரு விவஸ்தையே இல்லாமல் போச்சப்பா....:shocked:

போயும் போயும் ஆடிப்பிறப்பு நாள் அதுவுமாய் பெரீய காமெடி:grin:

  • கருத்துக்கள உறவுகள்

அதுக்கு ஒரு அனுதாப வோட் வேற என்னம்மா இப்படி பண்ணுறிங்களேம்மா...

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு பெரும்பான்மை பலத்துடன் வெல்லும். ஆனால் தீர்வு காண்பது என்பது தீர்வை தருபவர்கள் சொல்ல வேண்டும். தீர்வை இன்னுமொருவரிடம் இருந்து பெறப்போவர்கள் சொல்ல முடியாது. தீர்வு வருவதற்கான சாத்தியக்கூறுகளை சொல்லலாம். தீர்வு வரும் என ஆசை வார்த்தை கூறக்கூடாது.

இப்போதுள்ள இலங்கை அரசிற்கு பல விதமான நெருக்குவாரங்கள் உள்ளன. முக்கியமாக சர்வதே ரீதியில். இவர்களால் தொடர்ந்தும் எம்மைத் தட்டிக்கழிக்க முடியாது. ஏதோ விதத்தில் எம்முடன் சமரசத்திற்கு வந்தே ஆகணும். 

சம்பந்தர் சொல்வது போல 2016 கொஞ்சம் ஓவர்தான். இருந்தாலும் சில வருடங்களில் ஏதோ ஒரு வகையான (எனக்கு எப்படியானது என்று தெரியாது) தீர்வை எமக்கு கொடுத்தாக வேண்டும் அல்லது திணித்தாக வேண்டிய நிலையில்தான் இலங்கை அரசு இப்போது உள்ளது. தேர்தலில் காட்டும் இதே தீவிரத்தை இந்த அரசியல்வாதிகளிடம் அத்தீர்வில் முடிந்தளவு உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதிலும்  எதிர்பார்க்கின்றேன்.

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்

2016´ம் ஆண்டு மட்டும், சம்பந்தர் ஐயா..... தாக்குப் பிடிப்பாரா?:unsure:

  • கருத்துக்கள உறவுகள்

அரை நூற்றாண்டு பிரச்சனையை ஒரு வருடத்தில் தீர்வு என்பது  மக்களை தவறாக வழி நடத்த உதவும் இவர்களால் இன்னொரு இணக்கலவரத்தையே தடுத்து நிறுத்த முடியாது.
பத்திரிகை தர்மம் , உத்த தர்மம் என்பது போல் அரசியல் தர்மம் என்று இல்லையா?
" கதியிலக்கினும் கட்டுரை இலக்கோம்" என்பது தான் இதுவரை  தமிழர்களின் வரலாறு.

Edited by vasee

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றில் நடந்தது நடந்துவிட்டது இனி ஆக வேண்டியதை  பார்ப்போம் என்று இருக்கவேண்டும் அல்லது எங்கே பிழை நடந்தது என்று சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து பார்க்கவேண்டும் .

இரண்டும் இல்லாமல் இடையில் நின்று உள்ளதையும் குழப்பகூடாது .இந்த தேர்தலில் மக்கள் யாரை தேர்ந்து எடுக்கின்றாகளோ அவர்கள் யாரகாக இருந்தாலும் அவர்களை முன்னிறுத்தி அரசியல் செய்வதுதான் ஏதாவது பலனை தமிழர்களுக்கு தரும் .

அதற்கு இங்கு பலர் தயாராக இல்லை .

நடந்தது, நடந்து... விட்டது என்று, அதுகும்.... நீங்கள், சொல்ல... கூச்சமாக இல்லையா.. அர்ஜூன்.
தமிழனுக்கு... உலக வரை படத்தில், ஒரு நாடு இருக்க வேண்டி..... 
ஈழத் தமிழர்களுடன் சேர்ந்து, சில தமிழக மக்களும்... உயிரை வெறுத்து  போராடிய போராட்டம்.
அதற்கு.... கொடுத்த, விலை அதிகம். இனி... அப்படி, ஒரு மக்கள் எழுச்சி... வரவே வராது.
அதனைக் கூட.... எம்மவர் காட்டிக் கொடுத்தார்கள். 
இப்படியே.... அழிய வேண்டியது தான்.

இப்ப... நடப்பவர்கள், அதுக்கு எற்ற மாதிரியாக... நடக்கிறார்கள் என்று... நீங்கள் கருதுகின்றீர்களா? 
அல்லது... தேர்தல் வாக்குறுதியா?

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டும் இல்லாமல் இடையில் நின்று உள்ளதையும் குழப்பகூடாது

 

ஆர் சொல்லுறதெண்டு ஒரு விவஸ்தையே இல்லாமல் போச்சப்பா....:shocked:

போயும் போயும் ஆடிப்பிறப்பு நாள் அதுவுமாய் பெரீய காமெடி:grin:

அவர் தனக்குச் சொல்லவில்லை

வழமைப்படி எப்பொழுதும் உபதேசம் ஊருக்கு மட்டுமே..

இந்த தேர்தலில் மக்கள் யாரை தேர்ந்து எடுக்கின்றாகளோ அவர்கள் யாரகாக இருந்தாலும் அவர்களை முன்னிறுத்தி அரசியல் செய்வதுதான் ஏதாவது பலனை தமிழர்களுக்கு தரும் .

அதற்கு இங்கு பலர் தயாராக இல்லை .

 

அர்ஜுன்

நான் கூட தயாராக இல்லை. வடக்கைப் பொறுத்தவரை நான் தயார். ஆனால் கிழக்கைப் பொறுத்தவரை இனப்பரம்பல் வீதம் பயம் கொள்ள வைக்கின்றது. அதற்காக ஜனநாயக முடிவை ஏற்றுக் கொள்ளாதவன் நான் இல்லை. கிழக்கில் எமது பிரதிநிதித்துவம் வேண்டுமென்றால் வாக்குகள் பிரிக்கப்படக்கூடாது. அப்போது யார் வேண்டுமானாலும் தேர்தலில் நிக்கலாம், மக்கள் முடிவை ஏற்றுக் கொள்கின்றேன் என கூற முடியவில்லை. 

கிழக்கின் இனப்பரம்பல் இயற்கையானதல்ல, எம்மை சிறுபாண்மையாக்க திட்டமிட்டு செய்யப்பட்ட செயற்கையான இனப்பரம்பல். இங்கு எமது இருப்பைக் காப்பாற்ற வேண்டுமென்றால் பல கட்சி ஜனநாயகம் எந்த விதத்திலும் உதவாது.

என்ன செய்வது, எனது கொள்கைகூட வடக்கிற்கு ஒன்றாகவும், கிழக்கிற்கு ஒன்றாகவும் மாறுபடுகின்றது. இது எனது தப்பு என்று நினைக்கவில்லை மாறாக எனது மக்களில் உள்ள விருப்பம் என்றே நினைக்கின்றேன்.

எனது இந்த முரண்பாடான கொள்கையை வேறு ஒரு திரியில் சுட்டிக்காட்டிய எனது கள உறவு எரிமலைக்கு நன்றி.

Edited by ஜீவன் சிவா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.